Shopify Balance செயலியில் உங்கள் Capital கணக்கை நிர்வகித்தல்

உங்கள் Capital கணக்குச் செயல்படத் தொடங்கியதும், Shopify Balance செயலியில் இருந்து உங்கள் நிதியுதவியை நிர்வகிக்கலாம். நீங்கள் நிதியை எடுக்கலாம், உங்கள் திருப்பிச் செலுத்தும் வீதத்தை மாற்றலாம், மேனுவலாகத் திருப்பிச் செலுத்தலாம் மற்றும் நீங்கள் எடுத்த நிதியையும் திருப்பிச் செலுத்தும் செயல்பாட்டையும் தடமறியலாம்.

உங்கள் Capital கணக்கு எப்படிச் செயல்படுகிறது

உங்கள் Capital கணக்கு பின்வரும் தொகைகளைப் பயன்படுத்துகிறது:

  • வரம்பு இருப்பு: நீங்கள் எடுத்த நிதி அனைத்திற்கும் சேர்த்து நீங்கள் செலுத்த வேண்டிய மொத்தத் தொகை.
  • மொத்த வரம்பு: நீங்கள் எடுக்கக் கோரக்கூடிய அதிகபட்சத் தொகை.
  • கிடைக்கும் வரம்பு: உங்கள் மொத்த வரம்பிலிருந்து பதிவுசெய்யப்பட்ட மற்றும் நிலுவையில் உள்ள எடுப்புகள் மற்றும் கட்டணங்களைக் கழித்தால் வரும் தொகை. இதுவே நீங்கள் எடுக்கக்கூடிய அதிகபட்சத் தொகையாகும்.

உங்கள் திருப்பிச் செலுத்தும் வீதம் என்பது, உங்கள் Capital கணக்கிற்குத் திருப்பிச் செலுத்துவதற்காக ஒதுக்கப்படும் உங்கள் தினசரி விற்பனையின் சதவீதமாகும். உங்கள் குறைந்தபட்சத் திருப்பிச் செலுத்தும் வீதமானது, உங்கள் வரம்பில் நீங்கள் எவ்வளவு பயன்படுத்துகிறீர்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டது, எனவே உங்கள் வரம்பு இருப்பு அதிகரிக்கும்போது அதுவும் அதிகரிக்கலாம். உங்கள் திருப்பிச் செலுத்தும் வீதமே உங்கள் வரம்பையும் தீர்மானிக்கிறது. அதிகத் திருப்பிச் செலுத்தும் வீதம் உங்கள் வரம்பை அதிகரிக்கும், குறைந்த திருப்பிச் செலுத்தும் வீதம் அதைக் குறைக்கும்.

கடன் பெறும் செலவுகள் எப்படிச் செயல்படுகின்றன

ஒவ்வொரு மாதமும் நீங்கள் எடுக்கும் நிதியின் நிலுவைத் தொகைக்கு உங்கள் கடன் பெறும் செலவு வட்டி விகிதமாகப் பயன்படுத்தப்படும், மேலும் உங்கள் விலை நிர்ணயம் ஒவ்வொரு மாதமும் மதிப்பிடப்படும். இருப்பு $0 USD ஐ எட்டும் வரை உங்கள் வரம்பு இருப்புக்குக் கடன் பெறும் செலவுகள் பொருந்தும்.

நீங்கள் நிதியை எடுக்கும்போது அதற்கான செலவு நிர்ணயிக்கப்படும், எதிர்காலத்தில் உங்கள் விலை நிர்ணயம் மாறினாலும் அது மாறாது.

உங்கள் Capital கணக்கு விவரங்களைப் பார்த்தல்

Shopify Balance செயலியில் உங்கள் நிதியுதவியையும் உங்கள் திருப்பிச் செலுத்தும் செயல்பாட்டையும் பார்க்கலாம்.

படிகள்:

  1. Shopify Balance app இலிருந்து, Wallet ஐகானைத் தட்டவும்.
  2. Capital என்பதைத் தட்டவும்.
  3. விருப்பத்திற்குரியது: உங்கள் மொத்த லைன் வரம்பு மற்றும் பதிவிடப்பட்ட மற்றும் நிலுவையிலுள்ள எடுப்புகள் மற்றும் கட்டணங்களைக் காண, Available (கிடைக்கக்கூடியவை) என்பதற்கு அடுத்துள்ள தகவல் ஐகானைத் தட்டவும்.

உங்கள் Capital கணக்கு ஒப்பந்தத்தைப் பார்க்கவும்

நீங்கள் விண்ணப்பித்தபோது ஏற்றுக் கொண்ட Capital கணக்கு ஒப்பந்தத்தை மதிப்பாய்வு செய்யலாம்.

படிகள்:

  1. Shopify Balance app இலிருந்து, அமைப்புகள் ஐகானைத் தட்டவும்.
  2. தகவல் ஐகானைத் தட்டி, Capital account agreement (Capital கணக்கு ஒப்பந்தம்) என்பதைத் தட்டவும்.

நிதியை எடுத்தல்

குறைந்தபட்சம் $200 USD உடன், கிடைக்கக்கூடிய வரம்பு வரை நீங்கள் நிதியை எடுக்கலாம். உங்களிடம் உள்ள வரம்பு வரை, ஒன்றுக்கும் மேற்பட்ட நிதி எடுப்புக் கோரிக்கைகளை நீங்கள் சமர்ப்பிக்கலாம். மேலும் ஒவ்வொரு கோரிக்கையும் கிடைக்கக்கூடிய திறன், மதிப்பாய்வு மற்றும் ஒப்புதலுக்கு உட்பட்டது. நீங்கள் பணம் எடுக்கும்போது கிடைக்கக்கூடிய வரம்பு குறையும், அதைத் திருப்பிச் செலுத்தும் போது அதிகரிக்கும். அத்துடன் உங்கள் வணிகச் செயல்திறனின் அடிப்படையில் உங்கள் மொத்த லைன் வரம்பு மாதாந்திரம் அதிகரிக்கலாம் அல்லது குறையலாம்.

கூடுதல் நிதியை எடுப்பது உங்கள் லைன் இருப்பையும் கடன்களுக்கான செலவுகளையும் அதிகரிக்கும். கிடைக்கக்கூடிய வரம்பை விட அதிகமாக எடுக்க முயன்றால் பிழைச் செய்தி காண்பிக்கப்படும், அப்போது நீங்கள் குறைவான தொகையை உள்ளிட வேண்டும்.

நீங்கள் நிதியை எடுக்கும்போது, Deposit to (இதில் டெபாசிட் செய்) வரிசையானது நிதியைப் பெறும் கணக்கைக் காண்பிக்கும், அது எப்போதுமே உங்கள் Shopify Balance கணக்காக இருக்காது. உங்களின் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகள் தொகையைப் பெறத் தகுதிபெற்றிருந்தால், நீங்கள் அந்த வரிசையைத் தட்டி வேறு கணக்கைத் தேர்ந்தெடுக்கலாம்.

உங்கள் எடுப்புக் கோரிக்கையானது அங்கீகரிக்கப்படுவதற்கு முன்பு மதிப்பாய்வு செய்யப்படும், அதற்கான முடிவு மின்னஞ்சல் மூலம் உங்களுக்குத் தெரிவிக்கப்படும். உங்கள் கோரிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால், 2 வணிக நாட்களுக்குள் அந்த கணக்கில் நிதி டெபாசிட் செய்யப்படும். சரியான நேரமானது, நீங்கள் உங்கள் கோரிக்கையைச் சமர்ப்பிக்கும் நேரத்தைப் பொறுத்தது. உங்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டால், அதற்கான காரணங்களைக் கோருவது எப்படி என்பது குறித்த விளக்கங்களை அந்த மின்னஞ்சல் வழங்கும்.

படிகள்:

  1. Shopify Balance app இலிருந்து, Wallet ஐகானைத் தட்டவும்.
  2. Capital என்பதைத் தட்டி, Draw (எடு) என்பதைத் தட்டவும்.
  3. நீங்கள் எடுக்க விரும்பும் தொகையை உள்ளிடவும்.
  4. Deposit to (இதில் டெபாசிட் செய்) வரிசையில் உள்ள கணக்கை மதிப்பாய்வு செய்யவும்.
  5. விருப்பத்திற்குரியது: உங்கள் கணக்குகளில் ஒன்றுக்கும் மேற்பட்டவை தகுதிபெற்றிருந்தால், Deposit to (இதில் டெபாசிட் செய்) என்பதைத் தட்டி, Add to (இதில் சேர்) என்பதிலிருந்து வேறு கணக்கைத் தேர்ந்தெடுக்கவும்.
  6. Continue (தொடரவும்) என்பதைத் தட்டவும்.
  7. எடுக்கும் தொகை மற்றும் கட்டணத்தை மதிப்பாய்வு செய்து, Submit (சமர்ப்பி) என்பதைத் தட்டவும்.

உங்கள் திருப்பிச் செலுத்துதல் விகிதத்தை மாற்றியமைக்கவும்

புதிய விகிதம் உங்களின் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்சத் திருப்பிச் செலுத்துதல் விகித வரம்புகளுக்குள் இருக்கும் பட்சத்தில், எந்த நேரத்திலும் உங்கள் திருப்பிச் செலுத்துதல் விகிதத்தை நீங்கள் மாற்றியமைக்கலாம். தற்போதைய மற்றும் எதிர்கால நிலுவையிலுள்ள பணம் எடுப்புகள் அனைத்திற்கும் புதிய திருப்பிச் செலுத்துதல் விகிதம் பொருந்தும். உங்கள் திருப்பிச் செலுத்துதல் விகிதம் நீங்கள் செலுத்தும் வேகத்தைத் தீர்மானிப்பதால், அதை அதிகரிப்பது அல்லது குறைப்பது உங்கள் மொத்தக் கடன் செலவுகளையும் மாற்றக்கூடும்.

படிகள்:

  1. Shopify Balance app இலிருந்து, Wallet ஐகானைத் தட்டவும்.
  2. Capital என்பதைத் தட்டவும்.
  3. Repaying with X% of sales (X% விற்பனைத் தொகையில் திருப்பிச் செலுத்துதல்) என்பதைத் தட்டவும், இதில் X என்பது உங்களின் தற்போதைய திருப்பிச் செலுத்துதல் விகிதமாகும்.
  4. Repayment from sales (விற்பனையிலிருந்து திருப்பிச் செலுத்துதல்) பிரிவில், திருப்பிச் செலுத்துவதற்கான விற்பனையின் சதவீதத்தை மாற்ற - அல்லது + என்பதைத் தட்டவும்.
  5. உங்கள் லைன் வரம்பில் ஏற்படும் விளைவை மதிப்பாய்வு செய்து, Update (புதுப்பி) என்பதைத் தட்டவும்.

மேனுவலாகத் திருப்பிச் செலுத்துதல்

உங்கள் விற்பனையிலிருந்து தானாகவே வசூலிக்கப்படும் தொகைகளுக்குக் கூடுதலாக, எந்த நேரத்திலும் நீங்கள் மேனுவலாகத் திருப்பிச் செலுத்தலாம். மேனுவலாகச் செலுத்துவதால் தினசரித் திருப்பிச் செலுத்துதல்கள் நிறுத்தப்படாது அல்லது அதற்குப் பதிலாக இது அமையாது. மேனுவலாகத் திருப்பிச் செலுத்தப்படும் தொகையானது முதலில் உங்கள் லைன் இருப்புக்கும், உங்களின் மிகப்பழைய எடுப்புக்கும் பயன்படுத்தப்படும். திருப்பிச் செலுத்த வேண்டிய மீதமுள்ள தொகையில், உங்களின் லைன் இருப்பு மற்றும் வரவிருக்கும் வட்டி ஆகியவை அடங்கும்.

முழுமையாகத் திருப்பிச் செலுத்தப்பட்ட பிறகு, எடுப்புத் தொகைக்கான வட்டி சேர்வது நின்றுவிடும். மேனுவலாகத் திருப்பிச் செலுத்தும் தொகையானது நிறைவடையும் வரை நிலுவையில் இருக்கும், இதற்கு 4 வணிக நாட்கள் வரை ஆகலாம்.

படிகள்:

  1. Shopify Balance app இலிருந்து, Wallet ஐகானைத் தட்டவும்.
  2. Capital என்பதைத் தட்டி, Line balance (லைன் இருப்பு) என்பதைத் தட்டவும்.
  3. Pay line balance (லைன் இருப்பைச் செலுத்து) என்பதைத் தட்டவும்.
  4. நீங்கள் செலுத்த வேண்டிய மீதமுள்ள தொகை வரை, நீங்கள் செலுத்த விரும்பும் தொகையை உள்ளிடவும்.
  5. Continue (தொடரவும்) என்பதைத் தட்டவும்.
  6. உங்கள் பேமெண்ட் தொகை மற்றும் உங்கள் எடுப்புகள் முழுவதற்கும் உங்கள் பேமெண்ட் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதன் விவரங்களை மதிப்பாய்வு செய்யவும்.
  7. Submit (சமர்ப்பி) என்பதைத் தட்டவும்.

உங்கள் எடுப்புகள் மற்றும் திருப்பிச் செலுத்துதல்களைக் கண்காணித்தல்

Shopify Balance செயலியிலேயே உங்களின் எடுப்பு நிலைகள், திருப்பிச் செலுத்துதல் செயல்பாடு மற்றும் கணக்கு நிலையை நீங்கள் மதிப்பாய்வு செய்யலாம்.

தானியங்குத் திருப்பிச் செலுத்துதல்

உங்கள் தினசரி விற்பனையின் ஒரு சதவீதமாக, திருப்பிச் செலுத்துதல் தானாகவே வசூலிக்கப்படும். உங்களின் Shopify Payments பேஅவுட்களில் இருந்து முதலில் திருப்பிச் செலுத்துதல்கள் கழிக்கப்படும். உங்கள் பேஅவுட்களில் இருந்து தொகையைக் கழிக்க முடியாவிட்டால், உங்கள் Shopify Balance கணக்கிலிருந்து அத்தொகை கழிக்கப்படும்.

முதலில் உங்கள் மிகப்பழைய எடுப்புக்கும், அதன்பின்னர் நீங்கள் எடுத்த வரிசையில் புதிய எடுப்புகளுக்கும் திருப்பிச் செலுத்துதல்கள் பயன்படுத்தப்படும். ஒரு புதிய எடுப்பிற்கு முந்தைய அனைத்து எடுப்புகளும் முழுமையாகத் திருப்பிச் செலுத்தப்படும் வரை அதற்குத் திருப்பிச் செலுத்துதல் தொடங்காது, மேலும் அந்தச் சமயத்தில் அதற்கான வட்டி தொடர்ந்து சேர்ந்துகொண்டிருக்கும்.

எடுப்பு நிலைகள்

உங்கள் Capital கணக்கிலிருந்தான ஒவ்வொரு எடுப்பிற்கும் ஒரு நிலை உள்ளது, இது நிதியளிப்பு மற்றும் திருப்பிச் செலுத்தும் செயல்பாட்டில் அது எந்தக் கட்டத்தில் உள்ளது என்பதைப் பிரதிபலிக்கும்.

கோரிக்கை முதல் திருப்பிச் செலுத்துதல் வரை, ஒரு Capital கணக்கின் எடுப்பு கடந்து செல்லும் நிலைகள்
நிலைவிளக்கம்
நிலுவையில் உள்ளதுஉங்கள் எடுப்புக் கோரிக்கை மதிப்பாய்வு செய்யப்படுகிறது. உங்கள் கோரிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால், 2 வணிக நாட்களுக்குள் உங்கள் நிதி வந்து சேரும்.
செலுத்தப்பட வேண்டியவைஉங்கள் எடுப்புக்கு நிதியளிக்கப்பட்டது, மேலும் அதற்கு முந்தைய எடுப்புகளுக்குப் பிறகு திருப்பிச் செலுத்தப்படுவதற்கான வரிசையில் அது உள்ளது.
திருப்பிச் செலுத்தப்படுகிறதுஉங்கள் விற்பனையிலிருந்து பெறப்படும் திருப்பிச் செலுத்துதல்கள் எடுப்புக்கு பயன்படுத்தப்படுகின்றன. நடப்பு மாதத்திற்கான வட்டி திருப்பிச் செலுத்தப்படும் வரை ஒரு எடுப்பு இதே நிலையிலேயே இருக்கும், அதன் தொகை $0 USD ஐ எட்டினாலும் இது பொருந்தும்.
திருப்பிச் செலுத்தப்பட்டதுஎடுப்பு முழுமையாகத் திருப்பிச் செலுத்தப்பட்டது, மேலும் அதற்கான திருப்பிச் செலுத்துதல் காலம் எடுப்புடன் காண்பிக்கப்படும்.
நிராகரிக்கப்பட்டதுஉங்கள் எடுப்புக் கோரிக்கை மதிப்பாய்வு செய்யப்பட்டு அதற்குக் ஒப்புதல் அளிக்கப்படவில்லை, எனவே நிதி எதுவும் டெபாசிட் செய்யப்படவில்லை. இந்த முடிவுடன் கூடிய மின்னஞ்சல் உங்களுக்கு வரும், மேலும் முடிவிற்கான காரணங்களை எப்படிக் கேட்பது என்பதையும் அந்த மின்னஞ்சல் விளக்கும்.
தோல்வியடைந்ததுஉங்கள் எடுப்பிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டடது, ஆனால் டெபாசிட்டை நிறைவு செய்ய முடியவில்லை. நிதியைப் பெறும் கணக்கு டெபாசிட்டை நிராகரிக்கும் போது வழக்கமாக இது நிகழும். உங்கள் கணக்கால் டெபாசிட்டைப் பெற முடியும் என்பதை உறுதிசெய்த பிறகு, மற்றொரு எடுப்பிற்கு நீங்கள் கோரலாம்.

கணக்கின் நிலைகள்

நீங்கள் நிதியை எடுப்பதைத் தடுக்கும் ஒரு நிலைக்கு உங்கள் Capital கணக்கு செல்லக்கூடும். ஒவ்வொரு நிகழ்விலும், Capital திரையில் ஒரு செய்தி காண்பிக்கப்படும்.

புதிய எடுப்புகளைத் தடுக்கும் நிலையில் உங்கள் கணக்கு இருக்கும்போது, Capital திரையில் செய்திகள் காண்பிக்கப்படும்
செய்திவிளக்கம்
உங்கள் இருப்பு உங்கள் வரம்பை மீறுகிறதுஉங்கள் லைன் இருப்பு உங்கள் மொத்த லைன் வரம்பை விட அதிகமாக உள்ளது, உங்கள் லைன் வரம்பு குறையும்போது அல்லது நீங்கள் வரம்பு வரை பணம் எடுத்திருந்து அதற்கு வட்டி விதிக்கப்படும்போது இது நிகழலாம். உங்களுக்குக் கிடைக்கக்கூடிய வரம்பு $0 USD ஆகும், உங்களின் மொத்த லைன் வரம்பிற்குக் கீழ் உங்கள் இருப்பைக் கொண்டு வரும் அளவிற்குப் போதுமான தொகையைத் திருப்பிச் செலுத்தும் வரை உங்களால் நிதியைப் பெற முடியாது.
உங்கள் கணக்கு முடக்கப்பட்டுள்ளதுஉங்களின் Capital கணக்கை மதிப்பாய்வு செய்த பிறகு உங்களின் நிதியைப் பெறும் திறன் முடக்கப்பட்டுள்ளது, இது குறித்த முடிவை மின்னஞ்சலில் பெறுவீர்கள். முடிவுக்கான காரணங்களைக் கோருவது எப்படி என்பதை அந்த மின்னஞ்சல் விளக்கும். உங்கள் கணக்கு முடக்கப்பட்டிருந்தாலும், நீங்கள் நிலுவைத் தொகையை வைத்திருக்கும் வரை திருப்பிச் செலுத்துதல் தொடரும். நீங்களே உங்கள் கணக்கைத் திறக்க முடியாது. உங்கள் அணுகல் மீட்டமைக்கப்பட்டால், நீங்கள் ஒரு மின்னஞ்சலைப் பெறுவீர்கள், அதன்பின் மீண்டும் நிதியைப் பெறலாம்.