Shopify நிர்வகிக்கும் டொமைன்களைப் புதுப்பித்தல்

Shopify நிர்வகிக்கும் டொமைன் உங்களிடம் இருந்தால், உங்கள் Shopify நிர்வாகியில் டொமைன் சந்தாவைத் தானாகவே புதுப்பிக்கலாம். டொமைனைத் தானாகப் புதுப்பிப்பது, உங்கள் உரிமை காலாவதியாகாமல் இருப்பதை உறுதிசெய்யும். உங்களின் myshopify.com URL ஐ நீங்கள் புதுப்பிக்கத் தேவையில்லை.

Shopify மூலம் டொமைனை வாங்கும்போதோ அல்லது உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து எந்த நேரத்திலுமோ தானியங்கு புதுப்பித்தலைச் செயல்படுத்தலாமா என்பதை நீங்கள் தேர்வுசெய்யலாம். உங்கள் டொமைன் தானாகப் புதுப்பிக்கப்படும்படி அமைக்கப்படாவிட்டால், அது காலாவதியாவதைத் தடுக்க, பதிவுக்காலம் முடிவடைவதற்கு முன்பாகத் தானியங்கு புதுப்பித்தலை நீங்கள் செயல்படுத்த வேண்டும் அல்லது டொமைனைக் கைமுறையாகப் புதுப்பிக்க வேண்டும்.

காலாவதியாகும் தேதிக்கு 30 நாட்களுக்கு முன்பிருந்தே உங்களின் Shopify நிர்வாகியில் இருந்து உங்கள் டொமைனைக் கைமுறையாகப் புதுப்பிக்கலாம்.

Shopify நிர்வகிக்கும் டொமைனை ரத்துசெய்ய விரும்பினால், பதிவுக்காலத்தின் முடிவில் அது காலாவதியாகும்படி தானியங்கு புதுப்பித்தலை முடக்கலாம். டொமைன் காலாவதியாகும் முன்பே அது உங்கள் ஸ்டோரைச் சுட்டிக்காட்டுவதை நிறுத்த விரும்பினால், அதனுடைய DNS அமைப்புகளைப் புதுப்பித்து டொமைனை நிறுத்திவைக்கலாம்.

இயல்புநிலையாக, டொமைன்களைக் கொள்முதல் செய்யவும் புதுப்பிக்கவும் Shopify ஸ்டோர் உரிமையாளரின் மின்னஞ்சல் முகவரியும் தகவல்களும் பயன்படுத்தப்படுகின்றன. உங்கள் டொமைன் சந்தா குறித்த அறிவிப்புகளைப் பெறுவதற்கு உங்கள் மின்னஞ்சல் முகவரி புதுப்பித்த நிலையில் இருப்பதை உறுதிசெய்யவும்.

தானியங்கு புதுப்பித்தலைச் செயல்படுத்துதல்

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > டொமைன்கள் என்பதற்குச் செல்லவும்.

  2. நீங்கள் உள்ளமைக்க விரும்பும் டொமைனைக் கிளிக் செய்யவும்.

  3. புதுப்பித்தல் பிரிவில், இந்த டொமைனை ஒவ்வோர் ஆண்டும் தானாகப் புதுப்பி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

பட்டியலிடப்பட்டுள்ள தேதியில் உங்கள் டொமைன் புதுப்பித்தலுக்குத் தானாகவே கட்டணம் விதிக்கப்படும். உங்கள் டொமைன் சந்தா வெற்றிகரமாகப் புதுப்பிக்கப்படுவதை உறுதிசெய்ய, பதிவுக்காலம் முடிவடைவதற்கு 14 நாட்களுக்கு முன்பு புதுப்பித்தலுக்கான தேதி அமைக்கப்படும். உங்கள் Shopify திட்டச் சந்தாக் கட்டணங்களிலிருந்து தனித்து டொமைன் புதுப்பித்தல்களுக்குக் கட்டணம் விதிக்கப்படும்.

தானியங்கு புதுப்பித்தலை முடக்குதல்

உங்கள் டொமைன் சந்தா தானாகப் புதுப்பிக்கப்படுவதை நீங்கள் விரும்பவில்லை எனில் அல்லது Shopify நிர்வகிக்கும் உங்கள் டொமைனை ரத்துசெய்ய விரும்பினால், உங்கள் Shopify நிர்வாகியில் தானியங்கு புதுப்பித்தலை நீங்கள் முடக்கலாம்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > டொமைன்கள் என்பதற்குச் செல்லவும்.

  2. நீங்கள் உள்ளமைக்க விரும்பும் டொமைனைக் கிளிக் செய்யவும்.

  3. தானியங்கு புதுப்பித்தல் பிரிவில், இந்த டொமைனை ஒவ்வோர் ஆண்டும் தானாகப் புதுப்பி என்பதன் தேர்வை நீக்கவும்.

நீங்கள் தானியங்கு புதுப்பித்தலை முடக்கிய பிறகு, பதிவுக்காலத்தின் முடிவில் உங்கள் டொமைன் காலாவதியாகிவிடும். உங்கள் டொமைன் காலாவதியாவதை நீங்கள் விரும்பவில்லை என்றால், காலாவதித் தேதிக்கு முன்பாகத் தானியங்கு புதுப்பித்தலைச் செயல்படுத்த வேண்டும்.

.de மற்றும் .at டொமைன்களுக்கான தானியங்கு புதுப்பித்தலை முடக்குதல்

ஜெர்மன் மற்றும் ஆஸ்திரிய விதிமுறைகள் காரணமாக, .de மற்றும் .at டொமைன் புதுப்பித்தல்களை உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து முடக்க முடியாது. Shopify மூலம் நீங்கள் .de அல்லது .at டொமைனைக் கொள்முதல் செய்தால், தொடர்புடைய இணக்கப் படிவத்தை Shopify ஆதரவு செயலாக்கும் வரை உங்கள் டொமைன் தொடர்ந்து தானாகப் புதுப்பிக்கப்படும்.

முடக்கும் செயல்பாட்டில் எந்தத் தாமதமும் ஏற்படாமல் தடுப்பதற்குப் படிவம் முழுமையாக நிரப்பப்பட்டிருக்க வேண்டும், மேலும் உங்கள் டொமைனுக்கான தொடர்புத் தகவலுடன் அது சரியாகப் பொருந்த வேண்டும். உங்கள் டொமைன் தொடர்புத் தகவலைத் திருத்துவதற்கான படிகளைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் Shopify நிர்வாகியில் உங்கள் டொமைனின் தொடர்புத் தகவலை நீங்கள் கண்டறியலாம். உங்கள் Shopify சந்தாவை நீங்கள் ஏற்கனவே ரத்துசெய்திருந்தால், உங்கள் டொமைனின் தற்போதைய தொடர்புத் தகவலை உறுதிசெய்ய, Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.

தானியங்கு புதுப்பித்தலை முடக்கிய பிறகு, தற்போதைய பதிவுக்காலம் முடிவடையும் வரை டொமைனுக்கான உங்கள் உரிமை தொடரும். நீங்கள் உங்கள் மனதை மாற்றிக்கொண்டு தானியங்கு புதுப்பித்தலை மீண்டும் செயல்படுத்த விரும்பினால் அல்லது டொமைனில் வேறு ஏதேனும் மாற்றங்களைச் செய்ய விரும்பினால், அந்த நேரத்தில் அதைச் செய்யலாம்.

உங்கள் .de டொமைனுக்கான தானியங்கு புதுப்பித்தலை முடக்குதல்

.de டொமைனுக்கான தானியங்கு புதுப்பித்தலை முடக்க, நீங்கள் Domain Termination/Deletion படிவத்தைப் பூர்த்திசெய்ய வேண்டும். நீங்கள் படிவத்தில் பூர்த்திசெய்ய வேண்டிய புலங்களுக்கு ஏற்ப, தொடர்புத் தகவல் Shopify நிர்வாகியில் எப்படிக் காட்டப்படும் என்பதைப் பின்வரும் அட்டவணை உங்களுக்குக் காட்டுகிறது.

எவ்வாறு Current Registrant/Holder புலங்கள் ( Domain Termination/Deletion படிவத்திலுள்ளவை), Shopify நிர்வாகியிலுள்ள தொடர்புத் தகவல் புலங்களுடன் தொடர்புடையன.
Current Registrant/Holder புலம் ( Domain Termination/Deletion படிவத்திலுள்ளது)Shopify நிர்வாகியில் உள்ள தொடர்புத் தகவல் புலம்
Company nameஸ்டோர் பெயர்
First name, last nameமுதல் பெயர் கடைசிப் பெயர்
Street addressதெரு மற்றும் வீட்டு எண்
City, zip codeநகரம், அஞ்சல் குறியீடு
Countryநாடு/பிராந்தியம்

படிகள்:

  1. இந்த Domain Termination/Deletion படிவத்தைத் திறக்கவும்.
  2. இந்த Domain Names for Deletion பிரிவில், நீங்கள் தானியங்கு புதுப்பித்தலை முடக்க விரும்பும் .de ரூட் டொமைனை(களை) உள்ளிடவும். ஒரே மாதிரியான தொடர்புத் தகவலைக் கொண்ட டொமைன்களை மட்டுமே உள்ளிடவும். வெவ்வேறு தொடர்புத் தகவல்களுடன் பல .de டொமைன்களுக்கான தானியங்கு புதுப்பித்தலை முடக்க விரும்பினால், ஒவ்வொரு டொமைனுக்கும் தனித்தனிப் படிவத்தை நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும்.
  3. இந்த Current Registrant/Holder பிரிவில், டொமைனுக்கான(களுக்கான) தற்போதைய தொடர்புத் தகவலை உள்ளிடவும்.
  4. இந்த Confirmation பிரிவில், ஒப்பந்தத்தைப் படித்து, கையொப்பமிடுபவர் விவரங்களை உள்ளிடவும்.
    • இந்த City, Date புலத்தில், நீங்கள் தற்போது இருக்கும் நகரத்தின் பெயரை உள்ளிட்டு, படிவத்தில் கையொப்பமிடும் நாள், மாதம் மற்றும் ஆண்டை உள்ளிடவும். நகரத்தையும் தேதியையும் ஒரு , கொண்டு பிரிக்கவும்.
    • இந்த Name of Signatory புலத்தில், படிவத்தில் கையொப்பமிடும் நபராக உங்கள் பெயரை உள்ளிடவும்.
    • இந்த Signature and company stamp புலத்தில், உங்கள் கையெழுத்தை இடவும். டொமைனின் உரிமை ஒரு நிறுவனத்தில் பதிவுசெய்யப்பட்டிருந்தால், அந்தப் புலத்தில் முத்திரையையும் பதிக்கவும்.
  5. பூர்த்தி செய்யப்பட்ட உங்கள் படிவத்தை மாற்ற முடியாத .pdf அல்லது .jpg வடிவத்தில் சேமிக்கவும்.
  6. டொமைனின் தானியங்கு புதுப்பித்தலை முடக்குவதற்கான கோரிக்கையைச் சமர்ப்பிக்க Shopify ஆதரவைத் தொடர்புகொண்டு, பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தின் நகலைப் பகிரவும். படிவமானது டொமைனின் தற்போதைய உரிமையுடன் பொருந்துகிறதா, சரியாகக் கையொப்பமிடப்பட்டுள்ளதா, ஏற்றுக்கொள்ளப்பட்ட கோப்பு வடிவத்தில் உள்ளதா மற்றும் திருத்த முடியாதபடி உள்ளதா என்பதை உறுதிசெய்ய Shopify ஆதரவுக் குழு அதை மதிப்பாய்வு செய்யும்.
    • படிவம் தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை எனில், உங்கள் கோரிக்கையை மீண்டும் சமர்ப்பிப்பதற்கு முன்பு தகுந்த திருத்தங்களைச் செய்யுமாறு உங்களிடம் கேட்கப்படும்.
    • படிவம் தேவைகளைப் பூர்த்தி செய்தால், Shopify ஆதரவுக் குழு உங்கள் கோரிக்கையைச் செயல்படுத்தத் தொடங்கும், அத்துடன் தானியங்கு புதுப்பித்தல் முடக்கப்பட்டதும் உங்களுக்குத் தெரிவிக்கும்.

உங்கள் .at டொமைனுக்கான தானியங்கு புதுப்பித்தலை முடக்குதல்

.at டொமைனுக்கான தானியங்கு புதுப்பித்தலை முடக்க, நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டியது: Cancellation படிவத்தைப் பூர்த்திசெய்ய வேண்டும். நீங்கள் படிவத்தில் பூர்த்திசெய்ய வேண்டிய புலங்களுக்கு ஏற்ப, தொடர்புத் தகவல் Shopify நிர்வாகியில் எப்படிக் காட்டப்படும் என்பதைப் பின்வரும் அட்டவணை உங்களுக்குக் காட்டுகிறது.

எவ்வாறு domain holder புலங்கள் ( Cancellation படிவத்திலுள்ளவை), Shopify நிர்வாகியிலுள்ள தொடர்புத் தகவல் புலங்களுடன் தொடர்புடையன.
Domain holder புலம் ( Cancellation படிவத்திலுள்ளது)Shopify நிர்வாகியில் உள்ள தொடர்புத் தகவல் புலம்
Nameமுதல் பெயர் கடைசிப் பெயர்/ஸ்டோர் பெயர்
Streetதெரு மற்றும் வீட்டு எண்
Post Codeஅஞ்சல் குறியீடு
Cityநகரம்
Stateநாடு/பிராந்தியம்
Tel. Noதொலைபேசி
Fax Noஃபாக்ஸ் எண்
E-Mailமின்னஞ்சல்

படிகள்:

  1. இந்த Cancellation படிவத்தைத் திறக்கவும்.
  2. படிவத்தின் மேற்புறத்தில் உள்ள பிரிவில், நீங்கள் தானியங்கு புதுப்பித்தலை முடக்க விரும்பும் .at ரூட் டொமைனை உள்ளிடவும். பல டொமைன்களுக்கான தானியங்கு புதுப்பித்தலை முடக்க விரும்பினால், ஒவ்வொரு டொமைனுக்கும் தனித்தனிப் படிவத்தை நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும்.
  3. இந்த domain holder பிரிவில், டொமைனுக்கான தற்போதைய தொடர்புத் தகவலை உள்ளிடவும்.
    • உங்கள் டொமைனின் தொடர்புத் தகவலில் ஸ்டோர் பெயர் இருந்தால், இதற்கு அடுத்துள்ள பெட்டியைத் தேர்ந்தெடுக்கவும்: organization. இதற்கு அடுத்துள்ள பெட்டியை மட்டுமே தேர்ந்தெடுக்கவும்: private person இதற்கு முன்பு நீங்கள் Shopify ஆதரவுக் குழுவின் உதவியுடன் டொமைன் வைத்திருப்பவர் வகையை மாற்றியிருந்தால் மட்டுமே.
    • டொமைனின் உரிமையானது முத்திரையுடன் கூடிய ஒரு நிறுவனத்தில் பதிவுசெய்யப்பட்டிருந்தால், Company chop பெட்டியில் முத்திரையைப் பதிக்கவும்.
  4. இதற்குக் கீழே: domain holder பிரிவில், இதற்கு அடுத்துள்ள பெட்டியைத் தேர்ந்தெடுக்கவும்: at the end of the current service period.
  5. கையொப்பப் பிரிவில், ஒப்பந்தத்தைப் படித்து, உங்கள் கையொப்ப விவரங்களை உள்ளிடவும்.
    • இந்த Name of the signing person (block capitals) புலத்தில், உங்கள் பெயரை ஆங்கிலப் பெரிய எழுத்துகளில் உள்ளிடவும்.
    • இந்த City, date புலத்தில், நீங்கள் தற்போது இருக்கும் நகரத்தின் பெயரை உள்ளிட்டு, படிவத்தில் கையொப்பமிடும் நாள், மாதம் மற்றும் ஆண்டை உள்ளிடவும். நகரத்தையும் தேதியையும் ஒரு , கொண்டு பிரிக்கவும்.
    • இந்த Signature of the Domain Holder or a person authorized to sign for the company புலத்தில், உங்கள் கையெழுத்தை இடவும்.
  6. பூர்த்தி செய்யப்பட்ட உங்கள் படிவத்தை மாற்ற முடியாத .pdf அல்லது .jpg வடிவத்தில் சேமிக்கவும்.
  7. டொமைனின் தானியங்கு புதுப்பித்தலை முடக்குவதற்கான கோரிக்கையைச் சமர்ப்பிக்க Shopify ஆதரவைத் தொடர்புகொண்டு, பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தின் நகலைப் பகிரவும். படிவமானது டொமைனின் தற்போதைய உரிமையுடன் பொருந்துகிறதா, சரியாகக் கையொப்பமிடப்பட்டுள்ளதா, ஏற்றுக்கொள்ளப்பட்ட கோப்பு வடிவத்தில் உள்ளதா மற்றும் திருத்த முடியாதபடி உள்ளதா என்பதை உறுதிசெய்ய Shopify ஆதரவுக் குழு அதை மதிப்பாய்வு செய்யும்.
    • படிவம் தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை எனில், உங்கள் கோரிக்கையை மீண்டும் சமர்ப்பிப்பதற்கு முன்பு தகுந்த திருத்தங்களைச் செய்யுமாறு உங்களிடம் கேட்கப்படும்.
    • படிவம் தேவைகளைப் பூர்த்தி செய்தால், Shopify ஆதரவுக் குழு உங்கள் கோரிக்கையைச் செயல்படுத்தத் தொடங்கும், அத்துடன் தானியங்கு புதுப்பித்தல் முடக்கப்பட்டதும் உங்களுக்குத் தெரிவிக்கும்.

.de மற்றும் .at டொமைன்களுக்கான உடனடி ரத்துக் கோரிக்கைகள்

.de மற்றும் .at டொமைன்களின் உரிமையை உடனடியாக நீக்குவதற்கான கோரிக்கைகளைச் செயலாக்குவது தொடர்பான OpenSRS-இன் கொள்கைகளின்படி, அந்த டொமைன் நிர்வாகத்தைக் கட்டுப்படுத்தும் கொள்கைகளை அல்லது உள்ளூர் சட்டங்களை மீறியிருக்க வேண்டும். உங்கள் டொமைன் தற்போது செயலில் மற்றும் நல்ல நிலையில் இருந்தால், தானியங்கு புதுப்பித்தலை முடக்குவதற்குப் பதிலாக, டொமைன் உரிமையை உடனடியாக ரத்து செய்வதற்கான கோரிக்கையை Shopify ஆதரவுக் குழு நிராகரிக்கும்.

Shopify-இன் கொள்கைகளை மீறும் வகையிலான .de மற்றும் .at டொமைனை நீங்கள் கண்டறிந்தால், அந்த மீறலைப் புகாரளிப்பதற்கான அடுத்த படிகளை எங்கள் இணக்க வழிமுறைகளில் காணலாம். டொமைன் மூன்றாம் தரப்புக் கொள்கைகளை மீறினால், அதற்கான முறைகேடுத் தொடர்பைக் கண்டறிய IANA-இன் WHOIS சேவையை நீங்கள் பயன்படுத்தலாம்.

காலாவதியான டொமைனைப் புதுப்பித்தல்

உங்கள் டொமைன் சந்தா காலாவதியாகி, அதை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்த விரும்பினால், அதைப் புதுப்பிப்பதற்குப் பெரும்பாலான டொமைன்களில் 40 நாள் சலுகைக் காலம் இருக்கும்.

சலுகைக் காலத்திற்குள் காலாவதியான டொமைனை நீங்கள் புதுப்பிக்காவிட்டால், மீட்புக் காலத்தின்போது (redemption period) உங்களால் அதைப் புதுப்பிக்க முடியலாம். மீட்புக் காலம் என்பது சலுகைக் காலத்திற்குப் பிறகு 30 நாட்கள் வரை நீடிக்கும். மீட்புக் காலத்தில் டொமைனைப் புதுப்பிக்கக் கூடுதல் செலவுகள் ஆகும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > டொமைன்கள் என்பதற்குச் செல்லவும்.

  2. நீங்கள் புதுப்பிக்க விரும்பும் டொமைனைக் கிளிக் செய்யவும்.

  3. சலுகைக் காலம் அல்லது மீட்புக் காலத்தின்போது டொமைனைப் புதுப்பிக்கத் தகுதியுடையதாக இருந்தால், டொமைனுக்கு அருகில் இப்போதே புதுப்பி என்ற பொத்தான் காட்டப்படும். இப்போதே புதுப்பி என்ற பொத்தான் காட்டப்படவில்லை எனில், உங்களால் அந்த டொமைனைப் புதுப்பிக்க முடியாது.

மீட்புக் காலத்தின் முடிவில் உங்கள் டொமைன் புதுப்பிக்கப்படாவிட்டால், அது பதிவேட்டிலிருந்து நீக்கப்படும். Shopify மூலமாகவோ அல்லது மூன்றாம் தரப்பு டொமைன் வழங்குநரிடமிருந்தோ உங்கள் டொமைனை மீண்டும் வாங்குவதற்கு அது கிடைக்கலாம், ஆனால் டொமைன் வாங்குவதற்குக் கிடைக்கும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. நீங்கள் அந்த டொமைனை வைத்திருக்க விரும்பினால், உங்கள் டொமைன் காலாவதி தேதிகளை மதிப்பாய்வு செய்து, அந்தத் தேதிகளுக்கு முன்பாகவே உங்கள் டொமைன்களைப் புதுப்பிப்பதை உறுதிசெய்யவும். அத்துடன் தானியங்கு புதுப்பித்தலையும் நீங்கள் செயல்படுத்தலாம்.

காலாவதியாகும் டொமைனைக் கைமுறையாகப் புதுப்பித்தல்

உங்கள் டொமைன் சந்தா தானாகப் புதுப்பிக்கப்படுவதை நீங்கள் விரும்பவில்லை, அதே சமயம் அது காலாவதியாவதையும் நீங்கள் விரும்பவில்லை எனில், காலாவதி தேதிக்கு 30 நாட்களுக்கு முன்பிருந்தே உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து கைமுறையாகப் புதுப்பிக்கலாம்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > டொமைன்கள் என்பதற்குச் செல்லவும்.

  2. நீங்கள் புதுப்பிக்க விரும்பும் டொமைனைக் கிளிக் செய்யவும்.

  3. புதுப்பித்தல் பிரிவில், இப்போதே புதுப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.

டொமைன் புதுப்பித்தல் சிக்கல்களைத் தீர்த்தல்

டொமைனைப் புதுப்பிப்பதில் சிக்கல்களை நீங்கள் எதிர்கொண்டால், பொதுவான சிக்கல்களைத் தீர்க்கப் பின்வரும் சிக்கல் தீர்த்தல் படிகளைப் பயன்படுத்தவும்.

படி 1: பொதுவான சிக்கல் தீர்த்தல்

குறிப்பிட்ட பிழைகளைச் சரிசெய்வதற்கு முன், பின்வரும் பொதுவான சிக்கல் தீர்த்தல் படிகளை முயன்று பார்க்கவும்:

  • உங்கள் டொமைன் Shopify மூலம் நிர்வகிக்கப்படுகிறதா என்பதையும், மூன்றாம் தரப்பு டொமைன் இல்லை என்பதையும் சரிபார்க்கவும்.
  • டொமைன் காலாவதி தேதிக்குக் குறைந்தது 14 நாட்களுக்கு முன்னதாகவே தானியங்குப் புதுப்பித்தல் செயல்படுத்தப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கவும்.
  • உங்கள் கட்டண முறை சரியானதா, காலாவதியாகாததா மற்றும் போதுமான நிதியைக் கொண்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கவும்.
  • அமைப்புகள் > பில்லிங் என்பதில் ஏதேனும் தோல்வியடைந்த கட்டண முயற்சிகள் உள்ளதா என உங்கள் சமீபத்திய விலைப்பட்டியல்களை மதிப்பாய்வு செய்யவும்.
  • உங்கள் பில்லிங் முகவரி உங்களின் கட்டண முறைத் தகவலுடன் பொருந்துகிறதா என்பதைச் சரிபார்க்கவும்.
  • புதுப்பித்தல் காலத்தின்போது உங்கள் Shopify கணக்கு செயலில் இருந்ததா என்பதைச் சரிபார்க்கவும், ஏனெனில் செயலற்ற கணக்குகளில் உள்ள டொமைன்கள் தானாகப் புதுப்பிக்கப்படாது.

படி 2: டொமைன் புதுப்பித்தல் சிக்கலைத் தேர்ந்தெடுக்கவும்

நீங்கள் ஒரு குறிப்பிட்ட பிழையை எதிர்கொண்டால், பொருத்தமான சிக்கல் தீர்த்தல் பிரிவைத் தேர்ந்தெடுக்கவும்:

பில்லிங் கட்டண முறை தொடர்பான சிக்கல்களைத் தீர்த்தல்

பேமெண்ட் தொடர்பான சிக்கல்களால் உங்களின் டொமைன் புதுப்பித்தல் தோல்வியடைந்தால், உங்களின் பில்லிங் கட்டண முறை அல்லது அதற்காகப் பதிவுசெய்யப்பட்ட முகவரியில சிக்கல் இருக்கலாம்.

படிகள்:

  1. உங்கள் கட்டண முறை இன்னமும் செல்லுபடியாகும் நிலையிலும் காலாவதியாகாமலும் உள்ளதா என்பதைச் சரிபார்க்கவும்.
  2. உங்கள் கட்டண முறையுடன் உங்கள் பில்லிங் முகவரி பொருந்துகிறதா என்பதைச் சரிபார்க்கவும்.
  3. வேறு கட்டண முறை இருந்தால், அதைப் பயன்படுத்த முயலவும்.
  4. பேமெண்ட்டைத் தடுக்கவில்லை என்பதை உறுதிப்படுத்த, உங்கள் வங்கி அல்லது PayPal போன்ற உங்கள் கட்டண முறையின் சேவையைத் தொடர்புகொள்ளவும்.
  5. தேவைப்பட்டால் உங்கள் கட்டணத் தகவலைப் புதுப்பிக்கவும், பின்னர் டொமைனை நீங்களே கைமுறையாகப் புதுப்பிக்க முயலவும்.
பேமெண்ட் அங்கீகாரத் தாமதங்களில் உள்ள சிக்கல்களைத் தீர்த்தல்

புதுப்பித்தல் கட்டணங்களைச் செயல்படுத்துவதற்கு முன்பு, உங்கள் கிரெடிட் கார்டுக்கு கூடுதல் அங்கீகாரம் தேவைப்பட்டால் புதுப்பித்தல் தாமதமாகலாம்.

புதுப்பித்தல் கட்டணங்களைச் செயல்படுத்துவதற்கு முன்பு, சில கிரெடிட் கார்டுகளுக்குக் கூடுதல் அங்கீகாரம் தேவைப்படும். அங்கீகாரம் முடிவடைய 24-48 மணிநேரம் வரை அனுமதிக்கவும். அங்கீகாரம் தொடர்ந்து தோல்வியடைந்தால், உங்கள் வங்கியைத் தொடர்புகொள்ளவும்.

தானியங்குப் புதுப்பித்தல் தோல்விகளுக்கான சிக்கல்களைத் தீர்த்தல்

தானியங்குப் புதுப்பித்தல் செயல்படுத்தப்பட்டிருந்தும் உங்கள் டொமைன் தானாகப் புதுப்பிக்கப்படாவிட்டால், உங்களின் தானியங்குப் புதுப்பித்தல் அமைப்புகள் அல்லது கணக்கு நிலையில் சிக்கல்கள் இருக்கலாம்.

படிகள்:

  1. அமைப்புகள் > டொமைன்கள் என்பதில் டொமைனுக்கான தானியங்குப் புதுப்பித்தல் தற்போது செயல்படுத்தப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கவும்.
  2. புதுப்பித்தல் காலத்திற்கு முன்பு தானியங்குப் புதுப்பித்தல் செயல்படுத்தப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கவும்.
  3. புதுப்பித்தல் காலத்தின்போது உங்கள் Shopify கணக்கு செயலில் இருந்ததா, இடைநிறுத்தப்படாமலோ தற்காலிகமாக நிறுத்தப்படாமலோ இருந்ததா என்பதைச் சரிபார்க்கவும்.
  4. டொமைன் காலாவதியான பிறகு தானியங்குப் புதுப்பித்தல் முடக்கப்பட்டு, மீண்டும் செயல்படுத்தப்பட்டால் அது டொமைனை முன்தேதியிட்டுப் புதுப்பிக்காது.
குழப்பமான பதிவேட்டு அறிவிப்பு மின்னஞ்சல்களுக்கான சிக்கல்களைத் தீர்த்தல்

டொமைன் பதிவேட்டகங்களிலிருந்து "auto-renew is turned off" என்று நீங்கள் மின்னஞ்சல்களைப் பெற்றால், அது குழப்பமாக இருக்கலாம், ஆனால் அது சிக்கலைக் குறிக்கிறது என்று அர்த்தமல்ல.

டொமைன் பதிவேட்டகங்களிலிருந்து "auto-renew is turned off" என்று நீங்கள் மின்னஞ்சல்களைப் பெறலாம். இது வழக்கமான ஒன்றுதான், உங்கள் Shopify தானியங்குப் புதுப்பித்தல் முடக்கப்பட்டுள்ளது என்று இதற்கு அர்த்தமில்லை. இந்த மின்னஞ்சல்கள் பதிவேட்டகத்திலிருந்து நேரடியாக அனுப்பப்படுகின்றன, மேலும் அவை உங்களின் Shopify டொமைன் அமைப்புகளைப் பிரதிபலிக்காது. உங்கள் டொமைன் தானியங்குப் புதுப்பித்தலைக் கொண்டிருக்க வேண்டும் எனில், தானியங்கு புதுப்பித்தல் அமைப்புகளை மதிப்பாய்வு செய்வதன் மூலம் அதைச் சரிபார்க்கலாம்.

படி 3: டொமைன் புதுப்பித்தல் பற்றி ஆதரவைத் தொடர்புகொள்ளவும்

நீங்கள் சிக்கல் தீர்க்கும் படிகளை முடித்துவிட்ட பின்னரும், உங்கள் டொமைன் புதுப்பித்தல் இன்னும் தோல்வியடைந்தால், Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும். தானியங்குப் புதுப்பித்தல் வேலை செய்திருக்க வேண்டும், ஆனால் அப்படி வேலை செய்யவில்லை என நீங்கள் நம்பினால், ஆதரவைத் தொடர்புகொள்ளும்போது தானியங்குப் புதுப்பித்தல் எப்போது செயல்படுத்தப்பட்டது என்பது பற்றிய விவரங்களையும் உங்கள் கட்டண முறை நிலையையும் வழங்கவும்.