உங்கள் Shopify Credit கணக்கிலுள்ள கட்டணம் குறித்துப் புகாரளித்தல்
ஒரு Shopify வணிகராக, உங்கள் Shopify Credit கணக்கில் உள்ளவை உட்பட, உங்களின் நிதிப் பரிவர்த்தனைகளைக் கண்காணிப்பது முக்கியமாகும். தவறானது என்று நீங்கள் கருதும் ஒரு பரிவர்த்தனையைக் கண்டறிந்தால், அதைக் குறித்துப் புகாரளிப்பதற்கான விருப்பத்தேர்வு உங்களுக்கிருக்கிறது.
உங்கள் Shopify Credit வணிகக் கட்டணக் கார்டின் பாதுகாப்பு மீறப்பட்டிருப்பதாகவோ, அது தொலைந்துவிட்டதாகவோ, திருடப்பட்டிருப்பதாகவோ அல்லது மோசடியான முறையில் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவோ நீங்கள் சந்தேகித்தால், உங்கள் கணக்கைப் பாதுகாப்பதற்கும், மேலும் எந்தவொரு அங்கீகரிக்கப்படாத செயல்பாடும் நடைபெறுவதைத் தடுப்பதற்கும், நீங்கள் உடனடியாகக் கார்டை ரத்துசெய்து மாற்று கார்டைக் கோர வேண்டும்.
இந்தப் பக்கத்தில்
- புகாருக்கும் பணத்தைத் திரும்பப்பெறுதலுக்கும் இடையிலான வித்தியாசத்தைப் புரிந்துகொள்ளுதல்
- பாதுகாப்பு மீறப்பட்ட Shopify Credit வணிகக் கார்டுகள்
- கட்டணம் குறித்துப் புகாரளிக்கும் முன் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்
- உங்கள் Shopify Credit கணக்கிலுள்ள கட்டணங்கள் குறித்துப் புகாரளித்தல்
- தீர்வுக்கான காலக்கெடு மற்றும் இறுதி முடிவுகள்
புகாருக்கும் பணத்தைத் திரும்பப்பெறுதலுக்கும் இடையிலான வித்தியாசத்தைப் புரிந்துகொள்ளுதல்
உங்கள் கணக்கிலுள்ள ஒரு குறிப்பிட்ட கட்டணத்தில் பிழையோ சிக்கலோ இருப்பதைக் கண்டறியும்போது புகார் எழுகிறது, பில்லிங் தவறாக உள்ளதென்றோ அல்லது விற்பனையாளர் ஒப்புக்கொள்ளப்பட்ட சேவை விதிமுறைகளைப் பூர்த்தி செய்யத் தவறிவிட்டார் என்றோ இது அறிவிக்கிறது. தவறான பில்லிங் தொகைகள், தயாரிப்புகள் அல்லது சேவைகளின் தரம் குறித்த அதிருப்தி அல்லது தயாரிப்புகள் அல்லது சேவைகள் வழங்கப்படாதது ஆகியவை இதில் அடங்கும். புகாரளிக்கும் செயல்முறையானது Shopify Credit-இன் (கார்டை வழங்குபவர்) மூலம் கட்டணத்தை முறையாக எதிர்ப்பதை உள்ளடக்குகிறது, பின்னர் அவர் அந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்காக விற்பனையாளருடன் விசாரணை செய்து மத்தியஸ்தம் செய்கிறார்.
இதற்கு மாறாக, பணத்தைத் திரும்பப்பெறுதல் என்பது பொதுவாகத் திட்டங்களில் ஏற்படும் மாற்றம், கொள்முதல் மீதான அதிருப்தி அல்லது திருப்பியளிப்புக் கொள்கையின் அடிப்படையில் தயாரிப்புகளைத் திருப்பியளிப்பதற்கான முடிவு ஆகியவற்றின் காரணமாக, ஒரு கொள்முதலுக்கான பணத்தைத் திரும்பக் கொடுக்குமாறு விற்பனையாளரிடம் நேரடியாகக் கேட்கப்படும் ஒரு நேரடியான கோரிக்கையாகும். புகார்களைப் போல் அல்லாமல், பணத்தைத் திரும்பப்பெறுதலின் தொடக்கக் கட்டங்களில் கார்டை வழங்குபவர் ஈடுபட மாட்டார் மற்றும் இது உங்களுக்கும் விற்பனையாளருக்கும் இடையே நேரடியாகக் கையாளப்படுகிறது.
ஒவ்வொரு வகையான புகாரும் எவ்வாறு தீர்க்கப்படுகிறது என்பதே முக்கிய வித்தியாசமாகும். புகார்களின்போது ஒரு இடைத்தரகர் (கார்டை வழங்குபவர்) ஈடுபடுத்தப்படுவார் மற்றும் இவை பில்லிங் பிழைகள் அல்லது சேவை விதிமுறைகளை நிறைவேற்றத் தவறியது ஆகிய கோரிக்கைகளின் அடிப்படையில் அமைந்தவை. பணத்தைத் திரும்பப்பெறுதல் என்பவை தொடக்கப் பரிவர்த்தனையின் நியாயத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்காமல், வாடிக்கையாளர் திருப்தி அல்லது திருப்பியளிப்புக் கொள்கைகளின் அடிப்படையில் விற்பனையாளருடன் நேரடியாக மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளாகும்.
பாதுகாப்பு மீறப்பட்ட Shopify Credit வணிகக் கார்டுகள்
உங்கள் Shopify Credit வணிகக் கார்டின் பாதுகாப்பு மீறப்பட்டிருப்பதாகவோ, அது தொலைந்துவிட்டதாகவோ, திருடப்பட்டிருப்பதாகவோ அல்லது மோசடியான முறையில் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவோ நீங்கள் கருதினால், அதைக் கண்டறிந்தவுடன் உடனடியாக நீங்கள் அந்தக் கார்டை ரத்துசெய்து புதிய கார்டை ஆர்டர் செய்ய வேண்டும்.
உங்கள் Shopify Credit வணிகக் கார்டை மாற்றுவது அல்லது லாக் செய்வது எப்படி என அறிந்துகொள்ளுங்கள்.
கட்டணம் குறித்துப் புகாரளிக்கும் முன் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்
கட்டணம் குறித்துப் புகாரளிக்கும் முன், விற்பனையாளரைத் தொடர்புகொள்வதையும், பரிவர்த்தனை விவரங்களைச் சரிபார்ப்பதையும் கவனத்தில் கொள்ளவும்:
- பிற கணக்குப் பயனர்களிடம் சரிபார்க்கவும்: புகார் அளிப்பதைத் தொடரும் முன், உங்கள் Shopify கணக்கின் பிற பயனர்களுக்கு இந்தப் பரிவர்த்தனை பற்றித் தெரியவில்லை என்பதை உறுதிப்படுத்தவும்.
- விற்பனையாளரைத் தொடர்புகொள்ளவும்: பல நிகழ்வுகளில், நேரடியாக விற்பனையாளரைத் தொடர்புகொள்வது விரைவான தீர்வுக்கு வழிவகுக்கும். புகாரளிப்பதற்கு முன், விற்பனையாளருடன் பேசி சிக்கலைத் தீர்க்க முயற்சிப்பதைக் கருத்தில் கொள்ளவும். உங்களுக்கு ஒரு பரிவர்த்தனை ID தேவைப்பட்டால், நீங்கள் Shopify ஆதரவைத் தொடர்புகொள்ள வேண்டும்.
- பரிவர்த்தனை விவரங்களைச் சரிபார்க்கவும்: பரிவர்த்தனை பதிவுசெய்யப்பட்டிருப்பதை உறுதிசெய்து, பரிவர்த்தனைத் தேதி புகாரளிக்கத் தகுதியான காலகட்டத்திற்குள் உள்ளதா (அங்கீகரிக்கப்படாத பயன்பாடு தவிர, 60 நாட்களுக்கு முந்தையதாக இருக்கக் கூடாது) என்பதைச் சரிபார்க்கவும்.
உங்கள் Shopify Credit கணக்கிலுள்ள கட்டணங்கள் குறித்துப் புகாரளித்தல்
ஒரு சர்ச்சையைத் தொடங்குவதற்கு முன், பின்வரும் விஷயங்களைக் கவனத்தில் கொள்ளவும்:
- செயலாக்கப்பட்ட பரிவர்த்தனைகள் மீது மட்டுமே நீங்கள் சர்ச்சையை எழுப்ப முடியும்.
- நீங்கள் சர்ச்சைகளை உடனடியாகப் புகாரளிக்க வேண்டும்.
- தகுதிபெறுவதற்குச் சர்ச்சைகள் குறிப்பிட்ட வகைகளின் கீழ் வர வேண்டும். கார்டு பரிவர்த்தனை அல்லது தானியங்கு தீர்வகம் (ACH) பரிமாற்றம் போன்ற பரிவர்த்தனை வகையைப் பொறுத்து தகுதியான வகைகள் மாறுபடும்.
- நீங்கள் கொள்முதல்கள் மீது மட்டுமே சர்ச்சையை எழுப்ப முடியும். பணத்தைத் திரும்பப்பெறுதல்கள் மீது சர்ச்சையை எழுப்ப முடியாது.
- Shopify Credit பரிவர்த்தனைச் சர்ச்சைகள் தீர்க்கப்படுவதற்கு 90 நாட்கள் வரை ஆகலாம், மேலும் சர்ச்சைச் செயல்முறையின் முடிவில் எடுக்கப்படும் முடிவே இறுதியானது.
Shopify Credit சர்ச்சைகளுக்குத் தேவையான ஆவணங்கள்
நீங்கள் ஒரு சர்ச்சையைத் திறக்கும்போது, உங்கள் உரிமைகோரலை ஆதரிக்கும் ஆவணங்களை வழங்க வேண்டும். நீங்கள் வழங்கும் ஆவணங்களின் வகையானது நீங்கள் தேர்ந்தெடுக்கும் சர்ச்சைக் காரணத்தைப் பொறுத்தது.
ஒரு சர்ச்சையைத் திறக்கும்போது ஆவணத் தேவைகளை விளக்கும் பின்வரும் அட்டவணையைச் சரிபார்க்கவும்.
| சர்ச்சையின் வகை | விளக்கம் | தேவையான தகவல் |
|---|---|---|
| மோசடியானது | கார்டுதாரரால் அங்கீகரிக்கப்படவில்லை. கார்டு விவரங்கள் தொலைந்துவிட்டன அல்லது திருடப்பட்டு மோசடியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் கட்டணத்தைக் கார்டுதாரர் அங்கீகரிக்கவில்லை, மேலும் இது கார்டுதாரரால் அல்லது அவரது குடும்ப உறுப்பினரால் செய்யப்படவில்லை. நீங்கள் ஒரு ஸ்டோரில் ஆர்டர் செய்து, அந்த ஸ்டோர் மோசடியானது எனச் சந்தேகித்தால், தயாரிப்பு அல்லது சேவை பெறப்படவில்லை போன்ற வேறு காரணத்திற்காகச் சர்ச்சையைச் சமர்ப்பிக்க வேண்டும். |
|
| மோசடியற்றது | கொள்முதல் ரத்துசெய்யப்பட்டது. வணிகர் கொள்கைகளின்படி சேவைகள் அல்லது பொருட்களுக்கான கட்டணங்கள் ரத்துசெய்யப்பட்டன. ரத்துசெய்தல் கொள்கைக்கான காலக்கெடுவிற்கு வெளியே சேவை அல்லது தயாரிப்பை ரத்துசெய்யும் முயற்சிகள் இதில் சேராது. |
|
| பல முறை கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஒரே பரிவர்த்தனைக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட முறை கட்டணம் வசூலிக்கப்பட்டது, மேலும் வேண்டுமென்றே செய்யப்பட்ட பல ஒத்த பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்கள் இதில் சேராது. | பின்வருவனவற்றில் சரியாக ஒன்றைச் சமர்ப்பிக்கவும்:
| |
| தவறான தொகை வசூலிக்கப்பட்டது. விற்பனையின் போது வணிகர் வழங்கிய ஒப்புக்கொள்ளப்பட்ட மொத்தத் தொகை உங்கள் கணக்கில் வசூலிக்கப்படவில்லை. |
| |
| தயாரிப்பு அல்லது சேவை விவரித்தபடி இல்லை. பெறப்பட்ட உருப்படி அல்லது சேவையானது வாங்கும் போது விவரிக்கப்பட்டதிலிருந்து வேறுபட்டிருந்தது. வாங்குபவரின் வருத்தம் அல்லது வணிகரால் உறுதியளிக்கப்படாத அகநிலை அனுபவங்களின் அடிப்படையிலான சேவைப் புகார்கள் இதில் சேராது. |
| |
| தயாரிப்பு அல்லது சேவை பெறப்படவில்லை. பொருட்கள் அல்லது சேவைகளுக்குப் பணம் செலுத்தப்பட்டது, ஆனால் ஒப்புக்கொண்டபடி வழங்கப்படவில்லை. |
|
Shopify நிர்வாகியிலிருந்து மோசடியான Shopify Credit வணிகக் கட்டண கார்டு பரிவர்த்தனைகள் மீது சர்ச்சையை எழுப்புங்கள்
ஒரு பரிவர்த்தனையை மோசடியானது அல்லது சமரசம் செய்யப்பட்டது என நீங்கள் புகாரளித்தால் அல்லது உங்கள் கார்டு தொலைந்துவிட்டால் அல்லது திருடப்பட்டால், உங்களின் Shopify Credit வணிகக் கட்டண கார்டு உடனடியாக ரத்துசெய்யப்பட்டு, மாற்று கார்டு வழங்கப்படும். மெய்நிகர் மாற்று கார்டுகள் உடனடியாக வழங்கப்படுகின்றன. பருப்பொருள் கார்டுகளுக்கு, உங்கள் மாற்று கார்டு 5-8 வணிக நாட்களுக்குள் வந்து சேரும். உங்களின் புதிய கார்டைப் பெற்ற பிறகு, ஏதேனும் தொடர் பேமெண்ட்களை உங்களின் புதிய கார்டு விவரங்களைக் கொண்டு புதுப்பிக்க வேண்டும்.
உங்கள் Shopify கிரெடிட் கணக்கிலுள்ள கார்டு பரிவர்த்தனை மோசடியானது என்று நீங்கள் சந்தேகித்தால், உங்கள் Shopify நிர்வாகியிலுள்ள Credit பிரிவில் இருந்து சர்ச்சைச் செயல்முறையைத் தொடங்கலாம்.
படிகள்:
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, நிதி என்பதற்குச் செல்லவும்.
Credit என்பதைக் கிளிக் செய்யவும்.
பரிவர்த்தனைகள் பிரிவில், மோசடியானது என நீங்கள் புகாரளிக்க விரும்பும் பரிவர்த்தனையைக் கிளிக் செய்யவும்.
காண்பிக்கப்படும் தேதிக்கு முன் பரிவர்த்தனைக்குச் சர்ச்சை எழுப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் சர்ச்சைக்கு ஆதரவான விவரங்களை வழங்கவும்:
- உங்கள் சிக்கலை விவரிக்கவும்.
- போலீஸ் அறிக்கைகள் அல்லது விற்பனையாளர்களுடனான தகவல் தொடர்புகள் போன்ற உங்கள் உரிமைகோரலை ஆதரிக்கும் தொடர்புடைய ஆதாரங்களைப் பதிவேற்ற, கோப்பைச் சேர் என்பதைக் கிளிக் செய்து, பின்னர் தொடர்க என்பதைக் கிளிக் செய்யவும். PDF கோப்புகள் 50 பக்கங்களுக்கும் குறைவாக இருக்க வேண்டும். கிரெடிட் கார்டு எண்கள் அல்லது தனிப்பட்ட கடவுச்சொற்கள் போன்ற எந்தவொரு முக்கியமான தகவலையும் சேர்க்கவில்லை என்பதை உறுதிப்படுத்தவும்.
அடுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
விருப்பத்திற்குரியது: நீங்கள் பருப்பொருள் கார்டைப் பயன்படுத்தியிருந்தால், மாற்று கார்டுக்கான உங்கள் ஷிப்பிங் முகவரியை உறுதிப்படுத்தவும்:
- பதிவிலுள்ள ஷிப்பிங் முகவரியைச் சரிபார்க்கவும்.
- விருப்பத்திற்குரியது: ஷிப்பிங் முகவரியைப் புதுப்பிக்க,
என்பதைக் கிளிக் செய்து, உங்கள் தற்போதைய ஷிப்பிங் முகவரித் தகவலைச் சேர்க்கவும்.
- அடுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் சர்ச்சையின் விவரங்களைச் சரிபார்க்கவும். ஏதேனும் விவரங்கள் தவறாக இருந்தால் அல்லது கூடுதல் தகவல்களைச் சேர்க்க விரும்பினால், சர்ச்சையைப் புதுப்பிக்க
என்பதைக் கிளிக் செய்யவும்.
அறிக்கையைச் சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
Shopify செயலியில் இருந்து,
ஐகானைத் தட்டவும்.
நிதி என்பதைத் தட்டி, பின்னர் கணக்குகள் பிரிவில், Credit என்பதைத் தட்டவும்.
பரிவர்த்தனைகள் பிரிவில், மோசடியானது என நீங்கள் புகாரளிக்க விரும்பும் பரிவர்த்தனையைத் தட்டவும்.
காட்டப்படும் தேதிக்கு முன்பு பரிவர்த்தனை குறித்து முறையிடு என்பதைத் தட்டவும்.
பரிவர்த்தனை குறித்து முறையிடு பிரிவில், முறையீட்டிற்கான காரணத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
உங்கள் சர்ச்சைக்கு ஆதரவான விவரங்களை வழங்கவும்:
- உங்கள் சிக்கலை விவரிக்கவும்.
- காவல் துறை அறிக்கைகள் அல்லது விற்பனையாளர்களுடனான தகவல் தொடர்புகள் போன்ற உங்கள் கோரிக்கையை ஆதரிக்கக்கூடிய தொடர்புடைய ஏதேனும் ஆதாரங்களைப் பதிவேற்ற கோப்பைச் சேர் என்பதைத் தட்டி, அதன்பின் தொடர்க என்பதைத் தட்டவும். PDF கோப்புகள் 50 பக்கங்களுக்குக் குறைவாக இருக்க வேண்டும். கிரெடிட் கார்டு எண்கள் அல்லது தனிப்பட்ட கடவுச்சொற்கள் போன்ற முக்கியமான தகவல்கள் ஏதேனும் இருந்தால் அவற்றைத் தவிர்ப்பதை உறுதிசெய்யவும்.
அடுத்து என்பதைத் தட்டவும்.
விருப்பத்திற்குரியது: நீங்கள் பருப்பொருள் கார்டைப் பயன்படுத்தியிருந்தால், மாற்று கார்டுக்கான உங்கள் ஷிப்பிங் முகவரியை உறுதிப்படுத்தவும்:
- பதிவிலுள்ள ஷிப்பிங் முகவரியைச் சரிபார்க்கவும்.
- விருப்பத்திற்குரியது: ஷிப்பிங் முகவரியைப் புதுப்பிக்க,
ஐகானைத் தட்டி, உங்கள் தற்போதைய ஷிப்பிங் முகவரித் தகவலைச் சேர்க்கவும்.
- அடுத்து என்பதைத் தட்டவும்.
உங்கள் முறையீட்டின் விவரங்களை மதிப்பாய்வு செய்யவும். ஏதேனும் விவரங்கள் தவறாக இருந்தாலோ நீங்கள் கூடுதல் தகவல்களைச் சேர்க்க விரும்பினாலோ, முறையீட்டைப் புதுப்பிக்க
ஐகானைத் தட்டவும்.
சமர்ப்பித்து கார்டை மாற்று என்பதைத் தட்டவும்.
உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள Shopify Credit பிரிவில் பரிவர்த்தனை விவரங்களைப் பார்ப்பதன் மூலம் உங்கள் மோசடிப் பரிவர்த்தனை அறிக்கையின் நிலையை நீங்கள் கண்காணிக்கலாம்.
மோசடியற்ற Shopify Credit பரிவர்த்தனைகள் குறித்து முறையிடுங்கள்
மோசடி வகைக்கு உட்படாத கார்டு பரிவர்த்தனை குறித்து நீங்கள் முறையிட விரும்பினால் (எடுத்துக்காட்டாக, நகல் பரிவர்த்தனை நிகழ்ந்திருந்தால் அல்லது பரிவர்த்தனையுடன் தொடர்புடைய தயாரிப்பு பெறப்படாமல் இருந்தால்), நீங்கள் உங்கள் Shopify நிர்வாகியில் முறையீட்டைத் தொடங்கலாம். குறிப்புக்காகப் பரிவர்த்தனை விவரங்களைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள், மேலும் ரசீதுகள், விற்பனையாளருடனான தகவல் தொடர்புகள், ரிட்டர்ன் செய்ததற்கான சான்று, மற்றும் சேவை ஒப்பந்தங்கள் போன்ற உங்கள் கோரிக்கையை ஆதரிக்கக்கூடிய தொடர்புடைய ஆவணங்களைச் சேகரித்து வையுங்கள்.
படிகள்:
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, நிதி என்பதற்குச் செல்லவும்.
Credit என்பதைக் கிளிக் செய்யவும்.
பரிவர்த்தனைகள் பிரிவில், நீங்கள் முறையிட விரும்பும் பரிவர்த்தனையைக் கிளிக் செய்யவும்.
காண்பிக்கப்படும் தேதிக்கு முன் பரிவர்த்தனைக்குச் சர்ச்சை எழுப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
பரிவர்த்தனை குறித்து முறையிடு பிரிவில், முறையீட்டிற்கான காரணத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
தேவையான தகவல்களை உள்ளிட்டு, பின்னர் அடுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
ஆதரவுத் தகவல் பிரிவில், உங்கள் முறையீடு தொடர்பான தகவல்களை உள்ளிடவும்.
ஆதரவு ஆவணத்தைச் சேர்க்க கோப்புகளைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும். அனைத்துக் கோப்புகளின் மொத்த அளவு 4.5 MB ஆகவோ அல்லது அதற்குக் குறைவாகவோ இருக்க வேண்டும். PDF கோப்புகள் 50 பக்கங்களுக்குக் குறைவாக இருக்க வேண்டும்.
மதிப்பாய்வு செய்து சமர்ப்பி பிரிவில், முறையீடு தொடர்பான தகவல்களை மதிப்பாய்வு செய்து, பின்னர் சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
Shopify செயலியில் இருந்து,
ஐகானைத் தட்டவும்.
நிதி என்பதைத் தட்டி, பின்னர் கணக்குகள் பிரிவில், Credit என்பதைத் தட்டவும்.
பரிவர்த்தனைகள் பிரிவில், நீங்கள் முறையிட விரும்பும் பரிவர்த்தனையைத் தட்டவும்.
காட்டப்படும் தேதிக்கு முன்பு பரிவர்த்தனை குறித்து முறையிடு என்பதைத் தட்டவும்.
பரிவர்த்தனை குறித்து முறையிடு பிரிவில், முறையீட்டிற்கான காரணத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
தேவையான தகவல்களை உள்ளிட்டு, பின்னர் அடுத்து என்பதைத் தட்டவும்.
ஆதரவுத் தகவல் பிரிவில், உங்கள் முறையீடு தொடர்பான தகவல்களை உள்ளிடவும்.
உங்கள் முறையீட்டை ஆதரிக்கும் ஆவணங்களைப் பதிவேற்ற கோப்புகளைச் சேர் என்பதைத் தட்டவும். அனைத்துக் கோப்புகளின் மொத்த அளவு 4.5 MB ஆகவோ அல்லது அதற்குக் குறைவாகவோ இருக்க வேண்டும். PDF கோப்புகள் 50 பக்கங்களுக்குக் குறைவாக இருக்க வேண்டும்.
மதிப்பாய்வு செய்து சமர்ப்பி பிரிவில், முறையீடு தொடர்பான தகவல்களை மதிப்பாய்வு செய்து, பின்னர் சமர்ப்பி என்பதைத் தட்டவும்.
தீர்வுகளுக்கான காலவரிசை மற்றும் இறுதி முடிவுகள்
சிக்கலின் தன்மை மற்றும் Visa போன்ற வலையமைப்பு விதிகளால் நிர்ணயிக்கப்பட்ட விவரங்களைப் பொறுத்து, முறையீடுகள் தீர்க்கப்படுவதற்கு 90 நாட்கள் வரை ஆகலாம். ஒரு முறையீட்டை நீங்கள் தொடங்கிய பிறகு, அதை உங்களால் ரத்துசெய்ய முடியாது.
உங்கள் முறையீட்டைச் சமர்ப்பித்த பிறகு, அது Shopify Credit-இன் வங்கிக் கூட்டாளர்களால் மதிப்பாய்வு செய்யப்படும். முறையீட்டு விசாரணையின் நிலை மற்றும் முடிவு தொடர்பான மின்னஞ்சல் அறிவிப்புகளைப் பெறுவீர்கள். முறையீடு உங்களுக்குச் சாதகமாகத் தீர்க்கப்பட்டால், உங்கள் கணக்கு அதற்கேற்ப சரிசெய்யப்படும்.
பரிவர்த்தனையால் ஏற்பட்ட கட்டணங்கள் ஏதேனும் இருந்தால், அவையும் உங்கள் கணக்கிற்குத் திருப்பி அளிக்கப்படும்.
முறையீட்டுச் செயல்முறையின் முடிவில் எடுக்கப்படும் தீர்மானமே இறுதியானது.