உங்கள் டெபிட் கார்டு மூலம் உடனடிப் பேமெண்ட்டுகளைப் பெறுதல்

Shopify Bill Pay உடன், குறிப்பிட்ட பேமெண்ட்டுகளுக்கு 7 வணிக நாட்கள் வரை ஆகக்கூடிய வழக்கமான டெலிவரி நேரம் வரை காத்திருக்காமல், உங்கள் டெபிட் கார்டில் 30 நிமிடங்களுக்குள் பேமெண்ட்டைப் பெற்றுக்கொள்வதற்கான விருப்பத்தேர்வு உள்ளது. இதற்குப் பேமெண்ட் தொகையில் 1% செலவாகும், அத்துடன் பேமெண்ட்டை ஏற்க உங்கள் டெபிட் கார்டு எண் மற்றும் கார்டுதாரர் விவரங்கள் மட்டுமே உங்களுக்குத் தேவை. இந்த முறை வார இறுதி நாட்கள் உட்பட வாரத்தின் எந்த நாளிலும் செயல்படும்.

தகுதியான பேமெண்ட்டுகள்

வணிகர் வங்கிப் பரிமாற்றம் (ACH) அல்லது பேப்பர் செக்கைப் பயன்படுத்தித் தங்கள் பில்லைச் செலுத்தத் தேர்ந்தெடுத்தால் மட்டுமே, இந்த விருப்பத்தேர்வு கிடைக்கும். பேமெண்ட்டை ஏற்பதற்கான மின்னஞ்சல் உங்களுக்கு வரும். மேலும், உடனடிப் பேமெண்ட்டுகளுக்குத் தகுதியான எந்தவொரு பேமெண்ட்டுக்கும் உடனடிப் பேமெண்ட் விருப்பத்தேர்வு பட்டியலிடப்பட்டிருக்கும்.

ஒரு விற்பனையாளரான நீங்கள் மட்டுமே இந்த முறையைத் தேர்ந்தெடுக்க முடியும், ஒரு வணிகர் இந்த முறையைப் பயன்படுத்திப் பில் பேமெண்ட்டை உங்களுக்கு அனுப்ப முடியாது.

கவனிக்க வேண்டியவை

Shopify Bill Pay உடனடிப் பேமெண்ட்டுகளைப் பயன்படுத்துவதற்கு முன், கவனிக்க வேண்டிய பின்வரும் விஷயங்களை மதிப்பாய்வு செய்யவும்:

  • அசல் விநியோக முறை வங்கிப் பரிமாற்றம் (ACH) என்றால், மதிப்பிடப்பட்ட பரிமாற்ற விநியோகத் தேதிக்கு முந்தைய நாட்களில் மட்டுமே உடனடிப் பரிமாற்றம் கிடைக்கும். உதாரணத்துக்கு, உங்கள் உத்தேச விநியோகத் தேதி நவம்பர் 15 என்றால், நவம்பர் 14 மற்றும் அதற்கு முந்தைய நாட்களில் மட்டுமே உடனடிப் பரிமாற்றத்தை நீங்கள் தேர்ந்தெடுக்க முடியும்.
  • அசல் விநியோக முறை ஒரு பேப்பர் செக்காக இருந்து, நீங்கள் உடனடிப் பேமெண்ட் விருப்பத்தேர்வைத் தேர்வுசெய்தால், பேப்பர் செக் செல்லாததாக்கப்படும், ஆனால் அது உங்களுக்கு அஞ்சலில் அனுப்பப்படும். செல்லாததாக்கப்பட்ட பேப்பர் செக்கைப் பணம் பெறுவதற்காகச் சமர்ப்பிக்க வேண்டாம், ஏனெனில் அவ்வாறு செய்தால் உங்கள் வங்கியிடமிருந்து நீங்கள் அபராதக் கட்டணங்களைப் பெற வழிவகுக்கலாம்.
  • பேமெண்ட்டை ஏற்கப் பயன்படுத்தப்படும் டெபிட் கார்டு, வணிக, கார்ப்பரேட் அல்லது வர்த்தக டெபிட் கார்டாக இருக்க வேண்டும். தனிப்பட்ட டெபிட் கார்டுகள் ஏற்கப்படாது.
  • உடனடிப் பேமெண்ட்டுகளுக்குப் பேமெண்ட் தொகையில் 1% செலவாகும், இது உங்கள் வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்படும்போது பேமெண்ட்டில் இருந்து கழிக்கப்படும்.

உடனடிப் பேமெண்ட்டைப் பெறுங்கள்

30 நிமிடங்களுக்குள் டெபிட் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கை பேமெண்ட் வந்தடைய வேண்டும். நீங்கள் பேமெண்ட்டை ஏற்ற பிறகு, உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு உறுதிப்படுத்தல் மின்னஞ்சல் அனுப்பப்படும்.

படிகள்:

  1. பேமெண்ட் டெலிவரி மின்னஞ்சலில் உள்ள Want to get paid instantly? பிரிவில், Get paid instantly என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. உங்களின் வணிக டெபிட் கார்டு விவரங்கள் மற்றும் வணிக விவரங்களை உள்ளிடவும்.
  3. Submit and accept payment என்பதைக் கிளிக் செய்யவும்.