ஆர்டர் விவரங்களைப் பார்த்தலும் நிர்வகித்தலும்
உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள ஆர்டர்கள் பக்கத்திலிருந்து, ஒரு ஆர்டரைக் கிளிக் செய்து அதன் விவரங்களைப் பார்க்கலாம், நிர்வகிக்கலாம். அதன் தயாரிப்புத் தகவலையும் துணை மொத்தங்களையும் சரிபார்க்கலாம், அதன் காலவரிசையைப் பார்க்கலாம், அதன் நாணயத்தைச் சரிபார்க்கலாம், குறிப்புகள் மற்றும் டேக்குகளைச் சேர்க்கலாம், அத்துடன் உங்கள் வாடிக்கையாளரைத் தொடர்புகொள்ளலாம்.
இந்தப் பக்கத்தில்
- ஆர்டர் தயாரிப்புத் தகவலைப் புரிந்துகொள்ளுதல்
- ஆர்டர் துணை மொத்தங்களைப் புரிந்துகொள்ளுதல்
- ஆர்டரின் காலவரிசையைப் பார்த்தல்
- ஆர்டரின் நாணயத்தைச் சரிபார்த்தல்
- ஒரு ஆர்டரில் குறிப்பு அல்லது கருத்தைச் சேர்த்தல்
- ஆர்டர் டேக்கை இணைத்தல்
- வாடிக்கையாளரைத் தொடர்புகொள்ளுதல் அல்லது ஆர்டர் மின்னஞ்சலை மீண்டும் அனுப்புதல்
- ஆர்டர் நிலைப் பக்கத்தைப் பார்த்தல்
- உங்கள் ஆர்டர்களின் ஊட்டுக்குச் சந்தாதாரராதல்
- புஷ் அறிவிப்புகளைச் செயல்படுத்துதல்
ஆர்டர் தயாரிப்புத் தகவலைப் புரிந்துகொள்ளுதல்
நீங்கள் ஒரு ஆர்டரைப் பார்க்கும்போது, காட்டப்படும் தயாரிப்புத் தகவல் (தயாரிப்புத் தலைப்புகள், விலைகள் மற்றும் எடைகள் போன்றவை) ஆர்டர் செய்யப்பட்ட நேரத்தில் இருந்த தகவல்களைப் பிரதிபலிக்கும். ஆர்டர் உருவாக்கப்படும்போது இந்தத் தகவல் பூட்டப்பட்டுவிடும், உங்கள் Shopify நிர்வாகியில் தயாரிப்பு விவரங்களை நீங்கள் மாற்றும்போது இது புதுப்பிக்கப்படாது.
ஆர்டரில் உள்ள தயாரிப்பு இணைப்பைக் கிளிக் செய்யும்போது, அது வேறு தலைப்பு அல்லது விவரங்கள் உள்ள தயாரிப்புப் பக்கத்திற்கு உங்களை அழைத்துச் சென்றால், ஆர்டர் செய்யப்பட்ட பிறகு தயாரிப்புப் புதுப்பிக்கப்பட்டதே அதற்குக் காரணமாகும். ஆர்டரில் உள்ள தயாரிப்பு இணைப்பு தற்போதைய தயாரிப்பையே சுட்டிக்காட்டுகிறது, ஆனால் ஆர்டரானது கொள்முதல் செய்யப்பட்ட நேரத்தில் இருந்த பழைய தகவலையே காட்டுகிறது.
பின்வரும் தகவல்கள் உட்பட, ஆர்டரில் உள்ள அனைத்துத் தயாரிப்பு விவரங்களுக்கும் இது பொருந்தும்:
- தயாரிப்புத் தலைப்புகள்
- தயாரிப்பு விளக்கங்கள்
- விலைகள் மற்றும் ஒப்பீட்டு விலைகள்
- தயாரிப்பு எடைகள்
- மாறுபாட்டுப் பெயர்கள் மற்றும் விருப்பத்தேர்வுகள்
ஆர்டர் துணை மொத்தங்களைப் புரிந்துகொள்ளுதல்
உங்களின் Shopify நிர்வாகியில் உள்ள ஆர்டர் விவரங்கள் பக்கத்தில் காட்டப்படும் துணை மொத்தம், Shopify API அல்லது Order Printer போன்ற செயலிகளின் மூலமாகக் கிடைக்கும் துணை மொத்தத் தரவில் இருந்து மாறுபட்டு கணக்கிடப்படுகிறது.
நிர்வாகி ஆர்டர் பக்கத் துணை மொத்தம்: உங்கள் Shopify நிர்வாகியில் காட்டப்படும் துணை மொத்தம் தள்ளுபடிகளை உள்ளடக்காது. தள்ளுபடிகள் ஒரு தனி வரிசை உருப்படியாகக் காட்டப்படும்.
API மற்றும் Order Printer துணை மொத்தம்: Shopify API-ஐப் பயன்படுத்தும் செயலிகள் (Order Printer மற்றும் Klaviyo போன்ற மூன்றாம் தரப்புச் செயலிகள்), ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட தள்ளுபடிகள் உள்ளடங்கிய துணை மொத்தத் தரவை மீட்டெடுக்கின்றன.
இதன் பொருள், Order Printer வார்ப்புருக்களில் அல்லது மூன்றாம் தரப்புச் செயலி ஏற்றுமதிகளில் காட்டப்படும் துணை மொத்தம், உங்கள் நிர்வாகியில் உள்ள ஆர்டர் பக்கத்தில் காட்டப்படும் துணை மொத்தத்தை விட அதிகமாக இருக்கலாம் என்பதாகும். இரண்டு கணக்கீடுகளுமே சரியானவை—அவை வெவ்வேறு தரவுப் புள்ளிகளைப் பயன்படுத்துகின்றன.
உங்கள் நிர்வாகியில் உள்ளதைப்போலவே துணை மொத்தங்களை Order Printer அல்லது மூன்றாம் தரப்புச் செயலி காட்ட வேண்டுமெனில், நிர்வாகியைப் போலவே (வரிசை உருப்படி மொத்தங்களில் இருந்து தள்ளுபடிகளைக் கழித்தல்) துணை மொத்தத்தைக் கணக்கிடும் வகையில், நீங்கள் வார்ப்புரு அல்லது செயலி அமைப்புகளைத் தனிப்பயனாக்க வேண்டியிருக்கலாம்.
ஆர்டரின் காலவரிசையைப் பார்த்தல்
ஒவ்வொரு ஆர்டரின் விரிவான வரலாற்றையும் அந்த ஆர்டரின் காலவரிசையில் பார்க்கலாம். காலவரிசையில் நீங்கள் குறிப்புகளையும் கருத்துகளையும் கூட உள்ளிடலாம்.
காலவரிசையிலிருந்து பின்வருவனவற்றையும் உங்களால் செய்ய முடியும்:
- பணியாளர்களுடன் தொடர்புகொள்ளுதல்
- கோப்புகளை இணைத்தல்
- பிற தயாரிப்புகள், ஆர்டர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுடன் இணைத்தல்
படிகள்:
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியில் இருந்து, ஆர்டர்கள் பகுதிக்குச் செல்லவும்.
எந்த ஆர்டருக்கான காலவரிசையைப் பார்க்க வேண்டுமோ அந்த ஆர்டரைக் கிளிக் செய்யவும்.
ஆர்டர் விவரங்கள் பக்கத்தில், காலவரிசை பகுதிக்குச் செல்லவும்.
மொபைல்
- Shopify செயலியில்,
ஐகானைத் தட்டவும் .
- எந்த ஆர்டருக்கான காலவரிசையைப் பார்க்க வேண்டுமோ அந்த ஆர்டரைத் தட்டவும்.
- ஆர்டர் விவரத் திரையில், காலவரிசை பகுதிக்குச் செல்லவும்.
மேலும் தகவலுக்கு, காலவரிசையைப் பார்க்கவும்.
காலவரிசையிலிருந்து பேமெண்ட் நிகழ்வுகளைப் பார்த்தல்
வாடிக்கையாளர் தமது ஆர்டருக்குப் பணம் செலுத்தும்போது, பேமெண்ட் விவரங்கள் காலவரிசையில் பேமெண்ட் நிகழ்வாகக் குறிக்கப்படும். கூடுதல் விவரங்களைப் பெற பேமெண்ட் நிகழ்வுகளை நீங்கள் விரிவாக்கலாம். தோல்வியுற்ற பேமெண்ட் பிடிப்பு அல்லது பணத்தைத் திரும்பப்பெறுதல் ஆகியவற்றில் ஏற்படும் சிக்கல்களைச் சரிசெய்ய பேமெண்ட் நிகழ்வுகள் உதவலாம்.
உங்கள் வாடிக்கையாளர் செக்அவுட்டை முடிக்கவில்லை எனில், பேமெண்ட் நிகழ்வுகளைப் பார்க்க கைவிடப்பட்ட செக்அவுட் காலவரிசைக்குச் செல்லவும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியில் இருந்து, ஆர்டர்கள் பகுதிக்குச் செல்லவும்.
எந்த ஆர்டருக்கான பேமெண்ட் நிகழ்வுகளைப் பார்க்க வேண்டுமோ அந்த ஆர்டரைக் கிளிக் செய்யவும்.
ஆர்டர் விவரங்கள் பக்கத்தில், காலவரிசை பகுதிக்குச் செல்லவும்.
ஒரு பேமெண்ட் நிகழ்வைக் கிளிக் செய்யவும்.
கட்டண நுழைவாயிலின் கூடுதல் விவரங்களுக்கு, நுழைவாயிலில் இருந்தான தகவல் என்பதைக் கிளிக் செய்யவும்.
ஒரு ஆர்டரின் நாணயத்தைச் சரிபார்த்தல்
நீங்கள் பல நாணயங்களில் விற்பனை செய்து, இணக்கமான கட்டண வழங்குநரின் மூலம் உள்ளூர் நாணயத்தில் வாடிக்கையாளரின் பேமெண்ட் செயலாக்கப்பட்டால், செலுத்தப்பட்டது (Paid) பிரிவில் வாடிக்கையாளரின் நாணயத்தில் (காட்சிப்படுத்தல் நாணயம் எனவும் அழைக்கப்படும்) செலுத்தப்பட்ட தொகை காட்டப்படும். செக்அவுட்டின் போது வாடிக்கையாளரின் பேமெண்ட் மீண்டும் உங்கள் ஸ்டோர் நாணயத்திற்கு மாற்றப்பட்டால், அந்த ஆர்டர் பல நாணய ஆர்டராகக் காட்டப்படாது.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியில் இருந்து, ஆர்டர்கள் பகுதிக்குச் செல்லவும்.
எந்த ஆர்டருக்கான நாணயத்தைச் சரிபார்க்க வேண்டுமோ அந்த ஆர்டரைக் கிளிக் செய்யவும்.
செலுத்தப்பட்டது பிரிவில், வாடிக்கையாளரின் நாணயத்தில் செலுத்தப்பட்ட தொகையைச் சரிபார்க்கவும்.
பேமெண்ட் பிரிவில், ஆர்டரின் மொத்தம் மற்றும் நாணய மாற்ற விவரங்கள் எவையேனும் இருந்தால் அவற்றைச் சரிபார்க்கவும்.
ஒரு ஆர்டரில் குறிப்பு அல்லது கருத்தை இணைத்தல்
குறிப்புகள் என்பவை ஒரு ஆர்டரில் சேர்க்கப்பட்டுள்ள மெசேஜ்கள் அல்லது சிறப்பு வழிமுறைகள் ஆகும். கருத்துகள் என்பவை பணியாளர்களுக்கு இடையிலான உள் தகவல் தொடர்பிற்கானவை.
குறிப்பைச் சேர்த்தல்
ஆர்டரின் குறிப்புகள் பிரிவில் நீங்கள் ஆர்டர்க் குறிப்புகளைச் சேர்க்கலாம் அல்லது திருத்தலாம். உங்கள் ஸ்டோரில் ஆர்டர்க் குறிப்புகளை நீங்கள் இயக்கியிருக்கும்போது, வாடிக்கையாளர்களே தங்கள் ஆர்டருக்கான குறிப்புகளைச் சேர்க்க முடியும்.
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியில் இருந்து, ஆர்டர்கள் பகுதிக்குச் செல்லவும்.
எந்த ஆர்டருக்குக் குறிப்பைச் சேர்க்க வேண்டுமோ அந்த ஆர்டரைக் கிளிக் செய்யவும்.
குறிப்புகள் பிரிவில், பென்சில் ஐகானைக் கிளிக் செய்யவும்.
உங்கள் குறிப்பை எழுதிவிட்டு, சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
- Shopify செயலியில்,
ஐகானைத் தட்டவும் .
- எந்த ஆர்டருக்குக் குறிப்பைச் சேர்க்க வேண்டுமோ அந்த ஆர்டரைத் தட்டவும்.
அல்லது
என்பதைத் தட்டி, பின்னர் குறிப்பைச் சேர் என்பதைத் தட்டவும்.
- உங்கள் குறிப்பை எழுதிவிட்டு, சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்.
கருத்தைச் சேர்த்தல்
காலவரிசையைப் பயன்படுத்தி ஆர்டரில் நீங்கள் உள் கருத்துகளையோ சிறப்பு வழிமுறைகளையோ சேர்க்கலாம். காலவரிசையில் சேர்க்கப்படும் கருத்துகளை நீங்களும் மற்ற பணியாளர்களும் மட்டுமே படிக்க முடியும்.
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியில் இருந்து, ஆர்டர்கள் பகுதிக்குச் செல்லவும்.
எந்த ஆர்டருக்குக் கருத்தைச் சேர்க்க வேண்டுமோ அந்த ஆர்டரைக் கிளிக் செய்யவும்.
காலவரிசை பிரிவில், கருத்தைப் பகிரவும்... எனும் உரைப் புலத்தைக் கிளிக் செய்து, உங்கள் கருத்தை உள்ளிடவும். நீங்கள் எமோஜியைச் சேர்க்கலாம், பணியாளர் ஒருவரைக் குறிப்பிடலாம், ஒரு பக்கத்தை மேற்கோள் காட்டலாம் அல்லது கோப்பு ஒன்றையும் இணைக்கலாம்.
கருத்தைச் சேர்க்க பதிவிடு என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
- Shopify செயலியில்,
ஐகானைத் தட்டவும் .
- எந்த ஆர்டருக்குக் கருத்தைச் சேர்க்க வேண்டுமோ அந்த ஆர்டரைத் தட்டவும்.
- காலவரிசை பிரிவில், கருத்தைப் பகிரவும்... உரைப் புலத்தைத் தட்டி, உங்கள் கருத்தை உள்ளிடவும். நீங்கள் எமோஜியைச் சேர்க்கலாம், @ ஐப் பயன்படுத்தி பணியாளர் ஒருவரைக் குறிப்பிடலாம் அல்லது பேப்பர்கிளிப் ஐகானைத் தட்டி புகைப்படம் அல்லது கோப்பையும் இணைக்கலாம்.
- கருத்தைப் பதிவிட பேப்பர் ஏர்பிளேன் ஐகானைத் தட்டவும்.
ஆர்டர் டேக்கை இணைத்தல்
தனிப்பயன் சொற்களின் அடிப்படையில் உங்கள் ஆர்டர்களை வகைப்படுத்தவும் ஒழுங்கமைக்கவும் டேக்குகள் உதவுகின்றன. டேக்கின் அடிப்படையில் ஆர்டர் பார்வையை உருவாக்க, டேக் மூலம் உங்கள் ஸ்டோரின் ஆர்டர்களை வடிகட்டி, பின் முடிவுகளை ஆர்டர் பார்வையில் சேமிக்கவும்.
படிகள்:
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியில் இருந்து, ஆர்டர்கள் பகுதிக்குச் செல்லவும்.
நீங்கள் குறிச்சொல்லிட விரும்பும் ஆர்டரைக் கிளிக் செய்யவும்.
டேக்குகள் பிரிவில், புதிய டேக்குகளைச் சேர்க்கவும் அல்லது ஏற்கனவே உள்ள டேக்குகளில் இருந்து தேர்ந்தெடுக்கவும்:
- புதிய டேக்குகளைச் சேர்க்க, காற்புள்ளியால் பிரிக்கப்பட்ட டேக் பெயர்களை உள்ளிடவும். உதாரணத்திற்கு, அவசரம், மதிப்பாய்வு செய்யப்பட்டது, மொத்த விற்பனை.
- ஏற்கனவே உள்ள டேக்குகளில் இருந்து தேர்ந்தெடுக்க, பென்சில் ஐகானைக் கிளிக் செய்யவும். டேக்குகளைக் கிளிக் செய்து, பின்னர் அவற்றை ஆர்டரில் பயன்படுத்த முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
- Shopify செயலியில்,
ஐகானைத் தட்டவும் .
- நீங்கள் குறிச்சொல்லிட விரும்பும் ஆர்டரைத் தட்டவும்.
- டேக்குகள் பிரிவில், புதிய டேக்குகளைச் சேர்க்கவும் அல்லது ஏற்கனவே உள்ள டேக்குகளில் இருந்து தேர்ந்தெடுக்கவும்:
- புதிய டேக்குகளைச் சேர்க்க, டேக்கைச் சேர் என்பதைத் தட்டி, காற்புள்ளியால் பிரிக்கப்பட்ட டேக் பெயர்களை உள்ளிடவும். உதாரணமாக, urgent, reviewed, wholesale.
- முன்பே உள்ள டேக்குகளில் இருந்து தேர்ந்தெடுக்க, அனைத்து டேக்குகளையும் காண்க என்பதைத் தட்டி, பிறகு டேக்குகளைத் தட்டவும்.
- ஆர்டருக்கு டேக்குகளைப் பயன்படுத்த, சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்.
ஆர்டர்கள் பக்கத்திலிருந்து ஆர்டர் டேக்குகளை மொத்தமாகத் திருத்தவும் முடியும்.
வாடிக்கையாளரைத் தொடர்புகொள்ளுதல் அல்லது ஆர்டர் மின்னஞ்சலை மீண்டும் அனுப்புதல்
ஆர்டர் பக்கத்திலிருந்தே வாடிக்கையாளரை நேரடியாகத் தொடர்புகொள்ளலாம் அல்லது ஆர்டர் உறுதிப்படுத்தல் மின்னஞ்சலை வாடிக்கையாளருக்கு அல்லது உங்களுக்கு மீண்டும் அனுப்பலாம்.
ஆர்டர் குறித்து வாடிக்கையாளரைத் தொடர்புகொள்ளுதல்
உங்கள் வாடிக்கையாளர்களின் அனைத்துத் தொடர்புத் தகவல்களையும் Shopify சேமிக்கிறது. ஆர்டர் பக்கத்தின் தொடர்பு பிரிவில் உள்ள திருத்து என்பதைக் கிளிக் செய்து விவரங்களை உள்ளிடுவதன் மூலம் கூடுதல் தொடர்புத் தகவல்களைச் சேர்க்கலாம். செக்அவுட்டில் மின்னஞ்சல் முகவரி அல்லது தொலைபேசி எண்ணை உள்ளிடும் விருப்பத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்கினால், அவர்கள் தொடர்பு பிரிவில் உள்ளிடத் தேர்ந்தெடுத்த தொடர்புத் தகவல் மட்டுமே உங்களிடம் இருக்கலாம். தொலைபேசி எண்ணை உள்ளிடத் தேர்ந்தெடுத்த வாடிக்கையாளரைத் தொடர்புகொள்ள, அவர் உள்ளிட்ட எண்ணுக்கு அழைக்கவும்.
படிகள்:
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியில் இருந்து, ஆர்டர்கள் பகுதிக்குச் செல்லவும்.
நீங்கள் தொடர்புகொள்ள விரும்பும் வாடிக்கையாளரின் ஆர்டரைக் கிளிக் செய்யவும்.
தொடர்பு பிரிவில், வாடிக்கையாளரின் மின்னஞ்சல் முகவரியைக் கிளிக் செய்யவும்.
வாடிக்கையாளரைத் தொடர்புகொள் உரையாடல் பெட்டியில், நீங்கள் அனுப்ப விரும்பும் செய்தியை உள்ளிடவும்.
உங்கள் செய்தியின் நகலை உங்கள் சொந்த மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது ஸ்டோர் உரிமையாளரின் மின்னஞ்சலுக்கு அனுப்ப விரும்பினால், நீங்கள் பயன்படுத்த விரும்பும் முகவரிக்கு அருகிலுள்ள பெட்டியைக் கிளிக் செய்யவும். உங்கள் ஸ்டோரின் மின்னஞ்சலை அமைப்பது குறித்த கூடுதல் தகவலுக்கு, உங்கள் Shopify மின்னஞ்சல் முகவரியை மாற்றுதல் என்பதைப் பார்க்கவும்.
மின்னஞ்சலைச் சரிபார் என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் மின்னஞ்சலைச் சரிபார்த்துவிட்டு அறிவிப்பை அனுப்பு என்பதைக் கிளிக் செய்யவும் அல்லது ஏதேனும் மாற்றங்களைச் செய்ய பின்செல்க என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
- Shopify செயலியில்,
ஐகானைத் தட்டவும் .
- நீங்கள் தொடர்புகொள்ள விரும்பும் வாடிக்கையாளரின் ஆர்டரைத் தட்டவும்.
- தொடர்பு பிரிவில், வாடிக்கையாளரை மின்னஞ்சல், தொலைபேசி அழைப்பு அல்லது குறுஞ்செய்தி மூலம் தொடர்புகொள்ள, ஐகான்களில் ஒன்றைத் தட்டவும்.
ஆர்டர் மின்னஞ்சலை மீண்டும் அனுப்புதல்
வாடிக்கையாளருக்கு ஆர்டர் மின்னஞ்சலை மீண்டும் அனுப்பலாம் அல்லது குறிப்புக்காக உங்களுக்கே ஒரு நகலை அனுப்பலாம்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியில் இருந்து, ஆர்டர்கள் பகுதிக்குச் செல்லவும்.
எந்த ஆர்டருக்கான மின்னஞ்சலை மீண்டும் அனுப்ப வேண்டுமோ அந்த ஆர்டரைக் கிளிக் செய்யவும்.
காலவரிசை பிரிவில், நீங்கள் மீண்டும் அனுப்ப விரும்பும் மின்னஞ்சலின் கீழ் உள்ள மின்னஞ்சலை மீண்டும் அனுப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
ஆர்டர் உறுதிப்படுத்தலை மீண்டும் அனுப்பவா? உரையாடல் பெட்டியில், தொடர்புடைய விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்:
- வாடிக்கையாளருக்கு மின்னஞ்சலை மீண்டும் அனுப்புதல்
- மின்னஞ்சலை உங்களுக்கே அனுப்புவதன் மூலம், வாடிக்கையாளர் பெற்ற மின்னஞ்சலின் நகலைப் பெறலாம்.
அனுப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
ஆர்டர் நிலை பக்கத்தைக் காணுதல்
உங்கள் வாடிக்கையாளர்கள் செக்அவுட்டை முடிக்கும்போது, செக்அவுட் செயல்முறையின் இறுதிப் பக்கமான ஆர்டர் நிலை பக்கத்தின் URL அவர்களுக்கு வழங்கப்படும். அவர்கள் இந்தப் பக்கத்தில் தங்கள் ஆர்டர் நிலையைத் தடமறியலாம், மேலும் அவர்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்களைத் தொடர்புகொள்ளலாம்.
கூடுதல் தகவலுக்கு, ஆர்டர் நிலை பக்கம் என்பதைப் பார்க்கவும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியில் இருந்து, ஆர்டர்கள் பகுதிக்குச் செல்லவும்.
உங்கள் வாடிக்கையாளரின் ஆர்டரைக் கண்டறிய, தேடல் பெட்டியைப் பயன்படுத்தவும். பின்வரும் தகவல்களில் ஏதேனும் ஒன்று உங்களிடம் இருந்தால், நீங்கள் ஆர்டரைத் தேடலாம்:
- ஆர்டர் எண்
- Shopify POS இல் ஆர்டர் உருவாக்கப்பட்டிருந்தால் ரசீது எண்
- வாடிக்கையாளர் பெயர்
- வாடிக்கையாளர் மின்னஞ்சல் முகவரி
அதன் விவரங்களைக் காண, ஆர்டரைக் கிளிக் செய்யவும்.
கூடுதல் செயல்கள் மெனுவைக் கிளிக் செய்து, பிறகு ஆர்டர் நிலை பக்கத்தைக் காண்க என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் வாடிக்கையாளர் காணக்கூடிய அதே ஆர்டர் நிலை பக்கத்திற்கு நீங்கள் வழிநடத்தப்படுவீர்கள்.
உங்கள் ஆர்டர்கள் ஊட்டத்திற்குப் பதிவுசெய்தல்
அதன் RSS ஊட்டத்தைப் பயன்படுத்தி உங்கள் ஸ்டோரின் ஆர்டர்களை நீங்கள் தடமறியலாம்.
உங்கள் ஆர்டர்கள் ஊட்ட URL:
https://admin.shopify.com/store/shopname/orders.rssஉங்கள் Shopify நிர்வாகியில் உள்ள /admin/feed பக்கத்தில் உங்கள் ஸ்டோரின் ஆர்டர்கள் ஊட்டத்தைக் கண்டறியலாம்.
புஷ் அறிவிப்புகளைச் செயல்படுத்துதல்
பின்வரும் முக்கியமான ஸ்டோர் புதுப்பிப்புகள் குறித்து உங்கள் மொபைலில் உடனடி விழிப்பூட்டல்களைப் பெற, Shopify செயலியில் நீங்கள் புஷ் அறிவிப்புகளை அமைக்கலாம்:
- முக்கியமான விழிப்பூட்டல்கள்
- நிறைவேற்றங்கள்
- புதிய ஆர்டர்கள்
- அமைவு உதவிக்குறிப்புகள்
- காலவரிசை குறிப்புகள்
iPhone
படிகள்:
Shopify செயலியிலிருந்து,
என்பதைத் தட்டி, பிறகு
அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
செயலி அமைப்புகள் பிரிவில், ஸ்டோர் அறிவிப்புகள் என்பதைத் தட்டவும்.
புஷ் அறிவிப்புகள் பிரிவில், தொடர்புடைய விருப்பங்களைச் செயல்படுத்தவும்.
Shopify செயலி பேட்ஜைச் செயல்படுத்துதல்
ஆர்டர்களுக்கான புஷ் அறிவிப்புகளை நீங்கள் செயல்படுத்தினால், உங்கள் iPhone இன் முகப்புத் திரையில் எத்தனை திறந்த ஆர்டர்கள் உள்ளன என்பதைக் காண Shopify செயலி பேட்ஜையும் செயல்படுத்தலாம்.
Shopify செயலி பேட்ஜ் ஒரு ஸ்டோருக்கான திறந்த ஆர்டர்களின் எண்ணிக்கையை மட்டுமே காட்டும். Shopify செயலியில் நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளில் உள்நுழைந்திருந்தால், கடைசியாக விருப்பம் செயல்படுத்தப்பட்ட கணக்கிற்கான திறந்த ஆர்டர்களின் எண்ணிக்கையை பேட்ஜ் காட்டும்.
படிகள்:
Shopify செயலியிலிருந்து,
என்பதைத் தட்டி, பிறகு
அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
செயலி அமைப்புகள் பிரிவில், அறிவிப்புகள் என்பதைத் தட்டவும்.
ஆர்டர்கள் பிரிவில், புஷ் அறிவிப்புகள் செயல்படுத்தப்பட்டிருப்பதை உறுதிசெய்யவும்.
பேட்ஜ் செயலி ஐகான் விருப்பத்தைச் செயல்படுத்தவும்.
Android
புஷ் அறிவிப்புகளைச் செயல்படுத்த Shopify செயலியைப் பயன்படுத்தலாம், இதனால் உங்கள் ஸ்டோரில் ஒரு ஆர்டர் செய்யப்படும்போதெல்லாம் உங்கள் மொபைலில் விழிப்பூட்டலைப் பெறுவீர்கள்.
படிகள்:
Shopify செயலியிலிருந்து,
என்பதைத் தட்டி, பிறகு
அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
ஸ்டோர் அறிவிப்புகள் என்பதைத் தட்டவும்.
புஷ் அறிவிப்புகள் திரையிலிருந்து, ஒவ்வொரு விருப்பத்திற்கும் அருகிலுள்ள நிலைமாற்று பொத்தானைத் தட்டுவதன் மூலம் அறிவிப்பைச் செயல்படுத்தவும்.