ஒரு ஆர்டரில் தள்ளுபடிகளைத் திருத்துதல்
ஆர்டரில் உள்ள ஒரு உருப்படிக்குத் தள்ளுபடியைச் சேர்க்க, மாற்றியமைக்க அல்லது அகற்ற உங்கள் ஆர்டரைத் திருத்தலாம், மேலும் நிறைவேற்றப்பட்ட மற்றும் நிறைவேற்றப்படாத உருப்படிகள் இரண்டிற்குமான தள்ளுபடிகளையும் நீங்கள் நிர்வகிக்கலாம். முழு ஆர்டருக்கும் பொருந்தக்கூடிய பிரத்தியேகத் தள்ளுபடியையும் நீங்கள் சேர்க்கலாம், திருத்தலாம் அல்லது அகற்றலாம். ஒரு ஆர்டரைச் செய்த பிறகு தள்ளுபடிகளைத் திருத்துவது, ஆர்டரை ரத்து செய்து மீண்டும் உருவாக்காமல் வாடிக்கையாளர் கோரிக்கைகளை ஏற்கவும், விலைப் பிழைகளைச் சரிசெய்யவும் அல்லது விளம்பரச் சலுகைகளைப் பயன்படுத்தவும் உதவும்.
ஒரு ஆர்டரை நீங்கள் திருத்தும்போது, இந்த மாற்றங்களைப் பிரதிபலிக்கும் வகையில் ஆர்டரின் மொத்தம் புதுப்பிக்கப்படும், மேலும் வாடிக்கையாளருக்குப் பணத்தைத் திரும்ப வழங்க வேண்டுமா அல்லது உங்களுக்கு இருப்புத் தொகை வர வேண்டுமா என்பதை ஆர்டர் காட்டும். உங்கள் ஆர்டருக்கான சரிசெய்தலைப் பொறுத்து, உங்கள் வாடிக்கையாளருக்குப் பணத்தைத் திரும்ப வழங்க அல்லது அவரிடமிருந்து பேமெண்ட்டை வசூலிக்க வேண்டியிருக்கலாம்.
ஆர்டரைத் திருத்துவதற்கான ஓட்டத்திற்குச் செல்லாமல், பணத்தைத் திரும்பப்பெறுதல் பக்கத்திலிருந்து நேரடியாக ஒரு வரிசை உருப்படிக்குத் தள்ளுபடியையும் பயன்படுத்தலாம்.
ஒரு ஆர்டரைத் திருத்துவதற்கு முன், தள்ளுபடியைத் திருத்துவதற்கான வரம்புகள் உள்ளிட்ட ஆர்டர்களைத் திருத்துவதற்கான பரிசீலனைகளை மதிப்பாய்வு செய்யவும்.
இந்தப் பக்கத்தில்
- ஒரு ஆர்டரில் உள்ள உருப்படிக்குத் தள்ளுபடியைச் சேர்த்தல்
- ஒரு ஆர்டரில் உள்ள உருப்படிக்கான தள்ளுபடியைச் சரிசெய்தல்
- ஒரு ஆர்டரில் உள்ள உருப்படியிலிருந்து தள்ளுபடியை அகற்றுதல்
- ஆர்டருக்குப் பிரத்தியேகத் தள்ளுபடியைச் சேர்த்தல்
- ஆர்டருக்கான பிரத்தியேகத் தள்ளுபடியைத் திருத்துதல்
- ஆர்டரிலிருந்து பிரத்தியேகத் தள்ளுபடியை அகற்றுதல்
- திருத்தப்பட்ட ஆர்டரை மதிப்பாய்வு செய்து புதுப்பித்தல்
ஒரு ஆர்டரில் உள்ள உருப்படிக்குத் தள்ளுபடியைச் சேர்த்தல்
ஒரு ஆர்டரில் உள்ள தனிப்பட்ட நிறைவேற்றப்பட்ட மற்றும் நிறைவேற்றப்படாத உருப்படிகளுக்கு நீங்கள் தள்ளுபடியைச் சேர்க்கலாம்.
ஒரே வரிசையில் ஒரு உருப்படியின் பல அளவுகளை நீங்கள் கொண்டிருந்தால், முழு வரிசை உருப்படிக்கும் ஒரு தள்ளுபடியை நீங்கள் பயன்படுத்தலாம். உருப்படிகள் தனித்தனி வரிசை உருப்படிகளாகப் பட்டியலிடப்பட்டிருந்தால், ஒவ்வொரு வரிசை உருப்படிக்கும் தனித்தனியாக நீங்கள் தள்ளுபடியைச் சேர்க்க வேண்டும்.
ஒரு வரிசை உருப்படி பகுதியளவு நிறைவேற்றப்பட்டிருந்தால், அந்த உருப்படிக்கு நீங்கள் தள்ளுபடியைச் சேர்க்க முடியாது. எடுத்துக்காட்டாக, 1 அளவு நிறைவேற்றப்படாமல், 2 அளவுகள் நிறைவேற்றப்பட்டு, அவை ஒரே வரிசை உருப்படியிலிருந்து வந்தால், இவற்றில் எந்த அளவுக்கும் நீங்கள் தள்ளுபடியைச் சேர்க்க முடியாது.
படிகள்:
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆர்டர்கள் என்பதற்குச் செல்லவும்.
நீங்கள் திருத்த விரும்பும் ஆர்டரைக் கிளிக் செய்யவும்.
திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
நீங்கள் தள்ளுபடியைச் சேர்க்க விரும்பும் உருப்படிக்கு, அதன் விலையைக் கிளிக் செய்யவும்.
தள்ளுபடி வகை கீழ்தோன்றும் மெனுவிலிருந்து, தள்ளுபடி வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
நீங்கள் தேர்ந்தெடுக்கும் தள்ளுபடி வகையைப் பொறுத்து, தள்ளுபடி மதிப்பு (ஒரு யூனிட்டிற்கு) அல்லது தள்ளுபடி மதிப்பு புலத்தில் தள்ளுபடித் தொகையை உள்ளிடவும்.
விருப்பத்தேர்வு: தள்ளுபடிக்கான காரணம் புலத்தில், தள்ளுபடிக்கான காரணம் குறித்த குறிப்பை உள்ளிடவும். இந்தக் குறிப்பு உங்கள் வாடிக்கையாளருக்குக் காட்டப்படும்.
முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.
ஆர்டரைத் திருத்தி முடித்த பிறகு, ஆர்டரை மதிப்பாய்வு செய்து புதுப்பிக்கவும்.
மொபைல்
Shopify செயலியிலிருந்து,
ஐகானைத் தட்டவும் .
நீங்கள் திருத்த விரும்பும் ஆர்டரைத் தட்டவும்.
அல்லது
என்பதைத் தட்டி, பின்னர் திருத்து என்பதைத் தட்டவும்.
நீங்கள் தள்ளுபடியைச் சேர்க்க விரும்பும் உருப்படிக்கு, அதன் விலையைத் தட்டவும்.
தள்ளுபடி வகை கீழ்தோன்றும் மெனுவிலிருந்து, தள்ளுபடி வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
நீங்கள் தேர்ந்தெடுக்கும் தள்ளுபடி வகையைப் பொறுத்து, தள்ளுபடி மதிப்பு (ஒரு யூனிட்டிற்கு) அல்லது தள்ளுபடி மதிப்பு புலத்தில் தள்ளுபடித் தொகையை உள்ளிடவும்.
விருப்பத்தேர்வு: தள்ளுபடிக்கான காரணம் புலத்தில், தள்ளுபடிக்கான காரணம் குறித்த குறிப்பை உள்ளிடவும். இந்தக் குறிப்பு உங்கள் வாடிக்கையாளருக்குக் காட்டப்படும்.
சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்.
மாற்றங்களை மதிப்பாய்வு செய் என்பதைத் தட்டி, உங்கள் ஆர்டரில் செய்யப்பட்ட மாற்றங்களை மதிப்பாய்வு செய்து, பின்னர் ஆர்டரைப் புதுப்பி என்பதைத் தட்டவும்.
ஆர்டரிலுள்ள உருப்படிக்குத் தள்ளுபடியைச் சரிசெய்தல்
ஆர்டரில் ஏற்கனவே உள்ள உருப்படிக்கு நீங்கள் மேனுவலாகத் தள்ளுபடியைச் சரிசெய்யலாம்.
படிகள்:
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆர்டர்கள் என்பதற்குச் செல்லவும்.
நீங்கள் திருத்த விரும்பும் ஆர்டரைக் கிளிக் செய்யவும்.
திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
நீங்கள் தள்ளுபடியைச் சரிசெய்ய விரும்பும் உருப்படிக்கு, அதன் விலையைக் கிளிக் செய்து, பின்னர் நீங்கள் திருத்த விரும்பும் தள்ளுபடியைக் கிளிக் செய்யவும்.
தள்ளுபடி விவரங்களைச் சரிசெய்யவும்.
முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.
ஆர்டரைத் திருத்தி முடித்த பிறகு, ஆர்டரை மதிப்பாய்வு செய்து புதுப்பிக்கவும்.
மொபைல்
- Shopify செயலியிலிருந்து,
ஐகானைத் தட்டவும் .
- நீங்கள் திருத்த விரும்பும் ஆர்டரைத் தட்டவும்.
அல்லது
என்பதைத் தட்டி, பின்னர் திருத்து என்பதைத் தட்டவும்.
- நீங்கள் தள்ளுபடியைச் சரிசெய்ய விரும்பும் உருப்படிக்கு, அதன் விலையைத் தட்டி, பின்னர் நீங்கள் திருத்த விரும்பும் தள்ளுபடியைத் தட்டவும்.
- தள்ளுபடி விவரங்களைத் திருத்தி, பின்னர் முடிந்தது என்பதைத் தட்டவும்
- மாற்றங்களை மதிப்பாய்வு செய் என்பதைத் தட்டி, உங்கள் ஆர்டரில் செய்யப்பட்ட மாற்றங்களை மதிப்பாய்வு செய்து, பின்னர் ஆர்டரைப் புதுப்பி என்பதைத் தட்டவும்.
ஆர்டரிலுள்ள உருப்படியிலிருந்து தள்ளுபடியை அகற்றுதல்
ஆர்டரில் ஏற்கனவே உள்ள உருப்படியிலிருந்து தள்ளுபடியை நீங்கள் அகற்றலாம்.
படிகள்:
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆர்டர்கள் என்பதற்குச் செல்லவும்.
நீங்கள் திருத்த விரும்பும் ஆர்டரைக் கிளிக் செய்யவும்.
திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
நீங்கள் எந்த உருப்படியிலிருந்து தள்ளுபடியை அகற்ற விரும்புகிறீர்களோ அதன் விலையைக் கிளிக் செய்து, பின்னர் தள்ளுபடியை அகற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
ஆர்டரைத் திருத்தி முடித்த பிறகு, ஆர்டரை மதிப்பாய்வு செய்து புதுப்பிக்கவும்.
மொபைல்
- Shopify செயலியிலிருந்து,
ஐகானைத் தட்டவும் .
- நீங்கள் திருத்த விரும்பும் ஆர்டரைத் தட்டவும்.
அல்லது
என்பதைத் தட்டி, பின்னர் திருத்து என்பதைத் தட்டவும்.
- நீங்கள் எந்த உருப்படியிலிருந்து தள்ளுபடியை அகற்ற விரும்புகிறீர்களோ அதன் விலையைத் தட்டி, தள்ளுபடி விவரங்களைத் திறக்கவும்.
- தள்ளுபடியை அகற்று என்பதைத் தட்டவும்.
- மாற்றங்களை மதிப்பாய்வு செய் என்பதைத் தட்டி, உங்கள் ஆர்டரில் செய்யப்பட்ட மாற்றங்களை மதிப்பாய்வு செய்து, பின்னர் ஆர்டரைப் புதுப்பி என்பதைத் தட்டவும்.
ஆர்டருக்குப் பிரத்தியேகத் தள்ளுபடியைச் சேர்த்தல்
முழு ஆர்டருக்கும் பொருந்தக்கூடிய ஒரு பிரத்தியேகத் தள்ளுபடியை நீங்கள் சேர்க்கலாம். பிரத்தியேகத் தள்ளுபடியானது நிலையான தொகையாகவோ அல்லது சதவீதமாகவோ இருக்கலாம், மேலும் இது ஆர்டரில் உள்ள தனிப்பட்ட உருப்படிகளுக்கான தள்ளுபடிகளுடன் கூடுதலாகப் பொருந்தும்.
தள்ளுபடிக் குறியீடு அல்லது தானியங்கு தள்ளுபடி போன்ற பிற ஆர்டர் தள்ளுபடிகள் ஏற்கனவே ஆர்டரில் இருந்தால், அவை பேமெண்ட் பிரிவில் காட்டப்படும். ஆர்டரைத் திருத்தும்போது தற்போதைய இந்தத் தள்ளுபடிகளை உங்களால் மாற்றவோ அகற்றவோ முடியாது.
பிரத்தியேகத் தள்ளுபடியைச் சேர்ப்பதற்கு முன், பிரத்தியேக ஆர்டர் தள்ளுபடிகளைச் சேர்ப்பதற்கான கவனிப்புக்குரியவைகளை மதிப்பாய்வு செய்யவும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆர்டர்கள் என்பதற்குச் செல்லவும்.
நீங்கள் திருத்த விரும்பும் ஆர்டரைக் கிளிக் செய்யவும்.
திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
பேமெண்ட் பிரிவில், பிரத்தியேகத் தள்ளுபடியைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
வகை கீழ்தோன்றும் மெனுவைக் கிளிக் செய்து, பின்னர் தொகை அல்லது சதவீதம் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
நீங்கள் தேர்ந்தெடுக்கும் வகையைப் பொறுத்து, தள்ளுபடி மதிப்பு அல்லது தள்ளுபடி சதவீதம் புலத்தில், தள்ளுபடித் தொகையை உள்ளிடவும்.
விருப்பத்தேர்வு: தள்ளுபடிக்கான காரணம் புலத்தில், தள்ளுபடிக்கான காரணத்தை உள்ளிடவும். இந்த காரணம் உங்கள் வாடிக்கையாளருக்குக் காட்டப்படும்.
முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.
ஆர்டரைத் திருத்தி முடித்த பிறகு, ஆர்டரை மதிப்பாய்வு செய்து புதுப்பிக்கவும்.
ஆர்டருக்கான பிரத்தியேகத் தள்ளுபடியைத் திருத்துதல்
முழு ஆர்டருக்கும் பொருந்தக்கூடிய பிரத்தியேகத் தள்ளுபடியின் வகை, மதிப்பு அல்லது காரணத்தை நீங்கள் மாற்றலாம். மாற்றத்தினால் ஆர்டரின் மொத்தத் தொகை குறைந்தால், உங்கள் வாடிக்கையாளருக்குத் திரும்பப்பெற வேண்டிய தொகை பேமெண்ட் பிரிவில் காட்டப்படும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆர்டர்கள் என்பதற்குச் செல்லவும்.
நீங்கள் திருத்த விரும்பும் ஆர்டரைக் கிளிக் செய்யவும்.
திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
பேமெண்ட் பிரிவில், பிரத்தியேகத் தள்ளுபடியைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
தள்ளுபடி வகை, மதிப்பு அல்லது காரணத்தை மாற்றவும்.
முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.
ஆர்டரைத் திருத்தி முடித்த பிறகு, ஆர்டரை மதிப்பாய்வு செய்து புதுப்பிக்கவும்.
ஆர்டரிலிருந்து பிரத்தியேகத் தள்ளுபடியை அகற்றுதல்
முழு ஆர்டருக்கும் பொருந்தக்கூடிய பிரத்தியேகத் தள்ளுபடியை நீங்கள் அகற்றலாம். தள்ளுபடியை அகற்றும் போது, ஆர்டரின் மொத்தத் தொகை அதிகரிக்கும், எனவே நீங்கள் வித்தியாசத் தொகையை உங்கள் வாடிக்கையாளரிடமிருந்து வசூலிக்க வேண்டியிருக்கலாம்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆர்டர்கள் என்பதற்குச் செல்லவும்.
நீங்கள் திருத்த விரும்பும் ஆர்டரைக் கிளிக் செய்யவும்.
திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
பேமெண்ட் பிரிவில், பிரத்தியேகத் தள்ளுபடியைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
பிரத்தியேகத் தள்ளுபடி பிரிவில், அகற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.
ஆர்டரைத் திருத்தி முடித்த பிறகு, ஆர்டரை மதிப்பாய்வு செய்து புதுப்பிக்கவும்.
திருத்தப்பட்ட ஆர்டரை மதிப்பாய்வு செய்து புதுப்பித்தல்
ஒரு ஆர்டரைத் திருத்திய பிறகு, புதுப்பிக்கப்பட்ட ஆர்டரின் மொத்தத் தொகையை மதிப்பாய்வு செய்து அது சரியாக உள்ளதா எனச் சரிபார்க்க வேண்டும். நீங்கள் செய்யும் திருத்தங்களைப் பொறுத்து, செக்அவுட்டில் உங்கள் வாடிக்கையாளர் செலுத்திய தொகையைவிட ஆர்டரின் மொத்தச் செலவு அதிகரிக்கலாம் அல்லது குறையலாம்.
ஆர்டர்களைத் திருத்தும்போது நிதியின் ஓட்டம் குறித்தும், குறிப்பிட்ட சூழ்நிலைகளில் நீங்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் மேலும் அறிய, பின்வரும் அட்டவணையை மதிப்பாய்வு செய்யவும்.
| சூழ்நிலை | எடுத்துக்காட்டு | நடவடிக்கை |
|---|---|---|
| மொத்த ஆர்டர் மதிப்பு குறைகிறது, எனவே வாடிக்கையாளருக்கு நீங்கள் பணத்தைத் திருப்பித் தர வேண்டும். நீங்கள் திருப்பித் தர வேண்டிய தொகை இருப்பதை ஆர்டர் சுருக்கம் காட்டும். | ஆர்டரிலுள்ள ஓர் உருப்படியை அகற்றுதல் அல்லது அதன் அளவைக் குறைத்தல். | உங்கள் வாடிக்கையாளருக்கு நீங்கள் பணத்தைத் திரும்பப்பெறுதலை வழங்க வேண்டும். நீங்கள் ஆர்டரைத் திருத்தி உங்கள் வாடிக்கையாளருக்கு அறிவிப்பை அனுப்புவதால் மட்டும் பணத்தைத் திரும்பப்பெறுதல் நிறைவடையாது. ஆர்டரைப் புதுப்பித்த பிறகு, வாடிக்கையாளருக்குப் பணத்தைத் திரும்ப வழங்க வேண்டும். |
| ஆர்டரின் மொத்தத் தொகை அதிகரிக்கிறது, எனவே வாடிக்கையாளர் உங்களுக்குப் பணம் செலுத்த வேண்டும். வசூலிக்க வேண்டிய தொகை இருப்பதை ஆர்டர் சுருக்கம் காட்டும். | புதிய தயாரிப்பைச் சேர்த்தல், உருப்படியின் அளவை அதிகரித்தல் அல்லது பிரத்தியேக ஷிப்பிங் கட்டணத்தைச் சேர்த்தல். | செக்அவுட் பக்கத்திற்கான இணைப்புடன் உங்கள் வாடிக்கையாளருக்கு விலைப்பட்டியலை அனுப்பி பேமெண்டை வசூலிக்க வேண்டும் அல்லது அந்த ஆர்டருக்கான பேமெண்டை நீங்கள் ஏற்கலாம். |
| ஆர்டரின் மொத்தத் தொகை மாறாது. | 0 விலையுள்ள பிரத்தியேக உருப்படியை நீங்கள் சேர்க்கிறீர்கள். | எந்த நடவடிக்கையும் தேவையில்லை. இந்தத் திருத்தம் குறித்த அறிவிப்பை உங்கள் வாடிக்கையாளருக்கு அனுப்ப வேண்டுமா என்பதை நீங்கள் தேர்வுசெய்யலாம். |
நீங்கள் ஆர்டரைத் திருத்திய பிறகு, வார்ப்புருவைத் திருத்துவதன் மூலம் வாடிக்கையாளருக்கு அனுப்பப்படும் ஆர்டர் திருத்த விலைப்பட்டியலையோ அறிவிப்பையோ தனிப்பயனாக்கலாம்.