Shopify Credit திட்டத்தைத் தொடங்குதல்

Shopify Credit என்பது, நிலுவையில் உள்ள இருப்பை முழுமையாகச் செலுத்த வேண்டிய ஒரு பிசினஸ் Visa சார்ஜ் கார்டு ஆகும். தடைசெய்யப்பட்ட வகைகளைத் தவிர, Visa பரிவர்த்தனைகளை அனுமதிக்கும் எந்தவொரு வணிகர் அல்லது பிசினஸ் நிறுவனத்தாலும் உங்கள் Shopify Credit பிசினஸ் சார்ஜ் கார்டு ஏற்றுக்கொள்ளப்படும். ரொக்க முன்பணங்கள், மணி ஆர்டர்கள், வயர் பரிமாற்றங்கள் அல்லது சூதாட்டப் பரிவர்த்தனைகள் போன்ற ரொக்கத்திற்குச் சமமான பரிவர்த்தனைகளை Shopify Credit அனுமதிக்காது.

ஒப்புதல் பெற்றவுடன் மற்றும் கணக்கை அமைத்தவுடன், விர்ச்சுவல் Shopify Credit பிசினஸ் சார்ஜ் கார்டிற்கான உடனடி அணுகலைப் பெறுவீர்கள். அமைவை முடித்த பிறகு, விர்ச்சுவல் கார்டு தானாகவே உருவாக்கப்பட்டுப் பயன்பாட்டிற்குத் தயாராகிவிடும். நீங்கள் பிசிக்கல் கார்டையும் கோரலாம், இது 5-8 வணிக நாட்களுக்குள் டெலிவரி செய்யப்படும். உங்களின் பிசிக்கல் கார்டைப் பயன்படுத்துவதற்கு முன்பு, அதை உங்கள் Shopify நிர்வாகியில் நீங்கள் செயல்படுத்த வேண்டும். பிசிக்கல் கார்டுகள் PIN எண்களை ஆதரிக்காது, எனவே அவற்றை ATMகளில் பயன்படுத்த முடியாது.

உங்கள் விர்ச்சுவல் மற்றும் பிசிக்கல் கார்டுகள் இரண்டையும் உங்கள் Shopify நிர்வாகியிலேயே நிர்வகிக்கலாம், அத்துடன் பின்வரும் பணிகளில் எதையும் நீங்கள் மேற்கொள்ளலாம்:

  • கார்டு எண்களைப் பார்த்தல்
  • தேவைப்பட்டால் கார்டுகளைப் பூட்டுதல்
  • துணைக் கார்டுதாரர்களைச் சேர்த்தல்
  • பிசிக்கல் கார்டுகளைச் செயல்படுத்துதல்

Shopify Credit திட்டத்திற்கான தகுதி

Shopify Credit திட்டத்திற்கான தகுதியானது, உங்கள் பிசினஸின் ஆரோக்கியத்தைத் தீர்மானிக்க உதவும் பல காரணிகளின் அடிப்படையில் அமையும். உங்கள் தனிப்பட்ட கிரெடிட் ஸ்கோரைக் காட்டிலும், உங்கள் பிசினஸின் செயல்திறன் உள்ளிட்ட சில முக்கியக் காரணிகள் இந்த வழிகாட்டியில் விவரிக்கப்பட்டுள்ளன. Shopify எந்த நேரத்திலும் தனிப்பட்ட அல்லது பிசினஸ் சார்ந்த கிரெடிட் சரிபார்ப்புகளை மேற்கொள்ளாது, மேலும் உங்கள் விண்ணப்பம் உங்கள் கிரெடிட் ஸ்கோரைப் பாதிக்காது.

Shopify Credit திட்டத்திற்கு நீங்கள் தகுதியுடையவரா என்பதைத் தீர்மானிக்க, உங்கள் Shopify நிர்வாகியைச் சரிபார்க்கவும். உங்களுக்குத் தகுதி இருந்தால், நீங்கள் Shopify Credit திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

உங்களுக்கு எந்தவொரு சலுகையும் வரவில்லை எனில், உங்கள் ஸ்டோருக்கு தற்போது தகுதி இல்லை என்று அர்த்தம், ஆனால் நீங்கள் உங்கள் ஷாப்பைக் காத்திருப்போர் பட்டியலில் சேர்க்கலாம். உங்கள் ஸ்டோர் தகுதி பெற்றதும், உங்கள் Shopify நிர்வாகியின் முகப்புப் பிரிவிலும் மின்னஞ்சல் மூலமாகவும் அறிவிப்புகளைப் பெறுவீர்கள். தகுதியை Shopify தொடர்ந்து தானாகவே மதிப்பீடு செய்யும், மேலும் சலுகைக்கான உங்கள் தகுதியும் சலுகையின் அளவும் மாற்றத்திற்கு உட்பட்டவை.

Shopify Credit திட்டத்திற்கான உங்கள் தகுதி பின்வரும் முக்கியக் காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது:

  • விற்பனை: Shopify Credit திட்டத்திற்கான உங்கள் தகுதியும் உங்கள் சலுகையின் அளவும் பொதுவாக Shopify பிளாட்ஃபார்மில் நீங்கள் உருவாக்கும் விற்பனையை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இதில் விற்பனை அளவு, நீங்கள் விற்பனை செய்த நாட்களின் எண்ணிக்கை, ஆர்டர்களின் எண்ணிக்கை மற்றும் ஷிப் செய்யப்பட்ட ஆர்டர்களின் எண்ணிக்கை ஆகியவை அடங்கும், ஆனால் இவை மட்டுமல்ல.
  • ரிட்டர்ன்கள், சார்ஜ்பேக்குகள், மற்றும் முறையீடுகள்: குறிப்பிட்ட காலத்தில் நிகழ்ந்த சார்ஜ்பேக்குகள் மற்றும் முறையீடுகளின் எண்ணிக்கை உங்கள் தகுதியை மதிப்பாய்வு செய்யப் பயன்படுத்தப்படும். உங்கள் வாடிக்கையாளர்கள் ஒரு பேமெண்ட் குறித்து முறையிட்டு, கட்டணத்தைத் திருப்பித் தருமாறு கார்டு வழங்கிய வங்கி அல்லது சான்றுகளை வழங்கிய நிறுவனத்தைத் தொடர்புகொள்ளும்போது பேமெண்ட் தொடர்பான முறையீடு ஏற்படும்.
  • வாடிக்கையாளர் ஈடுபாடு: உங்கள் பிசினஸின் ஆரோக்கியத்தைத் தீர்மானிக்கும் காரணிகளில் வாடிக்கையாளர் ஈடுபாடும் ஒன்றாகும். தகுதியும் நீங்கள் பெறும் சலுகைகளும், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மற்றும் உங்கள் ஸ்டோருடனான அவர்களின் ஈடுபாட்டைப் பொறுத்தே அமையும்.
  • Shopify பிளாட்ஃபார்முடனான உங்கள் ஈடுபாடு: உங்கள் பிசினஸ் ஆரோக்கியமாக மற்றும் வளர்ந்து வருகிறதா என்பதைத் தீர்மானிக்க, Shopify பிளாட்ஃபார்முடனான உங்களின் பயன்பாடு மற்றும் ஈடுபாடும் பயன்படுத்தப்படுகிறது.
  • Shopify உடனான உங்கள் பேமெண்ட் வரலாறு: Shopify-இன் சேவைகளுக்கான சரியான நேரத்திலான பேமெண்ட்டுகள், அத்துடன் Capital போன்ற Shopify மூலம் வழங்கப்படும் பிற நிதிச் சேவைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய உங்களின் பேமெண்ட் வரலாறு, உங்கள் தகுதியைத் தீர்மானிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
  • தோல்வியடைந்த பிடித்தங்கள்: Shopify சேவைகளுக்கான தோல்வியடைந்த பிடித்தங்கள், பெற்ற நிதியுதவிக்காகத் திருப்பிச் செலுத்தப்பட்ட அல்லது அனுப்பப்பட்ட முந்தைய பேமெண்ட்டுகள், அத்துடன் Shopify Capital உள்ளிட்ட பிற நிதிச் சேவைகளுக்கான பிடித்தங்கள் ஆகியவை தகுதியைத் தீர்மானிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, உங்கள் Shopify Capital நிதியுதவியைத் திருப்பிச் செலுத்துவதற்கான அங்கீகரிக்கப்பட்ட பிடித்தம் தோல்வியடைந்தால், அது உங்கள் தகுதியைப் பாதிக்கலாம்.
  • Shopify பிளாட்ஃபார்மில் உங்களின் பணிக்காலம்: நீங்கள் எவ்வளவு காலமாக Shopify ஸ்டோரை வைத்துள்ளீர்கள் என்பது தகுதியைத் தீர்மானிக்கப் பயன்படுத்தப்படும்.
  • Shopify-இன் சேவை விதிமுறைகளுக்கு இணங்குதல்: Shopify Payments மற்றும் Shopify Capital போன்ற (இவற்றுடன் மட்டும் வரம்புக்குட்படாமல்) Shopify-இன் சேவை விதிமுறைகள் அல்லது பிற Shopify ஒப்பந்தங்களை மீறும் சாத்தியமுள்ள ஸ்டோர்களுக்கு Shopify Credit கிடைக்காது.
  • பிற ஷாப்கள்: தகுதியை மதிப்பாய்வு செய்யும்போது, உங்கள் கணக்குடன் தொடர்புடைய பிற ஷாப்களுக்கான மேற்கண்ட காரணிகளையும் Shopify பரிசீலிக்கும்.

உங்கள் கடன் வரம்பைத் தீர்மானிக்க உங்கள் கிரெடிட் ஸ்கோரைப் பயன்படுத்தும் பாரம்பரிய வணிகக் கிரெடிட் கார்டுகளைப் போலல்லாமல், உங்கள் Shopify Credit வரம்பு உங்களின் வணிகச் செயல்திறன் மற்றும் பிற காரணிகளை அடிப்படையாகக் கொண்டது. இருக்கும் சலுகைகள் உங்கள் Shopify நிர்வாகியில் கிடைக்கும்.

உங்கள் கடன் வரம்பு மாதந்தோறும் மதிப்பாய்வு செய்யப்படும், உங்களின் விற்பனை, கார்டு பயன்பாடு, மற்றும் திருப்பிச் செலுத்திய வரலாறு உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் அது அதிகரிக்கவோ அல்லது குறையவோ கூடும். எந்தவொரு கடன் வரம்பு மாற்றங்களும் ஒவ்வொரு மாதமும் உங்கள் அறிக்கைக் காலத்தின் தொடக்கத்தில் புதுப்பிக்கப்படும்.

Shopify Credit திட்டத்திற்கான தேவைகள்

Shopify கிரெடிட் கணக்கிற்கான தகுதியைப் பெற, நீங்கள் பின்வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்:

  • உங்களுக்கு அமெரிக்கா அல்லது பியூர்ட்டோ ரிக்கோவில் இருப்பிட முகவரி இருக்க வேண்டும். பிற அமெரிக்கப் பிரதேசங்களுக்கு ஆதரவில்லை.
  • உங்கள் பிசினஸ் அமைந்துள்ள மற்றும் செயல்படும் வணிக முகவரியை நீங்கள் வழங்க வேண்டும். பதிவு செய்யும் ஏஜெண்ட்டுகள், விர்ச்சுவல் முகவரிகள், இணை-பணியிடங்கள், மற்றும் அஞ்சல் பெட்டிச் சேவைகள் ஆகியவை தகுதியான வணிக முகவரிகள் ஆகாது.
    • உங்கள் ஆவணங்களில் காண்பிக்கப்பட்டுள்ள முகவரியிலிருந்து வேறுபட்டதாக இருந்தாலும், உங்கள் பிசினஸ் செயல்படும் உண்மையான முகவரியையே நீங்கள் உள்ளிட வேண்டும்.
  • உங்களிடம் சரியான அமெரிக்க சமூகப் பாதுகாப்பு எண் (SSN) அல்லது தனிநபர் வரிசெலுத்துவோர் அடையாள எண் (ITIN) இருக்க வேண்டும்.
  • Shopify Credit கணக்கை அமைக்கும்போது Shopify Payments அமைக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது செயலாக்கப்பட்டிருக்க வேண்டும். நீங்கள் Shopify Payments-ஐ முடக்கினால், உங்கள் Shopify கிரெடிட் கணக்கையும் மூட வேண்டும்.
  • உங்கள் Shopify கணக்கில் இரு-படி அங்கீகாரம் செயலாக்கப்பட்டிருக்க வேண்டும்.
  • உங்கள் ஸ்டோர் ஒரு Shopify திட்டத்தில் செயலில் இருக்க வேண்டும். பின்னர் உங்கள் ஸ்டோர் செயலில் உள்ள திட்டத்தில் தொடரவில்லை என்றால், உங்கள் Shopify Credit கார்டுகள் பூட்டப்படும்.
  • உங்கள் பிசினஸ் வகையானது Shopify Payments-ஐப் பயன்படுத்தத் தடை செய்யப்பட்டதாக இருக்கக்கூடாது. உங்கள் பிசினஸ் வகை தடைசெய்யப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த அமெரிக்காவிற்கான Shopify Payments சேவை விதிமுறைகளை மதிப்பாய்வு செய்யவும்.
  • Shopify Payments-க்குத் தேவையான அதே தகவல் தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும். கூடுதல் விவரங்களை அல்லது உங்கள் அடையாளத்தைச் சரிபார்ப்பது இதில் அடங்கும். Shopify Payments-ஐப் பயன்படுத்தும்போதான அடையாளத் தேவைகள் மற்றும் முகவரிச் சரிபார்ப்பு குறித்து மேலும் அறிக.

பல உரிமையாளர்களைக் கொண்ட வணிகங்களுக்கான கணக்குத் தேவைகள்

உங்கள் பிசினஸுக்குப் பல உரிமையாளர்கள் இருந்தால், நீங்கள் கூடுதலாகப் பின்வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்:

  • கணக்கைத் திறக்கும் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி தங்களின் SSN அல்லது ITIN-ஐ வழங்க வேண்டும்.
  • கணக்கைத் தொடங்கும் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிக்கு அமெரிக்கா அல்லது பியூர்ட்டோ ரிக்கோவில் இருப்பிட முகவரி இருக்க வேண்டும். பிற அமெரிக்கப் பிரதேசங்களுக்கு ஆதரவில்லை.
  • 25% அல்லது அதற்கும் அதிகமான உரிமையைக் கொண்டுள்ள, பலனடையும் உரிமையாளர்கள் தங்களின் அடையாளச் சான்றை வழங்க வேண்டும். இது ஒரு SSN, ITIN, அல்லது பாஸ்போர்ட் போன்ற அரசாங்கத்தால் வழங்கப்பட்ட புகைப்பட ID ஆக இருக்கலாம்.

அடையாளத் தேவைகள் மற்றும் சரிபார்ப்பு

Shopify Credit-க்காக உங்களின் அடையாளத்தை நீங்கள் சரிபார்க்க வேண்டியிருக்கலாம். அடையாளச் சரிபார்ப்பை சட்டப்பூர்வ நிறுவனக் கணக்குப் பிரதிநிதி நிறைவுசெய்ய வேண்டும், அவர் கடையின் உரிமையாளராகத் தான் இருக்க வேண்டும் என்பதில்லை.

அடையாளச் சரிபார்ப்பைத் தொடங்கும் முன், பின்வரும் ஆதாரங்களை மதிப்பாய்வு செய்யவும்:

தேவையான பொருட்களைப் பெற்ற பிறகு, அடையாளச் சரிபார்ப்புக் கோரிக்கையை நிறைவுசெய்யவும். அடையாளச் சரிபார்ப்புச் செயல்முறையின் போது உங்களுக்கு ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால், சிக்கல் தீர்த்தல் வழிகாட்டுதலை மதிப்பாய்வு செய்யவும்.

சட்டப்பூர்வ நிறுவனக் கணக்குப் பிரதிநிதி, கடையின் உரிமையாளராக இல்லாவிட்டால், பகிரக்கூடிய சரிபார்ப்பு இணைப்பை உருவாக்க, கடையின் உரிமையாளர் அடையாளச் சரிபார்ப்புச் செயல்முறையைத் தொடங்க வேண்டும். பகிர்வு இணைப்பைப் பெற, கடையின் உரிமையாளர் பின்வரும் படிகளை நிறைவுசெய்ய வேண்டும்:

  1. அடையாளத்தைச் சரிபார் என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. விதிமுறைகளை ஏற்க, ஒப்புக்கொள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. QR குறியீடு பக்கத்தில், பகிர்வு இணைப்பைக் கண்டறிய பிற விருப்பத்தேர்வுகள் என்பதைக் கிளிக் செய்யவும்.

கேமரா உள்ள எந்தவொரு சாதனத்திலும் சரிபார்ப்பை நிறைவுசெய்யப் பகிர்வு இணைப்பைச் சட்டப்பூர்வ நிறுவனக் கணக்குப் பிரதிநிதிக்கு அனுப்பலாம். சரிபார்ப்பை நிறைவுசெய்யக் கணக்குப் பிரதிநிதிக்கு Shopify கணக்கு இருக்க வேண்டியதில்லை.

Shopify Credit திட்டத்திற்கு விண்ணப்பித்தல்

தகுதியான Shopify வியாபாரிகளுக்கு Shopify Credit கிடைக்கும். உங்கள் Shopify நிர்வாகியில் நிதி > Credit என்பதற்குச் சென்று Shopify Credit-க்கு உங்களுக்குத் தகுதி உள்ளதா என்பதை நீங்கள் சரிபார்க்கலாம். Shopify Credit-க்கு விண்ணப்பிப்பதற்கான சலுகையை நீங்கள் பெற்று, விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தால், சில நிமிடங்களில் நீங்கள் முடிவைப் பெறலாம். உங்கள் சலுகைக்கான தொகை, கோரப்பட்ட ஏதேனும் ஆவணங்கள் அல்லது உங்கள் விண்ணப்பம் தொடர்பான கேள்விகள் போன்ற காரணிகளைப் பொறுத்து விண்ணப்பச் செயல்முறைக்கு அதிக நேரம் ஆகலாம். விண்ணப்பிப்பதற்கான சலுகைகள் கிடைப்பதால் உங்கள் விண்ணப்பம் அங்கீகரிக்கப்படும் என்று உத்தரவாதம் இல்லை.

Shopify Credit-க்கு விண்ணப்பிக்க உங்கள் ஸ்டோருக்குத் தகுதி இருந்தால், உங்கள் Shopify நிர்வாகியின் முகப்பு பக்கத்தில் ஒரு செய்தி காட்டப்படும். Shopify-இலிருந்து எந்தச் செய்தியும் வரவில்லை எனில், Shopify Credit-க்கு விண்ணப்பிக்க உங்கள் ஸ்டோருக்குத் தற்போதைக்குத் தகுதியில்லை என்று அர்த்தம். இருப்பினும், Shopify Credit சலுகைப் பக்கத்தில் இருந்து நீங்கள் காத்திருப்போர் பட்டியலில் சேரலாம்.

நீங்கள் ஏற்கெனவே Shopify Credit-ஐ ஏற்று அதைப் பயன்படுத்திக்கொண்டிருந்தால், Shopify Capital சலுகைகளை நீங்கள் பெறலாம். நீங்கள் அதைப் பயன்படுத்த விரும்பினால், இந்தச் சலுகைகளை ஏற்கலாம். Shopify Credit மற்றும் Shopify Capital ஆகிய இரண்டையும் வைத்திருப்பது எவ்வாறு ஒன்றையொன்று பாதிக்கும் என்பதைப் பற்றி மேலும் அறிக.

Shopify Capital-இல் Shopify Credit-இன் தாக்கம்

Shopify Credit-இலிருந்து ஒரு சலுகையை ஏற்பது, Shopify Capital-இலிருந்து ஒரு சலுகையைப் பெறுவதற்கான உங்கள் தகுதியை நீக்காது, ஆனால் ஒரு சலுகையை ஏற்பது மற்றவற்றுக்கான விதிமுறைகள் அல்லது கிடைக்கும் தன்மையைப் பாதிக்கக்கூடும். எங்கள் தயாரிப்புகள் தொடர்ந்து பொருத்தமானவையாகவும் பலனளிப்பவையாகவும் இருப்பதை உறுதிசெய்ய, நாங்கள் உங்கள் பிசினஸைத் தொடர்ந்து மதிப்பாய்வு செய்கிறோம்.

சலுகைகள் தினசரி அடிப்படையில் உருவாக்கப்பட்டு மீண்டும் கணக்கிடப்படுகின்றன. நீங்கள் Shopify Credit-க்கு விண்ணப்பித்தால், தகுதியைப் பொறுத்து இருக்கும் Shopify Capital சலுகைகள் மீண்டும் உருவாக்கப்படும். Shopify Credit மற்றும் Shopify Capital-க்கான தகுதிக்கு ஒருபோதும் உத்தரவாதம் இல்லை.

Shopify Credit கட்டணம் செலுத்தத் தவறுதலின் விளைவுகள்

உங்கள் Shopify கிரெடிட் கணக்கில் கட்டணம் செலுத்தத் தவறினால், உரிய தேதியில் உங்களின் அறிக்கை இருப்பைச் செலுத்தத் தவறினால் அல்லது Shopify Credit வழங்கும் வங்கியின் விதிமுறைகள் அல்லது Shopify Credit திட்ட விதிமுறைகளை மீறினால், Shopify Capital சலுகைகளுக்கு நீங்கள் தகுதிபெற மாட்டீர்கள். மேலும், நீங்கள் Shopify Credit வழங்கும் வங்கியின் விதிமுறைகள் அல்லது Shopify Credit திட்ட விதிமுறைகளை மீறும்போது, செயலில் உள்ள ஏதேனும் Shopify Capital நிதியுதவி நிலுவையாகி உடனடியாகச் செலுத்த வேண்டியதாகிவிடும்.

Shopify Credit-க்கு விண்ணப்பிக்கவும்

Shopify Credit-க்கான சலுகையை நீங்கள் பெறும்போது, உங்கள் நிர்வாகியில் விண்ணப்பச் செயல்முறையை நிறைவுசெய்யலாம்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, நிதி என்பதற்குச் செல்லவும்.

  2. கணக்குகள் பிரிவில், Credit சலுகைக் கார்டைக் கிளிக் செய்யவும்.

  3. இப்போதே விண்ணப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. வணிக விவரங்களை மதிப்பாய்வு செய் பிரிவில், விவரங்களை மதிப்பாய்வு செய் என்பதைக் கிளிக் செய்யவும்.

  5. உங்கள் அடையாளம், வணிக விவரங்களை மதிப்பாய்வு செய் பக்கத்தில், உங்கள் வணிக வகை மற்றும் வணிக விவரங்களை உள்ளிட, திருத்துவதற்கான ஐகானைக் கிளிக் செய்யவும்.

  6. வணிகச் சரிபார்ப்பு பிரிவில், சரிபார்ப்பு ஆவணத்தைப் பதிவேற்ற ஆவணத்தைப் பதிவேற்று என்பதைக் கிளிக் செய்யவும்.

  7. உங்கள் தகவலைச் சரிபார்த்த பிறகு, உறுதிப்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

  8. கணக்குப் பிரதிநிதி பிரிவில், பிரதிநிதியின் விவரங்களைச் சரிபார்த்து, உறுதிப்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

  9. உங்கள் கணக்கிலுள்ள பிரதிநிதிக்கு நிறுவனத்தில் 100% க்கும் குறைவான உரிமை இருந்தால், நீங்கள் மற்றொரு பங்கு உரிமையாளரைச் சேர் என்பதைக் கிளிக் செய்யலாம்.

  10. அனைத்துப் பங்கு உரிமையாளர்களையும் சேர்த்த பிறகு, உறுதிப்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

  11. சான்றிதழ் பிரிவில், உறுதிப்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

  12. சரிபார்ப்பிற்குச் சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.

  13. Shopify Credit திட்ட விதிமுறைகளை கவனமாக மதிப்பாய்வு செய்யவும்.

  14. விண்ணப்பத்தைச் சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.

விண்ணப்பத்திற்குப் பிந்தைய தேவைகள்

உங்கள் விண்ணப்பத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால், உங்கள் Shopify கிரெடிட் கணக்கும் விர்ச்சுவல் வணிகக் கார்டும் உருவாக்கப்படும். உங்கள் கணக்கை அணுகி கார்டைப் பயன்படுத்தத் தொடங்க, கணக்கு அமைவை நிறைவுசெய்யவும்.

உங்கள் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டதும், கூடுதல் தகவல் தேவைப்பட்டால், மின்னஞ்சல் மூலம் உங்களுக்கு அறிவிக்கப்படும். இந்தத் தகவல் 30 நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும், இல்லையெனில் உங்கள் விண்ணப்பம் மூடப்படும். ஒப்புதல் கிடைத்ததும், விர்ச்சுவல் வணிகக் கார்டைப் பயன்படுத்தத் தொடங்க, கணக்கு அமைவை நிறைவுசெய்யவும்.

உங்கள் கணக்கு அமைவை நிறைவுசெய்யுங்கள்

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, நிதி என்பதற்குச் செல்லவும்.

  2. கணக்குகள் பிரிவில், Credit என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. உங்கள் கணக்கில் இரு-படி அங்கீகாரம் (2SA) செயலாக்கப்பட்டுள்ளதா என மதிப்பாய்வு செய்யவும். Shopify Credit-இன் அனைத்து அம்சங்களையும் அணுக 2SA தேவையென்பதால், நீங்கள் 2SA-ஐப் பயன்படுத்தவில்லை எனில் இரு-படி அங்கீகாரத்தை அமை என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. பேமெண்ட்டுகள் எவ்வாறு கழிக்கப்படுகின்றன என்பதை மதிப்பாய்வு செய்து, இணைக்கப்பட்டுள்ள உங்கள் வங்கிக் கணக்குத் தகவலை உறுதிப்படுத்தவும். உங்கள் Shopify Payments கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள அதே வங்கிக் கணக்குத்தான் இதுவாகும்.

  5. விரும்பினால்: உங்கள் மொபைல் வாலட்டில் விர்ச்சுவல் வணிகக் கார்டு எண்ணைச் சேர்க்கவும். இந்தப் படியைத் தவிர்க்க விரும்பினால், இந்தப் பணியைத் தவிர் என்பதைக் கிளிக் செய்யவும்.

    1. உங்கள் கார்டின் எண், காலாவதித் தேதி மற்றும் கார்டு சரிபார்ப்பு மதிப்பு (CVV) ஆகியவற்றைக் காண, கார்டு எண்களைக் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
    2. உங்கள் மொபைல் வாலட்டில் கார்டு தகவலைச் சேர்க்கவும்.
  6. விரும்பினால்: பிசிக்கல் Shopify Credit வணிகக் கார்டை ஆர்டர் செய்யவும். இந்தப் படியைத் தவிர்க்க விரும்பினால், இந்தப் பணியைத் தவிர் என்பதைக் கிளிக் செய்யவும்.

    1. உங்கள் ஷிப்பிங் தகவலை உள்ளிடவும்.
    2. பிசிக்கல் கார்டை ஆர்டர் செய் என்பதைக் கிளிக் செய்யவும்.
  7. அமைவை நிறைவுசெய் என்பதைக் கிளிக் செய்யவும்.