வரைவு ஆர்டர்களுக்கான பேமெண்ட்டைப் பெறுதல்

ஒரு வரைவு ஆர்டருக்கு வாடிக்கையாளர் பணம் செலுத்தத் தயாராக இருக்கும்போது, நீங்கள் ஒரு இன்வாய்ஸ் அல்லது செக்அவுட் இணைப்பை அனுப்ப முடியும், அதன்மூலம் உங்கள் வாடிக்கையாளர் தங்கள் சொந்தக் கட்டணத் தகவலை உள்ளிட்டு, ஆன்லைன் செக்அவுட்டிலிருந்து ஆர்டருக்குப் பணம் செலுத்தலாம்.

இல்லையெனில், உங்கள் வாடிக்கையாளரின் பில்லிங் தகவல் உங்களிடம் இருந்தால், வரைவு ஆர்டர்களுக்கான பேமெண்ட்டை நீங்கள் கிரெடிட் கார்டு மூலமாக மேனுவலாக ஏற்கலாம். பேமெண்ட்டை நீங்கள் ஏற்கனவே பெற்றிருந்தால் ஆர்டருக்குப் பணம் செலுத்தப்பட்டதாகக் குறிக்கலாம். வரைவு ஆர்டருக்கான பேமெண்ட்டை நீங்கள் ஏற்கும் போது, அது ஆர்டர்கள் பக்கத்தில் ஆர்டராக மாறும்.

வரைவு ஆர்டர்களுக்கான பேமெண்ட்டைப் பெறும்போது கவனிக்க வேண்டியவை

உங்கள் வரைவு ஆர்டர்களுக்கான பேமெண்ட்டுகளை ஏற்கும் முன், கவனிக்க வேண்டிய பின்வரும் விஷயங்களை மதிப்பாய்வு செய்யவும்:

  • Shopify Payments மூலமாக மட்டுமே கிரெடிட் கார்டுகள் வழியிலான மேனுவல் பேமெண்ட்டை உங்களால் ஏற்க முடியும்.
  • ஏதேனும் சந்தாத் தயாரிப்புகள் அடங்கிய வரைவு ஆர்டர்களைப் பணம் செலுத்தப்பட்டதாகக் குறிப்பதற்கும், கிரெடிட் கார்டு மூலம் பேமெண்ட்டை ஏற்பதற்குமான ஆதரவு விரைவில் வரவிருக்கிறது. அதுவரை, வரைவு ஆர்டரை முடிக்க, உங்கள் வாடிக்கையாளருக்கு இன்வாய்ஸை அனுப்பவும் அல்லது செக்அவுட் இணைப்பைப் பகிரவும்.
  • வரைவு ஆர்டர்களுக்கான கிரெடிட் கார்டு பேமெண்ட்டுகளை ஏற்க, நீங்கள் Shopify Payments இன் சரிபார்ப்புச் செயல்முறையை நிறைவு செய்ய வேண்டும்.
  • நீங்கள் Shopify Payments அல்லாத பிற நேரடிக் கட்டண வழங்குநர்கள் மூலம் பேமெண்ட்டுகளைப் பெற்றால், வாடிக்கையாளர் தகவலை இவ்வழியில் கையாள்வது PCI இணக்கத் தேவைகளைப் பாதிக்குமா என்பதை உங்கள் வழங்குநரிடம் சரிபார்க்கவும்.
  • தயாரிப்பு விலை அல்லது ஷிப்பிங் கட்டணம் மாறுவது போன்ற காரணங்களால் Shopify நிர்வாகியில் தற்போது கிடைக்கும் தகவல்களை விட உங்கள் வரைவு ஆர்டர் குறித்த விவரங்கள் காலாவதியானதாக இருந்தால், பேமெண்ட்டைப் பெறுவதற்கு முன்பாக நீங்கள் சிக்கல்களைத் தீர்த்து மாற்றங்களைப் பயன்படுத்த வேண்டும்.
  • உங்கள் செக்அவுட்டில் நீங்கள் செயல்படுத்தியிருக்கும் கட்டண முறைத் தனிப்பயனாக்கங்கள் இயல்பாகவே வரைவு ஆர்டர் செக்அவுட்டுகளுக்குப் பொருந்தும். உருவாக்கப்பட்ட வரைவு ஆர்டர்கள் உங்கள் Shopify நிர்வாகியில் கட்டண முறைத் தனிப்பயனாக்கங்களைக் காட்டாது, ஆனால் செக்அவுட்டில் அந்தத் தனிப்பயனாக்கங்கள் தொடர்ந்து பொருந்தும்.
  • செயல்திறனை மேம்படுத்துவதற்காக, 1 ஏப்ரல் 2025 அன்றும் அதற்குப் பிறகும் உருவாக்கப்பட்ட வரைவு ஆர்டர்கள் 1 ஆண்டு வரை செயல்பாட்டில் இல்லை எனில் தானாகவே நீக்கப்படும். வரைவு ஆர்டரில் செய்யப்படும் எந்தவொரு திருத்தமும், இந்த நேர அளவீட்டை மீட்டமைக்கும்.

வரைவு ஆர்டர்களுக்கான பரிவர்த்தனைக் கட்டணம்

பின்வரும் சூழ்நிலைகளில் வரைவு ஆர்டர்களுக்கு உங்களிடம் மூன்றாம் தரப்புப் பரிவர்த்தனைக் கட்டணம் வசூலிக்கப்படாது:

பேமெண்ட்டுகளை ஏற்க, ஆதரிக்கப்படும் மூன்றாம் தரப்பு நேரடிக் கிரெடிட் கார்டு கட்டண வழங்குநரை நீங்கள் பயன்படுத்தினால், ஆன்லைன் ஆர்டர்களுக்காக நீங்கள் செலுத்துவதைப் போலவே கிரெடிட் கார்டு கொள்முதல்களைச் செயலாக்கும்போதும் அதே மூன்றாம் தரப்புப் பரிவர்த்தனைக் கட்டணங்களைச் செலுத்துவீர்கள்.

வரைவு ஆர்டரில் பணம் செலுத்தப்பட்டதாகப் பேமெண்ட்டைக் குறித்தல்

தற்போதைய ஆர்டருக்கான பேமெண்ட்டை நீங்கள் ஏற்கனவே பெற்றிருந்தால் அல்லது வேறு பிளாட்ஃபார்மில் உள்ள முந்தைய ஆர்டரை உங்களின் Shopify நிர்வாகியில் இறக்குமதி செய்தால், நீங்கள் அந்த ஆர்டருக்குப் பணம் செலுத்தப்பட்டதாகக் குறிக்கலாம். பெறப்பட்ட தொகையானது உங்களின் கட்டண வழங்குநரால் மீண்டும் பெறப்படாது, மேலும் வாடிக்கையாளர் ஆர்டர் உறுதிப்படுத்தல் மின்னஞ்சலைப் பெறுவார்.

நீங்கள் சர்வதேச விற்பனைக் கருவிகளைப் பயன்படுத்தினால், வாடிக்கையாளரின் உள்ளூர் நாணயத்தில் காட்டப்படும் மதிப்பானது உங்கள் கடையின் நாணயத்திற்கு மாற்றப்பட்டதே பெறப்பட்ட தொகை மதிப்பாகும். இந்த மாற்றம் நேரலை நாணய மாற்று வீதத்தின் அடிப்படையில் இருக்கும். அறிக்கையிடல் நோக்கங்களுக்காக, நீங்கள் பெற்ற தொகையானது காட்டப்படும் தொகையிலிருந்து வேறுபட்டிருந்தால், அதைப் புதுப்பிக்கவும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆர்டர்கள் > வரைவுகள் பகுதிக்குச் செல்லவும்.

  2. பணம் செலுத்தப்பட்டதாகக் குறிக்க வேண்டிய, ஏற்கனவே உள்ள வரைவு ஆர்டரைக் கிளிக் செய்யவும்.

  3. பேமெண்ட் பிரிவில், பேமெண்ட்டைப் பெறு என்பதைக் கிளிக் செய்து, பின்னர் பணம் செலுத்தப்பட்டதாகக் குறி என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. விருப்பத்தேர்வு: பெறப்பட்ட தொகை மதிப்பானது நீங்கள் பெற்ற தொகையிலிருந்து வேறுபட்டிருந்தால், மதிப்பைப் புதுப்பிக்கவும்.

  5. ஆர்டரை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

  6. விருப்பத்தேர்வு: ஆர்டரில் ஏதேனும் செக்அவுட் சரிபார்ப்பு விதிகள் பூர்த்தி செய்யப்படாவிட்டால், பூர்த்தி செய்ய வேண்டிய விதிகளின் பட்டியலுடன் ஒரு எச்சரிக்கை காட்டப்படும். பின்வரும் செயல்களில் ஏதேனும் ஒன்றைச் செய்யவும்:

    • பேமெண்ட்டை ரத்துசெய்துவிட்டு, வரைவு ஆர்டரை மாற்றியமைக்கத் திரும்ப, ரத்துசெய் என்பதைக் கிளிக் செய்யவும்.
    • விதியைப் புறக்கணித்துவிட்டு, ஆர்டருக்குப் பணம் செலுத்தப்பட்டதாகக் குறிக்க, புறக்கணித்துவிட்டு ஆர்டரை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

உங்கள் ஆர்டரை உருவாக்கிய பிறகு, ஆர்டர்கள் பக்கத்திலிருந்து அதனை அணுகலாம்.

வரைவு ஆர்டருக்காகக் கிரெடிட் கார்டு மூலமாகப் பேமெண்ட்டை மேனுவலாக ஏற்றல்

உங்கள் வாடிக்கையாளரின் பில்லிங் தகவல் உங்களிடம் இருந்தால், கிரெடிட் கார்டு மூலமாக உங்களால் ஆர்டருக்கான பேமெண்ட்டை ஏற்க முடியும். இந்தக் கட்டண முறையானது Shopify Payments மூலமாக மட்டுமே கிடைக்கும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆர்டர்கள் > வரைவுகள் பகுதிக்குச் செல்லவும்.

  2. எந்த வரைவு ஆர்டருக்காகக் கிரெடிட் கார்டு பேமெண்ட்டை ஏற்க விரும்புகிறீர்களோ, அந்த இருக்கும் வரைவு ஆர்டரைக் கிளிக் செய்யவும்.

  3. பேமெண்ட் பிரிவில், பேமெண்ட்டைப் பெறு என்பதைக் கிளிக் செய்து, பின்னர் கிரெடிட் கார்டு என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. வாடிக்கையாளரின் பில்லிங் மற்றும் கிரெடிட் கார்டு தகவலை உள்ளிடவும்.

  5. உங்கள் பேமெண்ட் அமைப்புகளை உறுதிப்படுத்தவும், உங்கள் வரைவு ஆர்டரிலிருந்து ஒரு ஆர்டரை உருவாக்கவும் கட்டணம் என்பதைக் கிளிக் செய்யவும். இந்தப் பொத்தான் ஆர்டரின் மொத்த மதிப்பைக் காண்பிக்கும்.

  6. விருப்பத்தேர்வு: ஆர்டரில் ஏதேனும் செக்அவுட் சரிபார்ப்பு விதிகள் பூர்த்தி செய்யப்படாவிட்டால், பூர்த்தி செய்ய வேண்டிய விதிகளின் பட்டியலுடன் ஒரு எச்சரிக்கை காட்டப்படும். பின்வரும் செயல்களில் ஏதேனும் ஒன்றைச் செய்யவும்:

    • பேமெண்ட்டை ரத்துசெய்துவிட்டு, வரைவு ஆர்டரை மாற்றியமைக்கத் திரும்ப, ரத்துசெய் என்பதைக் கிளிக் செய்யவும்.
    • விதியைப் புறக்கணித்துவிட்டு, ஆர்டருக்குப் பணம் செலுத்தப்பட்டதாகக் குறிக்க, புறக்கணித்துவிட்டு ஆர்டரை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

காலாவதியான வரைவு ஆர்டர்களின் சிக்கல்களைத் தீர்த்தல்

நீங்கள் ஒரு வரைவு ஆர்டரை உருவாக்கும்போது, அதில் சேர்க்கப்படும் கூறுகள் (தயாரிப்புகள், ஷிப்பிங் கட்டணங்கள் போன்றவை) வரைவு ஆர்டரில் சேர்க்கப்பட்ட நேரத்தில் இருந்தவற்றின் உள்ளமைவுகளின் அடிப்படையில் தோன்றும். நீங்கள் அதனை நிறைவுசெய்ய முயலும்போது வரைவு ஆர்டரில் உள்ள ஏதேனும் ஒரு கூறில் மாற்றம் ஏற்பட்டிருந்தால், எடுத்துக்காட்டாக, தயாரிப்பு ஒன்று நீக்கப்பட்டிருந்தால் அல்லது ஷிப்பிங் கட்டணம் மாறியிருந்தால் அது குறித்து உங்களுக்கு அறிவிக்கப்படும். நீங்கள் வரைவு ஆர்டரில் மேனுவலாக மாற்றங்களைச் செய்யலாம் அல்லது புதுப்பிப்புகளை ஏற்றுக்கொண்டு ஆர்டரைத் தானாகவே நிறைவுசெய்யலாம்.

பின்வரும் வகையான மாற்றங்கள் குறித்து உங்களுக்கு அறிவிக்கப்படும்:

  • ஒரு தயாரிப்பு அல்லது மாறுபாடு நீக்கப்பட்டது.
  • ஒரு தயாரிப்பு அல்லது மாறுபாட்டின் விலை மாற்றப்பட்டது. விலை முடக்கத்தால் பாதிக்கப்பட்ட தயாரிப்புகளுக்கு இது பொருந்தாது.
  • ஒரு ஷிப்பிங் கட்டணம் இப்போது கிடைக்கவில்லை.
  • ஒரு ஷிப்பிங் கட்டணத்தின் விலை மாற்றப்பட்டது.

இந்த வரைவு ஆர்டருக்கான புதிய புதுப்பிப்புகள் என்ற அறிவிப்பைப் பெறும்போது, நீங்கள் பின்வரும் செயல்களில் ஏதேனும் ஒன்றை மேற்கொள்ளலாம்:

  • வரைவு ஆர்டரை மதிப்பாய்வு செய்: ஆர்டரில் எல்லாப் புதுப்பிப்புகளும் பயன்படுத்தப்பட்ட நிலையுடன், ஆனால் சேமிக்கப்படாத நிலையுடன் வரைவு ஆர்டர் எடிட்டருக்குத் திரும்பலாம். நீங்கள் தயாரிப்புகளில் மேனுவலாக மாற்றங்களைச் செய்யலாம் அல்லது பிரத்தியேகத் தள்ளுபடிகள் அல்லது ஷிப்பிங் கட்டணங்களைப் பயன்படுத்தலாம்.
  • ஆர்டரை உருவாக்கு: ஆர்டரில் புதுப்பிப்புகளைத் தானாகவே பயன்படுத்தி ஆர்டரை நிறைவுசெய்வதைத் தொடரவும்.