டொமைன்களை அகற்றுதல்

மூன்றாம் தரப்பு வழங்குநரிடமிருந்தான தனிப்பயன் டொமைனை உங்கள் Shopify ஸ்டோருடன் இணைக்க நீங்கள் விரும்பவில்லை எனில், அதை உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து அகற்றலாம் அல்லது வேறொரு Shopify ஸ்டோர் அல்லது டொமைன் வழங்குநருக்கு இடமாற்றலாம். நீங்கள் துணை டொமைன்களையும் அகற்றலாம்.

நீங்கள் ஒரு டொமைனை அகற்றுவதற்கு முன்பு, எந்தெந்த டொமைன்களை அகற்றலாம், எந்தெந்த டொமைன்கள் இணைக்கப்பட வேண்டும் மற்றும் எதையும் அகற்றாமல் ஒரு சிறப்பான டொமைன் அமைப்பை எவ்வாறு பெறுவது என்பதைப் புரிந்துகொள்ள பின்வரும் பிரிவுகளைப் படித்துப் பார்க்கவும்.

உங்கள் myshopify.com டொமைனை அகற்ற முடியாது

உங்கள் myshopify.com டொமைன் பெயரை அகற்றவோ இடமாற்றவோ முடியாது. உங்கள் வாடிக்கையாளர்கள் உங்கள் தனிப்பயன் டொமைனை மட்டுமே பார்த்தாலும், உங்கள் ஸ்டோருக்கான நிரந்தர அடையாளங்காட்டியாக உங்கள் அசல் myshopify.com டொமைனை Shopify பயன்படுத்துகிறது. பின்வரும் நோக்கங்களுக்காக உங்கள் myshopify.com டொமைன் பயன்படுத்தப்படுகிறது:

  • கணக்கு அங்கீகரிப்பு: நீங்கள் உங்கள் Shopify நிர்வாகியில் உள்நுழையும்போதோ Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளும்போதோ உங்கள் myshopify.com டொமைன் உங்கள் பிரத்தியேக ID-யாகச் செயல்படும்.
  • செயலி ஒருங்கிணைப்புகள்: பெரும்பாலான செயலிகள் உங்கள் ஸ்டோருடன் தரவை ஒத்திசைக்க உங்களின் myshopify.com URL-ஐப் பயன்படுத்துகின்றன. அதை அகற்றினால், செயலிகள் செயல்படாமல் போகலாம்.
  • தொழில்நுட்பப் பாதுகாப்பு: உங்கள் தனிப்பயன் டொமைன் வழங்குநருக்குச் சேவையகச் செயலிழப்பு ஏற்பட்டால், உங்கள் ஸ்டோரையும் நிர்வாகியையும் அணுக முடியும் என்பதை உங்கள் myshopify.com URL உறுதிசெய்கிறது.

நீங்கள் ஒரு முறை புதிய myshopify.com டொமைன் பெயரைத் தேர்வுசெய்யலாம். இருந்தாலும், உங்கள் Shopify நிர்வாகியில் உள்நுழையவும் Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும் உங்கள் அசல் myshopify.com டொமைன் பெயரை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.

Shopify நிர்வகிக்கும் டொமைன்களை அகற்ற முடியாது

Shopify-யில் நீங்கள் வாங்கிய அல்லது நிர்வகிக்கும் டொமைன்களை அகற்ற முடியாது. அதற்குப் பதிலாக, Shopify நிர்வகிக்கும் டொமைனை வேறொரு Shopify ஸ்டோர் அல்லது பிற டொமைன் வழங்குநருக்கு இடமாற்றலாம்.

Shopify நிர்வகிக்கும் டொமைன் இன்னமும் உங்களிடமே இருந்து, அதை உங்கள் ஸ்டோருக்கானதாகச் செயல்படாமல் தடுக்க விரும்பினால், அதன் DNS அமைப்புகளைப் புதுப்பிப்பதன் மூலம் டொமைனைப் பயன்படுத்தாமல் வைத்திருக்கலாம். டொமைன் உங்கள் கணக்கில் தொடர்ந்து பதிவுசெய்யப்பட்டிருக்கும், ஆனால் அது உங்கள் Shopify ஸ்டோருக்கானதாகச் செயல்படாது.

உங்கள் டொமைனின் ரூட் மற்றும் www பதிப்புகள் இரண்டையும் இணைப்பில் வைத்திருக்கவும்

உங்கள் டொமைன் அமைப்புகளில், உங்களின் தனிப்பயன் டொமைனின் ரூட் டொமைன் (எடுத்துக்காட்டாக, example.com) மற்றும் www துணை டொமைன் (எடுத்துக்காட்டாக, www.example.com) என இரண்டு பதிப்புகளைப் பார்க்கலாம். உங்கள் ஸ்டோரில் இரண்டு பதிப்புகளையும் இணைப்பில் வைத்திருப்பது முக்கியமாகும்.

சில வாடிக்கையாளர்கள் உங்கள் டொமைன் பெயருக்கு முன்னால் www எனத் தட்டச்சு செய்வார்கள், சிலர் அப்படித் தட்டச்சு செய்ய மாட்டார்கள். ரூட் மற்றும் www பதிப்புகள் இரண்டையும் செயலில் மற்றும் இணைப்பில் வைத்திருப்பதன் மூலம், ஒரு வாடிக்கையாளர் உங்கள் முகவரியை எப்படி உள்ளிட்டாலும் அவர் உங்கள் ஸ்டோரை வந்தடைவதை Shopify உறுதிசெய்கிறது.

டொமைன்களை அகற்றாமல் சிறப்பான டொமைன் பட்டியலைப் பெறவும்

நீங்கள் சிறப்பான, தொழில்முறைத் தோற்றமுடைய டொமைன் அமைப்பை விரும்பினால், நீக்குவதற்குப் பதிலாகத் திசைதிருப்பலைப் பயன்படுத்தவும். வாடிக்கையாளர்களை ஒரே முதன்மை டொமைனுக்குத் திசைதிருப்பும்போது, உங்கள் டொமைன்கள் அனைத்தையும் இணைப்பிலேயே வைத்திருக்கத் திசைதிருப்பல் உங்களை அனுமதிக்கிறது.

  1. அமைப்புகள் > டொமைன்கள் என்பதற்குச் செல்லவும்.
  2. உங்கள் தனிப்பயன் டொமைன் முதன்மை டொமைனாக அமைக்கப்பட்டுள்ளதா எனச் சரிபார்க்கவும்.
  3. உங்கள் டொமைனின் ரூட் மற்றும் www பதிப்புகள் இரண்டின் நிலையும் இணைக்கப்பட்டது எனக் காட்டப்படுகிறதா எனச் சரிபார்க்கவும்.
  4. Shopify தானாகவே அனைத்து டிராஃபிக்கையும் உங்கள் முதன்மை டொமைனுக்குத் திசைதிருப்புகிறது, எனவே வாடிக்கையாளர்கள் எப்போதும் நீங்கள் விரும்பும் URL-ஐப் பார்க்க முடியும்.

மூன்றாம் தரப்பு டொமைன் அல்லது துணை டொமைனை அகற்றவும்