BRT Bartolini மூலம் ஷிப்பிங் செய்தல்
இத்தாலியில் உள்ள ஒரு இடத்திலிருந்து நீங்கள் ஷிப்பிங் செய்கிறீர்கள் எனில், BRT Bartolini-லிருந்து ஷிப்பிங் லேபிள்களை வாங்கலாம். நீங்கள் உங்கள் தயாரிப்புகளை ஒரு BRT டிராப்-ஆஃப் இருப்பிடத்திலிருந்து இத்தாலிக்குள் உள்ள உங்கள் வாடிக்கையாளரின் முகவரிக்கு ஷிப்பிங் செய்யலாம். உங்களிடம் வசூலிக்கப்படும் ஷிப்பிங் கட்டணங்கள் BRT உடனான Shopify-இன் கணக்கை அடிப்படையாகக் கொண்டவை.
இந்தப் பக்கத்தில்
BRT மூலம் பேக்கேஜ்களை ஷிப்பிங் செய்வதற்கான பரிசீலனைகள்
BRT மூலம் ஷிப்பிங் செய்யும்போது பின்வரும் பரிசீலனைகளை மதிப்பாய்வு செய்யவும்:
- BRT மூலம் ஷிப்பிங் செய்யும்போது இத்தாலிக்குள் மட்டுமே உள்நாட்டளவில் ஷிப்பிங் செய்யப்படும். சர்வதேச இலக்குகள் எதற்கும் ஆதரவளிக்கப்படாது.
- BRT ஷிப்பிங் லேபிள்களை வாங்க உங்கள் ஸ்டோர் பெயர் 25 எழுத்துகள் அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும்.
- BRT ஷிப்பிங் லேபிள்களை வாங்க உங்கள் வாடிக்கையாளரின் தெரு முகவரி 35 எழுத்துகள் அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும்.
உங்கள் தயாரிப்புகளை BRT-க்குக் கொண்டு சேர்த்தல்
நீங்கள் உங்கள் தயாரிப்புகளை BRT டிராப்-ஆஃப் இருப்பிடத்தில் வழங்கலாம். உங்களுக்கு அருகிலுள்ள BRT டிராப்-ஆஃப் இருப்பிடத்தைக் கண்டறியுங்கள்.
தற்போது, BRT மூலம் நேரில் பெறுதல்களுக்கு ஆதரவளிக்கப்படுவதில்லை.
BRT மூலம் உள்நாட்டு ஷிப்பிங்
BRT உத்தரவாதமான டெலிவரி நேரங்களைக் கொண்டிருக்கவில்லை, ஆனால் ஷிப்மென்ட்டுகளை 1-2 நாட்களுக்குள் டெலிவரி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்தாலிக்குள் வழங்கப்படும் BRT ஷிப்பிங் சேவைகள் குறித்து மேலும் அறிய பின்வரும் அட்டவணையை மதிப்பாய்வு செய்யவும்:
| ஷிப்பிங் சேவை | விளக்கம் |
|---|---|
| BRT Domestic Express Shop2Home | பேக்கேஜ்களை 1-2 நாட்களுக்குள் டெலிவரி செய்யும். |
உங்கள் ஷிப்மென்ட்டை டெலிவரி செய்ய முடியவில்லை எனில், BRT உங்கள் பேக்கேஜை இரண்டாவது முறையாக டெலிவரி செய்ய முயலும். இரண்டாவது முயற்சியும் தோல்வியுற்றால், பெறுநர் ஒரு அறிவிப்பைப் பெறலாம் அத்துடன் டெலிவரியை மறுபடியும் திட்டமிடலாம் அல்லது அருகிலுள்ள BRT டெப்போ அல்லது Fermopoint இருப்பிடத்திலிருந்து பேக்கேஜைப் பெற ஏற்பாடு செய்யலாம். டெலிவரி செய்ய முயன்று இரண்டு முறை தோல்வியுற்ற பிறகு டெலிவரி மீண்டும் திட்டமிடப்படாவிட்டாலோ நேரில் பெறப்படாவிட்டாலோ பார்சல் அனுப்புநருக்கே திருப்பி அனுப்பப்படும்.
உங்கள் ஷிப்மென்ட்டை டெலிவரி செய்யத் தவறினால், டெலிவரி செய்ய முயன்று 2 முறை தோல்வியுற்ற பிறகு, கன்சைனி அதைப் பெறுவதற்காக தபால் நிலையத்தில் 15 நாட்களுக்கு ஷிப்மென்ட் விடப்படும். கன்சைனி தபால் நிலையத்திலிருந்து ஷிப்மென்ட்டைப் பெறவில்லை எனில், பார்சல் அனுப்புநருக்கே திருப்பி அனுப்பப்படும்.
BRT ஷிப்மென்ட்டுகளுக்கான பேக்கேஜ் தேவைகள்
உள்நாட்டு ஷிப்மென்ட்டுகளுக்கு BRT அனுமதிக்கும் அதிகபட்ச அளவுகள் பின்வருமாறு:
- அதிகபட்ச எடை 20 kg (44.09 lb).
- அதிகபட்ச கொள்ளளவு 0.2 கன மீட்டர்கள் (12,204.7 கன அங்குலங்கள்).
- அதிகபட்ச நீளமான ஒற்றைப் பரிமாணம் 100 cm (39.37 அங்குலங்கள்).
- பேக்கேஜ் பரிமாணங்களின் அதிகபட்சக் கூட்டுத்தொகை (நீளம் + அகலம் + உயரம்) 250 cm (98.42 அங்குலங்கள்) ஆகும்.
BRT ஷிப்மென்ட்டுகளுக்கான ஷிப்பிங் கோரிக்கைகளைச் சமர்ப்பித்தல்
Shopify மூலம் நீங்கள் BRT-ஐப் பயன்படுத்துகிறீர்கள் அத்துடன் உங்கள் BRT ஷிப்மென்ட் தொலைந்துவிட்டது அல்லது சேதமடைந்துவிட்டது எனில், நீங்கள் ஒரு ஷிப்பிங் கோரிக்கையைச் சமர்ப்பிக்கலாம். டெஸ்க்டாப்பிலோ மொபைல் உலாவி மூலமாகவோ Shopify நிர்வாகியில் உள்ள ஆர்டர் பக்கத்திலிருந்து கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்படும். Shopify செயலியில் கோரிக்கையைச் சமர்ப்பிப்பதற்கு ஆதரவளிக்கப்படுவதில்லை.
கோரிக்கைப் படிவத்தில் தொலைந்துவிட்டது (Lost) மற்றும் சேதமடைந்துவிட்டது (Damaged) ஆகிய இரண்டு கோரிக்கை வகைகள் வழங்கப்பட்டுள்ளன. உங்கள் ஷிப்மென்ட் அனுப்புநருக்கே திருப்பி அனுப்பப்பட்டிருந்தால் அல்லது டெலிவரி செய்வதற்கான எந்தவொரு முயற்சியும் எடுக்கப்படவில்லையெனில், ஷிப்மென்ட்டிற்கான லேபிள் செலவு கிரெடிட்டைக் கோருங்கள்.
BRT ஷிப்மென்ட்டுகளில் சேர்க்கப்பட்டுள்ள இன்சூரன்ஸ் கவரேஜ்
தொலைந்துபோன மற்றும் சேதமடைந்த பேக்கேஜ்களுக்கு, ஒரு கிலோ பேக்கேஜ் எடைக்கு €1 EUR வரையான கவரேஜ், அத்துடன் ஷிப்பிங் செலவையும் BRT வழங்குகிறது.
தொலைந்துபோன BRT ஷிப்மென்ட்டிற்கான ஷிப்பிங் கோரிக்கையைச் சமர்ப்பித்தல்
உங்கள் BRT ஷிப்மென்ட் தொலைந்துபோனால், BRT இடத்தில் பேக்கேஜை வழங்கிய தேதியிலிருந்து 26 நாட்களுக்குள் நீங்கள் கோரிக்கையைச் சமர்ப்பிக்கலாம்.
BRT-யில் ஒரு ஷிப்பிங் கோரிக்கையைத் தொடங்க, Shopify நிர்வாகியில் ஒரு ஷிப்பிங் கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும். உங்கள் கோரிக்கையில் பின்வரும் தகவல்களைச் சேர்க்கவும்:
- உள்ளடக்கங்களின் மதிப்பைக் காட்டும் செலவு விலைப்பட்டியல் அல்லது ஆர்டர் உறுதிப்படுத்தல் பக்கத்தின் திரைப்பிடிப்பு
டெலிவரி செய்யப்பட்டதாகக் காட்டும் டிராக்கிங் நிலையிலுள்ள தொலைந்துபோன ஷிப்மென்ட்டுகளுக்கு, வாடிக்கையாளரிடமிருந்து கையொப்பமிடப்பட்ட ஒரு ரசீது மறுப்பைப் (Denial of Receipt - DOR) நீங்கள் சேர்க்க வேண்டும்.
சேதமடைந்த BRT ஷிப்மென்ட்டிற்கான ஷிப்பிங் கோரிக்கையைச் சமர்ப்பித்தல்
உங்கள் BRT ஷிப்மென்ட் சேதமடைந்திருந்தால், விநியோகத் தேதியிலிருந்து 5 நாட்களுக்குள் நீங்கள் ஒரு கோரிக்கையைச் சமர்ப்பிக்கலாம். BRT மூலம் ஷிப்பிங் கோரிக்கையைத் தொடங்க, Shopify நிர்வாகியில் ஒரு ஷிப்பிங் கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும். உங்களின் கோரிக்கையில் பின்வரும் தகவல்களைச் சேர்க்கவும்:
- உள்ளடக்கங்களின் மதிப்பைக் காட்டும் செலவு விலைப்பட்டியல் அல்லது ஆர்டர் உறுதிப்படுத்தல் பக்கத்தின் திரைப்பிடிப்பு
- பொதியாக்கம் குறித்த விளக்கம்
- எந்தெந்த உருப்படிகள் சேதமடைந்தன என்பது உட்பட சேதம் குறித்த விளக்கம்
- பின்வருபவை உட்பட, குறைந்தது மூன்று புகைப்படங்கள்:
- பேக்கேஜில் உள்ள BRT லேபிளுடன் பேக்கேஜின் வெளிப்புறத்தைக் காட்டும் புகைப்படங்கள்
- பேக்கேஜின் உட்புறப் புகைப்படங்கள்
- சேதமடைந்த உருப்படிகளின் புகைப்படங்கள்
அனுப்புநருக்குத் திருப்பியளிக்கப்பட்ட ஷிப்மென்டுக்கான லேபிள்-செலவு கிரெடிட்டைக் கோருதல்
உங்கள் BRT ஷிப்மென்ட் அனுப்புநருக்கே திருப்பியளிக்கப்பட்டிருந்தாலோ டெலிவரி செய்வதற்கான எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படாமலிருந்தாலோ, ஷிப்பிங் கோரிக்கையைச் சமர்ப்பிப்பதன் மூலம் லேபிள்-செலவு கிரெடிட்டைக் கோரலாம். கோரிக்கைப் படிவத்தில் தொலைந்தவை, சேதமடைந்தவை ஆகிய கோரிக்கை வகைகள் மட்டுமே வழங்கப்படும் என்பதால், உங்கள் சூழலுக்குப் பொருத்தமான விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். எடுத்துக்காட்டாக, டெலிவரி முயற்சியே மேற்கொள்ளப்படாமல் பேக்கேஜ் திருப்பியளிக்கப்பட்டிருந்தால், தொலைந்தவை என்பதைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் கோரிக்கையானது, அனுப்புநருக்குத் திருப்பியளிக்கப்பட்ட நிகழ்வு அல்லது தோல்வியடைந்த டெலிவரி முயற்சியின் காரணமாகக் கோரப்படும் லேபிள்-செலவு கிரெடிட்டுக்கானது என்பதைக் கோரிக்கை விளக்கத்தில் விவரிக்கவும். தகுந்த ஆதாரமாகத் தடமறிவதற்கான தகவல்களைச் சேர்க்கவும்.
உங்கள் கோரிக்கை மதிப்பாய்வு செய்யப்படுகிறது, மேலும் BRT இன் தடமறியும் பக்கத்தில் கிடைக்கும் தடமறிவதற்கான விவரங்களின் அடிப்படையில் முடிவு அமையும். லேபிள்-செலவு கிரெடிட்டுக்கு உத்தரவாதமில்லை.
கோரிக்கையைச் சமர்ப்பிக்க, Shopify நிர்வாகியில் ஷிப்பிங் கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும்.
உங்கள் BRT ஷிப்மென்டுக்கான ரசீது மறுப்பைப் பெறுங்கள்
ஷிப்மென்ட் டெலிவரி செய்யப்பட்டதாகக் குறிக்கப்பட்டிருந்தாலும் அதைத் தான் பெறவில்லை என்று வாடிக்கையாளர் புகாரளித்தால், நீங்கள் கோரிக்கையைச் சமர்ப்பிக்கும் முன்பு கையொப்பமிடப்பட்ட ரசீது மறுப்பை (DOR) வாடிக்கையாளரிடமிருந்து பெற்றிருக்க வேண்டும்.
படிகள்:
- BRT ரசீது மறுப்புப் படிவத்தைப் பதிவிறக்கி உங்கள் வாடிக்கையாளருக்கு அனுப்பவும்.
- வாடிக்கையாளரைப் படிவத்தை அச்சிடச் சொல்லி, கையொப்பம் உட்படப் படிவம் முழுவதையும் கைகளால் நிரப்பச் சொல்லவும். தட்டச்சு செய்யப்பட்ட அல்லது மின்னணு முறையில் நிரப்பப்பட்ட படிவங்கள் ஏற்கப்படாது.
- நிரப்பப்பட்ட படிவத்தைத் தெளிவான புகைப்படமாக உங்களிடம் திருப்பியளிக்குமாறு உங்கள் வாடிக்கையாளரிடம் கேட்கவும். முழுமையாக நிரப்பப்பட்ட படிவங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
- கையொப்பமிடப்பட்ட DOR-ஐப் பெற்ற பிறகு, கோரிக்கைச் சமர்ப்பிப்புடன் அதைச் சேர்க்கலாம்.
BRT ஷிப்மென்டுகளுக்கான ஆதரவைக் கோருதல்
Shopify வழியாக BRT-ஐப் பயன்படுத்தும்போது உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், நீங்கள் Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளலாம். தொலைந்த அல்லது சேதமடைந்த BRT ஷிப்மென்டுகளுக்கு நீங்கள் ஷிப்பிங் கோரிக்கைகளையும் சமர்ப்பிக்கலாம்.
BRT ஷிப்மென்டை வழிமாற்றி அனுப்புதல்
பேக்கேஜ் ட்ரான்சிட்டில் இல்லாமலோ டெலிவரி செய்யப்படாமலோ இருந்தால் மட்டுமே, ஷிப்மென்டை வழிமாற்றி அனுப்பும்படி கோர முடியும். ஷிப்மென்டுகளை வேறு முகவரிக்கோ BRT Fermopoint-க்கோ வழிமாற்றி அனுப்பலாம். உங்கள் ஷிப்மென்டை வழிமாற்றி அனுப்ப, நீங்கள் Shopify ஆதரவைத் தொடர்புகொண்டு பின்வரும் தகவல்களை வழங்க வேண்டும்:
- தடமறிவதற்கான எண்
- புதிய டெலிவரி முகவரி