Dymo LabelWriter Wireless லேபிள் பிரிண்டர்
ஷிப்பிங் லேபிள்களை அச்சிட, Dymo LabelWriter Wireless லேபிள் பிரிண்டரைப் பயன்படுத்தலாம். Dymo LabelWriter Wireless லேபிள் பிரிண்டரானது, Wi-Fi மூலம் உங்கள் Windows அல்லது Mac கணினியுடன் இணைகிறது. Dymo LabelWriter Wireless லேபிள் பிரிண்டரில் உள்ள பொதுவான சிக்கல்களைத் தீர்க்கவும் இந்த வழிகாட்டியைப் பயன்படுத்தலாம்.
உங்கள் Dymo LabelWriter Wireless லேபிள் பிரிண்டரை நிறுவுதல், அமைத்தல் அல்லது சிக்கல் தீர்த்தல் போன்றவற்றில் உதவி தேவைப்பட்டால், Dymo-இன் ஆதரவுக் குழுவைத் தொடர்புகொள்ளுங்கள்.
உங்கள் பார்கோடு லேபிள்களைத் தனிப்பயனாக்கவும் அச்சிடவும், Dymo Label மென்பொருளைப் பயன்படுத்தலாம்.
இந்தப் பக்கத்தில்
- Dymo LabelWriter Wireless லேபிள் பிரிண்டரைப் பயன்படுத்துவதற்கான தேவைகள்
- உங்கள் Dymo LabelWriter Wireless லேபிள் பிரிண்டரை மின் இணைப்பில் இணைக்கவும்
- Dymo LabelWriter Wireless லேபிள் பிரிண்டரை Wi-Fi-உடன் இணைக்கவும்
- Dymo லேபிள் மென்பொருளைப் பதிவிறக்கவும்
- Dymo LabelWriter Wireless லேபிள் பிரிண்டரில் லேபிள்களை ஏற்றவும்
- Dymo LabelWriter Wireless லேபிள் பிரிண்டரைச் சுத்தப்படுத்தவும்
- Dymo LabelWriter Wireless லேபிள் பிரிண்டருக்கான நிலை விளக்குகள்
- Dymo LabelWriter Wireless லேபிள் பிரிண்டரில் சிக்கல் தீர்க்கவும்
- உங்கள் Dymo LabelWriter Wireless லேபிள் பிரிண்டரை அதன் தொழிற்சாலை இயல்புநிலை அமைப்புகளுக்கு மீட்டமைக்கவும்
Dymo LabelWriter Wireless லேபிள் பிரிண்டரைப் பயன்படுத்துவதற்கான தேவைகள்
Dymo LabelWriter Wireless லேபிள் பிரிண்டரைப் பயன்படுத்த, பின்வரும் சிஸ்டம் தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும்:
- Windows 7 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பு
- OS X 10.11 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பு
உங்கள் Dymo LabelWriter Wireless லேபிள் பிரிண்டரை மின் இணைப்பில் இணைக்கவும்
உங்கள் Dymo LabelWriter Wireless லேபிள் பிரிண்டருடன் வழங்கப்பட்டுள்ள பவர் அடாப்டரை மட்டுமே பயன்படுத்துகிறீர்கள் என்பதை உறுதிசெய்யவும். உங்கள் பிரிண்டரை மின் இணைப்பில் இணைக்க, இந்தப் படிகளைப் பின்பற்றவும்.
படிகள்:
- பவர் கார்டை பவர் அடாப்டரில் செருகவும், பின்னர் பிரிண்டரின் பின்புறம் உள்ள பவர் கனெக்டரில் பவர் அடாப்டரைச் செருகவும்.
- பவர் கார்டின் மறுமுனையை பவர் அவுட்லெட்டில் செருகவும்.
- பிரிண்டரின் பக்கவாட்டில் உள்ள POWER பொத்தானை அழுத்தவும்.
பவர் நிலை விளக்கு சில விநாடிகளுக்கு ஒளிரும், பின்னர் வயர்லெஸ் நிலை விளக்கு ஒளிரும்.
Dymo LabelWriter Wireless லேபிள் பிரிண்டரை Wi-Fi-உடன் இணைக்கவும்
WPS-ஐ ஆதரிக்கும் ரவுட்டர்களில் உள்ள வயர்லெஸ் புரொடக்டட் செட்டப் (WPS) பொத்தானைப் பயன்படுத்தியோ அல்லது பிரிண்டரில் நிறுவப்பட்டுள்ள LabelWriter Web Configuration யூட்டிலிட்டியில் உள்ள விரைவான அமைவு வழிகாட்டி மூலமாகவோ, உங்கள் Dymo LabelWriter Wireless லேபிள் பிரிண்டரை இணைக்கலாம்.
படிகள்:
WPS-ஐப் பயன்படுத்தி பிரிண்டரை இணைக்கவும்
- பிரிண்டரின் பின்புறம் உள்ள WPS பொத்தானை அழுத்தவும். பிரிண்டரின் பக்கவாட்டில் உள்ள வயர்லெஸ் நிலை விளக்கு ஒளிரும்.
- 2 நிமிடங்களுக்குள், உங்கள் ரவுட்டரில் உள்ள WPS பொத்தானை அழுத்தவும்.
பிரிண்டர் உங்கள் வயர்லெஸ் நெட்வொர்க்குடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டதும், வயர்லெஸ் நிலை விளக்கு தொடர்ந்து எரியும், இனி சிமிட்டாது.
விரைவான அமைவு வழிகாட்டியைப் பயன்படுத்தி பிரிண்டரை இணைக்கவும்
- பிரிண்டரை ஆன் செய்து, உங்கள் கணினியில் DYMOLWWxxxxx எனப் பெயரிடப்பட்ட வயர்லெஸ் நெட்வொர்க்குடன் இணையவும். இந்தத் தனித்துவமான பிரிண்டர் பெயர், உங்கள் பிரிண்டரின் கீழ்ப்பகுதியில் இருக்கும். இந்தப் படியின்போது கடவுச்சொல் கேட்கப்பட்டால், உங்கள் Wi-Fi-இன் கடவுச்சொல்லைப் பயன்படுத்தவும்.
- உங்கள் வெப் பிரவுசரில் பின்வரும் URL-ஐ உள்ளிடவும்: http://192.168.58.1. Web Configuration யூட்டிலிட்டி உங்கள் பிரவுசரில் திறக்கப்பட்டு, உள்நுழைவுப் பக்கத்தைக் காண்பிக்கும்.
- கீழே உள்ள சான்றுகளுடன் LabelWriter Web Configuration இல் உள்நுழையவும்:
- பயனர் பெயர்: admin
- கடவுச்சொல்: admin
- உங்கள் வயர்லெஸ் நெட்வொர்க்குடன் பிரிண்டரை இணைக்க, வழிகாட்டியைப் பின்பற்றவும்:
- பிரிண்டர் பெயர்: இயல்புநிலை பிரிண்டர் பெயரை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.
- இணைப்பு முறை: DHCP பரிந்துரைக்கப்படுகிறது. Static என்பதை நீங்கள் தேர்வுசெய்தால், உங்கள் நெட்வொர்க்கில் பிரிண்டரை உள்ளமைக்க அனைத்து நெட்வொர்க் விவரங்களும் உங்களிடம் இருக்க வேண்டும்.
- வயர்லெஸ் நெட்வொர்க்: பிரிண்டரை எந்த வயர்லெஸ் நெட்வொர்க்குடன் இணைக்க வேண்டுமோ, அதற்கு அடுத்துள்ள இணை என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் வயர்லெஸ் நெட்வொர்க்குடன் பிரிண்டர் வெற்றிகரமாக இணைக்கப்பட்டதும், பிரிண்டரின் பக்கவாட்டில் உள்ள வயர்லெஸ் நிலை விளக்கு தொடர்ந்து எரியும். பிரிண்டருக்கு ஒதுக்கப்பட்ட IP முகவரியைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள், இதன் மூலம் எதிர்காலத்தில் Web Configuration யூட்டிலிட்டியை நீங்கள் அணுகலாம்.
பிரிண்டர் உங்கள் வயர்லெஸ் நெட்வொர்க்குடன் இணைக்கப்படும்போது, பிரிண்டருடனான உங்கள் கணினியின் வயர்லெஸ் இணைப்பு துண்டிக்கப்படும், மேலும் உங்கள் கணினி தானாகவே உங்கள் வயர்லெஸ் நெட்வொர்க்குடன் மீண்டும் இணைக்கப்பட வேண்டும். ஏதேனும் இணைப்புச் சிக்கல்களை எதிர்கொண்டால், உங்கள் கணினி உங்கள் வயர்லெஸ் நெட்வொர்க்குடன் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கவும்.
Dymo லேபிள் மென்பொருளைப் பதிவிறக்கவும்
கணினியிலிருந்து லேபிள்களை அச்சிட, நீங்கள் DYMO லேபிள் மென்பொருளை நிறுவி, அதன்பிறகு உங்கள் கணினியில் நெட்வொர்க் பிரிண்டரைச் சேர்க்க வேண்டும்.
படிகள்:
- Dymo இணையதளத்தில் இருந்து, Dymo லேபிள் மென்பொருளின் சமீபத்திய பதிப்பைப் பதிவிறக்கி நிறுவவும்.
- Dymo லேபிள் மென்பொருளைத் தொடங்கி, பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:
- நீங்கள் நிறுவிய முதல் Dymo லேபிள் பிரிண்டர் இதுவென்றால், வயர்லெஸ் பிரிண்டராக லேபிள் பிரிண்டரைச் சேர்க்குமாறு மென்பொருள் கேட்கும்போது ஆம் என்பதைக் கிளிக் செய்யவும்.
- Dymo லேபிள் பிரிண்டர் ஏற்கனவே நிறுவப்பட்டிருந்தால், கோப்பு மெனுவிலிருந்து, நெட்வொர்க் பிரிண்டரைச் சேர் என்பதைத் தேர்வுசெய்யவும்.
- நெட்வொர்க் பிரிண்டரைச் சேர் யூட்டிலிட்டியில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.
இப்போது DYMO லேபிள் மென்பொருளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிண்டராக LabelWriter Wireless பிரிண்டர் இருக்க வேண்டும்.
Dymo LabelWriter Wireless லேபிள் பிரிண்டரில் லேபிள்களை ஏற்றவும்
Dymo LabelWriter Wireless லேபிள் பிரிண்டரில் லேபிள்களை ஏற்ற இந்தப் படிகளைப் பின்பற்றவும்.
படிகள்:
- பிரிண்டரை ஆன் செய்து, ஷிப்மென்ட்டின்போது பிரிண்டரைப் பாதுகாத்த லேபிள்களை வெளியேற்ற லேபிளைப் பின்னோக்கித் தள்ளும் பொத்தானை அழுத்தவும்.
- மேல்புற மூடியைத் திறந்து, லேபிள் அறைக்குள் ஏதேனும் பேக்கிங் மெட்டீரியல் இருந்தால் அதை அகற்றவும்.
- மூடிக்குள்ளிருந்து லேபிள் ஸ்பூலை அகற்றிவிட்டு, ஸ்பிண்டிலிலிருந்து ஸ்பூல் வழிகாட்டியைப் பிரிக்கவும்.
- ஸ்பூல் ஸ்பிண்டிலைப் பிடித்துக்கொண்டு, லேபிள்கள் அடியிலிருந்து வருமாறும், லேபிள் ரோலின் இடது விளிம்பு ஸ்பூலின் பக்கவாட்டில் உறுதியாக இருக்குமாறும் ஸ்பிண்டிலில் லேபிள் ரோலை வைக்கவும்.
- ஸ்பூலின் வலது பக்கத்தில் ஸ்பூல் வழிகாட்டியைச் சரித்து, லேபிள் ரோலின் பக்கவாட்டில் வழிகாட்டியை இறுக்கமாக அழுத்தவும். லேபிள் ரோல், லேபிள் ஸ்பூலின் இரண்டு பக்கங்களிலும் இடைவெளியின்றிப் பொருந்த வேண்டும்.
- ரோலின் அடியிலிருந்து லேபிள்கள் நீட்டிக்கொண்டிருக்கும்படி, பிரிண்டர் மூடியில் உள்ள ஸ்லாட்டில் லேபிள் ஸ்பூலைச் செருகவும்.
- லேபிள் வெளியேறும் ஸ்லாட்டின் இடது விளிம்புடன் லேபிளின் இடது விளிம்பை நேர்படுத்தி, ஸ்லாட்டில் லேபிளைச் செருகவும். பிரிண்டர் தானாகவே லேபிள்களை நகர்த்தி, முதல் லேபிளின் தொடக்கத்தில் நிறுத்தும்.
- லேபிள் வழிகாட்டி லேபிளின் வலது விளிம்புடன் நேர்படும் வரை லேபிள் வழிகாட்டியை இடதுபுறமாக நகர்த்தி, பின்னர் மேல்புற மூடியை மூடவும்.
Dymo LabelWriter Wireless லேபிள் பிரிண்டரைச் சுத்தம் செய்தல்
பிரிண்டர் சரியாக வேலை செய்ய, பிரிண்டரின் உட்புறத்தையும் வெளிப்புறத்தையும் அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும்.
படிகள்:
- பவர் கார்டைத் துண்டிக்கவும்.
- பிரிண்டரின் வெளிப்புறத்தைத் துடைக்க, பஞ்சு இல்லாத துணியைப் பயன்படுத்தவும்.
- பின்வரும் சுத்தம் செய்யும் திரவங்களில் ஒன்றைப் பயன்படுத்தி அழுக்கு, கறைகளை அகற்றவும்:
- Isopropyl alcohol (ஐசோபுரோப்பைல் ஆல்கஹால்)
- நீர்த்த பாத்திரம் கழுவும் டிட்டர்ஜென்ட்
- நீர்த்த கண்ணாடி கிளீனர்
- பிரிண்டரின் மேல்புற மூடியைத் திறந்து, ஒரு சிறிய, மென்மையான பிரஷ் அல்லது காட்டன் ஸ்வாப்பைப் பயன்படுத்தி பிரிண்டரின் உள்ளே உள்ள காகிதத் தூசு மற்றும் பிற துகள்களை அகற்றவும்.
- லேபிள்களின் ரோலை அகற்றி, ரோலுக்கு அடியில் சுத்தம் செய்யவும்.
- பவர் கார்டை மீண்டும் இணைக்கவும்.
- விருப்பத்தேர்வு: உங்களிடம் LabelWriter கிளீனிங் கார்டு இருந்தால், கிளீனிங் கார்டு பொதியாக்கத்தில் அச்சிடப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும். கிளீனிங் கார்டுகளைக் கொள்முதல் செய்ய, Dymo இணையதளத்திற்குச் செல்லவும்.
- லேபிள் ரோலை மீண்டும் ஏற்றி, மேல்புற மூடியை மூடவும்.
Dymo LabelWriter Wireless லேபிள் பிரிண்டருக்கான நிலை விளக்குகள்
Dymo LabelWriter Wireless லேபிள் பிரிண்டரின் தற்போதைய நிலையை நிலை விளக்கு காட்டுகிறது.
வயர்லெஸ் நிலை விளக்குகள்
பிரிண்டரின் Wi-Fi இணைப்பு தொடர்பான தற்போதைய நிலையை வயர்லெஸ் நிலை விளக்குகள் காட்டுகின்றன.
| நிலை விளக்கு | விளக்கம் |
|---|---|
| ஆஃப் | வயர்லெஸ் வலையமைப்பு இணைப்பு இல்லை அல்லது பிரிண்டர் பவர் சேவிங் பயன்முறையில் உள்ளது. |
| ஒளிர்ந்தபடி இருக்கும் | வயர்லெஸ் வலையமைப்பு இணைப்பு. |
| மெதுவாகச் சிமிட்டும் | வயர்லெஸ் வலையமைப்பில் இணைக்க முயற்சிக்கிறது. |
| மின்னி ஒளிரும் | WPS ஐப் பயன்படுத்தி இணைக்க முயற்சிக்கிறது (இரண்டு நிமிடங்கள்). |
| வேகமாகச் சிமிட்டும் | பிழை. |
பவர் நிலை விளக்குகள்
பிரிண்டரின் தற்போதைய பவர் நிலையை, பவர் நிலை விளக்கு காட்டுகிறது.
| நிலை விளக்கு | விளக்கம் |
|---|---|
| ஆஃப் | பவர் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. |
| ஒளிர்ந்தபடி இருக்கும் | பவர் ஆன் செய்யப்பட்டுள்ளது மற்றும் பிரிண்டர் தயாராக உள்ளது. |
| மின்னி ஒளிரும் | பிரிண்டர் பவர் சேவிங் பயன்முறையில் உள்ளது. |
| வேகமாகச் சிமிட்டும் | லேபிள்கள் விடுபட்டுள்ளன அல்லது வேறு பிழை நிலை போன்ற பிழை ஏற்பட்டுள்ளது. |
Dymo LabelWriter Wireless லேபிள் பிரிண்டரில் சிக்கல் தீர்த்தல்
Dymo LabelWriter Wireless லேபிள் பிரிண்டர் சிக்கலைத் தேர்ந்தெடுத்து, சிக்கல் தீர்த்தல் படிகளைப் பின்பற்றவும்.
உங்கள் வயர்லெஸ் வலையமைப்புப் பட்டியலில் பிரிண்டர் காட்டப்படாத சிக்கலைத் தீர்த்தல்
உங்கள் வயர்லெஸ் வலையமைப்புப் பட்டியலில் Dymo LabelWriter Wireless லேபிள் பிரிண்டர் காட்டப்படாவிட்டால், பின்வரும் படிகளைக் கொண்டு சிக்கலைத் தீர்க்கவும்:
- பிரிண்டர் ஆன் செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தவும்.
- நீங்கள் Virtual Private Network (VPN) நெட்வொர்க்கில் இணைக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தவும்.
- உங்கள் கம்ப்யூட்டரில், Wi-Fi ஐ ஆஃப் செய்து மீண்டும் ஆன் செய்வதன் மூலம் கிடைக்கும் வலையமைப்புகளின் பட்டியலைப் புதுப்பிக்கவும்.
பிரிண்டரின் சிக்கல் தீர்க்கப்படவில்லை எனில், Dymo ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.
Web Configuration Utility-உடன் பிரிண்டர் இணைக்கப்படாத சிக்கலைத் தீர்த்தல்
Dymo LabelWriter Wireless லேபிள் பிரிண்டரின் IP முகவரி மீண்டும் ஒதுக்கப்பட்டிருக்கலாம். பிரிண்டர் சிறிது நேரம் ஆஃப் செய்யப்பட்டிருக்கும்போது, DHCP இணைப்பில் இது சாதாரணமான செயல்பாடே ஆகும். அடுத்த முறை பவர் ஆன் செய்யப்பட்டு பிரிண்டர் வலையமைப்பில் காட்டப்படும்போது, பிரிண்டரின் IP முகவரி மீண்டும் ஒதுக்கப்படும்.
உங்கள் ரூட்டரின் இணையப் பக்கங்கள் வழியாக DHCP கிளையண்ட் பட்டியலை அணுகுவதன் மூலம், பிரிண்டரின் தற்போதைய IP முகவரியை நீங்கள் தீர்மானிக்கலாம். மேலும் தகவலுக்கு, உங்கள் ரூட்டருடன் வழங்கப்பட்ட ஆவணங்களைப் பார்க்கவும்.
சில சூழல்களில், mDNS பெயரைப் பயன்படுத்தி உங்களால் பிரிண்டருடன் இணைக்க முடியும்: http://DYMOLWWxxxxxx.local.
பிரிண்டரின் சிக்கல் தீர்க்கப்படவில்லை எனில், Dymo ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.
Dymo Label மென்பொருளுடன் பிரிண்டர் இணைக்கப்படாத சிக்கலைத் தீர்த்தல்
Dymo Label மென்பொருளில் Dymo LabelWriter Wireless லேபிள் பிரிண்டரை இணைக்கவோ தேர்ந்தெடுக்கவோ முடியவில்லை எனில், பின்வரும் படிகளைக் கொண்டு சிக்கலைத் தீர்க்கவும்:
- பிரிண்டரும் நீங்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டரும் ஒரே வயர்லெஸ் வலையமைப்பில் உள்ளதை உறுதிப்படுத்தவும்.
- பிரிண்டர் ஆன் செய்யப்பட்டு அச்சிடத் தயாராக உள்ளதை உறுதிப்படுத்தவும்.
- Dymo Label மென்பொருளில், File (கோப்பு) > Add Network Printer (நெட்வொர்க் பிரிண்டரைச் சேர்) என்பதிலிருந்து பிரிண்டரைச் சேர்த்துவிட்டு, Dymo Label மென்பொருளை மீண்டும் தொடங்கவும்.
பிரிண்டரின் சிக்கல் தீர்க்கப்படவில்லை எனில், Dymo ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.
அச்சுத் தரம் தொடர்பான சிக்கல்களைத் தீர்த்தல்
மோசமான அச்சுத் தரம் வழக்கமாகப் பின்வரும் சிக்கல்களில் ஒன்றால் ஏற்படுகிறது:
- ஒரு பழைய லேபிள்களின் ரோல்.
- Dymo அல்லாத வேறொரு உற்பத்தியாளர் தயாரித்த லேபிள்கள்.
- தெர்மல் பூச்சு சேதமடைந்த லேபிள்கள்.
- அழுக்கான பிரிண்ட் ஹெட்.
நீங்கள் Dymo பிராண்டு லேபிள்களைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்தவும். மூன்றாம் தரப்பு லேபிள்களைப் பயன்படுத்த வேண்டாம், ஏனெனில் பிற லேபிள்களின் மீதிருக்கும் தெர்மல் பூச்சு Dymo பிராண்டு லேபிள்களை விடவும் வேறுபட்ட உணர்திறன் கொண்டிருக்கும். மேலும், மற்ற உற்பத்தியாளர்கள் தயாரிக்கும் லேபிள்களுக்கு இடையே உள்ள துளையிடப்பட்ட ஓட்டைகளை, LabelWriter பிரிண்டர்களால் அடிக்கடி கண்டறிய முடியாது.
அச்சுத் தரம் மங்கலாக இருந்தால், அச்சிடப்பட்ட எழுத்துக்களில் சிறிய வெள்ளைப் புள்ளிகள் சிதறியிருந்தால் அல்லது வெளிர் மற்றும் அடர் நிறங்களில் அச்சிடப்பட்டால், உங்கள் லேபிள்களின் ரோல் பழுதடைந்திருக்கலாம். புதிய பெட்டியிலிருந்து வேறொரு ரோலைப் பயன்படுத்திப் பார்க்கவும். இரண்டாவது ரோல் சரியாக அச்சிட்டால், லேபிள்களின் முதல் ரோலில் சிக்கல் உள்ளது என்று அர்த்தம்.
நீங்கள் பிரிண்ட் ஹெட்டைச் சுத்தம் செய்ய வேண்டியிருக்கலாம் என்பதும் மற்றொரு சாத்தியக்கூறாகும்.
உடைந்த எழுத்துகள் அல்லது பிற அச்சுத் தரச் சிக்கல்களைத் தொடர்ந்து சந்தித்தால், பிரிண்டர் சுய-பரிசோதனையைச் செய்யவும். சுய-பரிசோதனையானது பிரிண்ட் ஹெட் மற்றும் அச்சிடும் பொறிமுறையின் அனைத்துக் கூறுகளும் வேலை செய்கிறதா என்பதைச் சரிபார்க்கிறது.
படிகள்:
- பிரிண்டரில் லேபிள்களின் ரோல் உள்ள நிலையில், பிரிண்டரின் முன்புறத்தில் உள்ள FORM-FEED பொத்தானை ஐந்து முதல் பத்து வினாடிகள் வரை அழுத்திப் பிடிக்கவும். பிரிண்டர் அதன் அகலத்திற்கு செங்குத்து கோடுகளை அச்சிடத் தொடங்கும். சோதனை பேட்டர்ன் ஒவ்வொரு 3/4 அங்குலத்திற்கும் (19 மி.மீ) தானாகவே மாறும்.
- சுய-பரிசோதனை தொடங்கியதும், FORM-FEED பொத்தானை விடுவிக்கவும். 3 சுய-பரிசோதனையை நிறுத்த, FORM-FEED பொத்தானை அழுத்தி விடுவிக்கவும்.
பிரிண்டரின் சிக்கல் தீர்க்கப்படவில்லை எனில், Dymo ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.
நெரிசலான லேபிள்களுக்கான சிக்கல் தீர்த்தல்
பிரிண்டரில் லேபிள்கள் நெரிசலாக இருந்தால், பின்வரும் படிகள் மூலம் அவற்றை நீங்கள் அகற்றலாம்.
படிகள்:
- பிரிண்டர் வழியாக ஏற்கனவே வந்த லேபிள்களைக் கிழித்துவிடவும்.
- லேபிள் வெளியீட்டு லீவரை முன்னோக்கி அழுத்தி, லேபிள் ஃபீட் ஸ்லாட்டில் நெரிசலாக உள்ள லேபிளை வெளியே இழுக்கவும்.
பிரிண்டரின் சிக்கல் தீர்க்கப்படவில்லை எனில், Dymo ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.
லேபிள்கள் சரியாக உள்ளிழுக்கப்படாததற்கான சிக்கல் தீர்த்தல்
உங்கள் லேபிள்கள் சரியாக உள்ளிழுக்கப்படவில்லை எனில், பின்வரும் அமைவுத் தேவைகளைச் சரிபார்க்கவும்:
- லேபிள்கள் சரியாக ஏற்றப்பட்டுள்ளதா மற்றும் லேபிளின் இடது விளிம்பு லேபிள் ஃபீட் ஸ்லாட்டின் இடது விளிம்புடன் சீரமைக்கப்பட்டுள்ளதா எனச் சரிபார்க்கவும்.
- நீங்கள் Dymo-பிராண்டு லேபிள்களைப் பயன்படுத்துகிறீர்களா எனப் பார்க்கவும். பிற உற்பத்தியாளர்களால் தயாரிக்கப்படும் லேபிள்களுக்கு இடையிலான துளைகளை Dymo பிரிண்டர்களால் கண்டறிய முடிவதில்லை. துளைகள் கண்டறியப்படாதபோது, லேபிள்கள் சரியாக உள்ளிழுக்கப்படாது.
பிரிண்டரின் சிக்கல் தீர்க்கப்படவில்லை எனில், Dymo ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.
பிரிண்டர் அச்சிடாதது அல்லது அச்சிடுவதை நிறுத்தாதது தொடர்பான சிக்கல் தீர்த்தல்
உங்கள் பிரிண்டர் அச்சிடவில்லை என்றாலோ பயன்பாட்டில் இருக்கும்போது அச்சிடுவதை நிறுத்திவிட்டாலோ, பின்வரும் படிகளின் மூலம் சிக்கலைத் தீர்க்கவும்:
- பிரிண்டருக்கு மின்சாரம் கிடைக்கிறது என்பதையும் மின் கேபிள் துண்டிக்கப்படவில்லை என்பதையும் உறுதிசெய்யவும்.
- பிரிண்டரின் முன்புறத்தில் உள்ள நிலை விளக்கு எரியவில்லை எனில், மின் கேபிள் செருகப்பட்டிருப்பதையும் பவர் ஸ்ட்ரிப் வேலை செய்வதையும் உறுதிசெய்யவும்.
- வால் அவுட்லெட் மற்றும் பவர் ஸ்ட்ரிப்பில் வேறொன்றைச் செருகுவதன் மூலம், அவுட்லெட் அல்லது பவர் ஸ்ட்ரிப்பில் எந்தச் சிக்கலும் இல்லை என்பதை உறுதிசெய்யவும்.
- பிரிண்டர் இயக்கத்தில் இருக்கும்போது ஃபார்ம் ஃபீட் பொத்தானை அழுத்துவதன் மூலம் பிரிண்டர் லேபிள்களைச் சரியாக உள்ளிழுக்கிறதா என்பதை உறுதிப்படுத்தவும்.
- லேபிள்கள் நெரிசலாக இருந்தால், நிலை விளக்கு ஒளிரும். இந்தப் பக்கத்தின் நெரிசலான லேபிள்களுக்கான சிக்கல் தீர்த்தல் பகுதியைப் பார்க்கவும்.
- உங்கள் USB கேபிள் பிரிண்டரின் பின்புறம் அல்லது கம்ப்யூட்டரிலிருந்து தளர்வாகவில்லை என்பதை உறுதிசெய்யவும்.
- உங்கள் LabelWriter பிரிண்டர் டிரைவர் சரியாக நிறுவப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்யவும்.
பிரிண்டரின் சிக்கல் தீர்க்கப்படவில்லை எனில், Dymo ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.
உங்கள் Dymo LabelWriter Wireless லேபிள் பிரிண்டரை அதன் இயல்புநிலைத் தொழிற்சாலை அமைப்புகளுக்கு மீட்டமைக்கவும்
பிரிண்டரை வேறொரு வலையமைப்புக்கு மாற்ற அல்லது பொதுவான சிக்கல்களைத் தீர்க்க விரும்பும்போது, உங்கள் Dymo LabelWriter Wireless லேபிள் பிரிண்டரை அதன் இயல்புநிலைத் தொழிற்சாலை அமைப்புகளுக்கு மீட்டமைக்க வேண்டியிருக்கலாம். மீட்டமைப்பானது இணைய உள்ளமைவுப் பயன்பாட்டில் நீங்கள் உள்ளிட்ட பிரிண்டரின் பெயர், கடவுச்சொல் மற்றும் மொழி போன்ற பிரத்தியேக அமைப்புகளை நீக்கிவிடும்.
படிகள்:
- பிரிண்டரை ஆன் செய்து, அது முழுமையாகத் தொடங்குவதற்கு 30 விநாடிகள் காத்திருக்கவும்.
- கூர்மையான உலோகம் அல்லாத கருவியைப் பயன்படுத்தி, பிரிண்டரின் பின்புறத்தில் உள்ள RESET பொத்தானை 5 விநாடிகளாவது அழுத்திப் பிடிக்கவும்.
- 5 விநாடிகளுக்குப் பிறகு, பிரிண்டரை மீட்டமைக்கத் தொடங்க RESET பொத்தானை விடுவிக்கவும்.
சுமார் 30 விநாடிகளுக்குப் பிறகு, நீங்கள் பிரிண்டரை வயர்லெஸ் வலையமைப்புடன் இணைக்கலாம்.