Shopify Bill Pay சிக்கல் தீர்த்தல்

Shopify Bill Pay மூலம் உங்கள் நிதியை நிர்வகிப்பது நேரடியானதாக இருக்க வேண்டும், ஆனால் அவ்வப்போது நீங்கள் சிக்கல்களைச் சந்திக்கலாம். Shopify Bill Pay-இல் நீங்கள் சந்திக்கக்கூடிய பொதுவான பிரச்சனைகளை இந்தப் பக்கம் கோடிட்டுக்காட்டுகிறது. அத்துடன் அவற்றைத் தீர்க்க உதவும் தீர்வுகளையும் வழங்குகிறது.

வங்கிக் கணக்கு சரிபார்ப்புச் சிக்கல்கள்

உங்கள் வங்கிக் கணக்கைச் சரிபார்ப்பதில் சிக்கல் இருந்தால், உங்கள் சரிபார்ப்பு முறையின் அடிப்படையில் தீர்வுகளை மதிப்பாய்வு செய்யவும். அமைப்பதற்கான விரிவான வழிமுறைகளுக்கு, உங்கள் வங்கிக் கணக்கைச் சேர்ப்பது மற்றும் சரிபார்ப்பது எப்படி என அறிந்துகொள்ளுங்கள்.

Plaid சரிபார்ப்புத் தோல்விகளுக்கான சிக்கல் தீர்த்தல்

Plaid மூலம் உங்கள் வங்கிக் கணக்கைச் சரிபார்ப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டால், பின்வரும் படிகளை முயலவும்:

  1. சரியான வங்கி உள்நுழைவுச் சான்றுகளைப் பயன்படுத்துகிறீர்களா என்பதை உறுதிப்படுத்தவும்.
  2. உங்கள் வங்கிக்கு ஒருமுறை பயன்படுத்தும் குறியீடு போன்ற கூடுதல் பாதுகாப்புச் சரிபார்ப்பு ஏதேனும் தேவைப்படுகிறதா எனப் பார்க்கவும்.
  3. வேறு உலாவியைப் பயன்படுத்தவும் அல்லது உங்கள் உலாவித் தேக்ககத்தை அழிக்க முயலவும்.
  4. சிக்கல் தொடர்ந்தால், மாற்றாக மைக்ரோ-டெபாசிட் சரிபார்ப்பு முறைக்கு மாறவும்.
மைக்ரோ-டெபாசிட்டுகள் பெறப்படாததைச் சரிசெய்தல்

2-3 வணிக நாட்களுக்குப் பிறகும் உங்கள் மைக்ரோ-டெபாசிட்டுகளைப் பெறவில்லை எனில், பின்வரும் படிகளை முயலவும்:

  1. ஒவ்வொன்றும் $1 USD க்கும் குறைவான மதிப்பில் "Melio" எனப் பெயரிடப்பட்ட டெபாசிட்டுகள் உள்ளதா என உங்கள் வங்கியின் பரிவர்த்தனை வரலாற்றைப் பார்க்கவும்.
  2. ரூட்டிங் எண் மற்றும் கணக்கு எண் உட்பட, உங்கள் வங்கிக் கணக்கு விவரங்களைச் சரியாக உள்ளிட்டுள்ளீர்களா என்பதைச் சரிபார்க்கவும்.
  3. நீங்கள் உள்நாட்டு அமெரிக்க வங்கிக் கணக்கைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்தவும். வயர் ரூட்டிங் எண்கள் ஆதரிக்கப்படுவதில்லை.
  4. இன்னமும் உங்களால் டெபாசிட்டுகளைக் கண்டறிய முடியவில்லை எனில், Shopify Bill Pay இல் இருந்து வங்கிக் கணக்கை நீக்கிவிட்டு, புதிய மைக்ரோ-டெபாசிட்டுகளைத் தூண்ட அதை மீண்டும் சேர்க்கவும்.
மைக்ரோ-டெபாசிட் உள்ளிடும் சிக்கல்களைச் சரிசெய்தல்

சரிபார்ப்பை முடிக்க, மைக்ரோ-டெபாசிட் தொகைகளை உள்ளிடுவதில் சிக்கல் இருந்தால், பின்வரும் படிகளை முயலவும்:

  1. ஒரு பிரைவேட் அல்லது இன்காக்னிட்டோ உலாவிச் சாளரத்தைத் திறந்து, உங்கள் Shopify நிர்வாகி கணக்கில் உள்நுழையவும்.
  2. நிதி > Bill Pay என்பதற்குச் சென்று, தொகைகளை மீண்டும் உள்ளிட முயலவும்.
  3. ஒவ்வொரு டெபாசிட்டின் சென்ட் பகுதியை மட்டும் உள்ளிடுவதை உறுதிப்படுத்தவும் (உதாரணமாக, டெபாசிட் $0.32 USD ஆக இருந்தால், "32" என உள்ளிடவும்).
  4. இன்னமும் தொகைகளை உள்ளிட முடியவில்லை எனில், கூடுதல் உதவிக்கு Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.
மைக்ரோ-டெபாசிட் சரிபார்ப்புத் தோல்விகளைச் சரிசெய்தல்

பல முயற்சிகளுக்குப் பிறகும் மைக்ரோ-டெபாசிட் சரிபார்ப்பு முறை தோல்வியடைந்தால், நீங்கள் வேறு வங்கிக் கணக்கை இணைக்க வேண்டும். புதிய வங்கிக் கணக்கானது, ACH பரிமாற்றங்களை ஏற்கும் வணிகக் கணக்காக இருப்பதை உறுதிப்படுத்தவும். வங்கிக் கணக்கைச் சேர்த்துச் சரிபார்ப்பது எப்படி எனத் தெரிந்துகொள்ளுங்கள்.

கிரெடிட் அல்லது டெபிட் கார்டு சிக்கல்கள்

ஒரு கிரெடிட் அல்லது டெபிட் கார்டைச் சேர்ப்பதில் அல்லது பயன்படுத்துவதில் சிக்கல் இருந்தால், பின்வரும் தீர்வுகளைப் பார்க்கவும். கார்டுக்கான விரிவான தேவைகள் மற்றும் அமைவுப் படிகளுக்கு, கிரெடிட் அல்லது டெபிட் கார்டைச் சேர்ப்பது எப்படி எனத் தெரிந்துகொள்ளுங்கள்.

கார்டைச் சேர்க்கும்போது நிராகரிக்கப்படுவதைச் சரிசெய்தல்

குறிப்பிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்யும் வணிகக் கார்டுகளை மட்டுமே Shopify Bill Pay ஏற்கும்:

  • கார்டானது, வர்த்தக, வணிக அல்லது கார்ப்பரேட் கார்டாக இருக்க வேண்டும். தனிப்பட்ட கார்டுகள் ஏற்கப்படாது.
  • கார்டு, அமெரிக்காவில் வழங்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
  • Mastercard, Visa, American Express, Diners Club மற்றும் Discover கார்டுகள் மட்டுமே ஏற்கப்படும்.
  • முன்கூட்டியே பணம் செலுத்தப்பட்ட (ப்ரீபெய்ட்) கார்டுகள் ஏற்கப்படாது.
  • பில்லிங் முகவரி ZIP குறியீடு, சிறுகோடுகள் (hyphens) இல்லாத 5 இலக்க எண்ணாக இருக்க வேண்டும்.

உங்கள் கார்டு இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்தும் நிராகரிக்கப்பட்டால், கார்டு விவரங்கள் அனைத்தையும் இருமுறை சரிபார்த்து, பில்லிங் முகவரி கார்டு வழங்குநரின் பதிவுகளுடன் பொருந்துகிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும். மேலும், வணிகங்களுக்கு இடையிலான (B2B) பரிவர்த்தனைகளில் எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை என்பதை உறுதிப்படுத்த கார்டு வழங்குநரைத் தொடர்புகொள்ளவும்.

கார்டு பேமெண்ட் நிராகரிக்கப்படுவதைச் சரிசெய்தல்

உங்கள் கார்டு மூலமான பேமெண்ட் நிராகரிக்கப்பட்டால், போதிய கடன் வரம்பு அல்லது நிதி இல்லாதது, கார்டு வழங்குநர் பரிவர்த்தனையை முடக்கியிருப்பது அல்லது கார்டின் பரிவர்த்தனை வரம்புகள் ஆகியவை இதற்குக் காரணமாக இருக்கலாம். மீதமுள்ள கிரெடிட்டைச் சரிபார்க்கவும், தடைகள் ஏதுமில்லை என்பதைச் சரிபார்க்க கார்டு வழங்குநரைத் தொடர்புகொள்ளவும், தேவைப்பட்டால் பேமெண்ட்டை ரத்துசெய்துவிட்டு வேறு கட்டண முறையைப் பயன்படுத்தி மீண்டும் திட்டமிடவும்.

குறிப்பிட்ட பிழைக் குறியீடுகள் மற்றும் விரிவான தீர்வுகளுக்கு, பேமெண்ட் தோல்விகளைப் பார்க்கவும்.

பேமெண்ட் நிராகரிக்கப்படும் சிக்கல்கள்

பல காரணங்களால் உங்கள் பேமெண்ட் நிராகரிக்கப்படலாம். பின்வரும் பொதுவான காரணங்களையும் தீர்வுகளையும் பார்க்கவும்.

வணிகம் அல்லாத கணக்கின் நிராகரிப்புகளைச் சரிசெய்தல்

வணிகக் கணக்குகளுக்கு இடையிலான பரிவர்த்தனைகளை மட்டுமே Shopify Bill Pay செயலாக்குகிறது. நீங்களோ உங்கள் விற்பனையாளரோ தனிப்பட்ட கணக்கைப் பயன்படுத்தினால், பேமெண்ட் நிராகரிக்கப்படலாம்.

நீங்கள் வணிகக் கணக்கைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதைச் சரிபார்க்க:

  • உங்கள் வங்கிக் கணக்கு: நீங்கள் இணைத்துள்ள கணக்கானது வணிக அல்லது வர்த்தகக் கணக்காக வகைப்படுத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த, வங்கியிடம் சரிபார்க்கவும்.
  • உங்கள் கார்டு: நீங்கள் பயன்படுத்தும் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு, வணிக, வர்த்தக அல்லது கார்ப்பரேட் கார்டாக இருப்பதை உறுதிப்படுத்தவும். தனிப்பட்ட கார்டுகள் ஏற்கப்படாது.

தனிப்பட்ட கணக்கால் சிக்கல் ஏற்பட்டால், புதிய வணிகக் கட்டண முறையைச் சேர்த்துவிட்டு பேமெண்ட்டை மீண்டும் முயலவும்.

மோசடி அபாயத்தால் ஏற்படும் நிராகரிப்புகளைச் சரிசெய்தல்

Shopify Bill Pay இல் உள்ள ஒவ்வொரு பரிவர்த்தனையும் பாதுகாப்பு மதிப்பாய்வுக்கு உட்படும். ஏதேனும் பரிவர்த்தனை அதிக ஆபத்துள்ளதாகக் குறிக்கப்பட்டால், உங்கள் கணக்கைப் பாதுகாக்க அது நிராகரிக்கப்படலாம்.

மோசடி அபாயக் குறிப்புகளுக்கான பொதுவான காரணங்களில் பின்வருவன அடங்கும்:

  • உங்களின் வழக்கமான பரிவர்த்தனை வரலாற்றுடன் ஒப்பிடுகையில், பேமெண்ட் தொகைகளில் உள்ள அசாதாரண நிலை
  • சரிபார்க்கப்படாத புதிய விற்பனையாளர்களுக்கான பேமெண்ட்டுகள்
  • விற்பனையாளரின் வணிகத் தகவலில் உள்ள முரண்பாடுகள்
  • குறுகிய காலத்தில் பேமெண்ட் செய்வதற்கான பல தோல்வியுற்ற முயற்சிகள்

மோசடி அபாயத்திற்காக உங்கள் பேமெண்ட் நிராகரிக்கப்பட்டிருந்தால், விற்பனையாளர் விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா எனப் பார்த்து, பேமெண்ட் தொகையும் விற்பனையாளரும் சரியானவர்கள்தானா என்பதை உறுதிப்படுத்திய பின், மீண்டும் முயல்வதற்கு முன் 24 மணிநேரம் காத்திருக்கவும். சிக்கல் தொடர்ந்தால், விரிவான மதிப்பாய்விற்கு Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.

இணக்கமின்மையால் ஏற்படும் நிராகரிப்புகளைச் சரிசெய்தல்

மின்னஞ்சல் மூலம் உங்களிடம் கூடுதல் ஆவணங்கள் அல்லது தகவல்களை Melio இணக்கக் குழு கோரலாம். இந்தக் கோரிக்கைகளுக்கு நீங்கள் பதிலளிக்கவில்லை எனில், பேமெண்ட் நிராகரிக்கப்படலாம் அல்லது எதிர்பார்க்கப்பட்ட தேதிக்குப் பிறகும் "திட்டமிடப்பட்டது" அல்லது "நிலுவையில் உள்ளது" போன்ற நிலையிலேயே தொடரலாம்.

இணக்கக் காரணங்களுக்காக உங்கள் பேமெண்ட் நிராகரிக்கப்பட்டிருந்தால், உங்கள் மின்னஞ்சல் இன்பாக்ஸை (ஸ்பேம் மற்றும் ஜங்க் கோப்புறைகள் உட்பட) compliance@shopify-billpay.melio.com முகவரியிலிருந்து ஏதேனும் செய்தி வந்துள்ளதா எனப் பார்த்து, எந்தவொரு கோரிக்கைக்கும் உடனடியாகப் பதிலளிக்கவும்.

சரிபார்ப்பின் போது ஏற்படும் நிராகரிப்புகளைச் சரிசெய்தல்

உங்கள் வணிகத்தின் நம்பகத்தன்மையைச் சரிபார்க்கும் வகையில் போதுமான பொதுவான தகவல்கள் கிடைக்கவில்லை எனில், ஒரு பரிவர்த்தனை மறுக்கப்படலாம்.

சரிபார்ப்புச் சிக்கல்களைத் தடுக்க உதவ, Shopify இல் உள்ள உங்கள் வணிகத் தகவல் அதிகாரப்பூர்வ வணிகப் பதிவுடன் பொருந்துகிறதா எனவும், செயலில் உள்ள இணையதளம் போன்ற ஆன்லைன் இருப்பு உள்ளதா எனவும், Melio வழங்கும் சரிபார்ப்புக் கோரிக்கைகளுக்கு உடனடியாகப் பதிலளிப்பதையும் உறுதிப்படுத்தவும். சரிபார்ப்புச் சிக்கல்களால் பேமெண்ட் நிராகரிக்கப்பட்டால், உதவிக்கு Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.

தோல்வியுற்ற பேமெண்ட்டுகள்

ஒரு பேமெண்ட் செய்யப்படவில்லை எனில், பிழைக் குறியீடுகள் மற்றும் தீர்வுகளுக்குப் பேமெண்ட் தோல்விகளைப் பார்க்கவும். பேமெண்ட் செயலாக்கப்பட்டு விற்பனையாளருக்கு டெலிவரி செய்யப்படவில்லை எனில், தோல்வியுற்ற டெலிவரி காரணங்களைப் பார்க்கவும். சிக்கலைத் தீர்க்க முடியவில்லை என்றாலோ அது தொடர்ந்தாலோ, Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.

தோல்வியுற்ற பேமெண்ட்டை மீண்டும் முயலுதல்

உங்கள் பேமெண்ட் தோல்வியடைந்துவிட்டதாக மின்னஞ்சல் அறிவிப்பைப் பெற்றால், அடிப்படைச் சிக்கலைத் தீர்த்த பிறகு மீண்டும் திட்டமிடலாம். தோல்விக்கான காரணத்தை மின்னஞ்சலில் அல்லது உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள நிதி > Bill Pay என்பதன் கீழ் பார்த்து, சிக்கலைத் தீர்த்துவிட்டு, பேமெண்ட்டை மீண்டும் திட்டமிடவும்.

பேமெண்ட்டை ரத்துசெய்தல் அல்லது நிறுத்துதல்

பேமெண்ட் செயல்முறை தொடங்குவதற்கு முன்பாக நீங்கள் திட்டமிடப்பட்ட பேமெண்ட்டை ரத்துசெய்யலாம். பேமெண்ட் செயல்முறை தொடங்கிய பிறகு, அதை நிறுத்த முடியாமல் போகலாம். உதவிக்கு உடனடியாக Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும். முடிவடைந்த பேமெண்ட்டுகளை Shopify Bill Pay மூலம் திரும்பப்பெற முடியாது. பணத்தைத் திரும்பப்பெறக் கோர, நேரடியாக உங்கள் விற்பனையாளரைத் தொடர்புகொள்ளவும்.

விற்பனையாளருக்குச் செலுத்த வேண்டிய விடுபட்ட பேமெண்ட்டைச் சிக்கல் தீர்த்தல்

மதிப்பிடப்பட்ட விநியோகத் தேதி கடந்த பின்னரும் உங்கள் விற்பனையாளர் பேமெண்ட்டைப் பெறவில்லை எனில், உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள நிதி > Bill Pay என்பதன் கீழ் பேமெண்ட் நிலையைச் சரிபார்க்கவும். மேலும், விற்பனையாளரின் டெலிவரி விவரங்கள் சரியாக உள்ளதா என்பதைச் சரிபார்த்துவிட்டு, வங்கி அறிக்கைகளில் "[உங்கள் வணிகத்தின் பெயர்] melio CCD" எனக் காட்டப்படும் பேமெண்ட்டுகள் உள்ளதா எனப் பார்க்க உங்கள் விற்பனையாளரிடம் கேட்கவும். 1 மணிநேரத்திற்குப் பிறகும் பெறப்படாத உடனடிப் (டெபிட்டிற்கான புஷ்) பேமெண்ட்டுகளுக்கோ அல்லது எதிர்பார்க்கப்பட்ட தேதியைக் கடந்த பிற கட்டண முறைகளுக்கோ Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.

தொழில்நுட்பச் சிக்கல்கள்

நிதியுதவி ஆதாரப் பிழைகளைச் சிக்கல் தீர்த்தல்

வங்கிக் கணக்கு, கார்டு அல்லது பிற நிதியுதவி ஆதாரங்களை இணைக்கும்போது பிழை ஏற்பட்டால், பின்வரும் படிகளை முயன்று பார்க்கவும்:

  • பக்கத்தைப் புதுப்பிக்கவும்.
  • உங்கள் உலாவித் தேக்ககம் மற்றும் குக்கீகளை அழிக்கவும் அல்லது வேறு உலாவியைப் பயன்படுத்தவும்.
  • அனைத்துத் தகவல்களும் துல்லியமாகவும் முழுமையாகவும் உள்ளனவா என்பதைச் சரிபார்க்கவும்.

பிழை தொடர்ந்தால், Shopify ஆதரவைத் தொடர்புகொண்டு பிழைச் செய்தியின் திரைப்பிடிப்பைச் சேர்க்கவும்.

பேமெண்ட்டைத் திட்டமிட முடியவில்லை என்பதைச் சிக்கல் தீர்த்தல்

தொழில்நுட்பச் சிக்கல் காரணமாக பேமெண்ட்டைத் திட்டமிட முடியவில்லை எனில், பின்வரும் படிகளை முயன்று பார்க்கவும்:

  • உங்கள் கட்டண முறை சரிபார்க்கப்பட்டு, செயலில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும்.
  • பில் மற்றும் விற்பனையாளருக்குத் தேவையான அனைத்துப் புலங்களும் நிரப்பப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும்.
  • உங்கள் இணைய இணைப்பைச் சரிபார்க்கவும்.
  • வேறு உலாவி அல்லது சாதனத்தைப் பயன்படுத்த முயலவும்.

சிக்கல் தொடர்ந்தால், உதவிக்கு உடனடியாக Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.

மின்னஞ்சல் சரிபார்ப்புத் தேவையென்பதைச் சிக்கல் தீர்த்தல்

Shopify Bill Pay-ஐ அணுகுவதற்கு முன்பாக உங்கள் மின்னஞ்சல் முகவரியைச் சரிபார்க்க வேண்டும் என ஒரு செய்தி தோன்றினால், Shopify இலிருந்து சரிபார்ப்பு மின்னஞ்சல் ஏதேனும் வந்துள்ளதா என உங்கள் மின்னஞ்சல் இன்பாக்ஸைச் (ஸ்பேம் மற்றும் ஜங்க் கோப்புறைகள் உட்பட) சரிபார்த்து, அந்தச் சரிபார்ப்பு இணைப்பைக் கிளிக் செய்யவும். ஒருவேளை நீங்கள் மின்னஞ்சலைப் பெறவில்லை எனில், உங்கள் கணக்கு அமைப்புகளுக்குச் சென்று புதிய சரிபார்ப்பு மின்னஞ்சலைக் கோரவும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எனது வங்கி அறிக்கையில் "Melio" இடமிருந்து வந்த கட்டணங்களை நான் ஏன் காண்கிறேன்?

Shopify Bill Pay-க்கு Melio ஆதரவளிக்கிறது. வங்கி அறிக்கையில் கட்டணங்கள் "Melio" எனக் காட்டப்படும். அறிக்கைகளில் பேமெண்ட்டுகள் எப்படிக் காட்டப்படுகின்றன என்பதை அறிந்துகொள்ளவும்.

ஒரு பில் பேமெண்ட்டைப் பல தவணைகளாகப் பிரிக்க முடியுமா?

தற்போது Shopify Bill Pay-இல் பேமெண்ட்டுகளைப் பிரித்துச் செலுத்தும் வசதி கிடைக்கவில்லை. ஒவ்வொரு பில்லையும் ஒரே பரிவர்த்தனையில் முழுமையாகச் செலுத்த வேண்டும். நீங்கள் பகுதி பேமெண்ட்டுகளைச் செலுத்த விரும்பினால், பில்லைப் பலமுறை சேர்த்து ஒவ்வொரு முறையும் நீங்கள் செலுத்த விரும்பும் தொகைக்கேற்ப பில்லின் மொத்தத் தொகையை மேனுவலாகச் சரிசெய்யவும்.

எனது Bill Pay கணக்கிற்கு ஒதுக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரியை மாற்ற முடியுமா?

நீங்கள் ஆன்போர்டு செய்யும்போது விலைப்பட்டியல்களைப் பெறுவதற்காக உங்கள் Shopify Bill Pay கணக்கிற்கு ஒதுக்கப்படும் மின்னஞ்சல் முகவரி அமைக்கப்படும். தற்போது இந்த மின்னஞ்சல் முகவரியைத் தனிப்பயனாக்கவோ மாற்றவோ முடியாது.

compliance@shopify-billpay.melio.com இலிருந்து வந்த மின்னஞ்சல் முறையானதா?

ஆம், compliance@shopify-billpay.melio.com இலிருந்து வரும் மின்னஞ்சல்கள் முறையானவை. வணிகர்களிடமிருந்து கூடுதல் தகவல்கள் அல்லது ஆவணங்களைக் கோருவதற்கு Melio இன் இணக்கக் குழு இந்த மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துகிறது. பேமெண்ட் தாமதங்கள் அல்லது ரத்து செய்யப்படுவதைத் தவிர்க்க, இந்தக் கோரிக்கைகளுக்கு உடனடியாகப் பதிலளிக்கவும்.

Melio ஆதரவு நேரங்கள் என்ன?

Melio ஆதரவு, திங்கள் முதல் வெள்ளி வரை கிழக்கு நேரம் காலை 9:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை கிடைக்கும்.

Shopify ஆதரவைத் தொடர்புகொள்வதற்கு முன்

Shopify ஆதரவைத் தொடர்புகொள்வதற்கு முன்பு, உங்கள் சிக்கலை விரைவாகத் தீர்க்க உதவ பின்வரும் தகவல்களைச் சேகரித்து வைத்துக்கொள்ளவும்:

  • பேமெண்ட் ID (உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள பில் விவரப் பக்கத்தில் இதைக் காணலாம்)
  • நீங்கள் எதிர்கொண்ட ஏதேனும் பிழைச் செய்திகளின் திரைப்பிடிப்புகள்
  • சிக்கல் ஏற்பட்ட தேதியும் நேரமும்
  • நீங்கள் தேர்ந்தெடுத்த கட்டண முறை மற்றும் விநியோக முறை
  • விற்பனையாளரின் பெயர் மற்றும் டெலிவரி விவரங்கள்
  • சிக்கல் தீர்த்தல் பிரிவுகளிலிருந்து நீங்கள் ஏற்கனவே முயன்று பார்த்த படிகள்

இந்தத் தகவலைத் தயாராக வைத்திருப்பது, Shopify ஆதரவு உங்களுக்கு இன்னும் திறம்பட உதவ வசதியாக இருக்கும்.