ஆர்டர் ஆவண வார்ப்புருக்களை உருவாக்குதல் மற்றும் திருத்துதல்
நீங்கள் அச்சிடும் ஒவ்வொரு வகை ஆவணத்திற்கும் ஓர் ஆர்டர் ஆவண வார்ப்புருவை உருவாக்கலாம். உங்கள் பிராண்டிங் மற்றும் வணிகத் தேவைகளுக்கு ஏற்ப வார்ப்புருவின் தளவமைப்பு, தோற்றம் மற்றும் உள்ளடக்கத்தையும் திருத்தலாம். வார்ப்புருக்கள் உங்கள் Shopify நிர்வாகியில் சேமிக்கப்படுவதால், அந்த வகை ஆவணத்தை எங்கு அச்சிட்டாலும் அவற்றைப் பயன்படுத்தலாம்.
ஒவ்வொரு வார்ப்புருவும் பின்வரும் ஆவண வகைகளில் ஒன்றைச் சேர்ந்ததாக இருக்கும்:
- விலைப்பட்டியல்: உங்கள் வாடிக்கையாளருக்கான பதிவாக, ஓர் ஆர்டரின் உருப்படிகளையும் கட்டணங்களையும் பட்டியலிடுகிறது.
- பேக்கிங் சீட்டு: பொதிக்குள் வைக்கப்படும். ஷிப்மென்ட்டில் உள்ள உருப்படிகளைப் பட்டியலிடும்.
- தேர்வுப் பட்டியல்: ஆர்டரைத் தயார்செய்யும்போது உங்கள் இடத்திலிருந்து எடுக்க வேண்டிய உருப்படிகளைப் பட்டியலிடுகிறது.
- வெற்று வார்ப்புரு: உங்கள் வணிகத்திற்குத் தேவைப்படக்கூடிய பிற ஆவண வகைகளுக்கேற்பத் தனிப்பயனாக்கக்கூடிய வெற்று வார்ப்புரு.
இந்தப் பக்கத்தில்
- ஆர்டர் ஆவண வார்ப்புருக்கள் குறித்து கவனிக்க வேண்டியவை
- விலைப்பட்டியல் வார்ப்புருவை உருவாக்குதல்
- பேக்கிங் சீட்டு வார்ப்புருவை உருவாக்குதல்
- தேர்வுப் பட்டியல் வார்ப்புருக்கள் செயல்படும் விதம்
- தேர்வுப் பட்டியல் வார்ப்புருவை உருவாக்குதல்
- வெற்று வார்ப்புருவை உருவாக்குதல்
- ஆர்டர் ஆவண வார்ப்புருவைத் திருத்துதல்
- ஆர்டர் ஆவண வார்ப்புருவை நகலாக்குதல்
- ஆர்டர் ஆவண வார்ப்புருவை இயல்புநிலைக்கு மீட்டமைத்தல்
- ஆர்டர் ஆவண வார்ப்புருவை அழித்தல்
ஆர்டர் ஆவண வார்ப்புருக்கள் தொடர்பாகக் கவனிக்க வேண்டியவை
வார்ப்புருவை உருவாக்கும் அல்லது திருத்தும் முன், பின்வருவனவற்றைக் கவனத்தில் கொள்ளவும்:
- HTML, CSS மற்றும் Liquid மூலம் விலைப்பட்டியல், பேக்கிங் சீட்டு மற்றும் வெற்று வார்ப்புருக்களைத் தனிப்பயனாக்கலாம். தேர்வுப் பட்டியல் வார்ப்புருவைக் குறியீட்டிற்குப் பதிலாக விருப்பங்கள் மூலம் அமைக்கலாம்.
- ஒவ்வொரு வார்ப்புருவிலும் 135,000 எழுத்துகள் வரை இருக்கலாம்.
- பேக்கிங் சீட்டு வார்ப்புருவில் பயன்படுத்தக்கூடிய Liquid மாறிகளைப் பற்றி அறிய, பேக்கிங் சீட்டு மாறிகள் பற்றிய குறிப்பைப் பார்க்கவும்.
- விலைப்பட்டியல் வார்ப்புருக்களும் வெற்று வார்ப்புருக்களும் Shopify Order Printer செயலியில் உள்ள அதே Liquid மாறிகள் மற்றும் வடிப்பான்களைப் பயன்படுத்துகின்றன. முழுப் பட்டியலுக்கு, ஆர்டர் ஆவண வார்ப்புருக்களுக்கான Liquid மாறிகள் மற்றும் வடிப்பான்கள் பற்றிய குறிப்பைப் பார்க்கவும்.
- சிக்கலான தனிப்பயனாக்கங்களுக்கு, அனுபவமுள்ள மூன்றாம் தரப்பு வடிவமைப்பாளரைப் பணியமர்த்துவது குறித்துப் பரிசீலிக்கவும்.
விலைப்பட்டியல் வார்ப்புருவை உருவாக்குதல்
வாடிக்கையாளர் ஆர்டர் செய்து பணம் செலுத்தியவற்றின் பதிவே விலைப்பட்டியல். புதிய விலைப்பட்டியல் வார்ப்புருவில் தொடக்கத்தில் இயல்புநிலை விலைப்பட்டியல் இருக்கும். அதை நீங்கள் தனிப்பயனாக்கலாம். எடுத்துக்காட்டாக, உங்கள் லோகோவைச் சேர்க்கலாம் அல்லது வாசகங்களை மாற்றலாம்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியில், அமைப்புகள் > ஷிப்பிங் மற்றும் டெலிவரி என்பதற்குச் செல்லவும்.
ஆவணங்கள் பிரிவில், ஆவணத்தை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்து, பின்னர் விலைப்பட்டியல் என்பதைக் கிளிக் செய்யவும்.
விருப்பத்தேர்வு: பெயர் புலத்தில், வார்ப்புருவுக்கான பெயரை உள்ளிடவும்.
விருப்பத்தேர்வு: ஆவணங்களை அச்சிடும்போது இந்த வார்ப்புரு ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க, பல ஆவணங்களை அச்சிடும்போது முன்தேர்வு செய் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
குறியீட்டுத் திருத்தியில், வார்ப்புருவின் HTML, CSS மற்றும் Liquid-ஐத் தனிப்பயனாக்கவும்.
விருப்பத்தேர்வு: உங்கள் ஆர்டர்களில் ஒன்றைப் பயன்படுத்தி வார்ப்புருவின் முன்னோட்டத்தைப் பார்க்க, முன்னோட்டம் என்பதைக் கிளிக் செய்து, பின்னர் ஓர் ஆர்டரைத் தேடித் தேர்ந்தெடுக்கவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
பேக்கிங் சீட்டு வார்ப்புருவை உருவாக்குதல்
ஒரு பேக்கிங் சீட்டு, ஷிப்மென்டில் உள்ள உருப்படிகளைப் பட்டியலிடுகிறது. இந்த ஆவணம் பொதிக்குள் வைக்கப்படும். புதிய பேக்கிங் சீட்டு வார்ப்புரு, இயல்புநிலை பேக்கிங் சீட்டை அடிப்படையாகக் கொண்டிருக்கும். அதை நீங்கள் தனிப்பயனாக்கலாம். எடுத்துக்காட்டாக, உங்கள் லோகோவையோ நன்றிச் செய்தியையோ சேர்க்கலாம். குறியீட்டு எடுத்துக்காட்டுகளுக்கு, பேக்கிங் சீட்டுகளைத் தனிப்பயனாக்குதல் பகுதியைப் பார்க்கவும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியில், அமைப்புகள் > ஷிப்பிங் மற்றும் டெலிவரி என்பதற்குச் செல்லவும்.
ஆவணங்கள் பிரிவில், ஆவணத்தை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்து, பின்னர் பேக்கிங் சீட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
விருப்பத்தேர்வு: பெயர் புலத்தில், வார்ப்புருவுக்கான பெயரை உள்ளிடவும்.
விருப்பத்தேர்வு: பேக்கிங் சீட்டுகளை அச்சிடும்போது இந்த வார்ப்புருவைப் பயன்படுத்த, பேக்கிங் சீட்டுகளுக்கான இயல்புநிலை வார்ப்புருவாக அமை என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
விருப்பத்தேர்வு: ஆவணங்களை அச்சிடும்போது இந்த வார்ப்புரு ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க, பல ஆவணங்களை அச்சிடும்போது முன்தேர்வு செய் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
குறியீட்டுத் திருத்தியில், வார்ப்புருவின் HTML, CSS மற்றும் Liquid-ஐத் தனிப்பயனாக்கவும்.
விருப்பத்தேர்வு: உங்கள் ஆர்டர்களில் ஒன்றைப் பயன்படுத்தி வார்ப்புருவின் முன்னோட்டத்தைப் பார்க்க, முன்னோட்டம் என்பதைக் கிளிக் செய்து, பின்னர் ஓர் ஆர்டரைத் தேடித் தேர்ந்தெடுக்கவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
தேர்வுப் பட்டியல் வார்ப்புருக்கள் செயல்படும் விதம்
ஆர்டர்களை நிறைவேற்ற நீங்கள் சேகரிக்க வேண்டிய உருப்படிகளைக் கொண்ட பட்டியலே தேர்வுப் பட்டியல். ஆர்டர்களில் உள்ள உருப்படிகளை ஒரே சுருக்கமான பட்டியலாகத் தொகுக்க தேர்வுப் பட்டியல்கள் உதவுகின்றன. இதனால், உருப்படிகளை எடுக்கும்போதும் ஷிப்பிங் செய்யும்போதும் ஏற்படும் பிழைகளைக் குறைக்கலாம்.
தேர்வுப் பட்டியல் வார்ப்புரு, குறியீட்டிற்குப் பதிலாக விருப்பங்கள் மூலம் அமைக்கப்படுகிறது. அதை நீங்கள் பின்வரும் வழிகளில் தனிப்பயனாக்கலாம்:
- எடுக்கும் அடிப்படை: உருப்படிகளை ஒவ்வொரு ஆர்டராகப் பட்டியலிடுவதா அல்லது தேர்வுப் பட்டியலில் உள்ள அனைத்து ஆர்டர்களின் உருப்படிகளையும் தயாரிப்பு வாரியாகத் தொகுப்பதா என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- வரிசைப்படுத்தும் அடிப்படை: உருப்படிகளை எப்படி வரிசைப்படுத்த வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். எடுக்கும் அடிப்படை என்பதில் நீங்கள் தேர்ந்தெடுப்பதைப் பொறுத்து வரிசைப்படுத்தும் விருப்பங்கள் அமையும்.
- நிறைவேற்ற நிலை: ஆர்டர்களின் நிறைவேற்ற நிலையின் அடிப்படையில், எந்த ஆர்டர்களைச் சேர்க்க வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இயல்பாக, புதிய தேர்வுப் பட்டியல் வார்ப்புருவில் திறந்துள்ளது மற்றும் செயல்பாட்டில் உள்ளது ஆகிய நிலைகளில் உள்ள நிறைவேற்றங்கள் சேர்க்கப்படும்.
- நெடுவரிசைகள்: காட்ட வேண்டிய ஆர்டர் மற்றும் தயாரிப்புத் தகவல்களையும் நெடுவரிசைகளின் வரிசையையும் தேர்ந்தெடுக்கவும். ஆர்டர் பெயர், தயாரிப்புத் தலைப்பு, மாறுபாட்டின் பெயர், மாறுபாட்டின் படம், அளவு, SKU, பின் இருப்பிடம், ஆர்டர் டேக்குகள் மற்றும் தயாரிப்பு டேக்குகளைக் காட்டலாம். உங்கள் தேர்வுப் பட்டியலில் குறைந்தது ஒரு நெடுவரிசை இருக்க வேண்டும்.
- மெட்டாஃபீல்டு நெடுவரிசைகள்: ஆர்டர், தயாரிப்பு அல்லது மாறுபாட்டின் மெட்டாஃபீல்டுக்கு ஒரு நெடுவரிசையைச் சேர்க்கவும். உங்கள் தனிப்பயன் தரவு அமைப்புகளில் ஏற்கெனவே அமைத்துள்ள மெட்டாஃபீல்டுகள் மட்டுமே கிடைக்கும்.
ஒவ்வொரு எடுக்கும் அடிப்படை விருப்பத்திற்குமான வரிசைப்படுத்தல் விருப்பங்களைப் பற்றி அறிய, பின்வரும் அட்டவணையைப் பார்க்கவும்.
| எடுக்கும் அடிப்படை | உருப்படிகள் பட்டியலிடப்படும் விதம் | வரிசைப்படுத்தும் அடிப்படைக்கான விருப்பங்கள் |
|---|---|---|
| ஆர்டர் | ஒவ்வோர் ஆர்டருக்கான உருப்படிகளும் தனித்தனியாகப் பட்டியலிடப்படும். |
|
| தயாரிப்பு | தேர்வுப் பட்டியலில் உள்ள அனைத்து ஆர்டர்களின் உருப்படிகளும் தயாரிப்பு வாரியாகத் தொகுக்கப்படும். |
|
தேர்வுப் பட்டியல் வார்ப்புருவை உருவாக்குதல்
குறியீட்டை எழுதுவதற்குப் பதிலாக, தேர்வுப் பட்டியல் வார்ப்புரு விருப்பங்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் தேர்வுப் பட்டியல் வார்ப்புருவை அமைக்கலாம்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியில், அமைப்புகள் > ஷிப்பிங் மற்றும் டெலிவரி என்பதற்குச் செல்லவும்.
ஆவணங்கள் பிரிவில், ஆவணத்தை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்து, பின்னர் தேர்வுப் பட்டியல் என்பதைக் கிளிக் செய்யவும்.
விருப்பத்தேர்வு: பெயர் புலத்தில், வார்ப்புருவுக்கான பெயரை உள்ளிடவும்.
விருப்பத்தேர்வு: ஆவணங்களை அச்சிடும்போது இந்த வார்ப்புரு ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க, பல ஆவணங்களை அச்சிடும்போது முன்தேர்வு செய் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
வடிவமைப்பு பிரிவில், உங்கள் தேர்வுப் பட்டியலைத் தனிப்பயனாக்கவும்:
- எடுக்கும் அடிப்படை பிரிவில், ஆர்டர் அல்லது தயாரிப்பு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- வரிசைப்படுத்தும் அடிப்படை கீழ்தோன்றும் மெனுவில், உங்கள் தேர்வுப் பட்டியலில் உள்ள உருப்படிகளை எப்படி வரிசைப்படுத்த விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- நிறைவேற்ற நிலை பிரிவில், உங்கள் தேர்வுப் பட்டியலில் சேர்க்க விரும்பும் நிறைவேற்ற நிலைகளைத் தேர்ந்தெடுக்கவும்.
- நெடுவரிசைகள் பகுதியில், காட்ட விரும்பும் நெடுவரிசைகளைத் தேர்ந்தெடுக்கவும். நெடுவரிசைகளின் வரிசையை மாற்ற, ஒரு நெடுவரிசையைப் புதிய இடத்திற்கு இழுக்கவும்.
விருப்பத்தேர்வு: மெட்டாஃபீல்டு நெடுவரிசையைச் சேர்க்க, பின்வருவனவற்றைச் செய்யவும்:
- மெட்டாஃபீல்டைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
- ஓர் ஆப்ஜெக்ட் வகை மற்றும் ஒரு மெட்டாஃபீல்டு ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
- சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
விருப்பத்தேர்வு: உங்கள் ஆர்டர்களில் ஒன்றைப் பயன்படுத்தி வார்ப்புருவின் முன்னோட்டத்தைப் பார்க்க, முன்னோட்டம் என்பதைக் கிளிக் செய்து, பின்னர் ஓர் ஆர்டரைத் தேடித் தேர்ந்தெடுக்கவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
வெற்று வார்ப்புருவை உருவாக்குதல்
வெற்று வார்ப்புருவில் தொடக்கத்தில் உள்ளடக்கம் எதுவும் இருக்காது. பிற ஆவண வகைகளிலிருந்து மாறுபட்ட ஆவணத்தை உருவாக்க இது உதவுகிறது. அதை HTML, CSS மற்றும் Liquid மூலம் உருவாக்கலாம்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியில், அமைப்புகள் > ஷிப்பிங் மற்றும் டெலிவரி என்பதற்குச் செல்லவும்.
ஆவணங்கள் பிரிவில், ஆவணத்தை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்து, பின்னர் வெற்று வார்ப்புரு என்பதைக் கிளிக் செய்யவும்.
விருப்பத்தேர்வு: பெயர் புலத்தில், வார்ப்புருவுக்கான பெயரை உள்ளிடவும்.
விருப்பத்தேர்வு: ஆவணங்களை அச்சிடும்போது இந்த வார்ப்புரு ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க, பல ஆவணங்களை அச்சிடும்போது முன்தேர்வு செய் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
குறியீட்டுத் திருத்தியில், வார்ப்புருவின் HTML, CSS மற்றும் Liquid குறியீட்டை உள்ளிடவும்.
விருப்பத்தேர்வு: உங்கள் ஆர்டர்களில் ஒன்றைப் பயன்படுத்தி வார்ப்புருவின் முன்னோட்டத்தைப் பார்க்க, முன்னோட்டம் என்பதைக் கிளிக் செய்து, பின்னர் ஓர் ஆர்டரைத் தேடித் தேர்ந்தெடுக்கவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
ஆர்டர் ஆவண வார்ப்புருவைத் திருத்துதல்
ஆர்டர் ஆவண வார்ப்புருவைத் திருத்தி, அதன் பெயரை அல்லது உள்ளடக்கத்தை மாற்றலாம். ஆர்டர் ஆவணங்களை அச்சிடும்போது அது முன்தேர்வு செய்யப்பட்டிருக்கும்படியும் அமைக்கலாம். மேலும், பேக்கிங் சீட்டுகளை அச்சிடும்போது பயன்படுத்துவதற்காக ஒரு பேக்கிங் சீட்டு வார்ப்புருவை இயல்புநிலையாக அமைக்கலாம்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியில், அமைப்புகள் > ஷிப்பிங் மற்றும் டெலிவரி என்பதற்குச் செல்லவும்.
ஆவணங்கள் பிரிவில், திருத்த விரும்பும் வார்ப்புருவைக் கிளிக் செய்யவும்.
விருப்பத்தேர்வு: பெயர் புலத்தில், உங்கள் வார்ப்புருவுக்கான புதிய பெயரை உள்ளிடவும்.
விருப்பத்தேர்வு: நீங்கள் பேக்கிங் சீட்டுகளை அச்சிடும்போது ஒரு பேக்கிங் சீட்டு வார்ப்புருவைப் பயன்படுத்த, பேக்கிங் சீட்டுகளுக்கான இயல்புநிலை வார்ப்புருவாக அமை என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
விருப்பத்தேர்வு: ஆவணங்களை அச்சிடும்போது இந்த வார்ப்புரு ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க, பல ஆவணங்களை அச்சிடும்போது முன்தேர்வு செய் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
வார்ப்புருவின் உள்ளடக்கத்தைத் திருத்தவும். விலைப்பட்டியல், பேக்கிங் சீட்டு அல்லது வெற்று வார்ப்புருவாக இருந்தால், அதன் குறியீட்டைத் திருத்தவும். தேர்வுப் பட்டியல் வார்ப்புருவாக இருந்தால், வடிவமைப்பு பிரிவில் அதன் தேர்வுப் பட்டியல் விருப்பங்களை மாற்றவும்.
விருப்பத்தேர்வு: உங்கள் ஆர்டர்களில் ஒன்றைப் பயன்படுத்தி வார்ப்புருவின் முன்னோட்டத்தைப் பார்க்க, முன்னோட்டம் என்பதைக் கிளிக் செய்து, பின்னர் ஓர் ஆர்டரைத் தேடித் தேர்ந்தெடுக்கவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
ஆர்டர் ஆவண வார்ப்புருவின் நகலை உருவாக்குதல்
ஆர்டர் ஆவண வார்ப்புருவை நகலாக்கினால், அசலைப் பாதிக்காமல் மாற்றக்கூடிய ஒரு நகல் கிடைக்கும். நகலிலும் அசல் வார்ப்புருவில் உள்ள அதே ஆவண வகை, உள்ளடக்கம் மற்றும் பல ஆவணங்களை அச்சிடும்போது முன்தேர்வு செய் அமைப்பு இருக்கும். அதன் பெயர் இதன் நகல் என்று தொடங்கும். அந்தப் பெயர் ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்தால், பெயரின் இறுதியில் ஒரு எண் சேர்க்கப்படும். எடுத்துக்காட்டு: இதன் நகல்: விலைப்பட்டியல் (2).
சேமிக்கப்படாத மாற்றங்கள் உள்ள வார்ப்புருவை நகலாக்க முடியாது. முதலில் மாற்றங்களைச் சேமிக்கவும் அல்லது நிராகரிக்கவும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியில், அமைப்புகள் > ஷிப்பிங் மற்றும் டெலிவரி என்பதற்குச் செல்லவும்.
ஆவணங்கள் பிரிவில், நீங்கள் நகலாக்க விரும்பும் வார்ப்புருவைக் கிளிக் செய்யவும்.
நகலை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும். நகல் உருவாக்கப்பட்டுத் திருத்தியில் திறக்கும்.
ஆர்டர் ஆவண வார்ப்புருவை இயல்புநிலைக்கு மீட்டமைத்தல்
ஆர்டர் ஆவண வார்ப்புருவை இயல்புநிலைக்கு மீட்டமைக்கும்போது, அதன் உள்ளடக்கம் அந்த ஆவண வகைக்கான இயல்புநிலை உள்ளடக்கத்தால் மாற்றப்படும். இதைச் செயல்தவிர்க்க முடியாது. நீங்கள் மாற்றியுள்ள விலைப்பட்டியல், பேக்கிங் சீட்டு மற்றும் தேர்வுப் பட்டியல் வார்ப்புருக்களுக்கு மட்டுமே இயல்புநிலைக்கு மீட்டமை என்ற விருப்பம் காட்டப்படும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியில், அமைப்புகள் > ஷிப்பிங் மற்றும் டெலிவரி என்பதற்குச் செல்லவும்.
ஆவணங்கள் பிரிவில், மீட்டமைக்க விரும்பும் விலைப்பட்டியல், பேக்கிங் சீட்டு அல்லது தேர்வுப் பட்டியல் வார்ப்புருவைக் கிளிக் செய்யவும்.
இயல்புநிலைக்கு மீட்டமை என்பதைக் கிளிக் செய்யவும்.
உரையாடல் பெட்டியில், இயல்புநிலைக்கு மீட்டமை என்பதைக் கிளிக் செய்யவும்.
ஆர்டர் ஆவண வார்ப்புருவை அழித்தல்
ஓர் ஆர்டர் ஆவண வார்ப்புருவை அழித்தால், அது உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள அச்சிடும் விருப்பங்களிலிருந்து அகற்றப்படும். இதைச் செயல்தவிர்க்க முடியாது. குறைந்தது ஒரு விலைப்பட்டியல் வார்ப்புரு, ஒரு பேக்கிங் சீட்டு வார்ப்புரு மற்றும் ஒரு தேர்வுப் பட்டியல் வார்ப்புரு இருக்க வேண்டும். எனவே, ஒரு வகையில் ஒரே ஒரு வார்ப்புரு மட்டுமே இருந்தால் அதை அழிக்க முடியாது. எந்த வெற்று வார்ப்புருவையும் அழிக்கலாம். ஓர் ஆவண வகையின் இயல்புநிலை வார்ப்புருவை அழித்தால், அதே வகையைச் சேர்ந்த மற்றொரு வார்ப்புரு இயல்புநிலையாக மாறும்.
ஒரு வார்ப்புருவை அழிப்பதால் உங்கள் பேட்ச் பணிப்பாய்வுகள் புதுப்பிக்கப்படாது. ஒரு வார்ப்புருவை அழிப்பதற்கு முன், அதை அச்சிடும் பணிப்பாய்வுகள் அனைத்தையும் திருத்தி வேறொரு வார்ப்புருவைப் பயன்படுத்தும்படி அமைக்கவும். பணிப்பாய்வைத் திருத்தினால், நீங்கள் இன்னும் தொடங்காத பேட்ச்கள் மட்டுமே புதுப்பிக்கப்படும். ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள பேட்ச்கள் பழைய பணிப்பாய்வில் உள்ள வார்ப்புருவையே தொடர்ந்து அச்சிடும். எனவே, வார்ப்புருவை அழிக்கும் முன் அந்தப் பேட்ச்களை முடிக்கவும். குறிப்பிட்ட வார்ப்புருவுக்குப் பதிலாக ஓர் ஆவண வகையை அச்சிடும் பணிப்பாய்வுகள் பாதிக்கப்படாது. ஒரு பேட்ச் பணிப்பாய்வு அந்த வார்ப்புருவைப் பயன்படுத்தினால், அழிப்பதற்கான உரையாடல் பெட்டியில் எத்தனை பேட்ச்கள் பாதிக்கப்படும் என்று காட்டப்படும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியில், அமைப்புகள் > ஷிப்பிங் மற்றும் டெலிவரி என்பதற்குச் செல்லவும்.
ஆவணங்கள் பிரிவில், நீங்கள் அழிக்க விரும்பும் வார்ப்புருவைக் கிளிக் செய்யவும்.
அழி என்பதைக் கிளிக் செய்யவும்.
உரையாடல் பெட்டியில், அழி என்பதைக் கிளிக் செய்யவும்.