Shopify Balance-இல் ACH டெபிட் பரிவர்த்தனைகள் குறித்து முறையிடுதல்
தானியங்கு தீர்வகம் (ACH) டெபிட் முறையீடுகளை Shopify ஆதரவைத் தொடர்புகொள்வதன் மூலமாகவோ உங்கள் Shopify நிர்வாகியின் Shopify Balance பிரிவில் மேனுவலாகச் சமர்ப்பிப்பதன் மூலமாகவோ எப்படி நிர்வகிப்பது என்பதை இந்த வழிகாட்டி விவரிக்கிறது.
உங்கள் Shopify Balance கணக்கில் ACH டெபிட் செய்யும்போது, பரிவர்த்தனை விவரங்களுடன் உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் வரும். உங்கள் Shopify Balance கணக்கிலிருந்து செய்யப்பட்ட ACH டெபிட் தவறாக இருந்தால், நீங்கள் Shopify ஆதரவைத் தொடர்புகொண்டு முறையீட்டைச் சமர்ப்பிக்கலாம். தவறான டெபிட் பரிவர்த்தனைகள் தொடர்பான முறையீடுகளை உங்களால் மேனுவலாகச் சமர்ப்பிக்க முடியாது.
ஒரு தானியங்கு தீர்வக (ACH) டெபிட் பரிவர்த்தனை மோசடியானது என நீங்கள் கருதினால், அந்தப் பரிவர்த்தனை குறித்துப் புகாரளிக்க Shopify ஆதரவைத் தொடர்புகொள்ள வேண்டும்.
இந்தப் பக்கத்தில்
ACH பரிமாற்றங்களுக்கான தகுதியுடைய முறையீட்டுப் பகுப்புகள்
ACH பரிமாற்றத்திற்கான முறையீட்டைச் சமர்ப்பிக்க, அந்தப் பரிமாற்றமானது பின்வரும் பகுப்புகளில் ஏதேனும் ஒன்றைச் சேர்ந்ததாக இருக்க வேண்டும்:
- இரட்டிப்புக் கட்டணங்கள்
- தவறான தொகைகள்
- அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள்
- தவறான பெறுநர் பெயர்
- தவறான கணக்கு எண் அல்லது ரூட்டிங் எண்
ACH பரிமாற்றப் பரிவர்த்தனைகள் குறித்து முறையிட, Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளுங்கள்
அங்கீகரிக்கப்படாத ACH பரிமாற்றம் குறித்து நீங்கள் புகாரளித்தால், திரும்பப்பெறும் செயல்முறையில் Shopify ஆதரவு உங்களுக்கு வழிகாட்டும். நீங்கள்தான் திரும்பப்பெறுதலைத் தொடங்க வேண்டும் என்றாலும், உங்களால் படிகளை நிறைவுசெய்ய முடியவில்லை என்றால் Shopify ஆதரவு உங்களுக்கு உதவ முடியும். தவறான அல்லது சந்தேகத்திற்குரிய மோசடிப் பரிவர்த்தனைகள் குறித்துப் புகாரளிக்க, Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளுங்கள்.
படிகள்:
- உங்களின் Shopify நிர்வாகியில், நிதி > Balance என்பதற்குச் செல்லவும்.
- பரிவர்த்தனைகள் பிரிவில், நீங்கள் முறையிட விரும்பும் பரிவர்த்தனையைக் கிளிக் செய்யவும்.
- ரசீதுகள், விற்பனையாளருடனான கடிதப் பரிமாற்றங்கள், திருப்பியளித்ததற்கான ஆதாரம் மற்றும் சேவை ஒப்பந்தங்கள் போன்ற உங்களின் உரிமைகோரலை ஆதரிக்கும் தொடர்புடைய ஆவணங்களைச் சேகரிக்கவும்.
- Shopify ஆதரவைத் தொடர்புகொண்டு, பரிவர்த்தனை தொடர்பான விவரங்கள், முறையீட்டிற்கான காரணம் மற்றும் Shopify ஆதரவு கோரும் ஏதேனும் கூடுதல் ஆதாரங்களை வழங்கவும்.
- தகவல்கள் அனைத்தும் சரியாக இருப்பதை உறுதிசெய்துவிட்டு, உங்கள் முறையீட்டைச் சமர்ப்பிக்குமாறு Shopify ஆதரவிடம் கோரவும்.
ACH பரிவர்த்தனை முறையீடுகளை ரத்துசெய்தலும் தீர்த்தலும்
முறையீட்டை உருவாக்கியதிலிருந்து அதிகபட்சமாக 48 மணிநேரத்திற்குள் அதை ரத்துசெய்யக் கோரலாம். ஒரு முறையீடு ரத்துசெய்யப்பட்டால், பிறகு அதை மீண்டும் திறக்க முடியாது.
உங்கள் Shopify நிர்வாகியில் மோசடிக் கட்டணம் குறித்து நீங்கள் மேனுவலாகப் புகாரளிக்கும்போது, ஒரு முறையீட்டை ரத்துசெய்ய முடியாது.
ACH பரிவர்த்தனை முறையீடுகளுக்கான தீர்வுகாணும் காலக்கெடுக்கள் மற்றும் இறுதி முடிவுகள்
ACH டெபிட் திரும்பப்பெறுதல்களைச் செயல்படுத்த 3 வணிக நாட்கள் வரை ஆகலாம். முறையீடு உங்களுக்குச் சாதகமாகத் தீர்க்கப்பட்டால், நிதியானது உங்கள் கணக்கிற்குத் திரும்ப வர மேலும் 3 வணிக நாட்கள் ஆகலாம். முறையீட்டுச் செயல்முறையின் முடிவில் எடுக்கப்படும் முடிவுகளே இறுதியானவை, அவற்றை மாற்ற முடியாது.