உங்கள் Shopify Balance கணக்கில் ரொக்கத்தைச் சேர்த்தல்

Walgreens, CVS, Walmart போன்ற பங்கேற்கும் சில்லறை விற்பனை ஸ்டோர்களில் உங்களின் Shopify Balance கணக்கில் நீங்கள் ரொக்கத்தைச் சேர்க்கலாம். நீங்கள் Shopify செயலியில் ஒரு பார்கோடை உருவாக்கி அதைச் சில்லறை விற்பனை ஸ்டோரில் காட்ட வேண்டும். நீங்கள் ஒரு பார்கோடை உருவாக்கிய பிறகு 1 மணிநேரத்திற்கு அது செயலில் இருக்கும். காசாளர் உங்களின் பார்கோடை ஸ்கேன் செய்து உங்களிடமிருந்து ரொக்கத்தைப் பெற்றுக்கொள்வார், அதன்பிறகு 1 வணிக நாளுக்குள் அந்த நிதியானது உங்கள் Shopify Balance கணக்கில் கிடைத்துவிடும்.

உங்கள் Shopify Balance கணக்கில் ரொக்கத்தைச் சேர்ப்பதற்கான பரிசீலனைகள்

உங்கள் Shopify Balance கணக்கில் ரொக்கத்தைச் சேர்ப்பதற்கு முன், இந்தப் பரிசீலனைகளை மதிப்பாய்வு செய்யவும்:

  • இந்தச் சேவை அமெரிக்காவில் உள்ள Walgreens, CVS, Walmart போன்ற Green Dot சில்லறை விற்பனை இருப்பிடங்களில் மட்டுமே கிடைக்கும்.
  • Shopify Balance கணக்கில் ரொக்கத்தைச் சேர்க்க நீங்கள் ஒரு கணக்கு உரிமையாளராக இருக்க வேண்டும்.
  • நீங்கள் உருவாக்கும் பார்கோடுகள் 1 மணிநேரத்திற்குப் பிறகு காலாவதியாகிவிடும், ஆனால் நீங்கள் அவற்றை மீண்டும் உருவாக்கலாம்.
  • உங்கள் Shopify Balance கணக்கில் ரொக்கத்தைச் சேர்ப்பதற்கான ஒவ்வொரு முயற்சியும் 24 மணிநேரத்திற்குப் பிறகு காலாவதியாகும்.
  • நீங்கள் சேர்க்கும் ரொக்கமானது 1 வணிக நாளுக்குப் பிறகு உங்கள் Shopify Balance கணக்கில் கிடைக்கும்.
  • செயலில் உள்ள பார்கோடுக்கான தொகையையோ கடை இருப்பிடத்தையோ மாற்ற முடியாது. நீங்கள் மாற்றங்களைச் செய்ய வேண்டுமானால், இருக்கும் பார்கோடை ரத்துசெய்துவிட்டு, புதுப்பிக்கப்பட்ட தகவலுடன் புதிய பார்கோடை உருவாக்க வேண்டும்.

உங்கள் Shopify Balance கணக்கில் ரொக்கத்தைச் சேர்க்கும்போது வரம்புகள்

எந்தவொரு 24-மணிநேரக் கால அளவிலும் உங்கள் Shopify Balance கணக்கில் $1,500 USD வரை சேர்க்கலாம். இந்த வரம்பு நள்ளிரவில் மீட்டமைக்கப்படாது. நீங்கள் $500 USD-ஐ விட அதிகத் தொகையை உள்ளிட்டால், செயலியானது தானாகவே பல பார்கோடுகளை உருவாக்கும். ஒவ்வொரு பார்கோட்டையும் காசாளரிடம் ஒவ்வொன்றாகக் காட்டவும்.

ஒவ்வொரு பார்கோடும், அதன் தொகை குறைவாக இருந்தாலும், 24 மணிநேர வரம்பில் குறைந்தபட்சம் $500 USD ஆகக் கணக்கிடப்படும். அதாவது எந்தவொரு 24 மணிநேரக் கால அளவிலும் உங்களால் 3 பார்கோடுகள் வரை பயன்படுத்த முடியும். நீங்கள் பார்கோட்டை உருவாக்கும் நேரத்திலிருந்து அது வரம்பிற்குக் கணக்கிடப்படும். ஒரு பார்கோட்டை நீங்கள் ரத்துசெய்தாலோ அது காலாவதியானாலோ அது கணக்கில் கொள்ளப்படாது.

ரொக்க வைப்பு வரம்புகள் பற்றி மேலும் அறிய, பின்வரும் அட்டவணையை மதிப்பாய்வு செய்யவும்.

ஒவ்வொரு கால அளவிலும் Shopify Balance கணக்கில் நீங்கள் சேர்க்கக்கூடிய அதிகபட்ச ரொக்கத் தொகை
காலம்அதிகபட்ச ரொக்க வைப்புத் தொகை
எந்தவொரு 24 மணிநேரக் கால அளவு$1,500 USD
எந்தவொரு 7-நாள்கள் கால அளவு$3,500 USD
பசிபிக் நேரத்தின்படியான நாள்காட்டி மாதம்$5,000 USD

மாதாந்திர வரம்பானது பசிபிக் நேரத்தின்படி ஒவ்வொரு நாள்காட்டி மாதத்தின் தொடக்கத்திலும் மீட்டமைக்கப்படும்.

உங்கள் Shopify Balance கணக்கில் ரொக்கத்தைச் சேர்க்கவும்

பார்கோடைப் பயன்படுத்தி Shopify செயலியில் இருந்து உங்கள் Shopify Balance கணக்கில் நீங்கள் ரொக்கத்தைச் சேர்க்கலாம்.

நீங்கள் ஒரு பார்கோட்டை உருவாக்கிய பிறகு 1 மணிநேரத்திற்கு அது செயலில் இருக்கும். உங்கள் பார்கோடு காலாவதியாகிவிட்டால், Shopify செயலியில் புதிய ஒன்றை உருவாக்கவும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் குறிப்பிட்ட டிராப்-ஆஃப் இருப்பிடத்திற்குப் பார்கோடுகள் உருவாக்கப்படும். நீங்கள் மனமாற்றம் அடைந்து வேறெங்காவது ரொக்கத்தை டிராப்-ஆஃப் செய்ய விரும்பினால், கட்டாயம் புதிய பார்கோட்டை உருவாக்க வேண்டும்.

நீங்கள் ரொக்கத்தைச் சமர்ப்பித்த பிறகு, உங்கள் பரிவர்த்தனைப் பட்டியலில் அது நிலுவையில் உள்ளது எனக் காட்டப்படும். 1 வணிக நாளுக்குப் பிறகு உங்கள் Shopify Balance கணக்கில் அந்த நிதியைப் பயன்படுத்த முடியும்.

படிகள்:

  1. Shopify செயலியில், Balance என்பதைத் தட்டவும்.
  2. ரொக்கத்தைச் சேர் என்பதைத் தட்டவும்.
  3. ரொக்கத் தொகையை உள்ளிட்டு, நீங்கள் ரொக்கத்தைச் சேர்க்க விரும்பும் Shopify Balance கணக்கைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. அருகிலுள்ள விருப்பத்தேர்வுகளைத் தேர்வுசெய்ய இருப்பிடப் பகிர்வைச் செயல்படுத்துவதன் மூலம் நீங்கள் விரும்பும் டிராப்-ஆஃப் இருப்பிடத்தைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது சில்லறை விற்பனை ஸ்டோரைத் தேடவும்.
  5. உங்கள் பார்கோட்டை உருவாக்க உறுதிசெய் என்பதைத் தட்டவும்.
  6. சில்லறை விற்பனை ஸ்டோருக்குச் சென்று காசாளரிடம் பார்கோட்டைக் காட்டவும்.
  7. கேஷியர் ஒவ்வொரு பார்கோட்டையும் ஸ்கேன் செய்து, உங்களுக்கு ரசீதை வழங்குவார். உங்கள் Shopify Balance கணக்கில் நிதி கிடைக்கும் வரை இந்த ரசீதை வைத்திருக்கவும்.

உருவாக்கப்பட்ட பார்கோட்டைக் கண்டறியவும்

உருவாக்கப்பட்ட பார்கோட்டை உங்கள் மின்னஞ்சல் அல்லது Shopify செயலியில் கண்டறியலாம்.

படிகள்:

  1. Shopify செயலியில், Balance என்பதைத் தட்டவும்.
  2. உங்கள் பார்கோடு தயாராக உள்ளது என்று காட்டும் பேனரைத் தட்டவும்.

காலாவதியான பார்கோட்டை மாற்றுதல்

உருவாக்கப்பட்ட பார்கோடு காலாவதியானால், Shopify செயலியில் புதிய பார்கோடை உருவாக்கலாம்.

படிகள்:

  1. Shopify செயலியில், Balance என்பதைத் தட்டவும்.
  2. ரொக்கத்தைச் சேர் என்பதைத் தட்டவும்.
  3. தொகையை உள்ளிட்டு, நீங்கள் விரும்பும் டிராப்-ஆஃப் இருப்பிடத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. புதிய பார்கோடை உருவாக்க, உறுதிசெய் என்பதைத் தட்டவும்.

உங்கள் ரொக்கச் சமர்ப்பிப்பை ரத்துசெய்யவும்

ஒரு பார்கோடு ஸ்டோரில் ஸ்கேன் செய்யப்படுவதற்கு முன்பு எந்த நேரத்திலும் அதை நீங்கள் ரத்துசெய்யலாம். பார்கோட்டை ரத்துசெய்த பிறகு, தேவைப்பட்டால் நீங்கள் மீண்டும் புதிய பார்கோட்டை உருவாக்கிக்கொள்ளலாம்.

படிகள்:

  1. Shopify செயலியில், Balance என்பதைத் தட்டவும்.
  2. ரொக்கத்தைச் சேர் என்பதைத் தட்டவும்.
  3. செயலில் உள்ள கோரிக்கையில், ரத்துசெய் என்பதைத் தட்டவும்.

தொகை அல்லது டிராப்-ஆஃப் இருப்பிடத்தைப் புதுப்பி

செயலில் உள்ள பார்கோடுக்கான தொகையையோ கடை இருப்பிடத்தையோ மாற்ற முடியாது. நீங்கள் மாற்றங்களைச் செய்ய வேண்டுமானால், இருக்கும் பார்கோடை ரத்துசெய்துவிட்டு, புதுப்பிக்கப்பட்ட தகவலுடன் புதிய பார்கோடை உருவாக்க வேண்டும்.

படிகள்:

  1. Shopify செயலியில், Balance என்பதைத் தட்டவும்.
  2. ரொக்கத்தைச் சேர் என்பதைத் தட்டவும்.
  3. செயலில் உள்ள கோரிக்கையில், ரத்துசெய் என்பதைத் தட்டவும்.
  4. புதிய கோரிக்கையை உருவாக்க ரொக்கத்தைச் சேர் என்பதைத் தட்டவும்.
  5. புதிய தொகையை உள்ளிட்டு, நீங்கள் விரும்பும் டிராப்-ஆஃப் இருப்பிடத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  6. புதிய பார்கோடை உருவாக்க, உறுதிசெய் என்பதைத் தட்டவும்.

Shopify Balance கணக்கில் ரொக்கத்தைச் சேர்க்கும்போது ஏற்படும் சிக்கல் தீர்த்தல்

உங்கள் Shopify Balance கணக்கில் ரொக்கத்தைச் சேர்க்கும்போது சிக்கல்களைச் சந்தித்தால், பின்வரும் சிக்கல் தீர்த்தல் தகவலை மதிப்பாய்வு செய்யவும்.

பார்கோடை ஸ்கேன் செய்வதில் உள்ள சிக்கல்கள்

காசாளரால் நீங்கள் உருவாக்கிய பார்கோடை ஸ்கேன் செய்ய முடியவில்லை எனில், அவர்கள் மீண்டும் பார்கோடை ஸ்கேன் செய்ய முயற்சிக்கலாம். காசாளரால் இன்னமும் பார்கோடை ஸ்கேன் செய்ய முடியவில்லை எனில், Shopify செயலியில் புதிய பார்கோடை உருவாக்கவும்.

புதிய பார்கோடு வேலை செய்யவில்லை எனில், வேறு டிராப்-ஆஃப் இருப்பிடத்தைத் தேர்வுசெய்து பார்க்கவும். சிக்கல் தொடர்ந்தால், Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.

விடுபட்ட நிதி

3 வணிக நாள்களுக்குள் உங்கள் பரிவர்த்தனைப் பட்டியலில் ரொக்கம் காட்டப்படாவிட்டால், பின்வரும் தகவலுடன் Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்:

  • நீங்கள் ரொக்கத்தைச் சமர்ப்பித்த தேதி மற்றும் நேரம்
  • ஸ்டோர் பெயர் மற்றும் இடம்
  • தொகை
  • உங்கள் ஸ்டோர் ரசீதின் புகைப்படம் அல்லது ரசீதிலுள்ள விவரங்கள்