உங்கள் Capital flex account-ஐ நிர்வகித்தல்

Capital flex account-க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதும், உங்கள் Shopify நிர்வாகியின் மூலம் உங்கள் நிதியுதவியின் அனைத்து அம்சங்களையும் நிர்வகிக்கலாம். தேவைப்படும்போது நிதியைப் பெறுதல், திருப்பிச் செலுத்துதல் விகிதத்தைச் சரிசெய்தல், மேனுவல் பேமெண்ட்களைச் செய்தல் மற்றும் உங்கள் கணக்கின் நிலை மற்றும் கட்டணங்களைக் கண்காணித்தல் ஆகியவை இதில் அடங்கும்.

உங்கள் Capital flex account-ஐ அணுகுதல்

உங்களின் Shopify நிர்வாகியிலிருந்து உங்கள் Capital flex account-ஐ அணுகலாம். உங்களின் தற்போதைய கடன் பெறும் திறன், நிலுவைத் தொகை மற்றும் சமீபத்திய செயல்பாடு உள்ளிட்ட உங்களின் நிதியுதவி நிலை குறித்த மேலோட்டத்தை உங்கள் கணக்கு டாஷ்போர்டு வழங்கும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியில், நிதி என்பதற்குச் செல்லவும்.

  2. கணக்குகள் பிரிவில், Capital என்பதைக் கிளிக் செய்யவும்.

உங்கள் தற்போதைய கடன் பெறும் திறன், நிலுவைத் தொகை, கிடைக்கக்கூடிய நிதியுதவி மற்றும் சமீபத்திய செயல்பாடு ஆகியவற்றை உங்களின் Capital flex account டாஷ்போர்டு காண்பிக்கும்.

உங்கள் Capital flex account மூலம் நிதியைப் பெறுதல்

உங்களின் கிடைக்கக்கூடிய கடன் பெறும் திறன் வரை, குறைந்தபட்சம் $200 USD-உடன் தேவைப்படும்போதெல்லாம் நிதியைப் பெறலாம். உங்களின் கடன் பெறும் திறன் வரை, உங்கள் Capital flex account-ல் இருந்து எத்தனை முறை வேண்டுமானாலும் நிதியைப் பெறலாம். உங்கள் கிடைக்கக்கூடிய கடன் பெறும் திறனானது, வணிகச் செயல்திறனைப் பொறுத்து வாரந்தோறும் அதிகரிக்கலாம் அல்லது குறையலாம்.

படிகள்:

  1. உங்கள் Capital flex account டாஷ்போர்டில், நிதியுதவியைக் கோரு என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. நீங்கள் பெற விரும்பும் தொகையை உள்ளிடவும்.
  3. உங்கள் மாதாந்திரக் கட்டணம் மற்றும் திருப்பிச் செலுத்தும் காலத்திட்டத்தின் மீதான தாக்கத்தை மதிப்பாய்வு செய்துவிட்டு, உறுதிப்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

1-3 வணிக நாட்களுக்குள் நிதி டெபாசிட் செய்யப்படும்.

உங்கள் திருப்பிச் செலுத்துதல் விகிதத்தைச் சரிசெய்தல்

உங்கள் வணிகச் சுழற்சிகள் மற்றும் பணப்புழக்கத் தேவைகளின் அடிப்படையில் உங்கள் திருப்பிச் செலுத்துதல் விகிதத்தைச் சரிசெய்யும் திறனே Capital flex account-இன் முக்கியப் பலன்களில் ஒன்றாகும். எப்போது திருப்பிச் செலுத்துதலைச் சரிசெய்வது மற்றும் திருப்பிச் செலுத்துதல் காலத்திட்டத்தில் மாற்றங்களைச் செய்வது எப்படி என்பதைப் பின்வரும் பிரிவுகள் விளக்குகின்றன.

திருப்பிச் செலுத்துதலை எப்போது சரிசெய்வது

பின்வரும் வணிக நிபந்தனைகள் பொருந்தும்போது உங்களின் திருப்பிச் செலுத்துதல் விகிதத்தைச் சரிசெய்வதைக் கருத்தில் கொள்ளவும்:

  • பருவகால மாற்றங்கள்: அதிக விற்பனை நடைபெறும் காலங்களில் உங்கள் திருப்பிச் செலுத்துதல் விகிதத்தை அதிகரிக்கவும், மந்தமான விற்பனை நடைபெறும் காலங்களில் உங்கள் திருப்பிச் செலுத்துதல் விகிதத்தைக் குறைக்கவும்.
  • பணப்புழக்கத் தேவைகள்: சரக்கு இருப்பு கொள்முதல் அல்லது வணிக விரிவாக்கம் போன்ற குறிப்பிட்ட வணிக நோக்கங்களுக்காக ரொக்கத்தை இருப்பில் வைக்கும்போது உங்களின் திருப்பிச் செலுத்துதல் விகிதத்தைக் குறைக்கவும்.
  • வணிகச் செயல்திறன்: அதிக விற்பனை நடைபெறும் காலங்களில் உங்கள் இருப்பை விரைவாகச் செலுத்த, உங்கள் திருப்பிச் செலுத்துதல் விகிதங்களை அதிகரிக்கவும்.

உங்கள் திருப்பிச் செலுத்துதல் விகிதத்தைச் சரிசெய்தல்

நீங்கள் புதிதாக நிதியைத் திரும்பப் பெறும்போது உங்களின் திருப்பிச் செலுத்துதல் விகிதத்தைச் சரிசெய்யலாம், புதிய திருப்பிச் செலுத்துதல் விகிதம் உடனடியாகச் செயல்படத் தொடங்கும். உங்களின் திருப்பிச் செலுத்துதல் விகிதத்தைச் சரிசெய்ய, பின்வரும் படிகளை முடிக்கவும்:

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியில், நிதி என்பதற்குச் செல்லவும்.

  2. Capital என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. Capital flex account மேலோட்டப் பக்கத்தில், நிதியுதவியைக் கோரு என்பதைக் கிளிக் செய்யவும் அல்லது தற்போதைய திருப்பிச் செலுத்துதல் சதவீதத்திற்கு அருகிலுள்ள திருத்தும் ஐகான் என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. திருப்பிச் செலுத்துதல் விகிதத்தை மாற்று பக்கத்தில், புதிதாக நிதியைத் திரும்பப் பெறுவதற்கு நீங்கள் பயன்படுத்த விரும்பும் திருப்பிச் செலுத்துதல் சதவீதத்தைத் திருத்த, திருத்தும் ஐகான் என்பதைக் கிளிக் செய்யவும்.

  5. இந்த மாற்றம் உங்களின் தினசரித் திருப்பிச் செலுத்தும் தொகை மற்றும் செலுத்தி முடிக்கும் காலக்கெடுவை எவ்வாறு பாதிக்கும் என்பதை மதிப்பாய்வு செய்துவிட்டு, உறுதிப்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

மாற்றங்கள் 2-3 வணிக நாட்களுக்குள் நடைமுறைக்கு வரும். கிடைக்கக்கூடிய திருப்பிச் செலுத்துதல் விகித வரம்புகள் உங்கள் வணிகச் சுயவிவரம் மற்றும் தற்போதைய நிலுவைத் தொகை ஆகியவற்றின் மூலம் தீர்மானிக்கப்படுகின்றன.

கட்டணங்கள் மற்றும் செலவுகளைக் கண்காணித்தல்

Capital flex account-கள் உங்கள் நிலுவைத் தொகைக்கு மட்டுமே பொருந்தக்கூடிய வெளிப்படையான மாதாந்திரச் சதவீதக் கட்டண அமைப்பைப் பயன்படுத்துகின்றன. கட்டணங்கள் எவ்வாறு கணக்கிடப்படுகின்றன, அவை எப்போது பயன்படுத்தப்படுகின்றன மற்றும் செலவுகளைப் புரிந்துகொள்ள உங்களுக்கு என்னென்ன கருவிகள் உள்ளன என்பதைப் பின்வரும் பிரிவுகள் விளக்குகின்றன.

கட்டணங்கள் எப்படிக் கணக்கிடப்படுகின்றன

Capital flex account கட்டணங்கள் பின்வரும் வழிகளில் நிர்வகிக்கப்படுகின்றன:

  • மாதாந்திரச் சதவீதக் கட்டணம்: உங்கள் சராசரி நிலுவைத் தொகைக்கு இந்தக் கட்டணம் மாதாந்திர அடிப்படையில் விதிக்கப்படும்.
  • விகிதாச்சாரக் கட்டணம்: நீங்கள் மாதத்தின் மத்தியில் உங்களின் இருப்பைச் செலுத்தித் தீர்த்தால், விதிக்கப்படும் எந்தவொரு கட்டணங்களும் விகிதாச்சார அடிப்படையில் இருக்கும்.
  • கூட்டு வட்டி இல்லை: மாதாந்திரத் தொகையைத் தாண்டி உங்கள் கட்டணங்களுக்குக் கூட்டு வட்டி போடப்படாது அல்லது அவை குவிக்கப்படாது.

கட்டண அட்டவணை

உங்கள் கணக்கில் கட்டணங்கள் எப்போது விதிக்கப்படும் என்பதைப் பின்வரும் அட்டவணை விளக்குகிறது:

  • மாதாந்திரக் கட்டணங்கள்: ஒவ்வொரு மாதமும் உங்கள் நிலுவைத் தொகையில் சதவீத அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படும். இந்தக் கட்டணங்கள் தினசரி சேர்ந்து, ஒவ்வொரு மாதத்தின் கடைசி நாளிலும் வசூலிக்கப்படும்.
  • இறுதிக் கட்டணங்கள்: உங்கள் இருப்பு பூஜ்ஜியத்தை அடையும்போது உடனடியாகக் கட்டணங்கள் வசூலிக்கப்படுவது நின்றுவிடும்.

செலவு மதிப்பீட்டுக் கருவிகளைப் பயன்படுத்துதல்

Capital flex கணக்கைப் பயன்படுத்தும்போது ஏற்படும் செலவுகளை நீங்கள் புரிந்துகொள்ள உதவுவதற்கு, உங்கள் Capital flex கணக்கு டாஷ்போர்டில் பின்வரும் ஊடாடும் கருவிகள் சேர்க்கப்பட்டுள்ளன:

  • மாதிரி கால்குலேட்டர்: வெவ்வேறு பெறுதல் தொகைகள் மற்றும் அவற்றின் தொடர்புடைய திருப்பிச் செலுத்துதல் அட்டவணைகளுக்கான எடுத்துக்காட்டுகளைப் பார்க்கலாம்.
  • செலவு ஒப்பீடு: வெவ்வேறு திருப்பிச் செலுத்துதல் உத்திகளுக்கான செலவுகளை ஒப்பிடலாம்.
  • செலுத்தி முடிக்கும் காலவரிசை: தற்போதைய அமைப்புகளின் அடிப்படையில் உங்கள் இருப்பு எப்போது முழுமையாகத் திருப்பிச் செலுத்தப்படும் என்பதை மதிப்பிடலாம்.

கணக்குக் கண்காணிப்பு மற்றும் அறிவிப்புகள்

உங்களின் கணக்கு நிலை குறித்த தகவல்களைத் தெரிந்துகொள்ள உதவும் வகையில், விரிவான கண்காணிப்புக் கருவிகளையும் அறிவிப்பு விருப்பங்களையும் உங்கள் Capital flex கணக்கு உள்ளடக்கியுள்ளது. டாஷ்போர்டு அம்சங்கள், அறிவிப்பு விருப்பத்தேர்வுகள் மற்றும் கடன் வரம்பு மதிப்பாய்வுச் செயல்முறை ஆகியவற்றைத் பின்வரும் பிரிவுகள் விளக்குகின்றன.

டாஷ்போர்டு அம்சங்கள்

உங்களின் Capital flex கணக்கு டாஷ்போர்டு பின்வரும் தகவல்களை வழங்குகிறது:

  • நிகழ்நேர இருப்பு: தற்போதைய நிலுவைத் தொகை மற்றும் கிடைக்கக்கூடிய கடன்பெறும் அளவு.
  • சமீபத்தியச் செயல்பாடு: பணம் எடுத்தல், திருப்பிச் செலுத்துதல் மற்றும் கட்டணங்கள் உட்படப் பரிவர்த்தனை வரலாறு.
  • வரவிருக்கும் கட்டணங்கள்: அடுத்தக் கட்டணத் தேதி மற்றும் மதிப்பிடப்பட்டத் தொகை.
  • செயல்திறன் அளவீடுகள்: திருப்பிச் செலுத்துதல், திரும்பப் பெறுதல் மற்றும் கட்டண வரலாறு

அறிவிப்பு விருப்பத்தேர்வுகள்

பின்வரும் அறிவிப்பு வகைகளை நீங்கள் உள்ளமைக்கலாம்:

  • வெற்றிகரமாகப் பணம் எடுத்தல்: உங்களின் வங்கிக் கணக்கில் நிதியுதவி டெபாசிட் செய்யப்படுகையில் உறுதிப்படுத்தல் வழங்கப்படும்.
  • திருப்பிச் செலுத்துதல் செயலாக்கம்: தினசரி திருப்பிச் செலுத்துதல் உறுதிப்படுத்தல்கள்.
  • கட்டணம் விதிப்புகள்: மாதாந்திரக் கட்டணம் செயலாக்க அறிவிப்புகள்.
  • கடன்பெறும் அளவு அதிகரிப்புகள்: கூடுதல் கடன்பெறும் அளவு கிடைக்கும்போது அறிவிப்பு வழங்கப்படும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியில், நிதி என்பதற்குச் செல்லவும்.

  2. Capital என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. உங்களின் Capital flex கணக்கு டாஷ்போர்டில், அறிவிப்பு விருப்பத்தேர்வுகள் என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. உங்களின் விருப்பமான அறிவிப்பு வகைகள் மற்றும் விநியோக முறைகளைத் தேர்ந்தெடுக்கவும்.

  5. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

வாராந்திர கடன்பெறும் அளவு மதிப்பாய்வுகள்

உங்களுக்குக் கிடைக்கக்கூடிய கடன்பெறும் அளவு வாரந்தோறும் மதிப்பாய்வு செய்யப்படும், அது பின்வரும் நிபந்தனைகளின் அடிப்படையில் அதிகரிக்கவோ அல்லது குறையவோ கூடும்:

  • வணிகச் செயல்திறன்: விற்பனை வளர்ச்சி மற்றும் சீரான விற்பனை வடிவங்கள் ஆகியவற்றை இந்த நிபந்தனை உள்ளடக்கியுள்ளது.
  • திருப்பிச் செலுத்திய வரலாறு: குறித்த நேரத்தில் திருப்பிச் செலுத்துதல் மற்றும் சிறந்த கணக்கு நிர்வாகம் ஆகியவற்றை இந்த நிபந்தனை உள்ளடக்கியுள்ளது.
  • ஆபத்துக் காரணிகள்: இது, நீங்கள் ஆபத்துக் குறைவான வணிகர் சுயவிவரத்தைத் தொடர்ந்து பராமரிப்பதை அடிப்படையாகக் கொண்ட நிபந்தனையாகும்.
  • பிளாட்ஃபார்ம் ஈடுபாடு: Shopify சேவைகளைச் சுறுசுறுப்பாகப் பயன்படுத்துவதை இந்த நிபந்தனை உள்ளடக்கியுள்ளது.

நீங்கள் தகுதிபெறும்போது கடன்பெறும் அளவு அதிகரிப்புகள் தானாகவே விதிக்கப்படும்.

உங்கள் Capital flex கணக்கைப் பராமரித்தல்

ஆரோக்கியமான Capital flex கணக்கைப் பராமரிக்க, நீங்கள் சில நடவடிக்கைகளை எடுக்கலாம். நீங்கள் சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்துவதை உறுதிசெய்தல், சரியான தொகையைக் கடனாகப் பெறுதல் மற்றும் உங்கள் கணக்கின் ஆரோக்கியத்தைப் பராமரித்தல் போன்ற சில வழிகளை இந்தப் பிரிவு கோடிட்டுக் காட்டுகிறது.

உங்கள் திருப்பிச் செலுத்துதல் உத்தியை உகந்ததாக்குங்கள்

உங்கள் திருப்பிச் செலுத்துதல் உத்தியை உகந்ததாக்குவதற்கு, பின்வரும் அணுகுமுறைகளைக் கவனத்தில் கொள்ளுங்கள்:

  • வணிகச் சுழற்சிகளுடன் பொருத்துதல்: விற்பனை அதிகமாக நடக்கும் காலங்களில் திருப்பிச் செலுத்துதல்களை அதிகரிக்கவும்.
  • பணப்புழக்கத்தைத் தக்கவைத்தல்: வணிக விரிவாக்கத்தின்போது அல்லது உங்கள் சரக்கு இருப்பை அதிகரிக்கும்போது திருப்பிச் செலுத்துதல்களைக் குறைக்கவும்.
  • மேனுவல் பேமெண்ட்டுகளைப் பயன்படுத்துதல்: பணப்புழக்கம் சீராக இருக்கும் காலங்களில் உங்கள் இருப்பைச் செலுத்தித் தீர்க்கவும்.

செலவுகளைச் சிறப்பாகக் கண்காணித்தல்

செலவுகளைச் சிறப்பாகக் கண்காணிக்க, பின்வரும் நடைமுறைகளைச் செயல்படுத்தவும்:

  • வழக்கமான மதிப்பாய்வு: கட்டணத் தாக்கத்தைப் புரிந்துகொள்ள உங்கள் டாஷ்போர்டை வாரந்தோறும் சரிபார்க்கவும்.
  • செலுத்தி முடிக்கும் முன்னேற்றத்தைத் தடமறிதல்: திருப்பிச் செலுத்துதல் மாற்றங்கள், காலவரிசையை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைக் கண்காணிக்கவும்.

கணக்கின் ஆரோக்கியத்தைப் பராமரித்தல்

கணக்கின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க, பின்வரும் வழிகாட்டுதல்களை நீங்கள் பயன்படுத்தலாம்:

  • வரம்புகளுக்குள் இருத்தல்: குறிப்பிட்ட நோக்கங்களுக்காகத் தேவையானதை விட அதிகமாகப் பணம் எடுப்பதைத் தவிர்ப்பதை உறுதிசெய்யவும்.
  • திருப்பிச் செலுத்துதல்களைப் பராமரித்தல்: குறைந்தபட்ச திருப்பிச் செலுத்துதல்களைச் செய்ய, உங்களிடம் போதுமான விற்பனை அளவு உள்ளதா என்பதை உறுதிசெய்யவும்.
  • தகவலைப் புதுப்பித்தல்: உங்கள் வணிகம் மற்றும் வங்கியியல் தகவல்களைப் புதுப்பித்த நிலையில் வைத்திருப்பதை உறுதிசெய்யவும்.