Zebra லேபிள் பிரிண்டர் ZD421

Windows அல்லது Mac கணினியுடன் Zebra லேபிள் பிரிண்டர் ZD421 ஐ எப்படி அமைப்பது என்பதைப் பற்றி அறியவும். Zebra லேபிள் பிரிண்டர் ZD421 இல் உள்ள பொதுவான சிக்கல்களை எப்படித் தீர்ப்பது என்பதை அறியவும் இந்த வழிகாட்டியைப் பயன்படுத்தலாம்.

உங்கள் iOS அல்லது Android டேப்லெட்டிலிருந்து Zebra லேபிள் பிரிண்டர் ZD421 மூலம் லேபிள்களை அச்சிட முடியாது.

உங்கள் Zebra லேபிள் பிரிண்டர் ZD421 இற்கான லேபிள் தேவைகள்

உங்கள் லேபிள் பிரிண்டர் மூலம் லேபிள்களை அச்சிட, உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் Zebra பிராண்ட் லேபிள்களைக் கண்டறிய Zebra Supplies Selector | ZipZebra Supplies Solutions இணையதளத்திற்குச் செல்லலாம்.

உங்கள் Zebra லேபிள் பிரிண்டர் ZD421 ஐ அமைக்கவும்

Zebra லேபிள் பிரிண்டர் ZD421 ஐ USB கேபிள், Bluetooth அல்லது Wi-Fi மூலம் உங்கள் Windows அல்லது Mac கணினியில் இணைக்கலாம். உங்கள் இணைப்பு வகையைத் தேர்ந்தெடுத்து, உங்கள் கணினியின் இயங்குதளத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

மீடியா அமைப்புகளானது நீங்கள் பயன்படுத்தும் மீடியா வகையுடன் பொருந்த வேண்டும். மீடியா வகைகளை எப்படிக் கண்டறிவது என்பது குறித்து Zebra-வின் Identify Type of Media ஆதரவுப் பக்கத்தில் நீங்கள் அறிந்துகொள்ளலாம்.

USB
Mac

Zebra லேபிள் பிரிண்டர் ZD421, Mac கணினிகளுக்குக் குறைவான ஆதரவையே வழங்குகிறது. Mac இல் உள்ள Zebra பிரிண்டர்களுக்கு Common Unix Printing System (CUPS) டிரைவரை Zebra பரிந்துரைக்கிறது. macOS இல் CUPS டிரைவர் முதலிலேயே நிறுவப்பட்டிருக்கும், எனவே இந்தப் பிரிண்டருக்கான டிரைவரைப் பதிவிறக்கி நிறுவ வேண்டியதில்லை.

படிகள்:

  1. USB போர்ட்டை மூடியுள்ள ஸ்டிக்கரைப் பிரித்தெடுக்கவும், பின்னர் உங்கள் Mac இல் உள்ள USB போர்ட்டில் பிரிண்டரை இணைக்கவும்.
  2. CUPS டிரைவர் மூலம் உங்கள் Mac இல் பிரிண்டரைச் சேர்க்கவும். இதை எப்படிக் செய்வது என அறிய, macOS இல் பிரிண்டரைச் சேர்ப்பதற்கான Zebra இன் வழிகாட்டியைப் பார்க்கவும்.
  3. மீடியாவை ஏற்றவும் (மீடியா என்பது பொதுவாக லேபிள்களைக் குறிக்கும், ஆனால் இதில் டேக் ஸ்டாக், ரசீது பேப்பர் மற்றும் நீங்கள் அச்சிடக்கூடிய பிற பொருட்களும் அடங்கும்):
    1. பிரிண்டரைத் திறந்து, ரோல் ஹோல்டர்களில் மீடியாவை வைக்கவும்.
    2. மீடியாவின் முனையைப் பிரிண்டரின் முன்புறத்திலிருந்து வெளியே இழுக்கவும்.
    3. மீடியா வழிகாட்டிகளின் கீழ் மீடியாவை அழுத்தி வைக்கவும்.
    4. பிரிண்டரை மூடிவிட்டு, பாஸ் (pause) பயன்முறையிலிருந்து வெளியேற FEED பொத்தானை ஒருமுறை அழுத்தவும்.
  4. உள்ளமைவு அறிக்கையை அச்சிட்டு உங்கள் பிரிண்டரைச் சோதிக்கவும்.

உங்கள் அச்சிடும் பணிக்குப் பயன்படுத்தும் சப்ளைகள் மற்றும் பிரிண்டரில் உள்ள விருப்பங்களுடன் பிரிண்டர் அமைப்புகள் பொருந்த வேண்டும். macOS இற்கு Zebra Setup Utilities கிடைக்காது என்பதால், CUPS டிரைவரில் தேவைக்கேற்ப பிரிண்டர் அமைப்புகளைச் சரிசெய்யவும். இதை எப்படிக் செய்வது என அறிய, CUPS டிரைவர் மூலம் பிரிண்டரை உள்ளமைப்பதற்கான Zebra இன் வழிகாட்டியைப் பார்க்கவும். லேபிள்களை வடிவமைக்க அல்லது அச்சிட நீங்கள் பயன்படுத்தும் மென்பொருளானது, லேபிள் அளவு அல்லது அடர்த்தி போன்ற அதன் சொந்த லேபிள் அமைப்புகளைக் கொண்டிருந்தால், அந்த மென்பொருளில் உள்ள அமைப்புகளையே பிரிண்டர் பயன்படுத்தும்.

Windows

படிகள்:

  1. Zebra Printer Setup இணையதளத்திலிருந்து பிரிண்டர் டிரைவரைப் பதிவிறக்கி நிறுவவும்.
  2. Zebra Setup Utilities (ZSU) பிரிண்டர் உள்ளமைவுப் பயன்பாட்டைப் பதிவிறக்கி நிறுவவும்.
  3. USB போர்ட்டை மூடியுள்ள ஸ்டிக்கரைப் பிரித்தெடுக்கவும், பின்னர் உங்கள் கணினியில் உள்ள USB போர்ட்டில் பிரிண்டரை இணைக்கவும்.
  4. மீடியாவை ஏற்றவும் (மீடியா என்பது பொதுவாக லேபிள்களைக் குறிக்கும், ஆனால் இதில் டேக் ஸ்டாக், ரசீது பேப்பர் மற்றும் நீங்கள் அச்சிடக்கூடிய பிற பொருட்களும் அடங்கும்):
    1. பிரிண்டரைத் திறந்து, ரோல் ஹோல்டர்களில் மீடியாவை வைக்கவும்.
    2. மீடியாவின் முனையைப் பிரிண்டரின் முன்புறத்திலிருந்து வெளியே இழுக்கவும்.
    3. மீடியா வழிகாட்டிகளின் கீழ் மீடியாவை அழுத்தி வைக்கவும்.
    4. பிரிண்டரை மூடிவிட்டு, பாஸ் (pause) பயன்முறையிலிருந்து வெளியேற FEED பொத்தானை ஒருமுறை அழுத்தவும்.
  5. உள்ளமைவு அறிக்கையை அச்சிட்டு உங்கள் பிரிண்டரைச் சோதிக்கவும்.

பிரிண்டரின் அமைப்புகள் உங்கள் அச்சிடும் பணிக்குப் பயன்படுத்தும் சப்ளைகளுடனும் உங்கள் பிரிண்டரில் உள்ள விருப்பங்களுடனும் பொருந்த வேண்டும். Zebra Setup Utilities மென்பொருளைப் பயன்படுத்தி தேவைக்கேற்ப பிரிண்டர் அமைப்புகளைச் சரிசெய்யவும்.

Bluetooth

Bluetooth மூலம் Windows கணினியுடன் நீங்கள் பிரிண்டரை இணைக்கலாம். பிரிண்டரானது, macOS இல் உள்ள Bluetooth உடன் இணங்காது.

படிகள்:

  1. பிரிண்டர் ஆன் செய்யப்பட்டுள்ளதை உறுதிசெய்யவும்.
  2. பிரிண்டரில் உள்ள டேட்டா விளக்கு ஒளிரும் வரை FEED பொத்தானை அழுத்திப் பிடிக்கவும். இப்போது பிரிண்டர் கண்டறியக்கூடிய பயன்முறையில் உள்ளது, மேலும் Bluetooth சாதனத்துடன் இணைப்பதற்குத் தயாராக உள்ளது.
  3. உங்கள் Windows கணினியில், Bluetooth அமைப்புகளுக்குச் சென்று, பிரிண்டரைத் தேர்ந்தெடுக்கவும்.

Zebra Setup Utilities மூலமாகவும் நீங்கள் Bluetooth இணைப்பை அமைக்கலாம். இதை எப்படிக் செய்வது என அறிய, Zebra Setup Utilities மூலம் Bluetooth ஐ உள்ளமைப்பதற்கான Zebra இன் வழிகாட்டியைப் பார்க்கவும்.

Wi-Fi
Mac

Zebra லேபிள் பிரிண்டர் ZD421, Mac கணினிகளுக்குக் குறைவான ஆதரவையே வழங்குகிறது. Mac இல் உள்ள Zebra பிரிண்டர்களுக்கு Common Unix Printing System (CUPS) டிரைவரை Zebra பரிந்துரைக்கிறது. macOS இல் CUPS டிரைவர் முதலிலேயே நிறுவப்பட்டிருக்கும், எனவே இந்தப் பிரிண்டருக்கான டிரைவரைப் பதிவிறக்கி நிறுவ வேண்டியதில்லை.

படிகள்:

  1. IP முகவரியைப் பயன்படுத்தி உங்கள் Mac இல் பிரிண்டரைச் சேர்க்கவும். இதை எப்படிக் செய்வது என அறிய, macOS இல் வலையமைப்புப் பிரிண்டரை நிறுவுவதற்கான Zebra இன் வழிகாட்டியைப் பார்க்கவும். வலையமைப்பு உள்ளமைவு அறிக்கையில் IP முகவரியைக் கண்டறியலாம். CUPS டிரைவரைப் பயன்படுத்தியும் பிரிண்டரை நிறுவலாம். இதை எப்படிக் செய்வது என அறிய, CUPS டிரைவருடன் வலையமைப்புப் பிரிண்டரை நிறுவுவதற்கான Zebra இன் வழிகாட்டியைப் பார்க்கவும்.
  2. மீடியாவை ஏற்றவும் (மீடியா என்பது பொதுவாக லேபிள்களைக் குறிக்கும், ஆனால் இதில் டேக் ஸ்டாக், ரசீது பேப்பர் மற்றும் நீங்கள் அச்சிடக்கூடிய பிற பொருட்களும் அடங்கும்):
    1. பிரிண்டரைத் திறந்து, ரோல் ஹோல்டர்களில் மீடியாவை வைக்கவும்.
    2. மீடியாவின் முனையைப் பிரிண்டரின் முன்புறத்திலிருந்து வெளியே இழுக்கவும்.
    3. மீடியா வழிகாட்டிகளின் கீழ் மீடியாவை அழுத்தி வைக்கவும்.
    4. பிரிண்டரை மூடிவிட்டு, பாஸ் (pause) பயன்முறையிலிருந்து வெளியேற FEED பொத்தானை ஒருமுறை அழுத்தவும்.
  3. உள்ளமைவு அறிக்கையை அச்சிட்டு உங்கள் பிரிண்டரைச் சோதிக்கவும்.

உங்கள் அச்சிடும் பணிக்குப் பயன்படுத்தும் சப்ளைகள் மற்றும் பிரிண்டரில் உள்ள விருப்பங்களுடன் பிரிண்டர் அமைப்புகள் பொருந்த வேண்டும். macOS இற்கு Zebra Setup Utilities கிடைக்காது என்பதால், CUPS டிரைவரில் தேவைக்கேற்ப பிரிண்டர் அமைப்புகளைச் சரிசெய்யவும். இதை எப்படிக் செய்வது என அறிய, CUPS டிரைவர் மூலம் பிரிண்டரை உள்ளமைப்பதற்கான Zebra இன் வழிகாட்டியைப் பார்க்கவும். லேபிள்களை வடிவமைக்க அல்லது அச்சிட நீங்கள் பயன்படுத்தும் மென்பொருளானது, லேபிள் அளவு அல்லது அடர்த்தி போன்ற அதன் சொந்த லேபிள் அமைப்புகளைக் கொண்டிருந்தால், அந்த மென்பொருளில் உள்ள அமைப்புகளையே பிரிண்டர் பயன்படுத்தும்.

Windows

படிகள்:

  1. Zebra Printer Setup இணையதளத்திலிருந்து பிரிண்டர் டிரைவரைப் பதிவிறக்கி நிறுவவும்.
  2. Zebra Setup Utilities (ZSU) பிரிண்டர் உள்ளமைவுப் பயன்பாட்டைப் பதிவிறக்கி நிறுவவும்.
  3. உங்கள் பிரிண்டரை இணைக்கவும்:
    1. Zebra Setup Utilities-ஐப் பதிவிறக்கித் திறக்கவும்.
    2. Configure Printer Connectivity என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
    3. உங்கள் வலையமைப்பு விவரங்களை உள்ளிட்டு, Band மற்றும் WLAN Country ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
    4. ESSID-ஐ உள்ளிட்டு, Security mode-ஐத் தேர்ந்தெடுக்கவும்.
    5. WLAN கடவுச்சொல்லை உள்ளிடவும். கடவுச்சொல்லில் எழுத்துகள் மற்றும் எண்கள் இருந்து, அது hexadecimal form-இல் இல்லையென்றால் String என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
    6. Finish என்பதைத் தேர்ந்தெடுத்து, பிரிண்டரை அணைத்து மீண்டும் ஆன் செய்யவும்.
  4. மீடியாவை ஏற்றவும் (மீடியா என்பது பொதுவாக லேபிள்களைக் குறிக்கும், ஆனால் இதில் டேக் ஸ்டாக், ரசீது பேப்பர் மற்றும் நீங்கள் அச்சிடக்கூடிய பிற பொருட்களும் அடங்கும்):
    1. பிரிண்டரைத் திறந்து, ரோல் ஹோல்டர்களில் மீடியாவை வைக்கவும்.
    2. மீடியாவின் முனையைப் பிரிண்டரின் முன்புறத்திலிருந்து வெளியே இழுக்கவும்.
    3. மீடியா வழிகாட்டிகளின் கீழ் மீடியாவை அழுத்தி வைக்கவும்.
    4. பிரிண்டரை மூடிவிட்டு, பாஸ் (pause) பயன்முறையிலிருந்து வெளியேற FEED பொத்தானை ஒருமுறை அழுத்தவும்.
  5. உள்ளமைவு அறிக்கையை அச்சிட்டு உங்கள் பிரிண்டரைச் சோதிக்கவும்.

பிரிண்டரின் அமைப்புகள் உங்கள் அச்சிடும் பணிக்குப் பயன்படுத்தும் சப்ளைகளுடனும் உங்கள் பிரிண்டரில் உள்ள விருப்பங்களுடனும் பொருந்த வேண்டும். Zebra Setup Utilities மென்பொருளைப் பயன்படுத்தி தேவைக்கேற்ப பிரிண்டர் அமைப்புகளைச் சரிசெய்யவும்.

மீடியாவின் அளவு அல்லது வகையை நீங்கள் மாற்றினால், மீடியா சென்சார்களை அளவீடு செய்ய வேண்டும்.

பிரிண்டர் அமைவு குறித்து மேலும் அறிய, Zebra ZD421 விரைவான அமைவு வழிகாட்டியைப் பார்க்கவும்.

Zebra லேபிள் பிரிண்டர் ZD421 இற்கான மீடியா சென்சார்களை அளவீடு செய்யவும்

நீங்கள் பயன்படுத்தும் மீடியாவின் வகையை மாற்றினால் அல்லது லேபிள் அச்சிடுவதில் சிக்கல்களை எதிர்கொண்டால், உங்கள் பிரிண்டருக்கான மீடியா சென்சார்களை நீங்கள் அளவீடு செய்ய வேண்டியிருக்கலாம்.

படிகள்:

  1. பிரிண்டரைத் திறக்கவும்.
  2. மீடியா சென்சார் உங்கள் மீடியாவுக்குச் சரியான இடத்தில் உள்ளதா என்பதைச் சரிபார்த்து, பிரிண்டரை மூடவும்.
  3. நிலை காட்டி விளக்கு இரண்டு முறை ஒளிரும் வரை FEED பொத்தானை அழுத்திப் பிடித்து, பின்னர் அதை விடுவிக்கவும்.

பிரிண்டர் பல லேபிள்களை உள்ளிழுத்து அளவிடும். அளவீடு முடிந்ததும், நிலை காட்டி நிலையான பச்சை நிற விளக்கைக் காண்பிக்கும்.

லேபிள் அச்சிடும் சிக்கல்கள் தொடர்ந்தால், லேபிள் அளவு அமைப்புகள் உங்கள் உண்மையான லேபிளின் பரிமாணங்களுடன் பொருந்துகின்றனவா என்பதைச் சரிபார்த்து, வழங்கப்பட்டுள்ள சுத்தம் செய்யும் தொகுப்பைப் பயன்படுத்தி பிரிண்ட் ஹெட்டைச் சுத்தம் செய்யவும்.

Zebra லேபிள் பிரிண்டர் ZD421 இற்கான உள்ளமைவு அறிக்கையை அச்சிடவும்

உங்கள் பிரிண்டர் வேலை செய்கிறதா என்பதைச் சோதிக்க, உள்ளமைவு அறிக்கையை அச்சிட வேண்டியிருக்கலாம்.

படிகள்:

  1. மீடியா பிரிண்டரில் சரியாக ஏற்றப்பட்டுள்ளதா என்பதையும், பிரிண்டரின் மேல் மூடி மூடப்பட்டுள்ளதா என்பதையும் உறுதிசெய்யவும்.
  2. பிரிண்டரை ஆன் செய்யவும்.
  3. பிரிண்டர் தயார் நிலையில் (STATUS காட்டி நிலையான பச்சை நிறத்தில்) இருக்கும்போது, STATUS காட்டி ஒரு முறை ஒளிரும் வரை FEED. பொத்தானைச் சுமார் 2 வினாடிகளுக்கு அழுத்திப் பிடித்து, பின்னர் FEED பொத்தானை விடுவிக்கவும்.

பிரிண்டர் மற்றும் வலையமைப்பு உள்ளமைவு அறிக்கைகள் அச்சிடப்படும். பிரிண்டர் நின்றதும், STATUS காட்டி நிலையான பச்சை நிறமாக மாறும்.

வலையமைப்பு உள்ளமைவு அறிக்கையானது, உங்கள் பிரிண்டரின் IP முகவரியைக் காண்பிக்கும்.

உங்கள் Zebra லேபிள் பிரிண்டர் ZD421 ஐத் தொழிற்சாலை அமைப்புகளுக்கு மீட்டமைக்கவும்

உங்கள் Zebra லேபிள் பிரிண்டர் ZD421 இல் உள்ள சிக்கல்களைத் தீர்க்க முடியவில்லை எனில், பிரிண்டரை அதன் தொழிற்சாலை அமைப்புகளுக்கு நீங்கள் மீட்டமைக்கலாம்:

படிகள்:

  1. பிரிண்டரை அணைக்கவும்.
  2. PAUSE மற்றும் FEED பொத்தானை ஒரே நேரத்தில் அழுத்திப் பிடிக்கவும்.
  3. PAUSE மற்றும் FEED பொத்தானை அழுத்திப் பிடித்தவாறே, பிரிண்டரை ஆன் செய்யவும்.
  4. நிலை காட்டி விளக்கு மட்டும் எரியும் வரை தொடர்ந்து அழுத்திப் பிடிக்கவும்.

பிரிண்டர் அதன் ஃபேக்டரி அமைப்புகளுக்கு மீட்டமைக்கப்படும்.

Zebra லேபிள் பிரிண்டர் ZD421 தொடர்பான சிக்கல்களைத் தீர்க்கவும்

உங்கள் Zebra லேபிள் பிரிண்டர் ZD421 இல் நீங்கள் ஏதேனும் சிக்கல்களை எதிர்கொண்டால், அந்தச் சிக்கலைத் தேர்ந்தெடுத்து, அதற்கான சிக்கல் தீர்க்கும் படிகளைப் பின்பற்றவும்.

வேலை செய்யாத பேட்டரி பேக்கிற்கான சிக்கலைத் தீர்த்தல்

உங்கள் பிரிண்டரில் பேட்டரி பேக் விருப்பம் இருந்து, பேட்டரி பேக் அங்கீகரிக்கப்படாவிட்டால், பின்வரும் படிகளைப் பயன்படுத்திச் சிக்கலைத் தீர்க்கவும்.

படி 1: பிரிண்டரின் தற்போதைய ஃபார்ம்வேர் பதிப்பைக் கண்டறிதல்

  1. பிரிண்டரை ஆன் செய்யவும்.
  2. FEED மற்றும் CANCEL ஆகியவற்றை இரண்டு வினாடிகளுக்கு அழுத்தவும். "Printer and Network Configuration Reports" அச்சிடப்படும், பின்னர் பிரிண்டர் READY நிலைக்குத் திரும்பும்.
  3. "Printer and Network Configuration Report"-இல் Firmware Version என்று குறிப்பிடப்பட்டுள்ள வரியைக் கண்டறியவும்.

படி 2: பிரிண்டரின் ஃபார்ம்வேர் பதிப்பை மேம்படுத்துதல்

  1. ZD421 Series Printer Support Downloads பக்கத்தில் உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான ஃபார்ம்வேரைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. ஃபார்ம்வேர் கோப்பை உங்கள் ஹார்ட் டிரைவில் பதிவிறக்கி, பதிவிறக்கப்பட்ட கோப்பைத் திறந்து தெரிந்த இடத்தில் சேமிக்கவும்.
  3. உள்ளமைவை மீண்டும் அச்சிட்டு ஃபார்ம்வேர் புதுப்பிப்புகளை உறுதிப்படுத்தவும்: FEED மற்றும் CANCEL ஆகியவற்றை இரண்டு வினாடிகளுக்கு அழுத்தவும்.
  4. பேட்டரி பேக்கை இணைத்து, அது வேலை செய்கிறதா என்பதைப் பார்க்க FEED பொத்தானை அழுத்தவும்.

சிக்கல்கள் தொடர்ந்தால், Zebra ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.

லேபிள் அச்சிடும் சிக்கல்களைத் தீர்த்தல்

தவறான இடத்தில் நிற்பது அல்லது அச்சிடப்படும் லேபிள்களுக்கு இடையில் வெற்று லேபிள் வெளிவருவது போன்ற லேபிள் அச்சிடும் பிழைகளை நீங்கள் சந்தித்தால், மீடியா சென்சார்களை அளவீடு செய்ய வேண்டும்.

மீடியா அமைப்புகளானது நீங்கள் பயன்படுத்தும் மீடியா வகையுடன் பொருந்த வேண்டும். மீடியா வகைகளை எப்படிக் கண்டறிவது என்பது குறித்து Zebra-வின் Identify Type of Media ஆதரவுப் பக்கத்தில் நீங்கள் அறிந்துகொள்ளலாம்.

சிக்கல்கள் தொடர்ந்தால், Zebra ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.

அச்சிடும்போதோ மீடியாவை உள்ளிழுக்கும்போதோ மீடியா சிக்கிக்கொள்ளும் சிக்கலைத் தீர்த்தல்

அச்சிடும்போதோ அல்லது உள்ளிழுக்கும்போதோ பிரிண்டர் மீடியா சிக்கிக்கொண்டால், உங்கள் பிரிண்ட் ஹெட் அதிகமாக வெப்பமடைந்திருக்கலாம். பின்வரும் படிகளுடன் நீங்கள் சிக்கலைத் தீர்க்கலாம்:

  • அச்சிடும் வேகம் அல்லது இருண்மையைக் குறைக்கவும்.

  • சரியான காற்றோட்டம் உள்ளதா என்பதையும், வெண்ட்டுகள் அடைக்கப்படவில்லை என்பதையும் உறுதிசெய்யவும்.

  • பிரிண்ட் ஹெட்டைச் சுத்தம் செய்யவும்.

  • நீங்கள் பெரிய பணிகளை அச்சிடுகிறீர்கள் என்றால், பேட்ச்களாக அச்சிட முயலவும்.

குறிப்பிட்ட நேரச் செயலற்ற நிலைக்குப் பிறகு பிரிண்டர் இணைப்பிலிருந்து துண்டிக்கப்படும் சிக்கலைத் தீர்த்தல்

குறிப்பிட்ட நேரச் செயலற்ற நிலைக்குப் பிறகு உங்கள் பிரிண்டர் இணைப்பிலிருந்து துண்டிக்கப்பட்டால், பிரிண்டரை அணைத்து, பவர் மூலத்திலிருந்து அதைக் கழற்றவும். சிக்கல் தொடர்ந்தால், ZebraNet பிரிண்ட் சர்வரின் Connection Time Out அமைப்பிலுள்ள இயல்புநிலை டைம்அவுட் மதிப்பை நீங்கள் மாற்ற வேண்டியிருக்கலாம். இயல்புநிலை டைம்அவுட் மதிப்பு 300 வினாடிகள் (5 நிமிடங்கள்) ஆகும். அதாவது, 5 நிமிடங்கள் எந்தத் தொடர்பும் இல்லையென்றால், பிரிண்டர் இணைப்பைத் துண்டித்துவிடும்.

படிகள்:

  1. உங்கள் இணைய உலாவியில் உங்கள் பிரிண்டரின் IP முகவரியை உள்ளிடவும்.
  2. உங்கள் பிரிண்டர் ஃபார்ம்வேர் x.10 அல்லது அதற்கு மேற்பட்டதாக இருந்தால், Printer Home Page பிரிவில், Print Server Settings என்பதைத் தேர்ந்தெடுக்கவும். ஃபார்ம்வேர் x.10 க்கும் குறைவானதாக இருந்தால், 3வது படிக்குச் செல்லவும்.
  3. Status and Configuration பிரிவில், Print Server என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. உள்நுழைவுச் சான்றுகளை உள்ளிடவும்:
    • பயனர்பெயர்: admin
    • கடவுச்சொல்: 1234
  5. TCP/IP Configuration என்பதைத் தேர்ந்தெடுத்து, Connection Timeout Checking பிரிவுக்குக் கீழே உருட்டவும்.
  6. இதன் இயல்புநிலை மதிப்பு Yes ஆகவும், காலாவதி நேரம் 300 வினாடிகள் எனவும் இருக்கும். நீங்கள் பின்வரும் மாற்றங்களைச் செய்யலாம்:
    • உங்கள் செயலியின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் காலாவதி மதிப்பை மாற்றவும்.
    • காலாவதி சரிபார்ப்பை முடக்க, இதன் மதிப்பை No என அமைக்கவும் (பரிந்துரைக்கப்படவில்லை).
  7. Submit Changes என்பதைக் கிளிக் செய்து, The unit must be reset for new values to take effect என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  8. சாதனத்தை மீட்டமைக்குமாறு கேட்கப்படும்போது, Yes என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.