USB Zebra லேபிள் பிரிண்டர் ZD220
உங்கள் Windows அல்லது Mac கணினியில் USB Zebra லேபிள் பிரிண்டர் ZD220 ஐ அமைப்பது எப்படி என்பதை அறிக. USB Zebra லேபிள் பிரிண்டர் ZD220 இல் ஏற்படும் பொதுவான சிக்கல்களை எப்படிச் சரிசெய்வது என்பதை அறியவும் இந்த வழிகாட்டியைப் பயன்படுத்தலாம்.
Zebra லேபிள் பிரிண்டர் ZD220 ஐ உங்கள் iOS அல்லது Android டேப்லெட்டுடன் இணைக்க முடியாது.
இந்தப் பக்கத்தில்
- உங்கள் USB Zebra லேபிள் பிரிண்டர் ZD220-க்கான லேபிள் தேவைகள்
- உங்கள் USB Zebra லேபிள் பிரிண்டர் ZD220 ஐ அமைக்கவும்
- USB Zebra லேபிள் பிரிண்டர் ZD220-க்கான மீடியா சென்சார்களை அளவீடு செய்யுங்கள்
- USB Zebra லேபிள் பிரிண்டர் ZD220-க்கான உள்ளமைவு அறிக்கையை அச்சிடுங்கள்
- உங்கள் USB Zebra லேபிள் பிரிண்டர் ZD220 ஐ ஃபேக்டரி மீட்டமைக்கவும்
- USB Zebra லேபிள் பிரிண்டர் ZD220 ஐச் சரிசெய்யுங்கள்
உங்கள் USB Zebra லேபிள் பிரிண்டர் ZD220-க்கான லேபிள் தேவைகள்
உங்கள் லேபிள் பிரிண்டரைக் கொண்டு லேபிள்களை அச்சிட, உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் Zebra பிராண்ட் லேபிள்களைக் கண்டறிய Zebra Supplies Selector | ZipZebra Supplies Solutions இணையதளத்திற்குச் செல்லலாம்.
உங்கள் USB Zebra லேபிள் பிரிண்டர் ZD220 ஐ அமைக்கவும்
USB Zebra லேபிள் பிரிண்டர் ZD220-ஐ அமைக்க, உங்கள் கணினியுடன் அதை இணைத்து மீடியாவை ஏற்றவும், பின்பு அதைச் சோதிக்க அமைவாக்க அறிக்கையை அச்சிடவும். Windows கணினியில், பிரிண்டரை இணைக்கும் முன்பே நீங்கள் Zebra ட்ரைவர் மற்றும் Zebra அமைவுப் பயன்பாடுகளையும் நிறுவ வேண்டும்.
மீடியா அமைப்புகள் நீங்கள் பயன்படுத்தும் மீடியா வகையுடன் பொருந்த வேண்டும். மீடியா வகைகளை எப்படிக் கண்டறிவது என்பது குறித்து Zebra-வின் மீடியா வகையைக் கண்டறிதல் (Identify Type of Media) ஆதரவுப் பக்கத்தில் அறிந்துகொள்ளலாம்.
Mac
USB Zebra லேபிள் பிரிண்டர் ZD220 Mac கணினிகளுக்கான வரையறுக்கப்பட்ட ஆதரவைக் கொண்டுள்ளது. Mac-இல் உள்ள Zebra பிரிண்டர்களுக்கு Common Unix Printing System (CUPS) ட்ரைவரை Zebra பரிந்துரைக்கிறது. macOS இல் CUPS ட்ரைவர் முன்பே நிறுவப்பட்டிருப்பதால், இந்தப் பிரிண்டருக்கான ட்ரைவரை நீங்கள் பதிவிறக்கி நிறுவ வேண்டியதில்லை.
படிகள்:
- USB போர்ட்டை மூடியுள்ள ஸ்டிக்கரை உரித்துவிட்டு, Mac-இல் உள்ள USB போர்ட்டில் பிரிண்டரை இணைக்கவும்.
- CUPS ட்ரைவருடன் உங்கள் Mac-இல் பிரிண்டரைச் சேர்க்கவும். எப்படி என்பதை அறிந்துகொள்ள, macOS-இல் பிரிண்டரைச் சேர்ப்பதற்கான Zebra-இன் வழிகாட்டியைப் பார்க்கவும்.
- மீடியாவை ஏற்றவும் (மீடியா என்பது பொதுவாக லேபிள்களைக் குறிக்கும், எனினும் டேக் ஸ்டாக், ரசீது பேப்பர் மற்றும் நீங்கள் அச்சிடக்கூடிய பிற பொருட்களும் இதில் அடங்கும்):
- பிரிண்டரைத் திறந்து ரோல் ஹோல்டர்களில் மீடியாவை வைக்கவும்.
- மீடியாவின் நுனியைப் பிரிண்டரின் முன்பக்கத்திற்கு வெளியே இழுக்கவும்.
- மீடியா வழிகாட்டிகளின் கீழ் மீடியாவை அழுத்தவும்.
- பிரிண்டரை மூடிவிட்டு, இடைநிறுத்தப் பயன்முறையிலிருந்து வெளியேற FEED பொத்தானை ஒருமுறை அழுத்தவும்.
- உள்ளமைவு அறிக்கையை அச்சிட்டு உங்கள் பிரிண்டரைச் சோதிக்கவும்.
பிரிண்டர் அமைப்புகளானது உங்கள் அச்சிடும் பணிக்குப் பயன்படுத்தப்படும் சப்ளைகள் மற்றும் உங்கள் பிரிண்டரிலுள்ள விருப்பங்களுடன் பொருந்த வேண்டும். macOS-க்கு Zebra அமைவுப் பயன்பாடுகள் கிடைக்காது, எனவே CUPS ட்ரைவரில் தேவைக்கேற்ப பிரிண்டர் அமைப்புகளைச் சரிசெய்துகொள்ளவும். எப்படி என்பதை அறிந்துகொள்ள, CUPS ட்ரைவருடன் பிரிண்டரை அமைவாக்குவதற்கான Zebra-இன் வழிகாட்டியைப் பார்க்கவும். லேபிள்களை வடிவமைக்க அல்லது அச்சிட நீங்கள் பயன்படுத்தும் மென்பொருளில் லேபிள் அளவு அல்லது இருண்மை போன்ற லேபிள் அமைப்புகள் இருந்தால், பிரிண்டர் அந்த மென்பொருளிலுள்ள அமைப்புகளைப் பயன்படுத்தும்.
Windows
Windows கணினியில் பிரிண்டரை இணைக்கும் முன்பு பிரிண்டர் ட்ரைவரை நிறுவவும். நீங்கள் முதலில் பிரிண்டரை இணைத்தால், பிரிண்டர் சாதனங்கள் மற்றும் பிரிண்டர்களில் அறியப்படாத சாதனமாகக் காட்டப்படலாம்.
படிகள்:
- Zebra பிரிண்டர் அமைவு இணையதளத்திலிருந்து பிரிண்டர் ட்ரைவரைப் பதிவிறக்கி நிறுவவும்.
- Zebra Setup Utilities (ZSU) பிரிண்டர் உள்ளமைவுப் பயன்பாட்டைப் பதிவிறக்கி நிறுவவும்.
- USB போர்ட்டை மூடியுள்ள ஸ்டிக்கரை உரித்துவிட்டு, கம்ப்யூட்டரில் உள்ள USB போர்ட்டுடன் பிரிண்டரை இணைக்கவும்.
- மீடியாவை ஏற்றவும் (மீடியா என்பது பொதுவாக லேபிள்களைக் குறிக்கும், எனினும் டேக் ஸ்டாக், ரசீது பேப்பர் மற்றும் நீங்கள் அச்சிடக்கூடிய பிற பொருட்களும் இதில் அடங்கும்):
- பிரிண்டரைத் திறந்து ரோல் ஹோல்டர்களில் மீடியாவை வைக்கவும்.
- மீடியாவின் நுனியைப் பிரிண்டரின் முன்பக்கத்திற்கு வெளியே இழுக்கவும்.
- மீடியா வழிகாட்டிகளின் கீழ் மீடியாவை அழுத்தவும்.
- பிரிண்டரை மூடிவிட்டு, இடைநிறுத்தப் பயன்முறையிலிருந்து வெளியேற FEED பொத்தானை ஒருமுறை அழுத்தவும்.
- உள்ளமைவு அறிக்கையை அச்சிட்டு உங்கள் பிரிண்டரைச் சோதிக்கவும்.
பிரிண்டர் அமைப்புகள் உங்கள் அச்சிடும் பணிக்குப் பயன்படுத்தும் சப்ளைகளுடனும், பிரிண்டர் விருப்பங்களுடனும் பொருந்த வேண்டும். Zebra Setup Utilities மென்பொருளைப் பயன்படுத்தி தேவையானவாறு பிரிண்டர் அமைப்புகளைச் சரிசெய்யவும்.
மீடியாவின் அளவையோ வகையையோ மாற்றினால், நீங்கள் மீடியா சென்சார்களை அளவீடு செய்ய வேண்டும்.
USB Zebra லேபிள் பிரிண்டர் ZD220-க்கான மீடியா சென்சார்களை அளவீடு செய்தல்
நீங்கள் பயன்படுத்தும் மீடியா வகையை மாற்றினாலோ லேபிளை அச்சிடுவதில் சிக்கல் ஏற்பட்டாலோ, பிரிண்டருக்கான மீடியா சென்சார்களை நீங்கள் அளவீடு செய்ய வேண்டியிருக்கலாம்.
படிகள்:
- பிரிண்டரைத் திறக்கவும்.
- உங்கள் மீடியாவுக்குச் சரியான இடத்தில் மீடியா சென்சார் உள்ளதா என்பதைச் சரிபார்த்து, பிரிண்டரை மூடவும்.
- நிலை காட்டி விளக்கு இரண்டு முறை ஒளிரும் வரை FEED பொத்தானை அழுத்திப் பிடித்திருந்து, பிறகு Feed பொத்தானை விட்டுவிடவும்.
பிரிண்டர் பல லேபிள்களை உள்ளிழுத்து அளவிடுகிறது. அளவீடு முடிந்ததும், நிலை காட்டியில் தொடர்ந்து பச்சை நிற விளக்கு எரியும்.
லேபிளை அச்சிடுவதில் சிக்கல் தொடர்ந்தால், லேபிள் அளவு அமைப்புகளானது உங்கள் உண்மையான லேபிள் பரிமாணங்களுடன் பொருந்துகிறதா எனச் சரிபார்த்து, வழங்கப்பட்ட கிளீனிங் தொகுப்பைப் பயன்படுத்தி பிரிண்ட் ஹெட்டைச் சுத்தம் செய்யவும்.
USB Zebra லேபிள் பிரிண்டர் ZD220-க்கான உள்ளமைவு அறிக்கையை அச்சிடுதல்
உங்கள் பிரிண்டர் வேலை செய்கிறதா எனச் சோதிக்க உள்ளமைவு அறிக்கையை நீங்கள் அச்சிட வேண்டியிருக்கலாம்.
படிகள்:
- பிரிண்டரில் மீடியா சரியாக ஏற்றப்பட்டுள்ளதையும் பிரிண்டரின் மேல் கவர் மூடப்பட்டுள்ளதையும் உறுதிசெய்யவும்.
- பிரிண்டரை ஆன் செய்யவும்.
- பிரிண்டர் தயாரான நிலையில் இருக்கும்போது (STATUS காட்டியில் தொடர்ந்து பச்சை நிற விளக்கு எரியும்), STATUS காட்டி ஒரு முறை ஒளிரும் வரை சுமார் 2 வினாடிகளுக்கு FEED. பொத்தானை அழுத்திப் பிடித்திருந்து, பிறகு FEED பொத்தானை விட்டுவிடவும்.
பிரிண்டர் மற்றும் வலையமைப்பு உள்ளமைவு அறிக்கைகள் அச்சிடப்படும். பிரிண்டர் நின்றதும், STATUS காட்டியில் தொடர்ந்து பச்சை நிற விளக்கு எரியும்.
உங்கள் USB Zebra லேபிள் பிரிண்டர் ZD220-ஐத் தொழிற்சாலை அமைப்புகளுக்கு மீட்டமைத்தல்
USB Zebra லேபிள் பிரிண்டர் ZD220-க்கான சிக்கல் தீர்த்தல் வேலை செய்யவில்லை எனில், பிரிண்டரை அதன் தொழிற்சாலை அமைப்புகளுக்கு மீட்டமைக்கலாம்:
படிகள்:
- பிரிண்டரை ஆஃப் செய்யவும்.
- feed பொத்தானை அழுத்திப் பிடிக்கவும்.
- feed பொத்தானை அழுத்திப் பிடித்தவாறே, பிரிண்டரை ஆன் செய்யவும்.
- நிலை விளக்கு ஒளிரும் வரை தொடர்ந்து அழுத்திப் பிடித்திருக்கவும்.
- feed பொத்தானை விட்டுவிடவும்.
பிரிண்டர் அதன் தொழிற்சாலை அமைப்புகளுக்கு மீட்டமைக்கப்படும்.
USB Zebra லேபிள் பிரிண்டர் ZD220-இல் சிக்கல் தீர்த்தல்
உங்கள் USB Zebra லேபிள் பிரிண்டர் ZD220-இல், தவறான இடத்தில் நிற்பது அல்லது அச்சிடப்படும் லேபிள்களுக்கு இடையே காலியான லேபிள் வெளிவருவது போன்ற லேபிள் அச்சிடும் பிழைகள் ஏற்பட்டால், நீங்கள் மீடியா சென்சார்களை அளவீடு செய்ய வேண்டும்.
சிக்கல்கள் தொடர்ந்தால், Zebra ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.