ஆர்டர்களின் முன்னறிவிப்பு
அடுத்த சில வாரங்கள் அல்லது மாதங்களில் உங்கள் வணிகம் எத்தனை ஆர்டர்களைப் பெறும் என்று மதிப்பிடுவதே தேவை முன்னறிவிப்பு ஆகும். இதில் எந்தவொரு விளம்பரங்கள் அல்லது விற்பனைகள், எந்தவொரு புதிய தயாரிப்பு அறிமுகங்கள் மற்றும் எந்தவொரு தயாரிப்பு நிறுத்தங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். உங்களின் சராசரி ஆர்டர்களில் ஏதேனும் மாறுபாடுகள் ஏற்பட்டால், அவற்றிற்காகத் தயாராக இருப்பது உங்கள் பணத்தைச் சேமிக்க உதவுவதோடு, சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தைப் பராமரிக்கவும் உதவுகிறது, மேலும் ஆர்டர் அளவிலுள்ள மாற்றங்களுக்காகத் தயாராக இருக்க உங்கள் நிறைவேற்றச் சேவைகளுக்கும் உதவுகிறது.
எடுத்துக்காட்டாக, உங்கள் வணிகத்திற்காக ஒரு வாரத்திற்கு உங்கள் நிறைவேற்றச் சேவை வழக்கமாக 100 ஆர்டர்களை நிறைவேற்றுகிறது என்று வைத்துக்கொள்வோம். 500 ஆர்டர்களைப் பெற்றுத்தரும் சந்தைப்படுத்தல் பிரச்சாரத்தை நீங்கள் நடத்தும் பட்சத்தில், அதுகுறித்து உங்கள் வழங்குநருக்குத் தெரிவிக்கவில்லையெனில், கூடுதலான ஆர்டர்களைக் கையாள உங்களின் நிறைவேற்றச் சேவை தயாராக இல்லாமல் இருக்கலாம். இதன் விளைவாக உங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஆர்டர் செயலாக்கம் மற்றும் ஷிப்பிங்கில் தாமதம் ஏற்படக்கூடும். மேலும், நிறைவேற்றச் சேவைக்குப் போதுமான சரக்கு இருப்பை நீங்கள் அனுப்பாமல் இருந்திருக்கலாம். உங்கள் தேவையை முன்னறிவிப்பதன் மூலமும், உங்கள் நிறைவேற்றச் சேவைக்குத் தெரிவிப்பதன் மூலமும், நீங்களும் உங்களின் நிறைவேற்றச் சேவையும் எதிர்பார்த்த ஆர்டர்களின் அதிகரிப்புக்குத் தயாராக இருப்பதை உறுதிசெய்யலாம்.
இந்தப் பக்கத்தில்
தேவை முன்னறிவிப்பின் பலன்கள்
உங்கள் சராசரி விற்பனை நிலைகளில் ஏற்படும் மாற்றங்களுக்குத் தயாராக இருப்பதன் மூலம் தேவை முன்னறிவிப்பின் பலன்கள் கிடைக்கின்றன. குறிப்பாக, தேவை முன்னறிவிப்பானது பின்வரும் பலன்களை வழங்குகிறது:
- ஒட்டுமொத்த ஆர்டர் அளவுகளில் உங்களின் விளம்பரங்கள் அல்லது புதிய தயாரிப்புகளின் தாக்கத்தைப் புரிந்துகொள்ள உதவுகிறது
- வருவாயைத் தவறவிடாமல் இருப்பதை உறுதிசெய்ய, பிளாக் ஃப்ரைடே மற்றும் சைபர் மண்டே விற்பனைகள் போன்ற முக்கிய விற்பனை நிகழ்வுகளுக்குத் திட்டமிட உதவுகிறது
- தயாரிப்பு ஸ்டாக்கில் இருப்பதாலும், ஆர்டரை விரைவாகச் செயலாக்குவதற்கான ஆதாரங்கள் நிறைவேற்றச் சேவையிடம் இருப்பதாலும், விரைவான டெலிவரி நேரங்களுடன் உங்கள் வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த அனுபவம் கிடைப்பதை உறுதிசெய்கிறது
- உங்கள் நிறைவேற்றச் சேவைக்கு எப்போது அதிக சரக்குகளை அனுப்ப வேண்டும் என்பது போன்ற சரக்கு இருப்பு குறித்த முடிவுகளை எடுக்க உதவுகிறது
- உங்கள் நிறைவேற்றச் சேவைக்கு அதிகச் சரக்கு இருப்பை அனுப்புவதைத் தவிர்க்க உதவுவதன் மூலம் பணத்தைச் சேமிக்கிறது, ஏனெனில் அதிகச் சரக்கை அனுப்புவது சரக்கு இருப்பைக் கொண்டுசெல்லும் மற்றும் வைத்திருக்கும் செலவுகளை ஏற்படுத்தலாம்
தேவை முன்னறிவிப்பைப் பயன்படுத்தத் தொடங்குதல்
எல்லா வணிகங்களும் தேவை முன்னறிவிப்பைப் பயனுள்ளதாகக் கருதினாலும், உங்களிடம் சில வரலாற்றுத் தரவுகள் இருக்கும்போது இது மிகவும் மதிப்புமிக்கதாக இருக்கும். விற்பனை வரலாறு இல்லாத வணிகங்களுக்கு, உங்களின் சந்தைப்படுத்தல் முயற்சிகள் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் மற்றும் உங்களின் ஆர்டர் செயலாக்கத்தில் எங்குத் தடங்கல்கள் ஏற்படலாம் என்பது குறித்துச் சிந்திப்பது தொடக்ககால வணிக முடிவுகளை வழிநடத்த உதவும். சில விற்பனை வரலாற்றைக் கொண்ட வணிகங்களுக்கு, 8 வாரங்களிலான நிலையான வாராந்திர ஆர்டர்களைக் கொண்டு தேவை முன்னறிவிப்பைப் பயன்படுத்தி உங்கள் வணிகத்தைத் திட்டமிடத் தொடங்கலாம். ஒரு வருட ஆர்டர்களுக்குப் பிறகு, விற்பனை அதிகமாகவும் குறைவாகவும் உள்ள மாதங்கள் போன்ற பருவகால மாற்றங்களை நீங்கள் முன்னறிவிக்கத் தொடங்கலாம்.
உங்கள் தேவையை முன்னறிவிக்கத் தொடங்கும் முன், உங்கள் வணிகம் குறித்துக் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களில் உங்களால் முடிந்த அளவு தகவல்களைச் சேகரிக்கவும்:
- முந்தைய தேவைகள் குறித்த தகவல்
- ஒவ்வொரு நாள், வாரம், மாதத்திலும் உங்களின் சராசரி விற்பனைத் தொகை எவ்வளவு?
- உங்கள் வணிகம் எந்தப் பருவகாலத் தாக்கங்களை எதிர்கொள்கிறது?
- வரவிருக்கும் விளம்பரங்களுக்கான ஒரு திட்டம்
- அடுத்த மூன்று மாதங்களில் நீங்கள் என்னென்ன விளம்பரங்களை நடத்தவுள்ளீர்கள்?
- கடந்த காலத்தில் உங்கள் விளம்பரங்கள் என்ன முடிவுகளை அளித்தன?
- எதிர்வரும் தயாரிப்பு அறிமுகங்கள் அல்லது தயாரிப்பு நிறுத்தங்களுக்கான திட்டம்
எடுத்துக்காட்டாக, நீங்கள் புதிய வணிகத்தைத் தொடங்கியிருந்தால், பின்வருபவை மட்டுமே உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்:
- சராசரி தினசரி விற்பனை: 25
- சராசரி வாராந்திர விற்பனை: 178
- சராசரி மாதாந்திர விற்பனை: 706
- சராசரி விளம்பரம் 15% விற்பனை அதிகரிப்பிற்கு வழிவகுக்கிறது
- மூன்று வாரங்களில் தொடங்கும் புதிய விளம்பரச் சலுகை, சராசரி விளம்பரங்களை விட மூன்று மடங்கு பட்ஜெட் கொண்டது, மேலும் வார இறுதியில் இரண்டு நாட்கள் நீடிக்கும்
- ஏழு வாரங்களில் ஒரு தயாரிப்பை நிறுத்துதல்
மேற்கண்ட எடுத்துக்காட்டில், வழக்கமான 50 ஆர்டர்களுக்குப் பதிலாக, மூன்று வாரங்களில் 50% விற்பனை அதிகரிக்கும் அல்லது இரண்டு நாட்களில் சுமார் 75 ஆர்டர்கள் கிடைக்கும் என்பதை உங்கள் நிறைவேற்றச் சேவைக்குத் தெரியப்படுத்த வேண்டும். 25 விற்பனை அதிகரிப்பைப் பற்றி உங்கள் நிறைவேற்றச் சேவை கவலைப்படத் தேவையில்லை என்றாலும், இதே போன்று 50 வணிகங்கள் அதே வார இறுதியில் சலுகைகளை வழங்கினால், அவர்கள் கூடுதலாக 1,250 ஆர்டர்களைச் செயல்படுத்த நேரிடும், இதற்கு அவர்கள் தயாராக இருக்க வேண்டும்.
மேலும், ஏழு வாரங்களில் தயாரிப்பு நிறுத்தப்படுவதை உங்கள் விளம்பரம் எவ்வாறு பாதிக்கும்? நீங்கள் தயாரிப்பை நிறுத்தினாலும், விளம்பரத்தோடு சேர்த்துக் கணக்கிட்டாலும் முழுமையாக ஏழு வாரங்களுக்குப் போதுமான சரக்கு இருப்பு உங்களிடம் உள்ளதா?
உங்களின் தேவை முன்னறிவிப்பைப் பற்றி உங்கள் நிறைவேற்றச் சேவைக்குத் தெரியப்படுத்துவது, நல்ல உறவை ஏற்படுத்த உதவுவதோடு, தேவையின் திடீர் அதிகரிப்பிற்கும், தயாரிப்பு வரிசையில் ஏற்படும் மாற்றங்களுக்கும் சீராகத் தயாராகவும் இரு தரப்புக்கும் உதவும்.
Shopify எவ்வாறு உதவும்?
உங்கள் விற்பனை அளவுகளையும் ஆர்டர் போக்குகளையும் தடமறியப் பயன்படுத்தக்கூடிய பல்வேறு விற்பனை, சரக்கு இருப்பு மற்றும் சந்தைப்படுத்தல் அறிக்கைகள் உங்கள் Shopify ஸ்டோரில் உள்ளன. உங்கள் ஸ்டோரின் சந்தாத் திட்டத்தைப் பொறுத்து, ஆர்டர் வாரியாக மொத்த விற்பனை அறிக்கை, காலப்போக்கில் விற்பனை, தயாரிப்பு வாரியாக நாள்தோறும் விற்கப்பட்ட சரக்கு இருப்பு மற்றும் சந்தைப்படுத்தலால் கிடைத்த விற்பனை போன்ற அறிக்கைகளை நீங்கள் அணுகலாம்.
உங்கள் வணிகம் தொடர்பான நுண்ணறிவுகளைப் பெற, உங்கள் ஸ்டோரின் பகுப்பாய்வு பக்கத்தையும் பயன்படுத்தலாம்.
உங்கள் வணிகம் இப்போதுதான் தொடங்கியுள்ளது என்றால், அதிக கணக்கீடுகள் செய்யாமலேயே உங்கள் விற்பனை எண்களைப் பற்றிய துல்லியமான யோசனை உங்களுக்கு இருக்கும் என்பதால், உங்கள் Shopify அறிக்கைகள் அனைத்தும் உங்களுக்குத் தேவைப்படாது. இருப்பினும், உங்கள் வணிகம் வளரும்போது, உங்கள் ஸ்டோரின் சராசரிகளைக் கணக்கிடுவதில் இந்த அறிக்கைகள் உங்கள் நேரத்தைச் சேமிக்கலாம்.
உங்கள் நிறைவேற்றச் சேவையுடன் இணைந்து செயல்படுவது எப்படி
யதார்த்தமான தேவை முன்னறிவிப்புத் திட்டத்தை அவர்களிடம் வழங்குவதன் மூலம், உங்கள் ஆர்டர்களை விரைவாகவும் திறமையாகவும் நிறைவேற்றுவதற்கு ஏற்ற பணியாளர்களும் வளங்களும் உங்கள் நிறைவேற்றச் சேவை வழங்குநரிடம் இருப்பதை உறுதிசெய்யலாம். உங்கள் நிறைவேற்றச் சேவை வழங்குநரைத் தொடர்புகொண்டு, இந்தத் தகவலை எவ்வாறு சிறப்பாக வழங்கலாம் என்பதையும், எவ்வளவு அடிக்கடி வழங்க வேண்டும் என்பதையும் கேளுங்கள். சில வணிகங்கள் ஒவ்வொரு வாரமும் இதைச் செய்வது மிகவும் பயனுள்ளதாகக் கருதுகின்றன, அதே சமயம் சில சிறிய வணிகங்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் மாற்றம் நிகழும்போது மட்டுமே தங்களது நிறைவேற்றச் சேவையைத் தொடர்புகொள்கின்றன.
அதிக விற்பனை நடக்கும் பண்டிகைக் காலங்களில், பெரும்பாலான வணிகங்களில் விற்பனை அதிகரிப்பதை நிறைவேற்றச் சேவை நிர்வகிக்க வேண்டும் என்பதால், பொதுவாக வழக்கமான முன்னறிவிப்புகளைச் செய்வது சிறந்தது. இந்த நேரங்களில், ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் உங்கள் முடிவுகளை முன்கூட்டியே கணித்து, அவற்றை உங்களின் உண்மையான விற்பனை எண்களுடன் ஒப்பிடுங்கள்.
உங்கள் வணிகம் வளரும்போது, எதிர்பார்க்கப்படும் ஆர்டர்களில் பின்வருபவை போன்ற மாற்றங்களை வெளியிடுவது மிக முக்கியமாகும்:
- உங்கள் மின்னஞ்சல் சந்தைப்படுத்தலைத் தொடங்குதல், மாற்றுதல் அல்லது முடித்தல்
- விளம்பரங்களுக்கான உங்கள் செலவினங்களை அதிகரித்தல் அல்லது குறைத்தல்
- பெரிய விற்பனை நிகழ்வுகள்
உங்கள் முன்னறிவிப்புகள் தவறாக இருக்கும்போது என்ன நடக்கும்?
கிட்டத்தட்ட அனைத்து முன்னறிவிப்புகளும் தவறாகவே இருக்கும். மிகத் துல்லியமாக இருப்பதல்ல நோக்கம், உங்கள் ஆர்டர்களைத் திறம்பட நிறைவேற்றுவதற்குப் போதுமான சரக்கு இருப்பும் வளங்களும் கிடைக்கும் வகையில் ஓரளவுக்கு நெருக்கமான அளவைக் கணிப்பதே இதன் நோக்கமாகும். பொதுவாக, ஆண்டின் ஒவ்வொரு வாரமும், 10-15% பிழை வரம்பிற்குள் முன்னறிவிப்புகளைச் செய்ய முயலுங்கள். நீங்கள் எவ்வளவு அதிகமாக முன்னறிவிப்புகளைச் செய்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாகப் போக்குகளைக் கண்டறிவீர்கள். நீங்கள் தொடர்ந்து குறைவான விற்பனையை முன்கூட்டியே கணிக்கிறீர்கள் என்றால், அடுத்த முறை அதே அளவிலான விளிம்பு மதிப்பை அதிகரிக்க வேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
உங்கள் முன்னறிவிப்புகளில் உங்களால் முடிந்தவரை இலக்குடன் இருப்பது அவற்றின் துல்லியத்திற்கு உதவும். உங்கள் வணிக அளவிற்கு ஏற்ற சரியான கருவியைப் பயன்படுத்துவதும் உதவும். உங்கள் நிறைவேற்ற வழங்குநருக்காக முன்னறிவிப்பைத் தொடங்கும் போது, ஒரு விரிதாள் நன்றாகச் செயல்படும். உங்கள் வணிக அளவை விரிவுபடுத்தி அது முதிர்ச்சியடையும் போது, பெரிய அளவில் விற்பனைப் போக்குகளைப் பார்க்கவும் பகுப்பாய்வு செய்யவும் உங்கள் Shopify ஸ்டோரில் உள்ள அறிக்கைகள் உங்களுக்கு உதவலாம்.