USPS மூலம் ஷிப்பிங் செய்தல்
நீங்கள் அமெரிக்காவில் உள்ள ஒரு நிறைவேற்றும் இடத்திலிருந்து ஷிப்பிங் செய்கிறீர்கள் என்றால், USPS-இலிருந்து நீங்கள் ஷிப்பிங் லேபிள்களை வாங்கலாம். நீங்கள் உங்களின் பேக்கேஜ்களை உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் ஷிப்பிங் செய்யலாம்.
உங்களிடம் வசூலிக்கப்படும் ஷிப்பிங் கட்டணங்கள் USPS உடனான Shopify-இன் கணக்கை அடிப்படையாகக் கொண்டவை.
இந்தப் பக்கத்தில்
USPS மூலம் உள்நாட்டு ஷிப்பிங்
பின்வரும் அஞ்சல் வகைகளைப் பயன்படுத்தி USPS மூலம் அமெரிக்காவிற்குள் நீங்கள் உள்நாட்டில் ஷிப்பிங் செய்யலாம்:
| ஷிப்பிங் சேவை | டெலிவரி காலவரிசை | விளக்கம் |
|---|---|---|
| Ground Advantage | 2 முதல் 5 வணிக நாள்கள் | அமெரிக்காவிற்குள் பேக்கேஜ்களை ஷிப்பிங் செய்வதற்கான சிக்கனமான மற்றும் நம்பகமான வழி. |
| Priority Mail | 1-3 வணிக நாட்கள் | அமெரிக்காவிற்குள் ஆர்டர்களை அனுப்பலாம். |
| Priority Mail Express | 1-2 வணிக நாட்கள் | அமெரிக்காவிற்குள் ஆர்டர்களை விரைவாக அனுப்புவதற்கான வழி மற்றும் பணம் திரும்பப்பெறுவதற்கான உத்தரவாதம். |
| First-Class Mail | 1-5 வணிக நாட்கள் | பெரிய உறைகளை எளிதாக அனுப்புவதற்கான வழி. |
| Media Mail | 2-10 வணிக நாட்கள் | புத்தகங்கள், இசை மற்றும் பிற மீடியா போன்றவற்றை குறைந்த செலவில் அனுப்புவதற்கான வழி. மேலும் தகவலுக்கு, Media Mail-க்கு அங்கீகரிக்கப்பட்ட USPS பட்டியலைப் பார்க்கவும். |
USPS உள்நாட்டு ஷிப்மென்ட்டுகளுக்கான பேக்கேஜ் தேவைகள்
உள்நாட்டு ஷிப்மென்ட்டுகளுக்கு USPS அனுமதிக்கும் அதிகபட்ச மதிப்புகள் பின்வருமாறு:
- அதிகபட்ச எடை 70 lb (31.75 kg) ஆக இருக்க வேண்டும்
- அதிகபட்ச சுற்றளவு மற்றும் நீளத்தின் கூடுதல் 108 அங்குலங்கள் (274 cm) ஆக இருக்க வேண்டும்
பேக்கேஜ் தேவைகள் பற்றிய மேலும் தகவலுக்கு, USPS இணையதளத்தைப் பார்க்கவும்.
USPS உள்நாட்டில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் மற்றும் அபாயகரமான பொருட்கள்
ஷிப்பிங் லேபிள்கள் அபாயகரமான பொருட்களை (HAZMAT) அல்லது USPS-ஆல் தடைசெய்யப்பட்ட பொருட்களை அனுப்புவதை ஆதரிக்காது. ஷிப்பராக, அனைத்து USPS விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களைப் புரிந்துகொண்டு அதன்படி நடப்பது உங்கள் பொறுப்பாகும். USPS-இன் விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளைப் பின்பற்றி சில HAZMAT பொருட்களை அனுப்ப அவர்கள் அனுமதித்தாலும், Shopify மூலம் இந்தப் பொருட்களை அனுப்புவது தடைசெய்யப்பட்டுள்ளது; இவற்றை நேரடியாக USPS மூலமாகவே அனுப்ப வேண்டும்.
உள்நாட்டில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் மற்றும் HAZMAT பற்றிய மேலும் தகவலுக்கு, USPS-இன் உள்நாட்டு ஷிப்பிங் தடைகள், கட்டுப்பாடுகள் & HAZMAT பக்கம் மற்றும் USPS-இன் வெளியீடு 52 (அபாயகரமான, கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் அழுகக்கூடிய அஞ்சல்) ஆகியவற்றைப் பார்க்கவும்.
USPS மூலம் சர்வதேச ஷிப்பிங்
பின்வரும் அஞ்சல் வகைகளைப் பயன்படுத்தி USPS மூலம் சர்வதேச அளவில் நீங்கள் அனுப்பலாம்:
| ஷிப்பிங் சேவை | டெலிவரி காலவரிசை | விளக்கம் |
|---|---|---|
| First-Class Package International Service | மாறுபடும் | சர்வதேச அளவில் சிறிய பேக்கேஜ்களைச் சிக்கனமாக அனுப்புவதற்கான வழி. |
| Priority Mail International | 6-10 வணிக நாட்கள் | 190 நாடுகளுக்கு சர்வதேச அளவில் ஆர்டர்களை அனுப்பலாம். |
| Priority Mail Express International | 3-5 வணிக நாட்கள் | 190 நாடுகளுக்கு சர்வதேச அளவில் ஆர்டர்களை விரைவாக அனுப்புவதற்கான வழி மற்றும் குறிப்பிட்ட இலக்குகளுக்குப் பணம் திரும்பப்பெறுவதற்கான உத்தரவாதம். |
USPS சர்வதேச ஷிப்மென்ட்டுகளுக்கான பேக்கேஜ் தேவைகள்
சர்வதேச ஷிப்மென்ட்டுகளுக்கு USPS அனுமதிக்கும் அதிகபட்ச மதிப்புகள், இலக்கு நாட்டைப் பொறுத்து மாறுபடும். அதிகபட்ச பேக்கேஜ் மதிப்புகளைக் கண்டறிய, USPS நாடுகளின் மற்றும் வட்டாரங்களின் குறியீட்டுப் பக்கத்திற்குச் சென்று, உங்கள் ஷிப்மென்ட்டின் இலக்கு நாட்டைத் தேர்ந்தெடுக்கவும்.
USPS-இன் சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் மற்றும் அபாயகரமான பொருட்கள்
அபாயகரமான பொருட்கள் (HAZMAT) அல்லது USPS-ஆல் தடைசெய்யப்பட்ட பொருட்களுக்கு ஆதரவளிக்கப்படுவதில்லை. ஷிப்பராக, USPS, US மற்றும் நீங்கள் ஷிப்பிங் செய்யும் இலக்கு நாடு ஆகியவற்றின் அனைத்து விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களைப் புரிந்துகொண்டு அதன்படி நடப்பது உங்கள் பொறுப்பாகும். USPS-இன் விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளைப் பின்பற்றி சில HAZMAT பொருட்களை அனுப்ப அவர்கள் அனுமதித்தாலும், இந்தப் பொருட்கள் அடங்கிய ஷிப்மென்ட்டுகள் தடைசெய்யப்பட்டுள்ளன; இவற்றை நேரடியாக USPS மூலமாகவே அனுப்ப வேண்டும்.
சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் மற்றும் HAZMAT பற்றிய மேலும் தகவலுக்கு, USPS சர்வதேச ஷிப்பிங் தடைகள் & கட்டுப்பாடுகள் பக்கத்தைப் பார்க்கவும்.
உங்கள் தயாரிப்புகளை USPS-க்குக் கொண்டு சேர்த்தல்
உங்கள் தயாரிப்புகளை USPS டிராப்-ஆஃப் இருப்பிடத்தில் கொடுக்கலாம் அல்லது பிக்அப்பிற்குத் திட்டமிடலாம்.
உங்கள் USPS ஷிப்மென்ட்டிற்கான பிக்அப்பிற்குத் திட்டமிடுங்கள்
பிக்அப் நேரங்கள், பிக்அப் முகவரியின் நேர மண்டலத்தை அடிப்படையாகக் கொண்டவை. பிக்அப் நேரங்கள் உத்தேசமானவை என்பதுடன், போக்குவரத்து, வானிலை மற்றும் பிக்அப் முகவரியைப் பொறுத்து அவை அமையலாம்.
பிக்அப் நேரத்தைக் குறிப்பிட்டுச் சொல்ல விரும்பாத வரையில் USPS மூலம் செய்யப்படும் பிக்அப்கள் இலவசம். வழக்கமான அஞ்சல் நேரங்களில் எப்போது வேண்டுமானாலும் இலவச பிக்அப்களுக்குத் திட்டமிடலாம். பிக்அப்பிற்கான நேரத்தைத் தேர்ந்தெடுக்க $24 USD செலவாகும். ஒவ்வொரு பிக்அப்பும் USPS மூலம் தனித்தனியாகத் திட்டமிடப்பட வேண்டும்.
USPS பிக்அப்பைத் திட்டமிடுவதில் ஏதேனும் உதவி தேவைப்பட்டால், USPS-ஐத் தொடர்புகொள்ளவும் அல்லது 1-800-ASK-USPS (1-800-275-8777) என்ற எண்ணுக்கு அழைக்கவும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆர்டர்கள் பகுதிக்குச் செல்லவும்.
பிக்அப்பைத் திட்டமிட, பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யவும்:
- ஷிப்பிங் லேபிளை வாங்கிய உடனேயே பிக்அப்பைத் திட்டமிட, பேக்கேஜ் பிக்அப் பிரிவில், USPS பிக்அப்பைத் திட்டமிடு என்பதைக் கிளிக் செய்யவும்.
- USPS மூலம் நிறைவேற்றப்பட்ட ஆர்டருக்கான பிக்அப்பைத் திட்டமிட, ஆர்டரைத் திறந்து,
ஐகானைக் கிளிக் செய்து, பின்னர் பிக்அப்பைத் திட்டமிடு என்பதைக் கிளிக் செய்யவும்.
- நேரடியாக USPS-இன் இணையதளத்தில் இருந்து பிக்அப்பிற்குத் திட்டமிடுங்கள்.
USPS-இன் பிக்அப் படிவத்தைப் பூர்த்தி செய்யவும்.
உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள ஆர்டர்கள் பக்கத்திலிருந்து நீங்கள் திட்டமிட்ட பிக்அப்களைப் பார்க்கலாம்.
நீங்கள் திட்டமிட்ட பிக்அப்பிற்கு டிரைவர் வரவில்லை எனில், உங்களின் பிக்அப் உறுதிப்படுத்தல் எண்ணுடன் 1-800-ASK-USPS (1-800-275-8777) என்ற எண்ணில் USPS-ஐ அழைக்கவும். உங்கள் பிக்அப் உறுதிப்படுத்தல் எண்ணை ஆர்டரின் காலவரிசையில் காணலாம்.
USPS பிக்அப்பை ரத்துசெய்தல்
USPS பிக்அப்பை ரத்துசெய்ய, பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:
- USPS-இன் பிக்அப் ஷெட்யூலருக்குச் சென்று, முன்பே உள்ள பிக்அப்பை மாற்றியமை என்பதைக் கிளிக் செய்யவும்.
- 1-800-ASK-USPS (1-800-275-8777) என்ற எண்ணில் USPS-ஐத் தொடர்புகொள்ளவும்.
USPS உடன் Signature Confirmation
உங்கள் ஆர்டருக்கு ஷிப்பிங் லேபிளை வாங்கும்போது Signature Confirmation என்பதைச் சேர்ப்பதன் மூலம், உங்கள் ஷிப்மென்ட்டுகள் டெலிவரி செய்யப்படும்போது கையொப்பம் தேவைப்படுமாறு அமைக்கலாம்.
Priority Express Mail-ஐப் பயன்படுத்தும் ஷிப்மென்ட்டுகளில் இயல்பாகவே Signature Confirmation சேர்க்கப்பட்டிருக்கும். பின்வரும் USPS அஞ்சல் வகைகளில் Signature Confirmation என்பதைச் சேர்க்க நீங்கள் $2.60 USD-ஐச் செலுத்தலாம்:
- Ground Advantage
- Priority Mail
- Parcel Select Ground
- Media Mail
USPS extra services பக்கத்தில் Signature Confirmation குறித்து நீங்கள் மேலும் அறிந்துகொள்ளலாம்.
USPS மூலம் ஷிப்பிங் செய்யப்படும் தேதி
உங்கள் ஆர்டருக்கான ஷிப்பிங் தேதியை நீங்கள் அமைக்கலாம். நீங்கள் தேர்ந்தெடுக்கும் தேதி ஷிப்பிங் லேபிளில் அச்சிடப்படும்.
இலவச USPS ஷிப்பிங் சப்ளைகளை ஆர்டர் செய்தல்
நீங்கள் நேரடியாக USPS-லிருந்து இலவச ஷிப்பிங் சப்ளைகளை ஆர்டர் செய்யலாம். சப்ளைகளைப் பெற, நீங்கள் இலவச USPS கணக்கிற்குப் பதிவுசெய்ய வேண்டும்.
USPS கியூபிக் விலை நிர்ணயம்
Priority Mail மற்றும் Ground Advantage ஷிப்பிங் சேவைகளில் பேக்கேஜ்கள், உறைகள் மற்றும் மென்மையான பேக்குகளுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட கட்டணங்களை USPS வழங்குகிறது. எடைக் கற்கள் அல்லது காபி கொட்டைகள் போன்ற சிறிய மற்றும் கனமான தயாரிப்புகளை நீங்கள் வழக்கமாக அனுப்பினால், கியூபிக் விலை நிர்ணயத்தைப் பயன்படுத்துவதைக் கருத்தில் கொள்ளவும்.
USPS கியூபிக் விலை நிர்ணயத்திற்கான அதிகபட்ச ஷிப்மென்ட் அளவின் மதிப்புகள் குறித்து மேலும் அறிய, பின்வரும் அட்டவணையை மதிப்பாய்வு செய்யவும்:
| ஷிப்பிங் சேவை | பரிமாணங்கள் மற்றும் எடை |
|---|---|
| USPS Priority Mail |
|
| USPS Ground Advantage |
|
USPS கியூபிக் விலை நிர்ணயத்தைக் கணக்கிடுதல்
பேக்கேஜ்கள், மென்மையான பேக்குகள் மற்றும் பேட் செய்யப்பட்ட உறைகளுக்கு தனித்தனி கியூபிக் விலை நிர்ணயங்களை USPS வழங்குகிறது. ஒரு உறை தனது தட்டையான வடிவத்தைத் தக்கவைக்கும் வரை, நீங்கள் சிறிய பெட்டிகளை அதில் சேர்க்கலாம். விரியக்கூடிய உறைகள், உறைக்கான விலை நிர்ணயத்திற்குத் தகுதிபெறாது, எனவே அவற்றுக்குப் பேக்கேஜ்களுக்கான கியூபிக் விலை நிர்ணயத்தையே பயன்படுத்த வேண்டும்.
உங்கள் ஷிப்மென்ட்டின் கனஅளவைக் கணக்கிடுவது எப்படி என்பதை அறிய, பின்வரும் அட்டவணையை மதிப்பாய்வு செய்யவும்:
| ஷிப்மென்ட் வகை | சூத்திரம் | உதாரணம் |
|---|---|---|
| பேக்கேஜ் | நீளம் (அங்குலங்களில்) x அகலம் (அங்குலங்களில்) x உயரம் (அங்குலங்களில்) / 1728 = கன அடி | 14" x 8" x 5" / 1728 = 0.4 கன அடி |
| உறை அல்லது மென்மையான பேக் | நீளம் (அங்குலங்களில்) + அகலம் (அங்குலங்களில்) = பேக்கேஜின் மொத்த நீளம் | 14 + 8 = 22 |
USPS ஷிப்பிங் மேனிஃபெஸ்ட்கள்
நீங்கள் USPS-க்கு பல ஷிப்மென்ட்களை வழங்க வேண்டியிருந்தால், உங்களின் அனைத்து ஷிப்மென்ட்களையும் ஒரே பார்கோடில் இணைக்கும் ஷிப்பிங் மேனிஃபெஸ்ட்டை உருவாக்கலாம். இந்த ஷிப்பிங் மேனிஃபெஸ்ட்களை USPS Shipment Confirmation Acceptance Notice forms அல்லது SCAN படிவங்கள் என்றும் குறிப்பிடுகிறது.
மேனிஃபெஸ்ட்டை உருவாக்குவதன் மூலம், உங்கள் ஷிப்மென்ட்களைச் சேகரிக்க USPS வரும்போதோ அல்லது நீங்களே நேரில் சென்று ஷிப்மென்ட்களை வழங்கும்போதோ, ஒவ்வொரு ஷிப்மென்ட்டையும் தனித்தனியாக ஸ்கேன் செய்வதற்குப் பதிலாக, மேனிஃபெஸ்ட்டில் உள்ள ஒற்றைப் பார்கோடை ஸ்கேன் செய்து ஷிப்மென்ட்களை USPS-ஆல் ஏற்றுக்கொள்ள முடியும்.
மேனிஃபெஸ்ட்டில் உள்ள ஒவ்வொரு ஷிப்பிங் லேபிளும் ஒரே ஷிப்பிங் தோற்ற முகவரியையும், ஒரே ஷிப்பிங் தேதியையும் கொண்டிருக்க வேண்டும்.
USPS ஷிப்பிங் மேனிஃபெஸ்ட்களை உருவாக்குவதற்கான பரிசீலனைகள்
ஷிப்பிங் மேனிஃபெஸ்ட்களை உருவாக்கும்போது பின்வரும் பரிசீலனைகளை மதிப்பாய்வு செய்யவும்:
- மேனிஃபெஸ்ட்டில் உள்ள ஒவ்வொரு ஷிப்பிங் லேபிளும் ஒரே ஷிப்பிங் தோற்ற முகவரியையும், ஒரே ஷிப்பிங் தேதியையும் கொண்டிருக்க வேண்டும்.
- மேனிஃபெஸ்ட்டில் உள்ள சர்வதேச லேபிள்களுக்கான ஷிப்பிங் தேதிகள், அந்த லேபிள்களை வாங்கிய தேதியுடன் பொருந்த வேண்டும்.
- ஒரு ஷிப்பிங் மேனிஃபெஸ்ட்டில் லேபிளைச் சேர்த்துவிட்டால், சுமார் 15 நிமிடங்களுக்கு அதை ரத்துசெய்ய முடியாது. இந்த நேரம் கடந்த பிறகு, அந்த லேபிளை வெற்றிகரமாக ரத்துசெய்யலாம்.
- மேனிஃபெஸ்ட்டில் சேர்க்கப்பட்ட ஒரு ஷிப்பிங் லேபிளை நீங்கள் ரத்துசெய்தால், அந்த மேனிஃபெஸ்ட் செல்லாததாகிவிடும். அதன்பிறகு அந்த மேனிஃபெஸ்ட்டில் உள்ள மற்ற ஷிப்மென்ட்களை USPS மூலம் நீங்கள் தனித்தனியாக ஸ்கேன் செய்ய வேண்டியிருக்கும். ரத்துசெய்யப்பட்ட லேபிள்களைக் கொண்ட மேனிஃபெஸ்ட்டை நீங்கள் பயன்படுத்தினால், ரத்துசெய்யப்பட்ட லேபிள்களுக்கான கட்டணம் உங்களிடம் வசூலிக்கப்படும்.
- அதே நாளுக்கான மேனிஃபெஸ்ட்டில் ஷிப்பிங் லேபிள்களைச் சேர்க்க, உருப்படிகளை ஷிப்பிங் செய்யும் இடத்தின் உள்ளூர் நேரப்படி இரவு 9:00 மணிக்குள் அவற்றை நீங்கள் வாங்க வேண்டும்.
- கட்-ஆஃப் நேரத்திற்குப் பிறகு வாங்கிய லேபிள்களை அதே நாளுக்கான மேனிஃபெஸ்ட்டில் சேர்க்க முடியாது. நீங்கள் கட்-ஆஃப் நேரத்திற்குப் பிறகு லேபிள்களை வாங்கினால், அவற்றுக்கு அடுத்த நாள் தேதியிட்டு, அடுத்த நாளுக்கான மேனிஃபெஸ்ட்டில் அவற்றைச் சேர்க்கலாம்.
ஒரு USPS மேனிஃபெஸ்ட்டை உருவாக்கு
நீங்கள் Shipping Manifests செயலியைப் பயன்படுத்தி நேரடியாகச் செயலியில் அல்லது ஆர்டர்கள் பக்கத்தில் ஒரு மேனிஃபெஸ்ட்டை உருவாக்கலாம்.
நீங்கள் ஒரு மேனிஃபெஸ்ட்டை உருவாக்கும்போது, பின்வரும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் லேபிள்கள் சேர்க்கப்படும்:
- டிராக்கிங் வசதி லேபிளில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்
- மேனிஃபெஸ்ட்டை உருவாக்கும் அதே நாள்தான் ஷிப்பிங் தேதியாக இருக்க வேண்டும்
- லேபிள் வேறொரு மேனிஃபெஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருக்கக்கூடாது
பல மேனிஃபெஸ்ட்களால் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க, நீங்கள் ஷிப்மென்ட்களை வழங்குவதற்கு முன்பு அல்லது அவற்றைச் சேகரிக்க USPS வருவதற்கு முன்பு, நாளின் முடிவில் உங்கள் மேனிஃபெஸ்ட்டை உருவாக்குவது சிறந்தது.
படிகள்:
- பின்வரும் விருப்பங்களில் ஒன்றைப் பயன்படுத்தி புதிய மேனிஃபெஸ்ட்டை உருவாக்கவும்:
- செயலியிலிருந்து:
- உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, செயலிகள் > Shipping Manifests என்பதற்குச் செல்லவும்.
- மேனிஃபெஸ்ட்டை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
- ஆர்டர்கள் பக்கத்திலிருந்து:
- உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து ஆர்டர்கள் என்பதற்குச் செல்லவும்.
- மேலும் செயல்கள் > மேனிஃபெஸ்ட்களை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
- செயலியிலிருந்து:
- நிறைவேற்றும் இடத்தைத் தேர்ந்தெடுக்கவும். அந்த நிறைவேற்றும் இடத்திலிருந்து கிடைக்கும் அனைத்து ஷிப்பிங் லேபிள்களும் மேனிஃபெஸ்ட்டில் சேர்க்கப்படும்.
- மேனிஃபெஸ்ட்டை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
- மேனிஃபெஸ்ட்டை அச்சிடு என்பதைக் கிளிக் செய்யவும்.
USPS மேனிஃபெஸ்ட்டை மீண்டும் அச்சிடு
மேனிஃபெஸ்ட்டை உருவாக்கிய 6 மாதங்கள் வரை அதை நீங்கள் மீண்டும் அச்சிடலாம்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, செயலிகள் > Shipping Manifests என்பதற்குச் செல்லவும்.
மேனிஃபெஸ்ட்டைக் கிளிக் செய்யவும்.
மேனிஃபெஸ்ட்டை அச்சிடு என்பதைக் கிளிக் செய்யவும்.
USPS ஷிப்மென்ட்களுக்கான ஆதரவைப் பெறுதல்
உங்கள் USPS ஷிப்மென்ட் தொடர்பாக பேக்கேஜின் வழியை மாற்றுவது அல்லது உரிமைகோரலைச் சமர்ப்பிப்பது போன்ற உதவிகளைப் பெற, உங்கள் சிக்கலைப் பொறுத்து நேரடியாக Shopify ஆதரவையோ USPS-ஐயோ நீங்கள் தொடர்புகொள்ளலாம்.
USPS ஷிப்மென்ட்களில் சேர்க்கப்பட்டுள்ள காப்பீட்டுக் கவரேஜ்
ஷிப்பிங் காப்பீடு பொதுவாக சேதமடைந்த மற்றும் தொலைந்த உருப்படிகளுக்கும், தொலைந்த ஷிப்மென்ட்களுக்கும் கவரேஜ் வழங்கும். உங்கள் ஷிப்மென்ட்டிற்கு எவ்வளவு தொகை காப்பீடு செய்யப்பட்டுள்ளது என்பது நீங்கள் பயன்படுத்தும் ஷிப்பிங் சேவையைப் பொறுத்தது.
பின்வரும் ஷிப்பிங் சேவைகளுக்குப் பொறுப்புக் கவரேஜ் உள்ளது:
- Ground Advantage ($100 USD வரை)
- Priority Mail ($100 USD வரை)
- Priority Mail Express ($100 USD வரை)
- Priority Mail International ($200 USD வரை)
- Priority Mail Express International ($200 USD வரை)
நீங்கள் ஷிப்பிங் லேபிளை வாங்கும்போது மேலும் ஷிப்பிங் காப்பீட்டைச் சேர்க்கலாம்.
USPS ஷிப்மென்ட்டிற்கான ஷிப்பிங் கோரிக்கையைச் சமர்ப்பித்தல்
நீங்கள் Shopify வழியாக USPS ஐப் பயன்படுத்தி, உங்களின் USPS ஷிப்மென்ட் தொலைந்துபோனாலோ சேதமடைந்தாலோ, பேக்கேஜை ஷிப் செய்த 7 முதல் 60 நாட்களுக்குள் ஆன்லைனில் USPS-க்கு உங்கள் கோரிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். Shopify இல் ஷிப்பிங் லேபிளை வாங்கும் போது கூடுதல் ஷிப்பிங் காப்பீட்டையும் வாங்கினால், உங்களின் Shipsurance காப்பீட்டுக் கோரிக்கையை Shopify நிர்வாகியில் சமர்ப்பிக்கலாம்.
சில சமயங்களில் ஷிப்மென்ட்கள் தொலைந்துபோனாலோ தாமதமானாலோ, காப்பீட்டுக் கோரிக்கை இல்லாமலேயே பணத்தைத் திரும்பப்பெறுதலை USPS வழங்குகிறது. உள்நாட்டு ஷிப்மென்ட்கள் குறித்த கூடுதல் தகவல்களுக்கு, USPS இன் உள்நாட்டுப் பணத்தைத் திரும்பப்பெறுதல் பக்கத்தைப் பார்க்கவும். சர்வதேச ஷிப்மென்ட்கள் குறித்த கூடுதல் தகவல்களுக்கு, USPS இன் சர்வதேசப் பணத்தைத் திரும்பப்பெறுதல் பக்கத்தைப் பார்க்கவும்.
உங்கள் கோரிக்கை அங்கீகரிக்கப்பட்டால், USPS ஆன்லைன் கணக்கில் உள்ள முகவரிக்கு அஞ்சல் மூலம் காசோலையைப் பெறுவீர்கள்.
USPS ஷிப்மென்ட்களை இடைமறித்தல்
டெலிவரிக்கு அனுப்பப்படாத அல்லது டெலிவரி செய்யப்படாத உங்கள் பேக்கேஜை USPS தடுத்து நிறுத்தலாம் அல்லது திசைதிருப்பலாம்.
உங்கள் பேக்கேஜை இடைமறிக்க முடியுமா என்பதை அறிய, Package Intercept பக்கத்தில் USPS தடமறிவதற்கான எண்ணை உள்ளிட்டுச் சரிபார்க்கலாம். பேக்கேஜை இடைமறிக்க முடிந்தால், உங்கள் ஷிப்மென்ட்டை மாற்றுவதற்கான கோரிக்கையைச் சமர்ப்பிப்பது குறித்து அறிய, USPS இடைமறிப்பு வழிமுறைகளைப் பார்க்கவும்.
USPS ஷிப்மென்ட்களுக்கான ஆதரவைக் கோருதல்
நீங்கள் Shopify வழியாக USPS-ஐப் பயன்படுத்தும்போது உதவி தேவைப்பட்டால், யாரைத் தொடர்புகொள்வது என்பதை அறிய பின்வரும் அட்டவணையைப் பார்க்கவும்.
| சூழ்நிலை | தொடர்புகொள்ள |
|---|---|
| லேபிளை வாங்கும் முன் உதவி பெற. | Shopify ஆதரவு |
| USPS லேபிளை வாங்கிய பிறகு பேக்கேஜின் வழியை மாற்றுதல் போன்ற உதவி பெற. | 1-800-275-8777 திங்கள் - வெள்ளி காலை 8:00 - இரவு 8:30 ET சனி காலை 8:00 - மாலை 6:00 ET TDD/TTY ரிலே: 1-800-877-8339 ஐ அழைக்கவும். 1-800-275-8777 ஐக் கேட்கவும். |
| USPS கோரிக்கையைச் சமர்ப்பிக்க. | Shopify நிர்வாகி மூலம் USPS-க்கு ஷிப்பிங் கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும் |
| USPS ஷிப்பிங் சரிசெய்தல் குறித்துப் புகாரளிக்க. | Shopify ஆதரவு |