Shopify ஸ்டோர்களுக்கு இடையே மூன்றாம் தரப்பு டொமைனைப் பரிமாற்ற, உரிமையைச் சரிபார்க்கவும்

ஏற்கனவே ஒரு Shopify ஸ்டோருடன் இணைக்கப்பட்ட மூன்றாம் தரப்பு டொமைன் உங்களிடம் இருந்தால், அதை வேறு Shopify ஸ்டோருக்கு மாற்ற விரும்பினால், புதிய ஸ்டோரில் இணைக்கும் செயல்முறையைப் பயன்படுத்தலாம். டொமைன் ஏற்கனவே மற்றொரு Shopify ஸ்டோருடன் தொடர்புடையதாக இருப்பதால், அது உங்களுடையதுதான் என்பதைச் சரிபார்க்கும்படி கேட்கப்படுவீர்கள்.

ஏற்கெனவே வேறொரு Shopify ஸ்டோருடன் இணைக்கப்பட்டிருப்பது போன்ற காரணங்களால் உரிமையைச் சரிபார்க்க வேண்டிய மூன்றாம் தரப்பு டொமைனை நீங்கள் இணைக்கும்போது, உங்கள் Shopify நிர்வாகியில் அந்த டொமைனுக்கான சரிபார்ப்புப் பக்கம் திறக்கும். டொமைனை உங்கள் ஸ்டோருடன் முழுமையாக இணைக்க, அதன் உரிமையைச் சரிபார்க்க வேண்டும்.

ஆதரிக்கப்படும் சில டொமைன் வழங்குநர்களுக்கு டொமைனை நீங்கள் தானாகவே சரிபார்க்கலாம் அல்லது TXT பதிவு மூலம் டொமைன் உரிமையை மேனுவலாகச் சரிபார்க்கலாம். உங்கள் டொமைனின் உரிமையை நீங்கள் மேனுவலாகச் சரிபார்க்க வேண்டும் எனில், உங்கள் மூன்றாம் தரப்பு டொமைனுக்கான Domain Name System (DNS) (டொமைன் பெயர் அமைப்பு) அமைப்புகளுக்கான அணுகல் உங்களுக்குத் தேவை.

டொமைனை இணைக்க விரும்பும் ஸ்டோரின் Shopify நிர்வாகியில், டொமைன் உரிமையைச் சரிபார்க்கும் செயல்முறையைத் தொடங்குகிறீர்கள். டொமைன் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ள Shopify ஸ்டோரை நீங்கள் அணுக வேண்டியதில்லை.

டொமைனைத் தானாகச் சரிபார்

Google Domains, GoDaddy அல்லது IONOS ஆகியவற்றிலிருந்து உங்கள் டொமைனை வாங்கியிருந்தால், உங்கள் டொமைனை Shopify-உடன் தானாகவே இணைக்க முடியும். Shopify-உடன் உங்கள் மூன்றாம் தரப்பு டொமைனைத் தானாக இணைக்கும்போது, டொமைன் உரிமைக்காக அந்த டொமைன் சரிபார்க்கப்படும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > டொமைன்கள் என்பதற்குச் செல்லவும்.

  2. இருப்பதை இணை என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. example.com போன்ற உங்கள் டொமைனை உள்ளிட்டு, அடுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. உங்கள் டொமைனுக்கான சரிபார்ப்புப் பக்கம் திறக்கும். தானாக இணை என்பதைக் கிளிக் செய்யவும்.

  5. உங்கள் மூன்றாம் தரப்பு டொமைன் வழங்குநரில் உள்நுழையவும், பின்னர் உங்கள் டொமைன் அமைப்புகளில் TXT பதிவைச் சேர்க்க டொமைன் வழங்குநருக்கு ஒப்புதல் அளிக்கவும் உங்களிடம் கேட்கப்படும்.

  6. உங்கள் மூன்றாம் தரப்பு டொமைன் வழங்குநரிடமிருந்து வரும் பிராம்ட்களைப் பின்பற்றவும்.

  7. பிராம்ட்களை முடித்த பிறகு, நீங்கள் டொமைன் பக்கத்திற்குத் திரும்புவீர்கள், உங்கள் டொமைன் சரிபார்ப்பு தொடங்கும்.

உங்கள் டொமைன் சரிபார்க்கப்படுவதற்கு 48 மணிநேரம் வரை ஆகலாம். டொமைன் உரிமை சரிபார்க்கப்பட்ட பிறகு, டொமைன்கள் பக்கத்தில் உங்கள் டொமைன் இணைக்கப்பட்டதாகப் பட்டியலிடப்படும்.

டொமைனை மேனுவலாகச் சரிபார்

டொமைன் உரிமையை மேனுவலாகச் சரிபார்க்க, டொமைனின் டொமைன் நேம் சிஸ்டம் (DNS) அமைப்புகளில் தனித்துவமான TXT பதிவைச் சேர்க்க வேண்டும்.

தொடங்குவதற்கு முன், Shopify உடன் இணைக்க மூன்றாம் தரப்பு டொமைன் வழங்குநர் சரியாக அமைக்கப்பட்டுள்ளதா என்பதையும், உங்கள் மூன்றாம் தரப்பு டொமைன் பிளாட்ஃபார்மில் உங்களால் உள்நுழைந்து அணுக முடியும் என்பதையும் உறுதிசெய்யவும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > டொமைன்கள் என்பதற்குச் செல்லவும்.

  2. இருப்பதை இணை என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. example.com போன்ற உங்கள் டொமைனை உள்ளிட்டு, அடுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. உங்கள் டொமைனுக்கான பக்கம் திறக்கும். DNS பதிவுகள் அட்டவணை காட்டப்படவில்லை எனில், அதை விரிவாக்க கைமுறை அமைவு என்பதைக் கிளிக் செய்யவும். shopify_verification எனத் தொடங்கும் பெயரைக் கொண்ட TXT பதிவு அட்டவணையில் இல்லை எனில், உங்கள் டொமைனுக்கு உரிமைச் சரிபார்ப்பு தேவையில்லை. அதற்குப் பதிலாக, உங்கள் டொமைனை இணைப்பதற்கான வழக்கமான படிகளைப் பின்பற்றவும்.

  5. புதுப்பிக்க வேண்டிய மதிப்பு நெடுவரிசையில் உள்ள TXT பதிவின் மதிப்பின் மீது சுட்டியை வைத்து, நகலெடுக்கும் ஐகானைக் கிளிக் செய்யவும்.

  6. புதிய உலாவித் தாவலில், உங்கள் மூன்றாம் தரப்பு டொமைன் வழங்குநரின் இணையதளத்திற்குச் சென்று உங்கள் கணக்கில் உள்நுழையவும்.

  7. DNS அமைப்புகள் அல்லது டொமைன் நிர்வாகப் பகுதியைக் கண்டறியவும். உங்கள் DNS அமைப்புகளைக் கண்டறிவதில் உதவி தேவைப்பட்டால், மூன்றாம் தரப்பு டொமைன் வழங்குநரைத் தொடர்புகொள்ளவும்.

  8. shopify_verification என்ற பெயரில் புதிய TXT பதிவைச் சேர்த்து, உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து நகலெடுத்த மதிப்பை ஒட்டவும். துணை டொமைனை இணைக்கிறீர்கள் எனில், TXT பதிவின் பெயரில் shopify_verification என்பதற்குப் பிறகு ஓர் அடிக்கோட்டையும் உங்கள் துணை டொமைனின் பெயரையும் சேர்க்கவும். எடுத்துக்காட்டாக, உங்கள் துணை டொமைன் shop.example.com எனில், உங்கள் TXT பதிவின் பெயர் shopify_verification_shop ஆகும்.

  9. உங்கள் Shopify நிர்வாகி உள்ள முந்தைய தாவலுக்குத் திரும்பிச் சென்று, DNS பதிவுகளைப் புதுப்பித்துவிட்டேன் என்பதைக் கிளிக் செய்யவும்:

    • உங்கள் டொமைன் சரிபார்ப்பு வெற்றிகரமாக அமைந்தால், உங்கள் டொமைன்கள் பக்கத்தில் டொமைன் இணைக்கப்பட்டதாகக் காட்டப்படும்.
    • உங்கள் டொமைன் சரிபார்ப்பு வெற்றிபெறவில்லை எனில், உங்கள் டொமைன் வழங்குநர் கணக்கில் TXT பதிவு சேமிக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்யவும். DNS பதிவுகளைப் புதுப்பித்துவிட்டேன் என்பதைக் கிளிக் செய்த பிறகு, சில நிமிடங்களுக்கு உங்கள் DNS பதிவுகள் சரிபார்க்கப்படும். சரிபார்ப்பின்போது அந்தப் பொத்தான் காட்டப்படாது. சரிபார்ப்பு முடிந்ததும் அல்லது பக்கத்தை மீண்டும் ஏற்றியதும், DNS பதிவுகளைப் புதுப்பித்துவிட்டேன் என்பதை மீண்டும் கிளிக் செய்யவும்.

உங்கள் டொமைன் சரிபார்க்கப்படுவதற்கு 48 மணிநேரம் வரை ஆகலாம். டொமைன் உரிமை சரிபார்க்கப்பட்ட பிறகு, டொமைன்கள் பக்கத்தில் உங்கள் டொமைன் இணைக்கப்பட்டதாகப் பட்டியலிடப்படும்.

அசல் ஸ்டோரில் உள்ள டொமைனுக்கு என்ன நடக்கும்

டொமைன் உரிமை சரிபார்க்கப்பட்டு, புதிய ஸ்டோருடன் டொமைன் இணைக்கப்பட்ட பிறகு, அசல் ஸ்டோரிலிருந்து டொமைன் தானாகவே அகற்றப்படும். சரிபார்த்த பிறகும் அசல் ஸ்டோரில் டொமைன் தோன்றினால், அசல் ஸ்டோரின் டொமைன்கள் பக்கத்திலிருந்து அதை மேனுவலாகத் துண்டிக்கலாம்.