பணியாளர் Shopify Balance கார்டுகளை உருவாக்கி நிர்வகித்தல்
நீங்கள் உங்கள் Shopify Balance கணக்கிற்கு செகண்டரி கார்டுதாரர்களைச் சேர்க்க முடியும். Shopify Balance கணக்கின் பிரைமரி கார்டுதாரர், தங்களுடைய Shopify ஸ்டோருடன் தொடர்புடைய பணியாளர் கணக்குகளிலிருந்து செகண்டரி கார்டுதாரர்களைச் சேர்க்கலாம். செகண்டரி கார்டுதாரருக்காக பிரைமரி கார்டுதாரரால் விர்ச்சுவல் அல்லது பிசிக்கல் கார்டை உருவாக்க முடியும்.
செகண்டரி கார்டுதாரருக்காக ஒரு கார்டை உருவாக்கும்போது, கார்டு கிடைக்கும் தன்மையானது இணைக்கப்பட்ட கணக்கைப் பொறுத்து மாறுபடும்:
- முக்கிய Shopify Balance கணக்கு: பிசிக்கல் அல்லது விர்ச்சுவல் கார்டுகள்
- கூடுதல் Shopify Balance கணக்குகள்: உங்களால் விர்ச்சுவல் கார்டுகளை உருவாக்க முடியும் (கணக்கிற்கு ஒன்று)
இந்தப் பக்கத்தில்
புதிய செகண்டரி கார்டுதாரருக்காகக் கார்டை உருவாக்குதல்
Shopify Balance கணக்கின் பிரைமரி கார்டுதாரராக, உங்கள் பணியாளர்களுக்கான செகண்டரி கார்டுகளை நீங்கள் உருவாக்கலாம்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, நிதி பகுதிக்குச் செல்லவும்.
நீங்கள் புதிய கார்டை உருவாக்க விரும்பும் Shopify Balance கணக்கைத் தேர்ந்தெடுக்கவும்.
புதிய கார்டை உருவாக்க, எனது கார்டுகள் பிரிவில் உள்ள
ஐகானைக் கிளிக் செய்யவும்.
கார்டுதாரர் புலத்தில், கார்டுதாரரைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது புதிய பயனரைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
இணைக்கப்பட்ட கணக்கு புலத்தில், இணைக்கப்பட்ட கணக்கைத் தேர்ந்தெடுக்கவும்.
கார்டு வகையாக விர்ச்சுவல் அல்லது பிசிக்கல் கார்டுகளில் ஒன்றைத் தேர்வுசெய்யவும்.
விருப்பத்தேர்வு: மாதாந்திரச் செலவு வரம்பு அல்லது தானியங்கு லாக் தேதி போன்றவற்றை செகண்டரி கார்டுதாரருக்கான செலவுக் கட்டுப்பாடுகளாக அமைக்கலாம்.
கார்டை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
நீங்கள் அழைக்கும் பணியாளர் தனது கார்டைப் பயன்படுத்தத் தொடங்குவதற்கு முன்பாக, அவர் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு அமைவை முடிக்க வேண்டும்.
செகண்டரி கார்டுதாரராக ஆவதற்கான அழைப்பை ஏற்பதல்
பிரைமரி கார்டுதாரர் உங்களை செகண்டரி கார்டுதாரராக ஆவதற்கான அழைப்பை அனுப்பிய பிறகு, நீங்கள் Shopify Balance கார்டைப் பயன்படுத்தத் தொடங்கும் முன்பாக, செகண்டரி கார்டுதாரருக்கான அமைவை நீங்கள் முடிக்க வேண்டும். நீங்கள் முதல் முறையாக செகண்டரி கார்டுதாரராக மாறுவதை விட, வேறொரு Shopify நிதித் தயாரிப்புக்கான செகண்டரி கார்டு உங்களிடம் ஏற்கனவே இருக்கும்போது அதற்கான படிகள் சற்று மாறுபடும்.
நீங்கள் தொடங்கும் முன், இரு-படி அங்கீகாரத்தைச் (2SA) செயல்படுத்தியிருக்க வேண்டும். Shopify Balance-இன் அனைத்து அம்சங்களையும் அணுக 2SA தேவை.
புதிய செகண்டரி கார்டுதாரருக்கு
உங்களின் Shopify Balance கார்டைச் செயல்படுத்துவதற்கும் கார்டுதாரர் அமைவை முடிப்பதற்கும் பின்வரும் படிகளை நிறைவுசெய்யவும்.
படிகள்:
- கார்டுதாரர் அழைப்பு மின்னஞ்சலில் இருந்து, செயல்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் தனிப்பட்ட தகவலை உள்ளிட்டு, செயல்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
- அழைப்பானது பிசிக்கல் செகண்டரி கார்டுக்கானதாக இருந்தால், உங்கள் Shopify Balance கார்டின் கடைசி நான்கு இலக்கங்களை உள்ளிட்டு அடுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
ஏற்கனவே இருக்கும் செகண்டரி கார்டுதாரருக்கு
உங்களிடம் ஏற்கனவே வேறொரு Shopify நிதித் தயாரிப்புக்கான செகண்டரி கார்டு இருந்தால், நீங்கள் புதிய கார்டை மட்டுமே செயல்படுத்த வேண்டும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, நிதி பகுதிக்குச் செல்லவும்.
கார்டுகள் பிரிவில், புதிய கார்டைத் தேர்ந்தெடுக்கவும்.
புதிய கார்டுக்கான விதிமுறைகளை மதிப்பாய்வு செய்து, கார்டைச் செயல்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
செகண்டரி கார்டுதாரர்களுக்கான செலவுக் கட்டுப்பாடுகளை அமைத்தல்
ஒவ்வொரு கார்டிற்கும் மாதாந்திரச் செலவு வரம்பு அல்லது தானியங்கு லாக் தேதி போன்ற செலவுக் கட்டுப்பாடுகளை பிரைமரி கார்டுதாரரால் அமைக்க முடியும். உங்களின் பயன்பாட்டு வழக்குப் பொறுத்து எந்த நேரத்திலும் இந்தச் செலவுக் கட்டுப்பாடுகளைப் புதுப்பிக்கலாம்.
கார்டின் மாதாந்திரச் செலவு வரம்பை மாற்றுதல்
ஒரு கார்டின் மாதாந்திரச் செலவு வரம்பை நடப்பு மாதத்தின் செலவை விடக் குறைவான தொகைக்கு மாற்றினால், அந்த மாதத்தில் கார்டுதாரரால் கூடுதல் கொள்முதல்கள் எதையும் செய்ய முடியாது.
எந்தவொரு நேரத்திலும் Shopify Balance கணக்கின் நடப்பு இருப்பு கார்டின் மாதாந்திரச் செலவு வரம்பை விடக் குறைவாக இருந்தால், செகண்டரி கார்டுதாரரால் மீதமுள்ள கிடைக்கும் தொகைக்கு மேல் செலவழிக்க முடியாது.
எடுத்துக்காட்டாக, மீதமுள்ள கிடைக்கும் இருப்பு $500 USD ஆகவும், செகண்டரி கார்டுதாரருக்குக் கிடைக்கும் மாதாந்திரச் செலவு வரம்பு $1000 USD ஆகவும் இருந்தால், அவர்களால் $500 USD மட்டுமே செலவிட முடியும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, நிதி பகுதிக்குச் செல்லவும்.
உங்கள் கார்டைத் தேர்ந்தெடுக்கவும்.
கார்டுகள் பக்கத்தில், செகண்டரி கார்டைத் தேர்ந்தெடுக்கவும்.
என்பதைக் கிளிக் செய்து, கார்டு அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
இந்தக் கார்டுக்கான செலவு வரம்பைப் புதுப்பித்து, சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
இரண்டாம் நிலை கார்டுதாரர்களுக்குத் தானியங்கு லாக் தேதியை அமைத்தல்
இரண்டாம் நிலை கார்டுதாரருக்குப் புதிய கார்டை உருவாக்கிய பிறகு, கார்டைத் தானாகவே லாக் செய்வதற்கு ஒரு தேதியை நீங்கள் திட்டமிடலாம். தேதியை அமைக்கவில்லையெனில், கார்டு மேனுவலாக லாக் செய்யப்படும் வரை அது செயலில் இருக்கும். கார்டு அமைப்புகள் என்பதில் எந்த நேரத்திலும் தானியங்கு லாக் தேதியை நீங்கள் மாற்றலாம் அல்லது அகற்றலாம்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, நிதி பகுதிக்குச் செல்லவும்.
உங்கள் கார்டைத் தேர்ந்தெடுக்கவும்.
கார்டுகள் பக்கத்தில், செகண்டரி கார்டைத் தேர்ந்தெடுக்கவும்.
என்பதைக் கிளிக் செய்து, கார்டு அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
இந்தக் கார்டு தானாகவே லாக் ஆவதற்கான ஒரு தேதியைத் தேர்ந்தெடுத்துவிட்டு, சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
இரண்டாம் நிலை கார்டை மேனுவலாக லாக் செய்தல்
கார்டு தொலைந்துபோனால் அல்லது பணியாளர் விடுப்பில் இருந்தால், தற்காலிகமாகச் செலவு செய்வதைத் தடுக்க, முதன்மை கார்டுதாரர் இரண்டாம் நிலை கார்டை மேனுவலாக லாக் செய்யலாம்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, நிதி பகுதிக்குச் செல்லவும்.
உங்கள் கார்டைத் தேர்ந்தெடுக்கவும்.
கார்டுகள் பக்கத்தில், செகண்டரி கார்டைத் தேர்ந்தெடுக்கவும்.
கார்டை லாக் செய் என்பதைக் கிளிக் செய்யவும்.
கார்டை அன்லாக் செய்ய, இரண்டாம் நிலை கார்டை அணுகுவதற்கான படிகளை முடித்துவிட்டு, கார்டை அன்லாக் செய் என்பதைக் கிளிக் செய்யவும்.
இரண்டாம் நிலை கார்டுதாரரை அகற்றுதல்
செயலில் உள்ள கார்டுகளை வைத்திருக்கும் இரண்டாம் நிலை கார்டுதாரரான பணியாளரின் கணக்கை நீங்கள் முடக்கினால், அந்தக் கார்டுதாரரின் கார்டுகள் தானாகவே லாக் செய்யப்படும், அவற்றைப் பயன்படுத்த முடியாது. அந்தப் பணியாளரின் கணக்கை மீண்டும் செயல்படுத்தினால், அவர்களின் கார்டுகள் தானாகவே அன்லாக் செய்யப்படும், அவற்றை மீண்டும் பயன்படுத்தலாம்.
உங்கள் ஸ்டோரில் இருந்து பணியாளரின் கணக்கை அகற்றினால் மற்றும் அந்தப் பணியாளர் செயலில் உள்ள கார்டுகளுடன் இரண்டாம் நிலை கார்டுதாரராக இருந்தால், அவர்களின் கார்டுகள் ரத்து செய்யப்படும், அவற்றைப் பயன்படுத்த முடியாது.
பணியாளர் கணக்கை முடக்காமலோ அகற்றாமலோ இரண்டாம் நிலை கார்டுதாரரை உங்களால் அகற்ற முடியும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, நிதி பகுதிக்குச் செல்லவும்.
உங்கள் கார்டைத் தேர்ந்தெடுக்கவும்.
கார்டுகள் பக்கத்தில், நீங்கள் அகற்ற விரும்பும் கார்டுதாரருடன் தொடர்புடைய எந்தவொரு கார்டையும் தேர்ந்தெடுக்கவும்.
என்பதைக் கிளிக் செய்து, கார்டுதாரரை அகற்று என்பதைக் கிளிக் செய்யவும்.