Shopify Balance வருவாய் விகிதத்தைப் புரிந்துகொள்ளுதல்

Shopify Balance மூலம், உங்கள் கணக்கில் உள்ள நிதியின் அடிப்படையில் வெகுமதிகளைப் பெறலாம்.

தகுதி

திறக்கப்பட்டுள்ள மற்றும் நல்ல நிலையில் உள்ள அனைத்து Shopify Balance கணக்குகளும் வருவாய் விகித ஊக்கத்தொகையைப் பெறத் தகுதியுடையவை. மேலும் தகவலுக்கு, Shopify Balance சேவை விதிமுறைகள் மற்றும் Shopify வருவாய் விகித வெகுமதி சேவை விதிமுறைகள் ஆகியவற்றைப் பார்க்கவும்.

உங்கள் ஸ்டோர் Shopify Plus திட்டத்தில் இருந்தால், நீங்கள் அதிக வருவாய் விகிதத்திற்குத் தகுதிபெறலாம். https://www.shopify.com/balance இல் அல்லது உங்கள் Shopify நிர்வாகி வழியாகச் சமீபத்திய வெகுமதி விகிதத்தைக் கண்டறியலாம்.

வருவாய் விகிதம்

உங்கள் Shopify Balance கணக்கிற்கான வருவாய் விகிதம் தினசரி கணக்கிடப்படுகிறது. ஒவ்வொரு நாளின் கணக்கீடும் உங்கள் கணக்கின் இறுதி இருப்பு மற்றும் அந்த நாளின் முடிவில் உங்கள் Shopify திட்டத்திற்குப் பொருந்தக்கூடிய வெகுமதி விகிதம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. Shopify Balance வருவாய் விகித ஊக்கத்தொகைகள் மாதாந்திர அடிப்படையில் உங்கள் Shopify Balance கணக்கிற்குச் செலுத்தப்படும். விகிதம் மாறுபடக்கூடியது, மேலும் இது முன்னறிவிப்பின்றி மாறலாம்.

உங்கள் அனைத்து Shopify Balance கணக்குகளிலும் வருவாய் விகிதம் சேர்கிறது. உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகள் இருந்தால், வருவாய் விகிதமானது முதன்மைக் கணக்கில் மட்டுமல்லாமல், ஒவ்வொரு கணக்கிலும் தனித்தனியாகச் சேர்க்கப்பட்டுச் செலுத்தப்படும்.

வருவாய் விகிதப் பேமெண்ட்டுகள்

வருவாய் விகிதப் பேமெண்ட்டுகள் அடுத்த மாதத்தின் 5-ஆம் தேதியன்று உங்கள் Shopify Balance கணக்கில் சேர்க்கப்படும். 5-ஆம் தேதி வார இறுதி நாள் அல்லது விடுமுறை நாளாக இருந்தால், வருவாய் விகிதப் பேமெண்ட் அடுத்த வணிக நாளில் சேர்க்கப்படும். வருவாய் விகிதம் முழுமையான சென்ட்களில் மட்டுமே செலுத்தப்படும், இதற்கான குறைந்தபட்சம் $0.01 USD ஆகும்.

உங்கள் Shopify Balance கணக்கில் டெபாசிட் வரவுவைக்கப்படும்போது, அதைத் திரும்பப் பெறாத வரையில் வருவாய் விகிதமானது மாதாந்திர அடிப்படையில் கூட்டு வட்டியாகக் கணக்கிடப்படும். பேஅவுட் தேதியை Shopify அதன் விருப்பத்தின்படி மாற்றலாம்.

தற்போதைய வருவாய் விகிதத்தைக் கண்டறிதல்

https://www.shopify.com/balance இல் அல்லது உங்கள் Shopify நிர்வாகி வழியாகச் சமீபத்திய வருவாய் விகிதத்தைக் கண்டறியலாம்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, நிதி > Balance என்பதற்குச் செல்லவும்.

  2. தற்போதைய வருவாய் விகிதம் பணப்பாய்வு நுண்ணறிவுகள் கார்டில் பட்டியலிடப்பட்டுள்ளது.

வருவாய் விகிதக் கணக்கீட்டு உதாரணங்கள்

வருவாய் விகிதங்கள் எப்படிக் கணக்கிடப்படுகின்றன என்பதையும் வெவ்வேறு சூழல்கள் அவற்றை எவ்வாறு பாதிக்கலாம் என்பதையும் புரிந்துகொள்ளப் பின்வரும் உதாரணங்களை மதிப்பாய்வு செய்யவும். குறிப்பிட்ட காலங்களில் எந்த டெபாசிட்களும் அல்லது திரும்பப் பெறுதல்களும் இல்லை என்பதை இந்தக் கணக்கீடுகள் அனுமானிக்கின்றன. திரும்பப் பெறப்படாவிட்டால், வருவாய் விகிதமானது மாதாந்திர அடிப்படையில் கூட்டு வட்டியாகக் கணக்கிடப்படும், மேலும் மொத்தத் தொகையானது அந்தக் காலகட்டங்களில் உள்ள அனைத்து வருவாய்களையும் உள்ளடக்கியிருக்கும்.

வருவாய் விகிதம் என்பது ஆண்டு விகிதமாகும், ஒவ்வொரு நாளும் அந்த விகிதத்தின் ஒரு சிறு பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இந்தப் பகுதியானது தினசரி வெகுமதி விகிதம் எனக் குறிப்பிடப்படுகிறது.

வெவ்வேறு சூழல்கள், தொடர்புடைய வருவாய் விகிதங்கள், வெகுமதிகளின் கணக்கீடுகள், தொகைகள் மற்றும் மொத்த இருப்புகளை விளக்கும் சூழல்களின் உதாரணங்கள்
சூழல்வருவாய் வெகுமதிகள் விகிதம்வெகுமதிக் கணக்கீடு (மாதத்தில் உள்ள நாட்கள் x தினசரி இறுதி இருப்பு x விகிதாசார APY விகிதம்)வெகுமதித் தொகைமொத்த இருப்பு
$10,000 USD டெபாசிட்டுடன் ஜூன் 1 அன்று புதிய கணக்கு திறக்கப்பட்டது5%30 நாட்கள் x $10,000.00 USD x 0.000134$40.20 USD$10,040.20 USD
வருவாய் வெகுமதி விகிதம் ஜூலை 5 அன்று 5.5% ஆக அதிகரிக்கிறது5.5%(4 நாட்கள் x $10,000.00 USD x 0.000134) + (27 நாட்கள் x $10,040.20 USD x 0.000147)$45.21 USD$10,085.41 USD
ஆகஸ்ட் 1 அன்று புதியதாக $20,000 USD டெபாசிட்5.5%(4 நாட்கள் x $30,040.20 USD x 0.000147) + (27 நாட்கள் x $30,085.41 USD x 0.000147)$137.07 USD$30,085.41 USD

ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை, Shopify Balance கணக்கில் $222.48 USD வருவாய் கிடைத்துள்ளது.

Form 1099-MISC மூலம் வரி அறிக்கை செய்தல்

உங்கள் Shopify Balance கணக்கில் உள்ள நிதியில் வருவாயைப் பெற்றால், Shopify நிறுவனம் உங்களுக்கு Form 1099-MISC ஆவணத்தை வழங்கக்கூடும்.

Form 1099-MISC என்பது ஒரு வரி ஆண்டில் Form 1099-K ஆவணத்தால் பதிவு செய்யப்படாத Shopify Balance வருவாய் விகித ஊக்கத்தொகைகள் போன்ற ஆதாரங்களில் இருந்து $600 USD அல்லது அதற்கு மேல் வருமானம் பெறும் அமெரிக்கக் குடிமக்கள் அல்லது வரி செலுத்துவோருக்கு வழங்கப்படும் ஒரு வரி ஆவணமாகும். Form 1099-K குறித்து மேலும் அறிக.

உங்கள் வருமான வரிகளைத் தாக்கல் செய்யும்போது இந்த மதிப்புகளை நீங்கள் தெரிவிக்க வேண்டியிருக்கலாம். Form 1099-MISC ஆவணமானது Shopify Payments மூலம் உருவாக்கப்பட்டு, உங்களுக்கும் உள்நாட்டு வருவாய்ச் சேவைக்கும் (Internal Revenue Service - IRS) ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

Form 1099-MISC ஆவணத்தைப் பெறுவதற்கான நிபந்தனைகளை நீங்கள் பூர்த்திசெய்தால், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 31 முதல் உங்கள் Shopify நிர்வாகி, Shopify செயலி அல்லது Shopify Balance மொபைல் செயலி ஆகியவற்றிலிருந்து படிவத்தைப் பதிவிறக்கலாம்.

படிகள்:

டெஸ்க்டாப்
  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, நிதி என்பதற்குச் செல்லவும்.

  2. ஆவணங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. 1099-MISC என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

  4. நீங்கள் பதிவிறக்க விரும்பும் 1099-MISC படிவத்தைக் கிளிக் செய்யவும்.

Shopify செயலி
  1. Shopify செயலியில் இருந்து, Menu ஐகானைத் தட்டவும்.

  2. நிதி என்பதைத் தட்டவும்.

  3. நிதி பிரிவில், Horizontal menu என்பதைத் தட்டவும்.

  4. ஆவணங்கள் மெனுவில், 1099-MISC என்பதைத் தட்டவும்.

  5. 1099-MISC படிவங்கள் பிரிவில், நீங்கள் பதிவிறக்க விரும்பும் வரிப் படிவத்தைத் தட்டவும்.

Shopify Balance மொபைல் செயலி
  1. Shopify Balance மொபைல் செயலியிலிருந்து, Wallet ஐகானைத் தட்டவும்.
  2. Horizontal menu என்பதைத் தட்டி, பின்னர் 1099-MISC என்பதைத் தட்டவும்.
  3. 1099-MISC படிவங்கள் திரையில், நீங்கள் பதிவிறக்க விரும்பும் வரிப் படிவத்தைத் தட்டவும்.
  4. பகிர் ஐகானைத் தட்டி, பின்னர் படிவத்தை எங்கு சேமிக்க அல்லது அனுப்ப வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

உங்கள் வரித் தகவல் சரியாகவும் புதுப்பித்த நிலையிலும் இருப்பதை உறுதிசெய்ய அல்லது நீங்கள் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்திருந்தும் Form 1099-MISCஐப் பார்க்க முடியாவிட்டால், Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.

நீங்கள் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்திருந்தும் மேற்கண்ட படிகளைப் பயன்படுத்தி 1099-MISC படிவத்தைக் கண்டறிய முடியாவிட்டால், நீங்கள் Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளலாம்.

வருவாய் விகித ஊக்கத்தொகைகளைப் பெறுவதிலிருந்து விலகுதல்

Shopify Balance மூலம் வருவாய் விகித ஊக்கத்தொகைகளைப் பெறுவதிலிருந்து விலகுவதற்கான விருப்பத்தேர்வு இல்லை. தனிப்பட்ட அல்லது மதக் காரணங்களுக்காக நீங்கள் வருவாய் விகித ஊக்கத்தொகைகளை ஏற்க விரும்பவில்லை எனில், நீங்கள் உங்கள் Shopify Balance கணக்கை மூட வேண்டும்.