தனிப்பயன் நிறைவேற்றச் சேவைகளைப் பயன்படுத்தி ஆர்டர்களை நிறைவேற்றுதல்

உங்கள் ஆர்டர்களை நிறைவேற்றத் தனிப்பயன் நிறைவேற்றச் சேவைகளைப் பயன்படுத்தலாம், ஆனால் அந்த நிறைவேற்றச் சேவையானது மின்னஞ்சல் மூலம் ஆர்டர்களைச் செயல்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும். நீங்கள் தனிப்பயன் நிறைவேற்றச் சேவையைச் செயல்படுத்தி, அதில் தயாரிப்புகளை ஒதுக்கிய பிறகு, உங்கள் Shopify நிர்வாகியில் ஆர்டர்களை நிறைவேற்றப்பட்டதாகக் குறிப்பதன் மூலம் அவற்றை நிறைவேற்றலாம். இது ஆர்டர் விவரங்களுடன் உங்கள் நிறைவேற்றச் சேவைக்கு ஒரு மின்னஞ்சலை அனுப்பும்.

ஆர்டர்களைச் செயல்படுத்த உங்கள் நிறைவேற்றச் சேவைக்கு மின்னஞ்சலைத் தாண்டி வேறொன்று தேவைப்பட்டால், Shopify உடன் நேரடியாக ஒருங்கிணைக்கும் தனிப்பயன் செயலியை உருவாக்க, ஒரு Shopify பார்ட்னரை நீங்கள் பணியமர்த்தலாம். செயலி உள்ள நிறைவேற்றச் சேவையைப் பயன்படுத்தி ஆர்டர்களை நிறைவேற்றுவது குறித்து மேலும் அறிக.

தனிப்பயன் நிறைவேற்றச் சேவைகள் பல இருப்பிடங்கள் மற்றும் செயலிகளுக்கான சரக்கு மேலாண்மையை ஆதரிக்கின்றன. நீங்கள் உங்கள் தனிப்பயன் நிறைவேற்றச் சேவை இடம் மற்றும் உங்களின் சொந்த இடங்கள் என இரண்டிலும் ஒரே நேரத்தில் அதே தயாரிப்பை ஸ்டாக் செய்யலாம். வழக்கமான ஆர்டர்களுக்கு நீங்கள் நிறைவேற்றச் சேவையைப் பயன்படுத்தினாலும், உங்கள் கிடங்கில் காப்புநகல் சரக்கு இருப்பை வைத்திருக்க அல்லது உங்களின் சொந்த ஸ்டாக்கில் இருந்து அவசர ஆர்டர்களை நிறைவேற்ற விரும்பும்போது இது பயனுள்ளதாக இருக்கும்.

தனிப்பயன் நிறைவேற்றச் சேவையைச் செயல்படுத்துதல்

Shopify நிர்வாகியில் தனிப்பயன் நிறைவேற்றச் சேவையைச் செயல்படுத்தும்போது, தயாரிப்புகளை ஸ்டாக் செய்யக்கூடிய ஒரு நிறைவேற்றும் இடத்தை அது உருவாக்கும். சேவையைச் செயல்படுத்திய பிறகு, அதில் தயாரிப்புகளை ஒதுக்கி, ஆர்டர் செய்யப்படும்போதெல்லாம் மின்னஞ்சல் மூலம் நிறைவேற்றக் கோரிக்கைகளை அனுப்பலாம்.

படிகள்:

டெஸ்க்டாப்
  1. உங்கள் Shopify நிர்வாகியில் இருந்து அமைப்புகள் > ஷிப்பிங் மற்றும் டெலிவரி என்பதற்குச் செல்லவும்.

  2. Custom order fulfillment பிரிவில், Add fulfillment service என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. Name புலத்தில், உங்கள் தனிப்பயன் நிறைவேற்ற வழங்குநரின் பெயரை உள்ளிடவும்.

  4. Email புலத்தில், உங்கள் தனிப்பயன் நிறைவேற்ற வழங்குநரின் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.

  5. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

மொபைல்
  1. Shopify செயலியில் இருந்து, Menu என்பதைத் தட்டி, பின்னர் Settings அமைப்புகள் என்பதைத் தட்டவும்.

  2. ஸ்டோர் அமைப்புகள் பிரிவில், ஷிப்பிங் மற்றும் டெலிவரி என்பதைத் தட்டவும் .

  3. Custom order fulfillment பிரிவில், Add fulfillment service என்பதைத் தட்டவும்.

  4. Name புலத்தில், உங்கள் தனிப்பயன் நிறைவேற்ற வழங்குநரின் பெயரை உள்ளிடவும்.

  5. Email புலத்தில், உங்கள் தனிப்பயன் நிறைவேற்ற வழங்குநரின் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.

  6. சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்.

உங்கள் தனிப்பயன் நிறைவேற்றச் சேவைக்குத் தயாரிப்புகளை ஒதுக்குதல்

தனிப்பயன் நிறைவேற்றச் சேவையைச் செயல்படுத்திய பிறகு, அதற்கான தயாரிப்புகளை நீங்கள் ஒதுக்க வேண்டும், அப்போதுதான் அந்தத் தயாரிப்புகளுக்கான ஆர்டர்களைச் சேவையால் நிறைவேற்ற முடியும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியில் இருந்து, தயாரிப்புகள் என்பதற்குச் செல்லவும்.

  2. தனிப்பயன் சேவையால் நிறைவேற்றப்பட வேண்டிய தயாரிப்பைக் கிளிக் செய்யவும்.

  3. சரக்கு இருப்பு பிரிவில், Inventory will be stocked at கீழ்தோன்றும் மெனுவில் இருந்து நீங்கள் பயன்படுத்த விரும்பும் நிறைவேற்றச் சேவையைத் தேர்ந்தெடுக்கவும்.

  4. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

உங்கள் தனிப்பயன் நிறைவேற்றச் சேவையிடம் நிறைவேற்றத்தைக் கோருதல்

முழு ஆர்டரையும் அல்லது ஆர்டரின் ஒரு பகுதியை நிறைவேற்றப்பட்டதாக நீங்கள் குறிக்கலாம். எந்தெந்த உருப்படிகளை ஷிப் செய்ய வேண்டும் என்பது உட்பட, ஆர்டர் மற்றும் வாடிக்கையாளர் விவரங்களுடன் உங்கள் நிறைவேற்றச் சேவைக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பப்படும்.

ஒரு ஆர்டரில் உள்ள உருப்படிகள் வெவ்வேறு சேவைகளால் நிறைவேற்றப்பட்டாலோ தனித்தனி பேக்கேஜ்களில் ஷிப் செய்யப்பட்டாலோ, சில உருப்படிகள் மற்றவற்றுக்கு முன்பாகவே உங்கள் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்படலாம். அனைத்து உருப்படிகளும் ஷிப் செய்யப்பட்ட பிறகே, ஓர் ஆர்டர் Fulfilled நிலையைக் காண்பிக்கும்.

ஓர் ஆர்டரை நிறைவேற்றப்பட்டதாக நீங்கள் குறிக்கும்போது, கண்காணிப்புத் தகவலைச் சேர்த்து, உங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நிறைவேற்ற அறிவிப்பை அனுப்பலாம்.

நீங்கள் தானியங்கு நிறைவேற்றத்தைப் பயன்படுத்தினால், ஆர்டருக்கான கட்டணம் செலுத்தப்படும்போது ஆர்டர்கள் தானாகவே நிறைவேற்றப்பட்டதாகக் குறிக்கப்படும். நீங்கள் நிறைவேற்றப் படிகளைக் கைமுறையாக முடிக்க வேண்டியதில்லை.

நிறைவேற்றத்தின் முன்னேற்றத்தைத் தடமறிதல்

செயலி மூலம் Shopify உடன் ஒருங்கிணைக்கும் நிறைவேற்றச் சேவைகளைப் போலன்றி, தனிப்பயன் நிறைவேற்றச் சேவைகள் உங்கள் Shopify நிர்வாகியில் ஆர்டர் நிலையைத் தானாகப் புதுப்பிக்காது. மின்னஞ்சல் அல்லது அவர்களின் இணையதளம் வழியாக உங்கள் நிறைவேற்றச் சேவையுடன் நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலம் நிறைவேற்றத்தின் முன்னேற்றத்தை நீங்கள் தடமறிய வேண்டும்.

உங்கள் நிறைவேற்றச் சேவை ஆர்டரை அனுப்பும்போது, உங்கள் வாடிக்கையாளர்கள் தங்கள் ஷிப்மென்ட்களைத் தடமறியும் வகையில் உங்கள் Shopify நிர்வாகியில் தடமறியும் தகவலுடன் ஆர்டரைக் கைமுறையாகப் புதுப்பிக்கலாம்.

உங்கள் தனிப்பயன் நிறைவேற்றச் சேவை தடமறிவதற்கான எண்களை வழங்கவில்லை எனில், உங்கள் வாடிக்கையாளர் பெற்றதும் ஆர்டர் டெலிவரி செய்யப்பட்டதாகக் குறிக்கலாம். இல்லையென்றால், ஆர்டர் நிலை பக்கம் ஆர்டரை டெலிவரி செய்யப்பட்டதாகக் காட்டாது.

நிறைவேற்றத்தை ரத்துசெய்தல் அல்லது மாற்றுதல்

நிறைவேற்றத்தை ரத்துசெய்ய அல்லது மாற்றங்களைச் செய்ய, உங்கள் தனிப்பயன் நிறைவேற்றச் சேவையை நேரடியாகத் தொடர்புகொள்ளவும். நிறைவேற்றத்தை ரத்துசெய்வதற்காக உங்கள் நிறைவேற்றச் சேவையைத் தொடர்புகொண்ட பிறகு, உங்கள் Shopify நிர்வாகியில் ஆர்டர் நிலையை கைமுறையாகப் புதுப்பிக்கலாம்.

தனிப்பயன் நிறைவேற்றச் சேவையை நீக்குதல்

தனிப்பயன் நிறைவேற்றச் சேவையை நீங்கள் இனிப் பயன்படுத்த விரும்பவில்லை என்றால், அதை உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து நீக்கலாம். நிறைவேற்றச் சேவையுடனான உங்கள் கணக்கு செயலில் இருந்தால், எப்போது வேண்டுமானாலும் அந்தச் சேவையை நீங்கள் மீண்டும் செயல்படுத்தலாம்.

சேவையில் சரக்கு இருப்பு ஒதுக்கப்பட்டிருந்தால், சேவையை நீக்கும் முன் சேமிக்கப்பட்ட சரக்கு இருப்பு மற்றும் நிறைவேற்றப்படாத ஆர்டர்களை ஏற்கப் புதிய இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உங்கள் தயாரிப்புப் பக்கங்களில் நிறைவேற்றும் இடத்தை மாற்றலாம்.

உங்கள் நிர்வாகியிலிருந்து நீங்கள் அகற்ற விரும்பும் நிறைவேற்றச் சேவையை நீக்குவதற்கான விருப்பம் இல்லை எனில், அதற்குப் பதிலாக அதை செயலிகள் பக்கத்திலிருந்து அகற்றவும்.

படிகள்:

டெஸ்க்டாப்
  1. உங்கள் Shopify நிர்வாகியில் இருந்து அமைப்புகள் > ஷிப்பிங் மற்றும் டெலிவரி என்பதற்குச் செல்லவும்.

  2. தனிப்பயன் ஆர்டர் நிறைவேற்றம் பிரிவில், நீங்கள் நீக்க விரும்பும் சேவைக்கான கிடைமட்ட மெனு என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. உறுதிப்படுத்த, நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

மொபைல்
  1. Shopify செயலியில் இருந்து, Menu என்பதைத் தட்டி, பின்னர் Settings அமைப்புகள் என்பதைத் தட்டவும்.

  2. ஸ்டோர் அமைப்புகள் பிரிவில், ஷிப்பிங் மற்றும் டெலிவரி என்பதைத் தட்டவும் .

  3. தனிப்பயன் ஆர்டர் நிறைவேற்றம் பிரிவில், நீங்கள் நீக்க விரும்பும் சேவையில் கிடைமட்ட மெனு என்பதைத் தட்டவும்.

  4. நீக்கு என்பதைத் தட்டவும்.

  5. உறுதிப்படுத்த, நீக்கு என்பதைத் தட்டவும்.