Shopify நிர்வகிக்கும் டொமைன்களை வேறொரு ஸ்டோருக்கோ டொமைன் வழங்குநருக்கோ இடமாற்றுதல்
உங்களிடம் Shopify நிர்வகிக்கும் டொமைன் இருந்து, அதை இனி உங்கள் Shopify ஸ்டோருடன் பயன்படுத்த விரும்பவில்லை என்றால், உங்கள் டொமைனை வேறொரு Shopify ஸ்டோருக்கோ டொமைன் வழங்குநருக்கோ இடமாற்றலாம். உங்கள் Shopify ஸ்டோரை முடக்கத் திட்டமிட்டிருந்து, Shopify நிர்வகிக்கும் உங்கள் டொமைனைத் தொடர்ந்து பயன்படுத்த விரும்பினால், ஸ்டோரை முடக்கும் முன்பே டொமைனை இடமாற்றவும். உங்கள் ஸ்டோர் ஏற்கனவே இடைநிறுத்தப்பட்டிருந்தாலோ செயலிழக்கப்பட்டிருந்தாலோ அல்லது முடக்கப்பட்டிருந்தாலோ, நீங்கள் இன்னும் செயலற்ற ஸ்டோரிலிருந்து உங்கள் டொமைனை இடமாற்றலாம்.
இந்தப் பக்கத்தில்
Shopify நிர்வகிக்கும் உங்கள் டொமைனை வேறொரு Shopify ஸ்டோருக்கு இடமாற்றுதல்
டொமைன்கள் பக்கத்திலிருந்து Shopify நிர்வகிக்கும் டொமைனை ஒரு ஸ்டோரிலிருந்து வேறொரு Shopify ஸ்டோருக்கு இடமாற்றலாம். நீங்கள் உங்கள் டொமைனை இடமாற்றும்போது, உங்கள் மின்னஞ்சல் பகிர்தல் முகவரிகள், DNS பதிவுகள் மற்றும் துணை டொமைன்கள் ஆகியவை டொமைனுடன் சேர்ந்து இடமாற்றப்படும்.
கடையின் உரிமையாளரும், டொமைனை வேறொரு Shopify ஸ்டோருக்கு இடமாற்று என்ற அனுமதியைக் கொண்ட பணியாளரும் மட்டுமே Shopify நிர்வகிக்கும் டொமைனை இடமாற்ற முடியும். இடமாற்ற இணைப்பானது, இடமாற்றத்தைத் தொடங்கிய நபருக்கு அனுப்பப்படாமல், உங்கள் ஸ்டோர் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். வேறு முகவரியில் இடமாற்ற மின்னஞ்சலைப் பெற, நீங்கள் தொடரும் முன் ஸ்டோர் மின்னஞ்சல் முகவரியைப் புதுப்பிக்கவும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > டொமைன்கள் என்பதற்குச் செல்லவும்.
டொமைன்கள் பிரிவில், நீங்கள் இடமாற்ற விரும்பும் டொமைனின் பெயரைக் கிளிக் செய்யவும்.
டொமைன் அமைப்புகள் > மற்றொரு Shopify ஸ்டோருக்கு இடமாற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டோரின் மின்னஞ்சல் முகவரி புதுப்பித்த நிலையில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்தி, இடமாற்ற இணைப்பை அனுப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
இடமாற்றுவது குறித்த மின்னஞ்சல் செய்தியைப் பெறும்போது, பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:
- நீங்கள் மற்ற ஸ்டோரின் உரிமையாளராகவோ அல்லது மற்றொரு Shopify ஸ்டோருக்கு டொமைனை இடமாற்று என்ற அனுமதியுள்ள பணியாளராகவோ இருந்தால், மின்னஞ்சல் உரையில் உள்ள இடமாற்ற இணைப்பைக் கிளிக் செய்து, டொமைனை இடமாற்ற வேண்டிய Shopify ஸ்டோரில் உள்நுழையவும்.
- நீங்கள் மற்ற ஸ்டோரின் உரிமையாளர் இல்லையென்றால் அல்லது மற்றொரு Shopify ஸ்டோருக்கு டொமைனை இடமாற்று என்ற அனுமதியுள்ள பணியாளர் இல்லையென்றால், அந்த ஸ்டோருக்கான உரிய அனுமதியுள்ள ஒருவருக்கு மின்னஞ்சல் செய்தியை ஃபார்வர்டு செய்யவும்.
டொமைன் இடமாற்றம் வெற்றியடைய, கடையின் உரிமையாளர் அல்லது உரிய அனுமதியுள்ள பணியாளர் மின்னஞ்சல் செய்தியில் உள்ள இடமாற்ற இணைப்பிலிருந்து நேரடியாக Shopify ஸ்டோரில் உள்நுழைய வேண்டும். இடமாற்றம் ஏற்கப்பட்ட பிறகு, டொமைன் இடமாற்றம் முடிவடைய 24 மணிநேரம் வரை ஆகலாம்.
Shopify ஆல் நிர்வகிக்கப்படும் உங்கள் டொமைனை மற்றொரு டொமைன் வழங்குநருக்கு இடமாற்றவும்
உங்கள் டொமைனை இனி Shopify மூலம் நிர்வகிக்க விரும்பவில்லை என்றால், Shopify ஆல் நிர்வகிக்கப்படும் உங்கள் டொமைனை மற்றொரு டொமைன் வழங்குநருக்கு நீங்கள் இடமாற்றலாம்.
உங்கள் டொமைனை இடமாற்றுவதற்கு முன்பு
Shopify மூலம் நிர்வகிக்கப்படும் உங்கள் டொமைனை மற்றொரு டொமைன் வழங்குநருக்கு இடமாற்றுவதற்கு முன்பு, பின்வரும் விஷயங்களைக் கவனத்தில் கொள்ளவும்:
- கடையின் உரிமையாளரால் மட்டுமே ஒரு டொமைனை மற்றொரு டொமைன் வழங்குநருக்கு இடமாற்ற முடியும்.
- உங்கள் ஸ்டோர் இடைநிறுத்தப்பட்ட, முடக்கப்பட்ட அல்லது முடக்கம் செய்யப்பட்ட நிலையில் இருக்கும்போது டொமைனை இடமாற்றலாம், அதற்கு முன்பாக நிலுவையில் உள்ள எந்த விலைப்பட்டியலையும் நீங்கள் செலுத்த வேண்டியதில்லை. செயலற்ற ஸ்டோரிலிருந்து டொமைனை இடமாற்றுவது குறித்து மேலும் அறிக.
- HTTPS ஐப் பயன்படுத்தாத ஒரு தளத்திற்கு உங்கள் டொமைனை நீங்கள் இடமாற்றினால், அடுத்த 90 நாட்களுக்கு உங்கள் டொமைனை எவரேனும் பார்வையிட முயலும்போது உலாவியில் ஒரு பிழைச் செய்தி தோன்றும். HTTP Strict Transport Security (HSTS) கொள்கை மற்றும் பாதுகாப்புப் பிழைகளைத் தீர்ப்பது குறித்து மேலும் அறிக.
டொமைன் நீட்டிப்பு அடிப்படையிலான கவனிக்க வேண்டியவை
உங்கள் டொமைன் .com, .net அல்லது .org போன்ற பொதுவான நீட்டிப்பைக் கொண்டிருந்தால், பின்வரும் செயல்களில் ஏதேனும் ஒன்றை முடித்து 60 நாட்கள் ஆகும் வரை உங்கள் டொமைனை இடமாற்ற முடியாது:
- டொமைனை வாங்குதல்
- டொமைனை Shopify-க்கு இடமாற்றுதல்
- தொடர்புத் தகவலை மாற்றுதல்
இந்தக் காத்திருப்பு காலம் Internet Corporation for Assigned Names and Numbers (ICANN) அமைத்த இடமாற்றக் கொள்கையின் ஒரு பகுதியாகும், எனவே ஒவ்வொரு டொமைன் வழங்குநருக்கும் இது பொருந்தும். .ca போன்ற நாட்டைச் சுட்டும் குறியீட்டு நீட்டிப்புகளைக் கொண்ட டொமைன்கள் அவற்றின் சொந்தப் பதிவேட்டு விதிகளைப் பின்பற்றுகின்றன, இவை வேறுபடலாம். ஒரு .us டொமைனும் இதே 60-நாள் காத்திருப்புக் காலத்தைப் பின்பற்றுகிறது. மேலும் தகவலுக்கு, டொமைன் பெயர் வைத்துள்ளவர்களுக்கான ICANN இடமாற்றக் கொள்கையைப் பார்க்கவும்.
உங்கள் டொமைன் இடமாற்றத்திற்குத் தகுதி பெறும் வரை, வேறொரு ஹோஸ்டுக்கு உங்கள் டொமைனைக் குறிக்க, உங்கள் DNS அமைப்புகளைத் திருத்தலாம். உங்கள் டொமைனை இடமாற்றுவதற்கு முன்பு அது புதுப்பிக்கப்படுவதைத் தடுக்க, நீங்கள் தானியங்கு புதுப்பித்தலை முடக்கலாம்.
உங்கள் டொமைனை இடமாற்றுவது அதன் நீட்டிப்பைப் பொறுத்தது. பெரும்பாலான நீட்டிப்புகளுக்கு, டொமைன் அனுமதிக் குறியீட்டைப் பயன்படுத்தி உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து டொமைனை நீங்கள் இடமாற்றலாம். இருப்பினும், பின்வரும் நீட்டிப்புகளில் எதையும் கொண்ட ஒரு டொமைனை உங்களால் Shopify நிர்வாகியிலிருந்து இடமாற்ற முடியாது:
| டொமைன் நீட்டிப்புகள் | இடமாற்றப் படிகள் |
|---|---|
| டொமைன் அனுமதிக் குறியீட்டைக் கொண்டு இடமாற்றச் செயல்முறையைத் தொடங்க, Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும். |
| உங்கள் புதிய டொமைன் வழங்குநரிடமிருந்து IPS டேக்கைப் பெறவும். அதன்பிறகு, அந்த IPS டேக் மூலம் இடமாற்றச் செயல்முறையைத் தொடங்க Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும். |
| இடமாற்றத்தைத் தொடங்குமாறு உங்கள் புதிய டொமைன் வழங்குநரைக் கேட்டுக்கொள்ளுங்கள், அதன் பிறகு நீங்கள் பெறும் உறுதிப்படுத்தல் மின்னஞ்சலுக்கு ஒப்புதல் அளிக்கவும். நீங்கள் Shopify ஆதரவைத் தொடர்புகொள்ள வேண்டியதில்லை. .za இடமாற்றம் முடிவடைய 5 முதல் 10 நாட்கள் ஆகும். |
.lu அல்லது .za என முடியும் டொமைன்கள் டொமைன் அனுமதிக் குறியீட்டைப் பயன்படுத்துவதில்லை மற்றும் இடமாற்றச் செயல்முறையின்போது அவற்றிற்கு Shopify ஆதரவு தேவையிருக்காது. உங்கள் புதிய டொமைன் வழங்குநர் இடமாற்றத்தைத் தொடங்குகிறார், அதன்பிறகு நீங்கள் பெறும் உறுதிப்படுத்தல் மின்னஞ்சலுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். .za இடமாற்றம் முடிவடைய 5 முதல் 10 நாட்கள் ஆகும்.
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து உங்கள் டொமைனை இடமாற்றவும்
இடமாற்றத்தை நீங்கள் தொடங்கும்போது, உங்கள் டொமைன் தானாகவே அன்லாக் செய்யப்படும். இடமாற்றத்தை முடிக்க, நீங்கள் உங்கள் புதிய டொமைன் வழங்குநருக்கு ஒரு டொமைன் அனுமதிக் குறியீட்டைக் கொடுக்க வேண்டும்.
ஒரு வெற்றிகரமான இடமாற்றம் முடிவடைய 7 நாட்கள் வரை ஆகலாம். நீங்கள் 30 நாட்களுக்குள் டொமைன் இடமாற்றத்தை முடிக்கவில்லை என்றால், உங்கள் டொமைன் மீண்டும் லாக் செய்யப்படும். 30 நாட்களுக்குப் பிறகு ஒரு இடமாற்றத்தை முடிக்க, தற்போதுள்ள இடமாற்றத்தை ரத்துசெய்துவிட்டு, இடமாற்றச் செயல்முறையை மீண்டும் தொடங்க வேண்டும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > டொமைன்கள் என்பதற்குச் செல்லவும்.
டொமைன்கள் பிரிவில், நீங்கள் இடமாற்ற விரும்பும் டொமைனின் பெயரைக் கிளிக் செய்யவும்.
டொமைன் அமைப்புகள் > மற்றொரு வழங்குநருக்கு இடமாற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
தகவலைச் சரிபார்த்துவிட்டு, உறுதிப்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் டொமைனின் தகவல் பக்கத்தில் டொமைன் அனுமதிக் குறியீடு தோன்றும்.
இடமாற்றத்தைச் சரிபார்க்க, டொமைன் அனுமதிக் குறியீட்டை உங்கள் புதிய டொமைன் வழங்குநரிடம் கொடுக்கவும்.
செயலற்ற ஒரு ஸ்டோரிலிருந்து உங்கள் டொமைனை இடமாற்றவும்
உங்கள் ஸ்டோர் இடைநிறுத்தப்பட்டிருந்தாலோ முடக்கப்பட்டிருந்தாலோ அல்லது முடக்கம் செய்யப்பட்டிருந்தாலோ, உங்கள் Shopify நிர்வாகியானது குறிப்பிட்ட சில பக்கங்களை மட்டுமே காண்பிக்கும், அவற்றில் டொமைன்கள் பக்கம் இருக்காது. இருந்தாலும், டொமைன்கள் பக்கத்தின் குறைக்கப்பட்ட பதிப்பை நேரடியாகத் திறப்பதன் மூலம் Shopify-ஆல் நிர்வகிக்கப்படும் டொமைனை மற்றொரு டொமைன் வழங்குநருக்கு இடமாற்றலாம். அதற்காக, உங்கள் ஸ்டோரை மீண்டும் செயலாக்கவோ நிலுவையில் உள்ள ஒரு விலைப்பட்டியலைச் செலுத்தவோ வேண்டியதில்லை.
இந்தப் பக்கத்தின் பதிப்பானது, உங்கள் டொமைன்களைப் பார்ப்பதற்கும் Shopify-ஆல் நிர்வகிக்கப்படும் உங்கள் டொமைன்களை இடமாற்றுவதற்கும் மட்டுமே ஆதரவளிக்கிறது.
உங்கள் டொமைனானது உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து இடமாற்ற முடியாத நீட்டிப்புகளில் ஒன்றைக் கொண்டிருந்தால் அல்லது இந்தப் பக்கத்தில் உங்கள் டொமைன் பட்டியலிடப்படவில்லை என்றால், இந்தப் படிகளைப் பின்பற்றுவதற்குப் பதிலாக Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும். உங்கள் டொமைன் .lu அல்லது .za என முடிந்தால், இடமாற்றத்தைத் தொடங்குமாறு உங்கள் புதிய டொமைன் வழங்குநரைக் கேட்டுக்கொள்ளவும்.
30 நாட்களுக்குள் நீங்கள் டொமைன் பரிமாற்றத்தை நிறைவுசெய்யாவிட்டால், உங்கள் டொமைன் மீண்டும் பூட்டப்படும். 30 நாட்களுக்குப் பிறகு பரிமாற்றத்தை நிறைவுசெய்ய, நீங்கள் இருக்கும் பரிமாற்றத்தை ரத்துசெய்துவிட்டுப் பரிமாற்றச் செயல்முறையை மீண்டும் தொடங்க வேண்டும். பரிமாற்றம் வெற்றிகரமாக நிறைவடைய 7 நாட்கள் வரை ஆகலாம்.
படிகள்:
- உங்கள் Shopify நிர்வாகியில் உள்நுழையவும். உங்கள் ஸ்டோர் செயலற்று இருப்பதால்,
/access_accountஉள்ள URL இருக்கும் பக்கத்திற்கு நீங்கள் திருப்பிவிடப்படுவீர்கள். - உங்கள் உலாவியின் முகவரிப் பட்டியில்,
/access_accountஎன்பதற்கும் அதன் பிறகு உள்ள அனைத்திற்கும் பதிலாக/access_account/domainsஎன மாற்றி, Enter ஐ அழுத்தவும். - டொமைன்கள் பிரிவில், நீங்கள் இடமாற்ற விரும்பும் டொமைனின் பெயரைக் கிளிக் செய்யவும்.
- டொமைன் அமைப்புகள் > மற்றொரு வழங்குநருக்கு இடமாற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
- தகவலைச் சரிபார்த்துவிட்டு, உறுதிப்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் டொமைனின் தகவல் பக்கத்தில் டொமைன் அனுமதிக் குறியீடு தோன்றும்.
- இடமாற்றத்தைச் சரிபார்க்க, டொமைன் அனுமதிக் குறியீட்டை உங்கள் புதிய டொமைன் வழங்குநரிடம் கொடுக்கவும்.
Shopify ஆதரவு மூலம் உங்கள் டொமைனை இடமாற்றவும்
உங்கள் டொமைன் .lu அல்லது .za இல் முடிவடையாமல் இருந்து, உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து இடமாற்ற முடியாத நீட்டிப்பைக் கொண்டிருந்தால், பரிமாற்றத்தைத் தொடங்க Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும். தொடர்புகொள்வதற்கு முன்பாக, டொமைனை ஏற்க உங்கள் புதிய டொமைன் வழங்குநருக்கு என்ன தேவை என்று கேளுங்கள்.
.co.uk போன்று .uk இல் முடிவடையும் டொமைனானது, டொமைன் அனுமதிக் குறியீட்டைப் பயன்படுத்துவதில்லை. அதற்குப் பதிலாக, அது டொமைனை நிர்வகிக்கும் டொமைன் வழங்குநரை அடையாளங்காட்டும் Internet Provider Security (IPS) டேக் என்பதைப் பயன்படுத்துகிறது. .uk டொமைனை இடமாற்ற, உங்கள் புதிய டொமைன் வழங்குநரிடம் அவர்களின் IPS டேக்கைக் கேட்டு, அந்த டேக்கை Shopify ஆதரவிடம் வழங்கவும்.
HTTP Strict Transport Security (HSTS)
HTTP Strict Transport Security (HSTS) என்பது பாதுகாப்பான HTTPS இணைப்பு மூலம் மட்டுமே உலாவிகள் உங்கள் ஆன்லைன் ஸ்டோருடன் இணைவதை உறுதிசெய்யும் ஓர் இணையப் பாதுகாப்புப் பொறிமுறையாகும். பாதுகாப்பான இணைப்பைப் பயன்படுத்துவது சில வகையான வலையமைப்புத் தாக்குதல்களைத் தடுக்கிறது; அத்துடன் உங்கள் தரவு மற்றும் வாடிக்கையாளர்களின் தரவு பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்யவும் உதவுகிறது. உங்களின் Shopify ஸ்டோருடன் டொமைன் இணைக்கப்பட்டுள்ள வரை, உங்கள் டொமைனில் HSTS எப்போதும் செயலில் இருக்கும்.
ஒரு டொமைனை அகற்றினால் அல்லது Shopify-ஐ விட்டு முழுமையாக விலகினால், Shopify-இன் HSTS கொள்கை உங்கள் டொமைனில் மேலும் 90 நாட்களுக்குச் செயல்பாட்டில் இருக்கும். HTTPS-ஐப் பயன்படுத்தும் வேறொரு தளத்திற்கு உங்கள் டொமைனை இடமாற்றினால், கூடுதல் செயல்முறைகள் எதையும் நீங்கள் செய்ய வேண்டியதில்லை.
HTTPS-ஐப் பயன்படுத்தாத தளத்திற்கு உங்கள் டொமைனை இடமாற்றினால், அடுத்த 90 நாட்களுக்கு யாரேனும் உங்கள் டொமைனுக்குச் செல்ல முயலும்போது உலாவியில் பிழைச் செய்தி காட்டப்படும். இணையதளம் நம்பகமானதல்ல என்றோ சான்றிதழ் செல்லுபடியாகாது என்றோ அந்தப் பிழைச் செய்தி கூறக்கூடும். அந்தச் சூழலில், நீங்கள் இந்த விருப்பங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்:
- 90-நாள் கால அவகாசம் முடியும் வரை காத்திருங்கள்.
- புதிய TLS சான்றிதழை வழங்கும் தளத்திற்கு உங்கள் டொமைனை இடமாற்றுங்கள்.
- சான்றிதழ் ஆணையத்திடமிருந்து TLS சான்றிதழை வாங்கவும்.
HSTS குறித்து ஏதேனும் கேள்விகள் இருந்தால், Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.