உள்ளூர் டெலிவரி ஆர்டர்களை நிறைவேற்றுதல்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து உள்ளூர் டெலிவரி ஆர்டர்களை நிர்வகிக்கலாம், டெலிவரிக்கு அவற்றை தயார் செய்யலாம் மற்றும் அவற்றின் ஆர்டர் நிலைகளைப் புதுப்பிக்கலாம்.
இந்தப்பக்கத்தில்
- உள்ளூர் டெலிவரி ஆர்டர் பணிப்பாய்வு மற்றும் நிலைகள்
- உள்ளூர் டெலிவரி ஆர்டர்களுக்கான வாடிக்கையாளர் அறிவிப்புகள்
- உள்ளூர் டெலிவரி ஆர்டர்களை வரிசைப்படுத்துதல் மற்றும் வடிகட்டுதல்
- உள்ளூர் டெலிவரி ஆர்டருக்கான டெலிவரி வழிமுறைகளைப் பார்க்கவும்
- டெலிவரிக்கு உள்ளூர் டெலிவரி ஆர்டரைத் தயார் செய்யவும்
- உள்ளூர் டெலிவரி ஆர்டரை டெலிவரி செய்யப்பட்டதாகக் குறிக்கவும்
- உள்ளூர் டெலிவரி ஆர்டரை ரத்துசெய்யவும்
உள்ளூர் டெலிவரி ஆர்டர் பணிப்பாய்வு மற்றும் நிலைகள்
உள்ளூர் டெலிவரி ஆர்டர்களை நீங்கள் நிறைவேற்றும்போது, அவை பின்வரும் ஆர்டர் நிலைகளைக் கடந்து செல்லும்:
- நிறைவேற்றப்படாதது: ஆர்டர் தயாரிப்பு மற்றும் நிறைவேற்றம் தொடங்கவில்லை. உருப்படிகளைத் தேர்ந்தெடுத்துப் பேக் செய்து ஆர்டரை டெலிவரிக்குத் தயார் செய்வதே உங்கள் அடுத்தப் படியாகும். ஆர்டருடன் பேக்கிங் சீட்டுகளை அச்சிட்டுச் சேர்ப்பதையும் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். முடிக்க, ஆர்டரை டெலிவரிக்குத் தயார் எனக் குறிக்கவும்.
- டெலிவரிக்குத் தயார்: ஆர்டர் டெலிவரி செய்யப்படவுள்ளது, அல்லது டெலிவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. டெலிவரிக்கு முயற்சிக்கப்பட்டு, ஆர்டர் வெற்றிகரமாக டெலிவரி செய்யப்படாவிட்டாலும், ஆர்டர்கள் இந்த நிலையைக் கொண்டிருக்கலாம். ஆர்டர் டெலிவரி செய்யப்பட்ட பிறகு, அதை டெலிவரி செய்யப்பட்டதாகக் குறிப்பதே உங்களின் அடுத்தப் படியாகும்.
- டெலிவரி செய்யப்பட்டது: ஆர்டரை டெலிவரி செய்யப்பட்டதாக நீங்கள் குறிக்கும்போது, ஆர்டர் நிலை நிறைவேற்றப்பட்டது என மாறும் மற்றும் நிறைவேற்றச் செயல்முறை நிறைவடையும்.
உள்ளூர் டெலிவரி ஆர்டர்களுக்கான வாடிக்கையாளர் அறிவிப்புகள்
உங்கள் அறிவிப்பு அமைப்புகள் என்பதில் உள்ள டெலிவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது மற்றும் டெலிவரி செய்யப்பட்டது அறிவிப்புகள் கேரியர் கண்காணிப்பு நிகழ்வுகளால் தூண்டப்படுகின்றன. உள்ளூர் டெலிவரி ஆர்டர்கள் Shopify இல் கேரியர் கண்காணிப்பு நிகழ்வுகளை உருவாக்காது, எனவே இந்த அறிவிப்புகள் உள்ளூர் டெலிவரிக்குப் பொருந்தாது.
உள்ளூர் டெலிவரி ஆர்டரை டெலிவரி செய்யப்பட்டதாகக் குறிக்கும்போது, உங்கள் வாடிக்கையாளர் தானாகவே டெலிவரி உறுதிப்படுத்தல் மின்னஞ்சலைப் பெறுவார். ஆர்டரை டெலிவரி செய்யப்பட்டதாக நீங்கள் குறிக்கவில்லை எனில், தானியங்கு டெலிவரி அறிவிப்பு எதுவும் வாடிக்கையாளருக்கு அனுப்பப்படாது.
உள்ளூர் டெலிவரி ஆர்டர்களை வரிசைப்படுத்துதல் மற்றும் வடிகட்டுதல்
ஆர்டர்கள் பக்கத்தில் உள்ளூர் டெலிவரி ஆர்டர்களை மட்டும் பார்க்க, உங்களால் ஆர்டர்களை வடிகட்ட முடியும்.
நிறைவேற்றப்படாதது மற்றும் டெலிவரிக்குத் தயார் என்ற நிலையில் இருக்கும் உள்ளூர் டெலிவரி ஆர்டர்களின் பட்டியலைப் பெற, உங்கள் ஆர்டர்கள் பட்டியலின் மேலே உள்ள உள்ளூர் டெலிவரி தாவலைக் கிளிக் செய்யவும். டெலிவரிக்கு ஆர்டர்களைத் தயார் செய்ய இந்தப் பட்டியலை நீங்கள் பயன்படுத்தலாம்.
உள்ளூர் டெலிவரி ஆர்டருக்கான டெலிவரி வழிமுறைகளைப் பார்க்கவும்
செக்அவுட்டில் ஆர்டர்களுக்கான டெலிவரி வழிமுறைகளைச் சேர்க்கும் விருப்பம் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு உள்ளது. டெலிவரி செய்யும் இடங்களைக் கண்டறியவும், பேக்கேஜை எங்கே வைக்க வேண்டும் என்பது குறித்த கூடுதல் தகவலை வழங்கவும் இந்த வழிமுறைகள் உங்களுக்கு உதவும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆர்டர்கள் என்பதற்குச் செல்லவும்.
எந்த உள்ளூர் டெலிவரி ஆர்டருக்கான டெலிவரி வழிமுறைகளைப் பார்க்க வேண்டுமோ அதைக் கிளிக் செய்யவும்.
டெலிவரி வழிமுறைகள் பிரிவில், செக்அவுட்டின் போது உங்கள் வாடிக்கையாளர் வழங்கிய வழிமுறைகள் ஏதேனும் இருந்தால் அவற்றைப் பார்க்கவும்.
டெலிவரிக்கு உள்ளூர் டெலிவரி ஆர்டரைத் தயார் செய்யவும்
ஒரு ஆர்டரை நீங்கள் தயார் செய்த பிறகு, அதை டெலிவரிக்குத் தயாராக உள்ளதாகக் குறிக்க வேண்டும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆர்டர்கள் என்பதற்குச் செல்லவும்.
நீங்கள் நிறைவேற்ற விரும்பும் ஆர்டரைக் கிளிக் செய்யவும்.
டெலிவரிக்குத் தயார்செய் என்பதைக் கிளிக் செய்யவும்.
விருப்பத்தேர்வு: பேக்கிங் சீட்டை அச்சிட, பேக்கிங் சீட்டை அச்சிடு என்பதைக் கிளிக் செய்யவும்.
டெலிவரி செய்வதற்கான உருப்படிகளைத் தேர்ந்தெடுத்துப் பேக் செய்யவும்.
டெலிவரிக்குத் தயார் எனக் குறி என்பதைக் கிளிக் செய்யவும்.
உள்ளூர் டெலிவரி ஆர்டரை டெலிவரி செய்யப்பட்டதாகக் குறிக்கவும்
ஒரு ஆர்டர் டெலிவரி செய்யப்படும்போது, உங்கள் Shopify நிர்வாகியில் அந்த ஆர்டரை டெலிவரி செய்யப்பட்டதாகக் குறிக்க வேண்டும். இது ஆர்டர் நிலையை மாற்றுகிறது மேலும் ஆர்டர் டெலிவரி செய்யப்பட்டுவிட்டது என்பதையும், மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் தேவையில்லை என்பதையும் உங்களுக்கும் உங்கள் பணியாளர்களுக்கும் தெரிவிக்கிறது.
ஆர்டரை டெலிவரி செய்யப்பட்டதாகக் குறிப்பது உங்கள் வாடிக்கையாளருக்கு அறிவிப்பு ஒன்றையும் அனுப்புகிறது, இதனால் ஆர்டர் வந்துவிட்டது என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆர்டர்கள் என்பதற்குச் செல்லவும்.
டெலிவரி செய்யப்பட்டதாக நீங்கள் குறிக்க விரும்பும் ஆர்டரைக் கிளிக் செய்யவும்.
டெலிவரி செய்யப்பட்டது எனக் குறி என்பதைக் கிளிக் செய்யவும்.
உள்ளூர் டெலிவரி ஆர்டரை ரத்துசெய்யவும்
ஒரு டெலிவரியை நீங்கள் ரத்துசெய்யும்போது, ஆர்டரின் நிலை டெலிவரிக்குத் தயார் என்பதிலிருந்து நிறைவேற்றப்படாதது என மாறுகிறது.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆர்டர்கள் என்பதற்குச் செல்லவும்.
ரத்துசெய்ய விரும்பும் உள்ளூர் டெலிவரி ஆர்டரைக் கிளிக் செய்யவும்
... என்பதைக் கிளிக் செய்து, பின்னர் டெலிவரியை ரத்துசெய் என்பதைக் கிளிக் செய்யவும்.