Shopify Bill Pay மூலம் பில்களைச் சேர்த்தல்
உள்நாட்டு மற்றும் சர்வதேசப் பில் பேமெண்ட்களை எளிதாக்குவதன் மூலம் நிதிப் பரிவர்த்தனைகளை Shopify Bill Pay ஆதரிக்கிறது. மேனுவலாக, மின்னஞ்சல் மூலமாக அல்லது QuickBooks Online, Gmail போன்ற செயலிகளுடன் ஒத்திசைப்பதன் மூலம் எப்படிப் பில்களைச் சேர்ப்பது என்பதை இந்தக் கட்டுரையில் நீங்கள் அறிந்துகொள்ளலாம்.
ஒரு விற்பனையாளருக்கான பேமெண்டை நீங்கள் முதல்முறை அமைக்கும்போது, விற்பனையாளர் விவரங்களையும் விருப்பமான பேமெண்ட் முறையையும் சேர்ப்பீர்கள். அடுத்த முறை அந்த விற்பனையாளரின் பில்லுக்குச் செலுத்தும்போது, செயல்முறையை விரைவாக்க அவர்களின் தகவலும் உங்களின் பேமெண்ட் விருப்பத்தேர்வுகளும் சேமிக்கப்பட்டிருக்கும்.
இந்தப் பக்கத்தில்
- பில் தேவைகள் மற்றும் கவனத்தில் கொள்ள வேண்டியவற்றைப் புரிந்துகொள்ளுதல்
- Shopify Bill Pay-க்கு பில்களைச் சேர்த்தல்
- உங்கள் Shopify Bill Pay கணக்கில் மேனுவலாக ஒரு பில்லைச் சேர்த்தல்
- உங்கள் Shopify Bill Pay மின்னஞ்சலைப் பயன்படுத்திப் பில்களைச் சேர்த்தல்
- Gmail மூலம் பில்களை இறக்குமதி செய்தல்
- Stocky மூலம் பில்களைச் சேர்த்தல்
பில் தேவைகள் மற்றும் கவனத்தில் கொள்ள வேண்டியவற்றைப் புரிந்துகொள்ளுதல்
குறிப்பிட்ட வழிகாட்டுதல்களுடன் அமெரிக்காவிற்குள்ளும் சர்வதேச அளவிலும் பேமெண்ட்களைச் செலுத்துவதை Shopify Bill Pay ஆதரிக்கிறது:
- நாணயம்: அனைத்துப் பில் பேமெண்ட்களும் USD நாணயத்தில் செய்யப்பட வேண்டும்.
- உள்நாட்டுப் பேமெண்ட்கள்: Puerto Rico-விற்குள் நடக்கும் பரிவர்த்தனைகளை உள்ளடக்கியது (Puerto Rico-விற்கு அனுப்பப்படும், அங்கிருந்து வரும் அல்லது அதற்குள்ளான பில்கள்).
- கட்டுப்பாடுகள்: Texas அல்லது Vermont-ஐத் தளமாகக் கொண்ட பிசினஸ்கள் சர்வதேசப் பில் பேமெண்ட்களைச் செய்ய முடியாது. மேலும், சில நாடுகளுக்குப் பேமெண்ட்களைச் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது. சர்வதேசப் பேமெண்ட்களுக்காகத் திறக்கப்பட்டுள்ள நாடுகளின் முழுப் பட்டியலைச் சரிபார்க்கவும்.
- கிரெடிட் கார்டுகள்: உங்கள் விற்பனையாளரின் துறை அடிப்படையில் பேமெண்ட்களை American Express கட்டுப்படுத்தக்கூடும். American Express-ஆல் அனுமதிக்கப்படும் துறைகள் எவை என்பதைச் சரிபார்க்கவும்.
விரைவான பேமெண்ட்களுக்கான உதவிக்குறிப்புகள்
உங்கள் பில்களை விரைவாகச் செலுத்த, பின்வரும் உதவிக்குறிப்புகளைச் சரிபார்க்கவும்:
- பேமெண்ட்டைத் தொடங்குவதற்கு முன், உங்களின் வங்கிக் கணக்கு இணைக்கப்பட்டுச் சரிபார்க்கப்பட்டுள்ளதை உறுதிசெய்யவும். பில் பேமெண்ட் செயல்முறையின்போது வங்கிக் கணக்கைச் சேர்ப்பது சாத்தியமாகும், ஆனால் அது தாமதங்களை ஏற்படுத்தக்கூடும்.
- பெரிய பேமெண்ட்களுக்கு, சரிபார்ப்பை விரைவுபடுத்த பில் பேமெண்ட் செயல்முறையின்போது பில்லின் படத்தை நீங்கள் வழங்க வேண்டியிருக்கலாம்.
Shopify Bill Pay-க்கு பில்களைச் சேர்த்தல்
உங்களின் Shopify Bill Pay கணக்கில் பில்களைச் சேர்க்க உங்களுக்குப் பல வழிகள் உள்ளன:
- Shopify நிர்வாகி மூலம் மேனுவலாக
- Bill Pay மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தி
- QuickBooks Online கணக்கை ஒத்திசைப்பதன் மூலம்
- உங்கள் Gmail கணக்கில் இருந்து பில்களை இறக்குமதி செய்வதன் மூலம்
- Stocky செயலியிலிருந்து பில்களைச் சேர்ப்பதன் மூலம்
உங்கள் Shopify Bill Pay கணக்கில் மேனுவலாக ஒரு பில்லைச் சேர்த்தல்
உங்கள் Shopify Bill Pay கணக்கில் ஒரு பில்லை மேனுவலாகச் சேர்த்து, பின்னர் அதை நீங்கள் செலுத்தலாம். மேனுவலாக ஒரு பில்லைச் சேர்த்து, ஒரே படியில் செலுத்த விரும்பினால், உள்நாட்டுப் பில்லைச் செலுத்துதல் அல்லது சர்வதேசப் பில்லைச் செலுத்துதல் என்பதைப் பார்க்கவும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, நிதி > Bill Pay என்பதற்குச் செல்லவும்.
பில்லைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
பேமெண்ட் விவரங்களைச் சேர்க்கவும்:
- பில் கோப்பைப் பதிவேற்ற, கோப்பைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும். கோப்பு PDF அல்லது JPG வடிவில் இருக்க வேண்டும்.
- பில்லின் விவரங்களை மேனுவலாக உள்ளிட, விவரங்களை மேனுவலாகச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
சேமி, பிறகு செலுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் Shopify Bill Pay மின்னஞ்சலைப் பயன்படுத்திப் பில்களைச் சேர்த்தல்
உங்களின் Shopify Bill Pay கணக்கில் தனித்துவமான மின்னஞ்சல் முகவரி உள்ளது, அதற்கு நீங்களோ அல்லது உங்கள் விற்பனையாளர்களோ பில்களை அனுப்பலாம். Shopify Bill Pay கணக்கில் பில்கள் ஏதும் இல்லை என்றால், தனித்துவமான உங்களின் Shopify Bill Pay மின்னஞ்சலானது Shopify Bill Pay முகப்புப் பக்கத்தில் காட்டப்படும். பில்கள் இருந்தால், முகப்புப் பக்கத்தில் உள்ள பில் பகுதிக்கு மேலே மின்னஞ்சல் முகவரி காட்டப்படும்.
நீங்களோ அல்லது உங்களின் விற்பனையாளரோ இந்த முகவரிக்குப் பில்லை இணைத்து அனுப்பும்போது, பில்லின் முழுமையான அல்லது குறிப்பிட்ட சில தகவல்கள் நிரப்பப்பட்டு உங்களின் Shopify நிர்வாகியில் உள்ள உங்களின் Shopify Bill Pay கணக்கில் அந்தப் பில் காட்டப்படும். இணைக்கப்படும் பில்லானது PNG, JPG, PDF அல்லது GIF கோப்பாக இருக்க வேண்டும் மற்றும் அதிகபட்சமாக 10 MB அளவுள்ளதாய் இருக்கலாம்.
நீங்கள் செலுத்த வேண்டிய பில்களை உங்கள் Shopify Bill Pay கணக்கில் நிரப்புவதற்கு, மின்னஞ்சல் மூலம் பில்களைச் சேர்ப்பது விரைவான வழியாக இருக்கலாம். பின்வரும் சில முறைகளைப் பயன்படுத்துவதைக் கருத்தில் கொள்ளவும்:
- உங்கள் விற்பனையாளர்கள் பில்களை நேரடியாக அனுப்ப ஏதுவாக, உங்களின் Shopify Bill Pay மின்னஞ்சல் முகவரியை அவர்களுக்குத் தெரியப்படுத்துதல்
- இணைக்கப்பட்ட பில்களைக் கொண்ட மின்னஞ்சல்களை உங்கள் Shopify Bill Pay மின்னஞ்சல் முகவரிக்கு ஃபார்வர்டு செய்தல்
- உங்களின் பில்லைத் திரைப்பிடிப்பு அல்லது படமாக எடுத்து, அதை நீங்கள் உங்களின் Shopify Bill Pay மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பும் மின்னஞ்சலில் இணைத்தல்
QuickBooks Online-இல் இருந்து பில்களை ஒத்திசைத்தல்
உங்கள் QuickBooks கணக்கிலிருந்து பில்கள் தானாகவே உங்களின் Shopify Bill Pay கணக்கில் சேர்க்கப்படும்படி உங்கள் QuickBooks Online கணக்கை இணைக்கலாம். QuickBooks உடன் ஒத்திசைப்பது உங்களின் விற்பனையாளர் பட்டியலையும் ஒத்திசைக்கும், மேலும் செலுத்தப்படாத பில் உள்ள ஒவ்வொரு விற்பனையாளருக்கும் உங்களின் Shopify Bill Pay-இல் விற்பனையாளர் சுயவிவரம் உருவாக்கப்படும்.
உங்கள் கணக்கை இணைத்த பிறகு, சில நிமிடங்களில், கடந்த 60 நாட்களின் பில்கள் ஒத்திசைக்கப்படும். அதன்பிறகு, ஏதேனும் புதிய பில்களைக் கொண்டுவர ஒவ்வொரு 2 மணிநேரத்திற்கும் ஒருமுறை ஒத்திசைவு நடைபெறும்.
Gmail மூலம் பில்களை இறக்குமதி செய்தல்
உங்கள் Google மின்னஞ்சல் இன்பாக்ஸிலிருந்து பில்கள் தானாகவே உங்களின் Shopify Bill Pay கணக்கில் சேர்க்கப்படும்படி உங்கள் Gmail கணக்கை இணைக்கலாம்.
இணைக்கப்பட்ட பிறகு, கோப்பு இணைப்புகளுடன் விற்பனையாளர்கள் அனுப்பும் விலைப்பட்டியல்களுக்காக, Shopify Bill Pay உங்களின் Gmail இன்பாக்ஸைத் தொடர்ந்து ஸ்கேன் செய்யும். உங்கள் இன்பாக்ஸில் உள்ள பிற உருப்படிகளை Shopify Bill Pay இறக்குமதி செய்யாது அல்லது அணுகாது.
Stocky மூலம் பில்களைச் சேர்த்தல்
உங்கள் ஸ்டோரின் சரக்கு இருப்பை நிர்வகிக்க Stocky செயலியைப் பயன்படுத்தினால், Stocky-இல் இருக்கும் உங்களின் ஓப்பன் கொள்முதல் ஆர்டர்களை Shopify Bill Pay-இல் பில்களாக மாற்ற Stocky-ஐ Shopify Bill Pay உடன் இணைக்கலாம்.
Stocky மூலம் பில்களைச் சேர்ப்பதற்கு முன்பு, உங்களின் Stocky API அணுகல் திறவுகோலைப் பயன்படுத்தி Stocky-ஐ Shopify Bill Pay உடன் இணைத்துள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்தவும்.
Stocky கொள்முதல் ஆர்டர்களிலிருந்து பில்களை உருவாக்கும்போது, பின்வரும் தகவல்கள் அந்தப் பில்களில் ஒத்திசைக்கப்படும்:
- மொத்த $ தொகை
- விற்பனையாளர் பெயர்
- நிலுவைத் தேதி
- PO எண்
Stocky மூலம் சேர்க்கப்படும் பில்கள் உங்கள் Bill Pay இன்பாக்ஸில் செலுத்தப்படாதவை என்று காண்பிக்கப்படும், மேலும் அவற்றின் மூல இடமாக Stocky குறிப்பிடப்பட்டிருக்கும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, நிதி > Bill Pay என்பதற்குச் செல்லவும்.
Stocky-இலிருந்து பில்களை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
பில்களாக மாற்ற விரும்பும் கொள்முதல் ஆர்டர்களைத் தேர்ந்தெடுத்து, பில்களை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.