Purolator உடனான ஷிப்பிங்

கனடாவிலுள்ள நிறைவேற்றும் இடத்திலிருந்து நீங்கள் ஷிப்பிங் செய்கிறீர்கள் எனில், Purolator-லிருந்து ஷிப்பிங் லேபிள்களை வாங்கலாம். டிராப்-ஆஃப் இருப்பிடத்தில் நீங்கள் பேக்கேஜ்களை வழங்கலாம், மேலும் அவற்றை உள்நாட்டிலோ அல்லது Purolator Ground US ஷிப்பிங் சேவை மூலம் சர்வதேச அளவிலோ அனுப்பலாம்.

Purolator மூலம் பேக்கேஜ்களை ஷிப் செய்வதற்கான பரிசீலனைகள்

  • Purolator Ground அல்லது Purolator Express ஷிப்பிங் சேவைகளைப் பயன்படுத்தும்போது, கனடாவுக்குள் மட்டுமே ஷிப்மென்ட்கள் அனுப்பப்படும். Purolator Ground US சேவை மூலம் மட்டுமே சர்வதேச ஷிப்பிங் கிடைக்கிறது.
  • தபால் பெட்டி (PO box) முகவரிகளுக்கு ஷிப் செய்வதை Purolator ஆதரிக்காது.
  • அபாயகரமான பொருட்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கான Purolator-இன் சேவைக்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை உங்கள் ஷிப்மென்ட் பூர்த்தி செய்கிறதா என்பதை உறுதிப்படுத்தவும்.
  • Purolator-இல் பார்சல்களை நேரில் பெறும் வசதி (Pickups) இல்லை. Purolator இருப்பிடத்தில் உங்கள் பேக்கேஜை நீங்கள் தான் வழங்க வேண்டும்.

உங்கள் தயாரிப்புகளை Purolator-க்கு அனுப்புதல்

Purolator இருப்பிடத்தில் உங்கள் தயாரிப்புகளை நீங்கள் வழங்கலாம். உங்களுக்கு அருகிலுள்ள Purolator இருப்பிடத்தைக் கண்டறியவும்.

தற்போதைக்கு, Purolator மூலம் பேக்கேஜ்களை நேரில் பெறும் வசதி Shopify-இல் ஆதரிக்கப்படவில்லை.

Purolator மூலம் உள்நாட்டு ஷிப்பிங்

Purolator உள்நாட்டு ஷிப்பிங் சேவைகள்
ஷிப்பிங் சேவைடெலிவரிக் காலவரிசைவிளக்கம்
Purolator Ground2-5 வணிக நாட்கள்குறைவான அவசரத் தேவை கொண்ட ஷிப்மென்ட்டுகளுக்கான டெலிவரி சேவை.
Purolator Expressஅடுத்த வணிக நாள் இரவு 9 மணிக்குள்அடுத்த நாள் டெலிவரி சேவை.

Purolator மூலம் USA ஷிப்பிங்

அமெரிக்காவிற்கு ஷிப் செய்வதற்கான விருப்பத்தேர்வான Purolator Ground US சேவையை Purolator வழங்குகிறது.

Purolator US ஷிப்பிங் சேவைகள்
ஷிப்பிங் சேவைடெலிவரிக் காலவரிசைவிளக்கம்
Purolator Ground US2-5 வணிக நாட்கள்குறைவான அவசரத் தேவை கொண்ட ஷிப்மென்ட்டுகளுக்கான சர்வதேச டெலிவரி சேவை.

Purolator கையொப்பம் தேவைப்படும் சேவை

$3.49 CAD கட்டணத்தில் Purolator ஷிப்மென்ட்டுகளுக்கு நீங்கள் கையொப்பத் தேவையைக் கூடுதலாகச் சேர்க்கலாம். டெலிவரியின்போது கையொப்பம் தேவைப்படும்படி உங்கள் ஷிப்மென்ட்டுகளை அமைக்க, உங்கள் ஆர்டருக்கான ஷிப்பிங் லேபிளை வாங்கும்போது கையொப்பம் தேவை என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

Purolator ஷிப்மென்ட்டுகளுக்கான பேக்கேஜ் தேவைகள்

உள்நாட்டு மற்றும் சர்வதேச ஷிப்மென்ட்டுகளுக்கு Purolator அனுமதிக்கும் அதிகபட்ச மதிப்புகள் பின்வருமாறு:

  • அதிகபட்ச எடை 150 lb (68 kg)
  • அதிகபட்ச நீளம் 108 அங்குலங்கள் (274 cm)
  • நீளம் மற்றும் சுற்றளவின் இணைந்த அதிகபட்ச அளவு (நீளம் + 2x அகலம் + 2x உயரம்) 165 அங்குலங்கள் (419 cm)

Purolator ஷிப்மென்ட்டுகளுக்கு ஷிப்பிங் கோரிக்கைகளைச் சமர்ப்பித்தல்

நீங்கள் Shopify வாயிலாக Purolator-ஐப் பயன்படுத்தினால், உங்களின் Purolator ஷிப்மென்ட் தொலைந்துவிட்டாலோ சேதமடைந்தாலோ, Purolator ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.

Purolator ஷிப்மென்ட்டுகளில் சேர்க்கப்பட்டுள்ள காப்பீட்டுத் தொகை

தொலைந்த மற்றும் சேதமடைந்த பேக்கேஜ்களுக்கு அவற்றின் எடையில் ஒரு lb-க்கு $2.00 CAD ($4.41 CAD/கிலோ) வரையிலான கவரேஜை Purolator வழங்குகிறது.

தொலைந்துபோன Purolator ஷிப்மென்ட்டிற்கு ஷிப்பிங் கோரிக்கையைச் சமர்ப்பித்தல்

உங்களின் Purolator ஷிப்மென்ட் தொலைந்துவிட்டால், பேக்கேஜ் அனுப்பப்பட்ட தேதியிலிருந்து 9 மாதங்களுக்குள் கோரிக்கையைச் சமர்ப்பிக்கலாம். Purolator-இல் ஷிப்பிங் கோரிக்கையைத் தொடங்க, Purolator-இடம் ஷிப்பிங் கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும். தொலைந்துபோனதற்கான கோரிக்கையை நேரடியாக Shopify-இடம் உங்களால் சமர்ப்பிக்க முடியாது.

சேதமடைந்த Purolator ஷிப்மென்ட்டிற்கு ஷிப்பிங் கோரிக்கையைச் சமர்ப்பித்தல்

உங்களின் Purolator ஷிப்மென்ட் சேதமடைந்திருந்தால், Purolator-இடம் ஷிப்பிங் கோரிக்கையைச் சமர்ப்பிக்கலாம். சேதத்திற்கான கோரிக்கையை நேரடியாக Shopify-இடம் உங்களால் சமர்ப்பிக்க முடியாது. டெலிவரி செய்யும்போது சேதம் வெளிப்படையாகத் தெரிந்தால் விநியோகத் தேதியிலிருந்து 60 நாட்களுக்குள்ளும் அல்லது சேதம் மறைக்கப்பட்டிருந்தால் விநியோகத் தேதியிலிருந்து 21 நாட்களுக்குள்ளும் சேதத்திற்கான கோரிக்கையை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

தாமதமான Purolator ஷிப்மென்ட்டிற்கு ஷிப்பிங் கோரிக்கையைச் சமர்ப்பித்தல்

உங்கள் Purolator ஷிப்மென்ட் தாமதமாக டெலிவரி செய்யப்பட்டால், பணத்தைத் திரும்பப்பெற உங்களுக்குத் தகுதி இருக்கலாம். ஷிப்பிங் தேதியிலிருந்து 12 நாள்காட்டி நாள்களுக்குள் தாமதமான டெலிவரிக்கான உரிமைக்கோரிக்கையை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். தாமதமான டெலிவரிக்காகப் பணத்தைத் திரும்பப்பெறும் கோரிக்கைகளை Shopify மூலம் சமர்ப்பிக்க வேண்டும். தாமதமான டெலிவரிக்கான உரிமைக்கோரிக்கையை உங்கள் Shopify நிர்வாகி ஆர்டர் பக்கத்திலிருந்தே நேரடியாகச் சமர்ப்பிக்கலாம்.

Purolator ஷிப்மென்ட்டுகளுக்கு ஆதரவைக் கோருதல்

Shopify வாயிலாக Purolator-ஐப் பயன்படுத்தும் உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், உங்களுக்குத் தேவையான உதவியைப் பொறுத்து நீங்கள் யாரைத் தொடர்புகொள்வது என்பது அமையும்:

  • லேபிளை வாங்குவதற்கு முந்தைய உதவிக்கோ அல்லது ஷிப்பிங் மாற்றங்கள் குறித்து முறையிடவோ, Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.
  • லேபிளை வாங்கிய பிறகான உதவிக்கு (அதாவது, பேக்கேஜை வேறு வழியில் அனுப்புதல் அல்லது தொலைந்த/சேதமடைந்த பேக்கேஜிற்குக் கோரிக்கையைச் சமர்ப்பித்தல்), Purolator ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.