நேரில் பெறுதல்களைத் திட்டமிடுதல், ஷிப்பிங் மேனிஃபெஸ்ட்டுகளை உருவாக்குதல் மற்றும் ஷிப்மென்ட்டுகளைத் தடமறிதல்

ஷிப்பிங் லேபிள்கள் பக்கத்திலிருந்து நீங்கள் உங்கள் ஷிப்மென்ட்டுகளின் டெலிவரி நிலையைத் தடமறியலாம், தகுதிபெறும் ஷிப்பிங் லேபிள்களுக்குக் கேரியர் நேரில் பெறுதலைத் திட்டமிடலாம் மற்றும் தகுதிபெறும் ஷிப்பிங் லேபிள்களுக்கு மேனிஃபெஸ்ட்டுகளை உருவாக்கி அச்சிடலாம்.

ஷிப்மென்ட்டுகளின் டெலிவரி நிலையைத் தடமறிதல்

ஷிப்பிங் லேபிள்கள் பக்கத்தில் உள்ள டெலிவரி நிலை என்பதில் உங்கள் ஷிப்மென்ட்டின் டெலிவரி நிலையை நீங்கள் தடமறியலாம். உங்கள் ஷிப்மென்ட்டுகளுக்குப் பின்வரும் நிலைகள் இருக்கலாம்:

  • கேரியரால் பெறப்பட்டது
  • வழியில் உள்ளது
  • டெலிவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது
  • டெலிவரி செய்யப்பட்டது
  • டெலிவரி முயற்சி
  • டெலிவரி தோல்வியடைந்தது

உங்கள் ஷிப்மென்ட்டுக்கு இதுவரை நிலை இல்லை என்ற நிலை இருந்தால், உங்கள் ஷிப்மென்ட் எந்தவொரு ஷிப்பிங் கேரியராலும் இதுவரை ஸ்கேன் செய்யப்படவில்லை என்று அர்த்தம். ஷிப்பிங் சேவை நெடுவரிசையில் உள்ள கேரியர் தடமறிவதற்கான எண்ணைக் கிளிக் செய்வதன் மூலம் கேரியரின் இணையதளத்திற்குச் சென்று ஷிப்மென்ட் பற்றிய கூடுதல் விவரங்களையும் பார்க்கலாம்.

கேரியரிடம் நேரில் பெறுதல்களைத் திட்டமிடுதல்

சில ஷிப்பிங் கேரியர்கள் ஷிப்மென்ட்டை நேரில் பெறும் சேவையை வழங்குகின்றன. ஷிப்பிங் லேபிள்கள் பக்கத்திலிருந்து தகுதிபெறும் ஷிப்பிங் லேபிள்களுக்குக் கேரியர் நேரில் பெறுதலைத் திட்டமிடலாம். நீங்கள் பேக்கேஜ்களை ஒப்படைக்க உங்கள் வீட்டை அல்லது வணிக இடத்தை விட்டு வெளியேறுவதற்குப் பதிலாக, ஷிப்பிங் கேரியர் உங்கள் வாசலுக்கே வந்து உங்கள் பேக்கேஜ்களைப் பெற்றுக்கொள்வார்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆர்டர்கள் > ஷிப்பிங் லேபிள்கள் என்பதற்குச் செல்லவும்.

  2. நேரில் பெறுதல்களைத் திட்டமிடு அல்லது காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. நீங்கள் நேரில் பெறுதலைத் திட்டமிட விரும்பும் கேரியரைப் பொறுத்து, UPS நேரில் பெறுதலைத் திட்டமிடு, USPS நேரில் பெறுதலைத் திட்டமிடு அல்லது DHL Express நேரில் பெறுதலைத் திட்டமிடு என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. நேரில் பெறுதலைத் திட்டமிட, பிராம்ட்களைப் பின்பற்றவும். வெவ்வேறு கேரியர்கள் நேரில் பெறுதல்களைத் திட்டமிடுவதற்கு வெவ்வேறு செயல்முறைகளைக் கொண்டுள்ளன.

ஷிப்பிங் மேனிஃபெஸ்ட்டுகளை உருவாக்கி அச்சிடுதல்

நீங்கள் USPS-ஐப் பயன்படுத்தினால், ஷிப்பிங் லேபிள்கள் பக்கத்திலிருந்து நீங்கள் ஷிப்பிங் மேனிஃபெஸ்ட்டுகளை உருவாக்கி அச்சிடலாம்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆர்டர்கள் > ஷிப்பிங் லேபிள்கள் என்பதற்குச் செல்லவும்.

  2. நேரில் பெறுதல்கள் மற்றும் மேனிஃபெஸ்ட்டுகள் என்பதைக் கிளிக் செய்து, பிறகு மேனிஃபெஸ்ட்டை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. விருப்பத்தேர்வு: உங்களிடம் Shipping Manifests செயலி நிறுவப்படவில்லை எனில், அந்தச் செயலியை உங்கள் Shopify நிர்வாகியில் நிறுவவும்.

  4. Shipping Manifests செயலியிலிருந்து, மேனிஃபெஸ்ட்டை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

  5. நிறைவேற்றும் இடத்தைத் தேர்ந்தெடுக்கவும். நிறைவேற்றும் இடத்திலிருந்து கிடைக்கக்கூடிய அனைத்து ஷிப்பிங் லேபிள்களும் ஷிப்பிங் மேனிஃபெஸ்ட்டில் சேர்க்கப்படும்.

  6. மேனிஃபெஸ்ட்டை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

  7. மேனிஃபெஸ்ட்டை அச்சிடு என்பதைக் கிளிக் செய்யவும்.

ஷிப்மென்ட்டை இடைமறித்தல் அல்லது மாற்றுப் பாதையில் அனுப்புதல்

லேபிளை வாங்கிய பிறகு ஷிப்மென்ட்டின் இலக்கை உங்களால் மாற்ற முடியுமா என்பது கேரியரைப் பொறுத்தது, மேலும் கோரிக்கைகளுக்குக் காலக்கெடு உள்ளது. சில கேரியர்கள் ஷிப்மென்ட் வழியில் இருப்பதற்கு முன்பு மட்டுமே கோரிக்கையை ஏற்கும், பிற கேரியர்கள் ஷிப்மென்ட் டெலிவரிக்கு அனுப்பப்படும் வரை ஏற்கும், மேலும் சில கேரியர்கள் மாற்றுப் பாதையில் அனுப்புவதை ஆதரிக்கவே ஆதரிக்காது. உங்கள் கேரியர் இதை ஆதரிக்கிறதா மற்றும் எவ்வாறு கோருவது என்பதை அறிய, உங்கள் கேரியரின் பக்கத்தைப் பார்க்கவும்.