ஆர்டர் ஆவணங்களை அச்சிடுதல்

Shopify நிர்வாகியில் உள்ள ஆர்டர்களிலிருந்து விலைப்பட்டியல்கள், பேக்கிங் சீட்டுகள், தேர்வுப் பட்டியல்கள் மற்றும் பிற ஆர்டர் ஆவணங்களை நேரடியாக அச்சிடலாம். உங்கள் பதிவுகளுக்காக ஆர்டரின் நகலை வைத்திருக்க, ஆர்டர் பக்கத்தையும் அச்சிடலாம்.

உங்கள் ஸ்டோருக்காக அமைக்கப்பட்டுள்ள ஆர்டர் ஆவண வார்ப்புருக்களே அச்சிடுவதற்கான விருப்பங்களாகக் கிடைக்கும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஆர்டர்களில் ஷிப்பிங் லேபிள்கள் அல்லது சுங்கப் படிவங்கள் இருந்தால், அவற்றையும் அதே படியில் அச்சிடலாம். லேபிளை வாங்கும்போதே ஷிப்பிங் ஆவணங்களை அச்சிட அல்லது ஷிப்பிங் லேபிள்கள் மற்றும் சுங்கப் படிவங்கள் பற்றி மேலும் அறிய, ஷிப்பிங் லேபிள்கள் மற்றும் ஷிப்பிங் ஆவணங்களை அச்சிடுதல் என்பதைப் பார்க்கவும்.

ஆர்டர் ஆவணங்களை அச்சிடுவதற்கான பக்கங்கள்

உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள மூன்று பக்கங்களிலிருந்து ஆர்டர் ஆவணங்களை அச்சிடலாம். எந்தப் பக்கத்தைப் பயன்படுத்துவது என்பதை அறிய, பின்வரும் அட்டவணையைப் பார்க்கவும்.

ஆர்டர் ஆவணங்களை அச்சிடக்கூடிய Shopify நிர்வாகிப் பக்கங்களும் ஒவ்வொரு பக்கத்திலும் உள்ள ஆர்டர்களும்
பக்கம்பயன்பாட்டுச் சூழல்சேர்க்கப்பட்டுள்ள ஆர்டர்கள்
ஆர்டர் விவரங்கள் பக்கம்நீங்கள் ஏற்கெனவே கையாளும் ஆர்டருக்கான ஆவணங்களை அச்சிடலாம்.ஒரு ஆர்டர்
ஆர்டர்கள் பக்கம்நீங்கள் ஒன்றாக நிறைவேற்றும் ஆர்டர்களின் தொகுப்புக்கு ஒரே வகையான ஆவணங்களை அச்சிடலாம்.நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு ஆர்டரும்
ஷிப்பிங் லேபிள்கள் பக்கம்வாங்கிய லேபிள்களுடன் அவற்றுக்கான ஆவணங்களையும் அச்சிடலாம்.நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு லேபிளும்

ஆர்டர் ஆவணங்களை அச்சிடும்போது கவனிக்க வேண்டியவை

அச்சிடுவதற்கு முன், பின்வரும் குறிப்புகளைப் படிக்கவும்:

  • வார்ப்புருக்கள் எதுவும் இல்லையெனில், அச்சிடுவதற்கு முன் ஆவண வார்ப்புருவை உருவாக்கவும்.
  • ஆர்டர் விவரங்கள் பக்கம் அல்லது ஆர்டர்கள் பக்கத்திலிருந்து ஆவணங்களை அச்சிட, பணியாளர்களுக்கு ஆர்டர் தகவல்களை நிர்வகி அனுமதி தேவை. அச்சிடும் விருப்பங்களில் தேர்வுப் பட்டியல் வார்ப்புருக்கள், ஷிப்பிங் லேபிள்கள் மற்றும் சுங்கப் படிவங்களைப் பார்க்க, பணியாளர்களுக்கு நிறைவேற்றி அனுப்பு அனுமதியும் தேவை. ஷிப்பிங் லேபிள்கள் பக்கத்தை அணுக நிறைவேற்றி அனுப்பு அனுமதி தேவை.
  • Shopify நிர்வாகியில் ஷிப்பிங் லேபிள்களை வாங்கக்கூடிய நாடுகளில் மட்டுமே ஷிப்பிங் லேபிள்கள் பக்கம் கிடைக்கும். உங்கள் நாட்டிற்கு ஆதரவு உள்ளதா என்பதைச் சரிபார்க்க, ஷிப்பிங் லேபிள்களை வாங்குவதற்கான தேவைகளைப் பார்க்கவும்.
  • பல ஆவணங்களை அச்சிடும்போது முன்கூட்டியே தேர்ந்தெடு என அமைக்கப்பட்ட வார்ப்புருக்கள், நீங்கள் முதல்முறை அச்சிடும்போது ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும். அவற்றின் தேர்வை நீக்கலாம். உங்களுக்கு நிறைவேற்றி அனுப்பு அனுமதி இருந்தால், அடுத்த முறை அச்சிடும்போது இதற்குப் பதிலாகக் கடைசியாகப் பயன்படுத்திய ஆவணங்களும் அச்சு அமைப்புகளும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்.
  • உங்கள் ஆவணங்கள் புதிய உலாவித் தாவலில் திறக்கும். உலாவி பாப்-அப் சாளரங்களைத் தடுத்தால், எந்த ஆவணமும் அச்சிடப்படாது. அச்சிடுவதற்கு முன், Shopify நிர்வாகிக்கான பாப்-அப் சாளரங்களை அனுமதிக்கவும்.
  • ஒரே நேரத்தில் 1,500 ஆவணங்கள் வரை அச்சிடலாம். பெரும்பாலான ஆவண வகைகளில், நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு ஆர்டருக்கும் ஓர் ஆவணம் உருவாகும். ஆனால் தேர்வுப் பட்டியலில், அச்சிடப்படும் அனைத்து ஆர்டர்களுக்கும் சேர்த்து ஒரே ஆவணம் உருவாகும். ஓர் ஆவணத்தைத் தேர்ந்தெடுப்பதால் அச்சிடும் வரம்பை மீற நேர்ந்தால், வேறோர் ஆவணத்தின் தேர்வை நீக்கும் வரை அதைத் தேர்ந்தெடுக்க முடியாது.

ஆர்டர் ஆவணங்களை அச்சிடும்போது, நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு ஆவணத்திற்கும் அச்சு அமைப்புகள் பொருந்தும்:

  • காகித அளவு: எல்லா வகை ஆவணங்களையும் பின்வரும் காகித அளவுகளில் ஏதேனும் ஒன்றில் அச்சிடலாம்:
    • 4 × 6 (தெர்மல்): 100 × 150 mm / A6, லேபிள் பிரிண்டர்களுக்கு
    • 8.5 × 11 (லெட்டர்): 216 × 279 mm, டெஸ்க்டாப் பிரிண்டர்களுக்கு
    • 8.27 × 11.69 (A4): 210 × 297 mm, டெஸ்க்டாப் பிரிண்டர்களுக்கு
  • ஒரு பக்கத்திற்கான ஆவணங்கள்: லெட்டர் அல்லது A4 காகிதத்தின் ஒவ்வொரு தாளிலும் இரண்டு ஆவணங்களை அச்சிட இரண்டு என்பதைத் தேர்ந்தெடுக்கவும். ஒவ்வொரு ஆவணத்தையும் தனித்தனி தாளில் அச்சிட ஒன்று என்பதைத் தேர்ந்தெடுக்கவும். 4 × 6 காகிதத்திற்கு இந்த அமைப்பு கிடைக்காது.
  • தொகுத்திடு: ஒவ்வொரு ஆர்டரின் ஆவணங்களையும் ஒன்றாக வைத்திருக்கும். எடுத்துக்காட்டாக, ஒவ்வொரு ஆர்டரின் பேக்கிங் சீட்டுக்கு அடுத்ததாக அதன் விலைப்பட்டியல் அச்சிடப்படும். தொகுத்திடு என்பதை முடக்கினால், ஆவணங்கள் அவற்றின் வகைப்படி தொகுக்கப்படும். அதனால், அனைத்து விலைப்பட்டியல்களுக்கும் முன்பாக அனைத்து பேக்கிங் சீட்டுகளும் அச்சிடப்படும். ஒன்றுக்கும் மேற்பட்ட ஆவணங்களைத் தேர்ந்தெடுக்கும்போது தொகுத்திடலாம்.

நீங்கள் எந்தப் பக்கத்திலிருந்து தொடங்குகிறீர்கள் என்பதைப் பொறுத்து படிகள் மாறுபடும். எந்தப் பக்கத்திலிருந்து தொடங்கினாலும், ஒரே உரையாடல் பெட்டியில் ஆவணங்களையும் அச்சு அமைப்புகளையும் தேர்ந்தெடுக்கலாம். ஷிப்பிங் லேபிள்களை மொத்தமாக வாங்கிய பிறகு, வாங்கிய லேபிள்களில் உள்ள ஆவணங்களை அச்சிடு என்பதைக் கிளிக் செய்தும் அதே ஆவணங்களை அச்சிடலாம்.

படிகள்:

ஆர்டர் விவரங்கள் பக்கம்
  1. Shopify நிர்வாகியில் ஆர்டர்கள் என்பதற்குச் செல்லவும்.

  2. எந்த ஆர்டருக்கான ஆவணங்களை அச்சிட விரும்புகிறீர்களோ, அந்த ஆர்டரைக் கிளிக் செய்யவும்.

  3. மேலும் செயல்கள் என்பதைக் கிளிக் செய்து, பின்னர் அச்சிடு பிரிவில் பல ஆவணங்களை அச்சிடு என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. அச்சிட விரும்பும் ஆவணங்களைத் தேர்ந்தெடுக்கவும்.

  5. விருப்பத்திற்குரியது: இடம் மெனு காட்டப்பட்டால், பேக்கிங் சீட்டுகளையும் தேர்வுப் பட்டியல்களையும் அச்சிடுவதற்கான இடத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

  6. காகித அளவைத் தேர்ந்தெடுக்கவும்.

  7. விருப்பத்திற்குரியது: லெட்டர் அல்லது A4 அளவிலான ஒவ்வொரு தாளிலும் இரண்டு ஆவணங்களை அச்சிட, ஒரு பக்கத்திற்கான ஆவணங்கள் என்பதில் இரண்டு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

  8. அச்சிடத் தொடர்க என்பதைக் கிளிக் செய்யவும்.

  9. அச்சு முன்னோட்டச் சாளரத்தில், உங்கள் ஆவணங்களைச் சேமிக்கவும் அல்லது அச்சிடவும்.

ஆர்டர்கள் பக்கம்
  1. Shopify நிர்வாகியில் ஆர்டர்கள் என்பதற்குச் செல்லவும்.

  2. எந்த ஆர்டர்களுக்கான ஆவணங்களை அச்சிட விரும்புகிறீர்களோ, அந்த ஆர்டர்களைத் தேர்ந்தெடுக்கவும்.

  3. அச்சிடு என்பதைக் கிளிக் செய்து, பின்னர் பல ஆவணங்களை அச்சிடு என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. அச்சிட விரும்பும் ஆவணங்களைத் தேர்ந்தெடுக்கவும்.

  5. விருப்பத்திற்குரியது: இடம் மெனு காட்டப்பட்டால், பேக்கிங் சீட்டுகளையும் தேர்வுப் பட்டியல்களையும் அச்சிடுவதற்கான இடத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

  6. காகித அளவைத் தேர்ந்தெடுக்கவும்.

  7. விருப்பத்திற்குரியது: லெட்டர் அல்லது A4 அளவிலான ஒவ்வொரு தாளிலும் இரண்டு ஆவணங்களை அச்சிட, ஒரு பக்கத்திற்கான ஆவணங்கள் என்பதில் இரண்டு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

  8. விருப்பத்திற்குரியது: ஒவ்வொரு ஆர்டரின் ஆவணங்களையும் ஒன்றாக வைத்திருக்க, தொகுப்பாக அடுக்கு என்பதை இயக்கவும். அதற்குப் பதிலாக ஆவண வகையின் அடிப்படையில் ஆவணங்களைத் தொகுக்க, அதை முடக்கவும்.

  9. அச்சிடத் தொடர்க என்பதைக் கிளிக் செய்யவும்.

  10. அச்சு முன்னோட்டச் சாளரத்தில், உங்கள் ஆவணங்களைச் சேமிக்கவும் அல்லது அச்சிடவும்.

ஷிப்பிங் லேபிள்கள் பக்கம்
  1. உங்கள் Shopify நிர்வாகியில், ஆர்டர்கள் > ஷிப்பிங் லேபிள்கள் என்பதற்குச் செல்லவும்.

  2. எந்த ஷிப்பிங் லேபிள்களுக்கான ஆவணங்களை அச்சிட விரும்புகிறீர்களோ, அந்த லேபிள்களைத் தேர்ந்தெடுக்கவும்.

  3. ஆவணங்களை அச்சிடு என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. ஷிப்பிங் லேபிள்கள், சுங்கப் படிவங்கள் அல்லது பேக்கிங் சீட்டுகள் போன்றவற்றில் நீங்கள் அச்சிட விரும்பும் ஆவணங்களைத் தேர்ந்தெடுக்கவும்.

  5. விருப்பத்திற்குரியது: இடம் மெனு காட்டப்பட்டால், பேக்கிங் சீட்டுகளையும் தேர்வுப் பட்டியல்களையும் அச்சிடுவதற்கான இடத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

  6. காகித அளவைத் தேர்ந்தெடுக்கவும்.

  7. விருப்பத்திற்குரியது: லெட்டர் அல்லது A4 அளவிலான ஒவ்வொரு தாளிலும் இரண்டு ஆவணங்களை அச்சிட, ஒரு பக்கத்திற்கான ஆவணங்கள் என்பதில் இரண்டு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

  8. விருப்பத்திற்குரியது: ஒவ்வொரு ஆர்டரின் ஆவணங்களையும் ஒன்றாக வைத்திருக்க, தொகுப்பாக அடுக்கு என்பதை இயக்கவும். அதற்குப் பதிலாக ஆவண வகையின் அடிப்படையில் ஆவணங்களைத் தொகுக்க, அதை முடக்கவும்.

  9. அச்சிடத் தொடர்க என்பதைக் கிளிக் செய்யவும்.

  10. அச்சு முன்னோட்டச் சாளரத்தில், உங்கள் ஆவணங்களைச் சேமிக்கவும் அல்லது அச்சிடவும்.

பேக்கிங் சீட்டுகளை மட்டும் அச்சிட, பேக்கிங் சீட்டுகளை அச்சிடு என்பதைப் பயன்படுத்தவும். இது மற்ற ஆவணங்கள் இல்லாமல் இயல்புநிலை பேக்கிங் சீட்டு வார்ப்புருவை மட்டும் அச்சிடும். இயல்புநிலையாகப் பயன்படுத்தப்படும் பேக்கிங் சீட்டு வார்ப்புருவை மாற்ற, வார்ப்புருவைத் திருத்தவும்.

ஒரு குறிப்பிட்ட ஷிப்மென்ட்டில் அனுப்பப்படும் அனைத்து உருப்படிகளும் பேக்கிங் சீட்டுகளில் இடம்பெறும். ஓர் ஆர்டருக்குப் பல ஷிப்மென்ட்கள் இருந்தால், ஒவ்வொரு ஷிப்மென்ட்டுக்கும் தனித்தனி பேக்கிங் சீட்டை அச்சிடலாம்.

  1. Shopify நிர்வாகியில் ஆர்டர்கள் என்பதற்குச் செல்லவும்.

  2. பேக்கிங் சீட்டை அச்சிட விரும்பும் ஆர்டரைக் கிளிக் செய்யவும்.

  3. மேலும் செயல்கள் என்பதைக் கிளிக் செய்து, பின்னர் அச்சிடு பிரிவில் பேக்கிங் சீட்டுகளை அச்சிடு என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. பேக்கிங் சீட்டை அச்சிடவும் அல்லது சேமிக்கவும்.

பேக்கிங் சீட்டுகளை மொத்தமாக அச்சிடுதல்

ஆர்டர்கள் பக்கத்தில் மொத்தச் செயல்களைப் பயன்படுத்தி, உங்கள் ஆர்டர்களுக்கான பல பேக்கிங் சீட்டுகளை அச்சிடலாம்.

படிகள்:

டெஸ்க்டாப்
  1. Shopify நிர்வாகியில் ஆர்டர்கள் என்பதற்குச் செல்லவும்.

  2. பேக்கிங் சீட்டுகள் தேவைப்படும் ஆர்டர்களைத் தேர்ந்தெடுக்கவும்.

  3. அச்சிடு > பேக்கிங் சீட்டுகளை அச்சிடு என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. விருப்பத்தேர்வு: உங்களுக்குப் பல இருப்பிடங்கள் இருந்தால், ஆர்டர்கள் நிறைவேற்றப்படும் இடத்தைத் தேர்ந்தெடுத்து, பின்னர் தொடர்க என்பதைக் கிளிக் செய்யவும்.

  5. பேக்கிங் சீட்டுகளை அச்சிடவும் அல்லது சேமிக்கவும்.

iPhone
  1. Shopify செயலியில் Orders ஐகானைத் தட்டவும் .
  2. ஆர்டர் தேர்வுக் காட்சியைத் திறக்க, ஓர் ஆர்டரை அழுத்திப் பிடிக்கவும்.
  3. பேக்கிங் சீட்டை அச்சிட விரும்பும் ஒவ்வொரு ஆர்டருக்கும் அருகிலுள்ள தேர்வுப்பெட்டியைத் தட்டவும்.
  4. பேக்கிங் சீட்டுகளை அச்சிடு என்பதைத் தட்டவும்.
  5. தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்டர்களுடன் பல இடங்கள் தொடர்புடையதாக இருந்தால், பட்டியலிலிருந்து இடத்தைத் தேர்ந்தெடுத்து, தொடர் என்பதைத் தட்டவும்.
  6. பேக்கிங் சீட்டுகளை அச்சிடவும்.
Android

  6. பேக்கிங் சீட்டுகள் PDF கோப்பாக உருவாக்கப்படும். கோப்பைப் பதிவிறக்க பதிவிறக்கு என்பதைத் தட்டவும்.
  7. கோப்பைத் திறக்க திற என்பதைத் தட்டவும்.
  8. பேக்கிங் சீட்டுகளை அச்சிடவும்.

உங்கள் பதிவுகளுக்காக ஆர்டரின் நகலை வைத்திருக்க, ஆர்டர் பக்கத்தை அச்சிடலாம். அச்சிடப்பட்ட பக்கத்தில் ஆர்டரின் காலவரிசைக் கருத்துகளும் இடம்பெறும். உங்கள் உலாவியின் அச்சு உரையாடல் பெட்டி மூலம் ஆர்டர் பக்கம் அச்சிடப்படும்.

படிகள்:

  1. Shopify நிர்வாகியில் ஆர்டர்கள் என்பதற்குச் செல்லவும்.

  2. நீங்கள் அச்சிட விரும்பும் ஆர்டரைக் கிளிக் செய்யவும்.

  3. மேலும் செயல்கள் என்பதைக் கிளிக் செய்து, பின்னர் அச்சிடு பிரிவில் ஆர்டர் பக்கத்தை அச்சிடு என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. ஆர்டர் பக்கத்தை அச்சிடவும் அல்லது சேமிக்கவும்.