Dymo LabelWriter 4XL பிரிண்டர்
ஷிப்பிங் லேபிள்களை அச்சிட, Dymo LabelWriter 4XL பிரிண்டரைப் பயன்படுத்தலாம். Dymo LabelWriter 4XL பிரிண்டர் USB மூலம் உங்கள் Windows அல்லது Mac கணினியுடன் இணைக்கப்படுகிறது.
உங்கள் Dymo பிரிண்டரை நிறுவுதல், அமைத்தல் அல்லது சிக்கல் தீர்த்தல் போன்றவற்றில் உதவி தேவைப்பட்டால், Dymo ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.
உங்கள் பார்கோடு லேபிள்களைத் தனிப்பயனாக்கவும் அச்சிடவும், நீங்கள் Dymo லேபிள் மென்பொருளைப் பயன்படுத்தலாம்.
இந்தப் பக்கத்தில்
- Dymo LabelWriter 4XL லேபிள் பிரிண்டரைப் பயன்படுத்துவதற்கான தேவைகள்
- Dymo LabelWriter 4XL லேபிள் பிரிண்டருக்கான டிரைவர்களைப் பதிவிறக்கவும்
- Dymo LabelWriter 4XL லேபிள் பிரிண்டரில் லேபிள்களை ஏற்றவும்
- Dymo LabelWriter 4XL லேபிள் பிரிண்டரைச் சுத்தப்படுத்தவும்
- Dymo LabelWriter 4XL லேபிள் பிரிண்டரின் நிலை விளக்குகள்
- Dymo LabelWriter 4XL லேபிள் பிரிண்டரின் சிக்கல் தீர்த்தல்
Dymo LabelWriter 4XL லேபிள் பிரிண்டரைப் பயன்படுத்துவதற்கான தேவைகள்
Dymo LabelWriter 4XL பிரிண்டரைப் பயன்படுத்த, பின்வரும் சிஸ்டம் தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்தவும்:
- Windows XP 32-பிட்
- Windows Vista
- Windows 7
- Mac OS v10.4 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பு
Dymo LabelWriter 4XL லேபிள் பிரிண்டருக்கான டிரைவர்களைப் பதிவிறக்கவும்
நீங்கள் Dymo பிரிண்டரைப் பயன்படுத்துவதற்கு முன்பு, சமீபத்திய டிரைவர்களைப் பதிவிறக்கி நிறுவ வேண்டும்.
படிகள்:
Mac
- உங்கள் வலை உலாவியில், Dymo-வின் இணையதளத்திற்குச் செல்லவும்.
- Support > Downloads: Software, Drivers & User Guides என்பதைக் கிளிக் செய்யவும்.
- சமீபத்திய Mac பதிப்பின் கீழ், Download என்பதைக் கிளிக் செய்யவும்.
- பதிவிறக்கம் முடிந்ததும், Dymo-வின் லேபிள் மென்பொருளை நிறுவ
.dmgகோப்பைத் திறக்கவும். - நிறுவியிலுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.
- வழங்கப்பட்டுள்ள USB கேபிளைப் பயன்படுத்தி உங்கள் கணினியில் பிரிண்டரைச் செருகவும், பின்னர் அதன் பவர் அடாப்டரை இணைக்கவும். பிரிண்டரை ஆன் செய்த பிறகு, உங்கள் கணினி தானாகவே அதைக் கண்டறியும்.
Windows
- வழங்கப்பட்டுள்ள USB கேபிளைப் பயன்படுத்தி உங்கள் கணினியில் பிரிண்டரைச் செருகவும், பின்னர் அதன் பவர் அடாப்டரை இணைக்கவும். பிரிண்டரை ஆன் செய்த பிறகு, உங்கள் கணினி தானாகவே அதைக் கண்டறிந்து, தேவையான சாதன இயக்கிகளைப் பதிவிறக்கும்.
- விருப்பத்திற்குரியது: உங்கள் பிரிண்டர் நிறுவப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தவும்:
- உங்கள் கணினியின் Control panel-ஐத் திறக்கவும்.
- Hardware and Sound என்பதைக் கிளிக் செய்யவும்.
- Devices என்பதைக் கிளிக் செய்யவும்.
- Printers & Scanners பிரிவில், பிரிண்டர்களின் பட்டியலில் Dymo LabelWriter 4XL காட்டப்படுவதை உறுதிப்படுத்தவும்.
Dymo LabelWriter 4XL லேபிள் பிரிண்டரில் லேபிள்களை ஏற்றுதல்
Dymo LabelWriter 4XL லேபிள் பிரிண்டரில் லேபிள்களை ஏற்ற, இந்தப் படிகளைப் பின்பற்றவும்.
படிகள்:
- பிரிண்டரை ஆன் செய்து, ஷிப்மென்ட்டின் போது பிரிண்டரைப் பாதுகாத்த லேபிள்களை வெளியேற்ற, லேபிள் ரிவர்ஸ் ஃபீட் பொத்தானை அழுத்தவும்.
- மேல்புற மூடியைத் திறந்து, லேபிள் பெட்டிக்குள் இருக்கும் பேக்கிங் பொருள்களை அகற்றவும்.
- மூடியின் உள்ளே இருந்து லேபிள் ஸ்பூலை அகற்றி, ஸ்பிண்டிலில் இருந்து ஸ்பூல் வழிகாட்டியைப் பிரிக்கவும்.
- ஸ்பூல் ஸ்பிண்டிலைப் பிடித்து, லேபிள் ரோலை ஸ்பிண்டிலின் மீது வைக்கவும், இதன்மூலம் லேபிள்கள் கீழ்ப்புறத்தில் இருந்து நகரும், மேலும் லேபிள் ரோலின் இடது விளிம்பு ஸ்பூலின் பக்கவாட்டில் உறுதியாகப் பொருந்தியிருக்கும்.
- ஸ்பூலின் வலது பக்கத்தில் ஸ்பூல் வழிகாட்டியை நகர்த்தி, லேபிள் ரோலின் பக்கவாட்டில் அந்த வழிகாட்டியை இறுக்கமாக அழுத்தவும். இடைவெளிகள் இன்றி லேபிள் ஸ்பூலின் இருபுறமும் லேபிள் ரோல் சரியாகப் பொருந்தியிருக்க வேண்டும்.
- ரோலின் அடிப்பகுதியில் இருந்து லேபிள்கள் நீட்டிக்கொண்டிருக்க, பிரிண்டர் மூடியில் உள்ள ஸ்லாட்டிற்குள் லேபிள் ஸ்பூலைச் செருகவும்.
- லேபிள் வெளியேறும் ஸ்லாட்டின் இடது விளிம்புடன் லேபிளின் இடது விளிம்பை நேராக்கி, லேபிளை ஸ்லாட்டிற்குள் செருகவும். பிரிண்டர் தானாகவே லேபிள்களை நகர்த்தி, முதல் லேபிளின் தொடக்கத்தில் நிறுத்தும்.
- லேபிள் வழிகாட்டி லேபிளின் வலது விளிம்புடன் நேராகும் வரை இடதுபுறமாக நகர்த்தி, பின்னர் மேல்புற மூடியை மூடவும்.
Dymo LabelWriter 4XL லேபிள் பிரிண்டரைச் சுத்தம் செய்தல்
உங்கள் பிரிண்டர் சரியாக வேலை செய்ய, எப்போதாவது பிரிண்டரின் வெளிப்புறத்தையும் உட்புறத்தையும் சுத்தம் செய்ய வேண்டும்.
படிகள்:
- பவர் கார்டைத் துண்டிக்கவும்.
- பிரிண்டரின் வெளிப்புறத்தைத் துடைக்க பஞ்சு இல்லாத துணியைப் பயன்படுத்தவும்.
- பின்வரும் சுத்தம் செய்யும் திரவங்களில் ஒன்றைக் கொண்டு அழுக்கு மற்றும் கறைகளை அகற்றவும்:
- ஐசோபுரோப்பைல் ஆல்கஹால்
- நீர்த்த பாத்திரம் கழுவும் டிடர்ஜென்ட்
- நீர்த்த கண்ணாடி கிளீனர்
- பிரிண்டரின் மேல்புற மூடியைத் திறந்து, ஒரு சிறிய, மென்மையான பிரஷ் அல்லது காட்டன் ஸ்வாப்பைப் பயன்படுத்தி பிரிண்டரின் உள்ளே இருக்கும் காகிதத் தூசிகள் மற்றும் பிற சிறு துகள்களைத் துடைத்து அகற்றவும்.
- லேபிள்களின் ரோலை அகற்றி, ரோலுக்கு அடியில் சுத்தம் செய்யவும்.
- பவர் கார்டை மீண்டும் இணைக்கவும்.
- விருப்பத்திற்குரியது: உங்களிடம் LabelWriter கிளீனிங் கார்டு இருந்தால், கிளீனிங் கார்டு பொதியாக்கத்தில் அச்சிடப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றவும். கிளீனிங் கார்டுகளை வாங்க, Dymo இணையதளத்திற்குச் செல்லவும்.
- லேபிள்களின் ரோலை மீண்டும் ஏற்றி, மேல்புற மூடியை மூடவும்.
Dymo LabelWriter 4XL லேபிள் பிரிண்டருக்கான நிலை விளக்குகள்
பிரிண்டரின் தற்போதைய நிலையை நிலை விளக்குக் காட்சிப்படுத்துகிறது.
| நிலை விளக்கு | விளக்கம் |
|---|---|
| நிலையான நீலம் | பவர் ஆன் செய்யப்பட்டுள்ளது மற்றும் பிரிண்டர் தயாராக உள்ளது. |
| மங்கலான நீலம் | பிரிண்டர் பவர் சேமிப்பு பயன்முறையில் உள்ளது. |
| மின்னும் நீலம் | லேபிள்கள் சரியாக ஏற்றப்படவில்லை அல்லது லேபிள் ரோல் காலியாக உள்ளது. |
Dymo LabelWriter 4XL லேபிள் பிரிண்டரில் சிக்கல் தீர்த்தல்
Dymo LabelWriter 4XL லேபிள் பிரிண்டர் சிக்கலைத் தேர்ந்தெடுத்து, சிக்கல் தீர்த்தல் படிகளைப் பின்பற்றவும்.
அச்சுத் தரம் சார்ந்த சிக்கல்களைத் தீர்த்தல்
மோசமான அச்சுத் தரம் பொதுவாகப் பின்வரும் சிக்கல்களில் ஒன்றால் ஏற்படுகிறது:
- லேபிள்களின் பழைய ரோல்.
- Dymo தவிர பிற உற்பத்தியாளரால் தயாரிக்கப்பட்ட லேபிள்கள்.
- தெர்மல் கோட்டிங் பாதிக்கப்பட்டுள்ள லேபிள்கள்.
- அழுக்கான பிரிண்ட் ஹெட்.
Dymo பிராண்ட் லேபிள்களைப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்தவும். மூன்றாம் தரப்பு லேபிள்களின் தெர்மல் கோட்டிங்கானது Dymo பிராண்ட் லேபிள்களை விட வித்தியாசமான உணர்திறனைக் கொண்டிருக்கக் கூடும் என்பதால், அவற்றைத் தவிர்க்கவும். மேலும், பிற உற்பத்தியாளர்களின் லேபிள்களுக்கு இடையில் இருக்கும் துளையிடப்பட்ட ஓட்டைகள், பெரும்பாலும் Dymo LabelWriter பிரிண்டர்களால் கண்டறியப்படுவதில்லை.
அச்சுத் தரம் மங்கலாக இருந்தால், அச்சிடப்பட்ட எழுத்துகளில் சிறிய வெள்ளைப் புள்ளிகள் தோன்றினால், அல்லது வெளிர் மற்றும் கருமையான திட்டுகள் இருந்தால், உங்கள் லேபிள் ரோலில் பழுது இருக்கலாம். புதிய பெட்டியில் உள்ள வேறு ரோலைப் பயன்படுத்த முயலவும். இரண்டாவது ரோல் சரியாக அச்சிட்டால், முதல் லேபிள் ரோலில் தான் சிக்கல் உள்ளது என்று அர்த்தம்.
நீங்கள் பிரிண்ட் ஹெட்டைச் சுத்தம் செய்ய வேண்டியிருக்கலாம்.
உடைந்த எழுத்துகள் அல்லது பிற அச்சுத் தரச் சிக்கல்கள் போன்றவற்றைத் தொடர்ந்து அனுபவித்தால், பிரிண்டர் சுய-பரிசோதனையை மேற்கொள்ளவும். பிரிண்ட் ஹெட் மற்றும் அச்சிடும் இயங்குமுறையின் அனைத்துக் கூறுகளும் வேலை செய்கின்றனவா என்பதைச் சுய-பரிசோதனை சரிபார்க்கிறது.
படிகள்:
- பிரிண்டரில் ஒரு லேபிள் ரோல் உள்ள நிலையில், பிரிண்டரின் முன்பக்கத்திலிருக்கும் FORM-FEED பொத்தானை ஐந்து முதல் பத்து விநாடிகளுக்கு அழுத்திப் பிடிக்கவும். பிரிண்டர் அதன் அகலத்திற்கு ஏற்ப செங்குத்துக் கோடுகளை அச்சிடத் தொடங்குகிறது. பரிசோதனை பேட்டர்ன் ஒவ்வொரு 3/4 அங்குலத்திற்கும் (19 mm) தானாகவே மாறும்.
- சுய-பரிசோதனை தொடங்கியதும், FORM-FEED பொத்தானை விடுவிக்கவும். 3 சுய-பரிசோதனையை நிறுத்த, FORM-FEED பொத்தானை அழுத்தி விடுவிக்கவும்.
பிரிண்டரின் சிக்கல் தீர்க்கப்படவில்லை என்றால், Dymo-வின் ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.
லேபிள் சிக்குவதைச் சரிசெய்தல்
பிரிண்டரில் லேபிள்கள் சிக்கியிருந்தால், பின்வரும் படிகளைக் கொண்டு அவற்றை அகற்றலாம்.
படிகள்:
- பிரிண்டர் வழியே ஏற்கனவே வெளியே வந்துள்ள லேபிள்களைக் கிழித்துவிடவும்.
- லேபிள் வெளியீட்டு லீவரை முன்னோக்கி அழுத்திவிட்டு, லேபிள் ஃபீட் ஸ்லாட்டிலிருந்து சிக்கியுள்ள லேபிளை வெளியே இழுக்கவும்.
பிரிண்டரின் சிக்கல் தீர்க்கப்படவில்லை என்றால், Dymo-வின் ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.
லேபிள்கள் சரியாக வெளியே வராத சிக்கலைத் தீர்த்தல்
உங்கள் லேபிள்கள் சரியாக வெளியே வரவில்லை எனில், பின்வரும் அமைவுத் தேவைகளைச் சரிபார்க்கவும்:
- உங்கள் லேபிள்கள் முறையாக ஏற்றப்பட்டிருக்க வேண்டும், மேலும் லேபிளின் இடது விளிம்பு லேபிள் ஃபீட் ஸ்லாட்டின் இடது விளிம்புடன் சீரமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
- நீங்கள் Dymo பிராண்டு லேபிள்களைப் பயன்படுத்துகிறீர்கள். பிற உற்பத்தியாளர்களால் உருவாக்கப்படும் லேபிள்களுக்கு இடையிலான துளைகளை Dymo பிரிண்டர்களால் அடிக்கடி கண்டறிய முடிவதில்லை. துளைகள் கண்டறியப்படாதபோது, லேபிள்கள் சரியாக வெளியே வராது.
பிரிண்டரின் சிக்கல் தீர்க்கப்படவில்லை என்றால், Dymo-வின் ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.
பிரிண்டர் பிரிண்ட் செய்யாத அல்லது பிரிண்டிங்கை நிறுத்தாத சிக்கலைத் தீர்த்தல்
உங்கள் பிரிண்டர் பிரிண்ட் செய்யவில்லை என்றாலோ, பயன்பாட்டில் இருக்கும்போது பிரிண்ட் செய்வதை நிறுத்திவிட்டாலோ, பின்வரும் படிகள் மூலம் சிக்கலைத் தீர்க்கவும்:
- பிரிண்டருக்கு பவர் கிடைப்பதையும், பவர் கேபிள் துண்டிக்கப்படவில்லை என்பதையும் உறுதிசெய்யவும்.
- பிரிண்டரின் முன்புறத்திலுள்ள ஸ்டேட்டஸ் லைட் ஒளிரவில்லை எனில், பவர் கேபிள் செருகப்பட்டிருப்பதையும் பவர் ஸ்ட்ரிப் வேலை செய்வதையும் உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
- சுவர் அவுட்லெட் மற்றும் பவர் ஸ்ட்ரிப்பில் வேறு எதையேனும் செருகிப் பார்ப்பதன் மூலம் அவுட்லெட் அல்லது பவர் ஸ்ட்ரிப்பில் சிக்கல் எதுவும் இல்லை என்பதை உறுதிசெய்யவும்.
- பிரிண்டர் இயக்கப்பட்டிருக்கும் போது ஃபார்ம் ஃபீட் பொத்தானை அழுத்துவதன் மூலம், பிரிண்டர் லேபிள்களைச் சரியாக வெளியேற்றுகிறதா என்பதை உறுதிப்படுத்தவும்.
- லேபிள்கள் சிக்கியிருந்தால், ஸ்டேட்டஸ் லைட் ஒளிரும். இந்தப் பக்கத்தில் உள்ள லேபிள் சிக்கல்களைத் தீர்த்தல் பகுதியைப் பார்க்கவும்.
- உங்கள் USB கேபிள் உங்கள் பிரிண்டரின் பின்புறத்திலிருந்தோ கம்ப்யூட்டரிலிருந்தோ தளர்வாகவில்லை என்பதை உறுதிசெய்யவும்.
- உங்கள் LabelWriter பிரிண்டர் டிரைவர் சரியாக நிறுவப்பட்டுள்ளதை உறுதிசெய்யவும்.
பிரிண்டரின் சிக்கல் தீர்க்கப்படவில்லை என்றால், Dymo-வின் ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.