Shopify Capital க்கான ஆவணங்களைப் பதிவேற்றுதல்
நீங்கள் Capital நிதியுதவிக்கு விண்ணப்பிக்கும்போது, உங்கள் தற்போதைய நிதியைச் சரிபார்க்க, இருப்புநிலைக் குறிப்புகள், வருமான அறிக்கைகள், பணப்புழக்க அறிக்கைகள் போன்ற கூடுதல் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டியிருக்கலாம். நிதியுதவிக்கான உங்கள் தகுதியைத் தீர்மானிக்க இது பயன்படுத்தப்படுகிறது. பாதுகாப்பான பதிவேற்றக் கருவியைப் பயன்படுத்தி, உங்கள் நிர்வாகியில் இந்த ஆவணங்களைச் சமர்ப்பிக்கலாம்.
இந்தப் பக்கத்தில்
ஆவணங்களை எப்போது பதிவேற்ற வேண்டும்
உங்கள் விண்ணப்பத்தின்போது கூடுதல் ஆவணங்கள் தேவைப்பட்டால், விண்ணப்பத்தின் ஆரம்பப் பகுதியைச் சமர்ப்பித்த பிறகு, பதிவேற்றும் செயல்முறையைத் தொடங்குவதற்கான விருப்பத்தேர்வு கணக்கு உரிமையாளருக்கு வழங்கப்படும், மேலும் அவர் மின்னஞ்சல் மூலமாக ஓர் அறிவிப்பையும் பெறுவார். இரண்டு விருப்பத்தேர்வுகளும் உங்கள் ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்கான அதே பாதுகாப்பான பதிவேற்றப் பக்கத்திற்குச் செல்லும். இந்த ஆவணங்கள் அனைத்தும் உங்களிடம் இல்லை என்றால், ஆவணங்கள் விடுபட்டுள்ளன என்பதையும் எந்த ஆவணங்கள் விடுபட்டுள்ளன என்பதையும் நீங்கள் சுட்டிக்காட்டலாம். மேலும் அவை ஏன் விடுபட்டுள்ளன என்பதற்கான சூழலையும் வழங்கலாம். உங்கள் விண்ணப்பத்திற்கு ஆதரவாக விருப்பத்திற்குரிய, துணை ஆவணங்களையும் சமர்ப்பிக்கலாம்.
ஆவண வகைகள்
நீங்கள் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் விண்ணப்ப மேலோட்டப் பக்கத்திலும், நீங்கள் பெறும் மின்னஞ்சலிலும் குறிப்பிடப்பட்டிருக்கும். நீங்கள் சமர்ப்பிக்க வேண்டியிருக்கக்கூடிய ஆவணங்களில் பின்வரும் வகைகள் அடங்கும், ஆனால் இவை மட்டுமல்ல:
- இருப்புநிலைக் குறிப்பு: குறிப்பிட்ட நேரத்தில் ஒரு வணிகத்தின் நிதி நிலையைக் சுருக்கமாகக் கூறும் நிதி அறிக்கை. இது ஒரு வணிகத்தின் சொத்துகள், பொறுப்புகள், உரிமையாளர் பங்கு ஆகியவற்றின் மதிப்பு பற்றிய மேலோட்டத்தை வழங்குகிறது.
- வருமான அறிக்கை: இலாப நட்ட (P&L) அறிக்கை எனவும் இது அழைக்கப்படுகிறது. இது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குட்பட்ட வணிகத்தின் வருவாய்களையும் செலவுகளையும் காண்பிக்கிறது. மேலும் இது வழக்கமாக விற்பனை/வருவாய், செலவினங்கள், செயல்பாட்டுச் செலவுகள், வட்டி, வரிகள், நிகர வருமானம் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கும்.
- பணப்புழக்க அறிக்கை: செயல்பாடுகளிலிருந்து கிடைக்கும் பணப்புழக்கம், முதலீட்டிலிருந்து கிடைக்கும் பணப்புழக்கம், நிதியுதவியிலிருந்து கிடைக்கும் பணப்புழக்கம் ஆகியவற்றைக் காட்டி, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குட்பட்டு வணிகத்திற்கு வரும் மற்றும் வணிகத்திலிருந்து செல்லும் ரொக்கத்தின் அளவைக் காட்டுகிறது
பதிவேற்றும் கருவி, பின்வரும் எந்தவொரு வடிவமைப்பிலும் உள்ள ஆவணங்களை ஆதரிக்கிறது:
- CSV
- PNG
- JPEG
- DOC
ஆவணப்படுத்தப்பட்ட காலகட்டங்கள்
இந்த ஆவணங்களைச் சமர்ப்பிக்கும்போது, குறிப்பிட்ட தேதிக்கான வரம்பை உள்ளடக்கிய ஆவணங்களை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்:
- நிதியாண்டு: கடந்த 2 நிதியாண்டுகளுக்கான ஆவணங்களை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். ஒரு நிதியாண்டு 12 மாத காலத்தை உள்ளடக்கியது. அதன் தொடக்க, முடிவுத் தேதிகள் உங்கள் வணிகச் செயல்பாடுகளைப் பொறுத்தது.
- நடப்பு ஆண்டு: அதாவது உங்கள் வணிகத்தின் நிதியாண்டு தொடங்கியதில் இருந்து நடப்புத் தேதி வரையிலான காலம். எடுத்துக்காட்டாக, ஜூலை 1 ஆம் தேதி ஆவணங்கள் கோரப்பட்டால், உங்கள் நிதியாண்டு ஜனவரி 1 ஆம் தேதி தொடங்கினால், தேதி வரம்பு ஜனவரி 1 முதல் ஜூலை 1 வரையாகும். உங்கள் நிதியாண்டு ஜூன் 1 அன்று தொடங்கினால், தேதி வரம்பு ஜூன் 1 முதல் ஜூலை 1 வரையாகும். இரண்டு ஆண்டுகளுக்கும் அதே, சமமான கால அளவிற்கு நீங்கள் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
படிநிலைகள்:
- உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, நிதி > Capital என்பதற்குச் செல்லவும் அல்லது உங்கள் அறிவிப்பு மின்னஞ்சலில் இருந்து, நிதி அறிக்கைகளைப் பதிவேற்று பக்கத்திற்குச் செல்ல பதிவேற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
- இந்த நிதி அறிக்கைகளைப் பதிவேற்று பக்கத்தில், தேவைக்கேற்ப பின்வரும் படிகளில் ஏதேனும் ஒன்றைச் செய்யவும்:
- அந்தக் காலகட்டத்திற்கான கிடைக்கக்கூடிய அனைத்து ஆவணங்களும் பதிவேற்றப்பட்டவுடன், அடுத்து என்பதைக் கிளிக் செய்யவும். ஒவ்வொரு தேவையையும் பூர்த்தி செய்ய, நீங்கள் பல ஆவணங்களைச் சமர்ப்பிக்கலாம்.
- மற்றொரு பதிவேற்றப் புலத்தில் இந்தக் காலகட்டத்திற்கான ஆவணத் தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்திருந்தால், தவிர் என்பதைக் கிளிக் செய்யவும்.
- விண்ணப்பிக்கும் நேரத்தில் கோரப்பட்ட ஆவணங்கள் உங்களிடம் இல்லையென்றால், இந்தக் காலகட்டத்திற்கான ஆவணங்கள் என்னிடம் இல்லை என்பதைக் கிளிக் செய்து, விவரங்களை வழங்கு உரைப் பெட்டியில் எழுத்துப்பூர்வமான விளக்கத்தை வழங்கவும்.
- இந்த மதிப்பாய்வுக்காகச் சமர்ப்பி பிரிவு, இதில் நீங்கள் பின்வரும் படிகளில் ஏதேனும் ஒன்றைச் செய்யலாம்:
- வழங்கப்பட்ட ஆவணங்களின் விவரங்கள், விடுபட்ட ஆவணங்களுக்கான கூடுதல் காரணம் அல்லது உங்கள் விண்ணப்பத்திற்கு ஆதரவாக இருக்கக்கூடிய ஏதேனும் தகவல்கள் போன்ற விருப்பத்திற்குரிய, பயனுள்ள ஏதேனும் தகவலைச் சேர்க்கவும்.
- உங்கள் விண்ணப்பத்திற்கு ஆதரவாக இருக்கக்கூடிய விருப்பத்திற்குரிய, கூடுதல் ஆவணங்களைச் சமர்ப்பிக்க, பதிவேற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் விண்ணப்பத்தை நிறைவு செய்ய, சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.
ஆவணத் தேவையைப் பூர்த்தி செய்யத் தவறினால், உங்கள் விண்ணப்பத்தை மதிப்பாய்வு செய்ய அதிக நேரம் ஆகலாம்.
ஆவணச் சமர்ப்பிப்புச் செயல்முறையை நீங்கள் நிறைவு செய்தவுடன், மதிப்பாய்வு செயலில் உள்ளதற்கான அறிவிப்பைப் பெறுவீர்கள். மதிப்பாய்வுகளுக்கு வழக்கமாக 3-7 வணிக நாட்கள் ஆகும், ஆனால் கூடுதல் தகவல் தேவைப்பட்டால் இன்னும் அதிக நேரம் ஆகலாம். தகவலுக்கான கூடுதல் கோரிக்கைகள் கணக்கு உரிமையாளரின் மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பப்படும்.
Shopify நிர்வாகியிலுள்ள Capital பக்கத்திற்குச் செல்வதன் மூலம் உங்கள் விண்ணப்பத்தின் நிலையை நீங்கள் சரிபார்க்கலாம்.
கூடுதல் தகவலைப் பதிவேற்றுதல்
நீங்கள் பதிவேற்றும் ஆவணங்கள் மதிப்பாய்வு செய்யப்படும்போது, உங்கள் விண்ணப்ப மதிப்பாய்வை நிறைவு செய்ய கூடுதல் தகவல்களை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டியிருக்கலாம். கூடுதல் தகவல் தேவைப்பட்டால், கணக்கு உரிமையாளரின் மின்னஞ்சல் முகவரியில் நீங்கள் தொடர்புகொள்ளப்படுவீர்கள். நீங்கள் கூடுதல் ஆவணங்களைப் பதிவேற்றவோ உங்கள் விண்ணப்பம் குறித்த கேள்விகளுக்குப் பதிலளிக்கவோ கேட்கப்படலாம்.
Shopify நிர்வாகியின் Capital பிரிவுக்குச் செல்வதன் மூலம் உங்கள் விண்ணப்பத்தின் நிலையையும், கூடுதல் தகவல் தேவைப்படுகிறதா என்பதையும் நீங்கள் சரிபார்க்கலாம்.
படிநிலைகள்
- உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, நிதி > Capital என்பதற்குச் செல்லவும் அல்லது உங்கள் அறிவிப்பு மின்னஞ்சலில் இருந்து, பதிவேற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
- ஆவணங்களைப் பதிவேற்று பிரிவில், உங்களிடம் கோரப்படும் ஆவணங்களை மதிப்பாய்வு செய்து, பின்வரும் செயல்களில் ஏதேனும் ஒன்றைப் பின்பற்றவும்:
- பொருத்தமான ஆவணத்தைத் தேர்ந்தெடுக்க, கோப்புகளைப் பதிவேற்று என்பதைக் கிளிக் செய்து, பிறகு கோப்புகளைப் பதிவேற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
- விண்ணப்பிக்கும் நேரத்தில் கோரப்பட்ட ஆவணங்கள் உங்களிடம் இல்லையென்றால், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆவணங்கள் என்னிடம் இல்லை என்பதைத் தேர்ந்தெடுத்து, விவரங்களை வழங்கு உரைப் பெட்டியில் கூடுதல் தகவலைச் சேர்க்கவும்.
- தொடர் கேள்விகள் பிரிவில், கூடுதல் தகவல் தேவைப்படும் ஏதேனும் கேள்விகளுக்கு உங்கள் பதில்களை உள்ளிடவும்.
- விருப்பத்திற்குரியது: கூடுதல் துணை ஆவணங்களை வழங்க, கூடுதல் கோப்புகளை இணை என்பதைத் தேர்ந்தெடுத்து, கோப்புகளைப் பதிவேற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
- சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.
ஆவணப் பதிவேற்றங்களை ஒரு மூன்றாம் தரப்பிடம் ஒப்படைத்தல்
உங்கள் Shopify Capital விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்ய ஆவணங்கள் தேவை என உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டால், உங்களுக்காக ஆவணத்தைப் பதிவேற்றும் கோரிக்கையை நிறைவேற்ற அங்கீகரிக்கப்பட்ட மூன்றாம் தரப்பினருக்கு நீங்கள் பொறுப்பை வழங்கலாம். மூன்றாம் தரப்பினரின் மின்னஞ்சல் முகவரியை வழங்குவதன் மூலம், அவர்களைத் தொடர்புகொள்ள Shopify க்கு நீங்கள் அனுமதியளிக்கிறீர்கள், அத்துடன் உங்கள் நிதித் தகவலை Shopify உடன் பகிர்ந்துகொள்ள அந்த மூன்றாம் தரப்பினருக்கும் அதிகாரம் வழங்குகிறீர்கள். ஆவணச் சமர்ப்பிப்புச் செயல்முறையின் நிலவரம் குறித்து நீங்கள் தெரிந்துகொள்ள, மூன்றாம் தரப்பினருக்கு அனுப்பப்படும் மின்னஞ்சலின் நகல் ஒன்றைப் பெறுவீர்கள்.
மூன்றாம் தரப்பினரால் Shopify தளத்தையோ, உங்கள் Capital விண்ணப்பம் குறித்த எந்தவொரு தகவலையோ அணுக முடியாது. குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்திக் கோரப்பட்ட ஆவணங்களை வழங்குமாறு அவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். மூன்றாம் தரப்பினருக்கு நீங்கள் பொறுப்பை வழங்கினால், நீங்கள் அந்த மின்னஞ்சலுக்குப் பதிலளித்து, மூன்றாம் தரப்புக்கு வழங்கப்பட்ட பொறுப்பை ரத்துசெய்யுமாறு கோரும் வரை உங்களால் ஆவணங்களைப் பதிவேற்ற முடியாது.
படிநிலைகள்
- உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, நிதி > Capital என்பதற்குச் செல்லவும் அல்லது உங்களது தற்போதைய விண்ணப்பத்தை மதிப்பாய்வு செய்ய உங்கள் அறிவிப்பு மின்னஞ்சலிலிருந்து பதிவேற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
- நிதி அறிக்கைகளைப் பதிவேற்று பிரிவில், எனக்குச் சார்பாக அறிக்கைகளை வழங்க கோரிக்கையை ஒரு தொடர்பாளருக்கு அனுப்பு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- தொடர்பாளர் மின்னஞ்சல் புலத்தில், ஆவணப் பதிவேற்றப் பொறுப்பை நீங்கள் வழங்க விரும்பும் மூன்றாம் தரப்பினரின் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.
- கோரிக்கையை அனுப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
இந்தப் பொறுப்பை வழங்க நீங்கள் தேர்வுசெய்யும்போது பெறப்படும் மின்னஞ்சலுக்குப் பதிலளிப்பதன் மூலம் எந்த நேரத்திலும் மூன்றாம் தரப்புக்கான பொறுப்பை உங்களால் ரத்துசெய்ய முடியும்.