இறக்குமதி செய்யப்பட்ட உங்கள் Order Printer வார்ப்புருக்கள் தொடர்பான சிக்கல்களைத் தீர்த்தல்

மரபு Order Printer செயலியில் இருந்து புதிய Shopify Order Printer செயலிக்கு உங்கள் வார்ப்புருக்களை இடமாற்றும்போது, புதிய செயலியுடனான இணக்கத்தன்மையை உறுதிசெய்ய உங்கள் Liquid மாறிகள் புதுப்பிக்கப்படும். அரிதான சந்தர்ப்பங்களில், இறக்குமதி செய்யப்பட்ட உங்கள் வார்ப்புருக்களில் உள்ள பிழைகளைக் கண்டறிந்து திருத்த வேண்டியிருக்கலாம்.

இறக்குமதி செய்யப்பட்ட உங்கள் வார்ப்புருக்கள் சரியாக அச்சிடப்படாவிட்டால், புதிய Shopify Order Printer செயலியில் உங்கள் வார்ப்புருவின் குறியீட்டை நீங்கள் கைமுறையாகத் திருத்த வேண்டியிருக்கலாம். வார்ப்புருக்கள் சரியாக இறக்குமதி செய்யப்படாமல் இருப்பதற்கான பின்வரும் பொதுவான காரணங்களைச் சரிபார்க்கவும்:

  • வார்ப்புருக்களில் பிரத்தியேக CSS சேர்க்கப்பட்டுள்ளது
  • வார்ப்புருக்களில் மெட்டாஃபீல்டுகள் உள்ளன
  • Liquid மாறிகள் சரியாகப் புதுப்பிக்கப்படாமல் இருக்கலாம்

புதிய Shopify Order Printer செயலிக்கு உங்களின் பிரத்தியேக வார்ப்புருக்களை இறக்குமதி செய்யும்போது ஏற்படும் சிக்கல்களைத் தீர்ப்பது குறித்தான விரிவான தகவல்களை இந்தப் பக்கத்தில் கண்டறியலாம்.

பொதுவான CSS வடிவமைப்புத் தனிப்பயனாக்கங்களைப் புதுப்பித்தல்

நீங்கள் இடமாற்றும் வார்ப்புருக்களில் பிரத்தியேக CSS சேர்க்கப்பட்டிருந்தால், படங்கள், பிரத்தியேக எழுத்துருக்கள், லோகோக்கள் அல்லது பார்கோடுகள் போன்ற வடிவமைப்பு மூலங்களைச் சரியாகக் காட்ட, உங்கள் வார்ப்புருக்களில் உள்ள CSS குறியீட்டைக் கைமுறையாகப் புதுப்பிக்க வேண்டியிருக்கலாம்.

மெட்டாஃபீல்டு மாறிகளைப் புதுப்பித்தல்

மெட்டாஃபீல்டை அணுகுவதற்கு அதன் பெயர்வெளியைக் குறிப்பிட வேண்டும். மேலும் மாறியில் .value என்பதைச் சேர்க்க வேண்டியதில்லை. மெட்டாஃபீல்டு வரையறைகள் குறித்து மேலும் அறிக.

உதாரணமாக, product.metafields.custom.manufacturerid.value மாறிக்குப் பதிலாக, product.metafields.custom.manufacturerid மாறியைப் பயன்படுத்தவும்.

ஒவ்வொரு மெட்டாஃபீல்டுக்குமான பெயர்வெளி மதிப்புகளைக் கண்டறிய, உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள பிரத்தியேகத் தரவு பக்கத்தைப் பார்க்கவும். மெட்டாஃபீல்டு வரையறைகள், அவை குறிப்பிடும் தயாரிப்புகள், மாறுபாடுகள் அல்லது ஆர்டர்கள் போன்ற பொருள்களின் அடிப்படையில் தொகுக்கப்படுகின்றன.

பொதுவான Liquid மாறிகளைப் புதுப்பித்தல்

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இடமாற்றச் செயல்முறையின்போது உங்கள் Liquid மாறிகள் தானாகவே புதுப்பிக்கப்படும். இருப்பினும், உங்களின் வார்ப்புருக்கள் சரியாக இடமாற்றப்படாமல் இருந்து, இந்தப் பிரிவில் பட்டியலிடப்பட்டுள்ள மாறிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் பயன்படுத்தினால், உங்கள் பழைய மாறிகளுக்குப் பதிலாகப் புதிய மாறிகளைக் கைமுறையாக மாற்ற வேண்டியிருக்கலாம். மரபு Order Printer செயலியுடன் ஒப்பிடுகையில் புதிய Shopify Order Printer செயலியில் வேறுபட்ட மாறிகள் பயன்படுத்தப்படுகின்றன.

உதாரணமாக, நீங்கள் date மாறியைப் பயன்படுத்தினால், அதற்குப் பதிலாக created_at மாறியைப் பயன்படுத்த வேண்டும்.

ஆர்டர் மாறிகள்

Shopify Order Printer செயலியில் ஆர்டர் மாறிகள் வேறுபட்ட முறையில் பயன்படுத்தப்படுகின்றன. ஆர்டர் மாறிகளை அணுகுவதற்கு, order. முன்னொட்டைச் சேர்க்க வேண்டும். உதாரணமாக, billing_address மாறியை அணுகுவதற்கு, நீங்கள் order.billing_address என்பதைப் பயன்படுத்த வேண்டும்.

பொதுவாகப் பயன்படுத்தப்படும் பின்வரும் ஆர்டர் மாறிகளை order. முன்னொட்டு இல்லாமல் அணுகலாம்:

  • line_items
  • tax_lines
  • fulfillments
  • transactions
  • refunds
  • shipping_methods
  • customer

உதாரணமாக, வரிசை உருப்படிகள் மாறியை அணுக விரும்பினால், நீங்கள் line_items அல்லது order.line_items என்பதைப் பயன்படுத்தலாம்.

உங்கள் வார்ப்புருவிற்கான சொந்த மாற்றுப்பெயர்களையும் உருவாக்கிக் கொள்ளலாம். உதாரணமாக, நீங்கள் {% assign fulfillments_count = order.fulfillments | size %} Liquid தொடரியலைப் பயன்படுத்தலாம், பிறகு உங்கள் குறியீட்டில் {{ fulfillments_count }} என்பதைப் பயன்படுத்தி அதைக் குறிப்பிடலாம்.

ஆர்டர் மாறி
மரபு Order Printer செயலியில் உள்ள மாறிபுதிய Shopify Order Printer செயலியில் உள்ள மாறி
line_items
  • பணத்தைத் திரும்பப்பெற்ற வரிசை உருப்படிகள் என்பவை, line_items மாறியில் சேர்க்கப்பட்டிருக்காது. பின்வரும் விவரங்களைச் சரிபார்க்கவும்:
    • refunds.<each>.refund_line_items மாறியைப் பயன்படுத்திப் பணத்தைத் திரும்பப்பெற்ற வரிசை உருப்படிகளை நீங்கள் அணுகலாம். பின்வரும் உதாரணத்தைச் சரிபார்க்கவும்.
      {% assign refunded_line_items = refunds | map: "refund_line_items" | map: "line_item" %}
    • உங்களுக்கு விருப்பமிருந்தால், line_items சேகரிப்புடன் பணத்தைத் திரும்பப்பெற்ற வரிசை உருப்படிகளை இணைக்கலாம். பின்வரும் உதாரணத்தைச் சரிபார்க்கவும்.
      {% assign refunded_line_items = order.refunds | map: "refund_line_items" | map: "line_item" %} {% assign line_items_with_refunded = order.line_items | concat: refunded_line_items | uniq %}
    • பணத்தைத் திரும்பப்பெற்ற வரிசை உருப்படிகளின் நகலாக்கத்தைத் தவிர்ப்பதற்காக, | uniq வடிப்பானைச் சேர்த்துள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
  • டிப் வரிசை உருப்படிகள் என்பவை, line_items மாறியில் சேர்க்கப்பட்டிருக்காது. பின்வரும் விவரங்களைச் சரிபார்க்கவும்:
    • tip_line_items மாறியைப் பயன்படுத்தி நீங்கள் டிப் வரிசை உருப்படிகளை அணுகலாம்.
    • உங்களுக்கு விருப்பமிருந்தால், line_items சேகரிப்புடன் tip_line_items என்பதை இணைக்கலாம். பின்வரும் உதாரணத்தைச் சரிபார்க்கவும்.
      {% assign line_items_with_tips = order.line_items | concat: order.tip_line_items %}
  • மரபு Order Printer line_items சேகரிப்பை நகலெடுப்பதற்கு, பின்வரும் உதாரணக் குறியீட்டைப் பயன்படுத்தலாம்.
    {% assign refunded_line_items = refunds | map: "refund_line_items" | map: "line_item" %} {% assign all_line_items = order.line_items | concat: refunded_line_items | concat: order.tip_line_items | uniq %} {% for line_item in all_line_items %} ... {% endfor %}
credit_cardtransactions.<each>.payment_details மாறியைப் பயன்படுத்தி ஆர்டரிலுள்ள ஒவ்வொரு பரிவர்த்தனையின் அடிப்படையிலான பேமெண்ட் விவரங்களைப் பயன்படுத்துங்கள்.
current_shipping_priceshipping_price
datecreated_at மாறியைப் பயன்படுத்துங்கள். நேர முத்திரையை வடிவமைக்க date வடிப்பானைப் பயன்படுத்துங்கள், உதாரணமாக {{ order.created_at | date: "%B %e, %Y" }}.
gatewaysunique_gateways அல்லது transactions.<each>.gateway
order_currencycurrency
processed_atcreated_at மாறியைப் பயன்படுத்துங்கள். இது GraphQL API இலிருந்து order.processed_at மதிப்பைக் கொண்டிருக்கும், மேலும் இது ஆர்டர் Shopify இல் இறக்குமதி செய்யப்பட்ட நேரத்திற்குப் பதிலாக, ஆர்டர் உண்மையில் செயலாக்கப்பட்ட நேரத்தைக் குறிக்கிறது. இது மரபு Order Printer செயலியின் order.processed_at மதிப்பிற்கு நிகரானது. நேர முத்திரையை வடிவமைக்க, நீங்கள் date வடிப்பானைப் பயன்படுத்தலாம், உதாரணமாக {{ order.created_at | date: "%B %e, %Y" }}.
payment_transactions

Liquid தொடரியலில் where என்பதைப் பயன்படுத்தியோ if என்பதை உள்ளடக்கிய லூப்பிங் மூலமாகவோ, kind நிலைக்கான order.transactions விவரங்களை வடிகட்டுங்கள். பின்வரும் உதாரணங்களைச் சரிபார்க்கவும்.

{% assign sale_transactions = order.transactions | where: "kind", "sale" %} {% assign capture_transactions = order.transactions | where: "kind", "capture" %} {% for transaction in transactions %} {% if transaction.kind == "sale" or transaction.kind == "capture" %} Transaction ID: {{ transaction.id }} Kind: {{ transaction.kind }} Amount: {{ transaction.amount | money }} {% endif %} {% endfor %}

{% assign sale_transactions = order.transactions | where: "kind", "sale" %} {% assign capture_transactions = order.transactions | where: "kind", "capture" %} {% assign payment_transactions = sale_transactions | concat: capture_transactions %}

refund_transactionsபின்வரும் உதாரணத்தைப் போல, Liquid தொடரியலில் where என்பதைப் பயன்படுத்தியோ if என்பதை உள்ளடக்கிய லூப்பிங் மூலமாகவோ, kind நிலைக்கான order.transactions விவரங்களை வடிகட்டுங்கள்.
{% assign refund_transactions = order.transactions | where: "kind", "refund" %}
shipping_lineshipping_methods | first
shipping_linesshipping_methods
show_line_item_taxestax_lines.size > 0. பின்வரும் உதாரணத்தைப் போல, இதை வார்ப்புருவின் தொடக்கத்தில் ஒரு மாறியாக வரையறுத்து பல முறை குறிப்பிடலாம்.
{% if tax_lines.size > 0 %} {% assign show_line_item_taxes = true %} {% else %} {% assign show_line_item_taxes = false %} {% endif %}
total_taxtax_price
total_paidnet_payment

LineItem மாறிகள்

LineItem மாறி
மரபு Order Printer செயலியில் உள்ள மாறிபுதிய Shopify Order Printer செயலியில் உள்ள மாறி
fulfillable_quantityquantity - successfully_fulfilled_quantity
fulfilledquantity == successfully_fulfilled_quantity
nametitle
product_titleproduct.title
unit_discountquantity ? line_level_total_discount / quantity : 0
variant_titlevariant.title
weightgrams

நிறைவேற்ற மாறிகள்

நிறைவேற்ற மாறி
மரபு Order Printer செயலியில் உள்ள மாறிபுதிய Shopify Order Printer செயலியில் உள்ள மாறி
datecreated_at

Shop மாறிகள்

Shop மாறி
மரபு Order Printer செயலியில் உள்ள மாறிபுதிய Shopify Order Printer செயலியில் உள்ள மாறி
owneraccount_owner.name
addressshop.address.address1
address2shop.address.address2
cityshop.address.city
countryshop.address.country
country_codeshop.address.country_code
provinceshop.address.province
province_codeshop.address.province_code
zipshop.address.zip

முகவரி மாறிகள்

முகவரி மாறி
மரபு Order Printer செயலியில் உள்ள மாறிபுதிய Shopify Order Printer செயலியில் உள்ள மாறி
latitudelocation பண்புக்கூறிலிருந்து address மாறி குறிப்பிடப்பட்டிருந்தால், location பொருளில் அட்சரேகையும் தீர்க்கரேகையும் கிடைக்கும்.
longitudelocation பண்புக்கூறிலிருந்து address மாறி குறிப்பிடப்பட்டிருந்தால், location பொருளில் அட்சரேகையும் தீர்க்கரேகையும் கிடைக்கும்.

பணத்தைத் திரும்பப்பெறுதல் மாறிகள்

பணத்தைத் திரும்பப்பெறுதல் மாறி
மரபு Order Printer செயலியில் உள்ள மாறிபுதிய Shopify Order Printer செயலியில் உள்ள மாறி
datecreated_at மாறியைப் பயன்படுத்துங்கள். நேர முத்திரையை வடிவமைக்க date வடிப்பானைப் பயன்படுத்துங்கள், உதாரணமாக {{ order.created_at | date: "%B %e, %Y" }}.

ShippingLine மாறிகள்

ShippingLine மாறி
மரபு Order Printer செயலியில் உள்ள மாறிபுதிய Shopify Order Printer செயலியில் உள்ள மாறி
current_priceprice
priceoriginal_price

பரிவர்த்தனை மாறிகள்

பின்வரும் பரிவர்த்தனை மாறிகள் அகற்றப்பட்டன, அவற்றை Shopify Order Printer செயலியில் மாற்ற முடியாது:

  • authorization
  • message
  • test

மாறுபாடு மாறிகள்

மாறுபாடு மாறி
மரபு Order Printer செயலியில் உள்ள மாறிபுதிய Shopify Order Printer செயலியில் உள்ள மாறி
gramsweight

மெட்டாஃபீல்டு மாறிகள்

ஒரு மெட்டாஃபீல்டை அணுக, மெட்டாஃபீல்டின் பெயர்வெளியைக் குறிப்பிட வேண்டும், மேலும் மாறிக்கு .value என்பதைச் சேர்க்கத் தேவையில்லை. மெட்டாஃபீல்டு வரையறைகள் குறித்து மேலும் அறிக.

எடுத்துக்காட்டாக, product.metafields.manufacturerid.value மாறிக்குப் பதிலாக, product.metafields.custom.manufacturerid மாறியைப் பயன்படுத்தவும்.

ஒவ்வொரு மெட்டாஃபீல்டுக்குமான பெயர்வெளி மதிப்புகளைக் கண்டறிய, உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள தனிப்பயன் தரவு பக்கத்தைப் பார்க்கவும். மெட்டாஃபீல்டு வரையறைகள், தயாரிப்புகள், மாறுபாடுகள் அல்லது ஆர்டர்கள் போன்ற அவை குறிக்கும் பொருள்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளன.

வடிகட்டி மேப்பிங்

வடிகட்டி மேப்பிங்
மரபு Order Printer செயலியில் வடிகட்டியின் பெயர்புதிய Shopify Order Printer செயலியில் வடிகட்டியின் பெயர்
files_urlfile_url
payment_method மற்றும் payment_methodsஆர்டர் பரிவர்த்தனைகளில் transaction.gateway_display_name புலத்தைப் பயன்படுத்தவும். கட்டண முறைகள் இனி {கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, வங்கிப் பரிமாற்றம்} போன்ற குறிப்பிட்ட வகைகளாகப் பிரிக்கப்படாது. மரபு Order Printer செயலி, தற்போது செயல்படும் சிறிய அளவிலான கட்டண நுழைவாயில்களை மட்டுமே இந்த வகைகளுடன் மேப் செய்தது. கட்டண நுழைவாயில் வழங்குநர்கள் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் கட்டண முறைகளின் வகைகளைத் தாங்களே நிர்வகிக்கிறார்கள்.