Shopify Balance மூலம் சர்வதேச அளவில் பணத்தை அனுப்புதல்
அமெரிக்காவிற்கு வெளியே உள்ள சப்ளையர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் பிற பிசினஸ்களுக்குப் பணம் செலுத்துவதற்காக, உங்கள் Shopify Balance கணக்கிலிருந்து மற்றொரு நாட்டில் உள்ள பெறுநரின் வங்கிக் கணக்கிற்கு நீங்கள் பணத்தை அனுப்பலாம். நீங்கள் உறுதிப்படுத்துவதற்கு முன்பாகவே நாணய மாற்று விகிதம் மற்றும் கட்டணங்களைச் சரிபார்க்கலாம், அத்துடன் உங்கள் பெறுநர் அவரது உள்ளூர் நாணயத்தில் நிதியைப் பெறுவார்.
Shopify Balance மொபைல் செயலியில் மட்டுமே உங்களால் சர்வதேச அளவில் பணத்தை அனுப்ப முடியும். உங்கள் Shopify நிர்வாகியில், உங்களது பரிவர்த்தனை வரலாற்றில் உள்ள சர்வதேசப் பரிமாற்றத்தைச் சரிபார்க்க முடியுமே தவிர, உங்களால் பரிமாற்றம் செய்ய முடியாது. அமெரிக்காவில் உள்ள ஒரு பெறுநருக்குப் பணத்தை அனுப்புவது பற்றி அறிய, வங்கிப் பரிமாற்றம் அல்லது வயர் மூலம் பணத்தை அனுப்புதல் என்பதைப் பார்க்கவும்.
இந்தப் பக்கத்தில்
சர்வதேச அளவில் பணத்தை அனுப்புவதற்கான தேவைகள்
Shopify Balance மூலம் சர்வதேச அளவில் பணத்தை அனுப்ப, நீங்கள் பின்வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்:
- உங்கள் பிசினஸ் அமெரிக்காவைத் தளமாகக் கொண்டிருக்க வேண்டும். Shopify Balance-க்கான தகுதித் தேவைகள் குறித்து மேலும் அறிக.
- iOS அல்லது ஆண்ட்ராய்டு சாதனத்தில் இன்ஸ்டால் செய்யப்பட்ட Shopify Balance மொபைல் செயலி உங்களுக்குத் தேவை. Shopify Balance மொபைல் செயலியை இன்ஸ்டால் செய்வது குறித்து மேலும் அறிக.
- உங்கள் பெறுநர் ஆதரிக்கப்படும் நாடொன்றில் வங்கிக் கணக்கை வைத்திருக்க வேண்டும்.
அனைத்து Shopify Balance கணக்குகளுக்கும் சர்வதேசப் பரிமாற்றங்கள் கிடைக்காது. சர்வதேசப் பெறுநரைச் சேர்ப்பதற்கான விருப்பம் உங்களிடம் இல்லை எனில், உங்கள் கணக்கு இன்னும் தகுதிபெறவில்லை என்று அர்த்தம்.
சர்வதேசப் பரிமாற்றங்களுக்குக் கருத்தில் கொள்ள வேண்டியவை
சர்வதேச அளவில் பணத்தை அனுப்புவதற்கு முன், கருத்தில் கொள்ள வேண்டிய பின்வரும் விஷயங்களைச் சரிபார்க்கவும்:
- அமெரிக்காவிலுள்ள பெறுநர்களுக்கு அனுப்பப்படும் பரிமாற்றங்களைப் போலவே, சர்வதேசப் பரிமாற்றங்களும் அதே தினசரிப் பரிமாற்ற வரம்பின் கீழ் கணக்கிடப்படும். உங்களது தினசரி வரம்பை நீங்கள் அடைந்துவிட்டால், அந்த வரம்பு மீட்டமைக்கப்படும் வரை உங்களால் மற்றொரு பரிமாற்றத்தைச் செய்ய முடியாது.
- சர்வதேசப் பரிமாற்றத்தைப் பெற உங்கள் பெறுநரின் வங்கி அதன் சொந்தக் கட்டணங்களை விதிக்கலாம்.
- உங்கள் பெறுநரின் வங்கி அறிக்கையில் சர்வதேசப் பரிமாற்றமானது ShopifyInternationalஎன்று காண்பிக்கப்படும். இந்த விளக்கத்தை உங்களால் மாற்ற முடியாது.
சர்வதேசப் பரிமாற்றங்களுக்கான நாணய மாற்று விகிதங்கள் மற்றும் கட்டணங்கள்
Shopify Balance மொபைல் செயலியில் நீங்கள் அனுப்ப விரும்பும் தொகையை உள்ளிடும்போது, உங்களுடைய நாணயத்திலான தொகை, உங்களது பெறுநர் அவரது நாணயத்தில் பெறும் தொகை மற்றும் அவற்றுக்கு இடையேயான நாணய மாற்று விகிதம் ஆகியவற்றைச் செயலி காண்பிக்கும். இந்த விகிதம் எவ்வளவு காலத்திற்குச் செல்லுபடியாகும் என்பதையும் செயலி காண்பிக்கும். நீங்கள் பரிமாற்றத்தைச் செய்வதற்கு முன்பாகவே அந்த விகிதம் காலாவதியாகிவிட்டால், நீங்கள் புதிய விகிதத்தைப் பெற வேண்டும்.
ஒரு சர்வதேசப் பரிமாற்றத்திற்குப் பின்வரும் கட்டணங்கள் பொருந்தும், அத்துடன் ஒவ்வொரு கட்டணமும் நீங்கள் பணம் அனுப்பப் பயன்படுத்தும் நாணயத்திலேயே வசூலிக்கப்படும்:
- ஒவ்வொரு பரிமாற்றத்திற்கும் நிலையான தொகையாக வசூலிக்கப்படும் சர்வதேசப் பரிமாற்றக் கட்டணம்.
- நீங்கள் அனுப்பும் தொகையின் ஒரு குறிப்பிட்ட சதவீதமாக வசூலிக்கப்படும் நாணய மாற்றுக் கட்டணம்.
ஒவ்வொரு நாட்டிற்குமான கட்டணத் தொகைகள் ஆதரிக்கப்படும் நாடுகள், நாணயங்கள், விநியோக முறைகள் மற்றும் கட்டணங்கள் என்பதில் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்தக் கட்டணங்கள் பரிமாற்றத் தொகையிலிருந்து தனித்தனியாக வசூலிக்கப்படுமே தவிர, உங்கள் பெறுநர் பெறும் தொகையிலிருந்து கழிக்கப்படாது. நீங்கள் பரிமாற்றத்தை உறுதிசெய்வதற்கு முன், நாணய மாற்று விகிதத்தையும் கட்டண விவரங்களையும் சரிபார்க்கலாம். ஒரு சர்வதேசப் பரிமாற்றம் தோல்வியடைந்தாலோ அல்லது திரும்பப் பெறப்பட்டாலோ, அதற்கான கட்டணப் பரிவர்த்தனை திரும்பப் பெறப்படும்.
சர்வதேசப் பெறுநரைச் சேர்த்தல்
சர்வதேச அளவில் நீங்கள் பணத்தை அனுப்புவதற்கு முன், உங்களது Shopify Balance கணக்கில் பெறுநரின் விவரங்களைச் சேமிக்க வேண்டும். உங்கள் பெறுநரின் வங்கிக் கணக்குத் தகவல் மற்றும் அவரது வங்கியில் பதிவுசெய்யப்பட்டுள்ளவாறான பெறுநரின் சட்டப்பூர்வப் பெயர் ஆகியவை உங்களிடம் இருக்க வேண்டும்.
உங்கள் பெறுநரைப் பற்றி உங்களுக்குத் தேவைப்படும் விவரங்கள் அவர்களின் நாட்டைப் பொறுத்து மாறுபடலாம். நீங்கள் அவர்களின் நாட்டைத் தேர்ந்தெடுக்கும்போது, அந்த நாட்டிற்குத் தேவையான புலங்களை மட்டுமே செயலி காண்பிக்கும்.
படிகள்:
- Shopify Balance மொபைல் செயலியில் இருந்து,
ஐகானைத் தட்டவும்.
- அமைப்புகள் என்பதைத் தட்டி, பின்னர் பெறுநர்கள் என்பதைத் தட்டவும்.
ஐகானைத் தட்டவும். நீங்கள் இதற்கு முன்பு எந்தவொரு பெறுநரையும் சேமிக்கவில்லை எனில், பெறுநரை உருவாக்கு என்பதைத் தட்டவும்.
- உங்கள் பெறுநர் ஒரு நபராக இருந்தால், தனிநபர் என்பதைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது உங்கள் பெறுநர் ஒரு நிறுவனமாக இருந்தால், பிசினஸ் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- நாடு என்பதைத் தட்டி, உங்கள் பெறுநரின் வங்கிக் கணக்கு உள்ள நாட்டைத் தேர்ந்தெடுக்கவும்.
- உங்கள் பெறுநரின் சட்டப்பூர்வப் பெயரை உள்ளிடவும். பெறுநரை அடையாளம் காண உதவ நீங்கள் ஒரு புனைப்பெயரையும் உள்ளிடலாம்.
- கட்டண முறை பிரிவில், கட்டணத்திற்கான விநியோக முறையைத் தேர்ந்தெடுக்கவும்.
- பெறுநரின் விவரங்களை உள்ளிடவும்.
- பெறுநரைச் சேர் என்பதைத் தட்டவும்.
சர்வதேச அளவில் பணத்தை அனுப்புதல்
நீங்கள் ஒரு சர்வதேசப் பெறுநரைச் சேமித்த பிறகு, உங்களது ஏதேனுமொரு Shopify Balance கணக்கிலிருந்து அவர்களுக்குப் பணத்தை அனுப்பலாம். நீங்கள் பணத்தை அனுப்புவதற்கு முன் உங்களிடம் மீதமுள்ள தினசரி வரம்பைச் சரிபார்க்க, Shopify Balance மொபைல் செயலியில் அமைப்புகள் > பரிமாற்ற வரம்புகள் என்பதற்குச் செல்லவும்.
நீங்கள் பரிமாற்றத்தைச் செய்த பிறகு, பரிமாற்றம் தொடங்கப்பட்டது என்று காண்பிக்கப்படும். மதிப்பிடப்பட்ட டெலிவரி நேரம் 1–3 வேலை நாட்களாகும். உங்களது பரிவர்த்தனை வரலாற்றில் இந்தப் பரிமாற்றம் சர்வதேசப் பரிமாற்றம் எனக் காண்பிக்கப்படும், மேலும் அதற்கான கட்டணங்கள் சர்வதேசப் பரிமாற்றக் கட்டணம் என ஒரு தனிப் பரிவர்த்தனையாகக் காண்பிக்கப்படும். உங்கள் Shopify Balance கணக்கிலுள்ள பரிவர்த்தனைகளைக் கண்டறிவது குறித்து மேலும் அறிக.
படிகள்:
- Shopify Balance மொபைல் செயலியில் இருந்து,
ஐகானைத் தட்டவும்.
ஐகானைத் தட்டி, பின்னர் அனுப்பு என்பதைத் தட்டவும்.
- கணக்கைத் தேர்ந்தெடு என்பதைத் தட்டி, எந்த Shopify Balance கணக்கிலிருந்து பணத்தை அனுப்ப வேண்டுமோ அதைத் தேர்ந்தெடுக்கவும்.
- பெறுநரைத் தேர்ந்தெடு என்பதைத் தட்டி, நீங்கள் பணம் அனுப்ப விரும்பும் சர்வதேசப் பெறுநரைத் தேர்ந்தெடுக்கவும்.
- நீங்கள் அனுப்ப விரும்பும் தொகையை உள்ளிடவும். நீங்கள் இந்தத் தொகையை உங்கள் நாணயத்திலோ அல்லது உங்கள் பெறுநரின் நாணயத்திலோ உள்ளிடலாம்.
- சரிபார் என்பதைத் தட்டவும்.
- விருப்பத்தேர்வு: விளக்கத்தைச் சேர் என்பதைத் தட்டி, ஒரு விளக்கத்தை உள்ளிட்டு, பின்னர் சேமி என்பதைத் தட்டவும்.
- நாணய மாற்று விகிதம், கட்டணங்கள் மற்றும் உங்கள் பெறுநர் பெறும் தொகை ஆகியவற்றைச் சரிபார்த்து, பின்னர் அனுப்பு என்பதைத் தட்டவும்.
ஆதரிக்கப்படும் நாடுகள், நாணயங்கள், விநியோக முறைகள் மற்றும் கட்டணங்கள்
பின்வரும் நாடுகளில் எதிலும் உள்ள பெறுநரின் வங்கிக் கணக்கிற்கு நீங்கள் பணத்தை அனுப்பலாம். ஒவ்வொரு பரிமாற்றத்திற்குமான கட்டணங்கள் உங்கள் பெறுநரின் நாட்டைப் பொறுத்தது. ஒவ்வொரு நாடும் ஒரு விநியோக முறையைக் கொண்டிருக்கும், இதுவே நிதியைப் பெற உங்கள் பெறுநரின் வங்கி பயன்படுத்தும் பேமெண்ட் வலையமைப்பாகும். இந்த வலையமைப்புகளில் சிங்கிள் யூரோ பேமெண்ட்ஸ் ஏரியா (SEPA) மற்றும் Society for Worldwide Interbank Financial Telecommunication (SWIFT) ஆகியவை அடங்கும். உங்கள் பெறுநருக்கான நாட்டைத் தேர்ந்தெடுக்கும்போது விநியோக முறை காட்டப்படும்.
| நாடு | நாணயம் | விநியோக முறை | சர்வதேசப் பரிமாற்றக் கட்டணம் | நாணய மாற்றுக் கட்டணம் |
|---|---|---|---|---|
| ஆஸ்திரேலியா | AUD | வங்கிப் பரிமாற்றம் (BECS) | $0.10 USD | 0.75% |
| கனடா | CAD | வங்கிப் பரிமாற்றம் (EFT) | $0.10 USD | 0.75% |
| சீனா | CNY | SWIFT பரிமாற்றம் | $0.10 USD | 0.75% |
| பிரான்ஸ் | EUR | வங்கிப் பரிமாற்றம் (SEPA) | $0.10 USD | 0.75% |
| ஜெர்மனி | EUR | வங்கிப் பரிமாற்றம் (SEPA) | $0.10 USD | 0.75% |
| ஹாங்காங் | HKD | SWIFT பரிமாற்றம் | $0.50 USD | 0.75% |
| இத்தாலி | EUR | வங்கிப் பரிமாற்றம் (SEPA) | $0.10 USD | 0.75% |
| மெக்சிகோ | MXN | வங்கிப் பரிமாற்றம் (SPEI) | $0.50 USD | 0.75% |
| நெதர்லாந்து | EUR | வங்கிப் பரிமாற்றம் (SEPA) | $0.10 USD | 0.75% |
| நியூசிலாந்து | NZD | வங்கிப் பரிமாற்றம் (Direct Entry) | $0.10 USD | 0.75% |
| போர்ச்சுகல் | EUR | வங்கிப் பரிமாற்றம் (SEPA) | $0.10 USD | 0.75% |
| ஸ்பெயின் | EUR | வங்கிப் பரிமாற்றம் (SEPA) | $0.10 USD | 0.75% |
| யுனைடெட் கிங்டம் | GBP | வங்கிப் பரிமாற்றம் (Faster Payments) | $0.10 USD | 0.75% |