ஆர்டர்களை ஏற்றுமதி செய்தல்

உங்களின் முழுமையான ஆர்டர் தகவலின் விரிவான கண்ணோட்டத்தைக் காண, உங்கள் Shopify நிர்வாகியிலுள்ள ஆர்டர்கள் பக்கத்திலிருந்து உங்கள் ஆர்டர்களின் கமா மூலம் பிரிக்கப்பட்ட மதிப்புகள் (CSV) கொண்ட விரிதாளை நீங்கள் ஏற்றுமதி செய்யலாம்.

ஆர்டர்களை ஏற்றுமதி செய்தல்

உங்கள் ஆர்டர்களை அவற்றின் பரிவர்த்தனை வரலாற்றுடன் ஏற்றுமதி செய்யத் தேர்வுசெய்யலாம். உங்கள் CSV கோப்பில் சேர்க்கப்பட்டுள்ள பரிவர்த்தனை வரலாற்றில், கைப்பற்றப்பட்ட பேமெண்ட்டுகளின் தரவு மட்டுமே இருக்கும். நீங்கள் ஏற்றுமதி செய்த பரிவர்த்தனை வரலாற்றில் அங்கீகாரத் தரவு சேர்க்கப்படவில்லை.

உங்கள் ஆர்டர்களை நீங்கள் எவ்வாறு ஏற்றுமதி செய்யத் தேர்வுசெய்கிறீர்கள் என்பதைப் பொறுத்து, CSV கோப்பு மின்னஞ்சல் மூலம் உங்களுக்கு அனுப்பப்படும் அல்லது உங்கள் சாதனத்தில் பதிவிறக்கப்படும்:

  • நீங்கள் 50 ஆர்டர்கள் வரை அல்லது தற்போதைய ஆர்டர்களின் பக்கத்தை ஏற்றுமதி செய்யத் தேர்ந்தெடுத்தால், CSV கோப்பு உங்கள் சாதனத்தில் பதிவிறக்கப்படும்.
  • நீங்கள் 51 ஆர்டர்களுக்கும் மேலாக ஏற்றுமதி செய்ய அல்லது தேதி வாரியாக ஆர்டர்களை ஏற்றுமதி செய்யத் தேர்ந்தெடுத்தால், CSV கோப்பு உங்களுக்கும் கடையின் உரிமையாளருக்கும் மின்னஞ்சலில் அனுப்பப்படும்.

ஏற்றுமதி தோல்வியடைந்தால், இந்தத் தகவலுடன் ஒரு மின்னஞ்சலைப் பெறுவீர்கள்.

உங்கள் ஆர்டர் ஏற்றுமதிக்கான கால அளவு, நீங்கள் எத்தனை ஆர்டர்களை ஏற்றுமதி செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. எடுத்துக்காட்டாக, 100,000 க்கும் குறைவான உருப்படிகளைக் கொண்ட ஏற்றுமதி ஒரு மணிநேரத்திற்குள் முடிவடையலாம், அதே நேரத்தில் 400,000 உருப்படிகளைக் கொண்ட ஏற்றுமதிக்கு சுமார் 4 மணிநேரம் ஆகலாம்.

படிகள்:

  1. உங்கள் ஆர்டர்களை வரிசைப்படுத்தி, வடிகட்டவும்.
  2. ஆர்டர்கள் பக்கத்திலிருந்து, ஏற்றுமதி செய் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. ஆர்டர்களை ஏற்றுமதி செய் சாளரத்தில்:
  4. நீங்கள் ஏற்றுமதி செய்ய விரும்பும் ஆர்டர்களுக்கான விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். எடுத்துக்காட்டாக, உங்கள் ஆர்டர்களைத் தேதி வாரியாக ஏற்றுமதி செய்ய விரும்பினால், தேதி வாரியான ஆர்டர்கள் என்பதைத் தேர்ந்தெடுத்து, நீங்கள் ஏற்றுமதி செய்ய விரும்பும் ஆர்டர்களுக்கான தொடக்க மற்றும் முடிவுத் தேதிகளை அமைக்கவும்.
  5. இவ்வாறு ஏற்றுமதி செய் என்பதன் கீழ், கோப்பு வடிவமைப்பு ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
  6. உங்கள் ஆர்டர்கள் பற்றிய அனைத்துத் தகவல்களையும் பதிவிறக்க விரும்பினால், ஆர்டர்களை ஏற்றுமதி செய் என்பதைக் கிளிக் செய்யவும். உங்களின் பரிவர்த்தனைத் தகவலை மட்டும் பதிவிறக்க விரும்பினால், பரிவர்த்தனை வரலாறுகளை ஏற்றுமதி செய் என்பதைக் கிளிக் செய்யவும்.

ஆர்டர் ஏற்றுமதி CSV கட்டமைப்பு

ஆர்டர்களை ஏற்றுமதி செய்யும்போது உருவாக்கப்படும் CSV கோப்பின் வடிவமைப்பைப் பின்வரும் அட்டவணை விவரிக்கிறது.

உங்களின் ஆர்டர் CSV கோப்பில், பல வரிசை உருப்படிகளைக் கொண்ட ஆர்டர்கள், அவற்றின் கூடுதல் வரிசை உருப்படிகளைத் தனித்தனி வரிகளில் காண்பிக்கும். ஒரே ஆர்டரில் பல உருப்படிகள் வாங்கப்பட்டதைக் குறிக்க பல புலங்கள் காலியாக விடப்பட்டிருக்கும்.

ஆர்டர் ஏற்றுமதி CSV கோப்பிலுள்ள ஒவ்வொரு ஹெடரின் விளக்கம்
ஹெடர்வரையறை
Nameஉங்கள் ஸ்டோர் நிர்வாகியில் காண்பிக்கப்படும் ஆர்டர் எண்.
Phoneவாடிக்கையாளரின் தொலைபேசி எண்.
Emailவாடிக்கையாளரின் மின்னஞ்சல் முகவரி.
Financial Statusஆர்டருக்கான பணம் செலுத்தப்பட்டதா, அங்கீகரிக்கப்பட்டதா, திரும்பப்பெறப்பட்டதா மற்றும் பல.
Paid atஆர்டருக்கான பேமெண்ட் கைப்பற்றப்பட்ட தேதி.
Fulfillment Statusஆர்டர் நிறைவேற்றப்பட்டதா அல்லது இன்னும் நிலுவையில் உள்ளதா என்பது.
Fulfilled atஆர்டருக்கான நிறைவேற்றம் முடிக்கப்பட்ட தேதி.
Accepts Marketingஉங்கள் ஸ்டோரிலிருந்து மார்க்கெட்டிங்கை ஏற்க வாடிக்கையாளர் ஒப்புக்கொண்டுள்ளாரா என்பது.
Currencyஆர்டர் செய்த நேரத்தில் உங்கள் ஸ்டோரின் அடிப்படை நாணயம்.
Subtotalஷிப்பிங் மற்றும் வரிகளுக்கு முன் ஆர்டரின் துணை மொத்தம்.
Shippingஆர்டருக்கான ஷிப்பிங்கின் மொத்தச் செலவு.
Taxesஆர்டருக்கு விதிக்கப்பட்ட வரிகளின் தொகை.
Totalஆர்டரின் மொத்தச் செலவு.
Discount Codeஆர்டருக்குப் பயன்படுத்தப்பட்ட தள்ளுபடிக் குறியீடு. தள்ளுபடிகள் மற்றும் வரைவு ஆர்டர்களுக்கு மேனுவலாகப் பயன்படுத்தப்பட்ட தள்ளுபடிகள் மட்டுமே இந்த நெடுவரிசையில் காண்பிக்கப்படும். இதில் தானியங்கு தள்ளுபடிகள் சேர்க்கப்படாது.
Discount Amountஆர்டருக்குப் பயன்படுத்தப்பட்ட தள்ளுபடித் தொகை.
Shipping Methodஆர்டரை அனுப்பப் பயன்படுத்திய ஷிப்பிங் முறை.
Created atவாடிக்கையாளரால் ஆர்டர் எப்போது முடிக்கப்பட்டது என்பது.
Lineitem quantityவரிசை உருப்படியின் அளவு (உங்கள் தயாரிப்புகள் மெனுவிலுள்ள தயாரிப்பு/மாறுபாடு).
Lineitem nameவரிசை உருப்படியின் பெயர்.
Lineitem priceவரிசை உருப்படியின் விலை.
Lineitem compare-at priceவரிசை உருப்படியின் ஒப்பீட்டு விலை.
Lineitem SKUவரிசை உருப்படி SKU.
Lineitem requires shippingஆர்டரிலுள்ள வரிசை உருப்படிக்கு ஷிப்பிங் தேவையா என்பது.
Lineitem taxableவரிசை உருப்படிக்கு வரி விதிக்கப்படுமா என்பது.
Lineitem fulfillment statusவரிசை உருப்படி நிறைவேற்றப்பட்டதா என்பது.
Billing Nameஉள்ளிட்டிருந்தால், வாடிக்கையாளரின் பில்லிங் முகவரியில் உள்ள முதல் மற்றும் கடைசிப் பெயர். இல்லையெனில், வாடிக்கையாளரின் கணக்கிலுள்ள முதல் மற்றும் கடைசிப் பெயர்.
Billing Streetபில்லிங் முகவரிக்காக உள்ளிடப்பட்ட தெருவின் பெயர்.
Billing Address1பில்லிங் முகவரியின் முழுமையான முதல் வரி -- எடுத்துக்காட்டாக, 151 O'Connor Street.
Billing Address2பில்லிங் முகவரியின் முழுமையான இரண்டாவது வரி -- எடுத்துக்காட்டாக, Ground floor. இந்த நெடுவரிசை பெரும்பாலும் காலியாக இருக்கும்.
Billing Companyவாடிக்கையாளரின் நிறுவனப் பெயர். இந்த நெடுவரிசை பெரும்பாலும் காலியாக இருக்கும்.
Billing Cityவாடிக்கையாளரின் பில்லிங் முகவரி நகரம்.
Billing Zipவாடிக்கையாளரின் பில்லிங் முகவரி ZIP அல்லது அஞ்சல் குறியீடு.
Billing Provinceவாடிக்கையாளரின் பில்லிங் மாநிலம் அல்லது மாகாணத்தின் குறியீடு.
Billing Province Nameவாடிக்கையாளரின் பில்லிங் மாநிலம் அல்லது மாகாணத்தின் பெயர்.
Billing Countryவாடிக்கையாளரின் பில்லிங் நாடு.
Billing Phoneவாடிக்கையாளரின் பில்லிங் தொலைபேசி எண்.
Shipping Nameவாடிக்கையாளரின் முதல் மற்றும் கடைசிப் பெயர்.
Shipping Streetஷிப்பிங் முகவரிக்காக உள்ளிடப்பட்ட தெருவின் பெயர்.
Shipping Address1ஷிப்பிங் முகவரியின் முழுமையான முதல் வரி -- எடுத்துக்காட்டாக, 151 O'Connor Street.
Shipping Address2ஷிப்பிங் முகவரியின் முழுமையான இரண்டாவது வரி -- எடுத்துக்காட்டாக, Ground floor. இந்த நெடுவரிசை பொதுவாக காலியாக இருக்கும்.
Shipping Companyவாடிக்கையாளரின் நிறுவனப் பெயர். இந்த நெடுவரிசை பெரும்பாலும் காலியாக இருக்கும்.
Shipping Cityவாடிக்கையாளரின் ஷிப்பிங் முகவரி நகரம்.
Shipping Zipவாடிக்கையாளரின் ஷிப்பிங் முகவரி ZIP அல்லது அஞ்சல் குறியீடு.
Shipping Provinceவாடிக்கையாளரின் ஷிப்பிங் மாநிலம் அல்லது மாகாணத்தின் குறியீடு.
Shipping Province Nameவாடிக்கையாளரின் ஷிப்பிங் மாநிலம் அல்லது மாகாணத்தின் பெயர்.
Shipping Countryவாடிக்கையாளரின் ஷிப்பிங் நாடு.
Shipping Phoneவாடிக்கையாளரின் ஷிப்பிங் தொலைபேசி எண்.
Notesஆர்டரில் சேர்க்கப்பட்டுள்ள குறிப்புகள்.
Note Attributesஆர்டர் குறிப்பின் பண்புக்கூறு மதிப்புகள் ஏதேனும் இருப்பின்.
Canceled atஆர்டர் ரத்துசெய்யப்பட்ட தேதி மற்றும் நேரம்.
Payment Methodஆர்டருக்கான பேமெண்ட் எவ்வாறு செலுத்தப்பட்டது. ஒரு ஆர்டருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கட்டண முறைகள் இருக்கலாம். பல உள்ளீடுகள் ஒரு இடைவெளி, + மற்றும் மற்றொரு இடைவெளியுடன் பிரிக்கப்படும்.
Payment Reference (நிறுத்தப்பட்டது)பரிவர்த்தனைக்கான தனித்துவமான டோக்கன். இந்த எண் உங்கள் ஸ்டோர் நிர்வாகியில் காட்டப்படாது. இந்த நெடுவரிசை இப்போது நிறுத்தப்பட்டுள்ளது. Payment References என்பது இதற்குப் பதிலாகப் பயன்படுத்தப்பட வேண்டும்.
Payment Referencesகட்டண வழங்குநர்களுக்கு Shopify அனுப்பும் பேமெண்ட் IDகளைக் கொண்டிருக்கிறது. Shopify மற்றும் உங்கள் கட்டண வழங்குநருக்கு இடையே உள்ள ஆர்டர் தகவலைப் பொருத்த, இந்த ID-ஐப் பயன்படுத்தவும். தோல்வியடைந்த பேமெண்ட்டுகள், பணத்தைத் திரும்பப்பெறுதல்கள் மற்றும் கேப்சர்கள் உட்பட ஒரு ஆர்டருடன் இணைக்கப்பட்ட அனைத்து பேமெண்ட் IDகளும் இந்த நெடுவரிசையில் அடங்கும். பல உள்ளீடுகள் ஒரு இடைவெளி, + மற்றும் மற்றொரு இடைவெளியுடன் பிரிக்கப்படும்.
Refunded Amountஆர்டருக்குப் பயன்படுத்தப்பட்ட பணத்தைத் திரும்பப்பெறுதல் ஏதேனும் இருந்தால் அதன் தொகை.
Vendorவரிசை உருப்படியின் தயாரிப்பு விற்பனையாளர்.
Outstanding Balanceஆர்டருக்கான பேமெண்ட் முழுமையாகச் செலுத்தப்படாவிட்டால் நிலுவையில் உள்ள தொகை. உங்கள் ஸ்டோரில் POS விற்பனைச் சேனல் நிறுவப்பட்டிருந்தால் மட்டுமே இந்த நெடுவரிசை காட்டப்படும்.
Employeeஆர்டரை விற்ற பணியாளரின் பெயர்.
Locationஆர்டரை விற்ற POS-இன் இடம்.
Device IDஆர்டரை விற்கப் பயன்படுத்தப்பட்ட POS-இன் சாதன ID.
Idஆர்டர் ID.
Tagsஆர்டருடன் தொடர்புடைய டேக்குகள்.
Risk Levelஆர்டரின் ஆபத்து நிலை.
Sourceஆர்டரின் மூலம் -- எடுத்துக்காட்டாக, web, வரைவு ஆர்டர், POS.
Lineitem discountவரிசை உருப்படிக்குப் பயன்படுத்தப்பட்ட தள்ளுபடி. இதில் ஆர்டர் தயாரிப்புத் தள்ளுபடிகள் சேர்க்கப்படவில்லை.
Tax # Nameவரிசை வரியின் பெயர். ஐந்து வரிசை வரிகள் வரை கிடைக்கின்றன.
Tax # Valueவரிசை வரிக்கு விதிக்கப்பட்ட வரியின் பணத் தொகை.
Phoneவாடிக்கையாளரின் தொலைபேசி எண்.
Payment IDசெக்அவுட்டில் வாடிக்கையாளர் பேமெண்ட் செலுத்தும் போது கட்டண வழங்குநர்களுக்கு Shopify அனுப்பும் தனித்துவமான ID. Shopify மற்றும் உங்கள் கட்டண வழங்குநருக்கு இடையே உள்ள ஆர்டர் தகவலைப் பொருத்த, இந்த ID-ஐப் பயன்படுத்தவும். ஒரு ஆர்டருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பேமெண்ட் ID இருக்கலாம். இதில் வெற்றிகரமான அல்லது நிலுவையில் உள்ள பேமெண்ட்டுகள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன. இதில் கேப்சர்கள் மற்றும் பணத்தைத் திரும்பப்பெறுதல்கள் சேர்க்கப்படவில்லை. பல உள்ளீடுகள் ஒரு இடைவெளி, + மற்றும் மற்றொரு இடைவெளியுடன் பிரிக்கப்படும்.
Payment termsஆர்டருக்கான பேமெண்ட் செலுத்துவதற்கான விதிமுறைகள். எடுத்துக்காட்டாக, பெற்றவுடன் செலுத்த வேண்டியவை.
Next payment due atஅடுத்த பேமெண்ட்டைச் செலுத்த வேண்டிய தேதி.
Checkout feesசெக்அவுட்டின் போது வாடிக்கையாளர் செலுத்திய கூடுதல் கட்டணங்களின் மொத்தம், உங்கள் ஸ்டோரின் நாணயத்தில் காட்டப்படும். திரும்பப்பெறப்பட்ட பணம் கழிக்கப்படாது. இந்தக் கட்டணங்கள் இல்லாத ஆர்டர்களுக்கு நெடுவரிசை காலியாக இருக்கும்.

ஆர்டர் ஏற்றுமதிகளில் ஒப்பீட்டு விலையைப் புரிந்துகொள்ளுதல்

சில சமயங்களில், நீங்கள் ஒப்பீட்டு விலையை அமைத்திருந்தாலும் சில ஆர்டர்களுக்கு Lineitem compare-at price நெடுவரிசை காலியாக இருக்கலாம். இது எதிர்பார்க்கப்படும் ஒன்றுதான், இதற்கான காரணங்கள் பின்வருமாறு:

  • ஆர்டர் செய்யும் போது ஒப்பீட்டு விலை இல்லை: ஆர்டர் செய்யப்படும்போது தயாரிப்புக்கு ஒப்பீட்டு விலை உள்ளமைக்கப்படவில்லை. வாங்கும் நேரத்தில் இருந்த தயாரிப்புத் தகவலை ஆர்டர் தரவு பிரதிபலிக்கிறது.
  • ஒழுங்குமுறை கட்டுப்பாடுகள்: சில குறிப்பிட்ட பிராந்தியங்களில், குறிப்பிட்ட ஆர்டர் வகைகளுக்கு ஒப்பீட்டு விலைகள் எப்படிக் காட்டப்பட வேண்டும் என்பதைக் கட்டுப்படுத்தும் ஒழுங்குமுறைகள் உள்ளன.
  • சந்தைகளுக்கான நிலையான விலை நிர்ணயம்: நீங்கள் குறிப்பிட்ட சந்தைகளுக்கு நிலையான விலைகளை பயன்படுத்தினால், ஒப்பீட்டு விலையை விட நிலையான விலைக்கு முன்னுரிமை வழங்கப்படும். அத்துடன் ஒப்பீட்டு விலை ஆர்டரில் பதிவு செய்யப்படாது.
  • மூன்றாம் தரப்புச் செயலி ஆர்டர்கள்: ஒரு ஆர்டர் மூன்றாம் தரப்பு செக்அவுட் செயலியால் உருவாக்கப்பட்டிருந்தால், ஆர்டரில் என்னென்ன தரவு சேர்க்கப்பட வேண்டும் என்பதை அந்தச் செயலி கட்டுப்படுத்துகிறது. ஒப்பீட்டு விலையை அந்தச் செயலி வழங்காமல் இருந்திருக்கலாம்.

ஆர்டர் ஏற்றுமதி CSV, ஒவ்வொரு ஆர்டரும் உருவாக்கப்பட்ட நேரத்திலிருந்தே வரலாற்றுத் தரவைக் காட்டுகிறது, தற்போதைய தயாரிப்புத் தகவலை அல்ல. அதாவது நீங்கள் பிறகு தயாரிப்பின் ஒப்பீட்டு விலையைப் புதுப்பித்தாலும், ஆர்டர் செய்யப்பட்ட நேரத்தில் இருந்த ஒப்பீட்டு விலையையே ஆர்டர் ஏற்றுமதி பகிரும்.

பரிவர்த்தனை வரலாறு CSV கட்டமைப்பு

உங்கள் ஆர்டர்களின் பரிவர்த்தனை வரலாற்றை ஏற்றுமதி செய்யும்போது உருவாக்கப்படும் CSV கோப்பின் வடிவமைப்பைப் பின்வரும் அட்டவணை விவரிக்கிறது.

பரிவர்த்தனை வரலாறு ஏற்றுமதி CSV கோப்பிலுள்ள ஒவ்வொரு ஹெடரின் விளக்கம்
ஹெடர்வரையறை
Orderபரிவர்த்தனையின் ஆர்டர் ID. இந்த எண்ணை உங்கள் கட்டண வழங்குநர் பயன்படுத்தக்கூடும். அத்துடன் இது ஆர்டர் பக்கத்தில் உள்ள URL-இன் இறுதியில் காட்டப்படும் எண்ணாகும்.
Nameபரிவர்த்தனையுடன் தொடர்புடைய ஆர்டர் எண். இது உங்கள் ஆர்டர்கள் பக்கத்தில் காட்டப்படும் ஆர்டர் எண்ணாகும்.
Payment Methodஆர்டருக்கான பேமெண்ட் எவ்வாறு செலுத்தப்பட்டது.
Kindபரிவர்த்தனையின் வகை. அது ஒரு விற்பனை, பணத்தைத் திரும்பப்பெறுதல் அல்லது அங்கீகாரமாக இருக்கலாம்.
Gatewayபரிவர்த்தனையைச் செயல்படுத்திய கட்டண வழங்குநர்.
Created Atபரிவர்த்தனை நடந்த தேதி Y-M-D வடிவத்தில் காட்டப்படும். அத்துடன் நேரம் மற்றும் UTC/GMT-இலிருந்து நேர மண்டல வித்தியாசம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
Statusபரிவர்த்தனை வெற்றியடைந்ததா அல்லது தோல்வியடைந்ததா என்பதைக் குறிப்பிடுகிறது.
Amountபரிவர்த்தனை எவ்வளவு தொகைக்குச் செய்யப்பட்டது.
Currencyபரிவர்த்தனை செயல்படுத்தப்பட்ட நாணயம்.
Card Typeபயன்படுத்தப்பட்ட கிரெடிட் கார்டின் பிராண்ட் (பொருந்தினால்).

உங்கள் ஆர்டர்கள் CSV கோப்பைத் திருத்த, உரைத் திருத்தியைப் பயன்படுத்தவும்

உங்களிடம் விரிதாள் நிரல் இல்லையென்றால், உரைத் திருத்தியைப் பயன்படுத்தி CSV கோப்புகளைத் திருத்தலாம்.

பெரும்பாலான கணினிகளில் CSV கோப்புகளைத் திறக்கக்கூடிய உரைத் திருத்திகள் உள்ளன. உங்கள் CSV கோப்பைத் திருத்தவும் பிழைதிருத்தவும் Visual Studio Code அல்லது Sublime Text போன்ற நிரலையும் பயன்படுத்தலாம்.

உரைத் திருத்தியில் உங்கள் CSV கோப்பை வடிவமைக்கும்போது, பின்வருவனவற்றைக் கவனத்தில் கொள்ளுங்கள்:

  • நெடுவரிசை ஹெடர்கள் காற்புள்ளிகளால் பிரிக்கப்பட்டிருக்க வேண்டும் (உதாரணமாக, First Name,Last Name,Email,Company,Address1).
  • டேக்குகளின் பட்டியல் மேற்கோள் குறிகளுக்குள் அடைக்கப்பட்டிருக்க வேண்டும் (உதாரணமாக, "tag1,tag2,tag3").
  • டேக்குகளில் பெரிய, சிறிய எழுத்து வேறுபாடு (case sensitive) இல்லை.
  • வெவ்வேறு பதிவுகள் வரி முறிவுகளால் பிரிக்கப்பட்டிருக்க வேண்டும்.