QuickBooks Online உடன் உங்கள் Shopify கிரெடிட் கணக்கை இணைத்தல்

Quickbooks Online என்பது, உங்கள் வணிகத்தின் நிதியை நிர்வகிக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட கிளவுட்-அடிப்படையிலான நிதி நிர்வாக மென்பொருள் ஆகும். QuickBooks Online உடன் உங்கள் Shopify கிரெடிட் கணக்கை இணைக்கும் போது, Shopify Credit இலிருந்து உங்கள் எல்லாப் பரிவர்த்தனைகளையும் QuickBooks Online இல் பாதுகாப்பாக ஒத்திசைக்கலாம். நீங்கள் வரி கட்டுவதற்கும் கணக்கியல் சார்ந்த பிற பணிகளைச் செய்வதற்கும் இந்தத் தகவலைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

படிகள்

  1. உங்களின் QuickBooks Online கணக்கில் உள்நுழையவும்.
  2. உங்கள் QuickBooks Online நிர்வாகியிலிருந்து, Bookkeeping (கணக்குப்பதிவியல்) > Bank transactions (வங்கிப் பரிவர்த்தனைகள்) என்பதற்குச் செல்லவும்.
  3. Connect account (கணக்கை இணை) என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. Shopify Finance எனத் தேடி, Continue (தொடர்க) என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. உங்கள் Shopify சான்றுகளை உள்ளிட்டு உள்நுழையவும்.
  6. வெற்றிகரமாக உள்நுழைந்த பிறகு, உங்களுக்குச் சொந்தமான Shopify கிரெடிட் கணக்குகளின் பட்டியலில் இருந்து ஒன்றைத் தேர்ந்தெடுக்குமாறு கேட்கப்படுவீர்கள்.
  7. விருப்பத்தேர்வு: Shopify Credit இல் உங்களின் பரிவர்த்தனைகளை ஒத்திசைப்பதற்கான தொடக்கத் தேதியையும் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
  8. Connect (இணை) என்பதைக் கிளிக் செய்யவும்.

இணைக்கப்பட்டுள்ள அனைத்து Shopify Credit கணக்குகள் மற்றும் பரிவர்த்தனைகளைப் பார்க்கக்கூடிய QuickBooks Online பக்கத்திற்கு நீங்கள் திருப்பிவிடப்படுவீர்கள்.