தேடலைப் பாதிக்கும் சிக்கல்

சில பயனர்களால் இப்போது தேடலைப் பயன்படுத்த முடியாமல் போகலாம். இதை நாங்கள் விசாரித்து வருகிறோம்.

ஆர்டர்களை ரத்துசெய்தல்

நீங்கள் ஆர்டர்களை ரத்துசெய்யலாம், காப்பகப்படுத்தலாம் மற்றும் நீக்கலாம். ஆர்டரை ரத்துசெய்தல் என்பது, செயல்பாட்டில் உள்ள ஆர்டரை நீங்கள் நிறுத்துகிறீர்கள் என்று பொருளாகும். ஆர்டரைக் காப்பகப்படுத்துதல் என்பது, நீங்கள் ஆர்டரை முடித்துவிட்டீர்கள், அதை உங்கள் திறந்த ஆர்டர்கள் பட்டியலிலிருந்து அகற்ற விரும்புகிறீர்கள் என்பதாகும். ஒரு ஆர்டரை நீக்குவது என்பது, அதை உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து முற்றிலும் அகற்றுவதைக் குறிக்கும்.

ஆர்டர்களை ரத்துசெய்தல்

ஆர்டரை ரத்துசெய்தல் என்பது, ஆர்டர் செயலாக்கத்தை நீங்கள் நிறுத்துவதைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக, வாடிக்கையாளர் ஒருவர் ரத்துசெய்யக் கோரினால் அல்லது ஆர்டர் மோசடியானது என நீங்கள் சந்தேகப்பட்டால், பணியாளர்கள் அல்லது நிறைவேற்றச் சேவைகள் அந்த ஆர்டருக்கான பணிகளைத் தொடர்ந்து செய்வதைத் தடுக்க, ஆர்டரை நீங்கள் ரத்துசெய்யலாம். ஒரு உருப்படி ஆர்டர் செய்யப்பட்டு, அது கையிருப்பில் இல்லை என்றாலும் நீங்கள் ஆர்டரை ரத்துசெய்யலாம்.

ஆர்டரை அனுப்பும் முன்பு, நிறைவேற்றப்படாத உருப்படிகளை வாடிக்கையாளர்களே ரத்துசெய்யக் கோருவதற்கு, நீங்கள் சுய-சேவை திருப்பியளிப்பு மற்றும் ரத்துசெய்தல்களை அமைக்கலாம்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) உள்ள வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் விற்பனை செய்தால், EU விலகுதல் உரிமை மற்றும் மின்னணு விலகுதல் செயல்பாட்டுத் தேவை ஆகியவை உங்கள் பிசினஸுக்குப் பொருந்துமா என்பதை அறிய, EU விலகுதல் உரிமை இணக்கம் என்பதை மதிப்பாய்வு செய்யவும். EU-க்கான உங்களின் ரிட்டர்ன் மற்றும் ரத்துசெய்தல் விதிகளை அமைக்க, EU விலகுதல் உரிமைத் தேவைகளைப் பூர்த்திசெய்தல் என்பதைப் பார்க்கவும்.

ஆர்டரை ரத்துசெய்யும்போது அதன் நிலையைப் பொறுத்து, நீங்கள் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கலாம்.

ஆர்டரின் நிலையைப் பொறுத்து, ஆர்டரை ரத்துசெய்த பிறகு என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
ஆர்டரின் நிலைதொடர் நடவடிக்கைகள்
பணம் செலுத்தப்பட்டது, ஆனால் உருப்படிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லைஆர்டரை ரத்துசெய்யும்போது, மூன்று பணத்தைத் திரும்பப்பெறுதல் விருப்பங்கள் உள்ளன:
  • அசல் கட்டண முறைக்கு முழுத் தொகையையும் திரும்பப்பெறுதல்: உங்கள் வாடிக்கையாளரின் அசல் கட்டண முறைக்கு முழுமையாகப் பணம் திரும்ப அளிக்கப்படும். இந்த விருப்பம் இயல்பாகவே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்.
  • ஸ்டோர் கிரெடிட்டிற்கு முழுத் தொகையையும் திரும்பப்பெறுதல்: வாடிக்கையாளருக்கு முழுப் பணமும் ஸ்டோர் கிரெடிட்டாக வழங்கப்படும். ஸ்டோர் கிரெடிட்டிற்குப் பணத்தைத் திரும்பப் பெற, உங்களிடம் ஸ்டோர் கிரெடிட்டிற்குப் பணத்தைத் திரும்பப்பெறுதல் எனும் ஆர்டர்கள் அனுமதி இருக்க வேண்டும்.
  • பின்னர் பணத்தைத் திரும்பப்பெறுதல்: ஆர்டரை ரத்துசெய்யும்போது உங்கள் வாடிக்கையாளருக்குப் பணம் திரும்ப அளிக்கப்படாது. பின்வரும் நிகழ்வுகளில் பின்னர் விருப்பத்தைப் பயன்படுத்தப் பரிசீலிக்கவும்:
    • நீங்கள் ஒரு பகுதிப் பணத்தை மட்டும் திரும்ப அளிக்க விரும்பினால்.
    • நீங்கள் திரும்பப் பெறும் பணத்தை அசல் கட்டண முறைக்கும் ஸ்டோர் கிரெடிட்டிற்கும் இடையே பிரிக்க விரும்பினால்.
    • பணத்தைத் திரும்ப அளிக்கும் முன் ரத்துசெய்யப்பட்ட ஆர்டரை விசாரிக்க விரும்பினால்.

சார்ஜ்பேக்குகளைத் தவிர்க்க, பணத்தைத் திரும்பப் பெறாத ஆர்டர்களைத் தொடர் நடவடிக்கைகளுக்காகத் தடமறிவதை உறுதிசெய்யவும்.

நீங்கள் மூன்றாம் தரப்பு நிறைவேற்றச் சேவையைப் பயன்படுத்தினால், நீங்கள் தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கலாம்.

இந்த ஆர்டருக்காக நீங்கள் ஷிப்பிங் லேபிளை வாங்கியிருந்தால், லேபிளை ரத்துசெய்யலாம்.

நிறைவேற்றப்பட்டது, ஆனால் பணம் வசூலிக்கப்படவில்லைஆர்டரை ரத்துசெய்வது பணம் வசூலிப்பதைத் தடுக்கிறது. உருப்படிகளைத் திரும்பப்பெற, ரிட்டர்ன் செயல்முறையைப் பயன்படுத்தவும்.
பணம் செலுத்தப்படவில்லை மற்றும் நிறைவேற்றப்படவில்லைஆர்டர் தானாகவே காப்பகப்படுத்தப்படாவிட்டால், அதை நீங்களே காப்பகப்படுத்தவும்.
ஏற்கனவே பணம் திரும்ப அளிக்கப்பட்டதுஏற்கனவே பணம் திரும்ப அளிக்கப்பட்ட ஆர்டரைப் மொத்தமாக ரத்துசெய்ய வேண்டாம். மொத்தமாக ரத்துசெய்யும்போது பணத்தைத் திரும்பப்பெறும் பிராம்ட் காட்டப்படாமல் போகலாம் என்பதால், அது இருமுறை பணத்தைத் திரும்பப்பெறும் செயலாக்கத்தைத் தூண்டக்கூடும். ஏற்கனவே பணம் திரும்ப அளிக்கப்பட்ட ஆர்டரை நீங்கள் ரத்துசெய்ய வேண்டுமென்றால், அதைத் தனியாக ரத்துசெய்து பின்னர் பணத்தைத் திரும்பப்பெறும் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். தானியங்கு பேமெண்ட்டுகளுடன் கூடிய Shopify Collective ஐ நீங்கள் பயன்படுத்தினால், ஏற்கனவே பணம் திரும்ப அளிக்கப்பட்ட ஆர்டரை ரத்துசெய்வது உங்கள் பேஅவுட் இருப்பிலிருந்து பணம் கழிக்கப்படுவதற்கு வழிவகுக்கும்.

ஆர்டரை ரத்துசெய்த பிறகு, எந்தெந்த உருப்படிகள் மீண்டும் கையிருப்பில் சேர்க்கப்பட்டன மற்றும் பணம் திரும்ப அளிக்கப்பட்டன என்பது குறித்த விவரங்கள் ஆர்டரின் காலவரிசையில் சேமிக்கப்படும்.

ஒரு ஆர்டரை ரத்துசெய்யும்போது, பேமெண்ட் நிலை பின்வருமாறு மாறும்:

  • பேமெண்ட் பெறப்படவில்லையெனில், பேமெண்ட் நிலை ரத்துசெய்யப்பட்டது என மாறும்.
  • பேமெண்ட் முழுமையாகத் திரும்ப அளிக்கப்பட்டிருந்தால், பேமெண்ட் நிலை பணம் திரும்ப அளிக்கப்பட்டது என மாறும்.

பின்னர், ரத்துசெய்யப்பட்ட ஆர்டருக்காக நீங்கள் ஒரு பகுதிப் பணத்தை மட்டும் திரும்ப அளித்தால், பேமெண்ட் நிலை பகுதியளவு பணம் திரும்ப அளிக்கப்பட்டது என மாறும்.

ஆர்டர்களைத் தனித்தனியாக ரத்துசெய்தல்

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆர்டர்கள் பகுதிக்குச் செல்லவும்.

  2. நீங்கள் ரத்துசெய்ய விரும்பும் ஆர்டரைக் கிளிக் செய்யவும்.

  3. மேலும் சில செயல்கள் > ஆர்டரை ரத்துசெய் என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. பேமெண்ட்டைத் திரும்பப்பெறுதல் பிரிவில், பேமெண்ட்டை நீங்கள் எவ்வாறு திரும்ப அளிக்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்:

    • அசல் கட்டண முறைக்கு முழுப் பணத்தையும் திரும்ப அளிக்க, அசல் கட்டண முறை என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
    • ஸ்டோர் கிரெடிட்டிற்கு முழுப் பணத்தையும் திரும்ப அளிக்க, ஸ்டோர் கிரெடிட் என்பதைத் தேர்ந்தெடுத்து, கீழ்தோன்றும் மெனுவிலிருந்து ஸ்டோர் கிரெடிட்டின் காலாவதியைத் தேர்ந்தெடுக்கவும்.
    • பின்னர் பணத்தைத் திரும்பளிக்க, பின்னர் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. ரத்துசெய்வதற்கான காரணம் எனும் கீழ்தோன்றும் மெனுவில், ஆர்டரை ரத்துசெய்வதற்கான காரணத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

  6. விருப்பத்தேர்வு: பணியாளர் குறிப்பு புலத்தில், ஆர்டரை ரத்துசெய்தது பற்றிய உள்ளகக் குறிப்பை உள்ளிடவும்.

  7. விருப்பத்தேர்வு: உருப்படிகளை மீளிருப்பு செய்ய விரும்பவில்லை எனில், சரக்கு இருப்பை மீளிருப்பு செய் என்பதைத் தேர்வுநீக்கவும். சரக்கு இருப்பை மீளிருப்பு செய் விருப்பம் இயல்பாகவே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும், இது ரத்துசெய்யப்பட்ட உருப்படிகளை உங்கள் சரக்கு இருப்புக்குத் திருப்பி அனுப்பும்.

  8. விருப்பத்தேர்வு: ஆர்டர் ரத்துசெய்யப்பட்டது குறித்து வாடிக்கையாளருக்குத் தெரிவிக்க விரும்பவில்லை எனில், வாடிக்கையாளருக்கு அறிவிப்பை அனுப்பு என்பதைத் தேர்வுநீக்கவும். வாடிக்கையாளருக்கு அறிவிப்பை அனுப்பு விருப்பம் இயல்பாகவே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்.

  9. ஆர்டரை ரத்துசெய் என்பதைக் கிளிக் செய்யவும்.

ஆர்டர்களை மொத்தமாக ரத்துசெய்தல்

ஆர்டரை ரத்துசெய் என்ற மொத்தச் செயலைப் பயன்படுத்தி, ஒன்றுக்கும் மேற்பட்ட ஆர்டர்களை நீங்கள் மொத்தமாக ரத்துசெய்யலாம். நீங்கள் ஆர்டர்களை மொத்தமாக ரத்துசெய்யும்போது, ஆர்டர் ரத்துசெய்தல்களின் முன்னேற்றத்தை உங்கள் நிர்வாகியிலுள்ள காட்டி ஒன்று காண்பிக்கும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆர்டர்கள் பகுதிக்குச் செல்லவும்.

  2. நீங்கள் ரத்துசெய்ய விரும்பும் ஆர்டர்களைத் தேர்வுப்பெட்டிகளைப் பயன்படுத்தித் தேர்ந்தெடுக்கவும்.

  3. Horizontal menu என்பதைக் கிளிக் செய்து, ஆர்டர்களை ரத்துசெய் என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. பேமெண்ட்டைத் திரும்பப்பெறு பிரிவில், பேமெண்ட்டுகளை எப்படித் திரும்பளிக்க வேண்டும் என்பதைத் தேர்வுசெய்யவும்:

    • அசல் கட்டண முறைக்கு முழுப் பணத்தையும் திரும்ப அளிக்க, அசல் கட்டண முறை என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
    • ஸ்டோர் கிரெடிட்டிற்கு முழுப் பணத்தையும் திரும்ப அளிக்க, ஸ்டோர் கிரெடிட் என்பதைத் தேர்ந்தெடுத்து, கீழ்தோன்றும் மெனுவிலிருந்து ஸ்டோர் கிரெடிட்டின் காலாவதியைத் தேர்ந்தெடுக்கவும்.
    • பின்னர் பணத்தைத் திரும்பளிக்க, பின்னர் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. ரத்துசெய்தற்கான காரணம் கீழ்தோன்றும் மெனுவில், ஆர்டரை ரத்துசெய்ததற்கான காரணத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

  6. விருப்பத்தேர்வு: பணியாளர் குறிப்பு புலத்தில், ஆர்டரை ரத்துசெய்தது பற்றிய உள்ளகக் குறிப்பை உள்ளிடவும்.

  7. விருப்பத்தேர்வு: உருப்படிகளை மீளிருப்பு செய்ய விரும்பவில்லை எனில், சரக்கு இருப்பை மீளிருப்பு செய் என்பதைத் தேர்வுநீக்கவும். சரக்கு இருப்பை மீளிருப்பு செய் விருப்பம் இயல்பாகவே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும், இது ரத்துசெய்யப்பட்ட உருப்படிகளை உங்கள் சரக்கு இருப்புக்குத் திருப்பி அனுப்பும்.

  8. விருப்பத்தேர்வு: ஆர்டர் ரத்துசெய்யப்பட்டது குறித்து வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்க விரும்பவில்லை எனில், வாடிக்கையாளருக்கு அறிவிப்பை அனுப்பு என்பதைத் தேர்வுநீக்கவும். வாடிக்கையாளருக்கு அறிவிப்பை அனுப்பு விருப்பம் இயல்பாகவே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்.

  9. ஆர்டர்களை ரத்துசெய் என்பதைக் கிளிக் செய்யவும்.

கட்டணத் திருப்பலை இழந்த பிறகு ஒரு ஆர்டரை ரத்துசெய்தல்

நீங்கள் ஒரு கட்டணத் திருப்பலை இழந்து, சர்ச்சைக்குரிய தொகை ஏற்கனவே உங்கள் பேஅவுட்டிலிருந்து கழிக்கப்பட்டிருந்தால், வாடிக்கையாளருக்கு இரண்டாவது திரும்பப்பெறுதலை அனுப்பாமலேயே பாதிக்கப்பட்ட ஆர்டரை ரத்துசெய்யலாம். ஆர்டரைத் தனித்தனியாக ரத்துசெய்து, மேலும் எந்தத் திரும்பப்பெறுதலும் வழங்கப்படாமல் இருப்பதற்கு பிறகு என்ற திரும்பப்பெறுதல் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆர்டர்கள் பகுதிக்குச் செல்லவும்.

  2. நீங்கள் ரத்துசெய்ய விரும்பும் ஆர்டரைக் கிளிக் செய்யவும்.

  3. மேலும் சில செயல்கள் > ஆர்டரை ரத்துசெய் என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. பேமெண்ட்டைத் திரும்பப்பெறு பிரிவில், பிறகு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

  5. ஆர்டரை ரத்துசெய் என்பதைக் கிளிக் செய்யவும்.

ரத்துசெய்ய முடியாத ஆர்டர்கள்

ஆர்டரின் தற்போதைய நிலை, பேமெண்ட் நிலை அல்லது பிற கட்டுப்பாடுகள் போன்ற காரணங்களால், சில ஆர்டர்களை உங்களால் ரத்துசெய்ய முடியாது. உங்களுக்கு ஆர்டரை ரத்துசெய் விருப்பம் இல்லை எனில், உங்களால் ஆர்டரை ரத்துசெய்ய முடியாது.

தனிப்பட்ட ஆர்டருக்கான கட்டுப்பாடுகள்

  • ஒரு ஆர்டர் திட்டமிடப்பட்ட பேமெண்ட்டுகளுடன் நிலுவையிலுள்ள பேமெண்ட் நிலையில் இருந்தால், அதை உங்களால் ரத்துசெய்ய முடியாமல் போகலாம். நிலுவையிலுள்ள பேமெண்ட்டுகள் கொண்ட ஆர்டர்கள் குறித்து மேலும் அறிக.
  • ஒரு ஆர்டர் பகுதியளவு நிறைவேற்றப்பட்ட பிறகு, அதை உங்களால் ரத்துசெய்ய முடியாது. ஆர்டரை ரத்துசெய்வதற்குத் தகுதியுடையதாக்க, அந்த நிறைவேற்றத்தை நீங்கள் ரத்துசெய்யலாம் அல்லது திரும்பப்பெறுதல்களை வழங்கலாம் மற்றும் ரிட்டர்ன்களை நிர்வகிக்கலாம்.
  • உங்கள் ஆர்டரை மூன்றாம் தரப்பு நிறைவேற்றச் சேவை செயலாக்குகிறது எனில், Shopify இல் ரத்துசெய்வதற்கு முன்பு அந்தச் சேவையின் சிஸ்டத்தின் மூலமாக நீங்கள் ஆர்டரை ரத்துசெய்ய வேண்டியிருக்கலாம். உங்கள் நிறைவேற்றக் கூட்டாளரைத் தொடர்புகொண்டு அவர்களின் ரத்துசெய்தல் செயல்முறை குறித்துக் கேட்டறியவும்.
  • முன்பு Facebook Commerce Manager இல் திருத்தப்பட்ட Facebook மற்றும் Instagram இல் உள்ள செக்அவுட் வழியாகப் பிளேஸ் செய்யப்பட்ட ஆர்டர்களை Shopify நிர்வாகியிலிருந்து ரத்துசெய்ய முடியாது. அதற்குப் பதிலாக Facebook Commerce Manager மூலம் மாற்றங்களைச் செய்யவும்.
  • மூன்றாம் தரப்புச் செயலிகள் மூலம் உருவாக்கப்பட்ட ஆர்டர்களைக் கொண்டிருக்கக்கூடிய கட்டுப்பாடுகளால், அவற்றை Shopify நிர்வாகி மூலம் ரத்துசெய்ய முடியாது. இந்த ஆர்டர்களை நிர்வகிப்பது குறித்த வழிகாட்டுதலுக்கு, செயலியை உருவாக்குபவரைத் தொடர்புகொள்ளவும்.
  • ஏற்கனவே ரத்துசெய்யப்பட்ட அல்லது நீக்கப்பட்ட ஆர்டர்களை மீண்டும் ரத்துசெய்ய முடியாது.

மொத்தமாக ரத்துசெய்வதிலுள்ள கட்டுப்பாடுகள்

  • துல்லியமான திரும்பப்பெறுதல் கணக்கீடுகளை உறுதிசெய்ய, ஒரு நேரத்தில் அதிகபட்சம் 250 ஆர்டர்களை மட்டுமே உங்களால் ரத்துசெய்ய முடியும். நீங்கள் கூடுதல் ஆர்டர்களை ரத்துசெய்ய வேண்டுமெனில், அவற்றைச் சிறிய பேட்ச்களாகச் செயலாக்கவும்.
  • உங்கள் தேடலில் 250-க்கும் மேற்பட்ட ஆர்டர்கள் காட்டப்பட்டால், ரத்துசெய்வதற்கு முன்பு தேடல் நிபந்தனைகளைக் குறுக்கவும்.

அனுமதிக் கட்டுப்பாடுகள்

  • ஆர்டர்களை ரத்துசெய்யவும், திரும்பப்பெறுதல்களை வழங்கவும் சரியான ஆர்டர்களுக்கான அனுமதிகள் உங்களுக்குத் தேவை.
  • ஒரு ஆர்டர் ரத்துசெய்வதற்குத் தகுதியற்றதாகத் தோன்றி, அதை ரத்துசெய்ய முடியும் என்று நீங்கள் நம்பினால், ரத்துசெய்வதற்கான விருப்பம் ஏன் இல்லை என்பதை விளக்கும் விரிவான நிலைத் தகவலுக்கு, ஆர்டரின் காலவரிசை பிரிவைச் சரிபார்க்கவும்.

ஆர்டர்களை மேனுவலாகக் காப்பகப்படுத்துதல்

நீங்கள் முடித்துவிட்ட பெரும்பாலான ஆர்டர்கள் இயல்பாகவே தானாகவே காப்பகப்படுத்தப்படும், ஆனால் தேவைப்பட்டால் நீங்கள் ஆர்டர்களை மேனுவலாகக் காப்பகப்படுத்தலாம். தானியங்கி காப்பகப்படுத்துதலை நீங்கள் முடக்கியிருந்தால், ஆர்டர்களை மேனுவலாகக் காப்பகப்படுத்துவதன் மூலம் உங்கள் திறந்த ஆர்டர்கள் காட்சியைச் சுத்தமாக வைத்திருக்கலாம்.

காப்பகப்படுத்தப்பட்ட ஆர்டர்கள் மூடப்பட்டது ஆர்டர் காட்சியில் காட்டப்படும்.

படிகள்:

டெஸ்க்டாப்
  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆர்டர்கள் பகுதிக்குச் செல்லவும்.

  2. ஆர்டர்கள் பக்கத்திலிருந்து, நீங்கள் காப்பகப்படுத்த விரும்பும் ஆர்டரின் எண்ணைக் கிளிக் செய்யவும்.

  3. மேலும் செயல்கள் என்பதைக் கிளிக் செய்து, ஆர்டர்களைக் காப்பகப்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

மொபைல்
  1. Shopify செயலியிலிருந்து, Orders ஐகானைத் தட்டவும் .
  2. நீங்கள் காப்பகப்படுத்த விரும்பும் ஆர்டரைத் தட்டவும்.
  3. Horizontal menu அல்லது Vertical menu ஐகானைத் தட்டவும்.
  4. ஆர்டரைக் காப்பகப்படுத்து என்பதைத் தட்டவும்.

ஆர்டரின் நிலை காப்பகப்படுத்தப்பட்டது என்பதாகும்.

ஒன்றுக்கும் மேற்பட்ட ஆர்டர்களைக் காப்பகப்படுத்த அல்லது காப்பகப்படுத்துதலை நீக்க, நீங்கள் ஒரு மொத்தச் செயல்ஐயும் மேற்கொள்ளலாம்.

ஆர்டரை நீக்குதல்

நீக்கப்பட்ட ஆர்டர்கள் உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து அகற்றப்படும், மேலும் அறிக்கைகளில் அவை இனி கண்காணிக்கப்படாது. பின்வரும் ஆர்டர் வகைகளை மட்டுமே நீக்க முடியும்:

ஆர்டரை நீக்குவதற்கு முன், அது காப்பகப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் அல்லது ரத்துசெய்யப்பட்டிருக்க வேண்டும். கிஃப்ட் கார்டு மூலம் பேமெண்ட் செலுத்தப்பட்ட ஆர்டர்களைக் காப்பகப்படுத்தலாமே தவிர நீக்க முடியாது.

நீங்கள் ஆர்டருக்கான ஷிப்பிங் லேபிளை வாங்கியும், அதைப் பயன்படுத்தவில்லை என்றால், ஆர்டரை நீக்குவதற்கு முன் லேபிளை ரத்துசெய்யவும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆர்டர்கள் பகுதிக்குச் செல்லவும்.

  2. காப்பகப்படுத்தப்பட்ட அல்லது ரத்துசெய்யப்பட்ட ஆர்டரைக் கிளிக் செய்யவும்.

  3. ஆர்டரை நீக்கு என்பதைக் கிளிக் செய்து, பிறகு உறுதிப்படுத்த ஆர்டரை நீக்கு என்பதை மீண்டும் கிளிக் செய்யவும்.