Shopify உடன் மூன்றாம் தரப்பு டொமைனை இணைத்தல்
GoDaddy, IONOS அல்லது Wix போன்ற மூன்றாம் தரப்பு டொமைன் வழங்குநரிடம் வாங்கிய டொமைனை இணைக்க, உங்கள் டொமைன் வழங்குநர் கணக்கில் உள்நுழைந்து, DNS பதிவுகளைப் புதுப்பிக்க வேண்டும். கீழே உள்ள பட்டியலில் உங்கள் டொமைன் ஹோஸ்டைத் தேடுவதன் மூலமாகவோ இங்கே கிளிக் செய்வதன் மூலமாகவோ தேவையான DNS பதிவுகளைக் கண்டறியலாம்.
DNS பதிவுகளைப் புதுப்பித்த பிறகு, நீங்கள் செய்த மாற்றங்கள் நடைமுறைக்கு வரும்வரை காத்திருக்க வேண்டும். இது பொதுவாக இரண்டு மணிநேரத்திற்குள் நடக்கும், ஆனால் அதிகபட்சமாக இரண்டு நாட்கள் வரை ஆகலாம்.
உங்கள் மூன்றாம் தரப்பு டொமைன் ஏற்கெனவே வேறொரு Shopify ஸ்டோருடன் இணைக்கப்பட்டு, அதை இந்த ஸ்டோருக்கு நகர்த்த விரும்பினால், இணைப்புச் செயல்முறையை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தலாம். டொமைன் புதிய ஸ்டோருடன் இணைக்கப்படுவதற்கு முன்பு, TXT பதிவு அல்லது தானியங்குச் சரிபார்ப்பு மூலமாக டொமைன் உரிமையைச் சரிபார்க்கும்படி நீங்கள் கேட்கப்படுவீர்கள்.
இந்தப் பிரிவில்
உங்கள் ஆன்லைன் ஸ்டோருக்கு மூன்றாம் தரப்பு டொமைனைப் பயன்படுத்துவதில் கவனத்தில் கொள்ள வேண்டியவை
உங்கள் மூன்றாம் தரப்பு டொமைனை Shopify உடன் கைமுறையாக இணைத்தல்
உதவிக்கு உங்கள் மூன்றாம் தரப்பு டொமைன் வழங்குநரைத் தொடர்புகொள்ளுதல்
Shopify ஸ்டோர்களுக்கு இடையே மூன்றாம் தரப்பு டொமைனை இடமாற்ற, உரிமையைச் சரிபார்த்தல்