உங்கள் சொந்த ஆர்டர்களைத் தனித்தனியாக நிறைவேற்றுதல்

உங்கள் Shopify நிர்வாகியில் உங்கள் சொந்த ஆர்டர்களைத் தனித்தனியாக நிறைவேற்றலாம். ஒரு ஆர்டரை நிறைவேற்றிய பிறகு, உங்கள் உருப்படிகளைப் பேக் செய்து, உங்கள் பேக்கேஜில் ஷிப்பிங் லேபிளை இணைக்க வேண்டும். நீங்கள் பயன்படுத்தும் ஷிப்பிங் கேரியரைப் பொறுத்து உள்ளூர் அஞ்சலகம் அல்லது டிராப்-ஆஃப் இருப்பிடத்தில் உங்கள் பேக்கேஜை வழங்கலாம். ஆன்லைனில் கேரியர் பிக்அப்பைத் திட்டமிடவும் நீங்கள் தேர்வுசெய்யலாம், இதன் மூலம் ஒரு ஷிப்பிங் கேரியர் உங்களிடம் வந்து உங்கள் பேக்கேஜைப் பெற்றுச் செல்வார்.

ஆர்டர்களை நிறைவேற்றுவதற்கு முன்பு, உங்கள் Shopify நிர்வாகியில் ஆர்டர் நிறைவேற்றத்தை அமைப்பதை உறுதிசெய்யவும்.

உங்கள் சொந்த ஆர்டர்களைத் தனித்தனியாக நிறைவேற்றுவதற்கான பரிசீலனைகள்

உங்கள் சொந்த ஆர்டர்களைத் தனித்தனியாக நிறைவேற்றுவதற்கு முன்பு, பின்வரும் பரிசீலனைகளை மதிப்பாய்வு செய்யவும்.

உங்கள் சொந்த ஆர்டர்களை நிறைவேற்றுவதற்கான வரம்புகள்

  • ஆர்டருக்கு ஷிப்பிங் முகவரி இல்லையென்றால், நீங்கள் ஒரு ஆர்டரில் தடமறிவதற்கான எண்ணைச் சேர்க்க முடியாது.
  • Shopify மொபைல் செயலியின் மூலம் நிறைவேற்றத்தைப் பிரிக்கவோ ஒன்றிணைக்கவோ முடியாது. நீங்கள் ஒரு டெஸ்க்டாப் சாதனத்தை அல்லது மொபைல் சாதனத்தில் Shopify வெப் பதிப்பைப் பயன்படுத்த வேண்டும்.
  • ஒரு ஆர்டரில் உள்ள ஒவ்வொரு நிறைவேற்றமும் தனித்தனியாக நிறைவேற்றப்படும், எனவே பல நிறைவேற்றங்களைக் கொண்ட ஒரு ஆர்டருக்காக வாடிக்கையாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட ஷிப்பிங் உறுதிப்படுத்தல் மின்னஞ்சல்களைப் பெறலாம்.

மேனுவல் மற்றும் மொத்த ஆர்டர் நிறைவேற்றம்

  • உங்கள் சொந்த ஆர்டர்களை மேனுவலாக நிறைவேற்ற அல்லது ஆர்டரின் ஒரு பகுதியை மேனுவலாக நிறைவேற்ற, தானியங்கு ஆர்டர் நிறைவேற்றம் முடக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்யவும். உங்கள் Shopify நிர்வாகியின் அமைப்புகள் > பொது > ஆர்டர் செயலாக்கம் பிரிவில், உங்களின் ஆர்டர் நிறைவேற்ற அமைப்புகளைச் சரிபார்க்கலாம்.
  • உங்கள் சொந்த ஆர்டர்களை மொத்தமாக நிறைவேற்றுவது குறித்து அறிய, உங்கள் சொந்த ஆர்டர்களை மொத்தமாக நிறைவேற்றுதல் என்பதைப் பார்க்கவும்.

நிறைவேற்ற நிலை மாற்றங்கள்

  • நிறுத்திவைக்கப்பட்டுள்ள ஆர்டர்கள் அல்லது நிறைவேற்றங்களின் நிலையை மாற்ற முடியாது. ஆர்டர் அல்லது நிறைவேற்றத்தை நிறைவேற்றப்பட்டதாகவோ செயல்பாட்டில் உள்ளதாகவோ குறிப்பதற்கு முன், நிறுத்திவைக்கப்பட்ட அனைத்தையும் விடுவிக்கவும்.
  • நீங்கள் அமைக்க முயலும் நிலையில் ஏற்கனவே உள்ள ஆர்டர்கள் அல்லது நிறைவேற்றங்களை மாற்ற முடியாது. எடுத்துக்காட்டாக, நிறைவேற்றப்பட்ட ஆர்டர்களை மீண்டும் நிறைவேற்றப்பட்டதாகக் குறிக்க முடியாது மற்றும் செயல்பாட்டில் உள்ள ஆர்டர்களை மீண்டும் செயல்பாட்டில் உள்ளதாகக் குறிக்க முடியாது.
  • எதிர்கால நிறைவேற்றத்திற்காகத் திட்டமிடப்பட்ட ஆர்டர்கள் அல்லது நிறைவேற்றங்களின் நிலையை மாற்ற முடியாது. இந்த ஆர்டர்களை முன்கூட்டியே நிறைவேற்ற, தனிப்பட்ட ஆர்டர் விவரங்கள் பக்கத்திற்குச் சென்று நிறைவேற்றத் தேதியை மாற்றவும்.
  • ஸ்டோரில் பிக்அப் அல்லது உள்ளூர் டெலிவரிக்கான ஆர்டர்கள் அல்லது நிறைவேற்றங்களைச் செயல்பாட்டில் உள்ளதாகக் குறிக்க முடியாது.
  • மூன்றாம் தரப்பு நிறைவேற்றச் சேவைக்கு ஆர்டர் ஒதுக்கப்பட்டிருந்தால், நீங்கள் அதை நிறைவேற்றப்பட்டதாகவோ அல்லது செயல்பாட்டில் உள்ளதாகவோ கைமுறையாகக் குறிக்க முடியாது. நிறைவேற்றச் சேவையானது நிலையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும், மேலும் அவர்கள் உங்கள் நிறைவேற்றக் கோரிக்கையை ஏற்கும் போது ஆர்டரை தானாகவே செயல்பாட்டில் உள்ளதாகக் குறிக்கும்.
  • சில ஷிப்பிங் நிறைவேற்றங்களில் மட்டுமே ஒரு ஆர்டரை டெலிவரி செய்யப்பட்டதாக உங்களால் குறிக்க முடியும். Shopify இல் அதன் ஷிப்பிங் லேபிளை நீங்கள் வாங்கியிருந்தாலோ அல்லது அதன் டெலிவரி நிலை கேரியர் மூலம் கண்காணிக்கப்பட்டாலோ ஒரு நிறைவேற்றத்தை டெலிவரி செய்யப்பட்டதாக உங்களால் குறிக்க முடியாது.
  • ஷிப்பிங் லேபிள்களை வாங்க நீங்கள் ஷிப்பிங் லேபிள்களைப் பயன்படுத்தினால், நீங்கள் லேபிளைக் கொள்முதல் செய்து அச்சிட்ட பிறகு, உங்கள் Shopify நிர்வாகியில் உங்கள் ஆர்டர் நிறைவேற்றப்பட்டதாகக் குறிக்கப்படும்.

ஆர்டரை நிறைவேற்றப்பட்டதாகக் குறி

உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து ஒரு ஆர்டரை நீங்கள் நிறைவேற்றலாம். நிறைவேற்றும் செயல்முறையின் போது அல்லது ஆர்டரை நிறைவேற்றிய பிறகு, தடமறிவதற்கான எண்ணை நீங்கள் சேர்க்கலாம். ஷிப்பிங் உறுதிப்படுத்தல் மின்னஞ்சல் மற்றும் ஷிப்பிங் அறிவிப்பு மின்னஞ்சல்களில் தடமறிவதற்கான எண் காட்டப்படும். ஆர்டரை நீங்கள் நிறைவேற்றிய பிறகு, ஆர்டர் நிறைவேற்ற நிலை நிறைவேற்றப்பட்டது என மாறும்.

ஒரு ஆர்டரில் உள்ள அனைத்து உருப்படிகளையும் ஒன்றாக நிறைவேற்ற முடிந்தால், அவை ஒரே நிறைவேற்றப்படாத பிரிவில் குழுவாக்கப்படும். அவற்றை ஒன்றாக நிறைவேற்ற முடியாவிட்டால், ஆர்டர் பல நிறைவேற்றப்படாத பிரிவுகளாகப் பிரிக்கப்படும், இவை நிறைவேற்றங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன, மேலும் நீங்கள் ஒவ்வொரு நிறைவேற்றத்தையும் தனித்தனியாக நிறைவேற்ற வேண்டும். பின்வரும் உருப்படிகளில் ஏதேனும் ஒன்று உள்ளபோது ஆர்டர் பிரிக்கப்படும்:

ஒவ்வொரு நிறைவேற்றத்திலும் உள்ள உருப்படிகள் இடம் மற்றும் விநியோக முறையின் அடிப்படையில் குழுவாக்கப்படுகின்றன, எனவே எந்தெந்த உருப்படிகளை அனுப்ப வேண்டும், எந்தெந்த உருப்படிகளை உங்கள் வாடிக்கையாளர் நேரில் பெறுகிறார் என்பதை நீங்கள் அறியலாம்.

ஆர்டரை நிறைவேற்றுவதற்கான முன்னுரிமை வரிசையைக் குறிப்பிட, நீங்கள் இட முன்னுரிமைகளை அமைக்கலாம்.

படிகள்:

டெஸ்க்டாப்
  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆர்டர்கள் பகுதிக்குச் செல்லவும்.

  2. நீங்கள் நிறைவேற்ற விரும்பும் ஆர்டரைக் கிளிக் செய்யவும்.

  3. விருப்பத்திற்குரியது: நீங்கள் பல இருப்பிடங்களைப் பயன்படுத்தி, நிறைவேற்றும் இடத்தையும மாற்ற வேண்டியிருந்தால், நிறைவேற்றும் இடத்தையே நீங்கள் மாற்றலாம்.

  4. நீங்கள் உருப்படிகளை நிறைவேற்ற விரும்பும் நிறைவேற்றப்படாத அல்லது செயல்பாட்டில் உள்ள பிரிவில், நிறைவேற்றப்பட்டதாகக் குறி என்பதைக் கிளிக் செய்யவும்.

  5. விருப்பத்திற்குரியது: தடமறிவதற்கான எண் புலத்தில், உங்கள் ஷிப்பிங் வழங்குநரிடமிருந்து தடமறிவதற்கான எண்ணைச் சேர்க்கவும். Shopify அந்தத் தடமறிவதற்கான எண்ணின் வடிவமைப்பை அடையாளம் கண்டு உங்களுக்காக ஒரு ஷிப்பிங் கேரியரைத் தேர்ந்தெடுக்கலாம்.

  6. விருப்பத்திற்குரியது: ஷிப்பிங் கேரியர் தானாகவே தேர்ந்தெடுக்கப்படாவிட்டால் அல்லது தவறான ஷிப்பிங் கேரியர் தேர்ந்தெடுக்கப்பட்டால், ஷிப்பிங் கேரியர் கீழ்தோன்றும் மெனுவிலிருந்து ஒரு ஷிப்பிங் கேரியரைத் தேர்ந்தெடுக்கவும்.

  7. விருப்பத்திற்குரியது: ஆர்டரை நிறைவேற்றிய பிறகு உங்கள் வாடிக்கையாளருக்கு ஷிப்பிங் உறுதிப்படுத்தல் மின்னஞ்சலை அனுப்ப, வாடிக்கையாளருக்கு ஓர் அறிவிப்பை அனுப்பு என்பதைத் தேர்ந்தெடுக்கவும். வாடிக்கையாளரின் மின்னஞ்சல் முகவரி உங்களிடம் இருக்கும்போது மட்டுமே இந்த விருப்பம் கிடைக்கும்.

  8. ஆர்டரை நிறைவேற்றப்பட்டதாகக் குறிக்க நிறைவேற்றப்பட்டதாகக் குறி என்பதைக் கிளிக் செய்யவும்.

மொபைல்
  1. Shopify செயலியில், ஆர்டர்கள் ஐகானைத் தட்டவும் .
  2. நீங்கள் நிறைவேற்ற விரும்பும் ஆர்டரைத் தட்டவும்.
  3. விருப்பத்திற்குரியது: நீங்கள் பல இருப்பிடங்களைப் பயன்படுத்தி, நிறைவேற்றும் இடத்தையும மாற்ற வேண்டியிருந்தால், நிறைவேற்றும் இடத்தையே நீங்கள் மாற்றலாம்.
  4. நீங்கள் உருப்படிகளை நிறைவேற்ற விரும்பும் நிறைவேற்றப்படாத அல்லது செயல்பாட்டில் உள்ள பிரிவில், நிறைவேற்றப்பட்டதாகக் குறி என்பதைத் தட்டவும்.
  5. விருப்பத்திற்குரியது: தடமறிவதற்கான எண் புலத்தில், ஒரு தடமறிவதற்கான எண்ணைச் சேர்க்கவும் அல்லது உங்கள் ஷிப்பிங் வழங்குநரிடமிருந்து ஒரு பார்கோடை ஸ்கேன் செய்யவும். Shopify அந்தத் தடமறிவதற்கான எண்ணின் வடிவமைப்பை அடையாளம் கண்டு உங்களுக்காக ஒரு ஷிப்பிங் கேரியரைத் தேர்ந்தெடுக்கலாம்.
  6. விருப்பத்திற்குரியது: ஷிப்பிங் கேரியர் தானாகவே தேர்ந்தெடுக்கப்படாவிட்டால் அல்லது தவறான ஷிப்பிங் கேரியர் தேர்ந்தெடுக்கப்பட்டால், ஷிப்பிங் கேரியர் கீழ்தோன்றும் மெனுவிலிருந்து ஒரு ஷிப்பிங் கேரியரைத் தேர்ந்தெடுக்கவும்.
  7. விருப்பத்திற்குரியது: ஆர்டரை நிறைவேற்றிய பிறகு உங்கள் வாடிக்கையாளருக்கு ஷிப்பிங் உறுதிப்படுத்தல் மின்னஞ்சலை அனுப்ப, வாடிக்கையாளருக்கு ஓர் அறிவிப்பை அனுப்பு என்பதை இயக்கவும். வாடிக்கையாளரின் மின்னஞ்சல் முகவரி உங்களிடம் இருக்கும்போது மட்டுமே இந்த விருப்பம் கிடைக்கும்.
  8. ஆர்டரை நிறைவேற்றப்பட்டதாகக் குறிக்க நிறைவேற்றப்பட்டதாகக் குறி என்பதைத் தட்டவும்.

ஆர்டரின் ஒரு பகுதியை நிறைவேற்றப்பட்டதாகக் குறி

பின்வரும் காரணங்களுக்காக ஒரு ஆர்டரை பகுதி பகுதியாக நிறைவேற்றலாம்:

  • ஆர்டர் உங்களை வந்தடையும் முன்பே பிரிக்கப்பட்டிருந்தது. செக்அவுட் ஒரு ஆர்டரைப் பல நிறைவேற்றங்களாகப் பிரிக்கலாம், அதனால் உங்கள் Shopify நிர்வாகியில் ஒன்றுக்கும் மேற்பட்ட நிறைவேற்றப்படாத பிரிவுகளுடன் ஆர்டர் வந்து சேரும். உருப்படிகளை ஒன்றாக அனுப்ப முடியாமல் செக்அவுட் அவற்றைத் தனித்தனி ஷிப்மென்ட்டுகளாகப் பிரிக்கும் போதோ, ஒட்டுமொத்த ஆர்டரையும் எந்தவொரு தனி இடத்தாலும் நிறைவேற்ற முடியாத போதோ, அல்லது உங்கள் வாடிக்கையாளர் ஒரே ஆர்டரில் ஷிப்பிங் மற்றும் பிக்அப் என்பதைப் பயன்படுத்திச் சில உருப்படிகளுக்கு ஸ்டோரில் பிக்அப்பையும் மற்றவற்றிற்கு ஷிப்பிங்கையும் தேர்ந்தெடுக்கும் போதோ இது நிகழும். இந்தச் சூழ்நிலையில், ஆர்டரின் ஒரு பகுதியை நிறைவேற்றுவதைத் தவிர்க்க முடியாது. நீங்கள் முதலில் அவற்றில் சிலவற்றை ஒன்றிணைக்க முடியும் என்றாலும், நீங்கள் ஒவ்வொரு நிறைவேற்றத்தையும் தனித்தனியாக நிறைவேற்ற வேண்டும். நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு நிறைவேற்றத்திற்கும் தனித்தனியே தடமறிவதற்கான எண்ணைச் சேர்க்கலாம் மற்றும் தனி அறிவிப்பை அனுப்பலாம்.

  • ஆர்டரை நீங்களே பிரிக்கத் தேர்ந்தெடுக்கிறீர்கள். உதாரணமாக, ஆர்டரிலுள்ள ஒரு உருப்படி கையிருப்பில் இல்லை என்றாலோ முன்பதிவு உருப்படியாக இருந்தாலோ, ஒரு நிறைவேற்றத்தில் சில உருப்படிகளை மட்டும் நிறைவேற்றிவிட்டு மீதமுள்ள உருப்படிகளைத் தனியாக அனுப்பலாம். ஒரு நிறைவேற்றத்தின் பகுதியை நிறைவேற்றப் பின்வரும் படிகளைப் பயன்படுத்தவும்.

படிகள்:

டெஸ்க்டாப்

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆர்டர்கள் பகுதிக்குச் செல்லவும்.

  2. நீங்கள் நிறைவேற்ற விரும்பும் ஆர்டரைக் கிளிக் செய்யவும்.

  3. விருப்பத்திற்குரியது: நீங்கள் பல இருப்பிடங்களைப் பயன்படுத்தி, நிறைவேற்றும் இடத்தையும மாற்ற வேண்டியிருந்தால், நிறைவேற்றும் இடத்தையே நீங்கள் மாற்றலாம்.

  4. நீங்கள் உருப்படிகளை நிறைவேற்ற விரும்பும் நிறைவேற்றப்படாத அல்லது செயல்பாட்டில் உள்ள பிரிவில், நிறைவேற்றப்பட்டதாகக் குறி என்பதைக் கிளிக் செய்யவும்.

  5. நீங்கள் நிறைவேற்ற விரும்பும் உருப்படிகளின் அளவுகளை உள்ளிடவும்.

  6. விருப்பத்திற்குரியது: தடமறிவதற்கான எண் புலத்தில், உங்கள் ஷிப்பிங் வழங்குநரிடமிருந்து தடமறிவதற்கான எண்ணைச் சேர்க்கவும். Shopify அந்தத் தடமறிவதற்கான எண்ணின் வடிவமைப்பை அடையாளம் கண்டு உங்களுக்காக ஒரு ஷிப்பிங் கேரியரைத் தேர்ந்தெடுக்கலாம்.

  7. விருப்பத்திற்குரியது: ஷிப்பிங் கேரியர் தானாகவே தேர்ந்தெடுக்கப்படாவிட்டால் அல்லது தவறான ஷிப்பிங் கேரியர் தேர்ந்தெடுக்கப்பட்டால், ஷிப்பிங் கேரியர் கீழ்தோன்றும் மெனுவிலிருந்து ஒரு ஷிப்பிங் கேரியரைத் தேர்ந்தெடுக்கவும்.

  8. விருப்பத்திற்குரியது: ஆர்டரை நிறைவேற்றிய பிறகு உங்கள் வாடிக்கையாளருக்கு ஷிப்பிங் உறுதிப்படுத்தல் மின்னஞ்சலை அனுப்ப, வாடிக்கையாளருக்கு ஓர் அறிவிப்பை அனுப்பு என்பதைத் தேர்ந்தெடுக்கவும். வாடிக்கையாளரின் மின்னஞ்சல் முகவரி உங்களிடம் இருக்கும்போது மட்டுமே இந்த விருப்பம் கிடைக்கும்.

  9. ஆர்டரை நிறைவேற்றப்பட்டதாகக் குறிக்க நிறைவேற்றப்பட்டதாகக் குறி என்பதைக் கிளிக் செய்யவும்.

மொபைல்
  1. Shopify செயலியில், ஆர்டர்கள் ஐகானைத் தட்டவும் .
  2. நீங்கள் நிறைவேற்ற விரும்பும் ஆர்டரைத் தட்டவும்.
  3. விருப்பத்திற்குரியது: நீங்கள் பல இருப்பிடங்களைப் பயன்படுத்தி, நிறைவேற்றும் இடத்தையும மாற்ற வேண்டியிருந்தால், நிறைவேற்றும் இடத்தையே நீங்கள் மாற்றலாம்.
  4. நீங்கள் உருப்படிகளை நிறைவேற்ற விரும்பும் நிறைவேற்றப்படாத அல்லது செயல்பாட்டில் உள்ள பிரிவில், நிறைவேற்றப்பட்டதாகக் குறி என்பதைத் தட்டவும்.
  5. உருப்படிகள் பிரிவில், நீங்கள் நிறைவேற்ற விரும்பும் உருப்படிகளின் அளவுகளை உள்ளிடவும்.
  6. விருப்பத்திற்குரியது: தடமறிவதற்கான எண் புலத்தில், ஒரு தடமறிவதற்கான எண்ணைச் சேர்க்கவும் அல்லது உங்கள் ஷிப்பிங் வழங்குநரிடமிருந்து ஒரு பார்கோடை ஸ்கேன் செய்யவும். Shopify அந்தத் தடமறிவதற்கான எண்ணின் வடிவமைப்பை அடையாளம் கண்டு உங்களுக்காக ஒரு ஷிப்பிங் கேரியரைத் தேர்ந்தெடுக்கலாம்.
  7. விருப்பத்திற்குரியது: ஷிப்பிங் கேரியர் தானாகவே தேர்ந்தெடுக்கப்படாவிட்டால் அல்லது தவறான ஷிப்பிங் கேரியர் தேர்ந்தெடுக்கப்பட்டால், ஷிப்பிங் கேரியர் மெனுவிலிருந்து ஒரு ஷிப்பிங் கேரியரைத் தேர்ந்தெடுக்கவும்.
  8. விருப்பத்திற்குரியது: ஆர்டரை நிறைவேற்றிய பிறகு உங்கள் வாடிக்கையாளருக்கு ஷிப்பிங் உறுதிப்படுத்தல் மின்னஞ்சலை அனுப்ப, வாடிக்கையாளருக்கு ஓர் அறிவிப்பை அனுப்பு என்பதை இயக்கவும். வாடிக்கையாளரின் மின்னஞ்சல் முகவரி உங்களிடம் இருக்கும்போது மட்டுமே இந்த விருப்பம் கிடைக்கும்.
  9. ஆர்டரை நிறைவேற்றப்பட்டதாகக் குறிக்க நிறைவேற்றப்பட்டதாகக் குறி என்பதைத் தட்டவும்.

நிறைவேற்றப்பட்ட ஆர்டரில் தடமறிவதற்கான எண்ணைச் சேர்

ஆர்டரை நீங்கள் நிறைவேற்றிய பிறகு தடமறிவதற்கான எண்ணைப் பெற்றால், அந்த எண்ணைத் தொடர்ந்து உங்கள் ஆர்டரில் நீங்கள் சேர்க்கலாம். ஒரு ஆர்டரில் நீங்கள் பல தடமறிவதற்கான எண்களைச் சேர்க்க முடியும், அத்துடன் தடமறிவதற்கான எண்ணுடன் உங்கள் வாடிக்கையாளருக்கு ஓர் அறிவிப்பு மின்னஞ்சலையும் அனுப்பலாம்.

உங்கள் கேரியருக்கு Shopify முழுமையாக ஆதரவளிக்கவில்லை என்றால் அல்லது ஷிப்பிங் கேரியர் கீழ்தோன்றும் மெனுவிலிருந்து மற்றவை என்பதைத் தேர்ந்தெடுத்தால், நீங்கள் கைமுறையாகத் தடமறியும் URL-ஐ உள்ளிடலாம். கேரியரின் தடமறியும் பக்கத்துடன் இணைக்க, ஆர்டர் நிலை பக்கத்தில் இந்த URL பயன்படுத்தப்படும். ஷிப்மென்ட்டைத் தடமறிய உங்கள் கேரியர் வழங்கிய இலக்கங்கள் உட்பட முழுமையான URL-ஐ உள்ளிடுவதை உறுதிசெய்யவும்.

படிகள்:

டெஸ்க்டாப்
  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆர்டர்கள் பகுதிக்குச் செல்லவும்.

  2. நீங்கள் தடமறிவதற்கான எண்ணைச் சேர்க்க விரும்பும் ஆர்டரைக் கிளிக் செய்யவும்.

  3. தடமறிவதற்கான எண்ணை நீங்கள் சேர்க்க விரும்பும் நிறைவேற்றப்பட்டது பிரிவில், தடமறிதலைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. தடமறிவதற்கான எண் புலத்தில், உங்கள் ஷிப்பிங் வழங்குநரிடமிருந்து தடமறிவதற்கான எண்ணைச் சேர்க்கவும். Shopify அந்தத் தடமறிவதற்கான எண்ணின் வடிவமைப்பை அடையாளம் கண்டு உங்களுக்காக ஒரு ஷிப்பிங் கேரியரைத் தேர்ந்தெடுக்கலாம்.

  5. விருப்பத்திற்குரியது: ஷிப்பிங் கேரியர் தானாகவே தேர்ந்தெடுக்கப்படாவிட்டால் அல்லது தவறான ஷிப்பிங் கேரியர் தேர்ந்தெடுக்கப்பட்டால், ஷிப்பிங் கேரியர் கீழ்தோன்றும் மெனுவிலிருந்து ஒரு ஷிப்பிங் கேரியரைத் தேர்ந்தெடுக்கவும்.

  6. விருப்பத்திற்குரியது: உங்களிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட தடமறிவதற்கான எண்கள் இருந்தால், தடமறிவதற்கான மற்றொரு எண்ணைச் சேர் என்பதைக் கிளிக் செய்து தடமறிவதற்கான எண்ணை உள்ளிடவும். அனைத்துத் தடமறிவதற்கான எண்களும் ஒரே கேரியரைச் சேர்ந்தவையாக இருக்க வேண்டும்.

  7. விருப்பத்திற்குரியது: உங்கள் வாடிக்கையாளருக்கு ஷிப்பிங் அறிவிப்பினை அனுப்ப நீங்கள் விரும்பவில்லை எனில், வாடிக்கையாளருக்கு ஓர் அறிவிப்பை அனுப்பு என்பதைத் தேர்வுநீக்கவும்.

  8. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

மொபைல்
  1. Shopify செயலியில், ஆர்டர்கள் ஐகானைத் தட்டவும் .
  2. தடமறிவதற்கான எண்ணைச் சேர்க்க வேண்டிய ஆர்டரைத் தட்டவும்.
  3. தடமறிவதற்கான எண்ணைச் சேர்க்க வேண்டிய நிறைவேற்றப்பட்டது பிரிவில், தடமறிதலைச் சேர் என்பதைத் தட்டவும்.
  4. தடமறிவதற்கான எண் புலத்தில், தடமறிவதற்கான எண்ணைச் சேர்க்கவும் அல்லது உங்கள் ஷிப்பிங் வழங்குநரிடமிருந்து பார்கோடை ஸ்கேன் செய்யவும். தடமறிவதற்கான எண்ணின் வடிவமைப்பை Shopify கண்டறிந்து உங்களுக்கான ஷிப்பிங் கேரியரைத் தேர்ந்தெடுக்கலாம்
  5. விருப்பத்திற்குரியது: ஷிப்பிங் கேரியர் தானாகவே தேர்ந்தெடுக்கப்படாவிட்டால் அல்லது தவறான ஷிப்பிங் கேரியர் தேர்ந்தெடுக்கப்பட்டால், ஷிப்பிங் கேரியர் மெனுவிலிருந்து ஒரு ஷிப்பிங் கேரியரைத் தேர்ந்தெடுக்கவும்.
  6. விருப்பத்தேர்வு: உங்கள் வாடிக்கையாளருக்கு ஷிப்பிங் அறிவிப்பை அனுப்ப விரும்பவில்லை எனில், வாடிக்கையாளருக்கு அறிவிப்பை அனுப்பு என்பதைத் தேர்வகற்றவும்.
  7. சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்.

ஆர்டரை டெலிவரி செய்யப்பட்டதாகக் குறித்தல்

தடமறிவதற்கான எண் இல்லாமல் ஒரு ஆர்டரை நீங்கள் அனுப்பினால், உங்கள் வாடிக்கையாளர் அதைப் பெற்ற பிறகு அதை டெலிவரி செய்யப்பட்டதாக நீங்களே கைமுறையாகக் குறிக்கலாம். ஆர்டரை டெலிவரி செய்யப்பட்டதாகக் குறிப்பது வாடிக்கையாளரின் ஆர்டர் நிலை பக்கத்தையும் வாடிக்கையாளர் கணக்கையும் புதுப்பிக்கும், இதனால் உங்கள் வாடிக்கையாளர் தங்கள் ஆர்டர் வந்தடைந்ததை உறுதிப்படுத்த முடியும். ஆர்டரை டெலிவரி செய்யப்பட்டதாக நீங்கள் குறிக்கவில்லை என்றால், உங்கள் வாடிக்கையாளருக்கு அந்த ஆர்டர் டெலிவரி செய்யப்பட்டதாகக் காட்டப்படாது.

ஷிப்பிங் கேரியர் மூலம் டெலிவரி நிலையைக் கண்காணிக்க முடியாத ஷிப்பிங் நிறைவேற்றங்களில், டெலிவரி செய்யப்பட்டதாகக் குறி (Mark as delivered) பொத்தான் காட்டப்படும். பின்வரும் சந்தர்ப்பங்களில் இந்தப் பொத்தான் காட்டப்படாது:

  • நிறைவேற்றத்தின் டெலிவரி நிலை கேரியர் மூலம் கண்காணிக்கப்படுகிறது. எனவே கேரியரிடமிருந்தே இந்த நிலை பெறப்படும்.
  • Shopify இல் நீங்கள் ஷிப்பிங் லேபிளை வாங்கியுள்ளீர்கள்.
  • நிறைவேற்றம் ஏற்கனவே டெலிவரி செய்யப்பட்ட நிலையைக் கொண்டுள்ளது.

தடமறிவதற்கான எண்ணைச் சேர்ப்பதால் எப்போதும் பொத்தான் மறைக்கப்படுவதில்லை. சில கேரியர்கள் வாடிக்கையாளருக்குத் தெரியும் வகையிலான தடமறிதலுக்கு மட்டுமே ஆதரவளிக்கும், அதாவது ஷிப்பிங் அறிவிப்புகளில் உள்ள தடமறிவதற்கான இணைப்பை வழங்குமே தவிர, உங்கள் Shopify நிர்வாகியில் டெலிவரி நிலைத் தடமறிதலை வழங்காது. இதுபோன்ற கேரியர்களைக் கொண்ட நிறைவேற்றங்களில், தடமறிவதற்கான எண்ணை நீங்கள் சேர்த்த பிறகும் டெலிவரி செய்யப்பட்டதாகக் குறி (Mark as delivered) பொத்தான் காட்டப்படும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆர்டர்கள் பகுதிக்குச் செல்லவும்.

  2. டெலிவரி செய்யப்பட்டதாகக் குறிக்க வேண்டிய ஆர்டரைக் கிளிக் செய்யவும்.

  3. நிறைவேற்றப்பட்டது பிரிவில், டெலிவரி செய்யப்பட்டதாகக் குறி என்பதைக் கிளிக் செய்யவும்.

டெலிவரிச் சான்றுப் படங்களைப் பார்க்கவும்

FedEx போன்ற சில ஷிப்பிங் கேரியர்கள், பேக்கேஜை டெலிவரி செய்யும்போது அதனைப் புகைப்படம் எடுக்கும். ஒரு நிறைவேற்றத்திற்கான டெலிவரிப் புகைப்படத்தைக் கேரியர் வழங்கினால், ஆர்டரின் விவரப் பக்கத்தில் அந்தப் புகைப்படத்தை நீங்கள் பார்க்கலாம். டெலிவரிப் புகைப்படம் என்பது பேக்கேஜ் வந்து சேர்ந்ததற்கான சான்றாகும். வாடிக்கையாளர் தங்கள் ஆர்டர் வரவேயில்லை என்று கூறும்போது அல்லது ஒரு கட்டணத் திருப்பலுக்குப் பதிலளிக்கும்போது இது உங்களுக்கு உதவும்.

கேரியரிடமிருந்து பெறப்பட்ட டெலிவரி செய்யப்பட்ட நிலையைக் கொண்டுள்ள நிறைவேற்றங்களுக்கு மட்டுமே டெலிவரிப் புகைப்படங்கள் கிடைக்கும். கேரியர்கள் ஒவ்வொரு டெலிவரிக்கும் புகைப்படம் எடுக்க மாட்டார்கள் என்பதால், சில டெலிவரி செய்யப்பட்ட நிறைவேற்றங்களில் அவை இருக்காது. ஒரு நிறைவேற்றத்தில் டெலிவரிப் புகைப்படம் இல்லை எனில், டெலிவரிச் சான்றுப் புகைப்படங்கள் என்ற பிரிவு காட்டப்படாது. ஆர்டர்களில் உள்ள டெலிவரிப் புகைப்படங்கள் 90 நாட்கள் வரை காட்டப்படும்.

நீங்கள் Shopify Payments ஐப் பயன்படுத்தினால், சில கேரியர்களிடமிருந்து பெறப்படும் டெலிவரிப் புகைப்படங்கள் உங்கள் கட்டணத் திருப்பப் பதிலில் தானாகவே சேர்க்கப்படும். தானாகவே சேர்க்கப்படும் சான்று குறித்து மேலும் அறிக.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆர்டர்கள் பகுதிக்குச் செல்லவும்.

  2. எந்த ஆர்டருக்கான டெலிவரிப் புகைப்படங்களை நீங்கள் பார்க்க விரும்புகிறீர்களோ அந்த ஆர்டரைக் கிளிக் செய்யவும்.

  3. நிறைவேற்றப்பட்டது பிரிவில், டெலிவரிச் சான்றுப் புகைப்படங்கள் என்பதற்கு அடுத்துள்ள arrow down ஐகானைக் கிளிக் செய்யவும்.

  4. ஒரு புகைப்படத்தை முழு அளவில் பார்க்க, அதனைக் கிளிக் செய்யவும்.

  5. விருப்பத்தேர்வு: நிறைவேற்றத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இருந்தால், பிற புகைப்படங்களைப் பார்க்க முந்தைய அல்லது அடுத்த அம்புக்குறியைக் கிளிக் செய்யவும்.

ஆர்டரைச் செயலாக்கத்தில் உள்ளதாகக் குறித்தல்

ஆர்டரைத் தேர்ந்தெடுத்து பேக்கேஜ் செய்வது போன்ற நிறைவேற்றத்திற்காக ஆர்டரைத் தயார் செய்யத் தொடங்குவதற்கு, உங்கள் ஆர்டரைச் செயலாக்கத்தில் உள்ளதாகக் குறிக்கலாம். உங்கள் ஆர்டர்கள் செயலாக்கத்தில் இருக்கும்போது, உங்கள் பணிப்பாய்வைப் பாதுகாப்பதற்காக நிறைவேற்றப் பிழைகளை ஏற்படுத்தக்கூடிய குறிப்பிட்ட திருத்தங்கள் பூட்டப்படும். ஆர்டர் நிலை குறித்து உங்கள் குழுவினர் தெரிந்து கொள்ளக் குறிப்புகளையும் நீங்கள் சேர்க்கலாம். உங்களின் ஆர்டர் நிறைவேற்றத் தயாரானதும், அதை நிறைவேற்றப்பட்டதாகக் குறிக்கலாம்.

படிகள்:

டெஸ்க்டாப்
  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆர்டர்கள் பகுதிக்குச் செல்லவும்.

  2. செயலாக்கத்தில் உள்ளதாகக் குறிக்க வேண்டிய ஆர்டரைக் கிளிக் செய்யவும்.

  3. உருப்படிகளைச் செயலாக்கத்தில் உள்ளதாகக் குறிக்க வேண்டிய நிறைவேற்றப்படாதது பிரிவில், கீழ்தோன்றும் மெனு ஐகானைக் கிளிக் செய்து, பின்னர் செயலாக்கத்தில் உள்ளதாகக் குறி என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. விருப்பத்தேர்வு: உங்கள் குழுவிற்கு ஒரு குறிப்பைச் சேர்க்க, காலவரிசை பிரிவில், ஒரு கருத்தைச் சேர்த்து, பின்னர் பதிவிடு என்பதைக் கிளிக் செய்யவும்.

மொபைல்
  1. Shopify செயலியில், ஆர்டர்கள் ஐகானைத் தட்டவும் .
  2. செயலாக்கத்தில் உள்ளதாகக் குறிக்க வேண்டிய ஆர்டரைத் தட்டவும்.
  3. உருப்படிகளைச் செயலாக்கத்தில் உள்ளதாகக் குறிக்க வேண்டிய நிறைவேற்றப்படாதது பிரிவில், கீழ்தோன்றும் மெனு ஐகானைத் தட்டி, பின்னர் செயலாக்கத்தில் உள்ளதாகக் குறி என்பதைத் தட்டவும்.
  4. விருப்பத்தேர்வு: உங்கள் குழுவிற்கு ஒரு குறிப்பைச் சேர்க்க, காலவரிசை பிரிவில், ஒரு கருத்தைச் சேர்த்து, பின்னர் பதிவிடு என்பதைத் தட்டவும்.

நிறைவேற்றத்தின் இடத்தை மாற்றுதல்

நிறைவேற்றப்படாத எந்தவொரு ஆர்டர்களுக்கும் நிறைவேற்றத்திற்கான இடத்தை நீங்கள் மாற்றலாம். எடுத்துக்காட்டாக, சரக்கு இருப்புக் கிடைக்கும் தன்மை அல்லது ஷிப்பிங் செலவுகள் காரணமாகவோ அல்லது டெலிவரியை விரைவுபடுத்துவதற்காகவோ நீங்கள் நிறைவேற்றத்திற்கான இடத்தை மாற்றலாம்.

உள்ளூர் டெலிவரி மற்றும் ஸ்டோரில் பிக்அப் ஆகிய ஆர்டர்களுக்கான நிறைவேற்றத்தின் இடத்தை நீங்கள் மாற்ற முடியாது.

படிகள்:

டெஸ்க்டாப்
  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆர்டர்கள் பகுதிக்குச் செல்லவும்.

  2. நிறைவேற்றும் இடத்தை மாற்ற வேண்டிய ஆர்டரைக் கிளிக் செய்யவும்.

  3. நிறைவேற்றும் இடத்தை மாற்ற வேண்டிய நிறைவேற்றப்படாதது அல்லது செயலாக்கத்தில் உள்ளது என்ற பிரிவில், கிடைமட்ட மெனு என்பதைக் கிளிக் செய்து, பின்னர் இடத்தை மாற்று என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. நிறைவேற்றும் இடத்தை மாற்ற வேண்டிய உருப்படிகளைத் தேர்ந்தெடுக்கவும்.

  5. இடத்தை மாற்று பிரிவில், ஒரு புதிய நிறைவேற்றும் இடத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

  6. இடத்தை மாற்று என்பதைக் கிளிக் செய்யவும்.

மொபைல்
  1. Shopify செயலியில், ஆர்டர்கள் ஐகானைத் தட்டவும் .
  2. நிறைவேற்றும் இடத்தை மாற்ற வேண்டிய ஆர்டரைத் தட்டவும்.
  3. நிறைவேற்றும் இடத்தை மாற்ற வேண்டிய நிறைவேற்றப்படாதது அல்லது செயலாக்கத்தில் உள்ளது என்ற பிரிவில், கிடைமட்ட மெனு அல்லது செங்குத்து மெனு என்பதைத் தட்டி, பின்னர் இடத்தை மாற்று என்பதைத் தட்டவும்.
  4. நீங்கள் மாற்ற வேண்டிய நிறைவேற்றும் இடத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்.

நிறைவேற்றத்தைப் பிரித்தல்

வரிசை உருப்படிகள் மற்றும் அளவுகளின் அடிப்படையில் ஒரு நிறைவேற்றத்தைப் பல நிறைவேற்றங்களாக நீங்கள் பிரிக்கலாம். எடுத்துக்காட்டாக, ஆர்டரில் உள்ள உருப்படிகளில் ஒன்று கையிருப்பில் இல்லை எனில், மீதமுள்ள உருப்படிகளை உங்கள் வாடிக்கையாளருக்கு கூடிய விரைவில் டெலிவரி செய்யும் வகையில், அந்த உருப்படியை ஆர்டரிலிருந்து நீங்கள் அகற்றலாம். கையிருப்பில் இல்லாத அந்த உருப்படியானது பின்பு ஒரு தனிப் பேக்கேஜில் டெலிவரி செய்யப்படும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆர்டர்கள் பகுதிக்குச் செல்லவும்.

  2. நிறைவேற்றத்தைப் பிரிக்க வேண்டிய ஆர்டரைக் கிளிக் செய்யவும்.

  3. நிறைவேற்றத்தைப் பிரிக்க வேண்டிய நிறைவேற்றப்படாதது பிரிவில், கிடைமட்ட மெனு என்பதைக் கிளிக் செய்து, பின்னர் நிறைவேற்றத்தைப் பிரி என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. நிறைவேற்றத்தைப் பிரிக்க வேண்டிய உருப்படிகளைத் தேர்ந்தெடுக்கவும்.

  5. நிறைவேற்றத்தைப் பிரி என்பதைக் கிளிக் செய்யவும்.

நிறைவேற்றத்தை ஒன்றிணைத்தல்

ஒரே இடத்தில் உள்ள பல நிறைவேற்றங்களை வரிசை உருப்படிகள் மற்றும் அளவுகளின் அடிப்படையில் ஒரே நிறைவேற்றமாக நீங்கள் ஒன்றிணைக்கலாம். நிறைவேற்றத்தை ஒன்றிணைப்பது உங்களின் நிறைவேற்றச் செயல்முறையை எளிதாக்கவும் ஷிப்பிங் செலவுகளைக் குறைக்கவும் உதவும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆர்டர்கள் பகுதிக்குச் செல்லவும்.

  2. நிறைவேற்றத்தை ஒன்றிணைக்க வேண்டிய ஆர்டரைக் கிளிக் செய்யவும்.

  3. நிறைவேற்றத்தை ஒன்றிணைக்க வேண்டிய நிறைவேற்றப்படாதது பிரிவில், கிடைமட்ட மெனு என்பதைக் கிளிக் செய்து, பின்னர் நிறைவேற்றத்தை ஒன்றிணை என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. நிறைவேற்றத்துடன் ஒன்றிணைக்க வேண்டிய உருப்படிகளைத் தேர்ந்தெடுக்கவும்.

  5. நிறைவேற்றத்தை ஒன்றிணை என்பதைக் கிளிக் செய்யவும்.

நிறைவேற்றத்தை ரத்துசெய்தல்

நிறைவேற்றத்தை நீங்கள் ரத்துசெய்யும்போது, ஆர்டரின் நிறைவேற்ற நிலை நிறைவேற்றப்படாதது என மாறும், பிறகு ஆர்டருக்காகப் புதிய ஷிப்பிங் லேபிளை நீங்கள் வாங்கலாம் அல்லது புதிய நிறைவேற்றத்தை உருவாக்கலாம்.

நீங்கள் ஒரு ஷிப்பிங் லேபிளை வாங்கியிருந்தால், நிறைவேற்றத்தை ரத்துசெய்யும் முன்பாக அதை ரத்துசெய்ய வேண்டும். லேபிளை ரத்துசெய்ய முடியாமல், நீங்கள் மாற்று ஷிப்மென்டை அனுப்ப வேண்டியிருந்தால், மாற்று லேபிளை வாங்குவது என்பதைப் பார்க்கவும்.

படிகள்:

டெஸ்க்டாப்
  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆர்டர்கள் பகுதிக்குச் செல்லவும்.

  2. நிறைவேற்றத்தை ரத்துசெய்ய வேண்டிய ஆர்டரைக் கிளிக் செய்யவும்.

  3. நிறைவேற்றத்தை ரத்துசெய்ய விரும்பும் நிறைவேற்றப்பட்டது பிரிவில், Horizontal menu என்பதைக் கிளிக் செய்துவிட்டு, நிறைவேற்றத்தை ரத்துசெய் என்பதைக் கிளிக் செய்யவும்.

மொபைல்
  1. Shopify செயலியில், ஆர்டர்கள் ஐகானைத் தட்டவும் .
  2. எந்த ஆர்டருக்கான நிறைவேற்றத்தை ரத்துசெய்ய வேண்டுமோ அந்த ஆர்டரைத் தட்டவும்.
  3. நிறைவேற்றத்தை ரத்துசெய்ய விரும்பும் நிறைவேற்றப்பட்டது பிரிவில், Horizontal menu அல்லது Vertical menu என்பதைத் தட்டிவிட்டு, நிறைவேற்றத்தை ரத்துசெய் என்பதைத் தட்டவும்.
  4. உறுதிசெய்ய, நிறைவேற்றத்தை ரத்துசெய் என்பதைத் தட்டவும்.

எந்த ஆர்டர்களை முதலில் நிறைவேற்றுவது என முன்னுரிமைப்படுத்த, ஆர்டர்களின் 'இதுவரை நிறைவேற்றவும்' தேதியைக் கொண்டு அவற்றை வடிகட்டலாம்.