உங்கள் ஆர்டரை நிறுத்திவைக்கப்பட்டதாகக் குறித்தல்

ஒரு ஆர்டரை நிறைவேற்றுவதைத் தடுக்கும் சிக்கல் இருந்தால், நீங்கள் உங்கள் ஆர்டரை நிறுத்திவைக்கப்பட்டதாகக் குறித்துவிட்டு, ஆர்டரின் நிறைவேற்றத்தை நிறுத்திவைக்கலாம். அதிக மோசடி ஆபத்து இருப்பதாகக் கொடியிடப்பட்டிருத்தல், சரக்கு இருப்பு இல்லாதிருத்தல் அல்லது ஆர்டர் செலவு அல்லது அளவு குறிப்பிட்ட மதிப்பை மீறுதல் போன்ற பல்வேறு காரணங்களுக்காக நீங்கள் ஆர்டரின் நிறைவேற்றத்தை நிறுத்திவைக்கலாம்.

நீங்கள் கைமுறையாக நிறைவேற்ற நிறுத்தங்களைச் செய்யவோ விடுவிக்கவோ முடியும், அல்லது இந்தச் செயல்முறையைத் தானியக்கமாக்க Shopify Flow-ஐப் பயன்படுத்தலாம்.

சில மூன்றாம் தரப்புச் செயலிகள் அல்லது சேவைகள் உங்கள் ஆர்டரில் தானாகவே சிஸ்டம் நிறைவேற்ற நிறுத்தத்தை செய்ய முடியும். உங்கள் நிறைவேற்றம் ஒரே நேரத்தில் பல நிறுத்தங்களைக் கொண்டிருக்கலாம். உதாரணமாக, போதிய சரக்கு இருப்பு இல்லாததால் நீங்கள் கைமுறையாக நிறைவேற்ற நிறுத்தத்தைச் சேர்க்கலாம், அதே நிறைவேற்றத்திற்கு ஒரு மூன்றாம் தரப்புச் செயலி சிஸ்டம் நிறுத்தத்தைச் செய்யலாம்.

ஆர்டரை நிறுத்திவைக்கப்பட்டதாகக் குறித்தல்

நீங்கள் ஒரு நிறைவேற்றத்தை நிறுத்திவைக்கும்போது, உங்கள் ஆர்டரின் நிறைவேற்ற நிலை நிறுத்திவைக்கப்பட்டது என மாறி, நிறுத்தம் தொடர்பான விவரங்கள் காண்பிக்கப்படும். உங்கள் சரக்கு இருப்பு ஒதுக்கப்படலாம், ஆனால் நிறுத்தம் விடுவிக்கப்படும் வரை நிறைவேற்றம் தடுக்கப்படும். நிறுத்திவைக்கப்பட்ட ஆர்டர்கள் உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள நிறைவேற்றப்படாத ஆர்டர்களின் பட்டியலிலிருந்து விலக்கப்படும். நிறுத்தம் விடுவிக்கப்பட்டதும், ஆர்டரின் நிறைவேற்ற நிலை, முந்தைய நிலையான நிறைவேற்றப்படாதது அல்லது செயல்பாட்டில் உள்ளது என்பதற்கு மாறும்.

படிகள்:

டெஸ்க்டாப்
  1. உங்கள் Shopify நிர்வாகியில், ஆர்டர்கள் என்பதற்குச் செல்லவும்.

  2. நீங்கள் நிறைவேற்ற நிறுத்தத்தை மேற்கொள்ள விரும்பும் ஆர்டரைக் கிளிக் செய்யவும்.

  3. நீங்கள் நிறைவேற்ற நிறுத்தத்தை மேற்கொள்ள விரும்பும் நிறைவேற்றப்படாதது அல்லது செயல்பாட்டில் உள்ளது பிரிவில், கீழ்தோன்றும் மெனு ஐகானைக் கிளிக் செய்து, பிறகு நிறுத்திவைக்கப்பட்டதாகக் குறி என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. நீங்கள் நிறுத்திவைக்க விரும்பும் உருப்படிகளைத் தேர்ந்தெடுக்கவும்.

  5. நிறுத்திவைப்பதற்கான காரணம் கீழ்தோன்றும் மெனுவில், நிறைவேற்ற நிறுத்தத்திற்கான காரணத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

  6. நிறுத்திவைக்கப்பட்டதாகக் குறி என்பதைக் கிளிக் செய்யவும்.

மொபைல்
  1. Shopify செயலியிலிருந்து, ஆர்டர்கள் ஐகானைத் தட்டவும் .
  2. நீங்கள் நிறைவேற்ற நிறுத்தத்தை மேற்கொள்ள விரும்பும் ஆர்டரைத் தட்டவும்.
  3. நீங்கள் நிறைவேற்ற நிறுத்தத்தை மேற்கொள்ள விரும்பும் நிறைவேற்றப்படாதது அல்லது செயல்பாட்டில் உள்ளது பிரிவில், கீழ்தோன்றும் மெனு ஐகானைத் தட்டி, பிறகு நிறுத்திவைக்கப்பட்டதாகக் குறி என்பதைத் தட்டவும்.
  4. நிறுத்திவைப்பதற்கான காரணத்தைத் தேர்ந்தெடுக்கவும் கீழ்தோன்றும் மெனுவில், நிறைவேற்ற நிறுத்தத்திற்கான காரணத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. நிறுத்திவைக்கப்பட்டதாகக் குறி என்பதைத் தட்டவும்.

கூடுதல் நிறைவேற்ற நிறுத்தத்தைச் சேர்த்தல்

ஒரு நிறைவேற்றத்திற்கு நீங்கள் பல நிறைவேற்ற நிறுத்தங்களைச் சேர்க்கலாம். ஒரு நிறைவேற்றத்திற்கு நீங்கள் 10 கைமுறை நிறுத்தங்கள் வரை சேர்க்கலாம்.

படிகள்:

டெஸ்க்டாப்
  1. உங்கள் Shopify நிர்வாகியில், ஆர்டர்கள் என்பதற்குச் செல்லவும்.

  2. நீங்கள் நிறைவேற்ற நிறுத்தத்தை மேற்கொள்ள விரும்பும் ஆர்டரைக் கிளிக் செய்யவும்.

  3. நீங்கள் கூடுதல் நிறைவேற்ற நிறுத்தத்தைச் சேர்க்க விரும்பும் நிறுத்திவைக்கப்பட்டது பிரிவில், நிறுத்தத்தைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. நிறுத்திவைப்பதற்கான காரணம் கீழ்தோன்றும் மெனுவில், நிறைவேற்ற நிறுத்தத்திற்கான காரணத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

  5. நிறுத்திவைக்கப்பட்டதாகக் குறி என்பதைக் கிளிக் செய்யவும்.

மொபைல்
  1. Shopify செயலியிலிருந்து, ஆர்டர்கள் ஐகானைத் தட்டவும் .
  2. நீங்கள் நிறைவேற்ற நிறுத்தத்தை மேற்கொள்ள விரும்பும் ஆர்டரைத் தட்டவும்.
  3. நீங்கள் கூடுதல் நிறைவேற்ற நிறுத்தத்தைச் சேர்க்க விரும்பும் நிறுத்திவைக்கப்பட்டது பிரிவில், நிறுத்தத்தைச் சேர் என்பதைத் தட்டவும்.
  4. நிறுத்திவைப்பதற்கான காரணத்தைத் தேர்ந்தெடுக்கவும் கீழ்தோன்றும் மெனுவில், நிறைவேற்ற நிறுத்தத்திற்கான காரணத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. நிறுத்திவைக்கப்பட்டதாகக் குறி என்பதைத் தட்டவும்.

நிறைவேற்ற நிறுத்தத்தை விடுவித்தல்

ஒரு ஆர்டரை நிறைவேற்றுவதைத் தடுத்த சிக்கல்கள் தீர்க்கப்படும்போது, நீங்கள் கைமுறை நிறைவேற்ற நிறுத்தத்தை விடுவிக்கலாம். நிறைவேற்றம் விடுவிக்கப்பட்டு, வேறு எந்த உருப்படிகளும் நிறுத்திவைக்கப்படாமல் இருந்தால், ஆர்டர் நிறைவேற்ற நிலை நிறைவேற்றப்படாதது என மாறும்.

உங்கள் நிறைவேற்றத்தில் ஒரே ஒரு நிறுத்தம் இருந்தால், நிறுத்தத்தை விடுவி என்பதைக் கிளிக் செய்யும்போது அந்த நிறுத்தம் விடுவிக்கப்படும். உங்கள் நிறைவேற்றத்தில் பல நிறுத்தங்கள் இருந்தால், எந்தெந்த நிறைவேற்ற நிறுத்தங்களை விடுவிக்க வேண்டும் என்பதை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

படிகள்:

டெஸ்க்டாப்
  1. உங்கள் Shopify நிர்வாகியில், ஆர்டர்கள் என்பதற்குச் செல்லவும்.

  2. நீங்கள் நிறைவேற்ற நிறுத்தத்தை விடுவிக்க விரும்பும் ஆர்டரைக் கிளிக் செய்யவும்.

  3. நீங்கள் நிறைவேற்ற நிறுத்தத்தை விடுவிக்க விரும்பும் நிறுத்திவைக்கப்பட்டது பிரிவில், நிறுத்தத்தை விடுவி என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. உங்கள் நிறைவேற்றத்தில் பல நிறுத்தங்கள் இருந்தால், நீங்கள் விடுவிக்க விரும்பும் நிறைவேற்ற நிறுத்தங்களைத் தேர்ந்தெடுத்து, விடுவி என்பதைக் கிளிக் செய்யவும்.

மொபைல்
  1. Shopify செயலியிலிருந்து, ஆர்டர்கள் ஐகானைத் தட்டவும் .
  2. எந்த ஆர்டருக்கான நிறைவேற்ற நிறுத்தத்தை விடுவிக்க வேண்டுமோ, அந்த ஆர்டரைத் தட்டவும்.
  3. எந்த நிறைவேற்ற நிறுத்தத்தை விடுவிக்க வேண்டுமோ, அந்த நிறுத்திவைக்கப்பட்டது பிரிவில், நிறுத்தத்தை விடுவி என்பதைத் தட்டவும்.
  4. உங்கள் நிறைவேற்றத்தில் பல நிறுத்தங்கள் இருந்தால், நீங்கள் விடுவிக்க விரும்பும் நிறைவேற்ற நிறுத்தங்களைத் தேர்ந்தெடுத்து, விடுவி என்பதைத் தட்டவும்.

சிஸ்டம் நிறைவேற்ற நிறுத்தங்கள்

ஒரு செயலி அல்லது சேவை தானாகவே நிறைவேற்றத்தை நிறுத்திவைக்கும்போது சிஸ்டம் நிறைவேற்ற நிறுத்தங்கள் ஏற்படும்.

சிஸ்டம் நிறைவேற்ற நிறுத்தத்தை நீங்கள் மீறலாம், ஆனால் இது சிஸ்டம் நிறைவேற்ற நிறுத்தத்தை மேற்கொள்ளும் செயலி அல்லது சேவையுடனான உங்கள் ஒப்பந்தத்தின் மீறலாக இருக்கலாம். சிஸ்டம் நிறைவேற்ற நிறுத்தத்தை நீங்கள் மீறுவதற்கு முன்பு, உங்கள் ஒப்பந்தத்தை மதிப்பாய்வு செய்ய வேண்டும் அல்லது நிறுத்தத்தை மேற்கொள்ளும் செயலி அல்லது சேவையைத் தொடர்புகொள்ள வேண்டும்.

சிஸ்டம் நிறைவேற்ற நிறுத்தங்களின் வெவ்வேறு வகைகளைப் பற்றி மேலும் அறிய, பின்வரும் அட்டவணையை மதிப்பாய்வு செய்யவும்:

சிஸ்டம் நிறைவேற்ற நிறுத்தங்களின் வகைகள்
சிஸ்டம் நிறைவேற்ற நிறுத்த வகைவிளக்கம்
Marketplace அங்கீகாரம் நிலுவையில் உள்ளதுமோசடி பகுப்பாய்வு மற்றும் கட்டண அங்கீகாரத்தைச் செய்வதற்கு Facebook அல்லது Google போன்ற விற்பனைச் சேனல் உங்கள் ஆர்டரை நிறுத்திவைக்கலாம். இந்த நிறைவேற்ற நிறுத்தம் 5 நிமிடங்கள் முதல் 24 மணிநேரம் வரை நீடிக்கலாம்.
Managed Markets அங்கீகாரம் நிலுவையில் உள்ளதுமோசடி பகுப்பாய்வைச் செய்ய Managed Markets உங்கள் ஆர்டரை நிறுத்திவைக்கலாம், மேலும் உங்கள் வாடிக்கையாளரின் மின்னஞ்சல் மற்றும் ஃபோன் எண் போன்ற உங்கள் ஆர்டர் தகவல்களைச் சரிபார்க்கும், அத்துடன் பொருந்தக்கூடிய இடங்களில் சரியான சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகள் வசூலிக்கப்பட்டதா என்பதை உறுதிப்படுத்தும். இந்த நிறைவேற்ற நிறுத்தம் 5 நிமிடங்கள் முதல் 24 மணிநேரம் வரை நீடிக்கலாம்.
திருப்பியளிக்கப்படும் உருப்படிகளுக்காகக் காத்திருக்கிறதுஒரு ரிட்டர்னின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்ட பரிமாற்ற உருப்படிகளில் நிறைவேற்ற நிறுத்தம் வைக்கப்படும். நீங்கள் திருப்பியளிக்கப்பட்ட உருப்படிகளைப் பெற்று, ஆய்வுசெய்த பிறகு, பரிமாற்ற உருப்படிகளை நிறைவேற்றத் தயாராகும்போது, இந்த நிறுத்தத்தை நீங்கள் கைமுறையாக விடுவிக்கலாம்.
அப்செல் சலுகை நிலுவையில் உள்ளதுகொள்முதலுக்குப் பிந்தைய அப்செல் சலுகைகளுக்கு நீங்கள் ஒரு செயலியைப் பயன்படுத்தினால், செக்அவுட்டின் போது வாடிக்கையாளருக்கு ஒரு சலுகை வழங்கப்படும், மேலும் ஆர்டரின் நிறைவேற்ற நிலை நிறைவேற்றப்படாதது என்பதிலிருந்து நிறுத்திவைக்கப்பட்டது என மாறும். ஒரு மணிநேரத்திற்கு ஆர்டர் நிலை நிறுத்திவைக்கப்பட்டது என்றே இருக்கும். வாடிக்கையாளர் சலுகையை ஏற்றால் அல்லது நிராகரித்தால், நிலை மீண்டும் நிறைவேற்றப்படாதது என மாறும்.
அறியப்படாத விநியோகத் தேதிதிட்டமிடப்படாத தேதியில் எதிர்காலத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய விற்பனைத் திட்டத்தைக் கொண்டுள்ள ஆர்டர்கள் மீது நிறைவேற்ற நிறுத்தம் வைக்கப்படும். இந்த நிறுத்தம் வழக்கமாக முன்பதிவுகளுக்குப் பயன்படுத்தப்படும்.

பல நிறைவேற்றங்களைக் கொண்டுள்ள ஆர்டர்களுக்கான நிறைவேற்ற நிலையைத் தீர்மானித்தல்

ஒரு ஆர்டரில் ஒன்றுக்கு மேற்பட்ட நிறைவேற்றங்கள் இருக்கலாம். ஒவ்வொரு நிறைவேற்றமும் அதற்கென சொந்த நிறைவேற்ற ID-யைக் கொண்டுள்ளது. உதாரணமாக, ஒரே ஆர்டரில் உள்ள உருப்படிகள் வெவ்வேறு இடங்களில் சேமிக்கப்பட்டு, அங்கிருந்து அனுப்பப்படலாம். ஒரு ஆர்டரில் நிறைவேற்றப்படாத நிறைவேற்றம் இருந்தால், ஆர்டரின் நிலை நிறுத்திவைக்கப்பட்டது என்பதற்குப் பதிலாக நிறைவேற்றப்படாதது என்று காண்பிக்கப்படும்.

பல நிறைவேற்றங்களைக் கொண்டிருக்கும்போது ஆர்டரின் நிறைவேற்ற நிலை எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது என்பதற்கான பின்வரும் விளக்கத்தை மதிப்பாய்வு செய்யவும்:

ஆர்டர் நிலை என்பது ஒரு ஆர்டரிலுள்ள நிறைவேற்றங்களின் நிலையைப் பொறுத்தது
நிறைவேற்றச் சூழல்ஆர்டர் நிறைவேற்ற நிலை
  • நிறைவேற்றம் 1: நிறுத்திவைக்கப்பட்டது
  • நிறைவேற்றம் 2: நிறைவேற்றப்படாதது
  • நிறைவேற்றப்படாதது
  • நிறைவேற்றம் 1: நிறுத்திவைக்கப்பட்டது
  • நிறைவேற்றம் 2: நிறைவேற்றப்பட்டது
  • நிறுத்திவைக்கப்பட்டது
  • நிறைவேற்றம் 1: நிறுத்திவைக்கப்பட்டது
  • நிறைவேற்றம் 2: நிறைவேற்றப்பட்டது
  • நிறைவேற்றம் 3: நிறைவேற்றப்படாதது
  • பகுதியளவு நிறைவேற்றப்பட்டது
  • நிறைவேற்றம் 1: நிறுத்திவைக்கப்பட்டது
  • நிறைவேற்றம் 2: நிறுத்திவைக்கப்பட்டது
  • நிறுத்திவைக்கப்பட்டது

    Shopify Flow-ஐப் பயன்படுத்தி தானியங்கி நிறைவேற்ற நிறுத்தங்களை உருவாக்குதல்

    ஆரடர்களை நிறைவேற்றுவதற்கு முன்பு அவற்றை மதிப்பாய்வு செய்வதற்காக நீங்கள் செலவிடும் நேரத்தைக் குறைக்க, நிறைவேற்ற நிறுத்தங்களைத் தானியக்கமாக்க நீங்கள் Shopify Flow-ஐப் பயன்படுத்தலாம். Shopify Flow ஆனது பல்வேறு திட்டங்களில் கிடைக்கிறது.

    நீங்கள் ஒரு வெற்றுப் பணிப்பாய்வை உருவாக்கலாம் அல்லது நிறைவேற்றல் ஆர்டரை நிறுத்திவை நடவடிக்கை சேர்க்கப்பட்டுள்ள, குறிப்பிட்ட நிறைவேற்றச் சேவையைப் பயன்படுத்தும் கட்டண ஆர்டர்களுக்கான நிறைவேற்றக் கோரிக்கையைச் சமர்ப்பி என்ற வார்ப்புருவைப் பயன்படுத்தலாம். ஒரு ஆர்டர் நிறைவேற்றப்படத் தயாராகும்போது இந்தப் பணிப்பாய்வு தொடங்குகிறது. பணிப்பாய்வைச் செயல்படுத்துவதற்கு முன்பு, தொடங்கும் நேரம் கார்டுடன் இருக்கும் சரிபார்க்கும் நிபந்தனையில் உங்கள் நிறைவேற்றச் சேவை வழங்குநரைச் சேர்ப்பதற்கு வார்ப்புருவைத் திருத்தவும்.

    Shopify Flow-ஐப் பயன்படுத்தி வார்ப்புருக்களை நிறுவுதல் மற்றும் திருத்துதல் குறித்து மேலும் அறிக.