டொமைன்கள் தொடர்பான கலைச்சொற்கள்
டொமைன் அல்லது டொமைன் பெயர் என்பது இணையத்தில் உள்ள உங்கள் இணையதளத்தைப் பார்வையிட மக்கள் பயன்படுத்தும் இணைய முகவரி அல்லது URL ஆகும். Chrome, Firefox, Microsoft Edge அல்லது Safari போன்ற உங்கள் இணைய உலாவியின் முகவரிப் பட்டியில் டொமைன் பெயர்கள் காண்பிக்கப்படும்.
டொமைன்கள் தொடர்பான சில கலைச்சொற்களைப் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவ, பொதுவான சொற்களின் வரையறைகளைப் பின்வரும் பட்டியல் கொண்டுள்ளது.
இந்தப் பக்கத்தில்
- A பதிவு
- AAAA பதிவு
- CAA பதிவு
- CNAME பதிவு
- DKIM பதிவு
- DMARC பதிவு
- DNS
- டொமைன் அனுமதிக் குறியீடு
- டொமைன் பெயர்
- டொமைன் வழங்குநர்
- மின்னஞ்சல் ஹோஸ்டிங்
- மின்னஞ்சல் பகிர்தல்
- HTTP Strict Transport Security (HSTS)
- ICANN
- சர்வதேச டொமைன்
- சர்வதேச இலக்கு அமைத்தல்
- IP முகவரி
- IPS டேக்
- MX பதிவு
- முதன்மை டொமைன்
- ரூட் டொமைன்
- SPF பதிவு
- SSL சான்றிதழ்
- துணை டைரக்டரி
- துணை டொமைன்
- Time to Live
- முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை டொமைன்கள்
- TLS சான்றிதழ்
- TXT பதிவு
- WHOIS தனியுரிமை
A பதிவு
A பதிவு என்பது டொமைன் பெயருடன் ஒரு குறிப்பிட்ட IPv4 முகவரி இணைக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கும் DNS அமைப்பாகும். இந்த நேர்வில், உங்கள் A பதிவு Shopify-இன் IPv4 முகவரியைச் சுட்டிக்காட்ட வேண்டும்.
நீங்கள் மூன்றாம் தரப்பு டொமைனைப் பயன்படுத்தினால், இயல்புநிலை Shopify IPv4 முகவரி 23.227.38.65 ஆகும். ஏற்கனவே உள்ள டொமைனை இணைக்க, நீங்கள் Shopify-இன் IPv4 முகவரிக்கு உங்கள் A பதிவை அமைக்க வேண்டும்.
பிற சொற்கள்: முகவரிப் பதிவு, ஹோஸ்ட் பதிவு
AAAA பதிவு
AAAA பதிவு (quad-A) என்பது டொமைன் பெயருடன் ஒரு குறிப்பிட்ட IPv6 முகவரி இணைக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கும் DNS அமைப்பாகும். இந்த நேர்வில், உங்கள் AAAA பதிவு Shopify-இன் IPv6 முகவரியைச் சுட்டிக்காட்ட வேண்டும்.
நீங்கள் மூன்றாம் தரப்பு டொமைனைப் பயன்படுத்தினால், Shopify-இன் சுருக்கப்பட்ட IPv6 முகவரி 2620:0127:f00f:5:: ஆகும். ஏற்கனவே உள்ள டொமைனை இணைக்க, நீங்கள் Shopify-இன் IPv6 முகவரிக்கு உங்கள் AAAA பதிவை அமைக்க வேண்டும்.
சில மூன்றாம் தரப்பு டொமைன் வழங்குநர்கள் சுருக்கப்பட்ட IPv6 முகவரியை ஏற்பதில்லை. Shopify-இன் சுருக்கப்பட்ட IPv6 முகவரியான 2620:0127:f00f:5:: என்பதை உங்கள் மூன்றாம் தரப்பு டொமைன் வழங்குநர் நிராகரித்தால், நீங்கள் விரிவாக்கப்பட்ட பதிப்பைப் பயன்படுத்த வேண்டும். Shopify-இன் விரிவாக்கப்பட்ட IPv6 முகவரி 2620:0127:f00f:0005:0000:0000:0000:0000 ஆகும்.
CAA பதிவு
ஒரு டொமைனுக்குச் சான்றிதழ்களை வழங்க எந்தச் சான்றிதழ் அதிகாரிகளுக்கு (certificate authorities) அனுமதி உள்ளது என்பதைக் குறிப்பிட CAA (Certification Authority Authorization) பதிவு பயன்படுத்தப்படுகிறது. சான்றிதழ் அதிகாரி (CA) என்பது இணையத்தில் ஒரு டிஜிட்டல் நிறுவனத்தின் அடையாளத்தைச் சரிபார்க்கும் மின்னணு ஆவணங்களை வழங்கும் நம்பகமான அமைப்பாகும்.
CNAME பதிவு
கனோனிக்கல் பெயர் (CNAME) பதிவு என்பது உங்கள் துணை டொமைன்களை மற்றொரு டொமைன் பெயருக்குச் சுட்டிக்காட்டும் ஒரு DNS அமைப்பாகும்.
பிற சொற்கள்: CNAME ஆதாரப் பதிவு, மாற்றுப்பெயர்
DKIM பதிவு
மின்னஞ்சல்களில் டிஜிட்டல் கையொப்பமிட DKIM (Domain Keys Identified Mail) மின்னஞ்சல் அங்கீகாரத் தொழில்நுட்பத்தை Shopify பயன்படுத்துகிறது. ஒரு மின்னஞ்சல் செய்தி அந்த டொமைனின் உரிமையாளரால் அங்கீகரிக்கப்பட்டு அனுப்பப்பட்டதா என்பதைப் பெறுநர் சரிபார்க்க இது அனுமதிக்கிறது. நீங்கள் மூன்றாம் தரப்பு டொமைனைப் பயன்படுத்துகிறீர்கள் எனில், உங்கள் டொமைனை அங்கீகரிக்க CNAME பதிவுகளைச் சேர்ப்பதன் மூலம் தானாகவே DKIM-ஐமைக்கலாம், மேலும் அறிவிப்பு மின்னஞ்சல்கள் ஸ்பேம் எனக் கொடியிடப்படுவதைத் தடுக்கவும் உதவலாம். உங்கள் அனுப்புநர் மின்னஞ்சல் store+123@shopifyemail.com எனத் திருத்தி எழுதப்படுவதை முழுமையாகத் தடுக்க, உங்களுக்குச் சரியான DMARC பதிவு தேவை.
நீங்கள் Shopify மூலம் உங்கள் டொமைனை வாங்கியிருந்தால், DKIM, SPF மற்றும் DMARC ஆகிய அனைத்தும் தானாகவே அமைக்கப்படும். உங்கள் DNS அமைப்புகளில் DKIM மற்றும் SPF ஆகியவை CNAME பதிவுகளாகத் தோன்றும், DMARC ஒரு TXT பதிவாகத் தோன்றும். இந்தப் பதிவுகளை நீக்க வேண்டாம், ஏனெனில் அவற்றை அகற்றினால் உங்கள் அனுப்புநர் மின்னஞ்சல் store+123@shopifyemail.com எனத் திருத்தி எழுதப்படும்.
DMARC பதிவு
Domain-based Message Authentication, Reporting, and Conformance (DMARC) என்பது ஒரு மின்னஞ்சல் அங்கீகாரப் பதிவாகும், தாங்கள் பெறும் செய்தி அந்த டொமைனிலிருந்து அனுமதிக்கப்பட்டதா என்பதை மின்னஞ்சல் வழங்குநர்கள் தீர்மானிக்க இது உதவுகிறது. உங்கள் DMARC தேவைகளைப் பூர்த்தி செய்கிறது என்பதை நிரூபிக்க, மின்னஞ்சல் அங்கீகாரச் சோதனைகளில் தேர்ச்சி பெற வேண்டும். மின்னஞ்சல் DMARC தேவைகளில் தோல்வியுற்றால், மின்னஞ்சல் வழங்குநர் DMARC வழிமுறைகளைப் பின்பற்றுவார்:
p=none: DMARC பதிவு இல்லாதது போல் எந்த நடவடிக்கையும் எடுக்காது.p=quarantine: பெறுநரின் ஸ்பேம் கோப்புறையில் மின்னஞ்சலை வைக்கும்.p=reject: மின்னஞ்சலைச் சிறிதும் ஏற்காமல், அதைத் தடுக்கும்.
உங்கள் அனுப்புநர் மின்னஞ்சல் store+123@shopifyemail.com எனத் திருத்தி எழுதப்படுவதைத் தடுக்க, DKIM மற்றும் SPF அங்கீகாரத்திற்கான CNAME பதிவுகளுடன் ஒரு DMARC பதிவு தேவை. உங்கள் பிராண்டு மின்னஞ்சல் முகவரி சரியாகத் தோன்றுவதற்கு, உங்கள் DNS அமைப்புகளில் இரண்டு பதிவுகளையும் சேர்க்க வேண்டும். DMARC பதிவை எப்படிச் சேர்ப்பது என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
உங்கள் டொமைனில் சரியாக ஒரு DMARC பதிவு மட்டுமே இருக்க வேண்டும். பல DMARC பதிவுகள் இருந்தால், உங்கள் டொமைனுக்கு எதிரான DMARC சோதனைகள் தோல்வியடையும்.
DNS
Domain Name Systems (DNS) என்பது டொமைன் பெயர்களின் தரவுத்தளமாகும். ஒவ்வொரு டொமைனுக்கும் அதற்கான சொந்த DNS உள்ளீடு இருக்கும். டொமைன் பெயர்களை ஒழுங்கமைத்து, அவற்றைச் சொற்களிலிருந்து எண்களாக மாற்றுவதற்கு Domain Name Systems உதவுகிறது, எனவே நீங்கள் இணையதளத்தின் IP முகவரியை நினைவில் கொள்ளாமலேயே அதனைப் பார்வையிடலாம். எடுத்துக்காட்டாக, shopify.com என்பதன் IP முகவரி 23.227.38.65 ஆகும். வழக்கமாக, இந்தச் செயல்முறை பின்னணியில் விரைவாகச் செயல்படும். உங்கள் Shopify ஸ்டோருடன் மூன்றாம் தரப்பு டொமைனை இணைக்கும்போது, உங்களின் DNS அமைப்புகளை மாற்ற வேண்டியிருக்கலாம்.
உங்களின் myshopify.com டொமைன் பெயருக்கான DNS அமைப்புகளை உங்களால் மாற்ற முடியாது. மூன்றாம் தரப்புச் சேவையுடன் இணைப்பதற்கு அல்லது துணை டொமைன்களை அமைக்க, உங்கள் டொமைனில் பதிவுகளைச் சேர்க்க விரும்பினால், நீங்கள் ஒரு தனிப்பயன் டொமைனைச் சேர்க்க வேண்டும்.
பிற சொற்கள்: DNS பதிவுகள், DNS அமைப்புகள், ஆதாரப் பதிவுகள், DNS கோப்பு மண்டலம்
டொமைன் அனுமதிக் குறியீடு
ஒரு டொமைன் அனுமதிக் குறியீடு என்பது உங்களுக்கு ஒரு டொமைன் சொந்தமாக இருப்பதையும், புதிய டொமைன் வழங்குநருக்கு அதை இடமாற்றம் செய்ய நீங்கள் ஒப்புதல் அளித்ததையும் நிரூபிக்கும் குறியீடாகும். உங்கள் தற்போதைய டொமைன் வழங்குநரிடமிருந்து குறியீட்டைப் பெற்று, அதன்பிறகு இடமாற்றத்தை முடிக்க புதிய டொமைன் வழங்குநரிடம் கொடுக்க வேண்டும். பெரும்பாலான டொமைன் நீட்டிப்புகள் அனுமதிக் குறியீட்டைப் பயன்படுத்துகின்றன, ஆனால் சில நாட்டு-குறியீட்டு நீட்டிப்புகள் .uk டொமைன்கள் பயன்படுத்தும் Internet Provider Security (IPS) டேக் போன்ற வித்தியாசமான முறையைப் பயன்படுத்துகின்றன.
பிற சொற்கள்: auth குறியீடு, இடமாற்ற அனுமதிக் குறியீடு, Extensible Provisioning Protocol (EPP) குறியீடு
டொமைன் பெயர்
டொமைன் பெயர் என்பது இணையத்தில் உங்கள் இணையதளத்தைப் பார்வையிட மக்கள் பயன்படுத்தும் முகவரியாகும். டொமைன் பெயர்கள் உங்கள் இணைய உலாவியின் முகவரிப் பட்டியில் காட்சிப்படுத்தப்படும், மேலும் அவை குறிப்பிட்ட IP முகவரிகளுடன் இணைக்கப்பட்டிருக்கும்.
பிற சொற்கள்: டொமைன்
டொமைன் வழங்குநர்
ஒரு டொமைன் வழங்குநர் என்பவர் உங்களுக்கான டொமைன் பெயரைப் பதிவுசெய்யும் நிறுவனமாகும். பொதுவாக, சந்தா அடிப்படையில் நீங்கள் டொமைனை வாங்குவீர்கள், மேலும் உங்கள் டொமைன் பெயரைத் தொடர்ந்து பயன்படுத்த டொமைன் வழங்குநருக்கு வழக்கமான கட்டணத்தைச் செலுத்துவீர்கள். நீங்கள் Shopify மூலம் ஒரு டொமைனை வாங்கும்போது, Shopify உங்களின் டொமைன் வழங்குநராகும். OpenSRS போன்று உங்கள் டொமைனின் பதிவை நிர்வகிப்பதற்காகச் சேர்ந்து பணியாற்றும் டொமைன் நிர்வாகக் கூட்டாளர்களையும் Shopify கொண்டுள்ளது.
பிற சொற்கள்: டொமைன் மறுவிற்பனையாளர், டொமைன் பதிவாளர், டொமைன் பதிவேடு, டொமைன் ஹோஸ்ட்
மின்னஞ்சல் ஹோஸ்டிங்
மின்னஞ்சல் ஹோஸ்டிங் என்பது தனிப்பயன் மின்னஞ்சல் முகவரியை அமைக்கவும், பின்னர் அதைப் பயன்படுத்தி மின்னஞ்சல் செய்திகளை அனுப்பவும் பெறவும் உதவும் ஒரு சேவையாகும். Shopify-இல் மின்னஞ்சல் ஹோஸ்டிங் வழங்கப்படுவதில்லை, ஆனால் மூன்றாம் தரப்பு மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவையை உங்களின் தனிப்பயன் டொமைனுடன் இணைக்கலாம்.
மின்னஞ்சல் பகிர்தல்
மின்னஞ்சல் பகிர்தல் என்பது ஒரு மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும் மின்னஞ்சல் செய்தியை மற்றொரு மின்னஞ்சல் முகவரிக்குத் திசைதிருப்ப உதவும் ஒரு சேவையாகும். உங்களிடம் Shopify நிர்வகிக்கும் டொமைன் இருந்தால், மூன்றாம் தரப்பினரால் ஹோஸ்ட் செய்யப்படும் மின்னஞ்சல் கணக்கிற்குப் பகிரப்படும், வரம்பற்ற தனிப்பயன் டொமைன் மின்னஞ்சல் முகவரிகளை நீங்கள் அமைக்கலாம். எடுத்துக்காட்டாக, example.com என்ற டொமைன் பெயர் உங்களுக்குச் சொந்தமாக இருந்தால், உங்கள் வாடிக்கையாளர்கள் தொடர்புகொள்வதற்காக info@example.com என்ற தனிப்பயன் டொமைன் மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி, பகிர்தல் மின்னஞ்சல் முகவரியை உங்களின் தனிப்பட்ட கணக்கிற்கு அமைக்கலாம். வாடிக்கையாளர்கள் info@example.com என்பதற்கு ஒரு மின்னஞ்சல் செய்தியை அனுப்பும்போது, அந்த மின்னஞ்சல் செய்தி உங்களின் தற்போதைய தனிப்பட்ட கணக்கிற்குப் பகிரப்படும்.
HTTP Strict Transport Security (HSTS)
HTTP Strict Transport Security (HSTS) என்பது பாதுகாப்பான HTTPS இணைப்பின் மூலம் மட்டுமே உலாவிகள் உங்கள் ஆன்லைன் ஸ்டோருடன் இணைக்கப்படுவதை உறுதிசெய்யும் இணையப் பாதுகாப்பு வழிமுறையாகும். பாதுகாப்பான இணைப்பைப் பயன்படுத்துவது சில வகையான வலையமைப்புத் தாக்குதல்களைத் தடுக்கிறது, மேலும் உங்களின் மற்றும் உங்கள் வாடிக்கையாளர்களின் தகவல்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய உதவுகிறது. உங்கள் Shopify ஸ்டோருடன் உங்கள் டொமைன் இணைக்கப்பட்டிருக்கும் வரை HSTS எப்போதும் உங்கள் டொமைனில் செயல்பாட்டில் இருக்கும்.
ஒரு டொமைனில் குறிப்பிட்ட காலத்திற்கு HSTS கொள்கையை அமைக்கலாம். Shopify-இன் இயல்புநிலை கால அளவு 90 நாட்கள். நீங்கள் ஒரு டொமைனை அகற்றினால் அல்லது Shopify-ஐ விட்டு முழுமையாக வெளியேறினால், இந்தக் கொள்கை கூடுதலாக 90 நாட்களுக்கு உங்கள் டொமைனில் செயல்பாட்டில் இருக்கும்.
ICANN
The Internet Corporation for Assigned Names and Numbers (ICANN) என்பது Domain Name Systems மற்றும் பிற இணைய நெறிமுறைகளைக் கட்டுப்படுத்தி நிர்வகிக்கும் ஒரு நிறுவனமாகும்.
IANA
The Internet Assigned Numbers Authority (IANA) என்பது ICANN-இன் செயல்பாட்டு அஃபிலியேட் ஆகும்.
சர்வதேச டொமைன்
சர்வதேச டொமைன் என்பது ஒரு குறிப்பிட்ட நாடு அல்லது பிராந்தியத்திற்கான URL ஆகும். குறிப்பிட்ட நாடுகள் அல்லது பிராந்தியங்களுக்குரிய மொழிகளிலும் நாணயங்களிலும் உங்கள் ஆன்லைன் ஸ்டோரைக் காட்ட சர்வதேச டொமைன்களைப் பயன்படுத்தலாம். Basic மற்றும் அதற்கு மேற்பட்ட திட்டங்களில் சர்வதேச டொமைன்கள் கிடைக்கும்.
பிற சொற்கள்: பிராந்திய டொமைன், பிராந்தியத் துணை டொமைன்
சர்வதேச இலக்கு
ஒரு குறிப்பிட்ட நாடு அல்லது பிராந்தியத்திலுள்ள உள்ளூர் வாடிக்கையாளர்களுக்கு உங்கள் ஸ்டோரின் சரியான பதிப்பைக் காட்ட சர்வதேச இலக்கு உங்களை அனுமதிக்கிறது. எடுத்துக்காட்டாக, நீங்கள் அமெரிக்காவிலுள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே விற்றால், உங்கள் ஸ்டோரின் இலக்கு நாட்டை அமெரிக்காவாக அமைக்கலாம். Google Search Console இல் உங்கள் ஸ்டோரின் ஒவ்வொரு டொமைன் அல்லது துணை டொமைனுக்கும் ஒரு இலக்கு நாடு அல்லது பிராந்தியத்தை அமைக்கலாம்.
பிற சொற்கள்: ஜியோ-டார்கெட்டிங்
IP முகவரி
IP முகவரி என்பது இணையத்தில் உள்ள ஒரு கணினி அல்லது சாதனத்தின் இருப்பிடத்தைக் குறிப்பிட்டு, பிற கணினிகள் அல்லது சாதனங்களில் இருந்து அதை வேறுபடுத்திக் காட்டும் எண்களின் தனித்துவமான ஒரு சரமாகும். இணையத்தின் வாயிலாக ஒரு கணினி மற்ற சாதனங்களுடன் தொடர்புகொள்ள ஒரு IP முகவரி தேவைப்படுகிறது.
நீங்கள் ஒரு மூன்றாம் தரப்பு டொமைனைப் பயன்படுத்தினால், Shopify-இன் IP முகவரி 23.227.38.65 ஆகும். ஏற்கனவே உள்ள டொமைனை இணைக்க, நீங்கள் A பதிவை Shopify-இன் IP முகவரிக்கு அமைக்க வேண்டும்.
Shopify வாயிலாக நீங்கள் ஒரு டொமைனை வாங்கினால் அல்லது உங்கள் டொமைனை Shopify-க்கு இடமாற்றினால், உங்கள் டொமைன் பின்வரும் IP முகவரிகளில் ஏதேனும் ஒன்றைக் கொண்டிருக்கலாம்:
23.227.38.3223.227.38.3623.227.38.65முதல்23.227.38.74வரை
உங்கள் Shopify டொமைன் எந்த நேரத்திலும் இந்த IP முகவரிகளுக்கு இடையில் மாறக்கூடும். DNS அமைப்புகள் பக்கத்தின் A பதிவு பிரிவில் உள்ள குறியீடுகள் மதிப்பைச் சரிபார்ப்பதன் மூலம் உங்கள் தற்போதைய Shopify IP முகவரியைக் கண்டறியலாம்.
பிற சொற்கள்: இன்டர்நெட் புரோட்டோகால் முகவரி
IPS டேக்
இணைய வழங்குநர் பாதுகாப்பு (IPS) டேக் என்பது ஒரு குறியீடாகும். .co.uk டொமைனைப் போன்று ஒரு .uk டொமைனை நிர்வகிக்கும் டொமைன் வழங்குநரை அது அடையாளம் காண்கிறது. டொமைன் அனுமதிக் குறியீட்டைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, தற்போதைய வழங்குநர் டொமைனின் IPS டேக்கை புதிய வழங்குநரின் டேக்கிற்கு மாற்றும்போது, .uk டொமைன் புதிய டொமைன் வழங்குநருக்கு மாறும்.
MX பதிவு
MX பதிவு என்பது ஒரு டொமைன் பெயரை அஞ்சல் சேவையகத்திற்குக் காட்டும் DNS அமைப்பாகும். உங்கள் தனிப்பயன் டொமைன் மூலமாக மின்னஞ்சல்களைச் செயலாக்க இது பயன்படுத்தப்படுகிறது. உங்கள் முதன்மை மின்னஞ்சல் சேவையகம் செயல்படாத சமயத்தில் மின்னஞ்சல் செய்திகள் உங்களை வந்தடைவதை உறுதிசெய்ய விரும்பினால் ஒன்றுக்கும் மேற்பட்ட MX பதிவை அமைத்து காப்பு மின்னஞ்சல் முகவரிகளையும் சேர்க்கலாம்.
பிற சொற்கள்: அஞ்சல் பரிமாற்றப் பதிவு, Mail eXchanger பதிவு, அஞ்சல் சேவையகப் பதிவு
முதன்மை டொமைன்
Shopify இல், வாடிக்கையாளர்கள் உங்கள் ஆன்லைன் ஸ்டோரை உலாவுவதற்காகத் தேடும்போது முகவரிப் பட்டியில் காட்டப்படும் டொமைன் பெயரே உங்கள் முதன்மை டொமைன் ஆகும். நீங்கள் உங்கள் ரூட் டொமைன் அல்லது ஒரு துணை டொமைனை உங்கள் முதன்மை டொமைனாகப் பயன்படுத்தலாம், ஆனால் உங்கள் ஆன்லைன் ஸ்டோருக்கு ஒரு முதன்மை டொமைன் மட்டுமே இருக்க முடியும்.
Shopify இல் பதிவுசெய்யும்போது, முன்கூட்டியே உருவாக்கப்பட்ட myshopify.com டொமைன் உங்களுக்கு வழங்கப்படும். எனினும், உங்கள் ஆன்லைன் ஸ்டோருக்குச் செல்ல வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் முதன்மை டொமைனை மாற்றலாம். உங்கள் ஸ்டோர்ஃபிரண்டுக்குப் பிராண்ட் பெயருடன் கூடிய இலவச டொமைன் தேவைப்பட்டால், புதிய .myshopify.com டொமைன் பெயரைத் தேர்ந்தெடுக்கலாம். பெரும்பாலான ஸ்டோர்களில் புதிய myshopify.com டொமைன் பெயரை 1 முறை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும். நீங்கள் பதிவுசெய்தபோது உள்ளிட்ட ஸ்டோர் பெயரிலிருந்து உங்கள் myshopify.com டொமைன் உருவாக்கப்பட்டிருந்தால், அப்போதும் புதிய பெயரை 1 முறை தேர்ந்தெடுக்கலாம். மேலும், Shopify மூலம் அல்லது எந்தவொரு மூன்றாம் தரப்பு டொமைன் பதிவாளரிடமிருந்தும் தனிப்பயன் டொமைனை வாங்கி, Shopify உடன் இணைக்கலாம். Shopify இல் தனிப்பயன் டொமைனைச் சேர்த்த பிறகு, அதை முதன்மை டொமைனாக அமைக்கலாம்.
ரூட் டொமைன்
ரூட் டொமைன் என்பது உங்கள் டொமைன் வழங்குநரிடமிருந்து நீங்கள் வாங்கும் டொமைன் பெயராகும். ஒரு ரூட் டொமைனானது .com, .org, அல்லது .net போன்ற டாப்-லெவல் டொமைன் (TLD) நீட்டிப்பைக் கொண்டிருக்கும், ஆனால் அதில் www. போன்ற முன்னொட்டு இருக்காது. ரூட் டொமைனுக்கு ஒரு எடுத்துக்காட்டு shopify.com ஆகும்.
பிற சொற்கள்: பேஸ் டொமைன், டாப்-லெவல் டொமைன் மற்றும் செகண்ட்-லெவல் டொமைன், அபெக்ஸ் டொமைன்
SPF பதிவு
மின்னஞ்சல் அங்கீகாரத்தின் ஒரு பகுதியாக Shopify SPF-ஐ (அனுப்புநர் கொள்கைக் கட்டமைப்பு) பயன்படுத்துகிறது. உங்கள் டொமைனை அங்கீகரிக்க CNAME பதிவுகளைச் சேர்க்கும்போது, SPF தானாகவே உள்ளமைக்கப்படும். இந்த நோக்கத்திற்காகத் தனிப்பட்ட SPF TXT பதிவை நீங்கள் சேர்க்க வேண்டியதில்லை. உங்களின் அனுப்புநர் மின்னஞ்சல் store+123@shopifyemail.com என மீண்டும் எழுதப்படுவதை முழுமையாகத் தடுக்க, CNAME பதிவுகளுடன் கூடுதலாகச் சரியான DMARC பதிவையும் உங்கள் DNS அமைப்புகளில் சேர்க்க வேண்டும்.
நீங்கள் Shopify மூலமாக உங்கள் டொமைனை வாங்கியிருந்தால், உங்கள் DNS அமைப்புகளில் CNAME பதிவுகளாக SPF தானாகவே உள்ளமைக்கப்படும். இந்தப் பதிவுகளை நீக்க வேண்டாம். நீங்கள் Shopify நிர்வகிக்கும் டொமைனில் மின்னஞ்சல் பகிர்தலைப் பயன்படுத்தினால், பகிரப்பட்ட மின்னஞ்சல்கள் சரியாக வழங்கப்படுவதை உறுதிசெய்ய நீங்கள் தனிப்பட்ட SPF பதிவு ஒன்றையும் சேர்க்க வேண்டும்.
SSL சான்றிதழ்
TLS சான்றிதழைக் காண்க.
துணை அடைவு
துணை அடைவு என்பது உங்கள் முதன்மை இணையதளத்தின் ஒரு பிரிவாகும். டொமைன் பெயரின் இறுதியில் உள்ள / குறியீடு மூலம் துணை அடைவு வரையறுக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, shopify.com/pricing என்ற URL-இல், /pricing என்பது துணை அடைவாகும். துணை அடைவு என்பது துணை டொமைனிலிருந்து வேறுபட்டதாகும், ஏனெனில் இது முக்கியமாக உங்கள் இணையதளத்தை ஒழுங்கமைக்கப் பயன்படுத்தப்படுகிறது, அதே நேரத்தில் துணை டொமைன் உங்களை முற்றிலும் வேறுபட்ட இணையதளத்திற்கு அழைத்துச் செல்லக்கூடும். உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் உள்ள துணை அடைவுகளுக்கான எடுத்துக்காட்டுகள் /collections, /products மற்றும் /pages.
நீங்கள் துணை அடைவுப் பெயர்களைத் திருத்த முடியாது. நீங்கள் எந்த டொமைனைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், துணை அடைவுப் பெயர்கள் மாறாமல் இருக்கும்.
துணை டொமைன்
துணை டொமைன் என்பது உங்கள் ரூட் டொமைனுக்கு முன்னொட்டாக நீங்கள் சேர்க்கும் ஒரு பகுதியாகும். எடுத்துக்காட்டாக, help.shopify.com என்ற URL-இல், shopify.com என்பது ரூட் டொமைன், help. என்பது துணை டொமைன். பார்வையாளர்கள் தேடும் தகவல்களை எளிதாகக் கண்டறியும் வகையில் உங்கள் இணையதளத்தை ஒழுங்கமைக்கத் துணை டொமைன்களைப் பயன்படுத்தலாம். நீங்கள் Basic அல்லது அதற்கு மேற்பட்ட திட்டத்தில் இருந்து, பல நாடுகள் அல்லது பிராந்தியங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு விற்க விரும்பினால், உங்கள் இலக்குச் சந்தை உள்ள ஒவ்வொரு நாடு அல்லது பிராந்தியத்திற்கும் ஒரு பிராந்தியத் துணை டொமைனை அமைக்க சர்வதேச டொமைன்களைப் பயன்படுத்தலாம்.
Time to Live
உங்கள் டொமைனின் Time to Live (TTL) மதிப்பு உங்கள் DNS பதிவுகள் எவ்வளவு அடிக்கடி புதுப்பிக்கப்படும் என்பதைத் தீர்மானிக்கிறது. அனைத்து டொமைன் DNS பதிவுகளும் ஒரு TTL மதிப்பைக் கொண்டுள்ளன. எடுத்துக்காட்டாக, ஒரு பதிவானது 86400 வினாடிகள் என்ற TTL-ஐக் கொண்டிருந்தால், அது நடைமுறைக்கு வர 24 மணிநேரம் வரை ஆகும். ஒரு பதிவின் TTL-ஐ மாற்றுவது, அதன் பின்னர் நிகழப்போகும் மாற்றங்கள் நடைபெறுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்பதைப் பாதிக்கும்.
டாப்-லெவல் மற்றும் செகண்ட்-லெவல் டொமைன்கள்
டாப்-லெவல் டொமைன் (TLD) மற்றும் செகண்ட்-லெவல் டொமைன் ஆகியவை ரூட் டொமைனின் கூறுகளாகும், அவை டொமைன் கட்டமைப்பிற்குப் படிநிலையைக் கொடுக்கின்றன. எடுத்துக்காட்டாக, shopify.com என்ற ரூட் டொமைனில், டாப்-லெவல் டொமைன் என்பது .com மற்றும் செகண்ட்-லெவல் டொமைன் என்பது shopify ஆகும்.
TLS சான்றிதழ்
TLS (போக்குவரத்து அடுக்கு பாதுகாப்பு) சான்றிதழ் என்பது சேவையகத்திற்கும் உலாவிக்குமிடையே பாதுகாப்பான இணைப்பை உருவாக்கும் ஒரு பாதுகாப்பு நெறிமுறையாகும், இது உங்களின் சொந்த இணைப்புகள் மற்றும் உங்கள் வாடிக்கையாளர்களின் இணைப்புகள் உட்பட Shopify-க்கான அனைத்து இணைப்புகளையும் பாதுகாப்பாக வைத்திருக்கும். உங்கள் Shopify நிர்வாகியில், உங்கள் ஆன்லைன் ஸ்டோரின் உள்ளடக்கத்தை என்க்ரிப்ட் செய்யவும் HTTP-க்குப் பதிலாக HTTPS-ஐப் பயன்படுத்திப் பாதுகாப்பாக வெளியிடவும், உங்கள் Shopify ஸ்டோருக்கான பாதுகாப்பான இணைப்புகளைச் செயல்படுத்தலாம். உங்களின் TLS சான்றிதழ் செயல்படுத்தப்படும்போது, முகவரிப் பட்டியில் உள்ள உங்கள் ஆன்லைன் ஸ்டோரின் URL-க்கு அருகில் ஒரு பூட்டு ஐகான் காட்டப்படும்.
பிற சொற்கள்: போக்குவரத்து அடுக்கு பாதுகாப்பு, Secure Sockets Layer, SSL
TXT பதிவு
TXT பதிவு என்பது ஒரு DNS அமைப்பு ஆகும். உங்கள் டொமைனுக்கு வெளியேயுள்ள சேவைகளால் பயன்படுத்தக்கூடிய உரைத் தகவல்கள் TXT பதிவுகளில் இடம்பெற்றிருக்கும். எடுத்துக்காட்டாக, டொமைன் உங்களுக்குச் சொந்தமானது என்பதை மூன்றாம் தரப்புச் சேவையுடன் சரிபார்க்க, அவர்கள் உங்களுக்கு வழங்கிய TXT பதிவை நீங்கள் சேர்க்கலாம்.
பிற சொற்கள்: உரைப் பதிவு
WHOIS தனியுரிமை
ஒரு டொமைன் பெயரின் உரிமையாளரைப் பற்றிய தகவலைக் கண்டறிய நீங்கள் பயன்படுத்தக்கூடிய சேவையே WHOIS ஆகும்.
WHOIS தனியுரிமை என்பது WHOIS தேடலில் இருந்து உங்கள் டொமைன் தகவலை மறைத்து, உங்கள் தொடர்புத் தகவலுக்குப் பதிலாக contactprivacy.com தொடர்பு விவரங்களை மாற்றியமைக்கும் ஒரு சேவையாகும். பொதுமக்களுக்குத் தெரியாமல் உங்களின் தனிப்பட்ட தொடர்புத் தகவல் மறைக்கப்பட்டிருப்பதை WHOIS தனியுரிமை அனுமதிக்கிறது. உங்கள் டொமைன் வழங்குநரிடமிருந்து கூடுதல் கட்டணம் செலுத்தி WHOIS தனியுரிமையை நீங்கள் வாங்கலாம். Shopify மூலமாக உங்கள் டொமைனை வாங்கும்போதே அதில் WHOIS தனியுரிமை சேர்க்கப்பட்டிருக்கும்.