உங்கள் ஷிப்பிங் லேபிள்களுக்கான ஷிப்பிங் காப்பீடு

அமெரிக்காவிலிருந்து ஆர்டர்களை அனுப்பி, ஷிப்பிங் லேபிள்களை வாங்குகிறீர்கள் எனில், அதிகபட்சமாக $5,000 USD காப்பீட்டுத் தொகையுள்ள ஷிப்பிங் காப்பீட்டை வாங்கி உங்கள் ஆர்டர்களைப் பாதுகாக்கலாம். ஷிப்பிங் காப்பீடு உங்கள் ஷிப்மென்ட்டுகளை இழப்பு, திருட்டு அல்லது சேதம் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கிறது.

ஷிப்பிங் லேபிள்களை வாங்கும்போது உங்கள் ஷிப்மென்ட்டுக்குக் காப்பீடு பெறலாம், அதோடு Shopify நிர்வாகியிலிருந்தே நேரடியாக உரிமைகோரல்களைச் சமர்ப்பிக்கலாம். Shopify மூலம் நீங்கள் வாங்கும் காப்பீட்டிற்கான நிர்வாகி Shipsurance ஆகும்.

தொலைந்த அல்லது சேதமடைந்த ஷிப்மென்ட்டுகளுக்காக ஷிப்பிங் கேரியர் உரிமைகோரல்களைத் தாக்கல் செய்வது பற்றிய தகவலுக்கு, ஷிப்பிங் கேரியர் உரிமைகோரல்களைப் பார்க்கவும்.

ஷிப்பிங் காப்பீட்டிற்கான தகுதி

ஷிப்பிங் காப்பீட்டைப் பெற நீங்கள் பின்வரும் தகுதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்:

ஒவ்வொரு தகுதிபெறும் லேபிளுக்கும் கட்டணமின்றி $200 USD வரையிலான ஷிப்பிங் காப்பீட்டைப் பெறுவதற்கு, நீங்கள் பின்வரும் நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்:

  • உங்கள் ஸ்டோரில் Shopify Payments செயல்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
  • Shopify-இல் வாங்கும் லேபிள்களுக்கான ஷிப்பிங் காப்பீட்டைப் பெற, உங்கள் ஸ்டோர் Grow, Advanced அல்லது Plus திட்டத்தில் இருக்க வேண்டும்.
  • Managed Markets மூலம் வாங்கப்படும் லேபிள்களுக்கான ஷிப்பிங் காப்பீட்டைப் பெற, உங்கள் ஸ்டோர் Grow, Advanced அல்லது Plus திட்டத்தில் இருக்க வேண்டும், மேலும் Managed Markets செயல்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

உள்ளடக்கப்பட்ட ஷிப்பிங் காப்பீடு

உங்களிடம் Shopify Payments செயல்படுத்தப்பட்டிருந்து, உங்கள் ஸ்டோர் Grow, Advanced அல்லது Plus திட்டத்தில் இருந்தால், Shopify-இல் நீங்கள் வாங்கும் தகுதிபெறும் ஒவ்வொரு லேபிளுக்கும் கூடுதல் செலவின்றி $200 USD வரையிலான ஷிப்பிங் காப்பீடு தானாகவே சேர்க்கப்படும்.

நீங்கள் Managed Markets ஐப் பயன்படுத்தும் அதேநேரம் உங்கள் ஸ்டோர் Grow, Advanced அல்லது Plus திட்டத்தில் இருந்தால், Managed Markets ஆர்டர்களுக்காக நீங்கள் வாங்கும் லேபிள்களிலும் கூடுதல் செலவின்றி $200 USD வரையிலான ஷிப்பிங் காப்பீடு சேர்க்கப்படும். நீங்கள் Managed Markets ஐப் பயன்படுத்தி, உங்கள் ஸ்டோர் Basic திட்டத்தில் இருந்தால், காப்பீடு சேர்க்கப்படாது, ஆனால் உங்கள் ஆர்டர்களுக்கான ஷிப்பிங் காப்பீட்டை நீங்கள் வாங்கலாம்.

உள்ளடக்கப்பட்டுள்ள ஷிப்பிங் காப்பீடு, வெவ்வேறு சேவைகளில் ஒன்றாகச் சேராது அல்லது ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படாது. ஒவ்வொரு தகுதிபெறும் ஷிப்மென்ட்டும் மொத்தம் $200 USD வரையிலான காப்பீட்டுத் தொகையைப் பெறும்.

நீங்கள் ஒரு ஷிப்பிங் லேபிளை வாங்கும்போது, சேர்க்கப்பட்டுள்ள ஷிப்பிங் காப்பீடு SHIPPING INSURANCE பிரிவில் காட்டப்படும். உங்கள் ஆர்டரின் மதிப்பு $200 USD-க்கு மேல் இருந்தால், ஷிப்மென்ட்டின் முழு மதிப்புக்கும் காப்பீடு வாங்கலாம் அல்லது தனிப்பயன் தொகையைச் சேர்க்கலாம்.

ஷிப்பிங் லேபிளில் காப்பீடு உள்ளடக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தவும்

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆர்டர்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. நீங்கள் ஷிப்பிங் லேபிள் வாங்க விரும்பும் ஆர்டரைக் கிளிக் செய்யவும்.
  3. நிறைவேற்றப்படாதவை பிரிவில், ஷிப்பிங் லேபிளை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. SHIPPING INSURANCE பிரிவில், ஷிப்பிங் காப்பீடு சேர்க்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தவும்.
  5. விருப்பத்தேர்வு: நீங்கள் கூடுதல் காப்பீட்டை வாங்க விரும்பினால், ஷிப்மென்ட்டின் முழு மதிப்புக்கும் காப்பீடு செய் அல்லது தனிப்பயன் தொகைக்குக் காப்பீடு செய் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். ஷிப்பிங் காப்பீட்டுப் பிரீமியம் கட்டணங்கள் பற்றி மேலும் அறிக.

ஷிப்பிங் காப்பீட்டை வாங்குதல்

உள்ளடக்கப்பட்ட ஷிப்பிங் காப்பீட்டைப் பெற உங்களுக்குத் தகுதியில்லை எனில், உங்கள் ஷிப்மென்ட்டில் சேர்க்க விரும்பும் ஷிப்பிங் காப்பீட்டுத் தொகையை SHIPPING INSURANCE பிரிவில் உள்ளிடலாம். ஷிப்பிங் காப்பீட்டை வாங்கும் முன், பின்வரும் கவனிக்க வேண்டிய விஷயங்களை மதிப்பாய்வு செய்யவும்:

  • நீங்கள் $100 USD மடங்குகளில் ஷிப்பிங் காப்பீட்டை வாங்கலாம். எடுத்துக்காட்டாக, நீங்கள் மொத்தம் $250 USD மதிப்புள்ள உங்கள் உருப்படிகளுக்குக் காப்பீடு செய்ய விரும்புகிறீர்கள், மேலும் $20.50 USD செலவாகும் சர்வதேச ஷிப்பிங்கைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், உங்கள் ஷிப்பிங் லேபிளில் $270.50 USD-க்கான காப்பீட்டைச் சேர்க்கலாம். காப்பீட்டுப் பிரீமியத்தின் செலவு $1.29 USD x 3 (ஒவ்வொரு $100 USD காப்பீட்டிற்கும்) ஆகும், ஆக மொத்தம் $3.87 USD.
  • Shopify நிர்வாகியில் உள்ள பில்லிங் பக்கத்தில் உங்கள் ஷிப்பிங் காப்பீடு மற்றும் ஷிப்பிங் லேபிள் கட்டணங்கள் தனித்தனியாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.
  • லேபிள் வாங்கிய 30 நாட்களுக்குள் பயன்படுத்தப்படாத ஷிப்பிங் லேபிளைச் செல்லாததாக்குவதன் மூலம் ஷிப்பிங் காப்பீட்டை உங்களால் ரத்துசெய்ய முடியும். காப்பீட்டை ரத்துசெய்த பிறகு, உங்களால் கிளைமைச் சமர்ப்பிக்க முடியாது, மேலும் ஷிப்பிங் காப்பீட்டுப் பிரீமியம் கிரெடிட் உங்களுக்குக் கிடைக்கும். இந்தக் கிரெடிட்டை எதிர்கால ஷிப்பிங் காப்பீட்டுக் கொள்முதல்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.
  • USPS First Class Mail ஷிப்பிங் சேவை காப்பீட்டுக்குத் தகுதியற்றது.
  • போர்ட்டோ ரிக்கோவில் உள்ள இலக்குகளுக்கு UPS சேவைகளைப் பயன்படுத்தி அனுப்பப்படும் ஷிப்மென்ட்கள் காப்பீட்டுக்குத் தகுதியற்றவை.

ஷிப்பிங் காப்பீட்டுப் பிரீமியம் கட்டணங்கள்

காப்பீட்டுப் பிரீமியம் கட்டணங்கள் குறித்து அறிய பின்வரும் அட்டவணையை மதிப்பாய்வு செய்யவும்:

காப்பீட்டுப் பிரீமியம் கட்டணங்கள்
ஷிப்மென்ட் வகைகாப்பீட்டுக் கட்டணம்
உள்நாட்டு ஷிப்மென்ட்கள்$100 USD காப்பீட்டுத் தொகைக்கு $0.89 USD
சர்வதேச ஷிப்மென்ட்கள்$100 USD காப்பீட்டுத் தொகைக்கு $1.29 USD

ஷிப்பிங் காப்பீட்டைக் கொள்முதல் செய்தல்

  1. உங்கள் Shopify நிர்வாகியில், ஆர்டர்கள் என்பதற்குச் செல்லவும்.

  2. நீங்கள் ஷிப்பிங் லேபிள் வாங்க விரும்பும் ஆர்டரைக் கிளிக் செய்யவும்.

  3. நிறைவேற்றப்படாதவை பிரிவில், ஷிப்பிங் லேபிளை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. ஷிப்பிங் காப்பீடு (SHIPPING INSURANCE) பிரிவில், காப்பீட்டுத் தொகையை உள்ளிடவும்.

ஷிப்பிங் காப்பீட்டுக்கான கிளைமைச் சமர்ப்பித்தல்

தொலைந்துபோன, சேதமடைந்த மற்றும் திருடப்பட்ட ஷிப்மென்ட்களுக்கான ஷிப்பிங் காப்பீட்டுக் கிளைமை நேரடியாக உங்கள் Shopify நிர்வாகியில் சமர்ப்பிக்கலாம். ஷிப்பிங் காப்பீட்டுக் கிளைமைச் சமர்ப்பிக்கும் முன், பின்வருவனவற்றைக் கருத்தில் கொள்ளவும்:

  • கேரியரால் வழங்கப்படும் காப்பீட்டையும் உள்ளடக்கிய ஷிப்பிங் லேபிளுக்காக ஷிப்பிங் காப்பீடு வாங்கப்பட்டிருந்தால் அல்லது சேர்க்கப்பட்டிருந்தால், தொலைந்துபோன, சேதமடைந்த அல்லது திருடப்பட்ட ஷிப்மென்ட்களுக்கான எந்தவொரு கிளைமும் Shipsurance இல் தாக்கல் செய்யப்பட வேண்டுமே தவிர கேரியரிடம் அல்ல.
  • ஷிப்பிங் லேபிளுக்காகச் சேர்க்கப்பட்ட அல்லது தனியாக வாங்கப்பட்ட கூடுதல் ஷிப்பிங் காப்பீடானது, கேரியரால் வழங்கப்படும் காப்பீட்டுடன் சேராது அல்லது ஒன்றிணையாது.
  • பெரும்பாலான ஷிப்மென்ட்களுக்கு, ஆர்டர் அனுப்பப்பட்ட 24 மணிநேரத்திற்குப் பிறகும், அனுப்பப்பட்ட நாளிலிருந்து 120 நாட்கள் வரையிலும் நீங்கள் காப்பீட்டுக் கிளைமைச் சமர்ப்பிக்கலாம்.

கிளைமைச் சமர்ப்பித்தல்

டெஸ்க்டாப்
  1. உங்கள் Shopify நிர்வாகியில், ஆர்டர்கள் என்பதற்குச் செல்லவும்.

  2. காப்பீட்டுக் கிளைமைச் சமர்ப்பிக்க வேண்டிய ஆர்டரைக் கிளிக் செய்யவும்.

  3. … பொத்தானைக் கிளிக் செய்துவிட்டு, கிளைமைத் தாக்கல் செய் என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. கிளைம் விவரங்கள் பிரிவில், பின்வரும் தகவலைத் தேர்ந்தெடுக்கவும்:

    • கிளைம் வகை
    • உங்கள் சேதமடைந்த அல்லது தொலைந்த பேக்கேஜ் கண்டறியப்பட்ட தேதி
    • கிளைம் காரணம்
  5. கிளைம் தொகை பிரிவில், நீங்கள் கிளைம் செய்ய விரும்பும் தொகையை உள்ளிடவும். நீங்கள் பணம் செலுத்தியுள்ள காப்பீட்டுத் தொகையை விட அதிகத் தொகையைக் கிளைம் செய்ய முடியாது.

  6. பேஅவுட் விவரங்கள் என்பதில், Shipsurance இலிருந்து காப்பீட்டு பேஅவுட்டை எவ்வாறு பெற விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்து, உங்கள் பேஅவுட் வகையைப் பொறுத்து உங்களின் தொடர்பு அல்லது முகவரி விவரங்களைச் சேர்க்கவும்.

  7. தொடர்புத் தகவல் பிரிவில், உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். உங்கள் கிளைம் குறித்துக் கூடுதல் தகவல் தேவைப்பட்டால், Shipsurance உங்களைத் தொடர்புகொள்ள இந்த மின்னஞ்சல் முகவரியையே பயன்படுத்தும்.

  8. மேலேயுள்ள பொறுப்புத்துறப்பைப் படித்துப் புரிந்துகொண்டேன் என்பதைத் தேர்ந்தெடுத்து, கிளைமைத் தாக்கல் செய் என்பதைக் கிளிக் செய்யவும்.

மொபைல்
  1. Shopify செயலியில் இருந்து, ஆர்டர்கள் ஐகானைத் தட்டவும் .
  2. காப்பீட்டுக் கிளைமைச் சமர்ப்பிக்க வேண்டிய ஆர்டரைத் தட்டவும்.
  3. … அல்லது ⋮ என்பதைத் தட்டி, கிளைமைத் தாக்கல் செய் என்பதைத் தட்டவும்.
  4. ​ கிளைம் விவரங்கள் பிரிவில், பின்வரும் தகவலைத் தேர்ந்தெடுக்கவும்:
    • கிளைம் வகை
    • உங்கள் சேதமடைந்த அல்லது தொலைந்த பேக்கேஜ் கண்டறியப்பட்ட தேதி
    • கிளைம் காரணம்
  5. கிளைம் தொகை பிரிவில், நீங்கள் கிளைம் செய்ய விரும்பும் தொகையை உள்ளிடவும். நீங்கள் பணம் செலுத்தியுள்ள காப்பீட்டுத் தொகையை விட அதிகத் தொகையைக் கிளைம் செய்ய முடியாது.
  6. பேஅவுட் விவரங்கள் என்பதில், Shipsurance இலிருந்து காப்பீட்டு பேஅவுட்டை எவ்வாறு பெற விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்து, உங்கள் பேஅவுட் வகையைப் பொறுத்து உங்களின் தொடர்பு அல்லது முகவரி விவரங்களைச் சேர்க்கவும்.
  7. தொடர்புத் தகவல் பிரிவில், உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். உங்கள் கிளைம் குறித்துக் கூடுதல் தகவல் தேவைப்பட்டால், Shipsurance உங்களைத் தொடர்புகொள்ள இந்த மின்னஞ்சல் முகவரியையே பயன்படுத்தும்.
  8. மேலேயுள்ள பொறுப்புத்துறப்பைப் படித்துப் புரிந்துகொண்டேன் என்பதைத் தேர்ந்தெடுத்து, கிளைமைத் தாக்கல் செய் என்பதைத் தட்டவும்.

கிளைமைச் சமர்ப்பித்த பிறகு, கிளைம் ID மற்றும் Shipsurance காப்பீட்டுப் போர்ட்டலை அணுகுவதற்கான இணைப்புடன் கூடிய மின்னஞ்சலைப் பெறுவீர்கள். உங்களின் கிளைம் நிலையைச் சரிபார்க்க, அந்த இணைப்பைக் கிளிக் செய்யலாம். ஆர்டரில் உள்ள கிளைம் தகவலைக் கிளிக் செய்வதன் மூலமும் உங்களால் நிலையைச் சரிபார்க்க முடியும்.

திறந்திருக்கும் கிளைமுக்கான ஆதரவைப் பெறுதல்

காப்பீட்டுக் கிளைம்களை Shopify ஆதரிக்காது. நீங்கள் ஷிப்பிங் காப்பீட்டை வாங்கியிருந்து, உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், நீங்கள் நேரடியாக Shipsurance ஆதரவைத் தொடர்புகொள்ள வேண்டும்:

  • shopifyclaims@shipsurance.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் மூலம்
  • 1-866-852-9956 என்ற எண்ணுக்கு அழைப்பதன் மூலம்