Shopify Bill Pay மூலம் கட்டண மற்றும் விநியோக முறைகளை நிர்வகித்தல்

Shopify Bill Pay இல், பல்வேறு கட்டண முறைகளில் இருந்து நீங்கள் தேர்வுசெய்யலாம் மற்றும் உங்கள் விற்பனையாளர்கள் எவ்வாறு பேமெண்ட்டுகளைப் பெறுகிறார்கள் என்பதைத் தீர்மானிக்கலாம். இந்தப் பக்கத்தில், உங்கள் பில்களை நிர்வகிப்பதற்காக அமைவு முழுவதும் செல்ல உங்களுக்கு உதவும் வகையில் கிடைக்கும் ஒவ்வொரு கட்டண மற்றும் விநியோக முறைக்கான விவரங்களையும் கண்டறியலாம்.

கிடைக்கக்கூடிய கட்டண முறைகள்

Shopify Bill Pay மூலம் உங்கள் பில்களைச் செலுத்துவதற்குப் பின்வரும் விருப்பத்தேர்வுகளை நீங்கள் பயன்படுத்தலாம். கட்டணங்கள் நெடுவரிசையில், * என்பது கட்டண முறைக்கான கட்டணத்தை மட்டுமே குறிக்கும். விநியோக முறைக்கு இன்னமும் கட்டணங்கள் இருக்கலாம். கட்டணங்களின் விரிவான பட்டியலுக்கு, முழுப் பேமெண்ட் கட்டணங்கள் பகுதியைப் பார்க்கவும்.

தொடர்புடைய கட்டணங்கள் மற்றும் வரம்புகள் உட்பட, Shopify Bill Pay க்குக் கிடைக்கும் கட்டண முறைகளின் மேலோட்டம்.
முறைகட்டணம்வரம்புகள்
Shopify Balanceஇலவசம்*Shopify Balance இன் தினசரி கார்டு செலவிற்கு உட்பட்டது
வங்கிப் பரிமாற்றம்$0.50 USD*உங்கள் வங்கியின் பரிவர்த்தனை வரம்புகளுக்கு உட்பட்டது
கிரெடிட் கார்டு2.9%*உங்கள் வங்கியின் பரிவர்த்தனை வரம்புகளுக்கு உட்பட்டது
டெபிட் கார்டு2.9%*உங்கள் வங்கியின் பரிவர்த்தனை வரம்புகளுக்கு உட்பட்டது

அறிக்கைகளில் பேமெண்ட்டுகள் எப்படிக் காண்பிக்கப்படும்

Shopify Bill Pay மூலம் செய்யப்படும் பேமெண்ட்டுகள் பொதுவாக உங்கள் வங்கி அல்லது கார்டு அறிக்கைகளில் melio என்ற வார்த்தை மற்றும் [Vendor Name] melio CCD போன்ற விற்பனையாளர் பெயர் மூலம் அடையாளங்காணப்படும். சரியான வடிவமைப்பு உங்கள் வங்கியைப் பொறுத்தது, எனவே விற்பனையாளர் பெயர் அல்லது melio அடையாளங்காட்டி எப்போதும் சேர்க்கப்படாமல் இருக்கலாம்.

விற்பனையாளர் பேமெண்ட் விநியோக முறைகள்

உங்கள் விற்பனையாளர்கள் எவ்வாறு பேமெண்ட்டுகளைப் பெறுகிறார்கள் என்பதை நீங்கள் தேர்வுசெய்யலாம், இது நீங்கள் பயன்படுத்தும் கட்டண முறையைப் பொறுத்து மாறுபடும்.

கிடைக்கக்கூடிய விற்பனையாளர் விநியோக முறைகள் மற்றும் அவற்றின் விவரக்குறிப்புகள்.
கட்டண முறைவிநியோக முறைவேகம்*விநியோகக் கட்டணம்வரம்புகள்
தானியங்கு தீர்வக (ACH) வங்கிப் பரிமாற்றம்வங்கிப் பரிமாற்றம் (ACH)
  • $1,00,000 USD க்கு கீழ்: 3 வணிக நாட்கள்
  • $1,00,000 USD அல்லது அதற்கும் மேல்: 4 வணிக நாட்கள்
$0.50 USD**உள்நாட்டு US மட்டுமே
விரைவான வங்கிப் பரிமாற்றம் (ACH)அதே வணிக நாள்1%**
காகிதக் காசோலை5-7 வணிக நாட்கள்$1.50 USD**உள்நாட்டு US மட்டுமே
வயர் பரிமாற்றம்
  • $1,00,000 USD க்கு கீழ்: 3 வணிக நாட்கள்
  • $1,00,000 USD அல்லது அதற்கும் மேல்: 4 வணிக நாட்கள்
$20 USD**சர்வதேச அளவில் மட்டும்
Shopify Balanceவங்கிப் பரிமாற்றம் (ACH)
  • $1,00,000 USD க்கு கீழ்: 3 வணிக நாட்கள்
  • $1,00,000 USD அல்லது அதற்கும் மேல்: 4 வணிக நாட்கள்
இலவசம்**உள்நாட்டு US மட்டுமே
விரைவான வங்கிப் பரிமாற்றம் (ACH)அதே வணிக நாள்1%**
காகிதக் காசோலை5-7 வணிக நாட்கள்$1.50 USD**உள்நாட்டு US மட்டுமே
வயர் பரிமாற்றம்
  • $1,00,000 USD க்கு கீழ்: 3 வணிக நாட்கள்
  • $1,00,000 USD அல்லது அதற்கும் மேல்: 4 வணிக நாட்கள்
$20 USD**சர்வதேச அளவில் மட்டும்
கிரெடிட் கார்டுவங்கிப் பரிமாற்றம் (ACH)
  • பெரும்பாலான கிரெடிட் கார்டுகள்: மதியம் 2 மணி ET-க்குள் திட்டமிடப்பட்டால் அதே வணிக நாளிலும், மதியம் 2 மணி ET-க்குப் பிறகு திட்டமிடப்பட்டால் அடுத்த வணிக நாளிலும் நடைபெறும்
  • American Express கிரெடிட் கார்டுகள்: 2 வணிக நாட்கள்
இலவசம்**உள்நாட்டு US மட்டுமே
காகிதக் காசோலை5-7 வணிக நாட்கள்இலவசம்**உள்நாட்டு US மட்டுமே
வயர் பரிமாற்றம் (Mastercard மட்டும்)
  • $1,00,000 USD க்கு கீழ்: 3 வணிக நாட்கள்
  • $1,00,000 USD அல்லது அதற்கும் மேல்: 4 வணிக நாட்கள்
$20 USD**
  • சர்வதேச அளவில் மட்டும்
  • Mastercard மட்டுமே. பிற கார்டு நெட்வொர்க்குகளுக்குச் சர்வதேசப் பில் பேமெண்ட்டுகள் கிடைக்காது.
டெபிட் கார்டுவங்கிப் பரிமாற்றம் (ACH)மதியம் 2 மணி ET-க்குள் திட்டமிடப்பட்டால் அதே வணிக நாளிலும், மதியம் 2 மணி ET-க்குப் பிறகு திட்டமிடப்பட்டால் அடுத்த வணிக நாளிலும் நடைபெறும்இலவசம்**உள்நாட்டு US மட்டுமே
காகிதக் காசோலை5-7 வணிக நாட்கள்இலவசம்**உள்நாட்டு US மட்டுமே

* டெலிவரி வேகம் பேமெண்ட் செயலாக்கப்படும் நாளிலிருந்து கணக்கிடப்படும், பேமெண்ட் கழிக்கப்படும் நாளிலிருந்து அல்ல. ACH வங்கிப் பரிமாற்றம், காகிதக் காசோலை போன்ற நிலையான விநியோக முறைகளுக்கு தினமும் இரவு 9:00 மணி ET-க்குள் ஒரு முறை மட்டுமே பேமெண்ட்டுகள் செயலாக்கப்படும். அன்றாட ACH போன்ற சில விநியோக முறைகளுக்கு முன்னதாகவே கட்-ஆஃப் நேரங்கள் இருக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட விநியோக முறைக்கான கட்-ஆஃப் நேரத்திற்குப் பிறகு சமர்ப்பிக்கப்படும் பேமெண்ட்டுகள் அடுத்த வணிக நாளில் செயலாக்கப்படும். உதாரணமாக, ஒரு வணிக நாள் எடுத்துக்கொள்ளும் பேமெண்ட் திங்கட்கிழமை இரவு 10:30 மணி ET-க்குச் செலுத்தப்பட்டால் செவ்வாய் காலை வரை செயலாக்கப்படாது, அது செவ்வாய்க்கிழமையிலிருந்து ஒரு வணிக நாள் கழித்து, அதாவது புதன்கிழமைதான் விற்பனையாளர் கணக்கைச் சென்றடையும்.

** இது விநியோக முறைக்கான கட்டணத்தை மட்டுமே குறிக்கிறது, கட்டண முறைக்குக் கட்டணங்கள் இருக்கலாம். முழுமையான கட்டணப் பட்டியலுக்கு, முழு பேமெண்ட் கட்டணங்கள் பிரிவைப் பார்க்கவும்.

விற்பனையாளர் விநியோக முறைகளைச் சேர்ப்பது குறித்து மேலும் அறிக.

முழு பேமெண்ட் கட்டணங்களின் மேலோட்டம்

நீங்கள் வெளிநாட்டு நாணயத்தில் பேமெண்ட் செலுத்தும்போது, காண்பிக்கப்படும் பரிமாற்ற வீதத்தில் Wise வழங்கும் நடுத்தரச் சந்தை வீதம், Bill Pay கட்டணம் ஆகிய இரண்டுமே அடங்கியிருக்கும். வங்கிகளும் நிதி நிறுவனங்களும் பயன்படுத்தும் நிலையான பரிமாற்ற வீதமே நடுத்தரச் சந்தை வீதம். வெளிநாட்டு நாணய பேமெண்ட்டுகளை எளிதாக்குவதற்காக, Bill Pay கட்டணமானது தனிக் கட்டணமாகக் காட்டப்படுவதற்குப் பதிலாக, காட்டப்படும் பரிமாற்ற வீதத்திலேயே சேர்க்கப்படுகிறது.

Bill Pay இல் காட்டப்படும் மாற்று வீதம் 30 நிமிடங்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. இந்த நேரத்திற்குள் நீங்கள் பேமெண்ட்டை முடிக்காமல் மீண்டும் பில்லைச் செலுத்த முயன்றால், உங்களுக்கு வேறு வீதம் கிடைக்கலாம்.

Shopify மற்றும் எங்கள் சர்வதேச பேமெண்ட் கூட்டாளர்கள் அந்நியச் செலாவணி பரிமாற்றங்களில் பிளாட்ஃபார்ம் செலவாக ஒரு வரம்பை (margin) சேர்க்கக்கூடும். மொத்த விற்பனை (நடுத்தரச் சந்தை) பரிமாற்ற வீதத்திற்கும் உங்கள் பேமெண்ட் மாற்றத்திற்குப் பயன்படுத்தப்படும் உண்மையான வீதத்திற்கும் இடையிலான வித்தியாசத்தை இந்த வரம்பு குறிக்கிறது. சந்தை நகர்வுகள் காரணமாக பரிமாற்ற வீதங்கள் அடிக்கடி மாறக்கூடும்.

Melio வழங்கும் மாற்று வீதத்தில் மாற்று மற்றும் சேவைக் கட்டணங்கள் இரண்டும் அடங்கும். ஒவ்வொரு பேமெண்ட்டின் குறிப்பிட்ட அளவுருக்களைப் பொருத்து இந்தக் கட்டணங்கள் மாறக்கூடும். காண்பிக்கப்படும் வீதத்தை நடுத்தரச் சந்தை வீதத்துடன் (நாணயத்தை வாங்கும் மற்றும் விற்கும் விலைகளுக்கு இடைப்பட்ட புள்ளி) ஒப்பிட்டு மொத்தக் கட்டணங்களை நீங்கள் தீர்மானிக்கலாம். செயல்பாட்டுச் செலவுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சேவைகளை ஈடுசெய்யக் கட்டண வழங்குநர்கள் பொதுவாக நடுத்தரச் சந்தை வீதத்தை விட அதிக வீதங்களை வழங்குகிறார்கள்.

கட்டண முறை மற்றும் விநியோக முறையின் அடிப்படையில் பொருந்தக்கூடிய அனைத்துக் கட்டணங்களையும் புரிந்துகொள்ளப் பின்வரும் அட்டவணையை மதிப்பாய்வு செய்யவும்.

கட்டண மற்றும் விநியோக முறைகள் ஒவ்வொன்றுக்குமான சாத்தியமான பேமெண்ட் கட்டணங்களின் முழுப் பட்டியல்
கட்டண முறைபேமெண்ட் கட்டணம்விநியோக முறைவிநியோகக் கட்டணம்மொத்தக் கட்டணங்கள்
வங்கிப் பரிமாற்றம் (ACH)இலவசம்வங்கிப் பரிமாற்றம் (ACH): 3-4 வணிக நாட்கள்$0.50 USD
  • வணிகர்களுக்கு: $0.50 USD
விரைவான வங்கிப் பரிமாற்றம் (ACH): அதே வணிக நாள்1%1%
டெபிட் கார்டு மூலம் உடனடி பேமெண்ட் (விற்பனையாளரால் தேர்ந்தெடுக்கப்பட்டது)1% விற்பனையாளரால் செலுத்தப்படுகிறது
  • வணிகர்களுக்கு: இலவசம்
  • விற்பனையாளர்களுக்கு: 1%
காகிதக் காசோலை: 5-7 வணிக நாட்கள்$1.50 USD$1.50 USD
சர்வதேச வயர் பரிமாற்றம்: 3 வணிக நாட்கள்$20 USD$20 USD
Shopify Balanceஇலவசம்வங்கிப் பரிமாற்றம் (ACH): 3-4 வணிக நாட்கள்இலவசம்இலவசம்
விரைவான வங்கிப் பரிமாற்றம் (ACH): அதே வணிக நாள்1%1%
டெபிட் கார்டு மூலம் உடனடி பேமெண்ட் (விற்பனையாளரால் தேர்ந்தெடுக்கப்பட்டது)1% விற்பனையாளரால் செலுத்தப்படுகிறது
  • வணிகர்களுக்கு: இலவசம்
  • விற்பனையாளர்களுக்கு: 1%
காகிதக் காசோலை: 5-7 வணிக நாட்கள்$1.50 USD$1.50 USD
சர்வதேச வயர் பரிமாற்றம்: 3 வணிக நாட்கள்$20 USD$20 USD
கிரெடிட் கார்டு2.9%வங்கிப் பரிமாற்றம் (ACH): அடுத்த வணிக நாள்இலவசம்2.9%
டெபிட் கார்டு மூலம் உடனடி பேமெண்ட் (விற்பனையாளரால் தேர்ந்தெடுக்கப்பட்டது)1% விற்பனையாளரால் செலுத்தப்படுகிறது
  • வணிகர்களுக்கு: 2.9%
  • விற்பனையாளர்களுக்கு: 1%
காகிதக் காசோலை: 5-7 வணிக நாட்கள்இலவசம்2.9%
சர்வதேச வயர் பரிமாற்றம் (Mastercard மட்டும்): 3 வணிக நாட்கள்$20 USD2.9% + $20 USD
டெபிட் கார்டு2.9%வங்கிப் பரிமாற்றம் (ACH): அடுத்த வணிக நாள்இலவசம்2.9%
டெபிட் கார்டு மூலம் உடனடி பேமெண்ட் (விற்பனையாளரால் தேர்ந்தெடுக்கப்பட்டது)1% விற்பனையாளரால் செலுத்தப்படுகிறது
  • வணிகர்களுக்கு: 2.9%
  • விற்பனையாளர்களுக்கு: 1%
காகிதக் காசோலை: 5-7 வணிக நாட்கள்இலவசம்2.9%

சர்வதேசப் பரிமாற்ற வீதங்கள்

வெளிநாட்டு நாணயத்தில் நீங்கள் பில் செலுத்தும் போது, காட்டப்படும் பரிமாற்ற வீதத்தில் Wise வழங்கும் நடுத்தரச் சந்தை வீதம் மற்றும் Bill Pay கட்டணம் ஆகிய இரண்டுமே அடங்கியிருக்கும். வங்கிகளும் நிதி நிறுவனங்களும் பயன்படுத்தும் நிலையான பரிமாற்ற வீதமே நடுத்தரச் சந்தை வீதம். உங்களின் வெளிநாட்டு நாணய பேமெண்ட்டுகளை எளிதாக்குவதற்காக, Bill Pay கட்டணமானது தனிக் கட்டணமாகக் காட்டப்படுவதற்குப் பதிலாக, காட்டப்படும் பரிமாற்ற வீதத்திலேயே சேர்க்கப்படுகிறது.

நீங்கள் பில் செலுத்தும் போது, காண்பிக்கப்படும் மாற்று வீதம் 30 நிமிடங்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. இந்த நேரத்திற்குள் நீங்கள் பேமெண்ட்டை முடிக்காமல், மீண்டும் பில்லைச் செலுத்த முயன்றால், வேறு வீதம் பொருந்தக்கூடும்.

Shopify மற்றும் சர்வதேச பேமெண்ட் கூட்டாளர்கள் அந்நியச் செலாவணி பரிவர்த்தனைகளில் நீங்கள் செலுத்தும் பிளாட்ஃபார்ம் செலவாக ஒரு வரம்பை (margin) சேர்க்கக்கூடும். மொத்த விற்பனை (நடுத்தரச் சந்தை) பரிமாற்ற வீதத்திற்கும் உங்கள் பேமெண்ட் மாற்றத்திற்குப் பயன்படுத்தப்படும் உண்மையான வீதத்திற்கும் இடையிலான வித்தியாசத்தை இந்த வரம்பு குறிக்கிறது. சந்தை நகர்வுகள் காரணமாகப் பரிமாற்ற வீதங்கள் அடிக்கடி மாறக்கூடும்.

Melio வழங்கும் மாற்று வீதத்தில் மாற்று மற்றும் சேவைக் கட்டணங்கள் இரண்டும் அடங்கும். ஒவ்வொரு பேமெண்ட்டின் குறிப்பிட்ட அளவுருக்களைப் பொருத்து இந்தக் கட்டணங்கள் மாறக்கூடும். காண்பிக்கப்படும் வீதத்தை நடுத்தரச் சந்தை வீதத்துடன் (நாணயத்தை வாங்கும் மற்றும் விற்கும் விலைகளுக்கு இடைப்பட்ட புள்ளி) ஒப்பிட்டு உங்களிடம் வசூலிக்கப்படும் கட்டணத்தை நீங்கள் தீர்மானிக்கலாம். செயல்பாட்டுச் செலவுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சேவைகளை ஈடுசெய்யக் கட்டண வழங்குநர்கள் பொதுவாக நடுத்தரச் சந்தை வீதத்தை விட அதிக வீதங்களை வழங்குகிறார்கள்.

விற்பனையாளர்களுக்கு உங்கள் கட்டணத் தகவல் எவ்வாறு காட்டப்படும்

நீங்கள் Shopify Bill Pay ஐப் பயன்படுத்தத் தொடங்கும் போது, உங்களின் பேமெண்ட் செயல்முறையை மாற்றுவதை விற்பனையாளர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். உங்கள் விற்பனையாளர்கள் என்ன எதிர்பார்க்கலாம் என அவர்களுக்கு அறிவுறுத்த பின்வரும் விநியோக முறைகளின் விவரங்களை மதிப்பாய்வு செய்யவும்.

வங்கிப் பரிமாற்றங்கள்

உங்கள் விற்பனையாளரின் வங்கி அறிக்கைகளில், Shopify Bill Pay பேமெண்ட்டுகள் உங்கள் வணிகப் பெயர் மற்றும் "melio" ஆகியவற்றுடன் பட்டியலிடப்படும். உதாரணமாக "[உங்கள் வணிகப் பெயர்] melio CCD" என்பது போல் இருக்கும். உங்கள் வணிகப் பெயர் எப்போதும் பட்டியலிடப்படாது, ஆனால் "melio" எப்போதும் பட்டியலிடப்படும்.

காகிதக் காசோலைகள்

காகிதக் காசோலைகள் உங்கள் விற்பனையாளருக்கு முகவரியிடப்பட்டு உங்கள் வணிகப் பெயரையும் முகவரியையும் கொண்டிருக்கும். வங்கிக் கணக்கு எண்கள், Shopify Bill Pay இன் கூட்டாளரான Melio-வுடையது. எனவே உங்கள் சொந்த வங்கித் தகவல்கள் ஒருபோதும் விற்பனையாளருடன் பகிரப்படாது.

பேமெண்ட் தோல்வியடைவதைப் புரிந்துகொள்ளுதல்

கட்டண முறை அல்லது விநியோக முறை எனப் பல காரணங்களால் பேமெண்ட்டுகள் தோல்வியடையக்கூடும். பேமெண்ட் தோல்வியடையும் போது, சிக்கலைச் சிறப்பாகத் தீர்க்க அதற்கான காரணத்தைக் கண்டறிவது மிகவும் முக்கியமாகும்.

உங்கள் பேமெண்ட் வெற்றியடையவில்லை எனில், பின்வரும் காரணங்களையும் தீர்வுகளையும் மதிப்பாய்வு செய்யவும்.

பேமெண்ட் வெற்றியடையாமல் போகக்கூடிய காரணங்கள் மற்றும் அதற்கான தீர்வுகளின் பட்டியல்
கட்டண முறைரிட்டர்ன் குறியீடுசிக்கல்தீர்வு
வங்கிக் கணக்கு (ACH)
  • போதிய நிதி இல்லை — ACH ரிட்டர்ன் குறியீடு: R01
  • போதிய நிதி இல்லை — ACH ரிட்டர்ன் குறியீடு: R09
வங்கிக் கணக்கில் போதிய நிதி இல்லை
  1. பேமெண்ட்டை ரத்துசெய்யவும்.
  2. போதிய நிதியைக் கொண்டுள்ள கட்டண முறையைப் பயன்படுத்தி, பேமெண்ட்டை மீண்டும் திட்டமிடவும்.

உங்கள் Bill Pay கட்டண முறையில் போதுமான நிதி உள்ளது என நீங்கள் கருதினால், அதோடு தொடர்புடைய வங்கியைத் தொடர்புகொள்ளவும்.

உங்கள் கணக்கு முடக்கப்பட்டுள்ளது — ACH ரிட்டர்ன் குறியீடு: R16வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதுசிக்கலைத் தீர்க்க உங்கள் வங்கியைத் தொடர்புகொள்ளவும். உங்கள் வங்கியிலுள்ள சிக்கலைத் தீர்ப்பதற்கு முன் நீங்கள் பேமெண்ட்டைச் செய்ய வேண்டுமெனில், பேமெண்ட்டை ரத்துசெய்துவிட்டு, வேறொரு கட்டண முறையைப் பயன்படுத்தி பேமெண்ட்டை மீண்டும் திட்டமிடவும்.
கோரிக்கையின் பேரில் பேமெண்ட் நிறுத்தப்பட்டது — ACH ரிட்டர்ன் குறியீடு: R08இந்தப் பேமெண்ட்டை நிறுத்தும்படி நீங்கள் வங்கியிடம் கோரியுள்ளீர்கள்
  1. பேமெண்ட்டை ரத்துசெய்யவும்.
  2. பேமெண்ட்டை மீண்டும் திட்டமிடவும்.
அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனை — ACH ரிட்டர்ன் குறியீடு: R10வங்கிக் கணக்கில் அங்கீகரிக்கப்படாத செயல்பாடுசிக்கலைத் தீர்க்க உங்கள் வங்கியைத் தொடர்புகொள்ளவும். உங்கள் வங்கியிலுள்ள சிக்கலைத் தீர்ப்பதற்கு முன் நீங்கள் பேமெண்ட்டைச் செய்ய வேண்டுமெனில், பேமெண்ட்டை ரத்துசெய்துவிட்டு, வேறொரு கட்டண முறையைப் பயன்படுத்தி பேமெண்ட்டை மீண்டும் திட்டமிடவும்.
பேமெண்ட் முடக்கப்பட்டுள்ளது — ACH ரிட்டர்ன் குறியீடு: R29Shopify Bill Pay ஆல் உங்கள் கணக்கிலிருந்து நிதியைக் கழிக்க முடியவில்லைசிக்கலைத் தீர்க்க உங்கள் வங்கியைத் தொடர்புகொள்ளவும். உங்கள் வங்கியிலுள்ள சிக்கலைத் தீர்ப்பதற்கு முன் நீங்கள் பேமெண்ட்டைச் செய்ய வேண்டுமெனில், பேமெண்ட்டை ரத்துசெய்துவிட்டு, வேறொரு கட்டண முறையைப் பயன்படுத்தி பேமெண்ட்டை மீண்டும் திட்டமிடவும்.
இந்தப் பேமெண்ட் செயலாக்கப்படவில்லைஇணக்கச் சிக்கல் காரணமாகப் பேமெண்ட் நிராகரிக்கப்பட்டது, அத்துடன் அதற்கான தொகையை உங்கள் கணக்கிலிருந்து கழிக்க முடியாதுமேலும் விவரங்களுக்கு, உங்கள் மின்னஞ்சலைப் பார்க்கவும் அல்லது compliance@shopify-billpay.melio.com என்பதைத் தொடர்புகொள்ளவும்.
கட்டண முறையைத் தேர்ந்தெடுக்குமாறு விற்பனையாளரிடம் கேட்கப்பட்டதுமின்னஞ்சல் கோரிக்கைக்கு விற்பனையாளர் பதிலளிக்கவில்லைவிற்பனையாளர் உங்கள் பேமெண்ட்டை ஏற்கவில்லை அல்லது டெலிவரி விவரங்களை வழங்கவில்லை
  1. பேமெண்ட்டை ரத்துசெய்யவும்.
  2. டெலிவரி விவரங்களுக்கு விற்பனையாளரைத் தொடர்புகொள்ளவும்.
  3. பேமெண்ட்டை மீண்டும் திட்டமிடவும்.
கிரெடிட் கார்டுபேமெண்ட்டைச் செயலாக்க முடியவில்லை — ரிட்டர்ன் குறியீடு: 12இந்தப் பில்லுக்கான பேமெண்ட்டைச் செய்யப் பயன்படுத்திய கார்டில் சிக்கல் உள்ளது
  1. பேமெண்ட்டை ரத்துசெய்யவும்.
  2. உங்கள் கார்டு விவரங்களைப் புதுப்பித்துப் பேமெண்ட்டை மீண்டும் திட்டமிடவும் அல்லது வேறொரு கட்டண முறையைப் பயன்படுத்தி பேமெண்ட்டை மீண்டும் திட்டமிடவும்.
உங்கள் கார்டு முடக்கப்பட்டுள்ளது — ரிட்டர்ன் குறியீடு: 05கார்டு வரம்பு அல்லது மோசடி குறித்த கவலை காரணமாக கார்டு முடக்கப்பட்டிருக்கலாம்சிக்கலைத் தீர்க்க உங்கள் வங்கியைத் தொடர்புகொள்ளவும். உங்கள் வங்கியிலுள்ள சிக்கலைத் தீர்ப்பதற்கு முன் நீங்கள் பேமெண்ட்டைச் செய்ய வேண்டுமெனில், பேமெண்ட்டை ரத்துசெய்துவிட்டு, வேறொரு கட்டண முறையைப் பயன்படுத்தி பேமெண்ட்டை மீண்டும் திட்டமிடவும்.

போதிய நிதி இல்லை — ரிட்டர்ன் குறியீடு: 51

பேமெண்ட்டைச் செயலாக்க முடியவில்லை — ரிட்டர்ன் குறியீடு: 12

போதிய நிதி இல்லை — ரிட்டர்ன் குறியீடு: 183

இந்தப் பேமெண்ட்டைச் செயலாக்குவதைத் தடுக்கும் வரம்பு கார்டில் உள்ளது
  1. பேமெண்ட்டை ரத்துசெய்யவும்.
  2. போதிய நிதியைக் கொண்டுள்ள கட்டண முறையைப் பயன்படுத்தி, பேமெண்ட்டை மீண்டும் திட்டமிடவும்.

உங்கள் Bill Pay கட்டண முறையின் வரம்பு பேமெண்ட்டைப் பாதிக்காது என நீங்கள் கருதினால், அதோடு தொடர்புடைய வங்கியைத் தொடர்புகொள்ளவும்.

இந்தப் பேமெண்ட் செயலாக்கப்படவில்லைஇணக்கச் சிக்கல் காரணமாகப் பேமெண்ட் நிராகரிக்கப்பட்டது, அத்துடன் அதற்கான தொகையை உங்கள் கணக்கிலிருந்து கழிக்க முடியாதுமேலும் விவரங்களுக்கு, உங்கள் மின்னஞ்சலைப் பார்க்கவும் அல்லது compliance@shopify-billpay.melio.com என்பதைத் தொடர்புகொள்ளவும்.

வெற்றியடையாத டெலிவரிக்கான காரணங்களைப் புரிந்துகொள்ளுதல்

டெலிவரி வெற்றியடையாமல் போகக்கூடிய காரணங்களின் பட்டியல் மற்றும் தீர்வு
ரிட்டர்ன் குறியீடுசிக்கல்முடிவுஅடுத்த படிகள்
விற்பனையாளரின் கணக்கு மூடப்பட்டுள்ளது — ACH ரிட்டர்ன் குறியீடு: R02விற்பனையாளரின் கணக்கு மூடப்பட்டுள்ளது அல்லது அதனால் பேமெண்ட்டுகளைப் பெற முடியவில்லைஉங்கள் பேமெண்ட் ரீஃபண்ட் செய்யப்பட்டது
  1. பில்லை மீண்டும் சேர்க்கவும்.
  2. உங்கள் விற்பனையாளர் வழங்கிய புதுப்பிக்கப்பட்ட டெலிவரி விவரங்களைப் பயன்படுத்தி, பேமெண்ட்டை மீண்டும் திட்டமிடவும்.
விற்பனையாளரின் கணக்கைக் கண்டறிய முடியவில்லை — ACH ரிட்டர்ன் குறியீடு: R03விற்பனையாளரின் வங்கிக் கணக்கு எண் தவறானது அல்லது வங்கிப் பரிமாற்றங்களுக்குச் செல்லாததுஉங்கள் பேமெண்ட் ரீஃபண்ட் செய்யப்பட்டது
  1. பில்லை மீண்டும் சேர்க்கவும்.
  2. உங்கள் விற்பனையாளர் வழங்கிய புதுப்பிக்கப்பட்ட டெலிவரி விவரங்களைப் பயன்படுத்தி, பேமெண்ட்டை மீண்டும் திட்டமிடவும்.
விற்பனையாளரின் கணக்கு எண் செல்லாதது — ACH ரிட்டர்ன் குறியீடு: R04விற்பனையாளரின் வங்கிக் கணக்கு எண் தவறாக இருந்ததுஉங்கள் பேமெண்ட் ரீஃபண்ட் செய்யப்பட்டது
  1. பில்லை மீண்டும் சேர்க்கவும்.
  2. உங்கள் விற்பனையாளர் வழங்கிய புதுப்பிக்கப்பட்ட டெலிவரி விவரங்களைப் பயன்படுத்தி, பேமெண்ட்டை மீண்டும் திட்டமிடவும்.
பேமெண்ட்டை டெலிவரி செய்ய முடியவில்லை — ACH ரிட்டர்ன் குறியீடு: R05உங்கள் விற்பனையாளரின் வங்கிக் கணக்கு விவரங்களில் சிக்கல் உள்ளதுஉங்கள் பேமெண்ட் ரீஃபண்ட் செய்யப்பட்டது
  1. பில்லை மீண்டும் சேர்க்கவும்.
  2. உங்கள் விற்பனையாளர் வழங்கிய புதுப்பிக்கப்பட்ட டெலிவரி விவரங்களைப் பயன்படுத்தி, பேமெண்ட்டை மீண்டும் திட்டமிடவும்.
செல்லாத ACH ரூட்டிங் எண் — ACH ரிட்டர்ன் குறியீடு: R13விற்பனையாளரின் ரூட்டிங் எண் தவறாக இருந்ததுஉங்கள் பேமெண்ட் ரீஃபண்ட் செய்யப்பட்டது
  1. பில்லை மீண்டும் சேர்க்கவும்.
  2. உங்கள் விற்பனையாளர் வழங்கிய புதுப்பிக்கப்பட்ட டெலிவரி விவரங்களைப் பயன்படுத்தி, பேமெண்ட்டை மீண்டும் திட்டமிடவும்.
விற்பனையாளரின் கணக்கால் பேமெண்ட்டுகளைப் பெற முடியாது — ACH ரிட்டர்ன் குறியீடு: R20விற்பனையாளரின் கணக்கால் பேமெண்ட்டுகளைப் பெற முடியாதுஉங்கள் பேமெண்ட் ரீஃபண்ட் செய்யப்பட்டது
  1. பில்லை மீண்டும் சேர்க்கவும்.
  2. உங்கள் விற்பனையாளர் வழங்கிய புதுப்பிக்கப்பட்ட டெலிவரி விவரங்களைப் பயன்படுத்தி, பேமெண்ட்டை மீண்டும் திட்டமிடவும்.
விற்பனையாளர் பேமெண்ட்டை நிராகரித்தார் — ACH ரிட்டர்ன் குறியீடு: R23விற்பனையாளர் அல்லது அவரது வங்கியால் பேமெண்ட் நிராகரிக்கப்பட்டதுஉங்கள் பேமெண்ட் ரீஃபண்ட் செய்யப்பட்டது
  1. சிக்கலைத் தீர்க்க விற்பனையாளரைத் தொடர்புகொள்ளவும்
  2. பில்லை மீண்டும் சேர்க்கவும்.
  3. உங்கள் விற்பனையாளர் வழங்கிய புதுப்பிக்கப்பட்ட டெலிவரி விவரங்களைப் பயன்படுத்தி, பேமெண்ட்டை மீண்டும் திட்டமிடவும்.