போலந்தில் DHL eCommerce மூலம் ஷிப்பிங் செய்தல்

போலந்தில் உள்ள நிறைவேற்றும் இடத்திலிருந்து நீங்கள் அனுப்பினால், போலந்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் உள்ள தகுதியுள்ள முகவரிகளுக்கு உங்கள் பேக்கேஜ்களை அனுப்ப ஷிப்பிங் லேபிள்களை வாங்கலாம். DHL இல் உள்ள Shopify கணக்கின் அடிப்படையில் உங்களுக்கான ஷிப்பிங் கட்டணங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.

போலந்தில் DHL eCommerce மூலம் ஷிப்பிங் செய்வதற்கான கவனிக்க வேண்டியவை

போலந்தில் உள்ள ஒரு நிறைவேற்றும் இடத்திலிருந்து DHL eCommerce மூலம் ஷிப்பிங் செய்யும்போது கவனிக்க வேண்டிய பின்வரும் விஷயங்களைச் சரிபார்க்கவும்:

  • உங்கள் நிறைவேற்றும் இடம் போலந்தில் இருக்க வேண்டும்.
  • போலந்தில் உள்ள DHL eCommerce, போலந்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் உள்ள தகுதியுள்ள முகவரிகளுக்கு அனுப்புகிறது.
  • செக்அவுட்டில் கேரியர் கணக்கிடும் DHL eCommerce கட்டணங்கள் கிடைக்கவில்லை.
  • உங்களின் பேக்கேஜ்களை DHL லாக்கரில் நீங்கள் டிராப்-ஆஃப் செய்ய வேண்டும். நேரில் பெறுதல் சேவைகள் கிடைக்கவில்லை.
  • DHL இன் சர்வதேசப் பொதியாக்கத் தரநிலைகளைச் சந்திக்கும் சாஃப்ட் பேக்குகள் ஏற்கப்படும். உறைகள் ஏற்கப்படாது.
  • அனைத்து ஷிப்மென்ட்களிலும் டிராக்கிங் வசதி இருக்கும்.

போலந்தில் DHL eCommerce-க்கான ஷிப்பிங் சேவைகள்

DHL eCommerce, Shopify மூலம் பின்வரும் சேவைகளை வழங்குகிறது:

போலந்தில் Shopify மூலம் வாங்கப்பட்ட லேபிள்களுக்கான DHL Parcel Connect சேவைகள் மற்றும் டெலிவரி கவரேஜ்.
ஷிப்பிங் சேவைடெலிவரி கவரேஜ்
DHL Parcel Connect (EU)ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, குரோஷியா, செக்கியா, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், ஹங்கேரி, இத்தாலி, லக்சம்பர்க், நெதர்லாந்து, போர்ச்சுகல், ருமேனியா, ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் உள்ள தகுதியுள்ள முகவரிகள்
DHL Parcel Connectபோலந்தில் உள்ள தகுதியான முகவரிகள்

உள்நாட்டு DHL Parcel Connect பேக்கேஜ்களும் DHL Parcel Connect (EU) பேக்கேஜ்களைப் போன்ற அதே டிராப்-ஆஃப் இருப்பிடங்கள் மற்றும் பேக்கேஜ் தேவைகளையே பயன்படுத்துகின்றன.

லேபிள் பில்லிங், செல்லுபடிக்காலம் மற்றும் ரத்துசெய்தல்

வழக்கமான ஷிப்பிங் லேபிள் பில்லிங் செயல்முறை மூலம் DHL eCommerce லேபிளை வாங்கும்போது உங்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும்.

பயன்படுத்தப்படாத DHL eCommerce Poland லேபிள் வாங்கிய 30 நாள்களில் காலாவதியாகிவிடும். உங்களுக்கு அந்த லேபிள் தேவையில்லை என்றால், DHL பேக்கேஜை ஸ்கேன் செய்யாத பட்சத்தில் வாங்கிய 30 நாள்களுக்குள் அதனை ரத்துசெய்யலாம். லேபிளை ரத்துசெய்தால் உங்கள் கணக்கில் ஷிப்பிங் கிரெடிட் சேர்க்கப்படும்.

உங்களின் தயாரிப்புகளை DHL இடம் வழங்குதல்

உங்களின் DHL eCommerce பேக்கேஜ்களைப் போலந்தில் உள்ள DHL லாக்கரில் நீங்கள் டிராப்-ஆஃப் செய்ய வேண்டும். டிராப்-ஆஃப் இருப்பிடத்தைக் கண்டறிய, DHL இருப்பிடக் கண்டுபிடிப்பானைப் பயன்படுத்தவும். போலந்தில் உள்ள DHL eCommerce க்கு நேரில் பெறுதல் சேவைகள் கிடைக்கவில்லை.

பேக்கேஜ் தேவைகள்

போலந்தில் உள்ள DHL eCommerce, பேக்கேஜுக்கான குறைந்தபட்ச மற்றும் அதிகபட்சத் தேவைகளைக் கொண்டுள்ளது. லேபிளை வாங்குவதற்கு முன் பின்வரும் அளவு மற்றும் எடைத் தேவைகளைச் சரிபார்க்கவும்:

  • குறைந்தபட்சப் பேக்கேஜ் அளவு 15 × 11 × 1 cm (5.9 × 4.3 × 0.4 in) ஆகும்.
  • அதிகபட்சப் பரிமாணங்கள் 64 cm நீளம் × 41 cm உயரம் × 38 cm அகலம் (25.2 in × 16.1 in × 15 in) ஆகும்.
  • அதிகபட்ச எடை 25 kg (55.1 lb) ஆகும்.

வழங்கிய பிறகு ஷிப்மென்ட்டை நிர்வகித்தல்

DHL eCommerce Poland ஷிப்மென்ட் போக்குவரத்தில் இருக்கும்போது அதன் வழித்தடத்தை உங்களால் மாற்ற முடியாது. ஒரு ஷிப்மென்ட்டை டெலிவரி செய்ய முடியவில்லை என்றாலோ வழங்கிய பிறகு உங்களுக்கு உதவி தேவைப்பட்டாலோ Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.

DHL eCommerce Poland ஷிப்மென்ட்களுக்கு ஷிப்பிங் கிளைம்களைச் சமர்ப்பித்தல்

தொலைந்துபோன, சேதமடைந்த அல்லது தாமதமான DHL eCommerce Poland ஷிப்மென்ட்களுக்கு நீங்கள் கிளைம்களைச் சமர்ப்பிக்கலாம். கேரியரிடம் கிளைம் செய்வதற்கான காலக்கெடு குறைவாக இருக்கக்கூடும் என்பதால், சிக்கலைக் கண்டறிந்தவுடன் கிளைமைச் சமர்ப்பிக்கவும்.

தகுதிபெறும் கிளைமைத் தொடங்க, உங்கள் Shopify நிர்வாகியில் ஷிப்பிங் கிளைமைச் சமர்ப்பிக்கவும். உங்கள் சார்பாக DHL இல் கிளைம் பதிவுசெய்யப்படும். வணிகர் கணக்கைப் பயன்படுத்தி, நீங்கள் நேரடியாக DHL இல் கிளைமைப் பதிவுசெய்ய முடியாது.

தொலைந்துபோன அல்லது சேதமடைந்த ஷிப்மென்ட்டுக்குக் கிளைமைச் சமர்ப்பித்தல்

தொலைந்துபோன அல்லது சேதமடைந்த ஷிப்மென்ட் கிளைமில் பின்வரும் தகவல்களைச் சேர்க்கவும்:

  • புகார் கடிதம்.
  • பொருள்களின் மதிப்பைக் காட்டும் வாடிக்கையாளர் இன்வாய்ஸ்.
  • பொருள்களின் மதிப்பிற்கான ஆதாரம்.
  • தயாரிப்புகள், வெளிப்புறப் பொதியாக்கம் மற்றும் உள்புறப் பொதியாக்கம் ஆகியவற்றின் படங்கள். தொலைந்துபோன மற்றும் சேதமடைந்த கிளைம்கள் இரண்டிற்கும் இந்தப் படங்கள் தேவை.

தாமதமான ஷிப்மென்ட்டுக்குக் கிளைமைச் சமர்ப்பித்தல்

தாமதமான டெலிவரிக்கான கிளைம், பொருள்களின் மதிப்பைத் தராது, ஷிப்பிங் சேவைக்கான செலவை மட்டுமே திருப்பித் தரும். உங்கள் கிளைமுடன் புகார்க் கடிதத்தைச் சேர்க்கவும்.

DHL eCommerce Poland ஷிப்மென்ட்களுக்கு ஆதரவைக் கோருதல்

DHL eCommerce Poland லேபிள், ஷிப்மென்ட், கிளைம் அல்லது பில்லிங் சரிசெய்தல் தொடர்பாக உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும். ஷிப்பிங் கிளைம் குறித்து நேரடியாக DHL ஐத் தொடர்புகொள்ள வேண்டாம்.