| முன்பணமாக வழங்கப்பட்டத் தொகை | Shopify Capital வியாபாரி ரொக்க முன்பணத்திலிருந்து நீங்கள் பெறும் நிதியுதவி. |
| பிணையம் | பிணையம் என்பது உங்கள் Shopify Capital கடனுக்கான பாதுகாப்பாக நீங்கள் உறுதியளிக்கும் சொத்துகளின் தொகுப்பாகும். Shopify நிர்வாகியுடன் இணைக்கப்பட்ட வணிக வங்கிக் கணக்கு மற்றும் நீங்கள் வைத்துள்ள வேறு ஏதேனும் வணிகக் கணக்குகள் போன்ற உங்கள் வணிகச் சொத்துகளும் பிணையத்தில் அடங்கும். உங்களின் எந்தவொரு தனிப்பட்ட உடைமை அல்லது சொத்துகள் பிணையத்தில் அடங்காது. |
| தினசரி பேமெண்ட் சதவீதம் | மொத்த பேமெண்ட் தொகை முழுவதும் திருப்பிச் செலுத்தப்படும் வரை, Shopify Capital-க்கு நீங்கள் திருப்பிச் செலுத்தும் உங்கள் தினசரி விற்பனையின் சதவீதம். |
| வழங்குதல் | நிதியுதவியை அனுப்ப. |
| காரணி அல்லது காரணி விகிதம் | அனுப்ப வேண்டிய மொத்தத் தொகையைத் தீர்மானிக்க, பெறப்பட்டத் தொகையைப் பெருக்கும் எண். |
| நிலையான கடன்பெறும் செலவு | ஒரு Shopify Capital கடனைப் பெறுவதற்கான கட்டணம், இது நிதியுதவிக்கான செலவு எனவும் அறியப்படும். |
| நிதியுதவி | மூலதனத்திற்கான அணுகல். |
| மொத்த தினசரி விற்பனை | ஒரு குறிப்பிட்ட நாளில் நடக்கும் மொத்த விற்பனைத் தொகை. இதில் வரிகளும் ஷிப்பிங்கும் அடங்கும். |
| கடன் தொகை | Shopify Capital கடனிலிருந்து நீங்கள் பெறும் நிதியுதவி. |
| பெறத்தக்கவைகள் | உங்களின் எதிர்கால விற்பனையின் கொள்முதல். |
| மீதமுள்ள இருப்பு | பணம் அனுப்ப வேண்டிய மொத்தத் தொகையில், Shopify Capital-க்கு இன்னும் அனுப்பப்பட வேண்டியத் தொகை. |
| பணம் அனுப்பு | பணம் அனுப்ப வேண்டிய மொத்தத் தொகைக்கு ஈடாகப் பணத்தை வழங்குதல். |
| பணம் அனுப்புதல் | பணம் அனுப்ப வேண்டிய மொத்தத் தொகைக்கு ஈடாக வழங்கப்படும் பணம். |
| செலுத்துகை வீதம் அல்லது தினசரிப் பணம் அனுப்பும் சதவீதம் | பணம் அனுப்ப வேண்டிய மொத்தத் தொகை முழுவதும் அனுப்பப்படும் வரை Shopify Capital-க்கு அனுப்பப்படும் உங்கள் தினசரி விற்பனை வருவாயின் சதவீதம். |
| பிணைய உரிமை | Shopify கடன் ஒப்பந்தங்களில், பணம் செலுத்தத் தவறிய நிகழ்வின்போது பிணையமாக வணிகத்தின் மீதான சட்டப்பூர்வ உரிமையாகப் பிணைய உரிமை சேர்க்கப்பட்டிருக்கும். உங்கள் கடனின் அளவு மற்றும் உங்களது வணிகம் தொடர்பான உண்மைகள் மற்றும் சூழ்நிலைகள் உட்படப் பல காரணிகளின் அடிப்படையில் உங்களது கடன் தொடர்பாக யூனிஃபார்ம் கமர்ஷியல் கோட்-1 (UCC-1) நிதி அறிக்கை தாக்கல் செய்யப்படலாம். |
| மொத்த பேமெண்ட் தொகை | கடன் தொகையுடன் Shopify Capital கடனின் நிலையான கடன் வாங்கும் செலவும் சேர்ந்ததே மொத்தத் தொகையாகும். இது திருப்பிச் செலுத்தப்பட வேண்டிய மொத்தத் தொகையாகும். |
| பணம் அனுப்ப வேண்டிய மொத்தத் தொகை | Shopify Capital வாங்கும் எதிர்கால விற்பனை வருவாயின் தொகை. பெறப்பட்ட தொகையை காரணி விகிதத்தால் பெருக்கி இது கணக்கிடப்படுகிறது. |
| UCC-1 நிதி அறிக்கை | கடன் வாங்கியவரின் குறிப்பிட்ட வணிகப் பிணையத்தில் கடன் வழங்குபவருக்கான பிணைய உரிமை குறித்து அறிவிக்க, கடன் வழங்குபவரால் தாக்கல் செய்யப்படும் பொது ஆவணம் இதுவாகும். கடனுக்கான பாதுகாப்பாகப் பயன்படுத்தப்பட்ட பிணையத்தின் மீது UCC-1 முன்னுரிமை உரிமையை நிறுவி, செலுத்தத் தவறிய நிகழ்வின் போது திருப்பிச் செலுத்துதலாக அந்தப் பிணையத்தைக் கோரும் உரிமையை Shopify-க்கு வழங்குகிறது. வணிகம் அமைந்துள்ள அல்லது தனிநபர் வசிக்கும் மாகாணத்தின் செயலாளரிடம் UCC-1 நிதி அறிக்கைகள் தாக்கல் செய்யப்படுகின்றன. கடன் முழுமையாகத் திருப்பிச் செலுத்தப்பட்டவுடன் பொது ஆவணத்திலிருந்து நிதி அறிக்கைகள் அகற்றப்படலாம். |