Order Printer வார்ப்புருக்களைத் தனிப்பயனாக்குதல்
உங்கள் Shopify நிர்வாகியிலுள்ள Order Printer செயலிக்காக நீங்கள் 15 வார்ப்புருக்கள் வரை உருவாக்கித் தனிப்பயனாக்கலாம். இயல்பாகவே, Order Printer செயலி பின்வரும் இரண்டு வார்ப்புருக்களை உள்ளடக்கியுள்ளது:
- விலைப்பட்டியல் - நீங்கள் வாடிக்கையாளருக்கு அனுப்பக்கூடிய ஒரு அடிப்படை விலைப்பட்டியல்
- பேக்கிங் சீட்டு - உங்கள் கடையின் முகவரி மற்றும் வாடிக்கையாளரின் ஷிப்பிங் முகவரி ஆகியவை அடங்கிய ஒரு அச்சுப்படி
இந்தப் பக்கத்தில்
புதிய Order Printer வார்ப்புருவை உருவாக்குதல்
புதிய Order Printer வார்ப்புருவை உருவாக்க உங்களுக்கு HTML, CSS மற்றும் Liquid ஆகியவை தெரிந்திருக்க வேண்டும். Shopify வடிவமைப்புச் கொள்கையின் வரம்பிற்குள் உள்ள இலவச Shopify தீம்களில் சிறிய மாற்றங்களைச் செய்ய, Shopify தீம் ஆதரவு உதவக்கூடும். உங்களுக்கு மேலும் சிக்கலான மாற்றங்கள் தேவைப்பட்டால் அல்லது Shopify ஆல் உருவாக்கப்படாத ஒரு தீமை நீங்கள் பயன்படுத்தினால், ஒரு Shopify பார்ட்னரை பணியமர்த்துவதைக் கருத்தில் கொள்ளவும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, செயலிகள் > Order Printer (மரபு) என்பதற்குச் செல்லவும்.
வார்ப்புருக்களை நிர்வகி என்பதைக் கிளிக் செய்யவும்.
வார்ப்புருவைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
பெயர் புலத்தில் உங்கள் புதிய வார்ப்புருவிற்கான பெயரை உள்ளிடவும்.
உங்கள் வார்ப்புருவை உருவாக்க குறியீடு புலத்தில் HTML, CSS அல்லது Liquid குறியீட்டைச் சேர்க்கவும்.
முடித்ததும், சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
ஒரு Order Printer வார்ப்புருவைத் திருத்துதல்
உங்கள் Order Printer வார்ப்புருக்களைத் திருத்த உங்களுக்கு HTML, CSS மற்றும் Liquid ஆகியவை தெரிந்திருக்க வேண்டும். Shopify தீம் ஆதரவால் உங்களுக்காக வார்ப்புருக்களைப் பெரிதாகத் திருத்த முடியாது, ஆனால் Shopify வடிவமைப்புச் கொள்கையின் வரம்பிற்குள் உள்ள இலவச Shopify தீம்களில் சிறிய மாற்றங்களைச் செய்ய அது உதவக்கூடும். மேலும் சிக்கலான மாற்றங்களுக்கு, ஒரு Shopify பார்ட்னரை பணியமர்த்துவதைக் கருத்தில் கொள்ளவும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, செயலிகள் > Order Printer (மரபு) என்பதற்குச் செல்லவும்.
வார்ப்புருக்களை நிர்வகி என்பதைக் கிளிக் செய்யவும்.
நீங்கள் திருத்த விரும்பும் வார்ப்புருவின் பெயரைக் கிளிக் செய்யவும்.
குறியீடு புலத்தில் HTML, CSS அல்லது Liquid குறியீட்டைச் சேர்ப்பதன் மூலம் அல்லது திருத்துவதன் மூலம் வார்ப்புருவில் உங்கள் மாற்றங்களைச் செய்யவும். வார்ப்புருத் தனிப்பயனாக்கங்களின் எடுத்துக்காட்டுகளைப் பிரிவியூ பார்க்க, வார்ப்புருத் தனிப்பயனாக்கங்களுக்கான எடுத்துக்காட்டு என்பதைப் பார்க்கவும்.
முடித்ததும், சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
வார்ப்புருத் தனிப்பயனாக்கங்களுக்கான எடுத்துக்காட்டு
Order Printer வார்ப்புருக்களைத் தனிப்பயனாக்குவதற்கான சில பொதுவான வழிகளைப் பின்வரும் எடுத்துக்காட்டுகள் விளக்குகின்றன:
- Order Printer வார்ப்புருக்களில் உங்கள் லோகோவைச் சேர்த்தல்
- அட்டவணையின் அகலங்களை 100% ஆக அமைத்தல்
- தயாரிப்புச் சிறுபடங்களைக் காட்டுதல்
- ஆர்டர் விவரங்களைச் சேர்த்தல்
எடுத்துக்காட்டு: Order Printer வார்ப்புருக்களில் உங்கள் லோகோவைச் சேர்க்கவும்
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, உள்ளடக்கம் > கோப்புகள் என்பதற்குச் செல்லவும்.
கோப்புகளைப் பதிவேற்று என்பதைக் கிளிக் செய்து, உங்கள் கணினியில் உள்ள படக் கோப்பைத் தேர்ந்தெடுக்கவும்.
கோப்புகள் பக்கத்தில், பதிவேற்றப்பட்ட கோப்பைக் கண்டறிந்து URL-ஐ நகலெடு என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > செயலிகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
செயலியைத் திறக்க, Order Printer என்பதைக் கிளிக் செய்யவும்.
வார்ப்புருக்களை நிர்வகி என்பதைக் கிளிக் செய்யவும்.
நீங்கள் திருத்த விரும்பும் வார்ப்புருவின் பெயரைக் கிளிக் செய்யவும்.
உங்கள் வார்ப்புருவில் லோகோ தோன்ற வேண்டிய இடத்தில் பின்வரும் குறியீட்டுத் துணுக்கை உள்ளிடவும்:
.your-image-URLஎன்பதை நீங்கள் நகலெடுத்த பட URL மூலம் மாற்றவும். உங்கள் லோகோ எங்கு காட்டப்பட வேண்டும் என்பதைப் பொறுத்து, உங்கள் படத்திற்கு முன்போ பின்போ வரி முறிவைச் சேர்க்க
குறிச்சொல்லை நீங்கள் சேர்க்க வேண்டியிருக்கலாம்.
மொபைல்
Shopify செயலியிலிருந்து,
ஐகானைத் தட்டவும்.
உள்ளடக்கம் மெனுவில்,
ஐகானைத் தட்டி, கோப்புகள் என்பதைத் தட்டவும்.
கோப்புகளைப் பதிவேற்று என்பதைத் தட்டி, உங்கள் கணினியில் உள்ள படக் கோப்பைத் தேர்ந்தெடுக்கவும்.
கோப்புகள் பக்கத்தில், பதிவேற்றப்பட்ட கோப்பைக் கண்டறிந்து URL-ஐ நகலெடு என்பதைத் தட்டவும்.
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > செயலிகள் என்பதைத் தட்டவும்.
செயலியைத் திறக்க Order Printer என்பதைத் தட்டவும்.
வார்ப்புருக்களை நிர்வகி என்பதைத் தட்டவும்.
நீங்கள் திருத்த விரும்பும் வார்ப்புருவின் பெயரைத் தட்டவும்.
உங்கள் வார்ப்புருவில் லோகோ தோன்ற வேண்டிய இடத்தில் பின்வரும் குறியீட்டுத் துணுக்கை உள்ளிடவும்:
.your-image-URLஎன்பதை நீங்கள் நகலெடுத்த பட URL மூலம் மாற்றவும். உங்கள் லோகோ எங்கு காட்டப்பட வேண்டும் என்பதைப் பொறுத்து, உங்கள் படத்திற்கு முன்போ பின்போ வரி முறிவைச் சேர்க்க
குறிச்சொல்லை நீங்கள் சேர்க்க வேண்டியிருக்கலாம்.
HTML-இல் இது இப்படித் தோன்ற வேண்டும்:

எடுத்துக்காட்டு: அட்டவணை அகலங்களை 100% ஆக்குதல்
உங்கள் அட்டவணைகளுக்குப் பார்டர்களை அமைக்கவும் அவை 100% அகலத்திற்கு விரிவடையவும், உங்கள் அட்டவணையில் table-tabular வகுப்பைச் (class) சேர்க்கவும்:

எடுத்துக்காட்டு: தயாரிப்புச் சிறுபடங்களைக் காட்டவும்
தயாரிப்புச் சிறுபடங்களைச் சேர்க்க, இந்தக் குறியீட்டை உங்கள் வார்ப்புருவில் உள்ளிடவும்:
{{ line_item.product.featured_image | product_img_url: 'thumb' | img_tag }}ஆர்டர் விவரங்களைச் சேர்க்கவும்
வாங்கிய உருப்படிகளின் பெயர், அளவு மற்றும் செலவு போன்ற ஆர்டர் விவரங்களை உங்கள் வார்ப்புருக்களில் சேர்க்கலாம். உங்கள் வார்ப்புருவில் ஆர்டர் விவரங்களைச் சேர்க்க:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, செயலிகள் > Order Printer (மரபு) என்பதற்குச் செல்லவும்.
வார்ப்புருக்களை நிர்வகி என்பதைக் கிளிக் செய்யவும்.
நீங்கள் திருத்த விரும்பும் வார்ப்புருவின் பெயரைக் கிளிக் செய்யவும்.
ஆர்டர் விவரங்களைச் சேர்க்க Liquid மாறிகளையும், வடிவமைப்பைச் சேர்க்க HTML-ஐயும் பயன்படுத்தவும். எடுத்துக்காட்டாக,
{{ line_item.price | money }}என்பது உருப்படியின் விலையை அச்சிடும்.முடித்ததும், சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
எடுத்துக்காட்டாக, நைலா தனது பேக்கிங் சீட்டு வார்ப்புருவை ஷிப்பிங் செய்யப்படும் உருப்படிகளின் பட்டியலைச் சேர்க்கும் வகையில் திருத்த விரும்புகிறார். அவர் Order Printer செயலியில் உள்ள தனது Packing slip வார்ப்புருவின் கீழ்ப்பகுதியில் பின்வரும் குறியீட்டைச் சேர்க்கிறார்:

Quantity

Item

{% if tax_lines.size > 0 %}

Taxes

{% endif %}

Price

{% for line_item in line_items %}

{{ line_item.quantity }} x

{{ line_item.title }}

{% if line_item.tax_lines %}

{% for tax_line in line_item.tax_lines %}
{{ tax_line.price | money }} {{ tax_line.title }}

{% endfor %}

{% endif %}

{{ line_item.price | money }}

{% endfor %}

இதன் விளைவாக, நைலாவின் பேக்கிங் சீட்டுகளில் இப்போது வாங்கிய உருப்படிகளைப் பட்டியலிடும் அட்டவணை உள்ளது.