Shopify Order Printer வார்ப்புருக்களை உருவாக்குதல் மற்றும் தனிப்பயனாக்குதல்

உங்கள் வார்ப்புருக்களைப் பல வழிகளில் தனிப்பயனாக்கலாம் மற்றும் சொந்தமாக உருவாக்கலாம். Shopify Order Printer செயலியானது HTML, CSS மற்றும் Liquid மாறிகளால் ஆன வார்ப்புருக்களை ஆதரிக்கும். வார்ப்புருக்களைத் தனிப்பயனாக்கும் முன், ஆதரிக்கப்படும் அனைத்து வார்ப்புருத் தனிப்பயனாக்கங்களுக்கும் Shopify Order Printer-க்கான Liquid மாறிகள் மற்றும் ஃபில்டர்கள் குறிப்புகளைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

Shopify Order Printer வார்ப்புருக்களை எவ்வாறு தனிப்பயனாக்கலாம் என அறிந்துகொள்ள, பின்வரும் உதாரணங்களை மதிப்பாய்வு செய்யவும்.

உங்கள் வார்ப்புருவில் உங்கள் லோகோவைச் சேர்க்கலாம்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, உள்ளடக்கம் > கோப்புகள் என்பதற்குச் செல்லவும்.

  2. கோப்புகளைப் பதிவேற்று என்பதைக் கிளிக் செய்து, நீங்கள் பதிவேற்ற விரும்பும் படக் கோப்பைத் தேர்ந்தெடுக்கவும்.

  3. உங்கள் லோகோ படத்திற்கான URL ஐ நகலெடுக்க, இணைப்பு ஐகானைக் கிளிக் செய்யவும்.

  4. அமைப்புகள் > செயலிகள் என்பதைக் கிளிக் செய்யவும்.

  5. Order Printer என்பதைக் கிளிக் செய்யவும்.

  6. வார்ப்புருக்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.

  7. நீங்கள் திருத்த விரும்பும் வார்ப்புருவின் பெயரைக் கிளிக் செய்யவும்.

  8. குறியீட்டுத் திருத்தியில், பின்வரும் குறியீட்டுத் தொகுப்பை ஒட்டவும்:

<div style="text-align: center;">
  <img style="width: 4em;" src="YOUR_IMAGE_URL_HERE">
</div>
  1. குறியீட்டில் உள்ள YOUR_IMAGE_URL_HERE என்பதற்குப் பதிலாக, உங்கள் பட URL ஐ உள்ளிடவும்.
  2. விருப்பத்தேர்வு: உங்கள் லோகோவைச் சீரமைக்க, text-align மதிப்பை left, right அல்லது center என மாற்றவும்.
  3. விருப்பத்தேர்வு: உங்கள் லோகோ அகலத்தைச் சரிசெய்ய, width மதிப்பை 8em அல்லது 2em போன்ற பெரிய அல்லது சிறிய மதிப்பாக மாற்றவும்.
  4. விருப்பத்தேர்வு: உங்கள் வார்ப்புருவை முன்னோட்டமிட, முன்னோட்டம் என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

உதாரணம்:

வார்ப்புருவில் லோகோவைச் சேர்த்த பிறகு, உங்கள் HTML எவ்வாறு காட்டப்பட வேண்டும் என்பதற்கான பின்வரும் உதாரணத்தை மதிப்பாய்வு செய்யவும்:

வார்ப்புருவில் லோகோவைச் சேர்ப்பதற்கான குறியீட்டுத் தொகுப்பைக் காட்டும் ஓர் உதாரணம்

வார்ப்புருவில் படங்களைச் சேர்த்தல்

உங்கள் வார்ப்புருவில் படங்களைச் சேர்க்கலாம்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, உள்ளடக்கம் > கோப்புகள் என்பதற்குச் செல்லவும்.

  2. கோப்புகளைப் பதிவேற்று என்பதைக் கிளிக் செய்து, நீங்கள் பதிவேற்ற விரும்பும் படக் கோப்பைத் தேர்ந்தெடுக்கவும்.

  3. உங்கள் படத்திற்கான URL ஐ நகலெடுக்க, இணைப்பு ஐகானைக் கிளிக் செய்யவும்.

  4. அமைப்புகள் > செயலிகள் என்பதைக் கிளிக் செய்யவும்.

  5. Order Printer என்பதைக் கிளிக் செய்யவும்.

  6. வார்ப்புருக்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.

  7. நீங்கள் திருத்த விரும்பும் வார்ப்புருவின் பெயரைக் கிளிக் செய்யவும்.

  8. குறியீட்டுத் திருத்தியில், <img src=”Image Source” /> குறியீட்டுத் தொகுப்பை ஒட்டவும்.

  9. குறியீட்டில் உள்ள Image Source என்பதற்குப் பதிலாக, உங்கள் பட URL ஐ உள்ளிடவும்.

  10. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

அட்டவணையின் அகலங்களை 100% ஆக்குதல்

உங்கள் அட்டவணையில் விளிம்புகளைச் சேர்த்து, அதன் அகலத்தை 100% ஆக நீட்டிக்கலாம். இதற்கு உங்கள் அட்டவணையில் table-tabular வகுப்பைச் சேர்க்க வேண்டும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, செயலிகள் > Order Printer என்பதற்குச் செல்லவும்.

  2. வார்ப்புருக்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. நீங்கள் திருத்த விரும்பும் வார்ப்புருவைக் கிளிக் செய்யவும்.

  4. குறியீட்டுத் திருத்தியில், நீங்கள் திருத்த விரும்பும் அட்டவணையைக் கண்டறிந்து, உங்கள் அட்டவணையில் table-tabular வகுப்பைச் சேர்க்கவும்.

  5. விருப்பத்தேர்வு: உங்கள் வார்ப்புருவை முன்னோட்டமிட, முன்னோட்டம் என்பதைக் கிளிக் செய்யவும்.

  6. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

உதாரணம்:

<table class="table-tabular">
    ...
</table>

தயாரிப்புச் சிறுபடங்களைக் காட்டுதல்

உங்கள் ஆர்டர் வார்ப்புருவில் தயாரிப்புச் சிறுபடங்களைச் சேர்க்கலாம். இதற்கு உங்கள் வார்ப்புருவில் பிரத்தியேகக் குறியீட்டுத் தொகுப்பைச் செருக வேண்டும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, செயலிகள் > Order Printer என்பதற்குச் செல்லவும்.

  2. வார்ப்புருக்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. நீங்கள் திருத்த விரும்பும் வார்ப்புருவைக் கிளிக் செய்யவும்.

  4. உங்கள் வார்ப்புருவில் {{ line_item.product.featured_image | product_img_url: 'thumb' | img_tag }} குறியீட்டுத் தொகுப்பைச் சேர்க்கவும்.

  5. விருப்பத்தேர்வு: உங்கள் வார்ப்புருவை முன்னோட்டமிட, முன்னோட்டம் என்பதைக் கிளிக் செய்யவும்.

  6. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

ஆர்டர் விவரங்களைச் சேர்த்தல்

வாங்கப்பட்ட உருப்படிகளின் பெயர், அளவு மற்றும் விலை போன்ற ஆர்டர் விவரங்களை உங்கள் வார்ப்புருவில் சேர்க்கலாம்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, செயலிகள் > Order Printer என்பதற்குச் செல்லவும்.

  2. வார்ப்புருக்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. நீங்கள் திருத்த விரும்பும் வார்ப்புருவைக் கிளிக் செய்யவும்.

  4. குறியீட்டுத் திருத்தியில், ஆர்டர் விவரங்களைச் சேர்க்க Liquid மாறிகளையும், வடிவமைப்பிற்காக HTML ஐயும் பயன்படுத்தவும். உதாரணத்திற்கு, {{ line_item.price | money }} என்பதைப் பயன்படுத்தும்போது, உருப்படியின் விலையைக் காட்டும்.

  5. விருப்பத்தேர்வு: உங்கள் வார்ப்புருவை முன்னோட்டமிட, முன்னோட்டம் என்பதைக் கிளிக் செய்யவும்.

  6. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

உதாரணம்:

நைலா, ஷிப்பிங் செய்யப்படும் உருப்படிகளின் பட்டியலைச் சேர்ப்பதற்காகத் தன் பேக்கிங் சீட்டு வார்ப்புருவைத் திருத்த விரும்புகிறார். அவர் Shopify Order Printer செயலியில் உள்ள தன் பேக்கிங் சீட்டு வார்ப்புருவின் கீழ்ப்பகுதியில் பின்வரும் குறியீட்டைச் சேர்க்கிறார். இதன் விளைவாக, நைலாவின் பேக்கிங் சீட்டுகளில் இப்போது வாங்கப்பட்ட உருப்படிகளின் பட்டியலைக் கொண்ட ஓர் அட்டவணை உள்ளது.

<br>
<br>
<table class="table-tabular" style="margin: 0 0 1.5em 0;">
  <thead>
    <tr>
      <th scope="col">Quantity</th>
      <th scope="col">Item</th>
      {% if tax_lines.size > 0 %}
      <th scope="col">Taxes</th>
      {% endif %}
      <th scope="col">Price</th>
    </tr>
  </thead>
  <tbody>
    {% for line_item in line_items %}
      <tr>
        <td scope="row">{{ line_item.quantity }} x</td>
        <td><b>{{ line_item.title }}</b></td>
        {% if line_item.tax_lines %}
          <td>
            {% for tax_line in line_item.tax_lines %}
              {{ tax_line.price | money }} {{ tax_line.title }}<br/>
            {% endfor %}
          </td>
        {% endif %}
        <td>{{ line_item.price | money }}</td>
      </tr>
    {% endfor %}
  </tbody>
</table>

வார்ப்புருவில் பார்கோடைச் சேர்த்தல்

உங்கள் வார்ப்புருவில் பார்கோடைச் சேர்க்கலாம்

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, செயலிகள் > Order Printer என்பதற்குச் செல்லவும்.

  2. வார்ப்புருக்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. நீங்கள் திருத்த விரும்பும் வார்ப்புருவைக் கிளிக் செய்யவும்.

  4. உங்கள் வார்ப்புருவில் <s-barcode value="a" /> குறியீட்டுத் தொகுப்பைச் சேர்க்கவும்.

  5. `` மதிப்பை உங்கள் பார்கோடின் உரை மதிப்பாக மாற்றவும்.

  6. விருப்பத்தேர்வு: உங்கள் வார்ப்புருவை முன்னோட்டமிட, முன்னோட்டம் என்பதைக் கிளிக் செய்யவும்.

  7. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

வார்ப்புருவில் QR குறியீட்டைச் சேர்த்தல்

உங்கள் வார்ப்புருவில் QR குறியீட்டைச் சேர்க்கலாம்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, செயலிகள் > Order Printer என்பதற்குச் செல்லவும்.

  2. வார்ப்புருக்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. நீங்கள் திருத்த விரும்பும் வார்ப்புருவைக் கிளிக் செய்யவும்.

  4. உங்கள் வார்ப்புருவில் <s-barcode type="qrcode" value="" /> குறியீட்டுத் தொகுப்பைச் சேர்க்கவும்.

  5. `` மதிப்பை உங்கள் QR குறியீட்டின் உரை மதிப்பாக மாற்றவும்.

  6. விருப்பத்தேர்வு: உங்கள் வார்ப்புருவை முன்னோட்டமிட, முன்னோட்டம் என்பதைக் கிளிக் செய்யவும்.

  7. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

வார்ப்புருவில் Google எழுத்துருவைப் பயன்படுத்துதல்

உங்கள் வார்ப்புருவில் Google எழுத்துருவைப் பயன்படுத்த, பின்வரும் குறியீட்டை உங்கள் வார்ப்புருவில் ஒட்டி, FontName மாறிக்குப் பதிலாக உங்கள் Google எழுத்துருவின் பெயரை உள்ளிடவும்:

<link rel="stylesheet" href="https://fonts.googleapis.com/css?family=FontName">
<style>
  body {
    font-family: FontName, serif;
  }
</style>

எழுத்துரு அளவை அதிகரித்தல்

உங்கள் வார்ப்புருவில் எழுத்துரு அளவை அதிகரிக்க, உங்கள் வார்ப்புருவில் பின்வரும் குறியீட்டை ஒட்டி, 14 என்ற எண்ணைப் பெரிய அல்லது சிறிய மதிப்பாக மாற்றவும்:

<style>
  :root {
    --font-size: 14px;
  }
</style>

உங்கள் வார்ப்புருவில் உள்ள தலைப்புகளின் எழுத்துரு அளவை அதிகரிக்க, பின்வரும் குறியீட்டை உங்கள் வார்ப்புருவில் ஒட்டவும், பின்னர் தலைப்புக்கு அடுத்துள்ள மதிப்புகளைச் சரிசெய்யவும்:

<style>
  :root {
    --h1-font-size: 18px;
    --h2-font-size: 16px;
    --h3-font-size: 14px;
  }
</style>

மரபு Order Printer செயலியிலிருந்து உங்கள் வார்ப்புருக்களை இறக்குமதி செய்திருந்தால், பின்வரும் குறியீட்டுத் தொகுதியைப் பயன்படுத்தி உங்கள் எழுத்துரு அளவை அதிகரிக்கலாம்:

<style>
  :root {
    --legacy-font-size: 14px;
    --legacy-print-font-size: 18px;
  }
</style>