Shopify மூலம் டொமைனை வாங்குதல்

உங்கள் டொமைனை அமைக்கவும், உங்களின் அனைத்து டொமைன் அமைப்புகளையும் Shopify நிர்வாகியிலிருந்து நிர்வகிக்கவும் உதவும் வகையில், Shopify மூலம் டொமைனை நீங்கள் வாங்கலாம். நீங்கள் Shopify-இல் சேர்க்கும் முதல் டொமைன் இதுவெனில், வாடிக்கையாளர்களுக்குக் காட்டப்படும் இணைய முகவரியாக இது தானாகவே உள்ளமைக்கப்படும். உங்கள் ஸ்டோரில் நீங்கள் ஏற்கனவே ஒரு டொமைனைப் பயன்படுத்தினால், புதிய டொமைனானது முதன்மை டொமைனுக்குத் தானாகவே திசைதிருப்பப்படும்.

Shopify மூலம் உங்கள் டொமைனை வாங்கிய பிறகு, உங்கள் Shopify நிர்வாகியின் டொமைன்கள் பிரிவில் பின்வரும் பணிகளைச் செய்யலாம்:

  • உங்கள் டொமைன் அமைப்புகளைத் திருத்துதல்
  • துணை டொமைன்களை உருவாக்குதல்
  • முன்னனுப்புதல் மின்னஞ்சல் முகவரிகளை அமைத்தல்
  • உங்கள் டொமைனுக்காகப் பணம் செலுத்துதல்
  • உங்கள் டொமைனைப் புதுப்பித்தல்

Shopify மூலம் ஒரு டொமைனை வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டியவை

Shopify மூலம் ஒரு டொமைனை வாங்குவதற்கு முன், பின்வருவனவற்றைக் கவனியுங்கள்:

  • Shopify-இல் மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள் வழங்கப்படுவதில்லை. அதற்குப் பதிலாக, Shopify ஆல் நிர்வகிக்கப்படும் உங்கள் டொமைனை மூன்றாம் தரப்பு மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவையுடன் இணைக்கலாம்.
  • சில டொமைன் நீட்டிப்புகளில் WHOIS தனியுரிமை இருக்கும், இது பொது டொமைன் பதிவுப் பதிவேடுகளில் இருந்து உங்கள் தனிப்பட்ட தொடர்புத் தகவலை மறைத்து வைக்கும் ஒரு சேவையாகும். உங்களுக்கு WHOIS தனியுரிமை தேவைப்பட்டால், உங்கள் டொமைன் நீட்டிப்பு WHOIS விதிவிலக்குப் பட்டியலில் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும்.
  • சில டொமைன் நீட்டிப்புகளுக்குக் குறிப்பிட்ட குடியிருப்பு அல்லது வணிகப் பதிவுத் தேவைகள் உள்ளன. நீங்கள் உங்கள் பதிவுத் தகவலைச் சரிபார்க்க வேண்டியிருக்கலாம் என்பதால், இந்தத் தேவைகளை உங்களால் பூர்த்தி செய்ய முடியுமா என்பதை உறுதிப்படுத்தவும். இந்தத் தேவைகளை உங்களால் பூர்த்தி செய்ய முடியாவிட்டால், உங்கள் டொமைன் இடைநிறுத்தப்படலாம்.
  • Shopify மூலம் நீங்கள் ஒரு டொமைனை வாங்கும்போது, புதிய TLS (போக்குவரத்து அடுக்கு பாதுகாப்பு) சான்றிதழ் (இது SSL சான்றிதழ் என்றும் அழைக்கப்படும்) தானாகவே உருவாக்கப்படும். உங்கள் டொமைனுக்கென SSL குறியாக்கத்தை நீங்கள் வாங்க வேண்டியதில்லை.
  • உங்கள் டொமைன் சந்தாவைப் புதுப்பிக்க ஒவ்வொரு ஆண்டும் பதிவுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். உங்கள் Shopify திட்டச் சந்தாக் கட்டணங்களில் இருந்து டொமைன் புதுப்பித்தல்களுக்குத் தனித்தனியாகக் கட்டணம் விதிக்கப்படும். சரியான விலை நிர்ணயம் நீங்கள் எந்த டொமைன் நீட்டிப்பைத் தேர்வு செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது.
  • எல்லா டொமைன் நீட்டிப்புகளையும் Shopify மூலம் வாங்க முடியாது. ஒரு உயர்மட்ட டொமைன் கிடைக்கவில்லை எனில், நீங்கள் மூன்றாம் தரப்பு டொமைன் ஹோஸ்டிடமிருந்து டொமைனை வாங்கி, அதை உங்கள் Shopify ஸ்டோருடன் இணைக்கலாம்.
  • டொமைன் ஹோஸ்டிங் சேவைகள் கட்டணம் செலுத்திய Shopify திட்டத்தில் மட்டுமே கிடைக்கும். உங்கள் ஸ்டோரையோ Shopify கணக்கையோ முடக்க விரும்புகிறீர்கள், அதேநேரம் உங்கள் டொமைனைத் தொடர்ந்து பயன்படுத்த விரும்புகிறீர்கள் எனில், உங்கள் ஸ்டோரை முடக்குவதற்கு முன் உங்கள் டொமைனை இடமாற்ற வேண்டும். பின்வரும் விருப்பங்களில் ஏதேனும் ஒன்றிற்கு உங்கள் டொமைனை இடமாற்றலாம்:
  • நீங்கள் வாங்கும் .se டொமைன்களுக்கான தொடர்புத் தகவல் பின்வரும் வடிவத்தில் இருக்க வேண்டும்:
    • அஞ்சல் குறியீட்டில் இடைவெளிகள் இருக்கக்கூடாது.
    • உங்கள் ஃபோன் எண்ணில் முதலில் உள்ள 0 சேர்க்கப்படக் கூடாது.
    • உங்களின் ஸ்வீடிஷ் அடையாள எண்ணில் 10 இலக்கங்கள் இருக்க வேண்டும், அத்துடன் அது YYMMDD-XXXX என்ற வடிவத்தில் ஒரு சிறுகோட்டுடன் இருக்க வேண்டும்.

Shopify மூலம் ஒரு டொமைனை வாங்குதல்

Shopify மூலம் தனிப்பயன் டொமைனை வாங்குவதற்கு முன், Shopify-இன் டொமைன் பெயர் உருவாக்கியைப் பயன்படுத்தி உங்கள் டொமைன் பெயரின் விலையையும் அது கிடைக்கிறதா என்பதையும் சரிபார்க்கவும். Shopify மூலம் வாங்கப்படும் டொமைன்களின் சரியான விலையானது நீங்கள் எந்த TLD (உயர்மட்ட டொமைன்) நீட்டிப்பைத் தேர்வு செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. TLDகள் கிடைக்கும் தன்மை மாற்றத்திற்கு உட்பட்டது.

நீங்கள் தேர்வுசெய்த டொமைன் பெயர் கிடைக்குமா என்பதையும், கிடைக்கக்கூடிய மற்ற TLDகள் மற்றும் மாற்று டொமைன் பெயர்களையும் டொமைன் பெயர் உருவாக்கி காட்டும். நீங்கள் தேர்வுசெய்த டொமைன் பெயர் அல்லது TLD கிடைக்கவில்லை எனில், பரிந்துரைக்கப்பட்ட விருப்பங்களில் ஒன்றை நீங்கள் தேர்வுசெய்யலாம் அல்லது புதிய தேடலைத் தொடங்கலாம்.

AI பரிந்துரைக்கும் டொமைன் பெயர்கள்

நீங்கள் ஒரு டொமைன் பெயரைத் தேடும்போது, உங்கள் தேடலைப் போலவே உள்ள கூடுதல் டொமைன் பெயர் விருப்பங்களை AI-ஆல் இயக்கப்படும் பரிந்துரைகள் காட்டும். உங்கள் பிராண்டிற்குச் சிறப்பாகப் பொருந்தக்கூடிய அல்லது உங்கள் வாடிக்கையாளர்கள் எளிதில் நினைவில் வைத்துக்கொள்ளக்கூடிய மாறுபாடுகள் இந்தப் பரிந்துரைகளில் அடங்கும். பரிந்துரைக்கப்பட்ட டொமைன்களில் உங்களுக்கு விருப்பமானது கிடைத்தால், அதன் விலையைச் சரிபார்த்து வாங்குவதற்கு அதை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

படி 1: நீங்கள் வாங்க விரும்பும் டொமைன் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்

  1. உங்கள் Shopify நிர்வாகியில், அமைப்புகள் > டொமைன்கள் என்பதற்குச் செல்லவும்.

  2. புதிய டொமைனை வாங்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. நீங்கள் வாங்க விரும்பும் டொமைன் பெயரை உள்ளிடவும்.

  4. கிடைக்கக்கூடிய டொமைன் நீட்டிப்புகளையும் அவற்றின் விலைகளையும் மதிப்பாய்வு செய்யவும்.

  5. நீங்கள் வாங்க விரும்பும் டொமைனுக்கான வாங்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

படி 2: டொமைன் கொள்முதல் சுருக்கத்தை மதிப்பாய்வு செய்யவும்

  1. இயல்பாகவே தானியங்கு டொமைன் புதுப்பித்தல் செயலில் இருக்கும். தானியங்கு புதுப்பித்தலைச் செயல்படுத்த அல்லது முடக்க, ஒவ்வோர் ஆண்டும் இந்த டொமைனைத் தானாகப் புதுப்பி என்பதை நீங்கள் நிலைமாற்றலாம்.
  2. Shopify ஸ்டோர் உரிமையாளரின் மின்னஞ்சல் முகவரியும் தகவல்களும் சரியாக உள்ளனவா என்பதை உறுதிப்படுத்த, தொடர்புத் தகவல் பகுதியை மதிப்பாய்வு செய்யவும். உங்கள் தொடர்புத் தகவலை மாற்றியமைக்க, Edit ஐகானைக் கிளிக் செய்யலாம்.
  3. பொது டொமைன் பதிவுப் பதிவேடுகளில் இருந்து உங்கள் தனிப்பட்ட தொடர்புத் தகவலை மறைத்து வைக்கும் சேவையான WHOIS தனியுரிமை, இந்த டொமைன் நீட்டிப்பில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும்:
    • நீங்கள் உள்ளிடும் டொமைன் பெயரில் WHOIS தனியுரிமை இருந்தால், டொமைனில் WHOIS தனியுரிமை உள்ளது என்ற செய்தி காட்டப்படும்.
    • உங்களுக்கு இந்தச் செய்தி காட்டப்படாமல், உங்கள் டொமைனில் WHOIS தனியுரிமை இருக்க வேண்டும் என நீங்கள் விரும்பினால், ரத்துசெய் என்பதைக் கிளிக் செய்து, WHOIS விதிவிலக்குப் பட்டியலில் இல்லாத வேறொரு டொமைன் நீட்டிப்பைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. கட்டண முறை பிரிவில், உங்கள் டொமைனுக்கான கட்டண முறையைத் தேர்வுசெய்யவும்.
  5. ICANN கொள்கை மற்றும் டொமைன் பதிவு ஒப்பந்தம் ஆகியவற்றைப் படிக்கவும்.
  6. டொமைனை வாங்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

உங்கள் டொமைன் செயல்படத் தொடங்க 48 மணிநேரம் வரை ஆகலாம். நீங்கள் Shopify-இல் சேர்க்கும் முதல் டொமைன் இதுவெனில், இது வாடிக்கையாளர்களுக்குக் காட்டப்படும் இணைய முகவரியாகத் தானாகவே உள்ளமைக்கப்படும். உங்கள் ஸ்டோரில் நீங்கள் ஏற்கனவே ஒரு டொமைனைப் பயன்படுத்துகிறீர்கள் எனில், புதிய டொமைன் தானாகவே உங்கள் முதன்மை டொமைனுக்குத் திசைதிருப்பப்படும். புதிய டொமைனை உங்கள் முதன்மை டொமைனாக அமைக்கலாம்.

Shopify மூலம் நீங்கள் ஒரு டொமைனை வாங்கும்போதோ மூன்றாம் தரப்பு டொமைனை Shopify-க்கு இடமாற்றும்போதோ, உங்கள் டொமைனுக்கான A record மற்றும் CNAME record ஆகியவை தானாகவே சேர்க்கப்பட்டு Shopify-க்கான இயல்புநிலை DNS பதிவுகளாக அமைக்கப்படும். உங்கள் Shopify ஸ்டோரை உங்கள் Shopify டொமைனுக்குச் சுட்டிக்காட்ட, அதன் இயல்புநிலை A record அல்லது CNAME record-ஐ நீங்கள் மாற்றியமை வேண்டியதில்லை. நீங்கள் A record அல்லது CNAME record-ஐ மாற்றியமைத்திருந்தால், அவற்றை மீண்டும் இயல்புநிலைக்குக் கொண்டுவர, A record, CNAME record மற்றும் AAAA record ஆகியவற்றிற்கான உங்கள் DNS பதிவுகளை மீட்டமைக்கலாம்.

படி 3: டொமைன் பதிவுக்காக உங்கள் மின்னஞ்சல் முகவரியைச் சரிபார்க்கவும்

ஒரு டொமைனை வாங்கிய பிறகு, உங்கள் டொமைன் பதிவை முடிக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியைச் சரிபார்க்க வேண்டும். Shopify-இல் இருந்து நீங்கள் மதிப்பாய்வு செய்ய வேண்டிய பல மின்னஞ்சல்கள் வந்திருக்கிறதா என உங்கள் மின்னஞ்சல் கணக்கைச் சரிபார்க்கவும். இந்த மின்னஞ்சல்களில் பின்வரும் விவரங்கள் அடங்கும்:

  • உங்கள் கொள்முதலை உறுதிப்படுத்துதல்.
  • உங்கள் மின்னஞ்சல் முகவரியைச் சரிபார்த்தல்.
  • உங்கள் தரவு பகிரப்படும் விதத்தை நிர்வகித்தல்.

உங்களுக்கு டொமைன் சரிபார்ப்பு மின்னஞ்சல்கள் எதுவும் வரவில்லை எனில், உங்கள் மின்னஞ்சலின் ஸ்பேம் அல்லது ஜங்க் கோப்புறையைச் சரிபார்க்கவும்.

டொமைனை வாங்கும் போது நீங்கள் உள்ளிட்ட மின்னஞ்சல் முகவரியில் ஏதேனும் சிக்கல்கள் உள்ளனவா என்பதையும் நீங்கள் சரிபார்க்கலாம், அவற்றுள் பின்வரும் எடுத்துக்காட்டுகளும் அடங்கும்:

  • நீங்கள் பதிவுசெய்யும் அதே டொமைனை மின்னஞ்சல் முகவரி பயன்படுத்தவில்லை என்பதைச் சரிபார்க்கவும். எடுத்துக்காட்டாக, நீங்கள் example.com என்பதைப் பதிவுசெய்கிறீர்கள் எனில், டொமைன் இன்னும் முழுமையாகச் செயல்படத் தொடங்கவில்லை என்பதால், மின்னஞ்சல்களைப் பெற முடியாது. எனவே, info@example.com என்ற முகவரிக்கு அனுப்பப்படும் சரிபார்ப்பு மின்னஞ்சலை உங்களால் பெற முடியாது.
  • டொமைனை வாங்கும் போது நீங்கள் உள்ளிட்ட மின்னஞ்சல் முகவரியில் தட்டச்சு அல்லது எழுத்துப் பிழைகள் ஏதேனும் உள்ளதா எனச் சரிபார்க்கவும்.
  • நீங்கள் இன்னும் அவ்வாறு செய்யவில்லை என்றால், gmail.com மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்த முயலவும்.

உங்கள் டொமைனைப் பதிவுசெய்ய உங்கள் Shopify நிர்வாகியில் மின்னஞ்சல் முகவரியை மாற்றலாம்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியில், அமைப்புகள் > டொமைன்கள் என்பதற்குச் செல்லவும்.

  2. நீங்கள் மின்னஞ்சல் முகவரியைச் சரிபார்க்க விரும்பும் டொமைனைக் கிளிக் செய்யவும்.

  3. பதிவு விவரங்கள் பிரிவில், தொடர்புத் தகவல் என்பதற்கு அடுத்துள்ள திருத்து ஐகானைக் கிளிக் செய்யவும்.

  4. மின்னஞ்சல் புலத்தில், மின்னஞ்சல் முகவரியைச் சரிபார்த்து, தேவையான மாற்றங்களை அல்லது திருத்தங்களைச் செய்யவும்.

  5. மின்னஞ்சல் முகவரியில் ஏதேனும் மாற்றங்களைச் செய்தால், சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

  6. அதன்பிறகு நீங்கள் பெறும் மின்னஞ்சலில், பின்வருவனவற்றில் ஒன்றை நீங்கள் செய்ய வேண்டியிருக்கலாம்:

    • உங்கள் Shopify நிர்வாகியில் நீங்கள் மின்னஞ்சல் முகவரியில் செய்த மாற்றங்களை உறுதிப்படுத்த, ஒரு இணைப்பைக் கிளிக் செய்து, பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.
    • உங்கள் Shopify நிர்வாகியில் நீங்கள் மின்னஞ்சல் முகவரியில் செய்த மாற்றங்களை உறுதிப்படுத்த, ஒரு படிவத்தை நிரப்பி அதை Shopify ஆதரவுக்குச் சமர்ப்பிக்கவும்.
  7. உங்கள் மின்னஞ்சல் முகவரியை வெற்றிகரமாகத் திருத்தினால் அல்லது மாற்றினால், நீங்கள் மதிப்பாய்வு செய்ய வேண்டிய டொமைன் சரிபார்ப்பு மின்னஞ்சல்களைத் தானாகவே பெற வேண்டும்.

உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து சரிபார்ப்பு மின்னஞ்சலை மீண்டும் அனுப்பவும் முயலலாம். உங்கள் டொமைன் வாங்குதல் குறித்த எந்த மின்னஞ்சல்களும் இன்னும் உங்களுக்கு வரவில்லை என்றாலோ உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து சரிபார்ப்பு மின்னஞ்சலை மீண்டும் அனுப்புவதற்கான விருப்பம் இல்லை என்றாலோ Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.

உங்கள் மின்னஞ்சல் முகவரியை 15 நாட்களுக்குள் சரிபார்க்கவில்லை எனில், உங்கள் டொமைன் இடைநிறுத்தப்படலாம்.

டொமைன் கொள்முதல்கள் சார்ந்த சிக்கல்களைத் தீர்த்தல்

Shopify மூலம் டொமைனை வாங்குவதில் சிக்கல்களைச் சந்தித்தால், பொதுவான சிக்கல்களைத் தீர்க்க பின்வரும் சிக்கல் தீர்த்தல் படிகளைப் பயன்படுத்தவும்.

படி 1: பொதுவான சிக்கல்களைத் தீர்த்தல்

குறிப்பிட்ட பிழைகளுக்குத் தீர்வுகாணும் முன் பின்வரும் பொதுவான சிக்கல் தீர்த்தல் படிகளை முயலவும்:

  • உங்கள் டொமைன் விவரங்கள் சரியாக இருப்பதையும் அவற்றில் சிறப்பு எழுத்துகள் இல்லை என்பதையும் சரிபார்க்கவும்.
  • உங்கள் கட்டண முறை இன்னமும் செல்லுபடியாகக்கூடியதாக உள்ளதா, காலாவதியாகவில்லையா என்பதைச் சரிபார்க்கவும்.
  • வேறொரு கட்டண முறையைப் பயன்படுத்த முயலவும்.
  • உங்கள் உலாவித் தற்காலிக நினைவகத்தையும் குக்கீகளையும் அழித்துவிட்டு, மீண்டும் முயலவும்.
  • நீங்கள் மெய்நிகர் தனியார் நெட்வொர்க்கைப் (VPN) பயன்படுத்துகிறீர்கள் எனில், அதைத் தற்காலிகமாகச் செயலிழக்கச் செய்ய முயலவும்.

படி 2: டொமைன் கொள்முதல் சிக்கலைத் தேர்ந்தெடுக்கவும்

நீங்கள் ஒரு குறிப்பிட்ட பிழையைச் சந்திக்கிறீர்கள் என்றால், அதற்கான சிக்கல் தீர்த்தல் பிரிவைத் தேர்ந்தெடுக்கவும்:

டொமைன் பெயர் சிறப்பு எழுத்துகள் சார்ந்த பிழைகளைத் தீர்க்கவும்

உங்கள் டொமைன் பெயரில் சிறப்பு எழுத்துகள், உச்சரிப்புக்குறிகள் அல்லது குறியீடுகள் இருந்தால், நீங்கள் வாங்கும் போது பிழையைப் பெறுவீர்கள்.

படிகள்:

  1. உங்கள் டொமைன் பெயரிலிருந்து சிறப்பு எழுத்துகள், உச்சரிப்புக்குறிகள் அல்லது குறியீடுகளை அகற்றவும்.
  2. சர்வதேச எழுத்துகளுக்குப் பதிலாக அதற்கிணையான ஆங்கில எழுத்துகளைப் பயன்படுத்தவும் (Å → A, ß → B, Æ → AE).
  3. உங்கள் டொமைன் வாங்குதலை மீண்டும் முயலவும்.
தொடர்புத் தகவல் சிறப்பு எழுத்துகள் சார்ந்த பிழைகளைத் தீர்க்கவும்

உங்கள் தொடர்புத் தகவலில் சிறப்பு எழுத்துகள் இருந்தால், "[field name] சிறப்பு எழுத்துகள் எதையும் கொண்டிருக்கக் கூடாது" என்ற பிழை தோன்றும்.

படிகள்:

  1. பிழையில் குறிப்பிடப்பட்டுள்ள தொடர்புத் தகவல் புலங்களை மதிப்பாய்வு செய்யவும்.
  2. பெயர்கள் மற்றும் முகவரிகளிலிருந்து சிறப்பு எழுத்துகள் மற்றும் உச்சரிப்புக்குறிகளை அகற்றவும்.
  3. வழக்கமான ஆங்கில அகரவரிசை எழுத்துகளை மட்டுமே பயன்படுத்தவும்.
  4. புலத்தைப் புதுப்பிக்கவும்.
  5. உங்கள் டொமைன் வாங்குதலை மீண்டும் முயலவும்.
"எண்கள் அல்லாத எழுத்துகளைக் கொண்டிருக்க வேண்டும்" என்ற பிழைகளைத் தீர்க்கவும்

பெயருக்கான புலங்களில் எண்கள் அல்லது நிறுவனக் குறியீடுகளை நீங்கள் உள்ளிட்டால், "எண்கள் அல்லாத எழுத்துகளைக் கொண்டிருக்க வேண்டும்" என்ற பிழை தோன்றும்.

படிகள்:

  1. தொடர்புப் பெயர் புலங்களில் எண்கள் அல்லது நிறுவனக் குறியீடுகள் அல்லாமல் உண்மையான பெயர்கள் உள்ளதா என்பதைச் சரிபார்க்கவும்.
  2. நிறுவனப் பெயர்களுக்குப் பதிலாகத் தனிநபர்களின் பெயர்களைப் பயன்படுத்தவும்.
  3. பெயருக்கான புலங்களில் இருந்து எண்களை அகற்றவும்.
  4. உங்கள் டொமைன் வாங்குதலை மீண்டும் முயலவும்.
"அதிகப்படியான டொமைன்கள் வாங்கப்பட்டுள்ளன" என்ற பிழைகளைத் தீர்க்கவும்

குறுகிய காலத்தில் நீங்கள் பல டொமைன்களை வாங்க முயன்றிருந்தால், நீங்கள் வீத வரம்புப் பிழையைப் பெறலாம். பல கட்டண முயற்சிகளைக் கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையே இதுவாகும்.

வேறொரு டொமைனை வாங்க முயலும் முன் சில மணிநேரம் காத்திருக்கவும். வழக்கமாக 24 மணிநேரம் வரை காத்திருந்த பிறகு டொமைன் கொள்முதல்கள் வெற்றிகரமாக நிறைவடையும்.

தவறான தொடர்புத் தகவல் பிழைகளைத் தீர்க்கவும்

உங்கள் தொடர்புத் தகவல் பதிவகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை எனில், நீங்கள் சரிபார்ப்புப் பிழைகளைப் பெறுவீர்கள்.

படிகள்:

  1. அஞ்சல் குறியீட்டு வடிவமைப்பைச் சரிபார்க்கவும். எடுத்துக்காட்டாக, .nl டொமைன்களுக்கு "1234 AB" வடிவமைப்பு தேவை.
  2. முகவரிப் புலங்கள் எழுத்துகளின் வரம்பை மீறவில்லை என்பதைச் சரிபார்க்கவும்.
  3. நாட்டின் குறியீடுகளைப் பதிவகம் அங்கீகரிக்கிறதா என்பதைச் சரிபார்க்கவும்.
  4. அடுக்குமாடி அல்லது குடியிருப்பு எண்களை அதற்கேற்ற புலங்களில் பிரிக்கவும்.
  5. உங்கள் தொடர்புத் தகவலைப் புதுப்பிக்கவும்.
  6. உங்கள் டொமைன் வாங்குதலை மீண்டும் முயலவும்.
"இந்த டொமைன் வேறொரு Shopify ஸ்டோருடன் இணைக்கப்பட்டுள்ளது" என்ற பிழையைத் தீர்க்கவும்

ஏற்கனவே வேறொரு ஸ்டோருடன் இணைக்கப்பட்ட டொமைனை வாங்க முயன்றால், "இந்த டொமைன் வேறொரு Shopify ஸ்டோருடன் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளது" என்ற பிழை தோன்றும்.

டொமைன் உங்களுக்குச் சொந்தமானதாக இருந்து அது வேறொரு Shopify ஸ்டோருடன் இணைக்கப்பட்டிருந்தால், இடமாற்றப் படிகள் அந்த டொமைன் Shopify மூலம் நிர்வகிக்கப்படுகிறதா அல்லது மூன்றாம் தரப்பினருடையதா என்பதைப் பொறுத்து அமையும். Shopify மூலம் நிர்வகிக்கப்படும் டொமைனை இடமாற்ற, Shopify மூலம் நிர்வகிக்கப்படும் டொமைன்களை வேறொரு ஸ்டோர் அல்லது டொமைன் வழங்குநருக்கு இடமாற்றுதல் என்பதைப் பார்க்கவும். ஒரு மூன்றாம் தரப்பு டொமைனை இடமாற்ற, Shopify ஸ்டோர்களிடையே மூன்றாம் தரப்பு டொமைனை இடமாற்ற உரிமையைச் சரிபார்த்தல் என்பதைப் பார்க்கவும்.

டொமைன் உங்களுக்குச் சொந்தமானதா என்று உறுதியாகத் தெரியவில்லை என்றாலோ, டொமைனை வாங்க முடியும் என நீங்கள் நம்பினாலோ, கூடுதல் உதவிக்கு Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளலாம்.

படி 3: ஆதரவைத் தொடர்புகொள்ளவும்

சிக்கல் தீர்த்தல் படிகளை முடித்து, வீத வரம்புப் பிழைகளுக்காக 24 மணிநேரம் காத்திருந்த பிறகும் உங்கள் டொமைனை வாங்க முடியவில்லை என்றால், Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.

டொமைன் வாங்கப்பட்டு பதிவுசெய்யப்பட்ட பிறகு ஏதேனும் சிக்கல்களைச் சந்தித்தால், Shopify உடன் இணைக்கப்பட்டுள்ள டொமைன்கள் சார்ந்த சிக்கல்களைத் தீர்த்தல் என்பதைப் பார்க்கவும்.

உங்கள் பதிவுத் தகவலைச் சரிபார்த்தல்

சில நாடு சார்ந்த டொமைன் நீட்டிப்புகளுக்கு என குறிப்பிட்ட குடியிருப்பு அல்லது வணிகப் பதிவுத் தேவைகள் உள்ளன, அவற்றை நீங்கள் Shopify மூலம் டொமைனை வாங்கும் போது பூர்த்தி செய்ய வேண்டும்.

குறிப்பிட்ட டொமைன் நீட்டிப்புகளுக்கான பதிவுகளை நிர்வகிக்கும் சில பதிவக அமைப்புகளும் உள்ளன. நீங்கள் டொமைன் உரிமையாளர் எனில், அந்த அமைப்புகளின் குடியிருப்பு அல்லது வணிகப் பதிவுத் தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்கிறீர்களா என்பதைச் சரிபார்க்க, இப்பதிவக அமைப்புகள் அவ்வப்போது உங்களைத் தொடர்புகொள்ளலாம்.

Shopify மூலம் நீங்கள் டொமைனை வாங்கும்போது, உங்கள் டொமைன் பதிவை முடிக்க உங்கள் ஸ்டோரின் தகவல் தானாகவே பயன்படுத்தப்படும். இத்தகவலில் உங்களின் வணிகப் பெயர், தனிப்பட்ட பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண் ஆகியவை அடங்கும்.

உங்கள் டொமைனைச் சரிபார்க்க ஒரு பதிவக அமைப்பு உங்களைத் தொடர்புகொண்டால், உங்களின் பதிவுத் தகவலுக்கான ஆதாரத்தை நீங்கள் வழங்க வேண்டும். பாஸ்போர்ட், வணிக பில்கள் அல்லது வணிக முகவரிக்கான ஆதாரம் போன்ற நீங்கள் வழங்கக்கூடிய ஆவணங்களின் வகைகள் குறித்து ஒவ்வொரு பதிவக அமைப்பும் வெவ்வேறு தேவைகளைக் கொண்டிருக்கும். உங்களின் வணிக முகவரியை மாற்றினாலோ பதிவுத் தகவலை நிரூபிப்பதில் சிக்கல் இருந்தாலோ Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.

குறிப்பிட்ட சில நாடுகளுக்கான டொமைன் பதிவுத் தேவைகள் குறித்து அறிந்துகொள்ள, பின்வரும் விவரங்களைச் சரிபார்க்கவும்:

.be டொமைன்களுக்கான பெல்ஜியத்தின் டொமைன் பதிவுத் தேவைகள்

நீங்கள் .be டொமைனை வாங்கும் போது, பெல்ஜியத்தின் டொமைன்கள் பதிவாளரான DNS Belgium இடம் உங்கள் தொடர்புத் தகவலை உறுதிப்படுத்த வேண்டும்.

உங்கள் டொமைனை வாங்கிய பிறகு, மதிப்பீடு மற்றும் சரிபார்ப்பு நோக்கங்களுக்காக DNS Belgium இடமிருந்து ஒரு மின்னஞ்சலைப் பெறலாம், அதிலுள்ள வழிமுறைகளை நீங்கள் பின்பற்ற வேண்டும்.

ஒரு .be டொமைனைப் பதிவுசெய்ய, நீங்கள் பெல்ஜியத்தில் குடியிருப்பவராகவோ அல்லது வணிகம் நடத்துபவராகவோ இருக்க வேண்டியதில்லை.

.be உயர்மட்ட டொமைனைத் (TLD) தவிர்த்து, டொமைன் பெயர்கள் 3 முதல் 63 எழுத்துருக்கள் வரை எந்தவொரு நீளத்திலும் இருக்கலாம்.

ஒரு .be டொமைனைப் பதிவுசெய்து சரிபார்ப்பதில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், DNS Belgium-ஐத் தொடர்புகொள்ளவும்.

.ca டொமைன்களுக்கான கனடாவின் டொமைன் பதிவுத் தேவைகள்

நீங்கள் .ca டொமைனை வாங்கும் போது, CIRA (Canadian Internet Registration Authority) வழங்கும் பதிவு ஒப்பந்தத்தைப் பூர்த்திசெய்ய வேண்டும்.

உங்கள் டொமைனை வாங்கிய பிறகு, பதிவு ஒப்பந்தத்துக்கான இணைப்பைக் கொண்ட ஒரு மின்னஞ்சலைப் பெறுவீர்கள். நீங்கள் ஒப்பந்த விதிமுறைகளைச் சரிபார்த்து ஏற்க வேண்டும்.

பதிவுசெய்பவர்கள் குறிப்பிட்ட கனேடிய இருப்புத் தேவைகளை (CPR) பூர்த்திசெய்ய வேண்டும். டொமைன் பதிவின்போது, தகுதியான பின்வரும் பிரிவுகளிலிருந்து உங்களுக்கேற்ற CPR பிரிவைத் தேர்ந்தெடுக்க வேண்டும்:

  • கனடாவின் குடிமக்கள்
  • கனடாவிலுள்ள பெருநிறுவனங்கள்
  • கனேடியக் கல்வி நிறுவனங்கள்
  • கனடாவைப் பூர்வீகமாகக் கொண்ட பழங்குடி மக்கள்
  • கனடாவிலுள்ள அரசு அமைப்புகள்

.ca டொமைன்களுக்கான பதிவுசெய்பவரின் தொடர்புத் தகவலில், தனிநபராக இல்லாதவர்களுக்கான முதல் பெயர், கடைசிப் பெயர், மின்னஞ்சல் முகவரி, நிறுவனத்தின் பெயர், தொலைபேசி எண், முகவரி ஆகியவை கட்டாயப் புலங்களில் அடங்கும்.

டொமைன் பதிவுக்கான கனேடிய இருப்பை உறுதிசெய்ய, CIRA பதிவுசெய்வோர் தகவல் மதிப்பீட்டை (RIV) மேற்கொள்ளக்கூடும், அப்போது நீங்கள் கனேடியப் பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களை வழங்க வேண்டியிருக்கும்.

.ca உயர்மட்ட டொமைனைத் (TLD) தவிர்த்து, டொமைன் பெயர்கள் அதிகபட்சம் 63 எழுத்துருக்கள் வரை இருக்கலாம்.

.fr டொமைன்களுக்கான பிரான்ஸின் டொமைன் பதிவுத் தேவைகள்

நீங்கள் .fr டொமைனை வாங்கும் போது, Association française pour le nommage Internet en coopération (AFNIC) பதிவேட்டின் டொமைன் பதிவுத் தேவைகளைப் பூர்த்திசெய்ய வேண்டும்.

ஒரு .fr டொமைனைப் பதிவுசெய்வதற்கான பிராந்திய இருப்புத் தேவைகளைப் பூர்த்திசெய்ய, தனிநபர்களும் நிறுவனங்களும் ஐரோப்பிய ஒன்றியம், சுவிட்சர்லாந்து, நார்வே, ஐஸ்லாந்து அல்லது லிச்சென்ஸ்டீன் ஆகியவற்றில் அமைந்திருக்க வேண்டும்.

ஒரு நிறுவனத்தை உரிமையாளராகக் கொண்டு .fr டொமைனை நீங்கள் பதிவுசெய்தால், அந்த நிறுவனத்தின் VAT எண், வர்த்தக முத்திரை எண், SIREN/SIRET எண் ஆகியவற்றை வழங்குவது பதிவை விரைவாக மதிப்பிட உதவும்.

.fr டொமைனை வாங்கும்போது முதல் பெயர், கடைசிப் பெயர் புலங்களில் சிறப்பு எழுத்துருக்களைப் பயன்படுத்த முடியாது. லத்தீன் எழுத்துகள், சிறுகோடுகள், அபோஸ்ட்ரபிகள், இடைவெளிகள் ஆகியவை அனுமதிக்கப்படும் எழுத்துருக்களில் அடங்கும்.

.it டொமைன்களுக்கான இத்தாலியின் டொமைன் பதிவுத் தேவைகள்

நீங்கள் .it டொமைனை வாங்கும்போது, பதிவுசெய்யும் தனிநபராக உங்கள் இத்தாலிய நிதிக் குறியீட்டை (Codice fiscale) சமர்ப்பிக்க வேண்டும் அல்லது இத்தாலியிலுள்ள ஒரு நிறுவனத்தால் டொமைன் பதிவுசெய்யப்பட்டால் உங்கள் VAT எண்ணைச் சமர்ப்பிக்க வேண்டும்.

தனிநபர் குடியுரிமையோ அல்லது இருப்பிடமோ இருந்தால், அல்லது ஐரோப்பியப் பொருளாதாரப் பகுதி (EEA) நாடுகளிலோ வாடிகன், சான் மரினோ குடியரசு, சுவிட்சர்லாந்து ஆகியவற்றிலோ உங்கள் வணிகப் பதிவு அலுவலகம் இருந்தால் மட்டுமே உங்களால் .it டொமைனைப் பதிவுசெய்ய முடியும்.

இத்தாலிக்கு வெளியிலிருந்து நீங்கள் .it டொமைனைப் பதிவுசெய்கிறீர்கள் எனில், நீங்கள் வசிக்கும் நாட்டின் தனிப்பட்ட ID எண்ணை வழங்க வேண்டும்.

.se டொமைன்களுக்கான ஸ்வீடனின் டொமைன் பதிவுத் தேவைகள்

நீங்கள் .se டொமைனை வாங்கும்போது, தேசிய அடையாள அட்டையிலிருந்து உங்களுடைய ஸ்வீடிஷ் தனிப்பட்ட அடையாள எண்ணைச் சமர்ப்பிக்க வேண்டும். Shopify மூலமாக உங்களால் தனிநபராக மட்டுமே .se டொமைனைப் பதிவுசெய்ய முடியும், நிறுவனமாக முடியாது.

.se டொமைன் பதிவின்போது, பின்வரும் எடுத்துக்காட்டுகள் உள்ளிட்ட சில தகவல்களின் வடிவமைப்பு சரியாக இருப்பது முக்கியமாகும்:

  • உங்கள் தகவலை உள்ளிடும்போது Å, Ä, அல்லது Ö ஆகியவற்றைப் பயன்படுத்தாமல் A, O ஆகியவற்றைப் பயன்படுத்தவும்.
  • ஸ்வீடிஷ் தனிப்பட்ட அடையாள எண்ணை YYMMDD-XXXX என்ற வடிவமைப்பில் சமர்ப்பிக்க வேண்டும்.
  • அஞ்சல் குறியீட்டில் எந்த இடைவெளிகளும் இருக்கக்கூடாது.

WHOIS விதிவிலக்குகள்

Shopify மூலமாக வாங்கும் போது, பின்வரும் டொமைன் நீட்டிப்புகளில் WHOIS தனியுரிமை இருக்காது. இந்த டொமைன் நீட்டிப்புகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் வைத்திருந்தால், பொது டொமைன் பதிவுப் பதிவேடுகளில் உங்கள் தனிப்பட்ட தொடர்புத் தகவல் கிடைக்கும்.

WHOIS தனியுரிமை இல்லாத உயர்மட்ட டொமைன் நீட்டிப்புகளின் பட்டியல்.
.abogado.ac.ae.aero.africa
.ag.ai.alsace.am.ar
.archi.as.asia.at.au
.auto.barcelona.bayern.be.berlin
.br.brussels.bzh.cat.cd
.ch.cl.cm.cologne.coop
.corsica.cx.cz.de.ec
.es.feedback.fi.fm.fr
.frl.gd.gg.gl.gr
.gs.gy.hamburg.hk.hm
.hn.hr.ht.hu.il
.im.in.io.is.je
.jobs.jp.kg.ki.kr
.la.law.lc.li.lt
.lu.lv.ly.ma.md
.melbourne.mn.ms.mu.mx
.my.nl.no.nrw.nu
.nyc.nz.paris.pe.ph
.pl.pm.pr.pro.pt
.pw.qa.quebec.re.rio
.ro.ru.ruhr.sb.sc
.scot.se.sg.sh.si
.so.sr.srl.st.sx
.sydney.tc.tf.tk.tl
.tm.to.travel.tw.ua
.us.uy.vc.ve.vg
.vlaanderen.vote.voto.wf.wien
.yt.za

வாங்குவதற்குக் கிடைக்கும் TLD-கள்

பின்வரும் நீட்டிப்புகளைக் கொண்ட டொமைன்களை Shopify மூலம் வாங்கலாம்.

Shopify மூலம் வாங்கக்கூடிய டாப் லெவல் டொமைன் நீட்டிப்புகளின் பட்டியல்.
.ac.academy.accountant.accountants.actor
.adult.africa.ag.agency.airforce
.alsace.am.apartments.archi.army
.art.associates.attorney.auction.auto
.band.bar.barcelona.bargains.bayern
.be.beer.berlin.best.bet
.bid.bike.bingo.biz.biz.ki
.biz.pl.black.blog.boston.boutique
.brussels.builders.business.buzz.bz
.bzh.ca.cab.cafe.camera
.camp.capetown.capital.car.cards
.care.careers.cars.casa.cash
.casino.cat.catering.cc.center
.ceo.charity.chat.cheap.christmas
.church.city.claims.cleaning.click
.clinic.clothing.cloud.club.cm
.co.co.ag.co.cm.co.gg.co.gl
.co.gy.co.im.co.in.co.je.co.kr
.co.lc.co.ma.co.nz.co.uk.co.ve
.co.za.coach.codes.coffee.college
.cologne.com.com.ag.com.cm.com.co
.com.ec.com.gl.com.gy.com.hn.com.ht
.com.im.com.ki.com.lc.com.mx.com.pe
.com.ph.com.pl.com.pr.com.sb.com.sc
.com.so.com.tw.community.company.computer
.condos.construction.consulting.contractors.cooking
.cool.corsica.country.coupons.courses
.credit.creditcard.cricket.cruises.cx
.cymru.dance.date.dating.deals
.degree.delivery.democrat.dental.dentist
.desi.design.diamonds.digital.direct
.directory.discount.doctor.dog.domains
.download.durban.earth.ec.edu.pl
.education.email.energy.engineer.engineering
.enterprises.equipment.es.estate.eu
.events.exchange.expert.exposed.express
.fail.faith.family.fans.farm
.fashion.feedback.film.finance.financial
.firm.in.fish.fishing.fit.fitness
.flights.florist.fm.football.forsale
.foundation.fr.frl.fun.fund
.furniture.futbol.fyi.gallery.game
.games.garden.gd.gen.in.gg
.gift.gifts.gives.gl.glass
.global.gmbh.gold.golf.graphics
.gratis.green.gripe.group.gs
.guide.guru.gy.hamburg.haus
.healthcare.help.hiv.hn.hockey
.holdings.holiday.horse.hospital.host
.hosting.house.how.ht.idv.tw
.im.immo.immobilien.in.ind.in
.industries.info.info.ec.info.ht.info.ki
.info.pl.ink.institute.insure.international
.investments.io.irish.ist.istanbul
.it.je.jetzt.jewelry.joburg
.juegos.kaufen.kitchen.kiwi.koeln
.kr.l.lc.la.land.lawyer
.lc.lease.legal.lgbt.li
.life.lighting.limited.limo.link
.live.llc.loan.loans.lol
.london.love.ltd.ltda.lu
.maison.management.market.marketing.mba
.md.me.me.uk.med.ec.media
.melbourne.memorial.men.miami.mn
.mobi.mobi.ki.moda.moe.mom
.money.mortgage.movie.ms.mu
.mx.nagoya.name.name.my.navy
.net.net.ag.net.ai.net.cm.net.cn
.net.co.net.ec.net.gg.net.gl.net.gy
.net.hn.net.ht.net.im.net.in.net.ki
.net.lc.net.my.net.nz.net.pe.net.ph
.net.pl.net.sb.net.sc.net.so.net.za
.network.news.ngo.ninja.nl
.nom.ag.nom.co.nom.pl.nrw.nz
.observer.off.ai.one.online.org
.or.at.org.ag.org.ai.org.cn.org.gg
.org.gl.org.hn.org.ht.org.im.org.in
.org.lc.org.my.org.nz.org.ph.org.pl
.org.sb.org.sc.org.so.org.tw.org.uk
.org.za.organic.p.lc.page.paris
.partners.parts.party.pe.pet
.ph.photo.photography.photos.physio
.pics.pictures.pizza.pl.place
.plumbing.plus.pm.poker.porn
.press.pro.ec.productions.promo.properties
.protection.pub.pw.quebec.racing
.re.realty.recipes.rehab.reise
.reisen.rent.rentals.repair.report
.republican.rest.restaurant.review.reviews
.rio.rip.rocks.rodeo.ruhr
.run.sale.salon.sarl.sc
.school.schule.science.scot.se
.security.services.sex.sexy.sh
.shiksha.shoes.shop.shop.pl.shopping
.show.singles.site.ski.so
.soccer.social.software.solar.solutions
.soy.space.srl.st.store
.stream.studio.study.style.sucks
.supplies.supply.support.surf.surgery
.sx.sydney.systems.tattoo.tax
.taxi.team.tech.technology.tel
.tel.ki.tennis.tf.theater.theatre
.tienda.tips.tires.tirol.today
.tokyo.tools.top.tours.town
.toys.trade.training.tube.tv
.tw.university.uno.us.vacations
.vegas.ventures.vet.viajes.video
.villas.vin.vip.vision.vlaanderen
.vodka.vote.voto.voyage.wales
.watch.waw.pl.web.za.webcam.website
.wedding.wf.wien.wiki.win
.wine.work.works.world.ws
.wtf.xxx.xyz.yoga.yokohama
.yt.zone