DHL eCommerce மூலம் ஷிப்பிங் செய்தல்

அமெரிக்கக் கண்டத்தில் உள்ள ஒரு நிறைவேற்றும் இடத்திலிருந்து நீங்கள் ஷிப்பிங் செய்கிறீர்கள் எனில், DHL eCommerce-இல் இருந்து நீங்கள் ஷிப்பிங் லேபிள்களை வாங்கி, சர்வதேச முகவரிகளுக்கு உங்கள் பேக்கேஜ்களை அனுப்பலாம். உங்கள் Shopify சந்தா எதுவாக இருந்தாலும், அனைத்து Shopify வணிகர்களுக்கும் DHL eCommerce கிடைக்கிறது. உங்களிடம் வசூலிக்கப்படும் ஷிப்பிங் கட்டணங்கள், DHL eCommerce உடனான Shopify-இன் கணக்கைப் பொறுத்தது.

நீங்கள் Managed Markets உடன் DHL eCommerce-ஐப் பயன்படுத்தினால், Managed Markets மூலம் ஷிப்பிங் செய்தல் பக்கத்தைப் பார்க்கவும்.

DHL eCommerce மூலம் பேக்கேஜ்களை ஷிப்பிங் செய்வதற்கான பரிசீலனைகள்

DHL eCommerce-ஐப் பயன்படுத்தி ஷிப்பிங் செய்வதற்கு முன் பின்வரும் பரிசீலனைகளைச் சரிபார்க்கவும்:

  • உங்கள் ஸ்டோரில் உள்ள தயாரிப்புகளில் DHL eCommerce-இன் தடைசெய்யப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் ஆபத்தான பொருட்களின் பட்டியலில் உள்ள எந்தவொரு பொருளும் இல்லை என்றால் மட்டுமே, DHL eCommerce கிடைக்கும். உங்கள் ஸ்டோரில் இந்தத் தயாரிப்புகளில் ஏதேனும் இருந்தால், ஷிப்பிங் விருப்பமாக DHL eCommerce கிடைக்காது.
  • நீங்கள் DHL eCommerce ஷிப்பிங் லேபிள்களை அச்சிடும்போது, அவை United States Postal Service (USPS) லேபிள்களாக அச்சிடப்படும், ஏனெனில் நீங்கள் உங்கள் ஷிப்மென்ட்டை USPS டிராப்-ஆஃப் இருப்பிடத்தில் விட வேண்டும். USPS உங்கள் ஷிப்மென்ட்டை DHL-க்கு இடமாற்றும். மாறாக, உங்கள் ஷிப்பிங் இடத்திலிருந்து USPS ஏற்கனவே ஷிப்மென்ட்களைப் பிக்-அப் செய்தால், உங்கள் மற்ற டெலிவரிகளுடன் இந்தப் பேக்கேஜ்களையும் USPS பிக்-அப் செய்யும்.
  • DHL eCommerce ஷிப்மென்ட்களுக்கான தடமறியும் தகவல், கடைசியாகத் தடமறியப்பட்ட நிகழ்வுக்குப் பிறகு 21 நாட்களுக்குக் கிடைக்கும். எந்தவொரு செயல்பாடும் இல்லாத இந்தக் காலக்கட்டத்திற்குப் பிறகு, ஷிப்மென்ட்களுக்கான தடமறியும் தகவல் நீக்கப்படும்.
  • DHL eCommerce மூலம் ஷிப்பிங் செய்யப்படும் சர்வதேசப் பேக்கேஜ்கள் ஆய்விற்காகத் திறக்கப்படலாம். நீங்கள் DHL eCommerce மூலம் ஷிப்பிங் செய்தால், எளிதில் திறக்கக்கூடிய மற்றும் மீண்டும் சீல் வைக்கக்கூடிய பொதியாக்கத்தை உங்கள் தயாரிப்புகளுக்குப் பயன்படுத்துவதைப் பரிசீலிக்கவும். நீங்கள் பரிசுப் பொருட்களை விற்றால், பயணத்தின்போது பேக்கேஜ்கள் திறக்கப்படலாம் என்பதை உங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிப்பதைப் பரிசீலிக்கவும்.

DHL eCommerce-க்கான சர்வதேச ஷிப்பிங் சேவைகள்

DHL eCommerce Direct மற்றும் Standard ஆகிய இரண்டு சேவைகளை வழங்குகிறது. வெவ்வேறான பேக்கேஜ் தேவைகள் மற்றும் மதிப்புக் கட்டுப்பாடுகளுக்குக் கூடுதலாக, இந்தப் பேக்கேஜ்களை எந்தெந்த நாடுகள் மற்றும் பிராந்தியங்களுக்கு அனுப்பலாம் என்பதிலும் சுங்கவரி செலுத்தப்பட்ட டெலிவரி (DDP) ஷிப்மென்ட்களைச் சேவை ஆதரிக்கிறதா என்பதிலும் இந்தச் சேவைகள் வேறுபடுகின்றன. இந்த இரண்டு சேவைகளுக்கும் இடையிலான வேறுபாடுகள் குறித்து மேலும் அறிய, பின்வரும் அட்டவணையைப் பார்க்கவும்.

Shopify-இல் கிடைக்கும் DHL eCommerce ஷிப்பிங் சேவைகளின் விவரங்கள்.
ஷிப்பிங் சேவைDDP ஆதரவுஷிப்பிங் செய்யப்படும் இடங்கள்
DHL eCommerce Parcel Direct

DDP-ஐ ஆதரிக்கிறது. சுங்க வரிகள், இறக்குமதி வரி மற்றும் தரகு கட்டணங்களுக்கான பேமெண்ட்டை விற்பனையாளர் சேர்த்துள்ளார் என்பதை ஒரு DDP ஷிப்பிங் லேபிள் குறிக்கிறது. DDP குறித்து மேலும் அறிக.

ஒரு DDP ஷிப்மென்ட்டை அனுப்ப, செக்அவுட்டின்போது இறக்குமதி வரி மற்றும் சுங்க வரிகளை வசூலிக்க வேண்டும், மேலும் DDP ஷிப்பிங் லேபிள்களை வாங்க வேண்டும்.

ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம், ஹாங்காங், இஸ்ரேல், நியூசிலாந்து, சிங்கப்பூர், தென்கொரியா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட 37 பெரிய ஈகாமர்ஸ் சந்தைகளுக்கு ஷிப்பிங் செய்யப்படுகிறது.
DHL eCommerce Parcel StandardDDP-ஐ ஆதரிக்காது. DHL eCommerce Parcel Standard ஷிப்மென்ட்கள் DAP (Delivered At Place) ஆக அனுப்பப்பட வேண்டும், அதாவது சுங்க வரிகள், இறக்குமதி வரி மற்றும் தரகு கட்டணங்கள் செலுத்தப்படவில்லை என்பதையும், டெலிவரியின்போது வாடிக்கையாளரிடமிருந்து வசூலிக்கப்படும் என்பதையும் இது குறிக்கிறது. DAP குறித்து மேலும் அறிக.உலகளவில் 220-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களுக்கு ஷிப்பிங் செய்யப்படுகிறது.

DHL eCommerce-க்கான பேக்கேஜ் தேவைகள்

ஷிப்மென்ட்களின் அதிகபட்ச அளவீடுகள் மற்றும் எடையில் DHL eCommerce கட்டுப்பாடுகளை விதிக்கிறது. உங்கள் ஆர்டர்கள் இந்தக் கட்டுப்பாடுகளை மீறவில்லை என்பதை உறுதிசெய்ய, பின்வரும் அட்டவணையைச் சரிபார்க்கவும்.

DHL eCommerce-க்கான எடை மற்றும் பரிமாணத் தேவைகள்
அளவீடுDHL eCommerce Parcel DirectDHL eCommerce Parcel Standard
நீளம்42 அங்குலங்கள் (கனடாவுக்கு ஷிப்பிங் செய்யும்போது 79 அங்குலங்கள்)47 அங்குலங்கள்
அகலம்DHL eCommerce Parcel Direct-க்கான அளவானது (நீளம் + சுற்றளவு) என்பதைக் கொண்டு கணக்கிடப்படுகிறது. மொத்த அளவு வரம்பு 79 அங்குலங்கள் (கனடாவுக்கு ஷிப்பிங் செய்யும்போது 118 அங்குலங்கள்) ஆகும்24 அங்குலங்கள்
உயரம்24 அங்குலங்கள்
எடை44 lbs (கனடாவுக்கு ஷிப்பிங் செய்யும்போது 66 lbs)44 lbs (கனடாவுக்கு ஷிப்பிங் செய்யும்போது 66 lbs)

DHL eCommerce-இல் தடைசெய்யப்பட்ட உருப்படிகள்

நீங்கள் எங்கு ஷிப்பிங் செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்து, சில உருப்படிகளுக்கும் பொருட்களுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கும். DHL eCommerce-இன் தடைசெய்யப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் ஆபத்தான சரக்குகள் தொடர்பான பக்கத்தைப் பார்க்கவும், உங்கள் இலக்கு நாட்டின் ஷிப்பிங் விதிமுறைகளை நீங்கள் நன்கு அறிந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

DHL eCommerce தீர்மானித்தபடி, தடைசெய்யப்பட்ட உருப்படிகள் எதையாவது உங்கள் ஸ்டோர் விற்றால், உங்களால் DHL eCommerce-ஐப் பயன்படுத்தி ஷிப்பிங் செய்ய முடியாது.

இலவச DHL ஷிப்பிங் சப்ளைகள்

ShopifyMPSupplies@dhl.com என்ற முகவரியில் DHL-க்கு மின்னஞ்சல் செய்வதன் மூலம் இலவச ஷிப்பிங் சப்ளைகளை ஆர்டர் செய்யலாம். இந்த இணைப்பானது நீங்கள் விரும்பும் மின்னஞ்சல் கிளையண்ட்டில் ஒரு மின்னஞ்சல் வார்ப்புருவைத் திறக்கும்:

DHL eCommerce-க்கான மதிப்பு வரம்புகள்

DHL eCommerce Parcel Direct மற்றும் DHL eCommerce Parcel Standard மூலமான ஒரு ஷிப்மென்ட்டின் அதிகபட்ச ஆர்டர் மதிப்பு $1,000 USD ஆகும். சில நாடுகளுக்கும் பிராந்தியங்களுக்கும் இந்த வரம்பிலிருந்து விதிவிலக்கு உண்டு.

DHL eCommerce மூலம் ஆர்டர்களை ஷிப்பிங் செய்யும்போது, குறிப்பிட்ட நாடுகளுக்கான அதிகபட்ச ஆர்டர் மதிப்புகளின் விவரங்கள்.
இலக்குDHL eCommerce Parcel DirectDHL eCommerce Parcel Standard
ஆஸ்திரேலியா1,000 AUD2,000 AUD
கனடா$3,300 CAD$2,500 CAD
சீனாபொருந்தாது1,000 CNY
ஜெர்மனி€1,000 EUR€1,000 EUR
நியூசிலாந்து1,000 NZD1,000 NZD
யுனைடெட் கிங்டம்£2,500 GBP£900 GBP

நகை அல்லது கடிகாரம் போன்ற சில தயாரிப்பு வகைகளில், ஒவ்வொரு தனிப்பட்ட உருப்படியின் மதிப்பும் $5,000 USD-ஐத் தாண்டக்கூடாது. உதாரணமாக, நீங்கள் நகைகளை விற்கிறீர்கள் என்றால், அதிகபட்ச ஆர்டர் மதிப்பு வரையில் உங்களால் ஷிப்பிங் லேபிளை வாங்க முடியும், ஆனால் ஒவ்வொரு நகை உருப்படியின் மதிப்பும் $5,000 USD-க்கு மிகாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

DHL eCommerce-க்கு உங்கள் தயாரிப்புகளைக் கொண்டு சேர்த்தல்

நீங்கள் DHL eCommerce-ஐப் பயன்படுத்தினால், USPS டிராப்-ஆஃப் இருப்பிடம் ஒன்றில் உங்கள் ஷிப்மென்ட்டைக் கொடுக்க வேண்டும் அல்லது உங்கள் ஷிப்மென்ட்டை USPS நேரில் வந்து பெறுமாறு செய்ய வேண்டும். தொடர்ச்சியாக வந்து பெறுதல் உள்ளிட்ட USPS நேரில் பெறும் சேவைகள் பற்றி மேலும் அறிக. USPS உங்கள் ஷிப்மென்ட்டை DHL-க்கு இடமாற்றம் செய்யும்.

USPS டிராப்-ஆஃப் இருப்பிடத்தில் கொண்டு சேர்ப்பதை ஆதரிக்கும் ஒரே சேவை DHL eCommerce மட்டுமே. நீங்கள் USPS இருப்பிடத்தில் உங்கள் பேக்கேஜ்களை டெலிவரி செய்தால், உங்களின் DHL eCommerce பேக்கேஜ்களுடன் DHL Express, UPS அல்லது FedEx பேக்கேஜ்களைச் சேர்க்காமல் இருப்பதை உறுதிசெய்யவும்.

DHL eCommerce-க்கான ஷிப்பிங் கவரேஜ்

ஷிப்மென்ட் காணாமல் போனால் அல்லது சேதமடைந்தால், Shopify நிர்வாகியில் ஷிப்பிங் உரிமைகோரலைச் சமர்ப்பிக்கவும்.

DHL eCommerce தங்களுடைய விநியோக மையங்களில் ஒன்றில் முதல்முறையாக பேக்கேஜை ஸ்கேன் செய்த தேதியிலிருந்து 90 நாட்களுக்குள் DHL eCommerce உரிமைகோரல்களைச் சமர்ப்பிக்க வேண்டும். பேக்கேஜ் சேதமடைந்து வந்தடைந்தால், அது எந்த ஷிப்பிங் சேவையாக இருந்தாலும், நீங்கள் உடனடியாக உரிமைகோரலைச் சமர்ப்பிக்கலாம். கேரியரால் ஏற்றுக்கொள்ளப்பட்டதிலிருந்து 45 நாட்கள் கடந்த பிறகு மட்டுமே காணாமல் போனதாகக் கூறப்படும் உரிமைகோரல்களுக்கு DHL eCommerce பேக்கேஜ்கள் தகுதிபெறும். இத்தாலிக்கு பேக்கேஜ் அனுப்பப்பட்டிருந்தால், இந்தக் கால அளவு 60 நாட்கள் ஆகும். DHL eCommerce-இல் காணாமல் போனதற்கான உரிமைகோரல் வழிமுறைகள் பற்றி மேலும் அறிக.

DHL eCommerce மூலம் ஷிப்பிங் லேபிளை வாங்கும்போது, காப்பீடும் அதில் சேர்க்கப்படும். காப்பீட்டு கவரேஜ் உள்ள ஷிப்பிங் சேவைகளானது, தயாரிப்பு மதிப்பு மற்றும் ஷிப்பிங் லேபிள் செலவு ஆகிய இரண்டையும் சேர்த்து அதிகபட்சமாக $100 USD வரை ஈடுகட்டுகின்றன.

உங்களுடைய உரிமைகோரலில் பின்வரும் தகவல்களைச் சேர்க்கவும்:

  • பெறுநரின் தொலைபேசி எண்
  • பேக்கேஜ் காணாமல் போனதை அல்லது சேதமடைந்ததை உறுதிப்படுத்தும் வகையில், உங்கள் வாடிக்கையாளர் அனுப்பிய மெசேஜ்களின் திரைப்பிடிப்பு

சேதமடைந்த பேக்கேஜ்களுக்கு, நீங்கள் பின்வரும் தகவல்களையும் சேர்க்க வேண்டும்:

  • சேதம் பற்றிய விவரம்
  • சேதமடைந்த பேக்கேஜ் மற்றும் தயாரிப்புகளின் புகைப்படங்கள்