ஒத்திவைக்கப்பட்ட பேமெண்ட்டுகளைக் கொண்ட ஆர்டர்களை நிர்வகித்தல்
முழு அல்லது பகுதி நிலுவைத் தொகையைக் கொண்ட ஆர்டர்களுக்கு, ஆர்டருக்கான விலைப்பட்டியலை உங்கள் வாடிக்கையாளருக்கு அனுப்பலாம், ஆர்டருக்கான பேமெண்ட்டைக் கிரெடிட் மூலம் ஏற்கலாம் அல்லது வேறு முறையின் மூலம் பேமெண்ட்டை முன்பே பெற்றிருந்தால் ஆர்டரைச் செலுத்தப்பட்டதாகக் குறிக்கலாம்.
இந்தப் பக்கத்தில்
- ஆர்டருக்குத் தாமதமாகச் செலுத்த வேண்டிய பேமெண்ட்டுகளுக்கான கட்டண விதிமுறைகள்
- ஆர்டருக்குப் பின்னர் செலுத்த வேண்டிய பேமெண்ட்டுகளுக்கான கட்டண விதிமுறைகளைச் சேர்த்தல்
- வாடிக்கையாளருக்கு ஆர்டர் விலைப்பட்டியலை அனுப்புதல்
- குறிப்பிட்ட நிறைவேற்றத்திற்கான பேமெண்ட் கோரிக்கையை அனுப்புதல்
- பேமெண்ட் நிலுவையிலுள்ள ஆர்டருக்கான பேமெண்ட்டை ஏற்றல்
- கட்டண நினைவூட்டல்களை அமைத்தல்
ஆர்டருக்குத் தாமதமாகச் செலுத்த வேண்டிய பேமெண்ட்டுகளுக்கான கட்டண விதிமுறைகள்
பேமெண்ட் செலுத்த வேண்டிய தேதியை அமைக்கக் கட்டண விதிமுறைகள் உங்களை அனுமதிக்கின்றன. ஆர்டரின் நிலை Payment pending (பேமெண்ட் நிலுவையிலுள்ளது) என இருந்தால், பின்னர் செலுத்த வேண்டிய ஆர்டர்களுக்கான கட்டண விதிமுறைகளை நீங்கள் சேர்க்கலாம்.
கட்டண விதிமுறைகளை அமைக்கும்போது பின்வரும் விருப்பங்களிலிருந்து நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்:
| கட்டண விதிமுறை | விளக்கம் |
|---|---|
| பெற்றவுடன் செலுத்த வேண்டியவை | உங்கள் வாடிக்கையாளருக்கு விலைப்பட்டியலை அனுப்பும் தேதியில் பேமெண்ட்டைச் செலுத்த வேண்டும். |
| நிறைவேற்றும்போது செலுத்த வேண்டியவை | ஆர்டரில் உள்ள அனைத்து உருப்படிகளையும் நீங்கள் நிறைவேற்றும் தேதியில் பேமெண்ட்டைச் செலுத்த வேண்டும். |
| நிகர விதிமுறை | வழங்கப்பட்ட தேதியிலிருந்து குறிப்பிட்ட நாட்களுக்குள் பேமெண்ட்டைச் செலுத்த வேண்டும். நிகர 7, நிகர 15, நிகர 30, நிகர 45, நிகர 60 மற்றும் நிகர 90 ஆகிய விதிமுறைகள் கிடைக்கின்றன. |
| நிலையான விதிமுறை | ஒரு குறிப்பிட்ட தேதியில் பேமெண்ட்டைச் செலுத்த வேண்டும். |
ஆர்டருக்குப் பின்னர் செலுத்த வேண்டிய பேமெண்ட்டுகளுக்கான கட்டண விதிமுறைகளைச் சேர்த்தல்
பேமெண்ட்டுகள் நிலுவையிலுள்ள மற்றும் Payment pending (பேமெண்ட் நிலுவையிலுள்ளது) நிலையைக் கொண்டுள்ள ஆர்டர்களுக்கு நீங்கள் கட்டண விதிமுறைகளைச் சேர்க்கலாம். பேமெண்ட் செலுத்த வேண்டிய தேதிக்குள் ஆர்டருக்குப் பணம் செலுத்தப்படாவிட்டால், ஆர்டர் நிலை Overdue (தாமதமானது) என மாறும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆர்டர்கள் என்பதற்குச் செல்லவும்.
நீங்கள் எந்த ஆர்டருக்குக் கட்டண விதிமுறைகளைச் சேர்க்க விரும்புகிறீர்களோ அதைக் கிளிக் செய்யவும்.
நிலுவையில் உள்ளது பிரிவில்,
என்பதைக் கிளிக் செய்து, பிறகு கட்டண விதிமுறைகளைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
Payment terms கீழ்தோன்றும் மெனுவிலிருந்து, உங்கள் ஆர்டருக்கான கட்டண விதிமுறையைத் தேர்ந்தெடுக்கவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
ஆர்டரிலிருந்து கட்டண விதிமுறைகளைத் திருத்துதல் அல்லது அகற்றுதல்
ஆர்டரில் கட்டண விதிமுறைகள் இருந்தால், அந்தக் கட்டண விதிமுறைகளை நீங்கள் திருத்தலாம் அல்லது அகற்றலாம்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆர்டர்கள் என்பதற்குச் செல்லவும்.
நீங்கள் எந்த ஆர்டருக்குக் கட்டண விதிமுறைகளைத் திருத்த விரும்புகிறீர்களோ அதைக் கிளிக் செய்யவும்.
நிலுவையில் உள்ளது பிரிவில்,
என்பதைக் கிளிக் செய்து, பிறகு கட்டண விதிமுறைகளைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
கட்டண விதிமுறைகளைத் திருத்துதல் அல்லது அகற்றுதல்:
- கட்டண விதிமுறைகளைத் திருத்த, Payment terms கீழ்தோன்றும் மெனுவிலிருந்து வேறு கட்டண விதிமுறையைத் தேர்ந்தெடுத்து, சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
- கட்டண விதிமுறைகளை அகற்ற, Remove terms (விதிமுறைகளை அகற்று) என்பதைக் கிளிக் செய்யவும்.
வாடிக்கையாளருக்கு ஆர்டர் விலைப்பட்டியலை அனுப்புதல்
Payment pending நிலையிலுள்ள ஆர்டர்களுக்குச் செக்அவுட் பக்கத்திற்கான இணைப்பைக் கொண்ட விலைப்பட்டியலை உங்கள் வாடிக்கையாளருக்கு அனுப்பலாம். உங்கள் வாடிக்கையாளர் அந்த மின்னஞ்சலிலுள்ள இணைப்பைப் பயன்படுத்தித் தங்களது பில்லிங் தகவலை உள்ளிட்டு, ஒரு ஷிப்பிங் முறையைத் தேர்ந்தெடுத்து, பேமெண்ட்டைச் சமர்ப்பிக்கலாம்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆர்டர்கள் என்பதற்குச் செல்லவும்.
நீங்கள் எந்த ஆர்டருக்கு விலைப்பட்டியலை அனுப்ப விரும்புகிறீர்களோ அதைக் கிளிக் செய்யவும்.
Collect payment (பேமெண்ட்டை வசூலி) > Send invoice (விலைப்பட்டியலை அனுப்பு) என்பதைக் கிளிக் செய்யவும்.
Send invoice (விலைப்பட்டியலை அனுப்பு) உரையாடல் பெட்டியில், விலைப்பட்டியலில் நீங்கள் சேர்க்க விரும்பும் செய்தியை உள்ளிடவும்.
Review invoice (விலைப்பட்டியலை மதிப்பாய்வு செய்) என்பதைக் கிளிக் செய்யவும்.
உரையாடல் பெட்டியில், உங்கள் மின்னஞ்சலை மதிப்பாய்வு செய்து Send invoice (விலைப்பட்டியலை அனுப்பு) என்பதைக் கிளிக் செய்யவும்.
குறிப்பிட்ட நிறைவேற்றத்திற்கான பேமெண்ட் கோரிக்கையை அனுப்புதல்
Due on fulfillment கட்டண விதிமுறைகள் மற்றும் பல நிறைவேற்றங்களைக் கொண்ட ஆர்டர்களுக்கு, நீங்கள் உருப்படிகளை அனுப்பும்போது ஒவ்வொரு நிறைவேற்றத்திற்குமான பேமெண்ட் கோரிக்கையை அனுப்பலாம். முன்பதிவுகள், சீசனல் டிராப்கள் அல்லது வெவ்வேறு கிடைக்கும் தேதிகளைக் கொண்ட உருப்படிகள் உள்ள ஆர்டர்கள் போன்று பல பகுதிகளாக அனுப்பப்படும் ஆர்டர்களுக்கான பேமெண்ட்டை விரைவாகப் பெற இது உங்களை அனுமதிக்கிறது.
குறிப்பிட்ட நிறைவேற்றத்திற்கான பேமெண்ட் கோரிக்கையை அனுப்பும்முன் கவனிக்க வேண்டியவை
குறிப்பிட்ட நிறைவேற்றத்திற்கான பேமெண்ட் கோரிக்கையை அனுப்பும்முன், பின்வருவனவற்றைக் கவனியுங்கள்:
- உருவாக்கப்பட்ட நிறைவேற்றங்களுக்கு மட்டுமே நீங்கள் பேமெண்ட் கோரிக்கைகளை அனுப்ப முடியும்.
- பேமெண்ட் கோரிக்கைகளில் வரிசை உருப்படிகளுக்கான செலவு மற்றும் பொருந்தக்கூடிய வரிகள் ஆகியவை அடங்கும். ஷிப்பிங், கட்டணங்கள் மற்றும் சுங்க வரிகள் ஆகியவை இறுதி நிறைவேற்றத்துடன் சேர்க்கப்படும்.
- தள்ளுபடிகள் பின்வரும் வழிகளில் பயன்படுத்தப்படும்:
- உருப்படி அளவிலான தள்ளுபடிகள், உருப்படியின் துணை மொத்தத்தில் சேர்க்கப்பட்டு, ஒவ்வொரு நிறைவேற்றத்திற்கும் பயன்படுத்தப்படும்.
- ஆர்டர் அளவிலான தள்ளுபடிகள், ஆர்டரின் மொத்தத்திலிருந்து கழிக்கப்பட்டு, ஒவ்வொரு நிறைவேற்றத்திற்கும் சமமாகப் பிரிக்கப்படும்.
- இறுதி நிறைவேற்றத்தின்போது ஷிப்பிங் தள்ளுபடிகள் பெறப்படும்.
- ஆர்டரை உருவாக்கும்போது வசூலிக்கப்பட்ட ஆர்டர் அளவிலான டெபாசிட், நீங்கள் அனுப்பும் முதல் பேமெண்ட் கோரிக்கைக்குப் பயன்படுத்தப்படும்.
- ஒரு ஆர்டருக்கான டெபாசிட்டானது நிலுவையிலுள்ள பேமெண்ட் உடன் இருந்தால், நீங்கள் உருப்படிகளை நிறைவேற்றிக் கூடுதல் பேமெண்ட் கோரிக்கைகளை அனுப்புவதற்கு முன்பு டெபாசிட்டைச் செலுத்தப்பட்டதாகக் குறிக்க வேண்டும்.
- இந்த அம்சத்திற்கான பேமெண்ட் பெறுதல் தொடர்பான பின்வரும் விவரங்களைக் கவனியுங்கள்:
- உங்களின் பேமெண்ட் பெறுதல் அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட Automatically at checkout அல்லது Manually மூலம் உருவாக்கப்பட்ட ஆர்டர்களுக்கு இந்த அம்சம் ஆதரிக்கப்படுகிறது.
- Capture per fulfillment (நிறைவேற்றத்தின்படி பெறுதல்) அல்லது Capture when the entire order is fulfilled போன்ற நிறைவேற்றத்தை அடிப்படையாகக் கொண்ட தானியங்குப் பெறுதலின் மூலம் உருவாக்கப்பட்ட ஆர்டர்கள் ஆதரிக்கப்படாது.
- ஆர்டரை உருவாக்கிய பிறகு பேமெண்ட் பெறுதல் அமைப்புகளை மாற்றுவது, ஏற்கனவே உள்ள ஆர்டர்களுக்கு இந்த அம்சத்தைச் செயல்படுத்தாது.
- பேமெண்ட்டைப் பெறும் அமைப்புகள் எதுவாக இருந்தாலும், B2B ஆர்டர்கள் ஆதரிக்கப்படும்.
- ஆர்டரில் எந்தவொரு நிறைவேற்றங்களும் இல்லாதபோது, அதை உருவாக்கிய பிறகு நிறைவேற்றும்போது செலுத்த வேண்டியவை என்ற கட்டண விதிமுறைகளை நீங்கள் பயன்படுத்தலாம்.
ஒரு குறிப்பிட்ட நிறைவேற்றத்திற்குப் பேமெண்ட் கோரிக்கையை அனுப்புங்கள்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து நேரடியாக ஒரு குறிப்பிட்ட நிறைவேற்றத்திற்குப் பேமெண்ட் கோரிக்கையை அனுப்பலாம். நிறைவேற்றத்திற்காக நீங்கள் பேமெண்ட் கோரிக்கையை அனுப்பும்போது, அந்த குறிப்பிட்ட நிறைவேற்றத்திற்குப் பணம் செலுத்துவதற்கான இணைப்புடன் வாடிக்கையாளர் ஒரு மின்னஞ்சலைப் பெறுவார். உங்கள் ஸ்டோரில் கிடைக்கும் எந்தவொரு கட்டண முறையையும் பயன்படுத்தி வாடிக்கையாளர் ஒவ்வொரு நிறைவேற்றத்திற்கும் தனித்தனியாகப் பணம் செலுத்தலாம்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆர்டர்கள் என்பதற்குச் செல்லவும்.
நீங்கள் பேமெண்ட் கோரிக்கையை அனுப்ப விரும்பும் ஆர்டரைக் கிளிக் செய்யவும்.
பேமெண்ட் நிலுவையில் உள்ளது பிரிவில், விலைப்பட்டியலை அனுப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
நீங்கள் பேமெண்ட் கோரிக்கையை அனுப்ப விரும்பும் நிறைவேற்றத்தைக் கிளிக் செய்யவும்.
பேமெண்ட் கோரிக்கையில் நீங்கள் சேர்க்க விரும்பும் செய்தியை உள்ளிடவும்.
Review invoice (விலைப்பட்டியலை மதிப்பாய்வு செய்) என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் மின்னஞ்சலை மதிப்பாய்வு செய்துவிட்டு, விலைப்பட்டியலை அனுப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
பேமெண்ட் நிலுவையில் உள்ள ஆர்டருக்கான பேமெண்ட்டை ஏற்கவும்
கீழே உள்ள முறைகளில் ஒன்றைப் பயன்படுத்திப் பெரும்பாலான ஆர்டர்களின் கட்டண நிலையை பேமெண்ட் நிலுவையில் உள்ளது என்பதிலிருந்து செலுத்தப்பட்டது என மாற்றலாம்:
- செலுத்தியதாகக் குறி - நடப்பு ஆர்டருக்கான பேமெண்ட்டை நீங்கள் முன்பே பெற்றிருக்கும்போது அல்லது வேறொரு பிளாட்ஃபார்மில் உள்ள முந்தைய ஆர்டரை உங்கள் Shopify நிர்வாகியில் இறக்குமதி செய்யும்போது இதைப் பயன்படுத்தவும். பெறப்பட்ட தொகையை உங்கள் கட்டண வழங்குநர் மீண்டும் பெற மாட்டார். வாடிக்கையாளருக்கு ஆர்டர் உறுதிப்படுத்தல் மின்னஞ்சல் அனுப்பப்படும்.
- கிரெடிட் கார்டு மூலம் செலுத்து - உங்கள் வாடிக்கையாளரின் பில்லிங் தகவல் உங்களிடம் உள்ளபோது அல்லது வாடிக்கையாளரால் அதை நேரடியாக உள்ளிட முடியும் என்ற நிலையில் இதைப் பயன்படுத்தவும். இந்தக் கட்டண முறை Shopify Payments இல் மட்டுமே கிடைக்கும்.
ஆர்டர் நிலுவையிலுள்ள பேமெண்ட் நிலையில் இருந்து, வாடிக்கையாளர் கிரெடிட் கார்டு அல்லாமல் வேறு கட்டண முறையைப் பயன்படுத்தியிருந்தால், ஆர்டரைச் செலுத்தியதாக உங்களால் குறிக்க முடியாமல் போகலாம். நிலுவையில் பேமெண்ட்களைக் கொண்டுள்ள ஆர்டர்கள் குறித்து மேலும் அறிக.
உங்கள் கட்டண வழங்குநர் பல பேமெண்ட்களை ஆதரித்தால், மொத்த ஆர்டர் தொகை வரை பகுதி பேமெண்ட்டுகளைப் பெறலாம். இல்லையெனில், ஆர்டரின் மொத்தத் தொகையை மட்டுமே வசூலிக்க முடியும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆர்டர்கள் என்பதற்குச் செல்லவும்.
ஆர்டர்கள் பக்கத்தில், ஆர்டர் எண்ணைக் கிளிக் செய்யவும்.
பேமெண்ட் நிலுவையில் உள்ளது பிரிவில், பேமெண்ட்டை வசூலி என்பதைக் கிளிக் செய்யவும்.
கீழே உள்ள விருப்பத்தேர்வுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்:
- Shopify-க்கு வெளியே பேமெண்ட்டை ஏற்றிருந்தால் செலுத்தியதாகக் குறி என்பதைக் கிளிக் செய்யவும்.
- வாடிக்கையாளரின் கிரெடிட் கார்டு தகவல் தயாராக இருந்தால் கிரெடிட் கார்டு மூலம் செலுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
கிரெடிட் கார்டு மூலம் செலுத்து என்பதைத் தேர்ந்தெடுத்தால், வாடிக்கையாளரின் பில்லிங் மற்றும் கிரெடிட் கார்டு தகவலை உள்ளிட்டு, கட்டணம் வசூலி என்பதைக் கிளிக் செய்யவும்.
கட்டண நினைவூட்டல்களை அமை
கட்டண விதிமுறைகள் ஒதுக்கப்பட்டுள்ள ஆர்டருக்குத் திட்டமிடப்பட்ட பேமெண்ட் நினைவூட்டல் மின்னஞ்சலை வாடிக்கையாளருக்குத் தானாக அனுப்ப, கட்டண நினைவூட்டல்கள் அம்சத்தைப் பயன்படுத்தலாம். நீங்கள் ஐந்து கட்டண நினைவூட்டல்கள் வரை உருவாக்கலாம். பேமெண்ட் நினைவூட்டல்களைக் கட்டணம் செலுத்த வேண்டிய தேதிக்கு அல்லது கெடு தேதிக்குப் பிறகு 30 நாட்கள் வரை அமைக்கலாம்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > அறிவிப்புகள் என்பதற்குச் செல்லவும்.
ஆர்டர்கள் பிரிவில், பேமெண்ட் நினைவூட்டல் பிரிவில், கட்டண நினைவூட்டல்களை நிர்வகி என்பதைக் கிளிக் செய்யவும்.
பேமெண்ட் நினைவூட்டலைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
கீழே உள்ள விருப்பத்தேர்வுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் பேமெண்ட் நினைவூட்டல் மின்னஞ்சலை எப்போது அனுப்ப வேண்டும் என்பதைத் தேர்வுசெய்யவும்:
- கெடு தேதியன்று
- பேமெண்ட் தாமதமாகும்போது
பொருந்தினால், கெடு தேதிக்குப் பிறகு எத்தனை நாட்கள் கழித்து உங்கள் நினைவூட்டலைத் திட்டமிட விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்.
இயக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.